தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 11

4.8
(25)

பேராசை – 11

 

“ஹலோ ஆழினி” என்றான் வருண்.

 

“ஹலோ” என்றவளின் குரல் சுரத்தே இல்லாமல் வந்தது.

 

“என்னடி உன் வாய்ஸ் லோ ஆகுதே! என்னாச்சு எல்லாம் ரெடி பண்ணிட்ட தானே?”  என வருண் கேட்க….

 

“ப்ச… இன்னும் ஒன்னுமே நான் ரெடி பண்ணல வருண்” என்றாள்.

 

“வாட்? என அதிர்ந்தவன் நீ தானேடி  இந்த டிரிப் அஹ்யே  பிடிவாதம் பிடிச்சு அரேஞ்ச் பண்ணுன ? அதுவும் நானே போக வேணாம்னு சொன்ன பிறகும் கூட அப்புறம் என்னையே உன்னை கூட்டி போக ஓகே சொல்ல வச்சிட்டு நீ இப்படி பேசுற? என்றவன் தொடர்ந்து எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லை போகாமல் விட்டுருவோமா?” என ஒரு துள்ளலுடன் அவன் கேட்டு வைக்க….

 

அவன் அப்படி கேட்டுவிடவும் அவளுக்கு எங்கு இருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ?   “ ‘bye’…  நீ டிரிப் வரத் தேவையே இல்லை” என அவனின் பதிலையும் எதிர்ப் பார்க்காமல் அழைப்பைத் துண்டித்து இருந்தாள்.

 

“ஹே ஆழினி” என்றவனின் குரல் காற்றில் தான் கரைந்தது.

 

ஒரு பெரு மூச்சுடன் அவளுக்கு மறுபடி அழைப்பை எடுக்க, அவளோ அழைப்பைத் துண்டிக்க என இருவரின் இந்த விளையாட்டு கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்குத் தொடர, இறுதியில் அழைப்பினைத் துண்டித்து துண்டித்து களைத்துப் போனது என்னவோ ஆழினி தான்.

 

களைத்துப் போய் வந்த அழைப்பை ஏற்ற ஆழினி, “கொஞ்ச நேரம் கூட என்னை கோபமா இருக்க விட மாட்டியா வருண்?” என்றாள்.

 

குரலை செருமியவன், “நான் ஜஸ்ட் விளையாட்டுக்கு சொன்னேன் டி அதுக்குப் போய் கட் பண்ணிட்ட? என்றவன் தொடர்ந்து அரை மென்டல்டி நீ அவ்ளோ கோபத்துல தானே நான் எடுத்த கால்ஸ் எல்லாம் கட் பண்ணுன? இதுல மேடமை நான் கோபமா இருக்க விடலையாம்”

 

“வருண் என்னை அரை மெண்டல்னு சொல்லாத டா திரும்ப எனக்கு கோபம் வந்துச்சுனா என்ன பண்ணுவேன்னு தெரியாது பார்த்துக்கோ” என்றாள் அவன் நேரில் இருப்பது போல ஆள்காட்டி விரலை காற்றில் அசைத்த படி…..

 

“என்னடி அரை மெண்டல் மாதிரி உன் முன்னால இல்லாத என்னை விரல் காட்டி எல்லாம் என்னை மிரட்டுற?” என அப் புறம் வருண் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க….

 

கண்களை பெரிதாக விரித்தவள் அவன் அற மெண்டல் என்றதை மறந்து “நான் உன்னை விரல் காட்டி மிரட்டுனது உனக்கு எப்படி தெரியும்?” என அவள் கேட்க….

 

ஹா ஹா ஹா என அவள் கேட்ட தோரணையில் சிரித்த வருண், “உன்னை பற்றி எனக்கு தெரியாதா என்ன? யூநிவர்சிடில படிக்கிரப்போ யார் கூடயோ ஃபோன்ல திட்டிட்டு இருந்த விரலை மடக்கி…. உன்கூட பேச வந்த எனக்கு உன்னைப் பார்த்து சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியாமல் போச்சு சோ அப்படியே வந்த வழியே கிளாஸ்க்கு போய்ட்டேன் ஆழினி” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்…..

 

“கடவுளே! என சொல்லிக் கொண்டவளின் இதழும் மெலிதாக விரிய… என்ன நினைத்தாளோ, நான் எல்லாம் ரெடி பண்றேன் பட் என்ன மனசுக்கு கொஞ்சம் பயமா இருக்கு வருண்” என்றாள் ஆழ்ந்த குரலில்….

