தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 13

5
(23)

பேராசை – 13

 

அறைக்குள் முதலில் வந்து அமர்ந்தது என்னவோ தேஜா தான்.

“ஹேய்.. தேஜா ஒரு 10 மினிட்ஸ் வெயிட் பண்ணு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்”  என்ற ஆழினி அவசர அவசரமாக குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

 

ஒரு பெருமூச்சுடன் கட்டிலில் இருந்து எழுந்த தேஜா, ஆழினி சேகரித்து வைத்து இருக்கும் நாவல்களை ஒவ்வொன்றாக  எடுத்துப் பார்த்துக் கொண்டு போனவள் அப்போது தான் அந்த மேசையின் மேல் அன்று வருண் ஆழினிக்கு கொடுத்த  Canon EOS 350D கேமரா இருப்பதைக் கண்டாள்.

 

அருகில் இருந்த ஸ்டூலை எடுத்து வைத்து அதன் மேல் ஏறி அந்த கேமராவை எடுத்தாள்.

 

ஏதோ ஓர் ஆர்வத்தில் எடுத்து விட்டாள் ஆனால் அவளால் கேமராவை எப்படி உபயோகப் படுத்துவது என  தெரியாமல் போக  “ஓ மை கோட் இது உனக்கு தேவையா ? அதான் உனக்குத் தெரியாதுல” எனத் தன்னையே நொந்துக் கொண்டவள் கேமராவில் லேசாக தன் தலையை முட்டிக் கொண்டாள்.

 

அவள் லேசாக முட்டியதில் ஷட்டர் பட்டன்  அழுத்தப்பட்டு அவளை அறியாமலே அக் கேமரா அவளை புகைப்படம் எடுத்து இருந்தது.

 

அதை அறியாத தேஜாவும் கேமராவை அதன் உறையில் வைத்து விட்டு அமர்ந்து இருந்தவள் ஆழினி வரவும் “ ஏன் டி சொந்த வீட்டுக்குள்ள திருடி மாதிரி வந்த?” எனக் கேட்க….

 

“அதான் முழுசா நனைந்து இருந்தேனே” என்றாள் தனது முடியை உலர்த்திக் கொண்டே….

 

“ தெரியாமல் swimming pool ல   விழுந்துட்டேன்னு சொல்லலாம் தானே” என்க…

 

“நான் காஷ்யபன் கூட பேசிட்டு இருந்ததை அத்தை பார்த்துட்டாங்க அதான் அவர் சைலண்ட் ஆஹ் இருந்தார்….  நான் காஷ்யபன்கிட்ட சாதாரணமா  பேசிட்டு இருந்தது அவங்களுக்கே  ஆச்சரியம் தான் அப்படியே எங்களை யோசனையா பார்த்திட்டு போறாங்க டி அதுமட்டும் இல்ல இப்போ அவங்க சும்மாவா இருப்பாங்கனு  நினைக்கிற? இது ஏதோ உலக மகா அதிசயம் மாதிரி இந்நேரம் இந்த வீடு ஃபுல்லா அந்த நியூஸ் பரவி இருக்கும்…அவங்க போனதும் தான் என்னை தர தரனு இழுத்துட்டு போனார் சார்” என்றாள்.

 

“சரி தான் இவ்வளவு நாள் அடிச்சிட்டு இருந்திட்டு நல்லா பேசுனா அண்ட் நீயும் தண்ணில இருந்து வர்றதை பார்த்து இருந்தாங்கனா சந்தேகம் வர வாய்ப்பு இருக்கு தான்.”

 

“ஒஃப்கோர்ஸ் டி அதுமட்டும் இல்ல என்னால இந்த வீட்டுல சண்டை வர்றது எனக்கு விருப்பம் இல்லை மருதாணி வச்சதுக்கு அப்புறம் தேவையில்லாமல் நானும் எந்த வம்புக்கும் போகல” என்றாள் ஆழினி.

 

“அதான் உனக்கு நல்லது டி.”

 

“ம்ம்…என்றவள் நாளைக்கு நான் வருண் கூட எந்த ஃபாரஸ்ட்க்கு போக போறேன்னு கெஸ் பண்ணு பார்ப்போம்.” 

 

கன்னத்தில் தட்டி யோசித்த தேஜா, “ நீ தர்ற பில்டப் எல்லாம் பார்த்தால் ஏதோ அமேசான் காட்டுக்கே போகப் போற மாதிரியே இருக்கே” என்றாள் கிண்டலாக….

 

“லூசு…. அமேசான் காட்டுக்கு போறது எல்லாம்  கனவுல கூட நடக்காது சும்மா கிண்டல் பண்றதா இருந்தாலும் கொஞ்சமாச்சும் லாஜிக் ஆஹ் பேசு டி.”

