வதைக்காதே என் கள்வனே

4.4
(8)

கள்வன்-23

இருவரும் தங்களுக்கான சாப்பாடை சாப்பிட்டு விட்டு அந்த அறையை விட்டு வெளியே வர வெண்மதியோ அங்கு ஒருவரை பார்த்துவிட்டு அப்படியே அதிர்ச்சியாக நின்று விட்டாள்.

பின்பு தன்னை சுதாரித்துக்கொண்டவள் மித்ரனின் கையைப் பிடித்து அந்த நபரின் கண்ணில் படாதவாறு அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டாள். இவனும் அவளுடைய செயலின் அர்த்தம் புரியாது அவள் இழுத்த இழுப்பிற்கு பின்னே சென்றான். உள்ளே வந்தவன் “ஹேய் ஏன் இப்படி நடந்துக்கிற என்ன ஆச்சு உனக்கு..?” என்று கேட்க, “உஸ்..” என்று அவன் வாயின் மேல் கையை வைத்தவள் “கொஞ்ச நேரம் அமைதியா இருங்க ப்ளீஸ் தயவு செஞ்சு சத்தம் போடாதீங்க..” என்றாள். அவனும் சரி என்று ஒத்துக் கொண்டவன் தன் வாயிலிருந்து அவள் கையை எடுக்குமாறு கண்ணால் சைகை செய்தான்.

பின்பு தன் கையை எடுத்தவள் அந்த அறையின் கதவை லேசாகத் திறந்து அந்த நபரை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் அவள் பார்ப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு அந்த இடத்தை சுற்றி பார்க்க அதுவோ ஆண்கள் பயன்படுத்தும் கழிவறை என்றதும், “ஹேய் இங்கே உன்னை யாராவது பார்த்தாங்கன்னா என்ன நினைப்பாங்க வா முதல்ல இங்கிருந்து வெளியே போலாம்..” என்று சொல்ல, “ஐயோ கொஞ்ச நேரம் பேசாம இருங்க இப்ப வெளிய போனா கண்டிப்பா மாட்டிக்குவோம்..” என்று சொன்னவள் அந்த நபரை மீண்டும் பார்க்க தொடங்கினாள். அப்பொழுது அந்தப் பக்கம் யாரோ வர கதவை பட் என்று பூட்டி விட்டாள். அவனை பார்த்து “அய்யோ யாரோ வாரங்க இப்ப என்ன பண்றது..” என்று கேட்க, “இதுக்குதான் முதல்லயே சொன்னேன் நான் சொல்றத நீ எங்க கேட்ட.. இப்போ என்ன பண்றதுன்னு என்ன கேக்குறியா என்னமோ பண்ணு எனக்கென்ன..” என்று ஜம்பமாக நின்று கொண்டான்.

அவனை ஒரு கணம் முறைத்தவள் அந்த இடத்தில் இருந்த இன்னொரு அறைக்குள் நுழைந்து கொண்டாள். இவனும் அவள் பின்னோடு உள்ளே வந்து கதவை பூட்டி கொண்டான்.

“ஐயோ நல்ல மாட்டப் போறேன்..” என்று புலம்பிக் கொண்டிருந்தாள். அவனோ அவள் புலம்பலை காதில் வாங்காதவன் போல் பின்னே திரும்பி தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான். இவளோ எங்கே அவன் சத்தமே இல்லை என்று திரும்பி பார்த்தவள் அதிர்ந்து நின்றாள். பின்னே அவன் தன்னுடைய பேண்ட் சிப்பை கழட்டிக் கொண்டிருந்தான். அவளோ அதை பார்த்தவுடன் அதிர்ந்து “என்ன பண்றீங்க..?” என்று கேட்டாள்.

“என்னாச்சு இப்போ..? எவ்வளவு நேரம் தான் நான் அடக்கி வைச்சிக் கிட்டே இருக்கிறது.. இதுக்கு மேல விட்டா யூரின் டாங்க் வெடிச்சிரும் அதான் ரிலிஸ் பண்ண போறேன்..” என்றவன் தன் வேலையை தொடர்ந்தான். அவளோ “ஐயோ எந்த நேரத்தில என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?” என்று திட்டிக் கொண்டிருந்தாள்.

