காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 13 🖌️

5
(1)

கீழே உயிர்போகும் நிலையில் கிடந்தவனைப் பார்த்து அனைவரிடமும் “இவனை அள்ளிக்கிட்டு போய் ஹொஸ்பிடல்ல சேத்து விடுங்கடா. செத்துக் கித்து போய்ட போறான்.” என்றதும்  எவனும் முன்வரவில்லை. அதில் சற்று அதிர்ந்த சத்யா “என்னாங்கடா? எவனும் வர மாட்டேங்குறீங்க?” எனக் கேட்க

அதில் ஒருத்தன் “இவன நாங்க தூக்கிட்டு போய் ஹொஸ்பிடல்ல சேரக்கனுமா? இப்படியே கிடந்து சாகட்டும்.” என்றான்.

“எவன்டா அவன்?” எனக் கேட்டான் சத்யா. அமைதியாக இருந்தது முழு இடமும்.

“இப்போ ஒரு குரல் வந்துச்சுல்ல? அந்தக் குரலோட சொந்தக்காரன் கொஞ்சம் முன்னாடி வா. அந்த மூஞ்சப் பாப்போம்.” எனக் கூற முன்னே பேசிய குரலுக்கு உரித்தானவன் கை கட்டியவாறு வந்து நின்றான்.

அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவன், “ஆமாம்… இப்போ வந்து சொல்லு. இந்த குரல் அந்த பொண்ண அவன் அசிட் அடிப்பேன்னு சொல்லும் போது எங்கடா போச்சுன்னு.” எனக் கேட்க அவள் தலை குனிந்து கொண்டாள்.

அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் திரும்பியவன், “ஒரு பொண்ண இப்படி கேவலமா நடத்துறான். ஆனால் நீங்க கைகட்டி வேடிக்க பாக்குறீங்க. உங்க அக்கா தங்கச்சின்னா விட்டிருப்பீங்களாடா? இப்படியே உங்களை மாதிரி எல்லாரும் இருந்தா, நாளைக்கு உன் தங்கச்சிக்கு இப்படி நடக்கும் போது அங்க நிக்குற அத்தனை பேரும் இப்படித்தான் பாத்துட்டு நிப்பானுங்க. காப்பாத்துங்கன்னு கத்துறா. ஒருத்தன்… ஒரு ஆம்பளை? எங்க போச்சு உங்க ஆண்மை? ஆம்பலைங்கன்னு சொல்ல நீங்க எல்லாம் அசிங்கப்படனும்.” எனக்கூற அனைவரது தலைகளும் குனிந்து கொண்டது.

பெண்களைப் பார்த்து “இவளும் உங்கள மாதிரி பொண்ணு தானே? உங்களால அவளுக்காக ஒரு வார்த்தை பேச முடியாது?” என்று ஆத்திரத்தில் கத்தினான்.

“ஆனால் ராம்… நாங்க ஆப்டரோல் பொண்ணுங்க தானே. நாங்க தட்டிக் கேட்க போனா எங்களையும் ஏதாவது பண்ணிடுவான்னுதான்…” என குரல் ஏறி இறங்க ஒரு பெண் வந்து பேச,

“ஓஹ்… இல்லன்னா மட்டும் நீங்க கிழிச்சுட போறீங்க. இந்த ஆப்டரோல் பொண்ணுங்கங்குற வசனம்தான் உங்களை இப்படி ஆக்கிடுச்சு. ஏன் பொண்ணுங்கன்னா என்ன குரைச்சல்? ஆணுக்கு சரிபாதி பெண். சிவனோட சரி பாதி சக்தி. சக்தி இல்லன்னா சிவன் இல்லை. உங்களை நீங்களே குறைச்சு மதிப்பிடாதீங்க. உங்களுக்குள்ள இருக்குற பவர் உங்களுக்கே தெரியல. அவன் ஒத்த ஆம்பளை. நீங்க இவ்ளோ பொண்ணுங்க இருக்கீங்கல்ல? எல்லாருமா சேர்ந்தா அவனை துணி துவைக்குற மாதிரி துவைச்சு காயப்போட்டுட முடியாதா? ஒரு பொண்ணு. பத்து இல்லை… ஆயிரம் ஆம்பளைக்கு சமம். வாரணாசில பிறந்த சாதாரண பொண்ணு மணிகர்ணிகா தம்பே. “ராணி லக்ஷ்மி பாய்” ன்ன பெயர்ல சரித்திரத்தை தன் பக்கம் திரும்பி பாக்க வெக்கல? ஒத்த ஆளு. உங்கள மாதிரிதான் இருந்தா. அவளும் ரத்தக் கட்டில இருந்துதான் பிறந்தா. வானத்துல இருந்து குதிச்சு வரல. உங்கள மாதிரி ரெண்டு கை, ரெண்டு காலுதான் அவளுக்கும் இருந்திச்சு. அவளுக்கும் உணர்வு இருந்துச்சு உங்கள மாதிரியே. அவங்களும் பொண்ணுதான். உங்ககிட்ட இருந்த எல்லாமே அவக்கிட்ட இருந்தது. அவக்கிட்ட இருந்த எல்லாமே உங்ககிட்ட இருக்கு. ஆனால் ஒன்ன தவிர, “தைரியம்.” அவ மனசுல தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்திச்சு. ஒரு சாதாரண பொண்ணு. அவ்ளோ பெரிய ப்ரிட்டிஸ்ட் படையயே எதிர்த்து எந்த பயமும் இல்லாம தனி ஆளா நின்னா. ஆனால் இவன் ஒத்த ஆம்பளை. உங்களால முடியாது? ஒருத்தன் உன்னை யூஸ் பண்ணிக்க நினைக்கிறான்னா அவனுக்கு பதிலடி கொடுக்க பழகு. நீ இப்படி பயந்து போய் என்ன விட்டுடுன்னு கத்தினா அவன் தன்னோட காரியத்தை உன் பயத்தாலேயே நிறைவேத்திப்பான். ஆனால் எதிர்த்து நின்னன்னா நம்மளவே எதிர்த்து நிக்கிறாளேன்னு ஒரு சின்ன தடுமாற்றம் அவனுக்குள்ள வந்துடும். அத வெச்சே நீ அவனை வெல்லலாம். பொண்ணுங்க இப்படி பயந்து பயந்து சாகுறதாலதான் இப்படி அராஜகம் பண்ணுரானுங்க. அவனுக்கு தெரியும். இங்க தட்டிக் கேட்க எவனும் வரமாட்டான். பொண்ணுங்க கூட வாயில்லாப் பூச்சிங்க. நாம என்ன வேணா பண்ணலாம்னு நினைப்பு. அவனுங்க மனசுல பொண்ணுங்கனா வாயில்லாப் பூச்சிங்கன்ன உணர்வை உருவாக்கினது யாரு? நீங்கதான். நீங்க எல்லாரும் உங்களுக்காக கை நீட்டாம அடுத்தவங்ககிட்ட கெஞ்சி நின்னா அவனுங்க அப்படிதான் பண்ணுவானுங்க. உன் பசிக்கு நீதான் சாப்பிடனும். அடுத்தவனை எனக்கு பசிக்குது நீ சாப்பிடு என் பசி போய்டும்னு சொல்ல முடியாது. உன் உரிமைக்காக நீ கை தூக்கு. உனக்காக எவனும் வர மாட்டான். இது சுயநலமான உலகம். தனக்கு தனக்குன்னு சொல்ற இந்த உலகம் அடுத்தவங்களை பாக்காது. ஆனால் நீ மட்டும் அடுத்தவன்கிட்ட கெஞ்சினா எப்படி காப்பாத்துவாங்க. உன்னைப் பாத்துக்க உனக்கு தெரிஞ்சிருக்கனும். அதுக்கப்றம் நீ அடுத்தவங்களை பாத்துக்கலாம். பொண்ணுங்கன்னா மென்மையானவங்கனு சொல்லி சொல்லி உங்க மனசுல வன்முறை நடக்கும் போது வன்மையா மாற வேணும்ங்குற ஒரு பேசிக் சென்ச கூட இல்லாம ஆக்கிட்டாங்க. ஆனால் இதுக்காக எல்லாப் பொண்ணுங்களும் வாயில்லாப் பூச்சிங்கன்னு இல்லை. அங்காங்க பொண்ணுன்னு கெத்தா சொல்லிக்க கூடிய அளவு பொண்ணுங்களும் இருக்காங்க. வெட்கமா இல்லை உங்களுக்கு?” என அவன் டயலொக் அனைத்தையும் கேட்க காவ்யா சிலிர்த்துப் போய் உறைந்து விட்டாள்.