 

(பாவம்… அவள் அறியவில்லை காஷ்யபனுடன் அவள் அமேசான் காட்டிற்கு சென்று சிக்கப் போவதை)

 

“அட போடி அப்போ இரு  ஒன்னு ஒன்னா சொல்றேன் எதுனு சொல்லு” என்றவள் இலங்கையில் இருக்கும் அவளுக்குத் தெரிந்த சிறிய காடுகளின் பெயர்களை கூற ஆரம்பிக்க…

 

“ஓ மை கோட் ஸ்டாப் டி என்னை பற்றி என்ன நினைச்சிட்டு இருக்க? அதுவும் நான் சொன்ன ஃபோரினருக்கு கைட் ஆஹ் போறேன் டி அவங்க இந்த மாதிரி சின்ன காட்டுக்கு எல்லாம் போக மாட்டாங்க அண்ட் வன்மோர்திங் சின்ன காட்டுக்கு அவங்களுக்கு கைடன்ஸ் தேவையும் இல்ல என்றவள் இப்பயாச்சும் சரியா கெஸ் பண்ணு பார்ப்போம்” என்றாள் ஆழினி.

 

எல்லா காடுகளையும் சொன்னவள் மறந்தும் சிங்கராஜா வனத்தின் பெயரை அவள் சொல்லவே இல்லை.

 

ஆம், இலங்கையிலேயே மிகப் பெரிய வனம் அல்லவா! எவ்வளவு தூரம் பெரியதோ அதே அளவுக்கு அங்கு ஆபத்துக்கள் நிறைந்து இருக்கும்.

 

ஒரு கட்டத்தில் ஆழினியே களைத்துப் போய் “நீ சொல்லித் தான் இங்க இருக்க சின்ன சின்ன காட்டு பெயர் எல்லாம் எனக்கு தெரியுது” என்றவள் அருகில் இருந்த போத்தலை எடுத்து நீரைப் பருகியவள் தேஜாவுக்கும் கொடுத்தாள்.

 

“எல்லாம் சொன்ன ஓகே பட் நாம இலங்கையின் மிகப் பெரிய தேசிய வனம் வனம்ன்னு  விழுந்து விழுந்து சின்ன வயசுல பாடமாக்குன காட்டை நீ சொல்லல பார்த்தியா பப்பி ஷேம்” என்றாள்.

 

இங்கு தேஜாவுக்கு குடித்துக் கொண்டிருந்த நீர் புரை ஏற, “வாட்? சிங்கராஜா ஃபாரஸ்ட் ஆஹ்” என  அதிர்ந்தவள் தலையில் தட்டிக் கொண்டே அதிர்ச்சியில் எழுந்து நின்றே விட்டாள்.

 

“ஷாக் அஹ் குறை டி ஆரம்பத்துல இங்கயா போகப்  போறோம்னு முதல்ல ஷாக் ஆனதே நான் தான் அப்புறம் வருண் தான் என்னை சமாளிச்சான் என்றவள் தொடர்ந்து நானும் யோசிச்சேன் கார்டன்சில்லோ பிளான்ட் எனக்கு வேணுமே சோ அதான்  போக முடிவு பண்ணிட்டேன்”.

 

“வேணாம் டி அங்க போகாத வேற வழில முயற்சி பண்ணி அந்த பிளான்ட் அஹ் எடுத்துகுவோம் பிளீஸ் போகாத” என்றாள் தேஜா.

 

“காடுனா அது  இதுன்னு இருக்கத் தான் செய்யும் இதுக்கு முதல் நான் தான் நிறைய காட்டுக்கு  கைட் ஆஹ் எல்லாம் போயிருக்கேன் தானே! சோ ஐ வில் மேனேஜ் இட்.” என்றாள்.

 

“ஓ மை கோட் சொல்றதை கேளு வேற யாரையும் கைட் ஆஹ் போக சொல்லு நீ போக வேணாம் அவ்ளோ தான்” என்றாள் கோபமாக தேஜா.

 

“ஒரு நல்ல விஷயதுக்காக போறேன் டி வாழ்த்தி அனுப்பு… எனக்கு ஒன்னும் ஆகாது  அதுமட்டும் இல்லாமல் நான் தனியா எல்லாம் போகல என்கூட ரெண்டு  ஃபோரினர்ஸ்ஸும் வருணும் தான் வர்றாங்களே”  என்றாள் ஆழினி.

 

அவள் அவ்வளவு சொல்லியும் தேஜாவின் மனம் தெளியவில்லை.

 

“ஜஸ்ட் ரெண்டு நாள் தான் பிறகு நான் வந்துருவேன் டி இப்படி முகத்தை தூக்கி வச்சிக்காத” என்றாள் ஆழினி.