 

“நான் தான் கூட வர்றேன்ல டோண்ட் வொர்ரி ஆழினி” என்றான்.

 

“சரி வருண் நான் அவங்ககிட்ட கேட்டுட்டு எந்த ஃபாரஸ்ட்ல மீட்டப்னு நைட் சொல்றேன்” என்றவள் அலைபேசியை துண்டிக்கப் போக…. 

 “ஹேய் வெயிட் வெயிட் ஆழினி” என்றான்.

 

“ம்ம்.. என்ன சொல்லு வருண்?” 

 

“அது வேற ஒன்னும் இல்லடி.. அது வந்து” என வருண் இழுக்க… “என்ன வந்து போய்? நான் மட்டும் தான் உன்கூட வர்றேன் வருண்… தேஜ்க்கு என அழுத்தம் கொடுத்து சொன்னவள் எக்ஸாம் இருக்கு சோ அவள் வரல” என்றாள்.

ஆழினி அப்படி கூறியதும் அதிர்ந்தவனுக்கு முகம் முழுவதும் வெட்கப் புன்னகையே….

 

தலையைக் கோதிக் கொண்ட வருண், ஹி ஹி ஹி என சிரித்தவன் “ சோ ஸ்வீட் ஆழினி நீ என் பிரண்ட் ஆஹ் கிடைக்க நான்”…. என அவன் ஆரம்பிக்கும் போதே…. “போதும் நிறுத்து வருண் இப்போ நீ கேட்க வந்ததுக்கு பதில் கிடைச்சுறிச்சுல சும்மா ஐஸ் வைக்காமல் போனை வை” என்றாள்.

 

“ஓகே bye ஆழினி” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டான்.

 

ஆம், அவள் நாளை மறுநாள் அவள் சொன்ன அந்த ‘கார்டன்சில்லோ’ தாவரத்தை வாங்கச் செல்ல வேண்டுமே! அவள் சந்திக்கப் போகும் அந்த வெளிநாட்டுப் பிரஜை தரப்போவதோ அத் தாவரத்தின் சிறிய ஒரு பகுதியைத் தான்.  அவளுக்கு இப்போது இருக்கும் ஒரே படபடப்பு அந்தத் தாவரம் இங்கே பயிரிட்டால் விளையுமா? விளைந்தால் தானே அவளின் ப்ராஜக்டைத் திறன் பட நடத்தி முடிக்க முடியும் அதற்காக அந்த தாவரத்தின் சிறு பகுதி போதாதே என்பதே அவளின் எண்ணத்தை ஆக்கிரமித்து இருந்தது.

 

ஒரு பெரு மூச்சுடன் காட்டில் தங்க இரு நாட்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் தயார்படுத்தி முடிக்கவே 3 மணித்தியாலங்களை கடந்து விட்டு இருந்தது.

 

கடிகாரத்தைப் பார்க்க, அது மாலை 5.30 மணி என காட்டியது.

 

“ஓ மை கோட் இப்போ அவன் வேற வர்ற டைம் ஆகிறிச்சே! அவன் கண்ணுல படாமல் மாமாவை போய் பார்த்து கதைசிட்டு வந்துறனும்” என நினைத்து ஒரு பெரு மூச்சுடன் கதவினைத் திறந்துக் கொண்டு வெளியில் வந்து முதலில் பார்த்தது என்னவோ காஷ்யபனின் அறையைத் தான்.

 

அவன் வந்ததற்கான தடயம் தென்படாததால், “நல்ல வேளை அவன் வரல இல்லனா தேவையில்லாமல் அவன் முகத்தை பார்த்து இரிடேட் ஆகுறதுக்கு பதிலா சுவர்ல முட்டிக்கலாம்” என வாய்விட்டு சொன்னவள்  ‘Ufff’ என்று உதட்டைக் குவித்து ஒரு பெரு மூச்சை விட்ட படியே படிகளில் தாவி தாவி கீழ் இறங்கியவள் எதன் மீதோ மோதி நிலைத் தடுமாறி கீழே விழப் போக அவளை விழ விடாமல் அவளின் இடையைப் பற்றி ஒரு கரம் பிடித்து நிறுத்தி இருந்தது.

 

விழப் போனவளுக்கு தன்னை யாரோ பிடித்து நிறுத்தியது விளங்க, அது யார் என நிமிர்ந்து பார்த்தவளுக்கு மயங்கி விழாத குறை தான்.