அவள் மட்டுமா? அந்த கல்லூரியிலிருந்த அனைத்து மாணவிகளும் ஒன்றிணைய அவர்களின் மகளிர் மன்றத் தலைவி ஒருத்தி “சத்யா சொல்றது சரிதான். நாம பொண்ணுங்கன்னா எல்லாத்தையும் பார்த்துட்டு அமைதியா இருக்கணுமா? நம்மள்ள ஒருத்திக்கு அநீதி நடந்திருக்கு. அவன சும்மா விடக்கூடாது. பொழந்து கட்டுங்க.” எனக் கூறியதும் அனைத்து மாணவிகளும் கென்டீனின் சமைக்கப்படும் சோஸ் பேன், தோசைக் கரண்டி, பீங்கான் மற்றும் துடப்பங்கட்டை, ஆய்வு கூடத்தில் பயன்படுத்தப்படும் சல்பூரிக் அசிட், ஹைத்ரஜன் சயனைட், சிற்றிக் அசிட், அசெற்றிக் அசிட் என அத்தனையையும் கலந்து அந்த பத்துப் பேரையும் துவைத்து எடுக்க புறப்பட்டுவிட்டனர்.

ஒருவனோ நான்கு பைகள் முழுக்க தேசிக்காய் வாங்கி வந்திருந்தான். அதைக் கண்ட மலர்விழி “டேய்… என்னடா பண்ற?” எனக் கேட்க நீங்கதானே மிஸ் சொன்னீங்க, லெமன்ல சிற்றிக் அசிட் இருக்குன்னு அதுதான் பறிச்சி எடுத்து அவனுங்கள விரட்ட போறேன்.” எனக் கூற

“எங்கருந்துடா வரீங்க நீங்கெல்லாம்? எங்களுக்குன்னு வாச்சிருக்கீங்களேடா.” என தலையில் அடித்துக் கொண்டார் அவர். இதனை ஆர்வமாக கதிரையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து விசிலடித்தவாறே “கொளுத்திப் போட்டாச்சு. இனிமே வெடிச்சிடும்.” என யோசித்தவாறு

“அப்படித்தான். அடி. அடி. நல்லா பொழந்து எடு. நீங்க அடிக்கிற அடில அத்தனை பேரும் கோமாக்கு போகணும்.” எனக் கூறி அவர்களை உற்சாகப்படுத்தினான் சத்யா. அந்த பத்துப் பேரும் தப்பிக்க முயல, வெளியில் இருந்து உள்ளே நுழைய முயற்சி செய்தனர் அவனது ஆட்கள் மீதுஇருபது பேர்.

“டேய்… இங்க வராதீங்கடா. போய்டுங்கடா.” என அவர்கள் எச்சரிக்க ஆனால் அந்த இருபது பேருமே அதைக் காதில் வாங்காது உள்ளே நுழைந்தனர்.

“டேய்… கோலேஜ் கேட்டை பூட்டுடா.” என சத்யா கூற அடுத்த நிமிடம் அதை செய்தான் ஒருவன்.