மித்ரனோ “இதுக்கெல்லாம் என்ன, நேரம் கிழமையா பார்க்க முடியும்..? வர்ற நேரம் போக வேண்டியது தான்..” என்றவன் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான். இவளோ தன் தலையில் அடித்துக் கொண்டு வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டிருந்தாள். திடீரென்று அவன் “ஆஆஆ..” என்று அலறும் சத்தம் கேட்க, “என்னாச்சு என்னாச்சு..?” என்று பதறிம் போய் திரும்பியவள் அவனை பார்த்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

அவனோ அவளை முறைத்தவாறு தன்னுடைய இரு கைகளையும் முன்னே தன்னுடைய ஆண்மையை பொத்தியவாறு “அடியேய் சிரிக்காதடி ஏதாவது பண்ணுடி.. மாட்டிக்கிச்சுடி வலிக்குது.. ஆஆஆ..” என்று சொல்ல அவளுக்கு சிரிப்பு அதிகமானதே தவிர குறையவில்லை.

அவனோ அவளை பார்த்த வாறே சிறுநீர் கழித்துவிட்டு ஜிப்பை போடும்போது பாவம் ஜிப்பில் அவனுடைய உயிர்நாடி மாட்டி விட்டது.

பாவம் அவனுக்கு வலியில் கண்கள் கலங்க துடித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்க அவளுக்கு பாவமாக இருக்க சட்டென அவன் முன் குனிந்தவள் அவனுக்கு உதவி செய்ய முன்வந்தாள்.

இவனோ விடாமல் கத்திக் கொண்டே இருக்க அவளுக்கு பொறுமை பறந்து போனது.

“கொஞ்ச நேரம் கத்தாம இருங்க.. நீங்க ஒரு ஆன்ட்டி ஹீரோ.. இப்படி சின்ன பிள்ளை மாதிரி கத்திக்கிட்டு இருக்கீங்க..” என்று திட்ட அவனும் அவளைப் பார்த்து “என்ன சொன்ன..? ஆன்டி ஹீரோவா.. ஏன் ஆன்ட்டி ஹீரோவுக்கு எல்லாம் வலிக்க கூடாதா..? அடியே பார்த்து எடுத்து விடுடி வலிக்குது..” என்று திரும்பத் திரும்ப சொல்ல அவளும் “இன்னொரு தடவை இப்படி கத்துனீங்க பிச்சு எடுத்துடுவேன்..” என்று சொல்ல இவனோ அவளிடம் “அடியேய் உன் கோபத்தை இதுல காட்டாதடி பிள்ளைக்காட்சி மரம் டி ஏதாவது ஆகிவிடாம..” என்று சொல்ல அவளோ அவனை நிமிர்ந்து பார்த்து “என்ன பிள்ளைக்காட்சி மரமா..?” என்று சந்தேகமாக கேட்டாள்.

“நீ முதல்ல எடுத்து விடு நான் அப்புறமா சொல்றேன் டி வலி தாங்க முடியலடி..” என்று சொல்ல அவளும் மெதுவாக அவனுக்கு எடுத்து விட்டாள்.

“சரி எடுத்து விட்டுட்டேன் இப்ப சொல்லுங்க எனக்கு புரியல..?” என்று தன்னுடைய அதி முக்கியமான சந்தேகத்தை அவனிடம் கேட்டாள்.

அவனோ தனக்குள் சிரித்தவாறு அவளுடைய காதின் அருகே குனிந்தவன் ஒரு கையால் அவளின் பின் முதுகோடு தன்னை நெருங்குமாறு அணைத்தவன் இன்னொரு கையால் அவள் வயிற்றில் வைத்து தடவியவாறு “உள்ளே இருக்கிற என் பிள்ளை கிட்ட கேளு அவன் சொல்லுவான் அப்படின்னா என்னன்னு..” என்று சொல்ல அவளுக்கோ ஒரு நிமிடம் முகம் சிவந்தது அவன் கூற்றில். சட்டென அவனை தன்னில் இருந்தும் தள்ளி விட்டாள்.

