கள்வன்-12
தன்னுடைய வீட்டிற்கு வந்தவளுக்கு அடுத்து என்ன என்று யோசிக்க முடியவில்லை. இப்படியே ஒரு வாரம் கடந்தது.
இனியும் இப்படியே இருக்க முடியாது என்று யோசித்தவள் பின் ஒரு முடிவாக தான் வேலை பார்க்கும் ஆஃபீஸ்க்கு செல்ல முடிவெடுத்தாள்.
அதனால் மறுநாள் வழக்கம் போல தான் பணி புரியும் அலுவலகம் நோக்கி பயணப்பட்டாள்.
அவள் முகத்தில் எந்த விதமான உணர்வும் இன்றி வெறுமையாக இருந்தது. அவளுடனே ஒட்டிப் பிறந்த இரட்டைப் போல லியாவும் அவளுடனே சென்றது.
முதல் நாள் அலுவலகம் செல்லும் போது லியாவை அழைத்துச் சென்றிருக்க, மேனேஜர் அவளை விலாசி விட்டார்.
“நீங்க என்ன சின்னப் பொண்ணாமா..? சின்னப்பிள்ளைங்க பொம்மையை தூக்கிட்டு அலையிற மாதிரி இதையும் தூக்கிட்டு வந்திருக்கீங்க..?” என்று கேட்க,
“சார் அப்படில்லாம் இல்ல சார் லியா எந்த பிரச்சனையும் பண்ணமாட்டா.. ப்ளீஸ் சார் அவள அனுப்ப மட்டும் சொல்லாதிங்க..” என்க. லியாவோ அதுவும் அது பங்குக்கு மதியின் தோளில் இருந்து இறங்கி மேனேஜருக்கும் வெண்மதிக்கும் இடையே இருந்த மேஜையில் அவருக்கு முன்பாக வந்து நின்று கொண்டு அவரை சமாதானம் படுத்தும் விதமாக “ஆமா சார் நா ரொம்ப சமத்து பொண்ணு..”
“என்ன பொண்ணா..?”
‘அய்யோ இவன் வேற சொட்டத் தலையா வெளிய வாடா உனக்கு இருக்கு..’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே வெளியே “ஹி..ஹி.. இல்ல சார் நா ரொம்ப சமத்து கிளி.. யாருக்கும் எந்த விதமான தொந்தரவும் குடுக்க மாட்டேன்.. என்னால மதி இல்லாம இருக்க முடியாது ப்ளீஸ்.. என்ன வெளிய போகச் சொல்லாதீங்க..” என்று தன் கொஞ்சும் குரலில் கெஞ்ச மேனேஜரோ நம்ம நந்தாவை போல அதன் கொஞ்சும் பேச்சில் கவர்ந்தவர் லியாவையும் மதியையும் ஒரு முறை பார்த்து விட்டு “சரி ஓகே நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு தூரம் சொல்றதால சம்மதிக்கிறேன் பட் பார்த்து நடந்துக்கனும் பரியுதா..?” என்க, அவர் சம்மதம் சொன்னதும் இருவரும் இருக்கும் இடம் மறந்து “ஹேஏஏஏஏ..” எனக் கத்தி கூச்சல் போட மேனேஜரோ முறைத்த படி “இப்பதான சொன்னேன்..” என்க.
இருவரும் ஒரே போல “சாரி சார் நீங்க ஓகே சொன்னதும் கொஞ்சம் எக்சைட்மென்ட் ஆகிட்டோம் இனி இப்படி நடக்காது..” என்றனர்.
“ஓகே போங்க..” என்றார்.
இன்று அவள் அலுவலகத்துக்குள் நுழைந்தாள்.
அவள் உள்ளே வருவதைப் பார்த்த அங்கு வேலை செய்யும் அனைவரும் ஒன்று சேர்ந்தாற் போல அவளை சூழ்ந்து கொண்டார்கள்.
