தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! :10

4.8
(23)

பேராசை – 10

 

வீட்டின் முன் பூங்கா போல அமைக்கப்பட்டு இருக்க அங்கு வெண்ணிற பெஞ்சில் முதலில் சென்று அமர்ந்தது என்னவோ காஷ்யபன் தான்… அவனின் அருகில் வந்து அமர்ந்த வருணைப் பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவன் அவன் புறம் திரும்பி தன் இடக் கால் மேல் வலக் காலைப் போட்டுக் கொண்டவன் இடக் கையை பெஞ்சில் குற்றியபடி கைக்கடிகாரத்தை பார்த்தவன் “ வன் டூ த்ரீ என எண்ணியவன் யுவர் டைம் ஸ்டார்ட் நவ்” என்றான் காஷ்யபன்.

 

மனதில் அவனை நன்றாக அர்ச்சித்த வருண் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே “ உனக்கு எப்படி ஃபாரஸ்ட் டிரிப் போக ஆழினி பொய் ரீசன் சொன்னது தெரியும்? அண்ட் நிச்சயமா அவ உன்கிட்ட சொல்லியும் இருக்க மாட்டாள் சோ எப்படி? எனக் கேள்வியாக நிறுத்த….

 

அவளை பற்றி நன்றாக புரிந்து வைத்திருந்த வருணை மனதில் ஒரு புறம் மெச்சிக் கொண்டாலும் எதையோ இழந்த உணர்வும் அவனுள் கிளர்ந்து இருந்தாலும் முகத்தில் எவ்வித உணர்வுகளையும் காட்டாமல் ஒற்றை புருவத்தை உயர்த்தி “அதைத் தெரிஞ்சிட்டு நீ என்ன பண்ண போற  வருண்?”  என அவன் திருப்பிக் கேட்க….

 

அவனின் அலட்சியத்தில் கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்ட வருணோ,  “ஆழினி என் பெஸ்ட் ப்ரெண்ட் என அழுத்தம் கொடுத்து சொன்னவன் அவளுக்கு ஒன்னுனா நான் பார்த்திட்டு சும்மா இருக்க மாட்டேன்” என்றான்.

 

ஹா ஹா ஹா என சிரித்தவன் “ ஆர் யூ ஜோக்கிங்?” என்றான் சிரித்துக் கொண்டே….

 

வருணோ, “இதுல நான் ஜோக் பண்ண ஒன்னும் இல்லை ஷேத்ரா” என்றான் அடக்கப்பட்ட சினத்துடன்….

 

ஓஹோ…. என ஏளனமாக வருணை மேல் இருந்து கீழ் பார்த்த காஷ்யபன், “ வெல் வருண் உன் தியரி படி ப்ரெண்ட் அஹ் தனியா ரூம்ல கட்டி பிடிச்சிட்டு  நிற்கலாம் போல” எனச் சொல்லியே விட்டான்.

 

“ஷேத்ரா” என கத்தியபடி எழுந்தே விட்டான் வருண்.

 

காஷ்யபனை அடித்து நொறுக்கும் அளவுக்கு வெறி கிளம்பினாலும், பிரகலாதன் மற்றும் ஆழினிக்காக தன்னைக் கடினப் பட்டு அடக்கிக் கொண்டவன்…

“ நீ இப்படி பேசுறதுக்கு ஒருநாள் நிச்சயமா  வருத்தப்படுவ என்றவன் தொடர்ந்து அண்ட் இதுக்கு நான் விளக்கம் குடுக்க  மாட்டேன்… உன்னை மாதிரி கேவலமா யோசிக்கிறவன் கிட்ட எங்க ப்ரெண்ட்ஷிப் அஹ் ப்ரூப் பண்ணுனா அது எங்களுக்கு தான் அசிங்கம்… உன்னை எல்லாம் என் ப்ரெண்ட் ஆஹ் நினைச்சு பழகுனத்துக்கு ச்சே” என்றவன் அவனை திரும்பியும் பாராமல் தன் காரில் ஏறி புறப்பட்டு  சென்று விட்டான்.

