காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 08 🖌️

5
(2)

கோபமாக இருந்தவளை சமாதானப்படுத்தி கொலேஜிற்கு அனுப்பி வைத்தார் மகாலக்ஷ்மி. விரிவுரையாளர் மிஸ் வித்யா பாரதி பாடத்தை சலிப்பு வருமளவு நடத்திக் கொண்டிருக்க இங்கே பின் வரிசையில் முதலாவதாக அமர்ந்து கொண்டு தன் ஒரு கையை பெஞ்சின் மீது வைத்துக் கொண்டு அதில் தலையை சாய்த்து மற்றொரு கையை கீழே விட்டவாறு தனது கால்கள் இரண்டையும் முன்னால் இருந்த பெஞ்சின் இருக்கையில் வைத்தவாறும் ஏனோ தானோவென்று மிஸ். வித்யா பாரதி பேச்சை கவனித்தும் கவனிக்காமலும் அமர்ந்திருந்தான் சத்யா.

அருகில் இருந்த சத்யாவின் நண்பன் விநோத் “என்னடா? இந்த பாடத்துக்கு புது லேடி ப்ரொபஸர் வருவாங்கன்னு சொன்னாங்க. அதனாலதான் நானெல்லாம் இந்த ஹோல் வாசல்படியயே மிதிக்கிறேன். ஆனால் இது என்னன்னா பழைய கேஸே வந்திருக்கு?” என்றான் சோர்வான குரலில்.

“டேய். சும்மா இருடா. ஏற்கனவே நான் செம்ம கடுப்புல இருக்கிறேன். இதுல நீ வேற.” என்று சத்யா காவ்யாவை நினைத்தலாறு பேக்கினுள் இருந்த சிப்ஸை எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டான் சலிப்பாக.

சத்யாவின் நண்பன் மிஸ். வித்யா பாரதியை பார்த்து “உன்ன பாத்தாலே பீப்பி ஏறும்… என் ஹேப்பி லைப் சேடா மாறும்…” என்று பாடலை பாடிக் கொண்டு மேசையில் கைகளைத் தட்டி தாளம் போட்டான்.

“என்ன அது சத்தம்? கீப் ஸைலன்ஸ்… டெய்லி உங்களுக்கு இதே வேலையாப் போச்சு. படிக்க வந்தா படிக்காம இப்படி விளையாடிட்டு இருக்கீங்க. அறிவில்லை? கொஞ்சம் கூட சென்ஸ் இல்ல.” என்று சத்யாவைப் பார்த்து வழக்கமாக கத்துவது போலவே கத்தினார்.

அதில் கடுப்பானவன் “இப்படி போரிங்கா பாடம் நடத்தினா நாங்க இப்படிதான் பண்ணுவோம். முதல்ல பசங்களுக்கு எப்படி பாடம் நடத்தினா புரியும்னு நீங்க முதல்ல கத்துக்கிட்டு வாங்க.” என்று எரிச்சலாக கூறிக் கொண்டான்.

“அப்படியா சேர். வாங்க வந்து நீங்களே எப்படி பாடம் எடுக்குறதுன்னு எனக்கு கத்துக் கொடுங்க.” என முன்னால் கையை காட்டி அவனை அழைக்க அந்த அழைப்பில் தடுமாறியவன் எழுந்து சரியாக அமர்ந்து கொண்டான்.

“சரி… ஒரு கேள்வி கேட்குறேன் பதில் சொல்றீங்களா? எம்.பி.பி.எஸ் படிக்க வந்திருக்கீங்களே முதல்ல எம்.பி.பி.எஸ்க்கு எக்ஸ்பென்ஸன் என்ன? சொல்லுங்க பாக்கலாம்.” என்று கேட்டு கை கட்டி நின்றாள்ர். பின் தலையைக் கோதியவாறே திருதிருவென்று பதில் தெரியுமல் முழித்தான் சத்யா.

“அதானே பாத்தேன். முதல்ல எம்.பி.பி.எஸ் படிக்கிறதுக்கு மனிதாபிமானம் வேணும். அடிதடி, வெட்டுக் குத்துன்னு திரிர உனக்கெல்லாம் எதுக்குடா மெடிக்கல் சயன்ஸ் படிக்கிற ஆசை?” என்றார் எரிச்சலுடன்.

“கொஞ்சம் நிறுத்துங்க…” என்று அவரை ஙை காட்டித் தடுத்து நிறுத்தியவாறே

“இப்போ உங்களுக்கு என்ன? எம்.பி.பி.எஸ் க்கு எக்ஸ்பென்ஸன் தானே வேணும்? அது இந்த ஊருக்கே தெரியுமே Member of Back Banchers Students (MBBS). அதனாலதான் நாங்க எல்லாரும் பின்னாடி உட்கார்ந்துட்டு இருக்கோம். சோ, நாங்க ஓல்ரெடி எம்.பி.பி.எஸ் ஆகியாச்சு.” என்று தோளைக் குலுக்கினான். மொத்த வகுப்புமே குலுங்கிக் குலுங்கி சிரித்து விட்டது.

“ஸைலன்ஸ்.” என்று மேசையில் தட்டிய வித்யா பாரதி “எம்.பி.பி.எஸ் க்கே எக்ஸ்பென்ஸன் தெரியல. நீ எல்லாம் படிச்சி ஒரு டோக்டரா வரப் போற? ஆனால் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்…. அது என்னன்னா… நீயெல்லாம் எப்படி 3A எடுத்து ஸ்டேட் ரேங்க் 1 எடுத்தன்னு தெரியல.” என்று தலையில் அடித்தவாறு கூறிவிட்டு திரும்பவும் தன் பாடத்தை விளக்கிக் கொண்டிருந்தார்.

