காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 12 🖌️

5
(1)

சூரியன் பொற்கதிர்களை தன் உறக்கத்தை கெடுத்துவிட்டார்கள் என்ற கோபத்தில் பூமியில் வீசிக் கொண்டிருக்க, தலைமுடியை வெட்டி க்ளீன் சேவ் செய்து தலைவாரி நேர்த்தியான வெண்மையான சேர்ட் ஒன்றை தன் கருநீல நிற கால்சட்டையினுள் டக் இன் செய்த சத்யா சூரிய உதயத்தைப் பார்த்துக் கொண்டே கோபியை அருந்திக் கொணடிருந்தான். அவன் பின்னே வந்து நின்றான் விநோத்.

அவன் கோலத்தைப் பார்த்தவன் “ராம்… இப்போ இப்படி ட்ரஸ் பண்ணிட்டு எங்க போக போற?” எனக் கேட்டான் எதுவும் புரியாதவனாக.

ஆனால் அவன் தன் வேலையை சரியாக செய்தவாறே “வேற எங்க? கொலேஜ்க்கு தான்.” என்றான் இயல்பாக.

இதில் இன்னமும் அதிர்ச்சியடைந்த விநோத் “என்னடா பேசுற? கோலேஜ்கா?” என்று கேட்டான் கண்கள் விரிய.

ஆனால் சம்பந்தப்பட்டவனிடம் வித்தியசமாக எந்த உணர்ச்சிகளும் புலப்படவில்லை. அதே தொனியில் “இன்னைக்கு எக்ஸேம்ல?” எனக் கேட்டான் சாதாரணமாகவே.

“ஆமாம்.” என சாதாரணமாக பார்க்க

“அதுதான். எழுதப் போறேன்.” என்றான் அவனைப் போலவே சாதாரணமாக.

“ஏய்… என்னடா சொல்ற? எக்ஸேம் எழுதப் போறியா? அதுக்கு நீ முதல்ல படிச்சியா?” என்று நண்பனை நினைத்து கவலையோடு கேட்டான் விநோத்.

“நல்ல மார்க்ஸ் எடுக்க படிக்கனும்னு அவசியமில்லை. படிச்சி தாரத சரியா மூளையில பதிஞ்சி வெச்சிருந்தாலே போதும்.” என்றவனின் பேச்சைக் கேட்ட அவன் மற்ற நண்பன் விக்கி

“ஏதோ சொல்றடா. ஆனா நீ இப்போ இந்த நிலமையில எக்ஸேம் எழுதுறது சரியில்லன்னு எனக்கு தோனுது.” என்றான் வாசுதேவ ராமின் மரணத்தை பற்றி எண்ணியவாறே.

“அப்பா நான் எக்ஸேம் எழுதி பாஸ் ஆகனும்னு ரொம்ப ஆசப்பட்டாரு. அவருக்காக தான் எழுத போறேன். சோ… நான் சொன்னா சொன்னதுதான்.” என பின்னால் திரும்பி அவனை அழுத்தமாக பார்த்தவன் கீழே சென்றான்.

அவன் பைக் அரை மணித்தியாலத்தில் கொலேஜை அடைந்தது. அவன் நேராகப் பாரத்தவாறே கல்லூரி வளாகத்தில் நுழைய மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்குமிடையே அமைதியின்மை ஏற்பட அவை எவற்றையும் கவனத்தில் கொள்ளாது பரீட்சை மண்டபத்தினுள் நுழைந்தான் சத்யா.

இவன் பரீட்சை மண்டபத்தினுள் நுழைந்ததை பார்த்துவிட்டு அனைவரும் சற்று அதிர்ச்சியாகித்தான் போனார்கள். உள்ளே நுழைந்தவன் தனது அடையாள அட்டையை கொடுத்தான் மண்டப மேற்பார்வையாளரிடம். அவர் அதனை சோதித்துப் பார்த்து பரீட்சை மண்டப நுழைவுப் பத்திரத்தை எடுத்து அவன் கையில் கொடுத்தார். அதில் தனது கையெழுத்தை இட்டவன் அங்கிருந்த பேனாவை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

உள்ளே நுழைந்ததும் அவனை சோதித்த இன்னொரு மேற்பார்வையாளர் அவனை அதிர்ச்சி மாறாத முகத்துடனேயே உள்ளே அனுப்பினார். உள்ளே ஏற்கனவே பரீட்சைக்காக தயாராகிக் கொண்டிருந்த மாணவ மாணவிகளுக்குத்தான் சத்யாவைப் பார்த்ததும் படித்தது அனைத்தும் அதிர்ச்சியோடு அதிர்ச்சியாக கரைந்து போய்விட்டது.

காவ்யா சின்சியராக படித்துக் கொண்டிருர்க்க காவ்யாவை அவளது நண்பி நித்யா “ஸ்… ஸ்…” என சைகை காட்டி அழைத்தாள்.

“என்னடி உன் பிரச்சினை?” என்று தொல்லை செய்யும் நண்பியைக் கேட்டாள் எரிச்சலாக.

“உன் பின்னால பாரு.” என்று கண்களால் நித்யா செய்கை செய்ய அவள் பின்னால் திரும்பி எதேர்ச்சையாக நோக்கினாள். அவளுக்குமே அதிர்ச்சி பேரிடியாய் தலையில் விழுந்துவிட்டது.