“ஸ்டார்ட் த லௌன்ட்ரி.” என சத்யா கத்த மாணவிகள் மாத்திரமல்லாது பெண் லெக்சரர்களான மலர்விழி, வித்யா பாரதி மற்றும் ப்ரியா, நந்தினி என அனைவருடனும் ப்ரொபஸர்களும் புடவை நுனியை இடுப்பில் சொருகிக் கொண்டு தொடப்பங் கட்டையை மேலும் கீழும் அடித்தவாறு களத்தில் இறங்கினர். சத்யாவின் பார்வை மலர்விழியின் புடவை விலகிய இடையை தெரியாத்தனமாக பார்த்ததை அவர் கண்டு கொண்டார்.

தொடப்பத்தை எடுத்துக் கொண்டு அவனிடம் வந்தவர், “டேய்… இந்த ரணகளத்துலயும் உனக்கு குதூகலம் கேட்குது பாரு.” என அவனை அடிக்க

“மலர்… சோரி… மலர்… கொய்ன்ஸிடன்டா தான் மலர் பாத்தேன். இனி பாக்க மாட்டேன். அடிக்காத.” எனக் கூற அடிப்பதை விட்டுவிட்டார்.

“நான் உன் கிட்ட ஒன்னு சொல்லனுமே. ரொம்ப நாளா சொல்லனும்னு காத்துட்டு இருந்தேன்.” என்றதும்

“என்ன?” எனக் கேட்டாள் துடப்பத்தை பார்த்தவாறு.

“நீ என்னோட ரொம்ப நாள் க்ரஸ் மலர்.” எனக் கூற

“டேய்… எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சதே நீதானடா… கல்யாணத்துக்கு வந்து நல்லா கொட்டிக்கிட்டு இப்போ வந்து பேசுற பேச்ச பாரு?” என்றாள் அதிர்ந்து போய்.

“அதுக்கு என்ன? இப்போ மட்டும் ஒன்னும் குறையல. நீ ஆயுஷ டிவோர்ஸ் பண்ணிடு.” என்றான் சாதாரணமாக.

“டேய்… என்னடா சொல்ற? நீ ரூட் விடுறதுக்கு நான் அவன டிவோர்ஸ் பண்ணணுமா? அடிங்… பிச்சுபுடுவன் பிச்சு…” என்றாள் துடப்பத்தைக் காட்டி.

அவள் துடப்பத்தை காட்ட கண்கள் பிதுங்கியவன் “சோரி… மலர்… அதோ ஒருத்தன் ஓடுறான். போய் அடி. போ.” என அவளிடமிருந்து தப்பிக்க கூற, அவளும் அது புரியாமல் அவனை அடிக்க கிளம்பிவிட்டாள்.

அனைவரும் போய் அடி அடியென அடித்து வெளுத்துவிட்டனர். இது முக நூலில் ஒலிபரப்பிக் கொண்டிருந்ததை தொடர்ந்து இந்த வீடியோ வைரல் ஆகிக்கொண்டு வந்தது. பொலீஸார் உடனே கல்லூரிக்குள் நுழைந்தனர் சத்யாவை கைது செய்வதற்காக. பொலிஸ் அதிகாரிகள் கேட்டை உடைத்துக் கொண்டு வந்து தாக்குதலைத் தடுத்து நிறுத்தினர். அனைவரும் ஒதுங்கி இடம் கொடுக்க, இன்ஸ்பெக்டர் சத்யாவிடம் சென்றார்.

“நீ ஒருத்தனை காரணமில்லாம கொலைமுயற்சி பண்ணதற்காகவும் கொலேஜ்ல இப்படி கலவரத்தை உருவாக்கினதற்காகவும் உன்னை அரெஸ்ட் பண்றோம்.” என்றார் அழுத்தம் திருத்தமாக.

பொலிஸ் அதிகாரிகள் கேட்டை உடைத்துக் கொண்டு வந்து தாக்குதலைத் தடுத்து நிறுத்தினர். அனைவரும் ஒதுங்கி இடம் கொடுக்க, பொலிஸ் அதிகாரிகள் இருவர் உள்ளே சென்றனர். மீதி இருப்பவர்கள் வெளியில் நின்ற கூட்டத்தை அடக்க முயன்றனர். உள்ளே சென்ற அதிகாரி சத்யாவிடம் வந்து நின்றார்.

“நீ ஒருத்தனை காரணமில்லாம கொலைமுயற்சி பண்ணதற்காகவும் இப்படி கலவரத்தை உருவாக்கினதற்காகவும், உன்னை அரெஸ்ட் பண்றோம்.” எனக் கூறி கையில் ஹேன்ட் கப்பைத் தூக்க அனைத்து மாணவர்களும்

“ஹேடய்…” எனக் கத்திக் கொண்டு பொலிஸ் அதிகாரியிடம் சண்டை செய்ய முற்பட, கையைக் காட்டி நிறுத்தினான் சத்யா.

“சரி. அரெஸ்ட் பண்ணுங்க.” எனக் கையைக் காட்ட,

“ராம் உனக்கு என்ன பைத்தியமா?” என ஒருத்தருக்கொருத்தர் கேட்க,

“எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்.” எனக் கூறியவாறே பொலிஸ் அதிகாரியிடம்

“சேர். இங்க ஒரு பொண்ண ஒருத்தன் ஈவ்டீசிங் பண்ணிருக்கான். ஆனால் அவனப் பத்தி எந்த கேள்வியும் கேட்கல. அந்தப் பொண்ண பத்தி எந்த இன்வெஸ்டிகேசனும் பண்ணல. ஆனால் இந்த கேவலமானவன அடிச்சதுக்காக என்ன அரெஸ்ட் பண்ண வந்துட்டீங்க? அந்த பொண்ண அவன் தொல்லை பண்ணது உங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் நான் அவன அடிச்சதுதான் பிரச்சினை?” என அவரை ஏற இறங்கப் பார்த்தவன், அவர் காதின் அருகில் சென்று

“அவன் அப்பா கிட்ட எவ்ளோ லஞ்சம் வாங்கின? இந்தப் பொழப்புக்கு… பிச்சை எடுக்கலாம்டா நாயே…” எனப் பல்லைக் கடித்து ஆக்ரோஷமாக சீறினான்.

“டேய்… என்னடா சொன்ன…” என சத்யாவினை அடிக்கக் கை ஓங்கினார் அந்த பொலிஸ் அதிகாரி.