இடையிலேயே அவசர அவசரமாய் “எக்ஸ் க்யூஸ் மீ மிஸ்.” என்று டைமை கடிகாரத்தில் பார்த்தவாறு அவசரமாக உள்ளே நுழைந்தாள் காவ்யா.

“யாஹ் கம் இன்.” என்று விரிவுரையாளர் வித்யா பாரதி அனுமதி வழங்க உள்ளே நுழைந்து சத்யாவை நோக்கிச் சென்றாள் காவ்யா.

அவளைப் பார்த்தவாறே சத்யாவின் நண்பன் “என்னடா காத்து உன் பக்கம் வீசுது? இன்னைக்கு ஒரு நல்ல சீன்ஸ் பாக்கலாம் போலயே.” என்று வாய்க்குள் சிரித்துக் கொண்டான்.

“டேய் அந்தக் காத்து இந்தப் பக்கத்த தவிர வேற எந்தப் பக்கமுமே அடிக்க மாட்டேங்குதேடா… வழமையா நடக்குறது தானடா. ஆனா இவ தொல்லதான் தாங்க முடியல. படுத்துறாடா.” என்றான் தாங்காத் துயருடன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.

காவ்யா சத்யாவை தள்ளி விட்டு அவன் அருகே அமரப் போக அவளை “நில்லு காவ்யா.” என்று தடுத்து நிறுத்தினார் வித்யா பாரதி மிஸ்.

என்ன என்று அவரைத் திரும்பிப் பார்த்து பார்வையாலே கேட்டவளிடம் “நீ படிக்கிற பொண்ணு. முன்னால வந்து உட்காரு. அவனுங்க கூட சேர்ந்தா நீயும் உருப்பட மாட்ட.” என்று கூறினார் கடுகடுத்த குரலால்.

அதைக் கேட்ட சத்யா காவ்யாவிடம் திமிராக “அதான் கூப்பிடுறாங்கல்ல? போ… போ…” என்று வேறு எங்கேயோ பார்த்தவாறு கூறிக் கொண்டான்.

ஆனால் அவள் “மேம்… படிக்கிற பசங்க எங்க இருந்தாலும் நல்லாதான் படிப்பாங்க. நான் எங்க இருக்க விரும்புறேனோ அங்கதான் இருப்பேன்.” என்று கூறிவிட்டு தன் தோள் பையை மேசையில் வைத்து அவன் அருகே அமர்ந்து கொண்டாள்.

இடையிலேயே மறுபடியும் சத்யாவும் அவனது நண்பர்களும் பேசிக் கொண்டு பாடத்தை தொந்தரவு செய்ய அதில் கடுப்பான வித்யா பாரதி “ராம்… எழுந்துரு..” என்று கூற “படார்.” என எழுந்து நின்றான்.

“இப்போ நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்ற… இல்லன்னா சேர்மன் சேர் கிட்ட சொல்ல வேண்டி வரும்.” என்றதும் சத்யாவுக்கு அல்லு விட்டது.

“எக்ஸ்ப்லைன் ஹவ் த எம்ப்ரியோ டெவலொப்ஸ்?” என்று கேட்க பதில் தெரியாமல் முனுசிக் கொண்டிருந்தான் சத்யா.

“சொல்லிக் கொடுடி.” என்று காவ்யாவை பார்வையால் துளைத்தெடுக்க அவளோ

“நீ எப்படி போனா எனக்கென்ன?” என்றவாறு அமர்ந்திருந்தாள்.

“என்ன? பதில் தெரியலயா?” என்று மிஸ் முறைத்துக் கொண்டே கையைக் கட்டியவாறு அவனிடம் வினவினார்.

ஆனால் அவன் “மிஸ்… உங்களுக்கு கல்யாணம் ஆச்சா?” என்று அவனுடைய சந்தேகத்தை கேட்டான்.

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம ஏன் தேவையில்லாம கேள்வி கேட்குற?” என்றார் வித்யா பாரதி எரிச்சலாக.

“அட சொல்லுங்க மிஸ்.” என்றவுடன் “ஆமாம்.” என்றவாறு தலையாட்டினார்.

“என்ன மிஸ் நீங்க? கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றீங்க? இது கூட தெரியாம இருக்கீங்க? பாவம் மிஸ் உங்க ஹஸ்பன்ட்… இப்படி பச்சைக் குழந்தையா இருக்கீங்களே… உங்க ஹஸ்பன்ட் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க மிஸ். நான் எப்படி அத சொல்லுறது?” என்று அவன் சற்று சங்கடமாக நகத்தைக் கடித்து வெட்கப்பட்டவாறே கூறியதும் மொத்த வகுப்புமே விழுந்து விழுந்து சிரித்தது.

காவ்யா தலையில் அடித்துக் கொண்டு “டேய்… சத்யா… மானத்த வாங்காதடா.” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சங்கடத்தில் நெளிந்தாள்.

கோபமான வித்யா பாரதி மிஸ் அவனுக்கு சோக் துண்டுகளை விட்டெறிந்து “இடியட்… கெட் அவ்ட் ப்ரொம் மை க்ளாஸ்.” என்று கத்த

“சரி… சரி… போறேன். போறேன். இத ஏற்கனவே சொல்லி இருக்கலாம்ல?” என்றவாறு விசில் அடித்துக் கொண்டு புத்தகத்தை கையில் சுழற்றியவாறு வெளியே செல்ல எத்தனிக்க கதவின் அருகே சத்யாவை இடைமறித்தான் மூச்சிறைக்க ஓடி வந்த ஒருவன்.