“சத்யா…” என அனுமதியே இல்லாது அவன் பெயர் அவள் வாயில் நுழைய அவன் மேசையையே வெறித்துப் பார்த்தவாறு தான் கற்ற பாடங்களை மீட்டல் செய்து கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் வினாத்தாள் வழங்கப்பட கண்ணை ஒரு தரம் மூடித் திறந்தவன் கண்களுக்குள் அவற் தந்தை கூறிய “நீ படிச்சி ஒரு நல்ல டொக்டரா வரணும்டா. அதுதான் என் ஆசை. என் கனவு. லட்சியம் எல்லாமே.” என்ற வார்த்தைகள் எதிரொலிக்க வினாப் பத்திரத்தை விடைகளால் நிரப்ப ஆரம்பித்தான்.

வினாப்பத்திரத்தை பார்த்தவன், ஓர் கர்வமான புன்னகையை சிந்திவிட்டு எடிஸ்னல் பேப்பர் கூட வாங்காது எழுதத் தொடங்கினான.

மற்ற அனைத்து மாணவர்களும் தலையை விடைக்காக பிய்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், ஏன்? காவ்யா கூட விடை தெரியாது “இந்த டைம் பெய்ல் தான். இவ்ளோ டப்பான பேப்பர என் வாழ்க்கையில பார்த்ததே இல்லடா சாமி. கடவுளே ராமா காப்பாத்து என்ன. ஸ்ரீ ராம ஜெயம ஆயிரத்தி நூறு தடவை எழுதிட்டு வந்திஉக்கலாம.” என தன் கடவுள் ராமரை வேண்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் அசால்டாக அனைத்து குவெஸ்ஸனுக்கும் ஆன்ஸர் எழுதி முடித்தவன், மேற்பார்வையாளரிடம் பேப்பரை நீட்டினான்.

அவரோ சந்தேகத்தில் “ராம்… பேப்பர் அவ்ளோ ஈஸியாவா இருக்கு?’ எனக் கேட்டார் வாயைப் பிளந்து.

“இத விட ஈஸியான பேப்பர நான் என் லைப்லயே எழுதினது இல்லை சேர்.” எனக் கூற அனைவருக்கும் பேரிடி.

“பிஸிக்ஸ் தானே? இன்னம் கொஞ்சம் நேரம் இருந்திருந்தா அத்தனை குவெஸ்ஸனையும் எழுதிருப்பேன். ஆனால் எனக்கு நிறைய வேலை இருக்கு. சோ எப்படியும் 75 வார மாதிரித்தான் பேப்பர் எழுதிருக்கேன். A வந்துடும்.” என கூறிவிட்டு வெளியே செல்ல காவ்யாவுக்கு ஹார்ட் அட்டேக், கோலெஸ்ட்ரோல், ப்லட் ப்ரஸ்ஸர், ப்லட் சுகர் என அத்தனை நோயுமே ஒரே நேரத்தில் வந்துவிடும் போல இருந்தது.

“இவன் உண்மைதான் சொல்றானா? இவன் விளையாட்டாதானே எப்போவுமே இருப்பான். அதே நேரம் இந்த 5 நாளும் அவன் படிச்சிருக்க சான்ஸே இல்லையே. தலைய பிச்சிட்டு இரவு முழுக்க படிச்ச எனக்கே எதுக்கும் ஆன்ஸர் தெரியல. ஆனால் இப்படி சொல்லிட்டு போறான். கடவுளே இது ரொம்ப இம்போர்டன்ட்டான எக்ஸேம். இதுல மட்டும் பாஸ் ஆகலன்னா வாசு சேர் கனவு ஏதுவுமே நடக்காம போய்டும். அவனை ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. ப்ளீஸ்… சத்யாவ எப்படியாவது பாஸ் பண்ண வெச்சிடு கடவுளே.” என காவ்யா முனுமுனுத்தவாறே எக்ஸேம் எழுத ஆரம்பித்தாள்.

பௌதீக விஞ்ஞானத் துறையில் கற்கும் முதல் வருட மாணவர்களுக்கு பரீட்சை நடந்து முடிந்து அனைவரும் வெளியாகிக் கொண்டிருந்தனர். ஆதி பௌதீகவியலில் புலி என்பதால் பரீட்சையை ஞசுலபமாக எழுதி முடித்துவிட்டு வெளியே வந்தவன், சத்யாவையும் அவனது தோழர்களையும் காணவும் அவர்களைத் தேடி ஓடினான். சத்யாவிடம் ஓடிவந்து அவனை கட்டி அணைத்தவன்,

“ஏதாவது க்ளூ கிடைச்சதா?” எனக் கேட்டான் எதிர்பார்ப்புடன்.

“ஆமாம்.” எனத் தலையாட்டினான் சத்யா.

“என்ன க்ளூ?” என அவன் ஆர்வமாக கேட்க சத்யா கூற வர முன்னர் கேட்டது ஒரு பெண்ணின் குரல்.

“ஹெல்ப் யாராவது காப்பாத்துங்க… ப்ளீஸ் என்னைக் காப்பாத்துங்க.” எனக் கத்த அக் குரலின் தாக்கத்தில் கல்லூரி வளாகமே அமைதிக் கடலில் மூழ்கியது.

