தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 14

4.8
(24)

பேராசை – 14

காலைக் கதிரவன் தன் பொற்கரங்களை பூமியெங்கும் பரப்ப அந்த அதிகாலை வேளையில் தனது உடற் பயிற்சி அறையில் கடந்த ஒரு மணித்தியாலமாக  கடுமையாக டிரேட் மில்லில் ஓடிக் கொண்டு இருந்தான் காஷ்யபன்.

 

ஆம், அவனால் அவளைப் பார்க்கும் போது வரும் உணர்வுகளை கட்டுப் படுத்தவே இந்த அதீத பயிற்சி.

 

சும்மாவே ஆண் அழகனாக கட்டுக் கோப்பாக உடலை வைத்து இருப்பவனுக்கு இப்போது இந்த அளவுக்கு மிஞ்சிய பயிற்சியும் சேர்ந்துக் கொள்ள, அதன் விளைவாக அவனின் முகத்தில் இருந்து வழிந்த வியர்வை அவனின் கழுத்து வழியாக வழிந்து அவனின் கருப்பு ஆர்ம் கட் டி ஷர்ட்டை நனைத்து இருந்தது.

ஒரு கட்டத்தில் டிரேட் மில்லில் இருந்து இறங்கியவனோ, ஹெங்கரில் இருந்து வெண்ணிற டவலை எடுத்து தன் வியர்வையை துடைத்துக் கொண்டவன் அருகில் இருந்த பாட்டிலில் உள்ள நீரை எடுத்து அருந்தினான்.

 

இப்போது அவன் மனம் சற்று அமைதியாக இருக்க, அந்த ஜிம் அறையுடன் அமைக்கப் பட்டு இருந்த அவனின் பிரத்தியேகமான பெல்கனிக்கு வந்தவன் கண்களை மூடி ஆழ்ந்து காற்றை சுவாசித்த படி நின்று இருந்தான்.

 

இங்கோ, பக்கத்து பால்கனியில் கண்களை மூடி நின்றவள் பறவைகளின் கீச்சுச் சத்ததங்களில் கண்களை திறந்தவளுக்கு ஓர் இதமான மன நிலையே….

 

அறைக்குள் வந்தவள் மணியை பார்க்க அது 6.15 ஐக் காட்டியது.

 

வருணுக்கு ஒரு குருஞ் செய்தியை அனுப்பியவள் உடைகளை பேக் செய்து வைத்து இருந்த சூட் கேஸ் மற்றும் கேமரா சகிதம் ஹாலுக்கு வந்தாள்.

 

இந்துவும் லதாவும் சுவாமி அறையில் இருக்க, பிரகலாதன் மற்றும் ஜீவா காஃபி குடித்துக் கொண்டு இருந்தனர்.

 

அவளின் விழிகள் கஷ்யபனைத் தேடின.

 

அவன் அங்கு இல்லை என்றதும் அவள் அப்போது தான் ஓர் ஆசுவாசப் பெரு மூச்சை இழுத்து விட்டாள்.

 

ஜீவா மற்றும் பிரகலாதனுக்கு இடையில் அமர்ந்தவள் “என்ன ஒரே சைலண்ட் ஆஹ் இருக்கீங்க?” எனக் கேட்க.

 

“நீ வர்ற வரையும் தான் வெயிட்டிங் ஆழினி” என்ற பிரகலாதன் ஜீவாவிடம் கண்ணைக் காட்ட, குரலை செருமிய ஜீவாவும் “நாங்களும் உன் கூடவே ஃபாரஸ்ட் என்டரன்ஸ் வரையும் வரோம்” என அவள் தலையில் இடியை இறக்க….

 

அதிர்ந்தவள் ஹி ஹி ஹி என பற்கள் தெரிய சிரித்து வைத்தவள் “வாங்க நோ பிராப்ளம் பட் இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் பிசினெஸ் மீட்டிங் இருக்கே” என்றாள்.

 

“எங்களுக்கும் நோ பிராப்ளம் மீட்டிங் அஹ் போஸ்ட்போன் பண்ணியாச்சு மா சோ நோ வொர்ரிஸ்” என்றார் பிரகலாதன் சிரித்துக் கொண்டே….

 

அவளுக்கோ “ஐயோடா” என்று இருந்தது.

 

இவ்வளவு நாளாக சிறிய வனங்ளுக்கு கைட் ஆக அவள் போகவே படாத பாடு பட்டு தான் அனுமதி வாங்கி வீட்டை சமாளித்து செல்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும்.

 

இப்போது இந்த பெரிய வனத்திற்கு விடவா போகிறார்கள் என்று தான் வனத்தின் பெயரைக் கூறாமல் வேறு ஒரு சிறிய வனத்தின் பெயரைக் கூறி இருந்தாள்.

 

இப்போது இவர்களும் என்னை வழி அனுப்ப வந்தால் கண்டு கொள்வார்கள் அல்லவா! அவளுக்கு இந்த சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது என்றே தெரியவில்லை… அவளோ விழித்துக் கொண்டு இருக்க, சரியாக அந்நேரம் என பார்த்து ஆபத் பாந்தவனாக வருண் வந்திருந்தான்.

