தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 9

4.9
(17)

பேராசை – 9

 

காஷ்யபனைப் பார்த்து, எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே “சொல்லுங்க என்ன கேட்கணும்?” என ஆழினி கேட்டாள்.

 

“ஃபாரஸ்ட் டிரிப் போக ரெண்டு டீச்சர்ஸ் வர்றாங்கனு சொன்ன பட் அப்படி யாரும் உன்கூட வரலையாமே”  எனச் சொல்லியே விட்டான்.

 

அனைவரும் அவளை அதிர்ந்து பார்க்க, அவளுக்கோ இப்போது குற்ற உணர்வாகிப் போனது.

 

அவளின் பார்வை மொத்தமும் காஷ்யபனைத் தான் வெறித்தது.

 

அவள் அவனுடன் இது போன்ற விடயங்களை சொல்வதும் இல்லை  எல்லோர் முன்னும் எப்படி நடிகின்றான் இவன்? நான் பொய் சொன்ன விடயம் இவனுக்கு எப்படி தெரிந்து இருக்கும்? என யோசித்தவள் அறியவில்லை வருண் அன்று அவளை அறைந்தபோதே அவ் விடயம் அவனுக்கு தெரிந்து விட்டது என….

ஆழினியோ, கண்கள் கலங்க தலையைக் குனிந்துக் கொண்டாள்.

 

அவளை கூர்ந்து பார்த்த பிரகலாதனுக்கு அவளின் கசங்கிய முகமே அவள் பொய் கூறி இருக்கின்றாள் என கட்டியம் கூற பிரகலாதன் வாயை திறக்கும் முன் ஆழினியின் முன் வந்து நின்ற இந்து, “என்னடி பேசாமல் இருக்க ஏதாச்சும் பதில் சொல்லு” என கேட்க….

 

அவளிடம் மௌனம்…மௌனம்… மௌனம் மட்டுமே…..

 

“என்னை கோபப் படுத்தாத டி உன் ப்ரெண்ட்ஸ் கூட காட்டுக்கு தனியா போக பிளான் பண்ணுனியா? சொல்லு” என அவளை உலுக்கி எடுக்க….

 

இந்துவை பிடித்துக் கொண்ட லதா “ இந்து அவளை விடு சின்ன பொண்ணு… அவ தான் போகலையே” எனச் சொல்ல….

 

காஷ்யபனின் இதழில் யாரும் அறியாத ஒரு மெல்லிய வன்மப் புன்னகை.

 

இடையில் புகுந்த வருணோ, “ஆன்டி நானும் ஆழினி கூட போகத் தான் இருந்தேன்” எனச் சொல்ல….

 

வருண் ஆழினிக்காக பேசுகின்றான் என பிரகலாதன் மற்றும் ஜீவனுக்கு புரிந்தது.

 

“எல்லாருக்கும் சாரி  என்னால இனிமேல் யாரும் கஷ்டப்பட வேண்டாம் என அவளையும் மீறி கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு வருணைப் பார்த்தவள் எனக்காக நீ ஏன் வருண் பொய் சொல்ற? என்றவள் எல்லோரையும் பார்த்துவிட்டு இறுதியில் அவளின் பார்வை காஷ்யபனின் மேல் நிலைகுத்தி  நிற்க, ஆமா நான் பொய் தான் சொன்னேன் என் புரோஜெக்ட் சம்பந்தமா கட்டாயம் போயே ஆக வேண்டிய டிரிப் அது…. என விரக்தியாக அவனைப் பார்த்து சிரித்தவள் இந்துவிடம் திரும்பி இனிமேல் எங்கேயும் போகாமல்  இந்த வீட்டுக்குள்ளேயே நான் இருக்கேன் போதுமா?” என  ஆக்ரோஷமாக கத்தியவள் விறுவிறுவென யாரையும் பார்க்காமல் அறைக்குள் சென்று விட்டாள்.

 

அவளுக்கும் புரிந்தது தனியாக காட்டுக்கு சென்று அங்கு எனக்கு ஏதும் ஆபத்து நேர்ந்தால் என அவர்கள் பயப் படுகிறார்கள் என இருந்தும் அவளின் தற்போதைய ஒரே பிரச்சனை காஷ்யபன் மட்டுமே அவனுக்கு எப்படி தெரிந்து இருக்கும் என்பதே….

 

கட்டிலில் விழுந்து கதறி அழுதவளின் தலையை ஒரு கரம் வருட, யார் என பார்த்தவளுக்கு அது பிரகலாதன் என்றதும் இன்னும் அழுகை கூடியது.

 அவளுக்கும் யாரையாவது அணைத்து கதறி அழ வேண்டும் போல இருக்க, “மாமா” என விசும்பியவள் அழுது தீர்த்து விட்டாள்.

 

“நான் பொய் சொன்னதுக்கு சாரி மாமா… ப்ரெண்ட்ஸ் கூட போறேன்னு சொன்னால் விட மாட்டீங்கனு தான் அவசரப் பட்டுட்டேன் ரியலி சாரி மாமா” என்றாள் குற்றக் குறுகுறுப்பில்….

