கள்வன்-14
தனது கேபினில் வேலை செய்து கொண்டிருந்தவளை மேனேஜர் அழைக்கவும் உடனே மேனேஜர் அறைக்குள் நுழைந்தாள் வெண்மதி. அங்கு அவரும் மித்ரன் சொன்னது போலவே “நம்ம புது எம்.டி இங்கு இருக்கிற வரைக்கும் நீங்கதான் அவருக்கு பி.ஏ வா ஒர்க் பண்ணப் போறீங்க.. சோ இனி அவர் என்ன சொல்றாரோ அது படி நடந்துக்கோங்க..” என்று அவர் சாதாரணமாக சொல்ல இவளுக்கோ அந்த வார்த்தைகள் அவள் தலையில் இடியை இறக்கியது போல இருந்தது.
அதிர்ச்சியாக விழித்தவள் “என்ன சார் சொல்றீங்க..?” என்று கேட்டாள்.
அதற்கு அவரும் “ஏன் வெண்மதி ஏதாவது பிராப்ளமா உங்களுக்கு..?” என்று கேட்க அவளோ சட்டென “என்னால முடியாது சார்..” என்று சொன்னாள்.
அதற்கு அவரும் சற்று கோபமாக “என்ன வெண்மதி நினைச்சுட்டு இருக்கீங்க.. உங்க கிட்ட நீங்க பண்றீங்களா இல்லையானு பர்மிஷன் கேட்கல.. இது ஆர்டர் நீங்க போய்தான் ஆகணும் அப்படி இல்லைனா இந்த வேலையை விட்டு நீங்க போகலாம் ஆப்ஷன் உங்களோடது தான்.. இப்போ நீங்க உடனே எம்.டி சார போய் பாருங்க.. நீங்க போகலாம்..” என்றவர் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
அங்கிருந்து மனமே இல்லாமல் வெளியே வந்தவள் பல யோசனைகளோடே தன் கேபினுக்கு வந்து சோர்ந்துப் போய் அமர்ந்தாள்.
“என்னாச்சு மதி ஏன் ஒருமாதிரி இருக்க..?” என்று அவள் சோர்ந்துப் போய் வந்ததைப் பார்த்து ஏதோ பிரச்சினை என்று நினைத்து கொண்டு லியா கேட்டது.
“லியா எனக்கு இந்த வேலை வேண்டாம் நாம வேற வேலை பார்த்துக்கலாம்..”
‘நாம ஒன்னும் பண்ணலையே அப்பறம் ஏன் இவ வேலை வேணாம்னு சொல்றா..?’ என்று நினைத்து கொண்டு “நா ஒன்னும் பண்ணல மதி..” என்றது லியா பாவமாக.
“ஹய்யோ நீ ஒன்னும் பண்ணல லியா நா அந்த ராட்சசனுக்கு பர்ஸனல் பீ.ஏவா வேலை பார்க்கனுமாம் இல்லைன்னா வேலைய விட்டு போகனுமாம்..”
“என்ன சொல்ற மதி நிஜமாவா..?” என்று அதிர்ச்சியாக கேட்டது லியா.
“ஆமா லியா அதான் இந்த வேலை வேண்டாம்னு எழுதி கொடுக்க போறேன்..” என்றவள் தன்னுடைய ரெஜிகிணேசன் லெட்டரை டைப் செய்து எடுத்துக் கொண்டு நேராக மித்ரனின் அறை நோக்கிச் சென்றாள்.
இவர்கள் இங்கு பேசுவதை கேமரா மூலாம் பாரத்துக் கொண்டிருந்தவன் “ஓஓ மேடம் என்கிட்ட இருந்து அவ்வளவு சீக்கிரம் தப்பிச்சிடலாம்னு நெனச்சிங்களோ வாடி வா இனி நானே நெனச்சாலும் உன்ன விடப் போறதில்ல..” என்று அவன் நினைத்துக் கொண்டு இருக்க அப்போது அவன் அறைப் பக்கம் வந்தவள் மெதுவாக கதவை தட்டியவள் “மே ஐ கமின் சார்..” என்று கேட்க “எஸ் கமின்..” என்று ஒரு கம்பீரமான குரல் கேட்டது.