“போங்க நீங்க உங்களுக்கு எப்படித்தான் இந்த மாதிரி எல்லாம் தெரியுதோ தெரியல..” என்றவள் அவனை விட்டு விலக முயற்சிக்க அவனோ அவள் முகம் சட்டென சிவந்ததை பார்த்தவன் அதற்கு தான் காரணம் என்று ஒரு கர்வம் மீதூற அவளுடைய நாடியை ஒற்றை விரலால் தன் முகம் நோக்கி உயர்த்தியவன் அவள் இதழில் தன் இதழை பதித்தான்.

அவளும் அவன் தரும் இதழ் முத்தத்தில் கிறங்கி நின்றாள்.

இதழ் முத்தம் நீண்டு கொண்டே போக ஒரு கையால் தன் பிள்ளை சுகமாக குடி கொண்டிருக்கும் அவளுடைய இடையில் வருடியவன் சற்றே மேலே ஏறி அவளுடைய மார்பு கலசங்களை வருட ஆரம்பித்தன. அவளும் அவன் செய்கைக்கு ஒத்துழைத்தாள். இருவரும் இப்படி முத்தத்தில் திளைத்துக் கொண்டிருக்க வெளியே கதவு தட்டும் ஓசை கேட்க சட்டென அவனிடமிருந்து பிரிந்தவள் “அய்யய்யோ யாரோ கதவை தட்டறாங்க..”என்று சொல்ல. வெளியே இருந்த நபரோ “யோவ் யாருய்யா உள்ளே இருக்கிறது தயவு செஞ்சு சீக்கிரம் வெளியே வா அவசரம் முடியலை..” என்று அவர் கத்த.

இருவரும் உள்ளே இருந்து கதவை திறக்க, வெளியே நின்ற நபரோ “அடப்பாவிங்களா இந்த இடத்தையும் விட்டு வைக்கலையா..?” என்று கேட்க. அவரை தள்ளிவிட்டு இருவரும் வெளியே வந்தார்கள். வெளியே வந்தவள் அந்த ஹோட்டலை சுற்றிமுற்றி பார்த்தாள். அவள் தேடும் நபர் அங்கு இல்லை என்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டு அவனுடன் சென்றாள்.

மித்ரனும் அவளின் செய்கை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தவன் வீட்டிற்கு சென்ற பின்பு அவளிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தான். இருவரும் வீட்டிற்கு வந்ததும் அவளை தன்னுடைய அறைக்கு அழைத்து வந்தவன் அவளை அங்கிருந்த சோபாவில் அமர்த்தியவன் அவளிடம் “அங்க நீ யாரை பார்த்த..? எதுக்காக நீ அங்க இருந்து ஒளிஞ்ச..?” என்று கேட்க அவளோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

“இங்க பாரு நீ நடந்துகிட்ட விதத்தை நான் கவனிச்சிக் கிட்டுதான் இருந்தேன்.. நீ யாரையோ பார்த்து ரொம்ப பயந்து போய் இருந்த அதை நானே பார்த்துக்கிட்டு தான் இருந்தேன்.. மறைக்காம ஒழுங்கா சொல்லு.. இல்லன்னா என்னோட ஸ்டைல்ல கேட்கிற மாதிரி இருக்கும்..” என்று கேட்க அவளும் வேறு வழியின்றி அவனிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

“அங்க இருந்தது என்னோட அக்கா நட்டாலியா.. அவ தான் என்னோட இந்த நிலைமைக்கு காரணம்.. அவளை என் வாழ்க்கைல நான் பாக்க கூடாதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.. ஆனா இந்த விதி திரும்பத் திரும்ப அவளை என் கண்ணு முன்னாடியே காட்டுது..” என்றவள் கண்களோ கலங்க ஆரம்பித்தது.

“என்ன சொல்ற உன்னோட அக்காவா.. அவள பாத்து நீ எதுக்காக பயப்படணும்..?” என்றான் மித்ரன்.

 

கள்வன்-24

ஹோட்டலுக்குச் சென்றவர்கள் வெண்மதி தன் வாழ்நாளில் யாரை பாரக்கவே கூடாது என்று நினைத்தாளோ யார் கண்ணில் படாமல் ஓடி மறைந்தாளோ அவளைப் பற்றி மித்ரன் அவளிடம் விசாரிக்க ஆரம்பிக்க தன் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை சொல்ல ஆரம்பித்தாள்.

