வதைக்காதே என் கள்வனே

4.3
(9)

கள்வன்-11

கண்களில் வழியும் கண்ணீரைக் கூட உணராமல் அவன் கூறும் கதையில் மூழ்கினாள் வெண்மதி.

“அப்பறம் என்ன ஆச்சு..?” என்று திக்கி தினறி கேட்க,

மித்ரனோ பழைய நினைவுகளின் தாக்கத்தில் கண்கள் கலங்க அவளைத் திரும்பிப் பார்த்தவன் சோர்ந்து போன குரலில் “என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு. நான் ஹாஸ்பிடல் போனேன்.. எங்க அப்பா என்ன அம்மாவை பார்க்கவே விடல. என் மேல அவங்களுக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை.. இத்தனை வருஷமா பார்த்து பார்த்து வளர்த்தவங்களுக்கு அந்த நிமிஷம் நான் தப்பு பண்ணியிருக்க மாட்டேன்னு புரியல. அந்த நிமிஷம் நான் வாழ்க்கையிலே நினைச்சி கூட பார்க்காத ஒரு நாளா எனக்கு இருந்திச்சு. அன்னைக்கு உன்னைத் தெரியாமல் தொட்டதுக்கு நீ என்னவோ உன் கற்பே போன மாதிரி அவ்வளவு சீன் போட்டு எல்லார் முன்னாடியும் என்னை கேவலப்படுத்தி என் குடும்பத்தை விட்டு என்னை நிரந்தரமா பிரிச்சிட்டியே டி. அந்த தாக்கத்தில இருந்து என்னால அவ்வளவு சீக்கிரம் வெளி வர முடியல.. இல்லன்னா உன்ன தூக்குறதுக்கு எனக்கு இந்த ஆறு மாசம் தேவை பட்ருக்காது அப்பவே உன் கதைய முடிச்சிருப்பேன்..” என்று சொன்னவன் பார்வை கண்டிப்பாக செய்து முடித்திருப்பேன் என்று சொன்னது. ஒரு கணம் அந்த பார்வையை பார்த்தவளுக்கோ வியர்த்தது.

“அப்ப முடிவு பண்ணேன் உன்னோட இந்த உடம்புக்கு தானே நீ இவ்வளவு பண்ண..? எதை காப்பாத்துறதுக்காக என்னை நீ அத்தனை பேர் முன்னாடி கேவலப்படுத்தினாயோ அதையே உன்கிட்ட இருந்து பறிக்கணும், நான் பட்ட அவமானத்தை நீயும் படனும்னு அன்னைக்கு முடிவு பண்ணினேன். இப்போ நான் நினைச்ச மாதிரியே உன்கிட்ட இருந்த கற்பை பறிச்சிட்டேன். இனி நீ எனக்கு தேவையில்லை. நீ போகலாம் என்னை விட்டுப் போனதுக்கு அப்புறம் நீ உயிரோடு இருந்தா என்ன இல்லைன்னா எனக்கு என்ன நான் நினைச்சத முடிச்சுட்டேன்.. ஆனா ஒன்ன மட்டும் நினைவில வச்சுக்கோ இங்க இருந்து போனதுக்கு அப்பறம் தப்பித் தவறி என் கண்ணுல மட்டும் பட்டுட கூடாதுன்னு அந்த கடவுள் கிட்ட வேண்டிக்கோ… அப்படி என் கண்ணுல பட்டன்னு வை.. நீ ஆயுளுக்கும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது..” என்றவன் அவளது கண்களைப் பார்த்தான்.

அவளோ தற்போது எதுவும் கூறும் மனநிலையில் இல்லை.

வெளியே நந்தாவும் லியாவும் சாப்பிடச் சென்றவர்கள் இவன் அவளிடம் தன்னுடைய கடந்த காலத்தை கூறும் போதே வந்து விட்டார்கள்.

ஆனால் உள்ளே வரவில்லை அறையின் வெளியவே நின்று கொண்டார்கள்.

நந்தாவிற்கு அவன் கடந்த காலத்தை பற்றித் தெரியும். இப்போது லியாவுக்கும் அவன் சொன்ன கதையை கேட்ட பின்பு அதுவுமே அவனை நினைத்து கவலை கொண்டது.

மித்ரன் அவளிடம் திரும்பியவன் “இப்ப தெரியுதா.. என்னோட வலி என்னன்னு புரியுதா உனக்கு.? என் அம்மா இல்லாம என்னால இருக்கவே முடியாது. அப்படிப்பட்ட என்ன அவங்க கிட்ட இருந்து நிரந்தரமா பிரிச்சிட்டியேடி பாவி..” என்றவன் கோபத்தில் நரம்புகள் புடைக்க அவளது கழுத்தை பிடித்து நெறித்தான்.