 

காஷ்யபன் முன் யார் தேவையில்லாமல் கதைத்தாலும்,  ஏன் சுட்டு விரல் நீட்டினாள் கூட அவன் இருக்கும் இடம் தெரியாமல் செய்து விடுபவன் இன்று அவன் முன்னால் அவனையே இழிவு படுத்தி பேசிவிட்டு செல்லும் வருணை இவ்வளவு நேரத்திற்கு எதிர்த்து பேசாமல் இருகின்றேனே! என அவனுக்கே ஆச்சரியம் தான்.

 

இந்த பொறுமை, வருண் ஆழினியை அவனின் நண்பி என்று சொன்னதால் வந்த இதம் என அவன் அறியவில்லை.

ஆபீஸ் ரூமிற்க்குள் இருந்த வந்த ஜீவாவின் முகம் அவ்வளவு சந்தோஷம் கலந்த பிரதிபலிப்பைக் காட்டியது…. ஜீவாவின் பின்னாலேயே வந்த பிரகலாதன் “சாப்பிடப் போகலாம் வா ஜீவா” என ஜீவாவின் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டார்.

 

“KS எண்டர்பிரைசஸ் என்ற பெயர் பலகை மின்னிக் கொண்டிருந்த அந்த நான்கு அடுக்கு மாடி கம்பெனியின் நான்காவது தளத்தில் தன் அறையில் கர்ஜித்துக் கொண்டு இருந்தான் காஷ்யபன். 

 

அவனது PA ராம் ஐ வைதுக் கொண்டு இருந்தான். “என்ன இது?” என ஒரு பைலை அவன் முகத்தில் விட்டு எரிந்து இருந்தான்.

 

பாவம் அவனும் தான் என்ன செய்வது என்ன தான் திட்டினாலும் இங்கு இருந்து விலக முடியாது அல்லவா? எந்த அளவுக்கு வேலைப் பழுவோ அந்த அளவிற்கு சம்பளம் கொடுத்து விடுவான். அதனால், இங்கு பல்லைக் கடித்துக் கொண்டு வேலை செய்ப்பவர்களே அதிகம் அதில் சில பெண்கள் காஷ்யபனை மயக்குவதற்கு என்றே எவ்வளவு வேலையாக இருந்தாலும் செய்வது உண்டு. இது அனைத்தும் அவன் உணர்ந்தாலும் அவன் தான் சந்தர்பத்திற்கு ஏற்றது போல நடந்துக் கொள்வானே!

 

“சாரி சார் என் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை அவங்கள நான் ஹாஸ்பிடல் கூட்டி போய்ட்டேன் சார்” என நலிந்து வந்தது ராமின் குரல்.

 

“இட்ஸ் நன் ஆப் மை பிசினஸ் ராம் என சீறியவன் உனக்கு தெரியாதா நான் சொன்ன வேலையை கரெக்ட் ஆஹ் நான் சொன்ன டைம்குள்ள பண்ணனும்னு? இர்ரெஸ்பொன்சிபல் இடியட் எனத் திட்டியவன் எனக்கு அந்த ரிசார்ட் MD யார்ன்னு அகுரேட்டா அவ்வளவு டீடெய்ல்ஸ் உம் வித்தின் டூ ஹவர்ஸ்ல என் டேபிள்ல இருக்கணும்” என கர்ஜித்தவன் தனது இருக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டான்.

 

தலையைக் குனிந்து கொண்டே அவ்வளவு ஏச்சையும் வாங்கிக் கொண்டு நிலத்தில் பரவி கிடந்த பத்திரங்களை எடுத்து அடுக்கி ஃபைலில் எடுத்துக் கொண்டவன் அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான் ராம்.