******

சென்னையில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர்தான் வெண்மதியின் அம்மா ஷீலா. அவரின் அப்பா பரமன், அம்மா பார்வதி. இவர்கள் குடும்பம் நடுத்தர குடும்ப வர்க்கம்.

ஆனால் ஷீலா படிப்பில் கெட்டிக்காரி பத்தாம் வகுப்பிலும் பண்ணிரெண்டாம் வகுப்பிலும் முதல் இடத்தில் வந்து ஸ்காலர்ஷிப் மூலமாக வெளிநாடு செல்ல வாய்ப்புக் கிடைத்தது. ஷீலாவுக்கு ஏக குஷி. ஏனென்றால் அவர் நினைத்த வாழ்க்கை அவருக்கு கிடைத்ததில்லை. இப்பொழுது இந்த ஸ்காலர்ஷிப் மூலமாக வெளிநாடு செல்வது அவருக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது.

பாரீஸில் உள்ள பிரபலமான ஒரு யுனிவர்சிட்டியில் அவருக்கு இடம் கிடைத்தது. இங்கிருந்து அங்கு செல்வதற்கான அனைத்து செலவுகளையும் இவர் படித்த பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்று இவரை அனுப்பி வைத்தது. அங்கு சென்றவரும் படிப்பில் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தினாலும் அங்கு உள்ள கலாச்சாரம் அவரை வெகுவாக ஈர்த்தது. தானும் அதுபோல இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

அவர் உடன்படிக்கும் ஒரு மாணவன் பெயர் ராபர்ட். அவனும் பெரிய இடத்து பையன் காலேஜ் ரோமியோ கூட. அனைத்துப் பெண்களும் அவன் பின்னாடியே சுற்ற அவன் கண்களில் விழுந்தாள் ஷீலா.

பார்க்க இந்தியப் பெண்ணாக இருந்தவள் அவனை மிகவும் கவர்ந்தாள். ஷீலாவுக்கும் அவனைப் பார்த்ததும் பிடித்தது. காலேஜ் ரோமியோ என்றால் சும்மாவா.. அவளின் மனமும் அலை பாய்ந்தது. பின்பு இருவருக்கும் பிடித்து போய் அங்கேயே திருமணமும் செய்து கொண்டார்கள்.

அதன் பின்னர் ஷீலாவின் வாழ்க்கை ஏகபோகமாக இருந்தது. பணத்திற்கு குறைவில்லாத வாழ்க்கை. அவனுடன் பப்புக்கு செல்வது குடிப்பது என்று வெளிநாட்டு கலாச்சாரத்திற்கு ஒன்றிப் போனார். ஷீலா அப்படி இருக்கும்போது அவருக்கு திருமணமான ஒரு வருடத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது அவள் பெயர் நட்டாலியா. அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இன்னொரு பெண் குழந்தை பிறந்தது அவள் பெயர் மெரோனி. ஆனால் இதில் என்ன விடயம் என்றால் இரு குழந்தைகளையும் அவர் கவனிக்கவில்லை. அவருக்குத் தேவை நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, இரவில் பப்புக்கு செல்வது. இவ்வாறு இருக்கையில் வீட்டில் ஒரு கேர் டேக்கர் ஏற்பாடு செய்து இரண்டு குழந்தைகளையும் கவனித்து வந்தார்.

இப்படியே நாட்கள் செல்ல அந்த குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பும் தந்தையின் அரவணைப்பும் கிடைக்காமல் போனது. தாய் தான் அப்படி என்றால் தந்தையைப் பற்றி சொல்லவே வேண்டாம் அவரும் அவ்வாறே. பிஸ்னஸ் என்று ஊரு ஊராக சுற்றுவார். இவ்வாறு இருக்கையில் அந்த பிஞ்சுக் குழந்தைகள் தாய் தந்தை பாசத்திற்கு ஏங்க ஆரம்பித்தார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் மூத்தவள் நட்டாலியா இதுதான் வாழ்க்கை என்று ஏற்றுக் கொண்டு யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தன் போக்கில் வளர ஆரம்பித்தாள்.‌ ஆனால் இளையவள் மெரோனி தாய் தந்தை பாசத்திற்கு ரொம்பவே ஏங்கிப்போனாள். ஆனால் அவர்கள் அவளை கிஞ்சித்தும் பக்கத்தில் கூட விடவில்லை. அவளை முழுவதும் கவனித்துக் கொண்டது கேர் டேக்கர் மட்டும்தான். அவரிடமே வளர ஆரம்பித்தாள்.