 

“இட்ஸ் ஓகே ஆழினி எனக்கும் புரியுது உன் புராஜக்ட்காக நீ ரொம்பவே கஷ்ட படுறனு பட் நீ உன் ப்ரெண்ட்ஸ் கூட போய் அங்க ஏதும் உனக்கு ரிஸ்க் ஆகிறிச்சுனா என்னமா பண்றது அது தான் நாங்க பயந்தோம்… அவளின் கண்ணீரை துடைத்து விட்டவர் நீ இந்த வீட்டு மகாராணி மா உனக்கு ஏதாச்சும் நடந்தால் எங்களுக்கு தாங்கிக்கவே முடியாது ஆழினி” என்றார் குரல் தளுதளுக்க…..

 

“சாரி மாமா இனி நான் தனியா ஐ மீன் எந்த ஜென்ட் துணையும் இல்லாமல் ஃபாரஸ்ட் போக மாட்டேன் இது உங்க மேல ப்ராமிஸ் ஓகேவா?” என்றாள்.

 

“ஓகே மா என்றவர் சற்று யோசித்த படி உனக்கு கட்டாயம் அதான் என கண்ணை சுருக்கி யோசித்தவர் நினைவு வந்தவராய், ஆஹ் அந்த கார்டன்சில்லோ  வேணுமா? ஆழினி” எனக் கேட்க….

 

“அப்கோர்ஸ் அந்த பிளான்ட் அமேசான் ஃபாரஸ்ட்ல மட்டும் தான் இருக்கு” என்றவள் ஏதோ சொல்ல வரும் முன் “வாட்? அமேசன்லயா? என அதிர்ந்தவர் அப்போ அது எப்படி இலங்கைல கிடைக்கும் ஆழினி?” என அவர் கேட்க….

 

“ஆழினியை பற்றி என்ன மாமா நினைச்சிட்டு இருக்கீங்க? நான் டுவரிசம் படிச்சதே இந்த உலகத்தை சுத்தி பார்க்க தான் மாமா… பிரேசில்ல இருந்து வந்த ஒரு ஃபோரினர் என்னை கண்டாக்ட் பண்ணி கார்டன்சில்லோ பிளான்ட் தரேன்னு வர சொன்னார் மாமா அதான் அந்த டிரிப் அஹ் பிளான் பண்ணினேன் அதுக்குள்ள இப்படி ஆகி போச்சு என தன் காயத்தை வருடிக் கொண்டவள் பட் என்ன உங்க எல்லாரையும் விட்டுட்டு எனக்கு வேர்ல்ட் டிரிப் எல்லாம் போக விருப்பம் இல்லை… இங்கேயே இருக்கேன் மாமா என்றவள் எழுந்து சென்று ஒரு டாகுமெண்ட் ஒன்றை அவரிடம் கொடுத்தவள் நான் சைன் பண்ணிட்டேன் நீங்க அப்ரூவ் பண்ணிருங்க மாமா என அந்த ஆவணங்களை கொடுத்தாள்.

 

(அப்படி அந்த கார்டன்சில்லோ தாவரத்தை வைத்து என்ன செய்ய போகின்றாள்? அவள் பிரகலாதனிடம் கொடுத்தது என்ன டாகுமெண்ட் ஆக இருக்கும்?)

 

“பிளீஸ் மாமா வித் யுவர் பர்மிஷன் நெக்ஸ்ட் மந்த் நான் வருணைக் கூட்டிட்டு போகவா?” எனக் கேட்க…

கண்களை மூடித் திறந்தவர் “எத்தனை நாள் மா ஃபாரஸ்ட் டிரிப்?”

 

கண்கள் மின்ன “ஜஸ்ட் ஃபார் டூ டேஸ் மாமா என்றவள் வழமைப் போல என் அம்மாவையும் அப்பாவையும் சமாளிக்கிறது உங்க பொறுப்பு தான்” என்றாள் சிரித்துக் கொண்டே….

 

“சரிமா நீ வருண் வேற யார் எல்லாம் வர்றாங்க?”

 

தெரியல மாமா ஆல்ரெடி போக இருந்த டிரிப் அ கேன்சல் பண்ணியாச்சுனு ப்ரெண்ட்ஸ்க்கு இன்பர்ம் பண்ணிட்டேன் இனி திரும்ப கூப்பிட்டால் அவங்க வர சான்ஸே இல்லை என்று தலையைக் குனிந்து கொண்டவள் நான் சொன்ன பொய்யை தான் அவங்களும் வீட்டுல சொல்லி ஓகே வாங்கி இருக்காங்க என்றவள் இப்போது நிமிர்ந்து அவரைப் பார்த்து வருண் கூட தான் போகணும்” என்றாள் சற்று குரலை தளைத்து….