 

“ஹாய் அங்கிள்ஸ் குட் மார்னிங்! என்ன காலையிலே பஞ்சாயித்தா? சொல்லுங்க தீர்த்து வைக்கிறேன்” என வந்து சோஃபாவில் அமர்ந்து ஆழினியைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை உயர்த்தி என்ன என சைகையிலேயே கேட்க….

 

ஜீவா சொல்லும் முன்னரே, “வர வர இவங்க அன்புத் தொல்லை தாங்க முடியல வருண், இன்னைக்கு இவங்க ரெண்டு பேருக்கும் பிசினெஸ் மீட்டிங் இருக்கு அதை போஸ்ட்போன் பண்ணிட்டு நம்மல வழி அனுப்ப வர்றாங்களாம்” என அவள் சலித்துக் கொள்ள….

 

இப்போது அவனுக்கு புரிந்து விட்டது… ஆழினி எதற்கு தடுமாறிக் கொண்டு இருக்கின்றாள் என….

 

“எஸ் வருண் நாங்க வரோம்” என ஜீவாவும் சொல்ல….

 

“அச்சோ அங்கிள் இன்னைக்கு அப்பா உங்க ரெண்டு பேரையும் வந்து பாக்குறேன்னு சொல்லி இருந்தார் பட் இட்ஸ் ஓகே அங்கிள் நீங்க எங்க கூட வர்றீங்கனு  அப்பாகிட்ட நான் இன்போர்ம் பண்ணுறேன்” எனச் சொன்னவன் அலைபேசியை எடுத்து ஜெயகுமாருக்கு அழைக்கப் போக….

 

“இல்ல வேண்டாம் வருண் அவரை வர சொல்லு” என பிரகலாதன் சொல்ல…

 

“நோ பிராப்ளம் அங்கிள் நீங்க எங்க கூட வாங்க அப்பா கூட வேற நாள் மீட்டப் வச்சுக்கலாம்” என வருண் சொல்ல…

 

இங்கு, பற்களை கடித்த ஆழினி, “இவன் வேற ஓவர் பேர்போமன்ஸ் பண்றானே” என மனதில் அவனை வறுத்தவள்  வெளியில் வருணை முறைக்க…

 

அவனோ அவள் முறைப்பதைக் கண்டுக் கொள்ளாமல் மற்ற இருவரிடமும் பார்வையை திருப்ப….

 

ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு பிரகலாதனே “இல்ல வருண் ஜெயக்குமார் வரட்டும் நாங்களும் அவர்கிட்ட ஒரு விஷயமா பேசத் தான் இருந்தோம் பட் இப்போ அவரே வர்றார் அதுவே நல்லதா போச்சு” என்க….

 

வருண் மற்றும் ஆழினியின் இதழ்கள் ஒருங்கே புன்னகைத்துக் கொண்டன.

 

அதன் பின் இந்து, வருணுக்கும் ஆழினிக்கும் காஃபியைக் கொடுத்தவர் “இங்க பார் ஆழினி ரெண்டு நாள் தான் பிறகு வந்துறனும்” என்க…

 

“ஓகே மாதா ஜீ” என்றாள் சிரித்துக் கொண்டே….

 

“அப்புறம்” என இந்து அவரின் ஆலாபனையைத் தொடங்கும் முன் “ஸ்டாப் ஸ்டாப் மா அப்புறம் என்ன? நான் காட்டுக்குள்ள தேவையில்லாமல் எங்கேயும் போகக் கூடாது, ‘Safe’ ஆஹ் இருக்கணும் அதானே?” என்க….

 

“ம்ம்… புரிஞ்சா சரி” என்றவர் அவர்கள் குடித்து விட்டு வைத்த காஃபி கப்களை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்று விட்டார்.

 

“ஹேய்.. ஆழினி எப்படி ஆன்டி சொல்ல வந்ததை நீ சொல்ற?” எனக் கேட்க…

 

“வருண், உனக்கு தான் இது புதுசு எனக்கு இதெல்லாம் பழசு சோ டயலொக் எல்லாம் அத்துப்படி” என்க…

 

அவள் சொன்ன தோரணையில் ஜீவாவும் பிரகலாதனும் சிரித்து விட்டனர்.

“சரி அங்கள் நாங்க கிளம்புறோம் இப்போ கிளம்பினா தான் எங்களால கரெக்ட் டைம்க்கு ரீச் பண்ண முடியும்” என்க…

 

“ஹும்… என்ற பிரகலாதனோ ‘ராவணா எல்ல’ குகை உள்ள எல்லாம் போக வேண்டாம்” என்றார்.

 

அவர் அப்படி சொல்லவும் வருணும் சிரிப்பை அடக்கிக் கொண்டே ஆழினியைப் பார்த்துக் கொண்டு “ச்சே ச்சே போகவே மாட்டோம்” என சொல்ல…

“கடவுளே! இவனை இப்படியே விட்டு வச்சா உளறி மட்டிப்போம்” என நினைத்த ஆழினியோ, இருக்கையில் இருந்து எழுந்து போகத் தயாரானாள்.