அனைத்து மாணவர்களும் “எங்க ராம் மேலையே கை வைக்கிறியா போலீஸு? உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு அனுப்ப மாட்டோம். மொத்தமா பரலோகத்துக்கே அனுப்பி வெச்சிடுவோம்.” என சீற கையை எடுத்தார் அந்த பொலிஸ் அதிகாரி.

அதில் சற்று தெனாவெட்டாக அனைவரையும் பார்த்து “நான்தான் பாத்துக்குறேன்னு சொல்றேன்ல? நீங்க எதுக்காக கத்துறீங்க?” எனக் கேட்டவன் சற்றும் தாமதிக்காது அவரை மாறி அறைந்துவிட்டான். அவர் சுருண்டு போய் கீழே விழ அருகில் நின்ற கோன்ஸ்டபிலுக்கு அல்லு விட்டது.

“நான் எதையும் யோசிச்சு பண்ண மாட்டேன். எனக்கு எது சரின்னு தோனுதோ அத பண்ணிடுவேன். அதுக்கு பின் விளைவுகள் எது வந்தாலும் சந்திக்க நான் ரெடி. நான் இவனை அடிச்சது தப்புதான். ஆனால் அவன் பண்ணது அத விட பெரிய தப்பு. தப்பு பண்ணவங்க தண்டனை அனுபவிச்சாகணும். நான் ஜெய்லுக்கு போக ரெடி. அதே போல இவனுக்கும் தண்டனை கிடைக்கணும். வாங்கின லஞ்சத்துக்கு நேர்மையா நடந்துக்குறது எல்லாம் சரிதான். ஆனால் உனக்கு மாசம் மாசம் சோறு போடுற இந்த தொழிலுக்காக என்ன பண்ண?அவனுக்கு தண்டனை கிடைக்கனும். இல்லை…” எனக் கூறி கை நீட்டி எச்சரிக்க அத்தனை பேரும் தங்களுக்குள் பேச ஆரம்பித்துவிட்டனர்.

“என்னடா சொல்றான் இவன்? ஜெய்லுக்கு போக ரெடி ஆகிட்டான்? அவன் என்ன தப்பு பண்ணான்னு அரெஸ்ட் பண்ண வந்துட்டானுங்க? சட்டத்தோட வேலையதானே பண்ணான். அவனுங்களும் பண்ணமாட்டானுங்க. பண்றவனையும் விட மாட்டானுங்க. இத சும்மா விடக்கூடாதுடா. ராம எப்படி அரெஸ்ட் பண்ணுறாங்கன்னு நாமளும் பாத்துடுவோம்.” என அத்தனை பேரும் முணுமுணுக்க

கண்கள் முழுக்க வெறியுடன் பல்லைக் கடித்தவன், “என்னையே அடிச்சிட்டியா நீ? இதுவே போதும்டா உன்னை உள்ள தள்ள.” எனக் கூறியவாறே கோபத்துடன் எழுந்து சத்யாவின் கழுத்தைப் பிடிக்க முயல,

“ஒருநிமிசம்…” என கீதாஞ்சலி மிஸ் வந்து நின்றார்.

“ராம் உங்களை அடிச்சான்னு சொல்றீங்களே? எப்போ அடிச்சான்? ஆதாரம் இருக்கா?” எனக் கேட்டார் அவரை கைகட்டி நின்று பார்த்தவாறு.

“இதோ இப்போதான் அடிச்சான். நீங்க எல்லாரும்தான் பாத்தீங்களே.” எனக் கூற பின்னால் திரும்பி அனைத்து மாணவர்களிடமும்

“ராம் இவர அடிச்சானா?” எனக் கேட்டார் மிஸ்.

அனைவரும் சேர்ந்து “ராம் இவர அடிச்சானா? எப்போ அடிச்சான்?” என ஒன்றுபடக் கேட்க,

“டேய் என்னங்கடா? நீங்க எல்லாரும் மாத்தி பேசுறீங்க.” என கூறியவாறே திரும்பியவர்,

“கோன்ஸ்டபிள், இவன் அடிச்சான்ல?” எனக் கோன்ஸ்டபிளிடம் கேட்க அவர் கூட சத்யா பக்கம்தான்.

“சேர்… எனக்கு சோர்ட்டா மெமரி லொஸ். நடக்குற விசயங்கள் மூளையில ஏற டைம் ஆகும்னு டொக்டர் சொல்லிட்டார். இவன் அடிச்சானா இல்லையான்னு மறந்து போச்சு சேர்.” என்றதும் அத்தனை பேருமே விழுந்து விழுந்து சிரித்தனர்.

“டேய் நீ என்னை தான அடிச்ச? நானே உன்னை உள்ள தூக்கி வைக்கலாம்.” எனக் கூற ப்ரியா அவரைத் தடுத்து நிறுத்தி

“சேர்… வன் மினிட். இவன் உங்கள அடிச்சதுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அதனால நாங்களே கூட, அந்த பையன்கிட்ட நீங்க லஞ்சம் வாங்கிட்டு ராம அரெஸ்ட் பண்றதுக்காக வேணும்னே அவன் உங்களை அடிச்சான்னு கேஸ் போட்டுட்டீங்கன்னு சொல்லுவோம்.” என்றார். மொத்தமும் அந்த இன்ஸ்பெக்டருக்கு எதிராகத் திரும்பியது.

கொஞ்சம் ஜெர்க் ஆனவர் “அப்போ நான் லஞ்சம் வாங்கினதுக்கு ஆதாரம் இருக்கா?” எனக் கேட்க,

“ஆதாரம் தானே? இதோ…” எனக் கூறிக் கொண்டே மலர்விழி ஒரு காணொளியைக் காண்பித்தாள்.

அதில் ப்ரஸாந்தின் அப்பாவிடமிருந்து… அதாவது… ஆர். ஜேவின் பெரியப்பாவிடம் இந்த இந்த இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்குவது தெளிவாக படம் பிடிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த இன்ஸ்பெக்டருக்கு தலை அங்கும் இங்கும் சுற்றியது. வியர்வை நெற்றியில் இருந்து ஊற்றியது. அதனை தன் லேன்ஸை கொண்டு துடைத்தார்.