அவர்கள் அனைவரும் தன்னை சூழ்வதைக் கண்டு மதியோ திருதிருவென்று விழித்தாள்.
“என்ன இங்க சத்தம் என்று தன் கம்பீரமான குரலில் கேட்டபடியே ஒரு பெண் அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்.
அவள் மதியின் டீம் ஹெட்.
அவள் பெயர் ஆஷா. பார்க்க அரேபியன் குதிரை போலவே இருப்பாள். அவளைக் கடந்து போகிறவர்கள் அவளை ஒரு நிமிடம் திரும்பி பார்த்து தான் போவார்கள். ஆனால் அவள் யாரையும் கண்டு கொள்ள மாட்டாள். தான் அழகு என்ற கர்வம் உடையவள்.
“இங்க என்ன சத்தம்னு கேட்டேன்..?” என்றாள்.
பின்பு மதியை பார்த்தவுடன் ஆச்சர்யத்தில் “நீயா நீ எப்படி இங்க..? உன்னையே தான் அன்னைக்கு கடத்திட்டு போனாங்களே என்ன ஆச்சு எப்படி வந்த நீனு..” என்று கேட்க, லியாவோ மனதிற்க்குள் ‘அடிப்பாவி ஏன் வந்தங்கிற மாதிரியே கேக்குறாளே..’ என்று நினைத்து கொண்டது.
அவள் கேட்பதை பார்த்து கொண்டிருந்த மதிக்குமே இவள் தன்னை அக்கறையாக கேட்கிறாளா இல்லை ஏன் வந்தாய் என்று கேட்கிறாளா என்று புரியாமல் யோசனையோடு அவளை பார்க்க.. அவளோ சலிப்பாக “ப்ச்.. ஏன் இப்படி அமைதியா இருக்க.. வாய திறந்து பதில் சொல்லு.. உன்னை எதுக்கு கண் பாயிண்ட்ல தூக்கிட்டு போனாங்க..? நாங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தோம்… பட் போலீஸ் அந்த கேஸ எடுத்துக்க மாட்டேன் சொல்லிட்டாங்க.. இது பெரிய இடத்து விவகாரம் நீங்க இதுல தலையிடாதீங்க அப்புறம் உங்களுக்குத் தான் பெரிய பிரச்சனை வரும் அப்படின்னு சொல்லி எங்கள அனுப்பிட்டாங்க. இப்ப பார்த்தா நீயே வந்து நிக்கிற.. எங்களுக்கு எதுவும் புரியல என்னதான் ஆச்சு..?” என்று கேட்டாள்.
அதற்கு மதியோ ஒரு நிமிடம் தன்னை சுற்றி இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் மெதுவாக “அ..அது வந்து என்ன ஆள் மாத்தி தூக்கிட்டு போயிட்டாங்க போல சோ அவங்களே விட்டுட்டாங்க அதான் நான் வந்துட்டேன்..” என்றாள்.
அவள் கூறுவதை அங்குள்ளவர்களுக்கு நம்ப முடியவில்லை என்றாலும் அவளாக சொல்லாமல் தங்களுக்கு எதுவும் தெரிய வாய்ப்பு இல்லை என்று முடிவு செய்தவர்கள் அமைதியாக இருந்து கொண்டார்கள். பின் அனைவரையும் ஒருமுறை பார்த்த ஆஷா “இங்கு என்ன வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கீங்க அதான் அவளே சொல்லிட்டாளே ஆளை மாத்தி கூட்டிட்டு போய்ட்டாங்க அப்படின்னு. பின்ன இவ மூஞ்சிய பாத்தா எவனும் லவ் கூட பண்ண மாட்டான் அப்படி இருக்கும்போது இவள ஒருத்தன் தூக்கிட்டு போற அளவுக்கு அப்படி என்ன மேடம் கிட்ட இருக்குன்னு நானே யோசிச்சிக்கிட்டு தான் இருந்தேன். இப்பதான் தெரியுது ஆள் மாறிடுச்சு அப்படின்னு.. இல்லைனா இவள வச்சு அவங்களுக்கு என்ன யூஸ் இருக்கு. இவ மூஞ்சியை பார்த்ததுமே அவன் தெறிச்சு ஓடி இருப்பான். போங்க போங்க போய் உங்க வேலைய பாருங்க.. அண்ட் மிஸ் வெண்மதி நீ போய் மேனேஜரை பாரு அதுக்கப்புறம் நீ இங்க வேலைய கண்டினியூ பண்ணலாம்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
மற்றவர்கள் அனைவரும் அதன் பிறகு அவளிடம் எதுவும் கேட்காமல் அங்கிருந்து களைந்து அவரவர்கள் வேலைகளை பார்க்கச் சென்று விட்டார்கள்.