அதில் வெடவெடத்தவள் தன் பாதங்களை மெதுவாக எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள். அவனோ தன் முன்னால் இருக்கும் கணிணியில் வேலை பார்த்துக் கொண்டிருக்க இவள் பக்கம் பார்க்கவே இல்லை. இரண்டு நிமிடம் வரை அவன் தன்னை பார்ப்பான் என்று அமைதியாக இருந்தவள் அதற்கு மேல் பொறுமை இழந்து “சார்..” என்று அழைத்தாள்.
அவனோ ‘இத முதல்லேயே செய்ய வேண்டியதுதானே திமிரு அடக்குறேன் டி..’ என்று கருவிக் கொண்டவன் அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு தன் சீட்டில் ஆளுமையாக அமர்ந்தவன் “என்ன மேடம் கூப்பிட்ட உடனே வர மாட்டீங்களோ.. இவ்வளவு நேரமா வர்றதுக்கு..?” என்று அவளை மேலும் கீழும் பார்த்தான்.
அவளோ பதில் எதுவும் சொல்லாமல் அவனிடம் தன் கையில் வைத்திருந்த கவரை நீட்டினாள். அதை வாங்கி பிரித்து பார்த்தவன் உள்ளே இருந்ததை படித்துவிட்டு இகழ்ச்சியாக புன்னகைத்தான். அவளிடம் ” ஓ உங்க நேம் மிஸ் வெண்மதி ரைட்..?”
“எஸ் சார்..” என்றாள்.
“ஓகே குட்.. இப்போ நீங்க எதுக்காக ரிஷைன் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..?” என்று சாதாரணமாகவே அவளிடம் கேட்டான்.
அவளோ “எனக்கு இங்க வேலை பார்க்க பிடிக்கல அதனால ரிசைன் பண்றேன்..” என்றாள்.
அதைக் கேட்டவன் தன் முகத்தில் எந்த ஒரு பாவனையையும் காட்டாமல் தன் சீட்டை விட்டு எழுந்து கொண்டவன் அவளை நோக்கி வர அவளோ அவன் திடீரென தன்னை நோக்கி வரவும் பின்னோக்கி நகர்ந்தாள்.
அவனும் விடுவதாக இல்லை. அவளை நோக்கி முன்னே நகர இவள் பின்னே சென்றவளோ வேறு வழியில்லாமல் சுவரை ஒட்டி நின்று கொள்ள இவனும் அவளை நெருங்கி வந்தவன் தன் இரு கைகளையும் அவளுக்கு வலது புறமும் இடது புறமாக சுவற்றில் பதித்தவன் அவளுடைய முகத்திற்கு அருகில் தன் முகத்தைக் கொண்டு வந்து அவளுடைய கண்களைப் பார்த்தவாறு “நீ இந்த ஆபீஸ்ல ஜாயின் பண்ணி ஒரு பைவ் மந்த் தான் ஆகுது… அதுக்குள்ள உன்னால இங்கிருந்து வெளியே போக முடியாது.. குறைந்தது ஒரு வருசம் ஆவது இந்த கம்பெனியில வேலை பார்கனும். அப்படியே நீ போகணும்னு ஆசைப்பட்டாலும் அதுக்கு பெனால்டி அமௌன்ட் இருபது லட்சம் கட்டணும். இந்த வேலைக்கு ஜாயின் பண்ணும் போது அக்ரீமெண்ட்னு ஒரு டாக்குமெண்ட்ல சைன் பண்ணி இருப்பியே.. மறந்து போச்சா உனக்கு..? அதுல என்ன எழுதி இருக்குனு படிச்சுதான கையெழுத்து போட்ட.. அப்படியே நீ இந்த ஆபீஸ விட்டு போகணும்னு நினைச்சாலும் உன் ரிஷைனிங் அக்ஷப்ட் பண்ணுறதுக்காக இன்னும் ஒன் மந்த் இங்க வேலை பார்த்து தான் ஆகனும். இப்ப சொல்லு நீ வேலைய கன்டினியூ பண்ண போறியா இல்ல ரிஷைன் பண்ண போறியா..” என்றான்.