“இந்த வீடுயோ போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” எனக் கேட்டாள் மலர் தெனாவெட்டாக.

“என் தம்பி அவங்க அப்பா ஒபிஸ்லதான் வேலை செய்றான். அவன வெச்சி தான் இத எடுத்தேன்.” எனக் கூறிவிட்டு தன்
தம்பிக்கு அழைத்த மலர்

“அந்த வேலையை ரிஸைக்ன் பண்ணிடுடா.” என்று கூறிவிட்டாள். இன்ஸ்பெக்டர் எச்சில் விழுங்கிக் கொண்டார்.

“இப்போ மட்டும் நீ ராம அரெஸ்ட் பண்ணன்னா உன் வேலைக்கு உலை வெச்சிடும் இந்த வீடுயோ.” எனக் கூற அவர் முகம் கருத்துப் போய் அமைதியாக மேலிடத்திற்கு அழைத்தார்.

“சேர்… இங்க என்னால கன்ட்ரோல் பண்ண முடியல. நீங்களே வந்து பாருங்க சேர்.” என திணற

“உன்னால ஒருத்தன அரெஸ்ட் பண்ண முடியலன்னா நீயெல்லாம் என்னய்யா பொலிஸ்? வெட்கமா இல்லை த்தூ…” எனத் துப்பி அசிங்கப்படுத்திய ஏ.சி

“சரி நானே வந்து தொலைக்கிறேன்.” எனக் கூறிவிட்டு போனை கட் செய்தார்.

மீடியாக்காரர்கள் அனைவரும் கொலேஜ் வாசலை சூழ்ந்து நிற்க யாரையும் உள்ளே விடவில்லை பொலிஸ் அதிகாரிகள். இவர்களுக்கு நடுவில் உள்ளே நுழைந்தார் ஏ.சி.பி. உள்ளே நுழைந்தவருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி.

“சேர் என்னை அரெஸ்ட் பண்ணுங்க.”

“இல்ல சேர். என்ன முதல்ல அரெஸ்ட் பண்ணுங்க.”

“இல்லை சேர் இவங்கல்ல யாருமே இல்லை. நான் தான் இதெல்லாம் பண்ணேன். சோ, என்ன அரெஸ்ட் பண்ணுங்க.” என அத்தனை பேரும் கையை நீட்டி கத்த, யாரு குற்றவாளி என்றே அவருக்கு புரிய சில நிமிடம் எடுத்தது.

“நிறுத்துங்க. என்ன விளையாட்டுக் காட்றீங்களா? இங்க யாரு என்ன தப்பு பண்ணாங்கன்னு லைவ்லயே ஓடிடுச்சு. மரியாதையா எங்க கடமைய எங்கள பண்ண விடுங்க.” என்றார் சத்தமாக.

“சேர்… அப்போ அந்தப் பொண்ணு?” சத்யா அழுத்தமாக அவரைப் பார்த்தான்.

“எந்தப் பொண்ணய்யா?” அவர் சலிப்புடன் பதிவ் கேட்டார்.

“எந்தப் பொண்ணா? அப்போ அந்தப் பொண்ண பத்தி நீங்க எந்த எக்ஸனும் எடுக்க வரல? என்ன அரெஸ்ட் பண்ணதான் வந்திருக்கீங்க?” என இவரைப் பாத்து கேட்டவாறே அவனது நண்பர்கள் பக்கம் திரும்பினான்.

“நீ என்ன சொன்ன? சட்டம் தன் கடமையை செய்யுமா? என்ன செஞ்சி கிழிச்சிடுச்சா? எல்லாமே பணம்டா.” எனக் கூறிவிட்டு

“சமூகத்துல ஒரு பணக்காரனுக்கு கிடைக்குற நியாயம் மத்தவங்களுக்கு கிடைக்கிறதே இல்லை. ஒரு ஹை ஒபிஸர் நீங்க. பட் உங்களுக்கு கூட அவன அரெஸ்ட் பண்ண தோனல? அவன அப்படியோ விடுறதுக்கு அவன் குற்றவாளி இல்லைன்னா நானும் குற்றவாளி இல்லை.” எனக் கூறியவன்,

“அரெஸ்ட் பண்ணுங்க.” எனக் கையை நீட்ட அவர் கை விலங்கை எடுத்து சத்யாவின் கையில் மாட்டப் போக

“ஏய்… எங்க ராமையே நீ அரெஸ்ட் பண்ணுவியா? நாங்க இருக்கும் போது முடிஞ்சா அவரை அரெஸ்ட் பண்ணுடா.” எனக் கூறிக் கொண்டு அனைத்து மாணவர்களும் கல்லை எடுத்து அடிக்க, அவர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடிவிட்டார்.

அப்படியே தன் கூலிங் க்ளாஸை எடுத்து போட்டுக் கொண்டவன்,  தன் தொலைபேசியை எடுத்து காதில் வைத்து, “Hello! is this 1990? இங்க விஜயேந்திரா சென்ரல் கொலேஜ்ல…” எனக் கூறி நிறுத்திய சத்யா

“ஏக்… தோ… தீன்… சார்…” என அடிபட்ட ஒவ்வொருத்தரையும் எண்ணியவன் இறுதியாக “உன்திஸ்… திஸ்… இக்திஸ்…” என முடித்துக் கொண்டு.

“அக்கா இங்க சரியா முப்பதொரு பேர் சாகக் கிடக்குறானுங்க. வந்து அள்ளிக்கிட்டு போங்க.” என்று கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டான்.

அதன் பின்னர் அனைத்து மாணவர்களும் “ராம்…” எனக் கத்திக் கொண்டு வந்து அவனை தலையில் தூக்கி வைத்து ஆடினர். இந்த சம்பவத்தை அத்தனை ஊடகங்களும் வறுத்து எடுக்க, அடிபட்டு சாவுக்கும் வாழ்வுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்த ப்ரஸாந்தின் தகப்பன் இந்த செய்தியைப் பார்த்து உச்ச கோபத்திற்கு சென்றுவிட்டார்.