“என்னடா இப்படி மூச்சு முட்ட ஓடி வர?” என்று கேட்க

“அண்ணா, வாசுதேவராம் சேர் அப்ரோட்ல இருந்து வந்துட்டாரு…” என்று அவன் கத்தியதும் மாரடைப்பு வருவதைப் போல் சத்யா நிலை தடுமாறி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழப் போக அவனைத் தங்கிப் பிடித்தான் அந்த பையன்.

அவன் சொன்ன வார்த்தை அனைவரது காதுகளுக்கும் எட்டிடவே “என்னாது… சேர்மன் சேர் வந்துட்டாரா???” என்று வாயைப் பிழந்தவாறே அனைவரும் நிற்க சத்யாவின் நண்பர்கள் அவன் அருகில் ஓடி வந்து நின்றவாறு

“இப்போ என்னடா பண்றது மச்சான்?” என்று கேட்டனர் ஒன்றாக.

அதிர்ச்சி நிலையில் இருந்து வெளி வந்த சத்யா ஒருவனை நோக்கி “நீ வீட்டுக்கு போய் ட்ரௌஸர், சேர்ட், பெல்ட், பேர்பியூம், கோம்ப்ன்னு அத்தனையும் எடுத்து வந்துடு.” என்று சொல்லிவிட்டு,

அடுத்தவனிடம் திரும்பி, “தலைமுடி வெட்டனும். சேவ் பண்ணணும். அதனால தூக்குடா அந்த பாபர.” என்றிட அடுத்த நொடி பாபரை அவர் உட்கார்ந்த நாற்காலியோடு சேர்த்து தலையில் வைத்துக் தூக்கிக் கொண்டு வந்தார்கள் சத்யாவின் நண்பர்கள்.

அவர் “டேய்… என்ன விடுங்கடா… என்ன எங்கடா கடத்திட்டு போறீங்க?” என்று கத்திக் கொண்டே வந்தார்.

இதைப் பார்த்த சத்யா கண்ணை விழித்து அவரையும் அவரைத் துக்கி வந்தவர்களையும் பார்த்து “டேய்… என்னாங்கடா? பாபர கூட்டிட்டு வர சொன்னா கதிரையோட தூக்கிட்டு வந்துட்ட?” என்று கேட்டான் விழித்தவாறே.

“டேய். இவரு வேற நம்ம சீரியஸ்னஸ் தெரியாம எவன் முடி வெட்டனுமோ அவன இங்க வர சொல்லுன்னு அடம் பிடிச்சிட்டு இருந்தாரா… அதுதான் தூக்கிட்டு வந்துட்டேன்.” என்றான் விநோத் எரிச்சலாக.

“ராம்… இது உனக்கே நியாயமா இருக்காப்பா? நீ பண்ற அலப்பறைய விட உன் ப்ரண்டுங்க பண்ற அலப்பறைதான்பா தாங்க முடியல. கேட்டா ராம்கிட்ட சொல்லி தலைய வெட்டிடுவேன்னு சொல்றானுங்கப்பா.” என்றார் பாவமாக தன் துண்டைக் கொண்டு இல்லாத கண்ணீரை துடைத்தவாறே.

“தேவையில்லாதத பேசாம வந்து ஹெயார் கட் பண்ணி விடுண்ணா. சேர்மன் சேர் வந்துட போறாரு.” என்றான் அலட்சியமாக அவர் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாதவாறு.

அவர் இவனுக்கு அழகாக தாடியை சேவ் செய்து கலைந்து கிடந்த தலைமுடியை நேர்த்தியாக வெட்டி விட்டதும் முடியை எடுத்த சிங்கம் பூனைக் குட்டியாக மாறிய நிலைதான் அவனுக்கு. சாதுவான ஒரு பையனாகவும் பார்ப்பவருக்கு பாவப்பட்ட ஜீவனாகவும் காட்சியளித்தான். அவனது இன்னொரு நண்பன் அவனுக்காக உடைகளை எடுத்து வர களைந்து கிடந்த முடியை அழகாக நேர்த்தியாக வார்ந்து போர்மல் சேர்ட்டை ட்ரௌசரின் உள்ளே டக் இன் செய்து, ஒற்றைக் காதில் போட்டுக் கொண்ட கடுக்கனையும் கையில் போட்டுக் கொண்ட மோதிரம் மற்றும் வளையளையும் கழட்டி வைத்து விட்டு ஒரு ஜீனியஸ் மாணவன் போல் கையில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு விரிவுரை மண்டபம் நோக்கி முதல் ஆளாக ஓடினான் சத்யா.

அமைதியாக முன் வரிசையில் அவன் அமர்ந்து கொள்ள வகுப்பிற்கு அடுத்தடுத்தாக வந்த மாணவர்கள் அத்தனை பேரும் இவனை ஆச்சரியமாக பார்த்து “இது ராம் தானா? இல்ல இவனுக்குள்ள பேய் ஏதாச்சும் போய்டுச்சா?” என்ற கேள்வியையே கேட்டுக் கொள்ள, அனைவருக்கும் விடைதான் கிடைக்கவில்லை.

மொத்த வகுப்புமே சத்யாவின் இந்த புது அவதாரத்தின் அதிர்ச்சியில் அமைதியை இழந்திருக்க, உள்ளே நுழைந்தார் இருபத்தி ஆறு வயது கொண்ட ஹியூமன் அனோடமி பாட லெக்சர் மலர்விழி மேனன்.