அவளோ அவன் சொன்ன வார்த்தைகளை கேட்கக் கேட்க உள்ளூர உடைந்து தான் போனாள்.

தன் வாழ்நாளில் ஒரு ஈ எறும்புக்கு கூட துரோகம் செய்யாத அவள் தெரிந்தோ தெரியாமலோ ஒரு குடும்பத்தை சிதைத்து விட்டோமே என்பது புரிய சிலை போல அப்படியே அமர்ந்தாள்.

அவளுக்கே அன்று என்ன நடந்தது என்று தெறியாத போது இவன் கூறுவதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவன் கண்கள் அவன் கூறுவது மெய் என்று உணர்த்தியது. இது அனைத்திற்க்கும் காரணம் தான் என்பதை மட்டும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ப்ளீஸ் தயவு செஞ்சு என்னைக் கொன்னுருங்க.. இப்படி ஒரு பாவத்தை நான் பண்ணினேனான்னு எனக்கு சத்தியமா தெரியல.. ஆனா உங்க கண்ல தெரியிற வலிய பார்க்கும் போது உண்மைன்னு புரியுது. உங்களுக்கு செஞ்ச பாவத்துக்கு உங்க கையாலேயே என்ன கொன்னுறுங்க..” என்றாள்.

அவளைத் தீர்க்கமாகப் பார்த்தவன், “என்னடி பண்றெதெல்லாம் பண்ணிட்டு இப்போ நல்லவ மாதிரி நடிக்கிறியா..? உன்னை கொல்றதுக்கு எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது.. ஆனா ஒரு பொண்ணுக்கு தன் உயிரை விட மேலானது கற்புதான். அதையே உன்கிட்ட இருந்து நான் பறிச்சிட்டேன். இனி நீ எனக்கு தேவையில்லை..” என்றவன் சட்டென அவள் கழுத்தில் இருந்து கையை எடுத்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தவன் நந்தாவிற்கு கால் செய்தான்.

“நந்தா எங்க இருக்க உடனே வா..” என்றான். அவன் அழைப்பு வந்த உடனேயே நந்தாவும் அழைப்பை ஏற்று “ஓகே பாஸ் இதோ வந்துட்டேன்..” என்றவன் அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

“பாஸ் சொல்லுங்க பாஸ்..”

நந்தா இங்க இருந்து இவளை டிஸ்சார்ஜ் பண்ணதும் இவளை அவள் இடத்துல கொண்டு போய் விட்ரு..” என்று சொன்னவன் அங்கிருந்து உடனடியாக கிளம்பி விட்டான்.

அவன் போகும் திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மதி.

நந்தாவின் தோளில் இருந்த லியா மதியிடம் பறந்து சென்று “மதி உனக்கு ஒன்னும் இல்லையே..?” என்று அக்கறையாக கேட்டது.

அவளோ வாசலில் நிலை குத்திய பார்வையை திருப்பாமல் பதில் சொன்னாள் லியாவிடம்.

“நா உயிரோட இருக்கவே தகுதி இல்லாதவ லியா.. எனக்குன்னு ஒரு குடும்பம் இல்லை.. அதுக்காக நா எப்படி ஏங்கிருக்கேன்னு உனக்கு நல்லா தெரியும்.. அப்படி பட்ட நானே ஒரு குருவிகூட்டை களைச்சிருக்கேன்…” என்றவள் தலையில் அடித்து கொண்டு அழுதாள்.

அவள் அழுவதை தாங்கி கொள்ள முடியாமல் லியாவுக்கு என்ன சொல்லி அவளைத் தேற்றுவது என்று தெரியவில்லை. நந்தாவின் முகத்தை பாவமாக பார்க்க அவனுக்கும் அவளை பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது.

இப்படியே நேரங்கள் கடக்க நந்தா ஹாஸ்பிட்டல்லில் பில் எல்லாம் செட்டில் செய்து விட்டு அவனின் நண்பனிடம் ஒரு முறை மதியின் உடல்நலம் பற்றி விசாரித்து விட்டு மதி இருக்கும் அறைக்கு வந்தவன் மதியின் கையில் ஒரு கவரைக் கொடுத்து “இதுல இருக்க ட்ரெஸை போட்டுட்டு வா உன்ன உன் வீட்டுல விட்டுடுறேன் இது பாஸ் குடுத்த ட்ரெஸ்..” என்றான்.

ஆம் அவள் கையை வெட்டிக் கொண்டு கிடந்த போது மித்ரன் வந்து பாரக்க அவள் தன் உடலை சுற்றிய போர்வையோடு தான் கிடந்தாள்.