அந்த இளைஞியின் குரல் மாத்திரமே எங்கும் எதிரொலித்தது. தன் வலது காதால் நுண்ணிப்பாக அக் குரலை உள்வாங்கியவனின் கைகள் தானாகவே சேர்ட்டின் ஸ்லீவ்களை மடித்தது.

அவன் ஓரக் கண்கள் நுழைவாயிலின் முன்பாக ஒரு பெண்ணிடம் “அசிட் அடிப்பேன்.” என மிரட்டியவனைப் பார்த்தது.

அந்தக் காட்சியைப் பார்த்த அவன் ரத்தம் சூடேறி கண்கள் இரண்டும் சிவந்து நாடி, நாளம் என அத்தனைக்குள்ளும் அவனை கண்டம் துண்டமாக வெட்டிப் போடுமளவு வெறி ஏறியது. கைகளை முறுக்கியவன், தடுக்க நினைக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரையும் அனல் வீசும் பார்வையால் சுட்டெரித்தான்.

கல்லூரி வளாகம் முழுக்க மாணவர்கள் மாத்திரமல்லாது ப்ரொபஸர்களும் வளைத்து நின்று வேடிக்கை பார்க்க “இவனுக்கு எல்லாம் நல்ல சாவு வருமா?” என வித்யா பாரதி மிஸ் கடுகடுத்தார் உள்ளுக்குள்.

“இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க ஆளே இல்லையா? அந்த பொண்ண காப்பாத்தனும்பா. எல்லாரும் பேசாம பாத்துட்டு இருக்காங்க.” என மலர்விழி உள்ளுக்குள் துடித்தாலும் அவளாலும் எதுவும் செய்ய முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அவளால் மாத்திரமல்ல. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

“இந்த கொலேஜ்ல ஒரு ஆம்பளைக்கும் இத தட்டிக் கேட்குற தைரியம் இல்லையா?” என பரீட்சை மேற்பார்வை முடித்துவிட்டு வந்த ப்ரியா மிஸ் கர்த்தரை வேண்டிக் கொண்டார்.

காவ்யா பரீட்சை முடித்து வெளியே வர அனைவரும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர் வெளியே. அவளும் என்னவென்று பார்த்தாள். அவளுக்கும் மலரின் குமுறல்கள் கேட்டதும் “அவள காப்பாத்த ஒருத்தன் இருக்கான் மலர்.” என்றாள் கர்வமாக.

“யாரு?” என கேட்டனர் அனைவரும் ஒன்றாக.

“ராம்… சத்ய ராம்.” என்று புருவம் உயர்த்தி சொல்லிட அனைத்துப் பெண்களும் சத்யாவைத்தான்  பார்த்தனர்.

அந்தப் பெண் ப்ரத்யா “யாராவது காப்பாத்துங்களேன். ப்ளீஸ்.” என கெஞ்சிக் கொண்டிருந்தாள் அனைவரிடத்திலும்.

“இதோ இரு வந்துர்ரேன்.” என ஆதியிடம் கூறிய சத்யா தன் அழுத்தமான காலடிகளை வைத்து ப்ரத்யாவிடம் நடந்து சென்றான் சத்யா.

“அவன்தான் மலர். ஆம்பளை.” என காவ்யா சத்யாவைப் பார்த்து பெருமையாக கூற மலர்விழியைத் தொடர்ந்து அனைவரிடமும் ஒருவிதமான நம்பிக்கை எழுந்தது.

“வந்துட்டான்டா தலைவா. இனி அந்த பொண்ண பத்தி கவலைப்படத் தேவையில்லை. அந்த பையன பத்திதான் கவலைப்படனும்.” என ஒருத்தன் விசிலடித்தான்.

“ராம் சும்மாவே கண்ணுல விரல விட்டு ஆட்டுவான். இதுல இவன் பண்ணது சும்மா விசயமா? இன்னைக்கு அவனுக்கு மார டம் டம் மஞ்சர டம் டம்தான்.” எனக் இன்னொருத்தன் கூறினானீ. அனைவரும் நிம்மதியில் நடப்பதை கூர்ந்து கவனித்தனர்.

ஏசிட்டை அடிக்க வந்த ஆர். ஜேவின் தம்பி ப்ரஸாந்திடம் அந்த பெண் ப்ரத்யா “தயவு செஞ்சு என்னை விட்டுடு.” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

அவன் பிரத்யாவின் கையைப் பிடித்து ஏசிட்டை வைத்துக்கொண்டு “லவ் பண்ண மாட்டேன்னு சொன்ன? இப்போ அசிட் அடிச்சிடவா? இனி எவன் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறான்னு பாக்குறேன்டி…” என பல்லைக் கடித்து மிரட்டிக் கொண்டிருந்தான்.

“ப்ளீஸ்… ப்ளீஸ்… என்ன விட்டுடுங்க.” என எவ்வளவு ப்ரத்யா அழுதும் கெஞ்சியும் அவளை விடுவதாக இல்லை அவன்.

இருவருக்கும் நடுவில் வந்து நின்றான் சத்யா. தலையை வலது பக்கம் திருப்பி “டைம் என்ன?” எனக் கேட்டான் ப்ரத்யாவை ஆழ்ந்து நோக்கியவாறே.