 

அவளின் தயக்கத்தை புரிந்துக் கொண்ட பிரகலாதன் உன்னை விட வருணை எனக்கு நல்லாவே தெரியும் மா  நோ பிராப்ளம் நீ வருண் கூட தாராளமா போ அவன் உன்னைப் பார்த்துப்பான்” என்றார் தெளிவாக….

 

வருண் அவளுக்கு நல்ல நண்பன் அவனைப் பற்றி அவளுக்கு தெரியாததா? வருணுடன் நான் செல்கின்றேன் என்றதற்கு ஏதும் நினைத்து விடுவாரோ என தயங்கியவளுக்கு இப்போது சம்மதம் கிடைத்து விட இனி சொல்லவா வேண்டும்?

 

“தேங்க்ஸ் மாமா என பிரகலாதனை அணைத்துக் கொண்டவள் மறுபடியும் சொல்றேன் மாமா உங்க மாதிரி கூல் ஹார்ட் இல்லை உங்க அன்பு தங்கச்சியும் உயிர் நண்பனும் கொஞ்சம் பதமா பார்த்து ஹென்டில் பண்ணுங்க என்றாள்.

 

அவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்து பார்த்த பிரகலாதனுக்கு இப்போது தான் மனம் லேசாக இருந்தது.

 

“யூ டோண்ட் வொரி மா நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ என்றவர் என்னை இப்போ எல்லாரும் பார்த்திட்டு இருப்பாங்க என சிரித்துக் கொண்டவர் கீழே போய் என்ன நடக்குதுன்னு பார்க்குறேன் ஆழினி” என அவளின் அறைக் கதவை மூடிக் கொண்டு வெளியில் வந்தவர் ஹாலுக்கு விரைந்தார்.

 

ஆம், பிரகலாதன் சொன்னது போல மொத்த குடும்பமும் அவரையே விழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டு இருந்தனர்.

 

அங்கு ஒருவன் மட்டுமே தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல தொலைபேசியை பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

அவர்களின் எண்ண ஓட்டம் அறிந்த பிரகலாதன், “ ஆழினி இப்போ ரெஸ்ட் எடுக்குறா சோ யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்” என்றவர் ஜீவாவை தன் ஆபீஸ் அறைக்கு வருமாறு கூறி விட்டு செல்ல…. ஒரு பெரு மூச்சுடன் ஜீவாவும் ஆபீஸ் அறைக்கு விரைந்தார்.

 

ஆழினியின் செயலை நினைத்து சோஃபாவில் அமர்ந்து லதாவின் தோளில் விசும்பி அழுதுக் கொண்டு இருந்த இந்து, “நான் ஆழினியைப் பார்க்கணும்” என எழும்பிச் செல்லப் போனவரை வலுக்கட்டாயமாக பிடித்து நிறுத்திய லதாவோ, “இப்போ ஆழினி தூங்குவா நாம அப்புறம் போய் பார்ப்போம் என்றவர் இந்துவை இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்துக் கொண்டார்.

 

இப்போது அங்கு எஞ்சியது என்னவோ வருணும் காஷ்யபனும் தான்.

 

இங்கு நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டு இருந்த வருணுக்கு காஷ்யபன் மேல் கோபம் ஏகத்துக்கும் எகிறியது… இருந்தும் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவன் எழுந்து புறப்பட ஆயத்தமாக, “வருண் நானும் இப்போ ஆபீஸ் போகப் போறேன் உன்னை ட்ராப்  பண்ணவா?” காஷ்யபன்  என கேட்க…

 

“நோ தேங்க்ஸ் ஷேத்ரா நான் ஒன்னும் நடந்து வரல… கார்ல தான் வந்தேன் சோ எனக்குப் போகத் தெரியும்” எனச் சொல்லிய வருண் நுழைவாயில் வரை சென்றவன் திரும்பி தன்னையே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்த காஷ்யபனை ஆழ்ந்து பார்த்தபடி தன் அலைபேசியை எடுத்து ஒரு நம்பருக்கு அழைப்பை எடுத்தான்.

 

 

வருணின் செய்கையை புருவம் சுருங்கப் பார்த்தவன் தன் அழைப்பேசி ஒலிக்கவும் திரையயில் விழுந்த வருணின் பெயரைப் பார்த்தவன் அழைப்பை ஏற்று, “பெருசா கதைச்ச என்ன ட்ராப் பண்ணனுமா? என ஏளனமாக கேட்க…..

 

பற்களை கடித்த வருண், “ஓவரா கற்பனை பண்ணிக்க வேணாம்…நான் உன்கிட்ட ஜஸ்ட் 5 மினிட்ஸ் பேசணும்” என்றிருந்தான்.

 

“யாஹ் ஷுவர்( yeah sure) வருண்” என அழைப்பை துண்டித்து விட்டு தன் ஐம்பொன் காப்பை இறக்கி விட்டவன் கையை ஜீன்ஸ் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு வருணை நோக்கி வந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 9”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!