உள்ளே நுழைந்த அவர் தலையைக் கவிழ்த்துக் கொண்டு தலைகீழாக புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த சத்யாவை ஓரப் பார்வை பார்த்தவாறே பாடத்தை ஆரம்பித்தாள். அவன் தன் பாட்டிற்கு புத்தகத்தை படித்துக் கொண்டு பாடத்தை தொந்தரவு செய்யாமல் இருக்க அனைவருக்கும் சந்தேகமாகவே இருந்தது. அவன் அருகே வந்து அமர்ந்த காவ்யா அவனை விசித்திரமாக பார்த்துக் கொண்டே இருந்தாள்.

இதில் குறிப்பாக மலர்விழி மேனனை வழமைபோல் சத்யா இன்று தொந்தரவு செய்யவே இல்லை. அவனுக்கு அவள் மீது ஒரு ஈர்ப்பு. இதே கல்லூரியில் நான்காவது வருடம் படித்து வருகிறாள். தற்போது இளம் மாணவ விரிவுரையாளராக தேர்வில் சித்தி பெற்றுப் பயிற்சியில் இருக்கிறாள். ஒவ்வொரு வியாழனும் வெள்ளியும் அவர்தான் அனோடமி க்ளாஸ் எடுப்பாள். மீதி மூன்று நாளும் தனது படிப்பை மேற்கொள்வாள். அவனை விட மூன்று வருடம் சீனியர் என்பதாலும் இதில் அழகாக வேறு இருப்பாளே. அதனால் தினமும் அவரை சைட் அடித்து தெந்தரவு செய்து கொண்டே இருப்பான் சத்யா.

அவனுடன் வகுப்பில் தான் அவள் எரிந்து தள்ளுவாரே தவிர வெளியில் இருவரும் ஸ்நேகிதர்கள். அவனது தந்தையின் நண்பரின் மகள் ஆகிவிட்டாள். இருவரும் குடும்ப நண்பர்கள். கல்லூரி விட்டதும் அவளை சத்யாதான் ஏற்றிச் சென்று வீட்டில் விடுவான். இருவரும் சிறுவயதிலிருந்தே நட்பாக பழகிவிட்டனர். ஆனால் அவளை வேண்டும் என்றே “மிஸ் மிஸ்.” என கிண்டல் அடிப்பான்.

அவரும் அவரது காதலைப் பற்றி சத்யாவிடம் தினமும் கூறுவாள். ஒரே நாளில் அவளது காதலை சேர்த்து வைத்துவிட்டான். அது மாத்திரமல்லாது தனது மனதின் கவலைகளை அவனிடமே பகிர்ந்து கொள்வாள். அவனும் அவளுக்கு ஆறுதலாக இருப்பான். வெளியே அவளை “மலர்.” என்று பெயர் சொல்லிதான் அழைப்பான். ஆனால் க்ளாஸினுள் மாத்திரம் மரியாதைக்காக மிஸ் என அழைப்பான்.

“மிஸ்… உங்க அழகை ரசிக்க ரெண்டு கண்ணு பத்தாது. மிஸ்… உங்க குரலை கேட்க ரெண்டு காது பத்தாது.” என தினமும் அவளிடம் ஜொல்லு ஊத்தும் அளவு வழிந்து தள்ளுவான். ஆனால் இன்று அவ்வாறு அவன் செய்யவில்லை. இவனின் செய்கைகள் அவளுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்தாலும் அவனின் அமைதி அவளைக் கூட சற்று தூண்டி விட்டது.

“ராம்…” என மூன்று முறை அவனை அழைத்திருந்தாலும் அவன் வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அப்போதுதான் உள்ளே நுழைந்தார் அந்த கல்லூரியின் சேர்மன் வாசுதேவ ராம். அவர் உள்ளே நுழைந்ததும் அனைவரும் எழுந்து மரியாதை செய்திட சத்யாவும் எழுந்து அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டான்.

உள்ளே வந்தவர் எல்லோரையும் அமர வைத்துவிட்டு “என்னமா மலர்… எப்படி போகுது க்ளாஸ் எல்லாம்? இன்னும் வன் இயர்தான் இருக்கு. நல்லா படிச்சிக்கோமா. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ எக்ஸாம்ல பாஸ் ஆகிட்டேன்னா அப்றம் பேர்மனன்ட் ஆக்கிடலாம்.” அவர் கூறவும்

“தங்க் யூ சேர். நான் படிச்சிட்டுதான் இருக்கேன். கண்டிப்பா பாஸ்தான்.” அவள் கூற அவர் புன்னகைத்து விட்டு சத்யாவின் பக்கம் திரும்பியதும் அவர் முகம் இறுக்கத்தை தத்தெடுத்தது.

“என்ன ராம்? படிக்கிற வேலைய தவிர மத்த எல்லா வேலையையும் பாக்குறீங்களாம்னு கேள்விப்பட்டேன். உண்மையா?” எனக் கேட்க,

அதற்கு அவன் பதில் சொல்ல முன்னமே மிஸ் மலர்விழியிடம் திரும்பி “மலர்மா… இவன் எப்படி படிக்கிறான்?” என்று கேட்டார். சத்யாவுக்கு திக்கு திக்கு என்றது.

“சேர். இவன் சரியா படிக்கிறதே இல்ல. இவன் படிக்காததும் இல்லாம மொத்த க்ளாஸையும் டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கான். எப்போ பார்த்தாலும் விளையாட்டு. ரொம்ப தொல்லை சேர். எந்த லெக்சரரையும் மதிக்கிறதே இல்ல சேர். வேணும்னா நான் கேட்குற சின்ன குவெஸ்ஸன்கு ஆன்ஸ்வர் பண்ண சொல்லுங்க சேர்.” என்று போட்டுக் கொடுத்துவிட்டாள் மலர்.