மூத்தவள் நட்டாலியா தன்னுடைய தங்கையான மெரோனியை ஒரு வேலைக்காரியைப் போல தான் பார்த்து வந்தாள். பாசத்தை நல்லது கெட்டதை சொல்லி கொடுக்க வேண்டிய அவர்களே அதை கண்டுக்காத பொழுது இவளுக்கு மட்டும் பாச பந்தம் தெரியவா போகுது.

தன் பக்கத்தில் கூட சேர்க்க மாட்டாள். ஏனோ அவளைக் கண்டாலே இவளுக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் மெரோனியோ அம்மா அப்பாவிடம் தான் தன்னால் செல்ல முடியவில்லை. தன் அக்காவாவது தன்னிடம் பாசமாக இருப்பாள் என்று அவள் பின்னையே செல்வாள். ஆனால் இவள் ஒரு ஆள் அண்டா பிறவி. அவளை தன் பக்கத்தில் கூட நெருங்கவே விடமாட்டாள். எப்போது பார்த்தாலும் அவளை திட்டிக் கொண்டே இருப்பாள். இவ்வாறு சென்று கொண்டிருக்க மெரோனி பாசத்திற்காக ரொம்பவே ஏங்கிப்போனாள்.

இருவரும் காலேஜ் செல்லும் பருவம் வந்தது.

நட்டாலியாவிற்கு மாடலிங் செய்வதில் அவளுக்கு மிகவும் விருப்பம். அதனால் எந்த எல்லைக்கும் அவள் செல்வாள். இது மெரோனிக்கு பிடிக்காமல் போக அவளிடம் எச்சரித்தாள். ஆனால் அவளோ எங்கே இவள் தன்னுடைய வழியில் குறுக்கே வருவாளோ என்று அவள் மேல் இவளுக்கு ஆத்திரமாக வந்தது.

இவளை இப்படியே விட்டால் சும்மா வராது தன்னைப் பற்றி வெளியே தெரிந்தால் அவமானமாக போய்விடும் பிறகு தான் ஆசைப்பட்ட மாடலிங் செய்ய முடியாது என்று நினைத்தவள், ஒரு நாள் தன் தங்கையிடம் அன்பாக பேசினாள். அவளோ என்றும் இல்லாமல் தன் அக்கா தன்னிடம் இவ்வளவு பாசமாக பேசுகிறாள் இதில் ஏதோ விடயம் இருக்கிறது என்று தோணாமல் அன்பிற்காக அலைந்தவள் அவள் சொல்வதைக் கேட்டாள்.

அன்று இரவு தன் நண்பனின் பிறந்த நாள் பார்ட்டி என்று மெரோனியை தன் உடன் அழைத்துச் சென்றவள் அவளுடைய நண்பர்களிடம் அவளைக் கைகாட்டி “இவள எப்படியாவது ட்ரிங்ஸ் பண்ண வச்சுருங்க..” என்று கூறினாள்.

அவள் நண்பர்களும் அவள் சொன்னதைப் போலவே அவள் தங்கையிடம் வந்தவர்கள் நல்லவர்களாக அவளிடம் நடித்தார்கள். அவள் நினைத்தது போலவே அவளுடைய நண்பர்கள் அவளை ஒரு தனி அறைக்கு கூட்டிச் சென்று அவளுடைய வாயில் வலுக்கட்டாயமாக டிரிங்க்ஸை ஊற்றி விட்டார்கள். அதோடு மட்டுமா விட்டார்கள். கூடவே அவளை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தவும் செய்தார்கள். அவளுக்கு போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் கண்களில் கண்ணீர் வழிய அவர்களிடம் இருந்து போராடியவள் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.

தன் அக்காவிடம் சென்றால் தன்னை காப்பாற்றுவாள் என்று நினைத்து அவளிடம் சென்று முறையிட்டாள். ஆனால் இதற்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்டதே தன் அக்கா என்று அவளுக்கு அப்போது தெரியவில்லை.