 

அவசர அவசரமாக அவர்களுக்கான காலை மற்றும் மதிய உணவை தயார் செய்த இந்துவும் அதனை எடுத்துக் கொண்டு வந்து நீட்ட, வருணோ, “தேங்க்ஸ் ஆன்டி என வாங்கிக் கொண்டவனின் கண்கள் சட்டென கலங்கி விட அதை பார்த்த ஆழினியும் விழிகளை மூடித் திறந்து புன்னகைக்க, அதுவே அவனுக்கு ஏதோ ஆறுதலாக இருந்தது.

 

ஆம், ஒரு வருடத்திற்கு முன்பு தான் வருணின் அன்னை கர்பப் பை புற்றுநோயால் இறந்து இருந்தார்.

 

அவர் அன்பானவர்.

 

ஆழினியை தான் பெற்ற மகள் போல நடத்த அவளுக்கும் அவரை பிடித்து விட்டது.

 

இறுதியில் அவரின் இறப்பில் அதிகளவு பாதிக்கப் பட்டது என்னவோ ஆழினி தான்.

 

இப்போது அவள் அந்த கார்டன்சில்லோ தாவரத்தை தேடிப் போவதும் அதற்குத் தான்.

 

அவர் இறந்தது புற்று நோயினால் தான் என அறிந்தவள் அன்றிலிருந்து  புற்றுநோயைத் தடுக்கும் பல வழமுறைகள் பற்றி ஆராயத் தொடங்கியவளுக்கு பலன் பூச்சியம் தான்.

 

இருந்தும் தன் முயற்சியை கை விடாமல் முற்றிலும் குணமாக்க முடியாமல் போனாலும் ஓரளவு புற்றுநோயை கட்டுப்படுத்த இயற்கை வழி இருக்கின்றதா? என தேடியவளுக்கு கிடைத்த ஒரே ஒரு  தாவரம் தான் இந்த கார்டன்சில்லோ.

 

இப்போது அன்னை உயிரோடு இருந்து இருந்தால் தன்னையும் அன்பாக அரவணைத்து வழி அனுப்பி வைத்து இருப்பார் என நினைத்தவனை மேலும் யோசிக்க விடாமல் “என்ன இது மாமா இது ஃபாரஸ்ட்லயே நான் பட்டா போட்டு இருக்குற மாதிரி நினைச்சிட்டு இருக்கீங்களா?” என உணவு பார்சல்களைக் காட்டி அவள் கேட்க…

 

அதில் வருண் சிரித்து விட்டு “அப்போ நாம இலை குழைய தான் சாப்பிடணும் உனக்கு ஓகேனா இந்த பார்சல் அஹ் வச்சிட்டு வரேன்” என்க…

 

அதில் அவனை முறைத்தவள் “அப்போ நீ தான் எல்லா லோட் அஹ்யும் தூக்கிட்டு வரணும்” என சொல்ல…

 

“அதுக்கு தானே என்னை பலி ஆடு மாதிரி கூட்டிட்டு போற… தூக்கிட்டு வந்து தொலைக்கிறேன்” என்றான்.

 

கதைத்துக் கொண்டே காரின் அருகே வந்தவர்கள் “ஓகே போயிட்டு வரோம் அம்மா, அப்பா, மாமா என ஒவ்வொருத்தராக சொல்லிக் கொண்டு வந்தவள் அப்போது தான் கவனித்தாள் அங்கு லதா இல்லை என்பதை “எங்க மாமா அத்தையைக் காணும்?” எனக் கேட்க…

 

“லதா உனக்காக தான் நீ கவனமா போய் வரணும்னு பூஜை பண்ணிட்டு இருக்கா ஆழினி”

 

“கடவுளே! இன்னும் அவங்க இதை விடலையா? என சலித்துக் கொண்டவள் சரி இங்க நில்லுங்க சொல்லிட்டு வரேன்” என சொன்னவளைக் காக்க வைக்காமல் லதாவே  வந்து இருவருக்கும் திருநீற்றை பூசி விட்டவர் “நல்லபடியா போயிட்டு வாங்க” எனச் சொன்னார்.

 

அனைவரிடமும் விடைபெற்று வருணின் காரிலேயே இருவரும் புறப்பட்டனர்.

 

இங்கு இவர்கள் புறப்பட்டு இருக்க இது ஏதும் அறியாத காஷ்யபனோ,  மடிக் கணினியில் அவனது பெர்ஃப்யூம் விற்பனை தொடர்பாக மீட்டிங் ஒன்றில் ஆளுமையாக விவாதித்துக் கொண்டு இருந்தான்.

 

 

அவள் வருணுடன் சென்றது தெரிந்தால் என்ன செய்வான்?

 

அடுத்து அவனின் முடிவு என்னவாக இருக்கும்?

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 14”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!