 

ஆம், அவள் யாரை பார்க்கக் கூடாது என நினைத்தாளோ! அவனே தான் பிடித்து நிறுத்தி இருந்தான்.

 

அவளுக்கோ அதிர்ச்சி ஆனால், அவனுக்கோ எந்த வித அதிர்ச்சியும் இல்லை போலும்.

 

அவளின் இடையைப் பற்றி பிடித்து இருந்த காஷ்யபன் முற்றிலுமாக அவளின் பெண்மையின் மென்மையில் சற்றே தடுமாறித் தான் போனான்.

 

அவனுக்கு இதுவே முதல் பெண் ஸ்பரிசம்.

 

இதுவரையிலும் அவளிடம் சண்டை போட்டு தர்க்கம் ஏற்பட்டு இருந்தாலும் அன்று ஒரு நாள் மட்டுமே அவளை முதன் முதலாக அறைந்ததும் அவளின் கழுத்தைப் பற்றி காயப் படுத்தியதும்.

 

அதன் பின் இப்போது தான் அவளின் ஸ்பரிசத்தை முற்றாக உணர்கிறான்.

 

அன்றோ கண்மண் தெரியாத கோபம்.

 

இன்றோ, சாதாரணமாக அலைபேசியில் பேசிக் கொண்டே ஒற்றைக் கையால் தன் புருவத்தை வருடியபடி வந்தவனும் அவளை பார்த்தபடியே வழிவிட்டு படிகளில் மேலேறி வந்தவன் அலைபேசியை அணைத்து விட்டு நிமிர்ந்து பார்க்கும் முன், அவள் அவன் மேல் மோதி விழப் போக உடனே சுதாரித்தவன் தன்  காலை பின்னால் ஊன்றி சமநிலைப் படுத்தியவன் கண் இமைக்கும் நேரத்தில் அவளின் இடையைப் பற்றி நிறுத்தி இருந்தான்.

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்று இருந்தனரே தவிர விலகவில்லை.

 

அவனின் கைகளோ அவனின் கட்டுப் பாட்டையும் மீறி அவளின் இடையை வருட ஆரம்பிக்க அதில் சுயம் வந்தவள் அவனிடம் இருந்து வெடுக்கென பிரிந்து ஓர் அனல் பார்வை அவனை பார்த்து விட்டு எதுவும் பேசாமல் கீழிறங்கி சென்றிருந்தாள்.

 

அவனுக்கே ஆச்சரியம் தான் அவன் செய்த வேலைக்கு அவள் எந்த எதிர்வினையும் காட்டாமல் சாதாரணமாக முறைத்து விட்டு மட்டும் செல்கின்றாள் என…..

 

இருந்தாலும் அவனே எதிர் பார்க்காமல் அவளின் இடையை வருடியது அவனாலேயே ஜீரணிக்க முடியவில்லை… “டமிட்” என சொல்லிக் கொண்டவன் விறுவிறுவெனச் சென்று அறைக்குள் புகுந்துக் கொண்டான்.

 

பிரகலாதனை தேடி வந்தவள் அவரின் அறைக் கதவைத் தட்ட, உள்ளிருந்து வந்த லாதா “அவர் ஆபீஸ் ரூம்ல இருக்கார் ஆழினி” என்றார்.

 

“சரி அத்தை நான் அங்க போய் பார்க்குறேன்” என்றவள் ஆபீஸ் அறையை நோக்கிச் சென்றாள்.

 

கதவினை தட்டிக் கொண்டே உள்ளே வந்தவள் ஒரு கணம் அதிர்ந்தாலும் “அப்பா இங்க என்ன பண்றீங்க?” என கேட்டுக் கொண்டே வந்து பிரகலாதன் அருகில் அமர்ந்தாள்.

 

பிரகலாதன் குரலை செரும… ஜீவாவோ, “ஆபீஸ் ரூமுக்குள்ள என்ன செய்வாங்க ஆழினி? என்றவர் தொடர்ந்து ஏன் என்னை இங்க எதிர் பார்க்கல போல உன் மாமாகிட்ட ஏதாச்சும் கேட்க வந்த போல தெரியுதே?” என சரியாக அவளைக் கணித்து கேட்க….

 

“ச்சே ச்சே நான் ஒன்னும் கேட்க வரலையே… சும்மா ரெண்டு நாளா என் கண்ணுல மாமா படலையே அதான் மாமாவைப் பார்க்க வந்தேன் என்றவள் மனதோ, அடியே ஆழினி நீ ஓவர் பெர்போமன்ஸ் பண்ணி மாட்டிக்காத டி” எனக் கூற வெளியில் முகத்தை சிரித்தபடி வைத்து இருந்தாள்.