தன் கையில் வைத்திருந்த பிஸ்டலால் டீவியை சுட்டுத் தள்ளியவர், “சத்யாஆஆஆ…” என தொண்டைகிழியக் கத்தினார்.

“டேய்… அவன் சாவு சாதாரணமா இருக்கக் கூடாது. துடிக்கத் துடிக்கக் கொல்லணும். என் பையன இந்த நிலமைக்கு ஆளாக்கிட்டானே. அவன் உயிரோடவே இருக்கக் கூடாது. புரிதா? அவனை இழுத்து வந்து என் காலடில போடு.” என்றார் ஆர். ஜேவிடம்.

“முடியாது…” என்று அவன் சொன்னதில் அவசரமாகத் திரும்பிப் பார்த்தவர்

“என்னடா? உன் அத்தை பையன்னு பாசம் பொத்துக்கிட்டு வழிதா?” எனக் கேட்டார் கோபமான முகத்துடன்.

“யார்க்கிட்ட என்ன பேசுறீங்க பெரியப்பா? அந்த வாசுதேவ ராம் எங்கப்பாவ கொன்னவன். அவன் பையனுக்காக நான் பந்தம் கொண்டாடுவேனா? அந்த சத்யா… அவன் மட்டும் நல்லவனா? என் தங்கச்சிய ரேப் பண்ணி கொலை பண்ணவன… என் அக்னிதாவ என்கிட்ட இருந்து பிரிச்ச அவன… நான்தான் கொல்லுவேன். என் கையாலதான் கொல்லுவேன். நீங்க அவன் மேல கை வைக்க கூடாது.” உறுதியாக சொல்லிவிட்டான்.

“அப்போ, அவன் தலைய வெட்டி எடுத்து என்கிட்ட கொண்டு வந்து கொடு” என்று அவன் தோளைக் குலுக்கி விட்டார்.

“அதெல்லாம் அவன் கரெக்டா பண்ணி முடிச்சிடுவான்.” எனக் கூறி தன் மகனைப் பற்றி பெருமையாகக் கூறிக் கொண்டார் ஆர். ஜேவின் அம்மா ரஞ்சனா.

இங்கு கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் விசில் அடித்துக் கொண்டு ஆட்டம் போட “டேய்… நிறுத்துங்கடா.” எனத் தடுத்தான் சத்யா. அனைவரும் போலிஸை எதிர்த்து சத்யாவுக்கு பாதுகாப்பாக நிற்க

“டேய்… எனக்காக நீங்க கஸ்டப்பட வேண்டாம்டா. விடுங்க அரெஸ்ட் பண்ணட்டும். நானே பாத்து வெளில வந்துடுவேன்.” எனப் பெரும்மூச்சு விட்டான்.

“அதெப்படிண்னா உங்களை அரெஸ்ட் பண்ணுவாங்க? அவங்க மனசுல என்னதான் நினைச்சிருக்காங்க? தப்பு பண்ணவன அரெஸ்ட் பண்ணல. ஆனால் உங்கள எப்படி அரெஸ்ட் பண்ணுவாங்க? திஸ் இஸ் அன்பேர். உங்களை நாங்க இருக்கும் போது எப்படி அரெஸ்ட் பண்ணுவாங்கன்னு பாத்துர்ரோம்.” என ஆளுக்காள் கத்த

“பைத்தியம் மாதிரி பேசாதீங்க. வந்த பிரச்சினை என்னோடையே போய்டட்டும். நீங்க யாரும் இதுல மாட்டிக்க கூடாது.”

“இல்லை அண்ணா. நாம எல்லாருமே ஒன்னு. இப்படி உங்களுக்கு பிரச்சினைங்கும் போது தனியா விட்டா நாங்க மனிசங்களே இல்லை.”

“என்ன சொன்னாலும் நீங்க கேட்க மாட்டீங்களாடா? அதெல்லாம் சரிடா. இப்போ எப்படி வீட்டுக்கு போறது?”

“பைக்லதான்…” என்று கூறியவன் கேட்டைத் திறக்க மொத்த மீடியாவுமே உள்ளே நுழைந்தது.

“சேர்… எதுக்காக இப்படி ஒரு காரியத்தை பண்ணீங்க?”

“இத பண்றதுக்கு உங்களுக்கு யாரு ரைட்ஸ் கொடுத்தா?”

“சட்டத்தை கையில எடுக்க நீங்க யாரு?”

“உங்க அப்பா செத்து இப்போதான் ஒரு வாரம் ஆகிருக்கு. அதுக்குள்ள இப்படி ஒரு காரியத்தை பண்ணிருக்கீங்க?”

“ஒரு பையனுக்கு இப்படி அசிட் அடிச்சிட்டீங்களே இதனால ஏற்படப்போற பின்விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா தெரியாதா?”

“அவங்க அப்பா யாருன்னு தெரியுமா?”

என ஒவ்வொருத்தராக கேள்வி மேல் கேள்வி கேட்க ஒரே பதிலதான் “Truth will prevail. சத்தியம் வெல்லும்.”  என்று கைகூப்பி வணங்கியவன் முன்னால் செல்ல மாணவர்கள் அவனுடனேயே அவன் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

அவன் வீட்டினுள் மக்கள் கூட்டம் மோதித் திரிய ஒரு பக்கம் ஊடகவியலாளர்கள் அவன் வீட்டின் முன்பு இந்த செய்தியைப் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.