அவளோ அனைவரின் முன்னாலும் அவளைத் தள்ளி விட்டவள் அவளை யார் என்று தெரியாதது போல நடந்து கொண்டாள். அங்கு நின்ற ஆண்களோ அவளை ஒரு மாதிரியாக பார்க்க அவளுக்கோ அந்த இடத்திலேயே செத்துவிடலாம் போன்று இருந்தது. அவள் போதையில் தள்ளாடியதை நட்டாலியா போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு தன்னுடைய அம்மாவிடம் காண்பித்தவள் அவளைப் பற்றி மேலும் அவதூறாக கூறினாள். தான் செய்த தவறை அவள் செய்ததாக கூறினாள்.

அவள் தாய் ஷீலாவோ தான் ஒரு தாய் என்பதை மறந்து அவளிடம் “தப்பு செய்யறது தான் செய்யற அதை இப்படியா தெரியிற மாதிரி செய்யறது..? என் பொண்ணுனு வெளியே சொல்லிக்கொள்ளாதே அசிங்கமா இருக்கு..” என்று கிளம்பி விட்டாள்.

மெரோனிக்கு வாழ்க்கையே வெறுத்து போனது.

இப்படியே நாட்கள் நகர நட்டாலியாவோ முடிந்த அளவிற்கு அவளை வீட்டில் இருந்தாலும் சரி வெளியே சென்றாலும் சரி தன் மூலமாகவோ அல்லது தன் நண்பர்கள் மூலமாக அவளை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. ஏதாவது ஒரு வகையில் அவளுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பாள். மெரோனிக்கும் அங்கு இருப்பதே ஏதோ நெருப்பு மேல் இருப்பதைப் போல் இருக்க ஒருநாள் ரொம்பவும் மனது உடைந்து போனவள் தன்னுடைய ரூமை பூட்டிக்கொண்டு வெளியே வரவே இல்லை.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஹேர் டேக்கர் அம்மாவோ அவளிடம் வந்து “இங்க பாருமா நீ இங்கு இருக்காத உன் மேல இவங்க யாரும் அக்கறைப்பட மாட்டாங்க.. இவங்க வாழ்க்கை முறையே வேற.. ஆனா இவங்க குடும்பத்துல நீ தப்பி பிறந்திருக்க இவங்க வாழ்க்கை உனக்கு செட் ஆகாது மா.. உனக்கு தாத்தா பாட்டி இருக்காங்க உங்க அம்மா நான் வேலைக்கு சேர்ந்த புதுசுல அவங்க கூட போன்ல பேசும்போது நான் கேட்டு இருக்கேன்.. அதுக்கப்புறம் நாள் போகப் போக உங்க அம்மா அவங்கள சுத்தமா மறந்துட்டாங்க.. நீ எப்படியாவது அவங்க கிட்ட போயிரு.. இருக்குற வாழ்க்கையையாவது நீ சந்தோஷமா வாழு.. உனக்கு அவங்க துணை எப்பவும் இருக்கும்..” என்று சொல்ல. அவளோ “என்ன எனக்கு பாட்டி தாத்தா இருக்காங்களா..?” என்று ஆச்சரியமாக அந்த அம்மாவிடம் “அவங்க எங்க இருக்காங்க..?” என்று கேட்டாள்.

“அவங்க இந்தியாவுல இருக்காங்கன்னு தெரியும்மா.. உங்க அம்மா இந்தியால இருந்துதான் வந்தாங்க.. அதனால நீ இந்தியா போனேனா அவங்கள எப்படியாவது கண்டுபிடி.. அதுக்கப்புறம் அவங்களோட சேர்ந்துரு..” என்று சொல்ல “எப்படிமா முடியும் அவ்வளவு பெரிய நாட்டுல நான் அவங்களை எப்படி தேடுவேன்..”

“அம்மாடி இந்தா இது உன்னுடைய அம்மா ரூம்ல இருந்து நான் எடுத்து வைச்சிருந்தேன்.. அவங்க ரூம கிளீன் பண்ணும் போது எனக்கு இது கிடைச்சது..” என்று ஒரு போட்டோவை அவள் கையில் கொடுத்தார்.