 

பிரகலாதனோ, ஆழினியின் கையை பற்ற… அவரைப் பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்த ஆழினி “என்ன?” என ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்க….

 

அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்த ஜீவா, “ஆழினி” என்று அழைக்க…

 

“சொல்லுங்க அப்பா?”

 

“டிரஸ் எல்லாம் பெக் பண்ணிட்டியா?” என அவளுக்கு மறைமுகமாக ஜீவா சம்மதம் கொடுத்து விட….

 

மின்னல் வேகத்தில் எழுந்தவள் “அப்பா” என விசும்பியப் படி அணைத்துக் கொண்டாள்.

 

அவள் முதுகை ஆதுரமாக தடவி விட்ட ஜீவா, “உன் அம்மாவை சமாளிக்க வேண்டியது என் பொறுப்பு” என்றார்.

 

“தேங்க்ஸ் அப்பா” என்றாள்.

 அவளின் தலையை வருடி விட்டவர் “நீ ஃபாரஸ்ட் போய் வந்ததும்” என சொல்ல வந்த ஜீவாவை தொடர்ந்து பிரகலாதனே “உனக்கு மேரேஜ் பண்ணி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கோம்” என்க…

 

அதிர்ந்து கண்களை பெரிதாக விரித்தவள் “ஐயோ மாமா வேணாம் பிளீஸ் இன்னும் 1 வருஷம் போகட்டும்” என்றாள்.

 

 

உடனே, சுதாரித்த ஜீவா, “அப்போ ஃபாரஸ்ட் டிரிப் அஹ் கென்சல் பண்ணிற வேண்டியது தான்” என்றார்.

 

“அப்பா பிளீஸ்” என அவள் கெஞ்ச…

 

இருவரிடமும் அவளின் கொஞ்சல்கள் எடு படவே இல்லை.

 

இறுதியாக ஆழினி தான்  அவர்களின் வழிக்கு வர வேண்டியதாக இருந்தது.

 

ஒரு ஆழ்ந்த பெரு மூச்சுடன் “சரி மேரேஜ் பண்ணிக்கிறேன்” என ஒத்துக் கொள்ள,

 பிரகலாதனும்  ஜீவாவும் முகம் கொள்ளா பூரிப்புடன் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.

 

அவளின் முகமோ உணர்ச்சி துடைக்கப் பட்டு இருக்க, அதை ஊன்றி கவனித்த பிரகலாதனோ “யாரையாச்சும் காதலிக்கிறியா ஆழினி?” என கேட்டு விட…

 

“அதான் என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்லி என் மெயின் மிஷன் அஹ் டார்கெட் பண்ணி லாக் பண்ணிடிங்களே!” என சிரிப்பை வரவழைத்தவள் இருவரின் தோளிலும் கையை போட்டுக் கொண்டாள்.

 

அவள் பேச்சை மாற்றிய படி சாதாரணமாக மென் புன்னகையுடன் சகஜமாக பேசியது அவ் இருவருக்கும் அப்போது அவள் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டாள் என்ற சந்தோஷத்தில் கண்டுக் கொள்ளாமல் விட்டு விட்டனர்.

 

(நல்லவேளை அவள் தனக்காக அவர்கள் தேர்ந்து வைத்து இருக்கும் மாப்பிள்ளை யாரென கேட்கவில்லை தெரிந்து இருந்தால் இப்போதே வானத்துக்கும் பூமிக்கும் குதித்து இருப்பாள்.)

 

(நீங்க நினைக்கிற போல அது காஷ்யபன் இல்லங்க.)

அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்த காஷ்யபனுக்கு தன் செயலினை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

அவளின் இடையைத் தீண்டிய தன் இடது கையை வெறித்துப் பார்த்தான்… இவ்வளவு நாட்களாக எழாத உணர்வுகள் இப்போது ஆழிப் பேரலையாக ஆர்ப்பரித்துக் கொண்டு இருந்தன.

 

அதற்காக அவனால் எந்த பெண்ணிடமும் இழையத் தோன்றவும் இல்லை… அவளிடம் மட்டுமே அவனுக்கு தோன்றும் இந்த உணர்வு ஏன் என அவன் யோசித்து இருந்தாலே இப்போதே  அவனவள் மீதான தீராக் காதலை உணர்ந்து இருப்பானோ என்னவோ! விதியின் சதியை யாரால் மாற்ற முடியும்?

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 11”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!