அவளின் பேச்சைக் கேட்டுக் கடுப்பானவன் ‘சேர் கேட்க சொல்லுங்க சேர் குவெஸ்ஸன. நான் கரெக்டா ஆன்ஸ்வர் பண்ணலன்னா எனக்கு என்ன பனிஸ்மன்ட் வேணாலும் கொடுக்க சொல்லுங்க.” என்றான் மலர்விழி மேனனை முறைத்துக் கொண்டே.

“அப்படியா சரி. இப்போ கேட்குறேன். ஒரு சின்ன பேசிக் குவெஸ்ஸன் தான். ஆன்ஸ்வர் சொல்லு பாக்கலாம். வட் ஆர் த பைவ் பார்ட்ஸ் ஒப் ஹ்யூமன் பொடி?” என சாதாரணமான ஒரு கேள்வியைக் கேட்க

“ஹெட், நெக், டோர்ஸோ ஆர்ம்ஸ் என்ட் லெக்ஸ்” என படபடவென பதிலைக் கூறிட அதில் தடுமாறிய மலர்விழி புத்தகத்தைப் புரட்டி அடுத்த கேள்வியை கேட்டாள்.

“வட் ஆர் த த்ரீ டைப் ஒப் ஹ்யூமன் அனோடமி?” எனக் கேட்க

“த த்ரீ டைப்ஸ் ஒப் அனோடமீஸ் ஆர் சேர்பேர்ஸ் அனோடமி, ரீஜனல் அனோடமி, சிஸ்டமிக் அனோடமி.” என அவள் கேட்ட கெள்விக்கு பதில் சொன்னவன்

“என்ட் த அப்பன்டிக்ஸ் இஸ் த மோஸ்ட் வியர்ட் ஓர்கன் இன் த ஹ்யூமன் பொடி. த ப்ரைன், ஹார்ட், லங்க்ஸ், லிவர் என்ட் கிட்னி ஆர் த மோஸ்ட் இம்போர்டன்ட் ஓர்கன் இன் த ஹ்யூமன் பொடி. ஹார்ட் இஸ் மொஸ்ட் டிபிகல்ட் ஓர்கன் என்ட் த ப்ரைன் இஸ் த மொஸ்ட் எக்டிவேட் ஓர்கன்.” என அவர் கேட்ட கேள்விகளுடன் சேர்த்து மேலதிகமாக சில பதிலைக் கூறிடவே மொத்த வகுப்புமே “இது சத்யா தானா?” என அதிர்ந்து அவனை நோக்கியது. இதில் மலர்விழிக்குத்தான் மூக்கறுந்த நிலை. அவள் வாயை ஆவென திறந்து கண்ணை உருட்டி உருட்டிப் பார்த்தாள்.

“சரி. இவன் செமஸ்டர் ரிப்போர்ட்ஸ் என் டேபிள்க்கு வந்தாகனும் ரைட் நௌவ். அன்டர்ஸ்டேன்ட்?” வாசுதேவ ராம் கேட்ட உடனே தலையை “ஹா…” என்றவாறு ஆட்டினாள் மலர்விழி.

சத்யா பக்கம் திரும்பியவர் “என் கூட வா.” என்று கூறி விட்டு நடந்தார் தன் அலுவலகத்திற்கு. அங்கே நின்று கொண்டிருந்த மலர்விழியிடம்

“மூஞ்சப் பாரு. பேனாக் குச்சி. போட்டா கொடுக்குற? உன்ன வந்து வெச்சிக்கிறேன்.” என்று கூறியவாறே நாக்கை மடித்து அவளை குத்துவது போல் செய்கை செய்ய அவளோ பயந்து சற்று தள்ளிக் கொண்டாள்.

வாசுதேவராம் “ராம்…” என அழைக்க “எஸ் சேர்.” என்றவாரே அவரின் பின்னாலேயே போய்விட்டான்.

அலுவலகத்திற்குள் நுழைந்த வாசுதேவ ராம் தன் வேலைகளைக் கவனித்துக் கொள்ள அவர் முன்னே கை கட்டி தலையை குனிந்து நின்றான் சத்யா. சற்று நேரத்திலே அவனது அறிக்கைகளுடன் “எக்ஸ்க்யூஸ் மீ சேர்.” என்றவாறு உள் நுழைந்தாள் மலர்விழி.

அந்த அறிக்கைகளை பார்வையிட்டவர் அவனை நிமிர்ந்து நோக்கி “சேர படிக்க சொன்னா அந்த வேலையத் தவிர அத்தன வேலையையும் பாத்திருக்கீங்க. நான் ஊர்ல இல்லன்னா நீ செய்ற எதுவுமே எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டியா? என்ன வேலை பண்ணி வெச்சிருக்கன்னு தெரியுமா?” என்று கத்தியவாறே அந்த அறிக்கைகளை அவன் முகத்தில் விட்டெரிந்தார்.