இங்கே இந்தப் பிரச்சினையினால் உயர் இடத்திலிருந்து அழுத்தம் கொடுக்க கமிஷனர்க்குதான் குருதி அமுக்கம் ஏறி இறங்கியது. அனேக தொலைபேசி அழைப்புக்கள். அவருக்கு தொலைபேசி அழைப்புக்கு பதில் சொல்லியே தன் வாழ்நாளில் பாதி ஆயிசு போய்விடும் என்ற ஒரு நிலை. உடனே தானே இந்த கேஸை பார்த்துக் கொள்வதற்காக கிளம்பிவிட்டார். சத்யா உள்ளே நுழைந்து வீட்டினுள் காலடி எடுத்து வைக்க முயல. “ஒரு நிமிசம்…” இடது பக்கத்தில் இருந்து சத்தம் வர…

“யாரது?” என்றவாறு பார்த்தனர் அனைத்து மாணவர்களும். அங்கு உள்ளே இருந்து ஆரத்தி தட்டோடு வந்தார் அவனது வீட்டில் வேலை செய்யும் அக்கா ஆண்டாள்.

“அக்கா நீங்க எப்போ வந்தீங்க?” என அதிசயமாக சத்யா வேலையை விட்டு இன்றுவிட்டேன் என்று கூறிய அவரைப் பார்க்க

“நான் இன்னைக்குதான் வந்தேன் தம்பி. அப்பாவத்தான் பாக்க முடியல. வீட்டுல பொண்ணுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. ட்ரெய்ன் டிக்கெட் போட்டு வரதுக்குள்ள லேட் ஆகிடுச்சு…” என வாசுதேவராமைப் பற்றி கவையாக சொல்ல அனைவர் முகமும் சோர்ந்து போனது.

“சரி… விடுங்கக்கா… பிரச்சினை இல்லை…” அவர் கையைப் பிடித்து ஆறுதல் சொன்வன் அவர் வாட்டமான முகத்தைப் பார்த்துவிட்டு

“எப்படி இருக்கீங்க? ஊருல எல்லாரும் நலமா?” என்றான் சிரித்த முகமாக. அவன் புன்னகை அவருக்கும் ஒட்டிக் கொண்டது.

“நான் நல்லா இருக்கேன் தம்பி.. அவங்களுக்கு என்ன? எல்லாரும் ஹேப்பிதான். நீங்க எப்படி இருக்கீக? நல்லா இருக்கிங்களா? நான் டீவியில பாத்தேன் தம்பி. அந்த பையன போட்டு நீங்க சுருட்டு சுருட்டுன்னு சுருட்டுனத. ரிப்பீட் பண்ணி பண்ணி பாத்தேன்.” எனக் கூறியவர் முகம் சட்டென்று இறுக,

“ஆனால் வாசு ஐயா இருந்திருந்தா நீங்க பண்ண காரியத்துக்கு உங்களை துணி காயப்போடுற மாதிரி அடிச்சி துவைச்சு வெளுத்து காயப் போட்டுருப்பார் தம்பி.” எனக் கூற மீண்டும் அவன் முகம் வாடியதைக் கண்டு

“அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க. அக்கா நான் சொல்றேன். நீங்க பண்ணதுக்கு பாராட்டணும் தம்பி.” எனக் கூறியவாறு கண்களை கூட்டத்தில் அலையவிட்டார்.

“யாரக்கா தேடுறீங்க?” என்றான் சத்யா பின்னால் திரும்பி அவர் கண்கள் சென்ற திசையைப் பார்த்தவாறே.

“நம்ம காவ்யா பொண்ணத்தான். உங்க பின்னாடியே சுத்திட்டு இருக்குமே. எங்க காணோம்…” எனக் கேட்டதும்

“அது நானே… அது நானே…” என த்ரிஷா ஸ்டைலில் கூறியவாறு அவள் எட்டிப் பார்க்க,

“ஆஆஆ…. இவள எதுக்குக்காக கூப்பிடுறீங்க?” என்றான் எரிச்சலாக.

“அடச் சும்மா இருக்க தம்பி கொஞ்ச நேரம்.” என சத்யாவைத் தள்ளிவிட்டு அவளை இழுத்து அவன் பக்கத்தில் நிற்க வைத்தார்.

“இப்போதான் கண்ணுக்கு லட்சணமா இருக்கு.” என நெற்றி முறித்தவர்

“உங்களைப் பாத்து ஊரு கண்ணே பட்டிருக்கும் தம்பி. ஆரத்தி காட்டலாமா?” எனக் கூறிவிட்டு ஆரத்தி எடுக்க முயல,

“அக்கா… இவள எதுக்கு என் பக்கத்துல நிக்க வெச்சு ஆரத்தி காட்டுறீங்க?” என்றான் ஓனக் கண்ணால் காவ்யாவை முறைத்தலாறே.

“வீட்டுக்கு வரப் போற மாகாலக்ஷ்மிய ஆரத்தி காட்டிதானே தம்பி உள்ள கூப்பிடணும்.” என்றார் சிரிப்புடன்.

“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை.” என முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிட்டான் சத்யா.

“என்னாச்சும்மா? தம்பிக்கும் உனக்கும் ஏதாவது பிரச்சினையா?” என அவர் அவளது காதைக் கடிக்க,

“ஆமாம்கா. அது பெரிய ஸ்டோரி. அத நான் அமைதியா சொல்றேன். வாங்க.” என அவரை அழைத்துச் சென்று விட்டாள் காவ்யா.

கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் கிட்டத்தட்ட 100 பேர் சத்யாவின் வீட்டினுள் நுழைந்து கொண்டனர். அவர்களில் ஒருத்தன் சத்யாவிடம் “ராம் அண்ணா நீ கவலப்படாத. நாங்க பாத்துக்குறோம். உன்னை அரெஸ்ட் பண்ண நாங்கல்லாம் விட்டுடுவோமா? இந்த பிரச்சனை முடிற வரைக்கும் உனக்கு துணையா நாங்க இங்கதான் தங்கப் போறோம். இப்போ நாங்க இருப்போம். மதியம் நம்ம பசங்க மிச்ச பேரு சிப்ட்டுக்கு வாரதா சொன்னானுங்க. நைட்டுக்கு மிச்சம் மீது இருக்குறவங்க சிப்ட் மாறுறதா சொல்லிருக்கானுங்க. நாங்க 10000 பேரும் உனக்கு துணையா இருக்கோம்ணா நீ யோசிக்காத.” என்றான் ஆறுதலாக.