இப்படியே இவளை வெளியே கூட்டிச் செல்ல முடியாது என்று நினைத்தவன் உடனே அந்த அறையில் உள்ள கப்போர்டில் உள்ள அவனுடைய ஒரு டீஷர்ட்டை அவசர அவசரமாக போட்டு விட்டான்.

அதுவோ அவளுக்கு தொடையை விட்டும் சற்று கீழே இருக்க திருப்தியாக உணர்ந்தவன் அதன் பின் தான் அவளை கீழே தூக்கி கொண்டு வந்தான்.

இப்போது நந்தா ஆடை உள்ள கவறை கொடுத்ததும் தான் தன்னை குனிந்து பார்த்தாள் அவள்.

மித்ரனின் கருப்பு நிற டீஷர்ட் மட்டும் அணிந்திருந்தாள் அவள்.

நந்தாவை பார்த்து “நீங்க கொஞ்சம் வெளிய இருக்கீங்களா நா ட்ரெஸ் மாத்திட்டு கூப்பிடுறேன்..”

“ஓகே..” என்று வெளியே சென்று நின்று கொண்டான் நந்தா.

மெல்ல எழுந்து கொண்டவள் அந்த கவரை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்று அந்த ஆடையை கையில் எடுத்தாள்.

அது ஒரு சுடிதார் மஞ்சள் கலரில் இருந்தது. பார்த்ததும் அவள் வதனத்தில் சிறு கீற்றுப் புன்னகை.

அவளுக்கு மஞ்சள் கலர் ரொம்ப புடிக்கும். அதை அணிந்தவளுக்கு ஆச்சரியம். அளவு மிகவும் சரியாக இருந்தது. ‘இவருக்கு எப்படி என்னோட அளவு தெரியும்..’ என்று யோசித்தவளுக்கோ அவன் தன்னிடம் அத்து மீறிய தருனங்கள் நியபகம் வர தலையை உதறிக் கொண்டு வெளிய வந்தவள் நந்தாவை அழைத்து “போலாம் அண்ணா..” என்றாள்.

அவள் “அண்ணா” என்று சொன்னதும் ஒரு நிமிடம் திடுக்கிட்டு நிமிர்ந்து அவளை பார்த்தவன் “இப்ப என்ன சொன்ன..?” எனக் கேட்டான்.

“ஹான் போலாம் அண்ணானு சொன்னேன்..”

“அதான் ஏன் திடீர்னு என்ன அண்ணானு கூப்பிட்டன்னு கேட்டேன்..?” என்று நந்தா கேட்க,

“அண்ணானு தான கூப்பிட்டா… வெண்ணன்னா கூப்பிட்டா இப்படி ஷாக் ஆகுற..” என்றது லியா.

“லியாஆஆ..” என்று அதை அடக்கியவள் “உங்கள பார்த்தா ஒரு அண்ணா ஃபீல் வந்தது அதான் கூப்பட்டேன் தப்பா இருந்தா மன்னிச்சிருங்க..” என்றாள்.

“ச்சே ச்சே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை திடீர்ருனு அண்ணானு கூப்பட்டதும் ஒரு மாதிரி ஆகிட்டேன் அதான் நீ அப்படியே கூப்பிடு..” என்றவன் “சரி வாங்க போகலாம்..” என்று அவர்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு மதி இருக்கும் வீட்டில் இறக்கி விட்டு “சரிமா நா கெளம்புறேன் உடம்ப பாத்துக்கோ மறுபடியும் இந்த மாதிரி சூசைட் பண்ண ட்ரை பண்ணாத.. உனக்கு எதாவது தேவைன்னா என்கிட்ட கேளு.” என்றவன் தன் மொபைல் நம்பரை அவளிடம் கொடுத்து விட்டு “அப்புறம் இது உன்னோட பேக்..” என்று அவளைக் கடத்தும் போது அவள் கையில் இருந்த பேக்கை குடுத்தான்.

மதியோ தன் முகத்தில் விரக்தி புன்னை ஒன்றை சிந்தி விட்டு அவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டாள்.

அவனோ லியாவை பார்த்து “பை லியா உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்..” என்றான் சோகமான குரலில்‌.

மதியின் தோளில் இருந்த லியா நந்தாவை நோக்கி பறந்து வர அவனோ தன் உள்ளங்கையை காட்ட அழகாக அதில் வந்து நின்று கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து “நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் நந்தா..” என்றது.

பின்பு ஒரு வழியாக அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்து விட்டு நந்தா அங்கிருந்து செல்ல மதியோ இனி தன் வாழ்க்கை எதை நோக்கிப் பயணிக்கும் என்று யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் போனாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!