அவன் குனிந்த தலை நிமிரவில்லை. “ஊர்ல இருக்குற அத்தனை பேரும் சத்ய ராம்ன்னு சொன்னாலே கேவலமா பேசுறானுங்க. இதுல லெக்சரர்ஸ் எல்லார் கிட்டயும் இருந்து கம்ப்லைன்ட். ஜூனியர் பசங்கல ரேகிங்க் பண்றன்னு சொல்றாங்க. ரேகிங்க் பண்றது அல்லவ்ட் இல்லன்னு உனக்கு தெரியாதா? இதுல சீனியர் பசங்க மேல கை வெச்சி அவங்க வம்பையும் வாங்கி கட்டிருக்க. மொத்தம் நாலு அரியஸ் வெச்சிருக்க. இதுக்காகவாடா உன்ன எம்.பி.பி.எஸ் படிக்க வெச்சேன்? உங்கம்மா போனதுக்கு பிறகு உன்னை அவ இடத்துல இருந்து தானடா வளர்த்தேன்? உனக்கு என்ன குறை வெச்சேன்? இப்படி ரவுடீஸம் பண்ணிட்டு திரிர? வெளில என் பையன்தான் சத்ய ராம்ன்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான். அந்த அளவு டீஸன்ட், டிஸ்ஸிப்ளின் எதுவுமே இல்லாத ஒருத்தனாதான் இவ்ளோ நாளா நீ நடந்துட்டு இருந்திருக்க. இங்க பாரு இதுதான் உனக்கு பெர்ஸ்ட் என்ட் லாஸ்ட் வோர்னிங்க். திரும்பவும் உன்ன பத்தி எந்த கம்ப்ளைன்டும் என்கிட்ட வரக்கூடாது. அன்டர்ஸ்டூட்?” என்று பேனாவால் சுட்டிக் காட்டி கேட்டார்.

“சோரி சேர்.” என்றான் குரலை தாழ்த்தியவாறே.

“சேர் வாயில இருந்து அப்பான்னு வராதோ? சேர் மோர்ன்னுட்டு. வந்துட்டான். இடியட்…” எனக் கோப்புகளை சரி செய்தவாறே கூறினார். அதில் உருகிப் போனவனோஅ

“டேட்… சோரி… நான் இனிமேல் அப்படி பண்ணாம இருக்க முயற்சி பண்றேன்.” என்றான் சோகமான தொனியில்.

“என்னது… ட்ரை பண்றீயா? ட்ரை பண்ற கதையெல்லாம் இங்க வேணாம். இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா படிக்கிற… புரிதா?”  எனக் கேட்க

“ஹ்ம்…” என முகம் சுருங்கக் கூறிக் கொண்டான்.

“இப்போ எதுக்கு மூஞ்ச தூக்கி வெச்சிக்கிற? ஏதாவது சொன்னாப் போதுமே. உடனே மூஞ்ச சோகமா வெச்சிக்க வேண்டியது. இடியட்.” எனக் கூறிக் கொண்டார் அவனை முறைத்தவாறு.

அவ்வாறே “காவ்யா, உள்ள வா.” என வெளியில் ஒளிந்து நின்று நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருப்பவளை அழைக்க

“குட் மோர்னிங் அங்கிள்.” என்றவாறே அவன் அருகில் வந்து நின்றாள்.

“ரொம்ப தங்க்ஸ் மா. நீ மட்டும் இவனைப் பத்தி சொல்லலன்னா எனக்கு எதுவுமே தெரிஞ்சிருக்காது.” என்று கூறிட

“அடிப் பாவி ராட்சசி. போட்டுக் குடுத்துட்டியேடி. வெளில வா உன்ன வெச்சிக்கிறேன்.” என்றவாறு அவளை திரும்பி முறைத்தான் சத்யா.

“அங்கிள்… அங்கிள்… பாருங்க அங்கிள். எப்படி முறைக்கிறான்னு.” என்றவாறு வாசுதேவராம் அருகில் நின்று கொண்டாள் அவள்.

“என்னடா முறைப்பு? இங்கப் பாரு இன்னையில இருந்து காவ்யா உனக்கு டெய்லி பாடம் சொல்லிக் கொடுப்பா. அவக்கிட்ட வம்பு பண்ணாம ஒழுங்கா படிக்கனும். இல்லன்னா தொலைச்சிடுவேன்.” என்றார் அவனை கோபமாகப் பார்த்தவாறு. இவ்வளவு நேரம் நடந்த விடயங்களைக் கூட சகித்துக் கொள்ள முடிந்தவனுக்கு தற்போது நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது ஏனோ?

“என்னாது??? இவக்கிட்ட நான் படிக்கனுமா? டேட்… நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல? எல்லாத்துலையும் A ரிஸல்ட் தானே எடுத்தேன். நான் ஸ்டேட் ரேங்க் நம்பர் 1. பின்ன எதுக்கு இவக்கிட்ட நான் படிக்கனும்? திஸ் இஸ் நொட் பேர்.” என்றான் எரிச்சலாக.

“என்னடா? வாய் ரொம்ப நீளுது? அதெல்லாம் தெரியாது. நீ வாய மூடிட்டு காவ்யா கிட்ட படிக்க போற. நீ அட்வான்ஸ் லெவல்லதான் ஸ்டேட் நம்பர் 1. கொலேஜ்ல இல்லை. இங்க அவதான் rank 1. புரிதா? காவ்யா நீ நல்லா படிக்கிறன்னு செர்டிபிகேட் கொடுத்தாதான் உனக்கு எல்லா ரைட்ஸும் கிடைக்கும். இல்லன்னா நான் சொல்ற மாதிரிதான் நீ நடந்துக்கனும்.” என்று கூறிவிட்டு

“கெட் அவ்ட் இடியட்.” என்றார் தனது கோப்புக்களை சரி செய்தவாறு.

“எல்லாம் என் நேரம்.” என்றவாறே கோபமாக வெளியில் தன் நேர்த்தியாக இருந்த தலைமுடியைக் கலைத்தவாறும் டக் இன் செய்யப்பட்டு இருந்த சேர்ட்டை வெளியில் இழுத்து விட்டவாறும் புத்தகத்தை தூக்கி எறிந்தவாறும் வந்தான் சத்யா.