 

“ஓகே போயிட்டு வா என்றவள் ஏதோ நினைவு வந்தவளாய் ரெண்டு நாள் மட்டும் தான்” என்றாள் சிணுங்களாக….

 

“எனக்கு  பாய் ப்ரெண்ட் இல்லாத குறைய நீ தீர்த்து வச்சுருவ போலயே” என வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க….

 

ஆழினியை முறைத்தவள் அருகில் இருந்த தலையணையை அவளை நோக்கி வீசினாள்.

 

அதனை லாவகமாக பிடித்த ஆழினியோ, “ இங்க இருக்க காஷ்மோரா பேயை விட அந்த காட்டுல இருக்க அணிமல்ஸ் அஹ்  சமாளிச்சிடலாம்” என்றாள்.

 

சற்று முன் காஷ்யபன் முறைத்துக் கொண்டு நின்ற காட்சி தேஜாவுக்கு நினைவு வர, “ ஆத்தி… அதுனா உண்மை தான் டி”  என்றாள்.

 

அப்படியே இருவரும் கதைத்துக் கொண்டே நேரத்தை கடத்தினர்.

 

 “KS எண்டர்பிரைசஸ்”  கம்பனி உள்ளே கம்பீரமாக காஷ்யபன் உள் நுழையும் போதே அங்கு வேலை செய்து கொண்டு இருக்கும் அனைவரும் எழுந்து நிற்க, ஒரு தலையசைப்புடன் கடந்து சென்றவன் தன் கேபினில் வந்து அமர்ந்துக் கொண்டான்.

 

அவனுக்கோ, எப்போது அவளின் இடையைப் பற்றி அவளை தீண்டினானோ அன்றில் இருந்து அவனது தூக்கம் தொலைந்து போனது.

 

இவ் பிசினெஸ் உலகத்தையே கட்டி ஆழ்பவனுக்கு தன் உணர்வுகளை கட்டுப்படுத்தும் வழி அறியாமல் விழித்துக் கொண்டு இருந்தான்.

 

அதற்காக அவனால் வழி தவறி எந்த பெண்களையும் தீண்டவும் முடியவில்லை…

 

எப்போதும் இல்லாதது போல இன்று அவளை காயப்படுத்தி விட்டோமே என வேறு மனதுக்குள் ஏதோ ஒன்று பிசையவும் ஆரம்பித்து இருந்தது அவனுக்கு…..

 

தலையைப் பிடித்துக் கொண்டு எவ்வளவு நேரம் இருந்தானோ! அவனது PA ராம் உள்ளே வந்து “சார்” என அழைக்கும் வரை அவளது எண்ணத்திலேயே தான் உழன்றுக் கொண்டு இருந்தான்.

 

அதில் உணர்வுக்கு வந்தவன் அலைபேசியில் மணியைப் பார்த்து விட்டு “ஓஹ் ஷிட்” என கோபத்தில் எழுந்தவன் ஓர் இறுகிய முக பாவனையிலேயே ராம் அந்த மீட்டிங் அஹ் கேன்சல் பண்ணு” எனச் சொல்ல…

 

“சார் 100 கிராஸ்” என ராம் இழுக்க…

 

அவனை அனல்ப் பார்வைப் பார்த்த காஷ்யபன் “ இங்க நீ ஓனர் ஆஹ்? இல்லை நானா? என்றவன் டு வாட் ஐ சே” என வார்த்தைகளைக் கடித்துத் துப்ப…

 

“ஓகே சார்” என்ற ராம் விட்டால் போதும் என  சென்று விட்டான்.

 

“என்ன ஷேத்ரா உன் ஃபீலிங்ஸ் அஹ் கன்ட்ரோல் பண்ணிக்க முடியாமல் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க” என வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டவன் தலையைக் கோதிக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

 

“போயும் போயும் அவள் மேல எனக்கு எப்படி இப்படி ஒரு எண்ணமா?” என தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் ஒற்றைக் கையை ஓங்கி சுவரில் குத்தினான்.

 

 அவள் மீது தனக்கு காதலாக இருக்குமோ? என அவன் மறந்தும் யோசிக்கவே இல்லை.

 

இது ஒரு பெண்ணை தீண்டியதால் வரும் சாதாரண உணர்வு என அவனே தனக்கு கூறிக் கொண்டாலும் அந்த உணர்வு அவள் மேல் வருவதை தன் அவனுக்கு ஜீரணிக்க முடியவில்லை.

 

சிறு வயதில் இருந்து அவளை அவனுக்கு பிடிக்காது அல்லவா!

 

இன்று காஷ்மோரா என்று சொல்லும் அவள் அவனை எப்படி திருமணம் செய்வாள்?

 

இருவரும் இணைவார்களா?

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 13”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!