லியாவோ மதியின் காதில் மெதுவாக “மதி பார்த்தியா இந்த ஆஷா குரங்குக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கனும் உன்னை எப்படி எல்லாம் பேசுறா அவ மனசுல பெரிய அழகு சுந்தரின்னு நினைப்பு..” என்றது.
மதியும் “பேசாம இரு லியா..” என்றவள் மேனேஜரை பார்ப்பதற்காக அவரின் அறைக்குள் சென்றாள்.
அங்கு அவரும் ஆஷா கேட்ட அதே கேள்வியையே அவளிடம் கேட்டார். “என்னாச்சு வெண்மதி உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்ல தானே நீங்க எப்படி திரும்பி வந்தீங்க..?” என்று கேட்டார். மதியோ “சார் என்ன ஆள் மாத்தி கடத்திட்டு போய்ட்டாங்க.. அதுக்கப்புறம் அவங்களே என்னை கொண்டு வந்து விட்டுட்டாங்க.. அவ்வளவுதான் சார் நடந்துச்சு..” என்றாள்.
“சரி ஓகே கொஞ்சம் கவனமா இருங்க.. இப்போ நீங்க போய் வேலையைப் பாருங்க..” என்க. மேனேஜர் அறையில் இருந்து வெளியே வந்தவள் தன்னுடைய கேபினுக்குள் நுழைந்தாள்.
ஏதோ ஒரு பெரிய புயலுக்குள் சிக்கி விலகி வந்தது போல் இருக்க தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவள் ஒரு பெருமூச்சை எடுத்து விட்டு நடந்ததை எல்லாம் ஒருபுறமாக ஒதுக்கி வைத்து விட்டு தன் வேலையை பார்க்க ஆயத்தமானாள்.
அதன் பிறகு இரண்டு நாட்கள் மட்டும் அவள் எதிலுமே அவ்வளவாக நாட்டம் இல்லாமல் இருந்தாள். பின் அங்குள்ளவர்களுடன் சகஜமாக பழகி நடந்து முடிந்ததை கொஞ்சம் கொஞ்சமாக கடந்து வந்தாள். நாட்கள் இப்படியே சென்றது. முழுதாக இரண்டு மாதங்கள் கடந்தது.
இந்த இரண்டு மாதங்களில் மித்ரனையோ நந்தாவையோ அவள் பார்க்கவே இல்லை. அதனால் இந்த இரண்டு மாதமும் அவனைப் பற்றிய நினைவில் இருந்து முழுதாக வெளியே வந்தவள் ஆபீஸ் வீடு லியா என்று அவளுடைய பொழுதுகள் நல்லதாகவே இருந்தது.
வழக்கம் போல இன்றும் அலுவலகத்திற்குள் வந்தவள் தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது மேனேஜர் அனைவரையும் அழைத்து கான்பிரன்ஸ் மீட்டிங் அரேஞ்ச் செய்தார்.