அவனைப் பின் தொடர்ந்தே காவ்யா “சத்யா… நில்லு… ஒரு நிமிசம்…” என்று கத்திக் கொண்டு ஓடி வந்தாள். அவளின் அழைப்பில் கடுப்பானவன் தன் நடையை நிறுத்திக் கொள்ள அவன் அருகில் வந்து நின்றவளைப் பார்த்தவன்

“என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? போட்டுக் குடுக்குறியா நீ? தொலைச்சிடுவேன். ஏற்கனவே செம்ம கடுப்புல இருக்கேன். ஓடிப் போய்டு.” என்றான் கடுப்புடன்.

“ஏன்டா கோபப்படுற? உன் நல்லதுக்காக தான் நான் சொன்னேன். என்ட் அங்கிள் சொன்ன மாதிரி நாளையில இருந்து வெட்டியா ஊரு சுத்தாம என்கிட்ட படிக்க வா.” என்றதும் கோபம் கொதித்தெழ

“அடிங்… யாரு யாருக்கிட்ட படிக்கிறது? அதெல்லாம் முடியாது. அவர் கேட்டா நான் உன்கிட்ட நல்லாவே படிக்கிறன்னு சொல்ற. எனக்கு நல்லது பண்ணணும்னா இத மட்டும் பண்ணு.” என்று தான் கூற வந்ததை சடசடவென கூறிவிட்டு சென்று விட்டான்.

கொலேஜ் முடிந்ததும் தனது வேலைகள் அத்தனையையும் முடித்து விட்டு வீட்டுக்கு வந்தாள். வந்தவளோ ஏதோ யோசனையிலேயே அமர்ந்திருக்க தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகியது.

“இன்று மதியம் ஏற்பட்ட விஜயேந்திரா சரஸ்வலதி மகளிர் பாடசாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல மாணவிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் சில மாணவிகள் தீப்பற்றிய கட்டிடத்தில் மாட்டிக் கொண்டிருந்தனர். விஜயேந்திர நகரைச் சேர்ந்த சத்ய ராம் எனும் துணிச்சலான இளைஞர் ஒருவர் தீப்பற்றிய கட்டிடத்தினுள் நுழைந்து அனைத்துக் குழந்தைகளையும் வெகு விரைவில் தனி நபராய் நின்று காப்பாற்றியுள்ளார். தற்போது காயமடைந்த அனைத்து மாணவிகளும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவிகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோர் சத்ய ராம் எனும் அந்த இளைஞருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். இதில் அவ் இளைஞர் கிரிஷ் கதாப்பாத்திரம் போன்று முகமூடி அணிந்து தனது காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காப்பாற்றப்பட்டுள்ள மாணவிகள் அனைவரும் “கிரிஷ்… கிரிஷ்…” என்று கூச்சலிட்டு அவருக்கு தமது ஆதரவை வழங்கி வந்தனர். அந்த இளைஞர் பற்றி எந்த தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் அவரால் காப்பாற்றப்பட்ட ஒரு மாணவியின் மூலமாக அவரது பெயர் மாத்திரமே தெரிய வந்துள்ளது.”

என செய்தியாளர் இன்று நடந்த விபத்தைப் பற்றியும் அதில் சத்யாவின் சாகசங்கள் பற்றியும் கூறிட அது தன்னவன்தான் என்பதை இலகுவாக அறிந்து கொண்டு தனது அறைக்குள் அவனை நினைத்து பெருமைப் பட்டுக் கொண்டே ஓடினாள். இதழில் காதல் புன்னகை ஒட்டிக் கொள்ள உள்ளே வந்து அவனின் புகைப்படத்தை எடுத்து நெஞ்சில் வைத்து ரசித்துக் கொண்டிருந்தாள் காவ்யா.

அந்த சமயம் “ஹேய்த் திருடி…” என சத்யாவின் குரல் ஒலித்திட சுற்றும் முற்றும் நோக்கினாள். யன்னலில் அமர்ந்துகொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா.

“ஹேய்… சத்யா. நீ எப்படி இங்க வந்த?” என்று அதிர்ந்து அவள் கண்ணை உருட்டி உருட்டி கேட்க

“வேற எப்படி? சுவரேரி குதிச்சுதான்.” என்றான் அவள் அருகில் நெருங்கியவாறே.

அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது இவனை யாராவது பார்த்து விட்டால் பிரச்சினை என்றதுதான். உடனே அவனை தள்ளி விட்டவள் கதவை தாழ் இட்டவுடன்

“ஹேய்… என்னடி கதவை லொக் போடற? மேடம் செம்ம ரொமேன்டிக் மூட்ல இருக்கீங்க போல இருக்கு. நானுமே செம்ம ரொமேன்டிக் மூட்ல தான் இருக்கேன்.” என்றான் கையை முறுக்கிக் கொண்டு அவளை நெருங்கி தன் இரு கைகளாலும் அவளை சிறை செய்தபடி,

அவள் அவன் கையைப் பிடித்து தள்ளி விட அவன் கையில் இருந்த காயத்தில் அவள் கைகள் பட வலியில் “ஆ…” வென கத்தினான்.

“சத்யா… என்ன ஆச்சு?” என அவள் துடித்துப் போனாள்.