 

வெளியில் வந்த ராமின் மனதிலோ, ஒரு மனிதாபிமானம் கூட இல்லையா இவனுக்கு? என்ன மனிதன் இவன் என்று தான் யோசிக்க தோன்றியது…. ஒரு பெரு மூச்சுடன் தன் பைக்கில் ஏறி சிறிது தூரம் வந்தவன் அவனின் அம்மாவுக்கு கால் பண்ணி பேசிவிட்டு வைத்தவன் “மெஜெஸ்டிக் ஹெவன்” ரிசார்டை நோக்கி செல்லத் தொடங்கினான்.

 

சமீபத்தில் ஆரம்பிக்கப் பட்ட அந்த ரிசார்ட்  கொஞ்ச நாட்களிலேயே அபார வளர்ச்சியை பெற்று இருந்தது.

 

வெளிநாட்டவர்கள் அதிகமாக அங்கு வந்து தங்குவதற்கு முதல் காரணமே அந்த ரிசார்ட்டின் அமைப்பும் அவர்கள் வரும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் பல உத்திகளை மேற்கொண்டு வருகின்றனர்… அந்த ரிசார்ட்டில் தங்குபவர்களுக்கு அங்கேயே பலவித பொருட்களை வாங்கிக் கொள்ளும் அளவுக்கு அவர்களே சில அத்தியாவசிய  பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதும் உண்டு.

 

இப்போது,  பிற கம்பனிகளும் இந்த  ரிசார்டின் ஊடாக அத்தியாவசிய பொருட்களை தயாரித்து இங்கே விற்பனை செய்வதன் ஊடாக நீங்களும் பயன் அடையலாம் என ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்க, இனி சொல்லவும் வேண்டுமா? பல கம்பனிகள் தங்களின் புரோடக்ட்களை விற்பனை செய்ய போட்டியிட்டு கொண்டு இருக்கின்றன.

 

அந்த ரிசார்ட்டைப் பற்றி அறிந்த காஷ்யபன் தானாக சென்று மாட்டும் ரகம் அல்லவே! ஒவ்வொன்றையும் ஆராய்ந்து நிதானமாக அதில் தனக்கு என்ன லாபம் என யோசிக்கும் அக்மார்க் பிசினெஸ் மேன் அவன்.

 

தனது லெப் டாப் ஐ ஒன் செய்தவன் மெஜெஸ்டிக் ஹெவன் ரிசார்ட்டின் இணையத் தளத்தில் சென்று ஆராய்ந்துப் பார்த்து கொண்டு இருந்தான்.

 

அவனின் பார்வை MD என்ற இடத்தில் இருக்கும் “லினா” என்ற பெயரில் குத்திட்டு நிற்க அவனின் புருவத்தை ஏற்றி இறக்கினான்.

 

ஆம், ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே “மெஜெஸ்டிக் ஹெவன்” என்ற அவளின் ரிசார்ட்டை நல்ல நிலைக்கு கொண்டு வந்து இருக்கின்றாள் என்றால் அது வியக்கத் தக்கது அல்லவா! , அதுவும் MD ஒரு பெண்ணாக இருப்பாள் என கொஞ்சமும் நினைக்காதவன் அவளின் பெயரை பார்த்து வியந்தது தான் நிஜம்.

 

சரியாக ஒரு மணி நேரத்தின் பின்னர் காஷ்யபனின் அறைக்குள் அனுமதி கேட்டு விட்டு நுழைந்த ராமோ, அவன் மெஜெஸ்டிக் ஹெவன் ரிசார்ட்டைப் பற்றி அங்கு போய் அறிந்த விடயங்களை பற்றி ஒப்புவிக்கத் தொடங்கினான்.

 

அந்த ரிசார்ட்டின் “MD லினா” என்பது தொடக்கம் அனைத்தையும் கூறி இருக்க, அவன் கூறுவது அனைத்தையும் கேட்டுக் கொண்டு வந்தவனுக்கு ஒரு விடயம் புருவம் இடுங்க வைத்தது.