அங்கு அவர் என்ன கூறினார் என்றால் “குட் மார்னிங் எவ்ரிபடி இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன்.. நம்ம சீஇஓ அவங்களுக்கு கொஞ்சம் மெடிக்கல் இஸ்யூ அதனாலதான் அவரு கொஞ்ச நாளா நம்ம ஆபீஸ் பக்கம் வராம இருந்தாரு.. அது உங்களுக்கு நல்லாவே தெரியும் ஏன் திரும்பவும் சொல்றேன்னா அந்த பிரச்சினையை இங்கே இருந்தே சரி பண்ணிடலாம் அப்படின்னு நினைச்சாங்க பட் முடியல… இப்போ கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன் அதனால அவரு தன்னோட ட்ரீட்மென்ட்க்காக யுஎஸ்ஏ போறாரு.. சோ அதுவரைக்கும் நம்ம கம்பெனியோட ஒன் அண்ட் ஒன் ஆஃப் பார்ட்னர் தான் நம்ம கம்பெனியை டேக் ஆஃப் பண்ணப் போறாரு.. நம்ம சிஇஓ ட்ரீட்மெண்ட் முடிஞ்சு வர்ற வரைக்கும் இவர்தான் இனி எல்லா முடிவுமே எடுப்பாரு… சோ நாளைக்கே அவரு நம்ம ஆபீஸ்க்கு வர்றதா சொல்லிருக்காரு.. அவர வெல்கம் பண்றதுல எந்தக் குறையும் இருக்கக் கூடாது.. ஆஷா..”
“எஸ் சார்..”
“நீங்கதான் கவனமா இருந்து பாத்துக்கணும் ஓகே..?” என்றவர் அங்கிருந்து தன்னுடைய கேபினுக்கு சென்றார்.
அவர் சென்ற பின்னர் அந்த கான்பிரன்ஸ் அறையில் இருந்தவர்கள் தங்களுக்குள்ளே கொஞ்சம் கிசுகிசுப்பாக பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு நாளை வரவிருக்கும் தங்களது புது எம்.டி.யை வரவேற்பதற்கு தயாராக இருந்தார்கள்.
வெண்மதியோ மறுநாள் அலுவலகத்திற்கு வந்தாள். அந்த அலுவலகமே இன்று தங்கள் புது எம்.டி வரப் போகிறார் என்று அவரை வரவேற்க அனைவரும் வாயிலில் காத்துக் கொண்டிருந்தனர்.
ஆஷாவோ ஒரு சிலரை மட்டும் அழைத்து ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பொறுப்பை ஒப்படைத்திருந்தாள்.
அதில் வெண்மதியிடம் “ஹேய் யூ நீதான் நம்ம புது எம்.டி கார விட்டு இறங்கினதும் அவருக்கு இந்த மாலைய போட்டு வெல்கம் பண்ணனும் புரியுதா..?”
“மேம் நா எதுக்கு..?”
“உன்கிட்ட செய்றியான்னு பர்மிஷன் கேட்கல இட்ஸ் ஆர்டர் நீ போகலாம்..” என்றாள் மிடுக்காக ஆஷா.
வேறு வழியில்லாமல் தலையை ஆட்டிவிட்டு அந்த மாலையை கையில் வைத்துக் கொண்டு வாயிலில் காத்துக் கொண்டிருந்தாள் அனைவருடனும்.
அப்போது கறுப்பு நிறத்தில் லம்போர்கினி கார் ஒன்று சீறி வந்து நின்றது. அனைவரும் அந்தக் காரின் அழகை பார்த்து பிரமித்து போய் நிற்க வெண்மதியும் ஒரு நிமிடம் அவர்களை போலப் பார்த்தவள் பின்பு தான்தான் அவரை வரவேற்க வேண்டும் என்று சுயம் பெற்றவள் காரின் அருகே போக அப்போது அந்த காரினுடைய பின் இருக்கையின் கதவைத் திறந்து கொண்டு தன் நீள கால்களை வெளியே எடுத்து வைத்து இறங்கியவனின் கழுத்தில் மாலையை போட்ட மதியோ “வெல்கம் சார்..” என்றவள் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றாள்
வந்தது யாராக இருக்கும்..?