“நெருப்புல குதிச்சேனா சுட்டுக்கிச்சு. வலிக்கிதுடி…” என்றான் கையைப் பிடித்து சிறுகுழந்தையாய் கதறியவாறே. அவன் கதறலில் அவன் வலியை தனதாக்கிக் கொண்டவள் அருகில் இருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்துக் கொண்டு அவனை அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தவாறு

“பாத்து நடந்துக்க மாட்டியா சத்யா? பாரு எவ்ளோ பெரிய காயம். உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்ன பண்ணுவேன்?” என்று விழிகளில் கண்ணீர் தேம்ப அவனுக்கு மருந்து போட்டுக் கொண்டு கூறிட அவள் தாடையை உயர்த்தி அவள் விழிகளை நோக்கியவன்

“என் மேல உனக்கு அவ்ளோ லவ்வாடி? இதுக்கு முன்ன என் மேல இவ்ளோ பாசம் யாருமே காட்டினது இல்லை. ஆனால் நீ ஏன் காட்டுற?” என்று தன் சந்தேகத்தை கேட்டிட

“ஏன்னா உன்ன நான் அவ்ளோ காதலிக்கிறேன்டா. என் உலகமே நீதான். நீ இல்லாம சத்தியமா நான் இல்லை.” என்று கூறியவாறே அவன் கழுத்தை இரு கரம் கொண்டும் சிறை செய்து அவன் தோளில் சாய்ந்து அவனை காதலாக நோக்கினாள்.

அதில் கரைந்து போனவன் “ஐ லவ் யூ.” என உதிர்க்க “ஐ லவ் யூ டூ.” என்றாள் ஏதோ ஒன்றை சாதித்த சந்தோசத்தில். இருவரும் ஒருவர் கண்களை ஒருவர் நோக்க காதல் நொடிக்கு நொடி இனிப்பாக இனித்துக் கொண்டே இருந்தது.

அவள் அவனைத் திசை திருப்புமாறு “இப்போ எதுக்கு வந்தன்னு முதல்ல சொல்லு.” என்றாள் கட்டிலில் கைகளை விரித்து கண்களை மேலே பார்த்து படுத்தபடி.

அவனும் அவள் அருகே சென்று படுத்துக் கொண்டான். “நான் இப்போ ஏன் வந்தேன் தெரியுமா?” என்று கேட்டான் ஒற்றைக் கையை மெத்தையில் ஊன்றி அதில் தலையைத் தாங்கி அவளைப் பார்த்தவாறே.

“எதுக்கு வந்த?” என்றாள் விரலை நீட்டி அவனை முறைத்தவாறு.

“ஏன்டி இவ்ளோ சூடா இருக்க. கூல்… கூல்… அது என்னமோ என் உள் மனசு சொல்லிச்சு என்ன நீ நினைச்சன்னு அதுதான் நீ நினைச்ச உடனே ஓடி வந்துட்டேன். சொல்லு… என்னை நினைச்சியா?” என்றான் அவளைக் காதலாக பார்த்தவாறு.

“இல்லையே நான் ஏன் உன்னை நினைக்க போறேன்? நான்லாம் நினைக்கலப்பா. முதல்ல இங்க இருந்து கிளம்புடா. பாட்டி மட்டும் பாத்திச்சின்னா அதுவும் இவ்ளோ நெருக்கமா பாத்தா உன்னையும் என்னையும் சேத்து வெட்டி போட்ரும்.” என்றாள் வேண்டுமென்றே.

“இந்தப் பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியல. காலையில என்னன்னா போடி போடின்னு துரத்தினாலும் போக மாட்டேங்கிற. இப்போ நானா தேடி வந்தா போ போன்னு துரத்தி விடுற. சோ இரிடேடிங்க். என்னடி நினைச்சிட்டு இருக்குற உன் மனசுல? பின்னால சுத்தி சுத்தி பீலிங்க்ஸ வர வெச்சிட்டு இப்போ போ போன்னா நாங்க போய்டனுமா? அதெல்லாம் முடியாது.” என்றான் அவள் இதழ்களை இழுத்தவாறே.

“டேய்… என்னடா பண்ற? இன்னைக்கு பாட்டி வைத்தியம் கிடைக்க போறது நிச்சயம்.” என்றாள் சினுங்கலாக.

“ஏன்டி இவ்ளோ அழகா இருக்க? ஒரே நாள்ள மனச திருடிட்டு போய்ட்டியேடி திருடி. எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுக்குறீயா? ப்ளீஸ்.” என்றான் காதலாக அவளை நெருங்கி.

“டேய்… சத்யா… வேணாம்டா இதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு பாத்துக்கலாம்டா முதல்ல கிளம்புடா… பிரச்சினை ஆகிடப் போகுதுடா.” என்று கேட்டாள் கெஞ்சலாக புருவம் உயர்த்தியவாறு.

“நீ கொடுக்கலன்னா என்ன நானே கொடுத்துர்ரேன்.” என்று கூறியவாறு அவளை நெறுங்கி நெற்றியில் முத்தம் இட்டான். அவன் நெருக்கத்தில் பிரபஞ்சத்தையே மறந்து தன் காதலை அனு அனுவாக ரசித்துக் கொண்டு இருந்தவளுக்கு வியர்வை நெற்றியில் இருந்து ஓடி வந்து வழி தெரியாது கீழே சிந்திக் கொண்டு இருக்க இதயம் இது போன்ற இனிமையான உணர்வை இதுவரை உணராமல் இருக்க பயத்தில் வெடித்துப் பறந்துவிடும் அளவு வேகமாகத் துடிக்க அவள் உணர்வுகளை கலைக்கும் முகமாக கதவை “டொக்… டொக்…” என தட்டினார் பார்வதி பாட்டி.

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!