அவன் கண்களின் வெள்ளை முழியிலிருந்த நரம்புகள் கோபத்தில் வெடித்துச் சிவந்து அவன் பழுப்பு நிற முழியினூடாக ஊடுருவிச் சென்றதை அவளால் நன்றாகவே காண முடிந்தது.

அவள் பயத்தில் வார்த்தை வராது “டெ… டெ…” என நா திக்க உலரிக் கொண்டிருந்தாள். அவள் கையைப் பிடித்து கட்டியிருந்த கைக் கடிகாரத்தை பார்த்த சத்யாவின் கை அனலாய் கொதித்துக் கொண்டிருந்தது.

அவளை நோக்கியவன் “சரி… கிளம்பு.” என கண்ணசைவால் காட்டினான்.

பின்னால் திரும்பியவன் “ஹைய்யோ… டைம் டென் தேர்ட்டி ஆகிடுச்சா? இன்னமுமே ப்ரேக் பாஸ்ட் சாப்பிடலையே மச்சான்.” எனக் கூறியவாறு அவனது நண்பர்கள் விநோத்தையும் விக்கி யாதவையும் அழைத்தான்.

“டேய்… விக்கி, வினோ , யாது என்னடா பாத்துட்டு நிக்கிறீங்க? சோத்து மூட்டைங்களா. துன்னுறதுக்குன்னா பந்தியில முதல் ஆளா நிப்பீங்களேடா? இப்போ என்ன? சீக்கிரம் வாங்கடா?” என தன்னை இயல்பாக்கிக் கொண்டு அழைத்தவன்

திரும்பவும் நகராமல் அதே இடத்தில் பயந்து நடுங்கி நின்ற ப்ரத்யாவை நோக்க இலகுவாக மாறி இருந்த குரல் மீண்டும் குரல் தடித்தது. தன் கைகளை பின்னால் சொடக்கிட்டு “உன்னதான் போக சொன்னேன்ல? எதுக்காக நிக்கிற? இங்ங வா.” என அழைத்தான் சத்யா.

அவள் பயந்தவாறே முன்னோக்கி வர அவளை விடவில்லை அந்த ப்ரஸாந்த். அவள் கழுத்தைப் பிடித்து நெறித்தவாறே “டேய்… *** யாருடா நீ? உனக்கு என்ன தைரியமிருந்தா இவளையே காப்பாத்தனும்னு வருவ?” என கேட்டவாறே ப்ரத்யாவின் கழுத்தை நெறித்தான்.

மெதுவாக அவனை நெருங்கினான் சத்யா. உடனே சத்யாவின் சட்டை கொலரை பிடித்தவன், “உன்னை கொன்னு போட்டா இனிமேல் உன்னப் போல எவனும் கேட்க வரமாட்டான்ல?” எனக் கூறி கோபத்தை வெளிப்படுத்த சத்யா பொறுமையை இழுத்து பிடித்து வைத்து கையை முறுக்கி ப்ரத்யாவைப் பார்த்து “வாஆஆஆ…” என்றான் பல்லைக் கடித்து.

“நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு ஓவரா பண்ற?” என சத்யாவை அடிக்க கை ஓங்க… கூட்டத்தில் நின்ற ஒருத்தன்

“டேய் டேய் டேய் மச்சான். இங்க தரமான சீன் நடக்கப் போகுதுடா. சீக்கிரமா பேஸ் புக்ல லைவ் ஒன் பண்ணு.” என தனது நண்பனிடம் கூற அவன் இவற்றை தன் முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தான்.

அவன் சத்யாவை அடிக்க கை ஓங்கிய அடுத்த கனம் பல் உடைந்து இரத்தம் கசிய நிலத்தில் கிடந்திருந்தான். முதலில் என்ன நடந்து என்று யாருக்குமே புரிரவில்லை. சத்யாதான் அடித்தான் என்று புரியவே சில நொடிகள் எடுத்தன.

அவன் கீழே சுருண்டு கிடக்க முதலில் மலர்விழி கை தட்டினார். “அடிடா… அப்படித்தான்.” என்றிட அதனைத் தொடர்ந்து அந்த கல்லூரியே சேர்ந்து கை தட்டி அவனுக்கு ஆதரவளித்தது.

வாய் முழுவதும் ரத்தம் கொட்ட கொட்ட ஒருத்தனுக்கு கோல் செய்து “டேய். என்னையே ஒருத்தன் அடிச்சிட்டான்டா. அவன் போகும் போது பிணமாதான் போகணும். சீக்கிரமா விஜயேந்திர சென்ட்ரல் கொலேஜ்கு வாங்கடா.” எனக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டு மூக்கை புறங் கையால் துடைத்தவன்

“டேய்… நான் யாருன்னு தெரியாம என் மேலயே கை வெச்சிட்டல்ல? நான் யாருன்னு தெரியுமா உனக்கு? என் அப்பா யாருன்னு தெரியுமா உனக்கு?” எனக் கத்த

“ஸ்ஸ்ஸ்…” என காதைத் தேய்த்துக் கொண்ட சத்யா அவன் பிடித்திருந்த தன் சட்டையை கைகளால் தூசு தட்டியவன் அவனிடம் குனிந்து முகம் சிவந்த நிலையில்

“இந்த… நான் யாருன்னு தெரியுமா டயலொக் எல்லாம் ராம் சரன் படத்துலையே கேட்டுருக்கேன். நீ யாரா இருந்தா எனக்கு என்ன? உங்க அப்பன் எவ்ளோ பெரிய அப்பாட் டக்கரா இருந்தா எனக்கு என்னடா?” என கர்ச்சித்தான் வேட்டையை துவங்கிய சிங்கமாக.