அவளோ அவன் இவ்வாறு கூறவும் அப்போதுதான் அவளுக்கு ஞாபகமே வந்தது. அவன் சொன்னது போல தன்னால் உடனடியாக இந்த அலுவலகத்தில் இருந்து வெளியே செல்ல முடியாது என்று நினைத்தவள் தன் நிலையை நொந்து கொண்டு ஒன்றும் பேசாது அமைதி காத்தாள்.
“டெல் மீ எஸ் ஆர் நோ..”
“…..”
அவளோ எதுவும் பதில் சொல்ல வில்லை. அவளின் அமைதி அவனுக்கு சாதகமாக, அவளுடைய நாடியை தன் ஒற்றை விரலில் நிமிர்த்திவன் அவள் கண்களை தன் கண்களை பார்க்குமாறு வைத்து “நான்தான் உன்கிட்ட அன்னைக்கே சொன்னேனே இதுக்கு அப்புறம் என் கண்ணுல நீ பட்டேனா அதுக்கப்புறம் உன்னோட வாழ்க்கை என் கையில தான் அப்படின்னு.. இனிமேல் என்ன நடந்தாலும் என்கிட்ட இருந்து நீ தப்பிக்க முடியாது.. உன்னை தப்பிக்கவும் விட மாட்டேன் கெட் ரெடி..” என்றவன் அவள் நாடியைப் பிடித்திருந்த தன்னுடைய கையை அப்படியே கீழே இறக்கினான்.
மெதுவாக தொண்டையில் இறங்கி அதன் பின் அவளின் நெஞ்சுக்கூட்டின் மத்தியில் கோடிழுத்தவன் அப்படியே கீழே இறக்கி அவளுடைய சின்ன வளைந்த இடையை அழுத்தமாக பிடித்தவன் தன் இடையோடு நெருக்கிக் கொண்டு அவள் அதிர்ந்து பார்க்கும் போதே அவளுடைய இதழில் அழுத்தமாக முத்தம் பதித்தான்.
அவளோ தன் இரு கைகளாலும் அவனுடைய தோல் புஜங்களை அழுத்தி அவளிடம் இருந்து பிரிப்பதற்கு எவ்வளவோ போராடினாள். ஆனால் அந்த வலிய ஆண்மகனை சிறிது கூட அவளால் நகற்ற முடியவில்லை.
மித்ரனோ அவள் அடிகளை தூசு போல தட்டியவன் அவளுக்கு முத்தமிட்டவாறே தன் இன்னொரு கையால் அவளுடைய இரு கைகளையும் பிடித்து அவளுடைய தலைக்கு மேல் உயர்த்தி வைத்துக் கொண்டு தன்னுடைய முத்தத்தை மீண்டும் தொடர்ந்தான்.
அந்த அறையில் அவனின் முத்தச் சத்தம் தவிர மற்றபடி நிசப்தமாக இருந்தது. இப்படியே சிறிது நேரம் கழிந்தது.
முத்தத்தில் ஆழ்ந்திருந்தவனுக்கு அவள் கண்ணில் இருந்து வந்த கண்ணீரின் சுவைப்பட சட்டென அவளுடைய உதட்டை கொஞ்சம் கடித்துவிட்டு நிமிர்த்திவன் அவளை விட்டுப் பிரிந்து தன்னுடைய உதட்டை அவளை பாரத்தாவாறே துடைத்துக்கொண்டு தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான்.
அவளோ கண்களில் வழியும் கண்ணீரோடு அப்படியே நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவன் “இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படியே நிக்க போற..? போ போய் எனக்கு ஒரு காபி கொண்டு வா.. இனி என் கண் பார்வையை விட்டு நீ மறைய முடியாது போ..” என்றவன் தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
அவளும் தன்னுடைய கண்ணீரை துடைத்துக் கொண்டு தன்னுடைய துப்பட்டாவையும் சரி செய்தவள் அவனின் அறையை விட்டு வெளியேறி அவனுக்காக காபி கொண்டு வர சென்றாள்.