அதில் அவள் அம்மா தாத்தா பாட்டி இருந்தார்கள். அதை பார்த்த அவள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். ஆனாலும் தான் எப்படி இவர்களை கண்டுபிடிப்போம்..? என்ற சந்தேகம் எழுந்தது. அவள் முகத்தைப் பார்த்து கணித்தவர் “இங்க பாரு இதுல உங்க தாத்தா பாட்டியோட ஊரு பேரு இருக்கு..” என்று அவளுடைய அம்மாவின் ஒரு டைரியை எடுத்து அவள் கையில் கொடுத்தார். அதை பார்த்தவளுக்கு இன்னும் சந்தோஷம். எப்படியோ இங்கிருந்து தான் கிளம்பி விட்டால் போதும் என்று நினைத்தவள் அந்த வருடம் படிப்பு முடிந்ததும் யாருக்கும் சொல்லாமல் அங்கிருந்து இந்தியா புறப்பட்டு வந்து விட்டாள்.

ஆனால் அந்தோ பரிதாபம் சென்னை விமான நிலையத்தில் இறங்கியவள் அவளின் தாத்தா பாட்டி ஊருக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏற அந்த ஆட்டோக்காரனும் அவளை தனியாக ஒரு ஏரியாவிற்கு அழைத்துச் சென்றவன் அவளிடம் தப்பாக நடப்பதற்கு முயற்சி செய்தான்.

அவனிடமிருந்து தப்பித்தவள் தான் கொண்டு வந்திருந்த அனைத்து பொருட்களையும் அங்கேயே விட்டுவிட்டு தான் உயிர் பிழைத்தால் மட்டும் போதும் என்று அவரிடம் இருந்து தப்பித்தாள். பின்பு ஒரு வழியாக அவரிடம் இருந்து தப்பித்தவளுக்கு அப்போதுதான் நினைவே வந்தது தான் கொண்டு வந்திருந்த அனைத்து பொருட்களையும் அங்கேயே விட்டு வந்தது. அந்த இடத்திலேயே தலையில் அடித்துக் கொண்டு அழுதவள் இனி எதை நோக்கிச் செல்வது என்று புரியாமல் வீதியில் வெறித்தபடி நடந்து கொண்டிருந்தாள்.

அப்போது ஒரு மரக்கிளையில் எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு கிளி குஞ்சு கால்களில் கயிறு கட்டப்பட்டு மரத்தில் தொங்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அதன் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள் அது உயிருக்கு போராடுவதை பார்த்து அதை விடுவித்தாள்.

அதுதான் நம்ம லியா.

அன்றிலிருந்து அந்தக் கிளியை தன்னுடனே வைத்துக் கொண்டாள். இனி இங்கு தான் தன் வாழ்க்கை என்று முடிவெடுத்தவள் தனது பெயரை வெண்மதி என்று மாற்றிக் கொண்டு ஒரு ஹாஸ்டலில் தங்கிக் கொண்டாள். அந்த ஹாஸ்டல் வார்டனிடம் தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று கேட்க அவரோ அவளுடைய படிப்பை பற்றி விசாரித்தார். அவளும் தான் படித்ததை சொல்ல அவரும் அவளுடைய சர்டிபிகேட் அனைத்தையும் கேட்டார். அவளோ முகத்தை தொங்க போட்டுக் கொண்டு “இல்லை..” என்று சொல்ல,

“இப்படி சொன்னா எப்படிமா..? சர்டிபிகேட் இல்லனா உன்னால எப்படி வேலை பார்க்க முடியும்..?” என்று கேட்க அவளோ எதுவும் சொல்லாமல் அமைதி காத்தாள். “சரி ஒன்றும் பிரச்சனை இல்லை போலி சர்டிபிகேட் ஏற்பாடு பண்ணிடலாம்.. ஆனா அதுக்கு ரொம்ப செலவாகுமே..” என்று சொல்ல, தன் கழுத்தில் அணிந்திருந்த செயினை கழட்டி அவர் கையில் கொடுத்தவள் “இதை வச்சு ஏற்பாடு பண்ணுங்க..” என்று சொல்லிவிட்டாள். அவரும் அவர் சொன்னது போல ஏற்பாடு செய்ய, ஒரு வளர்ந்து வரும் கம்பெனியில் அவளுக்கு வேலை கிடைத்தது.