“If an object X exerts a force on object Y, than object Y must exerts a force of equal magnitude and opposite direction back on object X.” என்றான் காலையில் படித்த பாடம் ஞாபகம் வர.

இதைக் கேட்ட காவ்யா “என்ன இவன் இப்படி படிச்சிருக்கான்? அதிசயமா இருக்கே.” என யோசித்துக் கொண்டாள்.

“என்ன இவன் சயன்டிஸ்ட் மாதிரி பேசுறான்னு டவ்ட்டா இருக்கா? அது வேற ஒன்னுமில்லை. எக்ஸேம்ல எழுதினது ஞாபகம் வந்துச்சு அதுதான் அவுத்து விட்டேன்.” என அனைவரையும் பார்த்து கேலியான முகபாவனையுடன் கூறியவன் முகம் மீண்டும் ப்ரஸாந்தைப் பார்க்க நோடியிலேயே இறுக்கமானது.

“அதாவது தமிழ்ல சோர்ட் என்ட் ஸ்வீட்டா சொல்லனும்னா ஒரு தாக்கத்திற்கு சமனானதும் எதிரானதுமான மறுதாக்கம் உண்டு. இது நியூட்டனோட தேர்ட் லோ. பட் என்னோட லோ என்ன தெரியுமா? ஒரு தாக்கத்துக்கு எதிரான தாக்கம் இருக்கு. ஆனால் சமனான தாக்கம் இல்லவே இல்லை. அத் தாக்கத்தோட டபுல் மடங்கு அதிகமான எதிர்த்தாக்கம் உண்டு. அது எதுவா இருந்தாலும் சரி. அன்பு, பாசம் காதல், நேசம், துரோகம், கோபம், பகை… எதுவா இருந்தாலும் இந்த சத்யாக்கிட்ட மறுதாக்கம் இருக்கும். அதே சமயம் அந்த மறுதாக்கம் தாங்க முடியாத அளவு அதிகமாகவும் டீப்பாகவும் இருக்கும்.” என பல்லைக் கடிதது வார்த்தைகளை துப்பியவன்

“இது இந்த சத்யாவோட லோ. இதுல நான் உனக்கு சீனியர் வேற. என் மேலையே கை வெச்சிட்டியா? இதுக்கு உனக்கு பனிஸ்மென்ட் கொடுக்க வேணாம்? நீ பண்ண இந்த கேவலமான விசயத்துக்கு என்ன தண்டனை தரலாம்?” என கேட்டவாறே அருகிலிருந்த இரும்பு ரோடை இழுத்து எடுத்து அதன் கூர்மையான பகுதியை அழுத்தமான பார்வையுடன் பார்த்தவாறே பிரத்யாவின் பக்கம் திரும்பி

“சரி. நீயே சொல்லு. இவன நீ என்ன பண்ணலாம்னு நினைக்கிற? என் மேலயே கை வெக்கிறான்ல? உன் மேலயும் கை வெச்சான்ல?” என்று அவளை ஆழ நோக்கி கேட்டதும் அவள் நடு நடுங்கிப் போனாள். அவள் நிலையை அறிந்த சத்யா காவ்யாவை அழைத்தான்.

“காவ்யா… இங்க வா.” என்றதும் அவளுக்கும் அதிர்ச்சி ப்ளஸ் சந்தோசம். இரண்டு கலந்து உணர்வுகள் தோன்றின.

உடனே அவனிடம் செல்ல “இவளை உள்ள கூட்டிப் போ.” என்று ப்ரத்யாவைக் காட்டானான்.

“ப்ரத்யா இங்க வா.” என அவளை அழைத்துச் சென்றாள் காவ்யா. ப்ரத்யா மலர்விழியைப் பார்த்தவுடன் கட்டிப் பிடித்துக் கொண்டு அழ அவளும் அவளுக்கு சமாதானம் சொன்னாள்.

“சத்யா எல்லாத்துலையும் பாத்துப்பான். நீ கவலைப்படாத.” எனத் தேற்றினார்.

“வட் அ க்ளைமட்?” என நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்து எறிந்தூ பெருமூச்சு விட்டவன்

“இப்போ நானே சொல்றேன். என் கண் முன்னாடி நிக்காத ஓடிப் போய்டு. என்ட் இன்னொரு விசயம். இப்படி பொண்ணுங்க பின்னாடி சுத்துறது, அசிட் அடிச்சிடுவேன்னு மிரட்டுறது, இதெல்லாம் வெச்சிக்கிட்ட தொலைச்சிடுவேன்.” என அவனைப் பார்த்து கூறிட அவன் சற்றும் பயமில்லாது தெனாவெட்டாக

“ஆமாம்டா பண்ணுவேன். உன்னால என்ன பண்ண முடியும்?’ எனக் கேட்க பொறுமை எல்லை கடந்தது சத்யாவுக்கு.