 

MD யை சந்திக்க இயலாது என்றும் அவளுக்கு பதிலாக அவளின் PA ஆன கதிர் தான் ரிசார்ட் சம்பந்தமாக  எந்த ஒரு பார்ட்டியாக  இருந்தாலும் அவனே சென்று விருதுகளை வாங்குவதாகவும் என அவன் விசாரித்தவரை அனைத்தையும் கூறி இருந்தான் ராம்.

 

சற்று, யோசித்தவன் அந்த ரிசார்ட்டின் ரிவ்யூ அனைத்தையும் பார்வை இட்டவனுக்கு திருப்தியாக இருந்தாலும் இப்போது அந்த ரிசார்ட்டின் உரிமையாளர் விபரம் சற்று இடிக்கத் தான் செய்தது.

 

எதையும் சரிவர ஆராய்ந்து செய்பவனுக்கு இந்த வாய்ப்பை விடவும் விருப்பம் இல்லை அதனால் தானும் புரோடக் ஒன்றை அந்த ரிசார்ட்டின் ஊடாக விற்பனை செய்ய வேண்டும் என தீர்மானித்து இருந்தான்.

 

அதனைத் தொடர்ந்து ராமிடம் அதற்கான ஆவணங்களை தயார் படுத்த சொன்னவன் நெற்றியை தட்டி யோசித்து விட்டு,  “ராம் இமிடியட்லி அரேஞ்ச் த மீட்டிங்” …….

 

“ஓகே சார்” என்றவன் வெளி ஏறி இருந்தான்.

 

அதன் பின் எல்லாம் துரித கதியில் நடந்தது.

 

அந்த மீட்டிங் ஹாலே நிசப்தமாக இருக்க, அவனின் குரல் மட்டுமே ஆளுமையாக ஒலித்துக் கொண்டு இருந்தது.

 

அவனின் ஆளுமையாக பேசும் தோரணையில் லயித்து இருந்தவர்களுக்கு, அவர்களின் கருத்தை அவனிடம் கூற வேண்டும் என்றே மறந்து விட்டு இருந்தது.

 

“வெல் கைஸ் சோ இண்டிவிடுவல் ஆஹ் உங்க ஒப்பீனியன் என்னனு சொல்லலாம்” என தன் முன் டேபிலில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தவன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்.

 

ஒரு சிலர் தங்கள் கருத்துக்களை பகிர இறுதியாக அவனே, “ குட் ஜாப் கைஸ் என்றவன் சோ பெர்ஃப்யூம் அஹ் செல் பண்ணுவோம் அண்ட் நானே இதை பற்றி உங்ககிட்ட சூன் டிஸ்கஸ் பண்றேன்” என்றவன் அந்த மீடிங் அறையை விட்டு ஒரு புன் சிரிப்புடன் வெளியேறி இருந்தான்.

 

அதன் பின் நாட்கள் நகர, காஷ்யபன் அவனின் பிசினெஸ் சம்பந்தமாக வேளைகளில் மும்முரமாக இருக்க, அதற்கு எதிர் பதமாக ஆழினியோ அறைக்குள்ளேயே இருந்தாள் காஷ்யபன் வீட்டில் இருக்கும் நேரங்களில் அவனின் கண்களில் அவள் தென்படுவது அரிதாகிப் போனது.

 

இதற்கிடையில் முற்றிலுமாக அவளின் உடல்நலம் தேறி இருந்தது.

 

அதனைத் தொடர்ந்து அவளின் “ஃபாரஸ்ட் டிரிப்” போகும் நாளும் நெருங்க, அவளுக்கோ மனதுக்குள் என்னவென்றே தெரியாத ஒருவித படபடப்பு.

 

அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அலைபேசி அலற, அதன் திரையை வெறித்தவளுக்கு வருணிடம் இருந்து அழைப்பு வர, அவ் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! :10”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!