அதற்குப் பிறகு லியாவுடனும், அலுவலகம் செல்வதும் என்று அவளுடைய வாழ்க்கை பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவுக்கு நன்றாகவே சென்றது. இப்படியே ஒரு வருடம் கடந்திருந்தது.

ஒரு நாள் எதிர்பாராமல் நட்டாலியாவை சந்திக்க நேர்ந்தது. ஒரு விளம்பர மாடலிங் செய்வதற்காக இந்திய வந்திருந்தாள் நட்டாலியா.

வெண்மதியை பார்த்த நட்டாலியாவோ “ஓஓ எங்கிட்ட இருந்து தப்பிக்க இங்க வந்து மறைஞ்சு வாழ்றியா..” என்று நினைத்தவள் சந்தோஷமாக தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு தோழியுடன் மதி சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். அதை பார்த்த நட்டாலியாவிற்கு வெறுப்பாக இருந்தது. எப்படியாவது அவள் சந்தோஷத்தை அழிக்இ வேண்டும் என்று நினைத்தவள் சிரித்த முகமாக தன் தங்கை மெரோனியைத் தேடி அவள் அருகில் சென்றாள்.

அவளுக்கும் முதலில் அதிர்ச்சியாக இருந்தது. பின்பு அவளிடம் நட்டாலியா அன்பாக பேசவும் தன் அக்கா பல நாள் கழித்து தன்னிடம் அன்பாக பேச அதில் உருகியவள் அவளின் வஞ்சகம் தெரியாமல் அவளிடம் நன்றாகவே உரையாடினாள்.

பின்பு அவளை ஒரு பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றவள் அவளுடன் உணவருந்த தொடங்கினாள். வெண்மதியும் சந்தோஷமாகவே அவளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுது இருவருக்கும் கூல் ட்ரிங்ஸ் ஆர்டர் செய்தவள் வெண்மதி குடிக்கும் ஜூஸில் ஒரு போதை மாத்திரையை அவளுக்கு தெரியாமல் போட்டு அதை குடிக்கவும் வைத்தாள்.

“மெரோனி இங்கேயோ கொஞ்சம் வெயிட் பண்ணு எனக்கு ஒரு போன் பண்ணனும் நான் வந்துடறேன்..” என்று சொல்லிவிட்டு சற்று தொலைவிற்கு சென்றாள் நட்டாலியா.

சரி என்றாள் வெண்மதி. அவள் வரும் வரை காத்திருந்தவள், அவசர தேவை அவளுக்கு ஏற்பட அந்த இடத்திலிருந்து எழுந்தவள் பாத்ரூம் நோக்கி சென்றாள். அவ்வழியாக செல்லும் போது நட்டாலியா ஒரு வெயிட்டருடன் பேசிக் கொண்டிருப்பதை இவள் கேட்க நேர்ந்தது. அப்போது நட்டாலியா அந்த வெயிட்டருக்கு பணம் கொடுத்து “இங்க பாரு நான் சொல்ற ரூம்ல ஒரு ஆம்பளையை கூட்டிட்டு வந்து விடுற.. நான் அவளைக் கூட்டிட்டு வந்துடறேன்.. அவளுக்கு ஆல்ரெடி நான் போதை மருந்து கொடுத்துட்டேன்.. அவன் கிட்ட சொல்லி அவகிட்ட எப்படி வேணா நடந்துக்க சொல்லு.. நீ அதை எனக்கு ஒரு வீடியோவா எடுத்துக் கொடுக்குற..” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இதைக் கேட்ட வெண்மதிக்கோ உயிரே போய்விட்டது.

எப்படியாவது இந்த இடத்தில் இருந்து தப்பித்து செல்ல வேண்டும் என்று நினைத்தவளுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.

ஆனாலும் விடாமல் சட்டென ஒரு அறையினுள் நுழைந்தவள் தன்னை மறைத்துக் கொள்ள இடம் தேடினாள். அப்பொழுது அந்த அறையின் உள்ளே பாத்ரூமில் இருந்து வெளியே வந்த மித்ரன் அவள் மேல் வந்து விழுந்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!