“வேணாம். நீ சின்னப் பையன். நான் ஒரு தடவைதான் சொல்லுவேன். அடுத்த தடவை சொல்ல மாட்டேன் செஞ்சிடுவேன்.” என அவனை எழுப்பி அவனது சட்டையை சரி செய்து கூறினான் சத்யா.

ஆனாலும் சத்யாவைப் பற்றி அறியாதவன், அவன் கழுத்தை பிடித்து “நீ என்ன பெரிய இவனா? அப்படித்தான்டா பண்ணுவேன். உன்னால என்ன பண்ண முடியும்?” எனக் கேட்க கண்களை மூடி பல்லைக் கடித்தவன் கோபத்தை அடக்கி வைத்து

“நான் தான் சொன்னேனே. எல்லார்கிட்டயும் ஒரு தடவைதான் சொல்லுவேன். ஆனால் உன்கிட்ட ரெண்டாவது தடவையா சொல்றேன். நான் கண்ண மூடி திறக்குறதுக்குள்ள நீ இங்க இருக்கக் கூடாது. இல்லை…” என இழுக்க

“இல்லன்னா என்னடா பண்ணுவ? என்னப் பண்ணுவ?” என அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டவாறு

“என்ன சீன் காட்ற? நான் என்ன வேணா பண்ணுவேன்டா. உன்னால ஒன்னும் பண்ண முடியாது.”  என்றான் திமிராக.

ஆண் மாணவர்கள் “என்ன ஆடு காசாப்பு கடையில வந்து தானாவே வெட்டுன்னு சொல்லி தலைய நீட்டுது? இனி ஆடு கதை ஸ்வாஹா தான்.” என தமக்குள்ளே பேசிக் கொண்டனர்.

அவன் கைகள் முறுக்கிக் கொண்டு “நான் மூனாவதா கூட சான்ஸ் தரேன் ஓடிப் போய்டு.” என்றான் பொங்கி வந்து கோபத்தை அடக்கியவாறு.

“என்னடா நீ பெரிய இவனாட்டம் பேசிட்டு இருக்குற? நீ எனக்கு சான்ஸ் தரியா? நான் உனக்கு சான்ஸ் தரேன். உயிரு மேல ஆசை இருந்தா அவளை என்கிட்ட ஒப்படைச்சிட்டு நீ ஓடிப் போய்டு. இன்னொரு விசயம் சொல்றேன். இந்த பொண்ணு மட்டும் இல்ல. இங்க இருக்குற எல்லாப் பொண்ணுங்க கிட்டயும் இப்படிதான் நடந்துப்பேன். கைய வெப்பேன். காலை வெப்பேன்… ஏன்… இதுக்கு மேலயும் பச்சையா கூட பேசுவேன். உன்னால ஒன்னும்… கிழிக்க முடியாதுடா.” என சிரித்தான். இதனைப் பார்த்த அங்கிருந்த பெண்கள் அத்தனை பேரின் இரத்தமும் கொதித்தெழுந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டு இருந்தனர்.

சத்யாவால் இத்தனை பெண்களையும் அவமானப்படுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கோபம் மெது மெதுவாக உச்ச கட்டத்தை அடையத் தொடங்கியது. “உன் கண்ணு முன்னாடியே இவ மூஞ்சில அசிட் ஊத்திக் காட்டுறேன்டா. உன்னால எத கிழிக்க முடியுமோ கிழிச்சிக்கோ.” என ப்ரத்யாவின் கையைப் பிடித்து இழுத்து வந்தான்.

“அவளை விடுடா. அவளை விடு.” என அவன் கையில் மலர்விழி அடித்துக் கொண்டே

“சத்யா இருக்கும் போது உன்னால முடிஞ்சா அசிட் அடிடா பாக்கலாம்.” என்றாள் கத்தியவாறே.

“என்னடி… அவனுக்கு சப்போர்ட் பண்ற… நீ என்ன அவனுக்கு ***” என்று கேவலமாக பேச சத்யாவுக்குள் தீ கொழுந்து விட்டெரிய கையிலிருந்த அயன் ரோடை இறுக்கிப் பிடித்து பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான்.

அடுத்த நிமிடம் அவன் வலியில் துடித்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் சத்யா அடித்த அசிட்டின் தாக்கம் முகம் கருகி வெந்து போய்விட்டது. அவன் வலியில் துடி துடிக்க, இதைப் பார்த்த ப்ரத்யா அதிர்ச்சியில் “அம்மாஆஆஆ…” எனக் கத்த மொத்த கல்லூரியும் நடுநடுங்கிப் போய்விட்டது.

அவன் போன் செய்து அழைத்த பத்து அடியாட்களுடன் சரியாக உள்ளே நுழைய “ஏய்… எங்க ப்ரண்டையே அடிப்பியாடா நீ? உன்னை…” என அடிக்க வந்த ஒருத்தன், சத்யா அயன் ரோடை வெத்து தலையில் அடித்ததில் சுருண்டு போய் விழுந்துவிட்டான் கீழே. அவன் இரத்தத் துளிகள் சத்யாவின் அனல் கக்கும் முகத்தை இன்னும் பயங்கரமாக மாற்ற, அடுத்து ஒருவன் வந்து கத்தியால் குத்த முயல அவனைப் பிடித்து அவன் கத்தியாலேயே தாக்கிவிட்டான். இன்னொருத்தன் தாக்க வர, அவனைத் தூக்கி எறிந்ததில், தொப்பென்று போய் ஆதி அமர்ந்திருந்த குளத்தில் போய் விழுந்து எழுந்தான்.

அடுத்த ஒருத்தனை பரிசோதனைக்காக வளர்க்கப்பட்டிருந்த “விசப் படர்க் கொடி.” எனப்படும் ஒருவகை அரிப்பை உண்டாக்கும் தன்மை கொண்ட செடியொன்றைக் கொண்டு நன்றாக செய்து விட்டிருந்தான்.

வலியில் துடித்த அந்த பத்துப் பேரும் பயத்தின் உச்சத்திற்கே போய் “அண்ணா… அடிக்காதண்னா… வலிக்கிதுன்னா…” எனக் கத்தியவாறே வரிசையில் கையைக் கட்டியவாறு முட்டி போட்டு அமர்ந்து விட்டனர்.

சத்யா வேற யாரையுமே கவனிக்கவில்லை. கீழே அசிட் அடிக்கப்பட்டு சுருண்டு கிடந்தனின் வயிற்றில் எட்டி உதைத்தவன், “மாதா, பிதா, குரு, தெய்வம்னு சொல்லுவாங்க… அந்த குருவ அசிங்கப்படுத்துவியா?” என மலர்விழியைப் பார்த்தவாறே கர்ச்சிக்க, அவன்

“இல்லை… இல்லை…” எனக் காட்டுக் கத்து கத்திக் கொண்டிருந்தான் அவன்.

“இனிமேல் பொண்ணுங்க மேல கைய வெப்ப?” என அவன் கையைப் பிடித்து உடைத்தவாறே தீப் பார்வையை வீசி அவனைப் பஸ்பமாக்க, வலி தாங்க முடியாமல் அந்நிலையிலும் கூட

“இல்லை… பண்ண மாட்டேன்.” என உயிர்போக கத்திக் கொண்டிருந்தான். சத்யாவுக்கு இன்னும் கோபம் அடங்காததாதல் அந்த அயன் ரோடை வைத்து அவன் உடம்பில் ஓங்கி அடிக்க ரத்தம் சீறி அடித்தது சத்யாவின் உடம்பில்தான்.

கேமராவைப் பிடித்திருந்தன் சிலைபோல வாயைப் பிளந்து கொண்டு நிற்க, அவன் கால்கள் நடுக்கம் கொள்ள பயத்தில் அவன் அங்கேயே மயக்க நிலைக்கு போய் விட்டான்.

“மச்சான், நாமதான் லைவ் போர்ரோம்னு தெரிஞ்சா நம்ம நிலையும் இதுதானாடா?” என மற்றையவன் கேட்க

“அடச் சீ பயந்தாங்கொள்ளி.” என திட்டினான் அவன் நண்பன். அவன் முகம் வெந்து போன நிலையில் உடம்பு முழுவதும் ரத்தம் தசைகளை பிய்த்துக் கொண்டு வெளியேற துடிதுடிக்க கண்களில் பயத்தோடு அனலைக் கக்கிக் கொண்டிருந்த சத்யாவினை நோக்கி

“என்ன விட்டுடு ப்ளீஸ்.” என கெஞ்சினான். அனைவரும் சத்யாவின் இப் புது ரூபத்தைக் கண்டு

“என்னடி இப்படி பண்ணிட்டான்?”

“ராம் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லப்பா.”

“பொண்ணுங்ககிட்ட வம்பு வெச்சிக்கிட்டா இப்படிதான்.”

“அவனுக்கு நல்லா தேவை. அந்த பொண்ண போட்டு எவ்ளோ கஸ்டப்பட்டுத்தினான்.”

“இவனுக்கு எல்லாம் இது பத்தாது.” என ஆளுக்கு ஆள் சாதகமாக கமெண்ட்ஸ் அடிக்க சத்யாவின் இக் கொடூர ரூபத்தைப் பார்த்துப் பயந்ததோ காவ்யாதான்.

“யார்ரா இவன்? சத்யா தானா? இல்லை வேற யாராவதா? கொலை பண்ற ரேஞ்ச்க்கு போய்ட்டான். பாட்டி ஏற்கனவே அவனை ரொம்ப மோசமா கழுவி கழுவி ஊத்தும். இதுக்குள்ள இது வேறயா? சத்யா… இந்த ஜென்மத்துல உனக்கும் எனக்கும் கல்யாணம்னு ஒன்னே நடக்காதுடா.” என்றவாறு கண் முழி பிதுங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆதி அங்கிருந்த தாமரை குளத்தின் அருகில் அமர்ந்து பொப் கோர்ன் சாப்பிட்டவாறே ஏதோ கிரிக்கெட் மெட்ச் பார்ப்பது போல விசில் அடித்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடன் சில பேர் வந்து அமர்ந்து கொண்டனர். சத்யாவின் நண்பர்கள் மூவரும் வந்து

“டேய்… என்னடா பண்ணிட்ட? நாசமாப் போச்சு. இவன் முகத்துல ஏன்டா அசிட் அடிச்ச? இப்போ இவன் நிலமை? எதுக்காக இப்படி பண்ணடா? அறிவில்லை உனக்கு? போலிஸ் கேஸ் ஆச்சுன்னா என்னடா பண்ணுவ? நீ வர வர ரொம்ப மோசமா போற ராம். இது நல்லதுக்கில்லை. இப்படி அசிட் அடிச்சிட்ட, அவன் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டியேடா. அவங்க அப்பன் சும்மா விட்டுடுவான்னு நினைக்கிறியா? என்னதான் தப்புப் பண்ணாலும் அதுக்கு இப்படியாடா பண்ணுவ? நீயே சட்டத்தை கையில எடுத்தா அப்போ பொலிஸ், கோர்ட், கேஸ் எல்லாம் எதுக்கு?” என வைதான் யாதவ்.

“அப்போ அந்த பொண்ணு வாழ்க்கை?” என அவனை ஆழமாக நோக்கிக் கேட்டவன்,

“அந்தப் பொண்ணுக்கு இவன் அசிட் அடிச்சிடுவேன்னு சொல்லும் போது வராத அக்கரை இப்போ இவன் மேல எங்கருந்துடா வந்தது? இவன் வாழ்க்கை நாசமாகிடும்னு சொல்ற? அந்த அப்பாவி பொண்ணு வாழ்க்கை? நான் இதப் பண்ணலன்னா இன்னேரம் அந்தப் பொண்ண இவன் என்ன பண்ணிருப்பான்னே தெரியாது. பசங்கதான் வழமையா பொண்ணுங்களுக்கு அசிட் ஊத்துவானுங்க. இன்னைக்கு அத நான் மாத்திட்டேன். இதப் பாக்குற ஒவ்வொருத்தனுக்கும் பொண்ணுங்க மேல அசிட் அடிக்கனும்குற எண்ணமே வரக் கூடாது.” என லைவ் போட்டவன் பக்கம் திரும்பி கமெராவைப் பார்த்து கைநீட்டி எச்சரித்தான் சத்யா.

“நாம ஒருத்தங்களுக்கு அநியாயம் பண்ண நினைக்கும் போது அது நம்மளுக்கு நடந்தா எவ்ளோ வலிக்கும்னு யோசிச்சு பாத்தோம்னா எந்த தப்பையும் நம்மளால பண்ண முடியாது. அதுக்காகத்தான் இத பண்ணேன்.” என்றவாறு அவன் அருகில் கதிரையை போட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன், தனது போனை எடுத்து பேஸ்புக் லைவை பார்வையிட்டான்.

அதைப் பார்த்து உதட்டைப் பிதுக்கி இமையை உயரத்தியவன் “பரவால்ல. நல்லா அப்டேட்டாதான் இருக்கானுங்க நம்ம பசங்க.” எனக் கூறியவாறே

“இந்த லைவ போட்ட அந்த அறிவு அருன் யாருடா?” எனக் கேட்க அந்த பெயரை உடையவனுக்கு நெஞ்சுக் குழியில் தண்ணீர் இல்லை. தயங்கியவாறே லைவ் போட சொன்ன தனது நண்பனையும் இழுத்துக் கொண்டு மலங்க மலங்க அவன் முன் வந்து நின்றான்.

அவ் இருவரையும் பார்த்தவன் “என்னடா லைவ்ல என் கலர் கம்மியா காட்டுது? கொஞ்சம் பில்டர்ஸ் இருந்தா தட்டி விட வேண்டியதுதானே?” என தன் முகத்தை திருப்பி திருப்பி பார்த்தவாறு கேட்க

“இல்லை. அண்ணா… பில்டர்… லைவ்ல…” என தலையை சொறிந்தவாறே சொல்ல,

“அப்படியா? அப்போ எப்படி அந்த பொண்ணு முகத்தை மட்டும் ப்ளர் பண்ண?” என்று யோசனையாக தாடையை தடவினான்.

“அது வந்து…” என இழுத்தான் அவன்.

“பரவால்லை நல்ல வேலைதான் பண்ணிருக்க. ஐ அப்ரிஸியேட்.” என கை கொடுத்தான் சத்யா. அவன் யோசித்தவாறே சத்யாவுக்கு கை தந்தான். ஒரு நொடியில் கொடுத்த கை அவன் கன்னத்தில் பதிந்து இருந்தது.

“உன் பெயருதான் அறிவே தவிர உனக்கு அறிவே இல்லங்குறது இதுலையே தெரிது. இவ்ளோ பெரிய பைத்தியக்காரத்தனத்தை பண்ணிருக்க? ஒரு விசயம் நடந்தா சீரியஸ்னஸ்ஸே புரியிறது கிடையாது. ஒரு பொண்ணோட வாழ்க்கை விளையாட்டாகிடுச்சுல்ல உங்களுக்கு? மனசாட்சியே இல்லாம நடந்திருக்கீங்க. யூஸ்லஸ் பெல்லோவ்ஸ்.” என்று சீறினான் அடிக் குரலில்.

அவன் “சோரிண்னா. இனிமேல் இப்படி பண்ண மாட்டோம்.” எனக் கன்னத்தில் வை வைத்தவாறு சொன்னார்கள்

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!