தலையில் கையை வைத்து அமர்ந்திருந்த சத்யா “டேய்… நான் எங்கடா யோசிச்சேன்? நானாடா இதெல்லாம் கேட்டேன்? நீங்களா வந்து சொன்னா நான் என்ன பண்ண? ஏதோ பண்ணித் தொலைங்கடா.” என்றுவிட்டு செல்ல முயல, வீட்டினுள்ளே நுழைந்தார் கமிஷனர்.

“என்னடா? ஸ்டுடன்ட்ஸ் பவர் இருக்குன்ன திமிரா? மரியாதையா இவங்கல எல்லாம் வாய மூடிக்கிட்டு இருக்க சொல்லிட்டு நீயே வந்து சரண்டர் ஆகிடு.” என்றார் அதிகாமாக

“சேர்… நான் என்ன ஹை லெவல் மாபியா கேங்க் லீடரா? சரண்டர் ஆகுற அளவுக்கு? இங்கப் பாருங்க… அவன அரெஸ்ட் பண்ணா நான் தானாவே வந்து போலிஸ் ஸ்டேஸன்ல நிப்பேன். ஆனால்… நீங்க ஏன் அவன இன்னும் அரெஸ்ட் பண்ணல. ஏன்?” என்றான் தலைசாய்த்து.

“உனக்கு அறிவில்லை? அவன் குத்துயிரும் கொலையுயிருமா ஹொஸ்பிடல்ல உயிருக்கு போராடிட்டு இருக்குறான். அவன் உயிர் தப்பிச்சாதான் உன்ன விடலாம். நீ அடிச்சது சாதாரணமா இல்லை. காட்டுமிராண்டித்தனமா அடிச்சிருக்க. ஒரு கொலேஜ் பையன் அடிக்கிற மாதிரியா அடிச்சிருக்க? ரத்தத்துல வெறி ஊறிப்போன ஒருத்தன் அடிக்கிற மாதிரி அடிச்சிருக்க. அவன் உயிர் பிழைக்கிற வரைக்குமாவது வந்து ஸ்டேஸன்ல இரு. அதுக்கு பிறகு நானே உன்ன பெய்ல்ல வெளில எடுக்குறேன்.” அவர் உச்சகட்ட தலை வலியில் கூற

“அப்போ… அவன் செத்துட்டான்னா?” சாதாரணமாகவும் அழுத்தமாகவும் சத்யா கேட்க

“அவன் செத்துட்டான்னா வேற வழி இல்லை. நீ கோர்ட் சொல்ற தண்டனைய ஏத்துக்கத்தான் வேணும்.” என்றார் தெளிவாக.

இடையில் மூக்கை நுழைத்த காவ்யா, “sir, excuse me. உங்ககிட்ட அரெஸ்ட் வோரன்ட் இருக்கா?” அவள் கை கட்டி கேட்க

“ஆமாம். இதோ…” எனக் காட்டினார் அரெஸ்ட் வோரன்டை.

‘சேர். உங்ககிட்ட அரெஸ்ட் வோரன்ட் இருக்கு. அதே போல எங்ககிட்ட பெய்ல் ஓர்டர் இருக்கு.’ என பெய்ல் ஓர்டரைக் கொடுத்தாள் காவ்யா.

“இவன அரெஸ்ட் பண்ணவே இல்ல. அதுக்குள்ள எப்படி பெய்ல் ஓர்டர் எடுத்தீங்க?” என்றார் ஆச்சரியமாக

“சேர்… நாங்கெல்லாம் ஸ்டுடன்ட் சேர். எங்களால முடியாததுன்னு எதுவும் இல்லை.” என்றாள் கெத்தாக.

“என் தலையெழுத்து. இப்போ இத போய் வெளில சொன்னா அவனுங்க தக்காளியாலையே அடிப்பானுங்க. சரி நான் பைல் பண்ணிட்டு சொல்றேன். இங்க பாருங்க. இன்டைக்கு சன்டேய். நியாயமா பாத்தா உன்ன அரெஸ்ட் பண்ணி நாளைக்கு வரை உள்ள வைக்கலாம். ஆனால்… அதை பண்ணாம இருக்கேன். நாளைக்கு தான் நான் இத கோர்ட்ல சப்மிட் பண்ற வரை இப்படி வேற ஏதாவது பண்ணாம இருந்தா சரிதான்.” என சத்யாவைப் பார்த்து கூறிவிட்டு சென்றார். வெளியில் செல்ல ஊடகவியலாளர்கள் வந்து,

“சேர்… என்ன சேர் வெறும் கையோட வாரீங்க? சத்ய ராம இன்னும் அரெஸ்ட் பண்ணலயா?” அனைவரது கேள்வியும் இதுதான்.

“அவர பெய்ல்ல எடுத்துட்டாங்க.” என்றார் சாதாரணமாக

“என்னது பெய்லா? அதெப்படி சேர் அரெஸ்ட் பண்ணாமலேயே பெய்ல்ல எடுப்பாங்க?” என்று அனைவரும் அதின

“எப்படியோ அவன அரெஸ்ட் பண்ணாலும் பண்ணலன்னாலும் அவங்க பெய்ல் ஓர்டர தந்து வெளில எடுத்துடுவாங்க. சோ ஏன் அனாவசியமா அவன அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய் திரும்ப அவனோட பெய்ல எக்ஸப்ட் பண்ணி திரும்ப அதுக்கு வேறையா சிக்னேசர் போட்டு அவன வெளில அனுப்ப? அதோட அவனோட பெய்ல மொத்தமா எக்செப்ட் பண்ணிக்கலாம். அதுக்கு சட்டத்துல இடமுன்டு. அதுக்கு பெயர்தான் என்டிஸிப்ட்ரி பெய்ல். சோ, என்னால அவன அரெஸ்ட் பண்ண முடியாது.” என உறுதியாக கூறிவிட்டார்.

இங்கே அனைவரும் சந்தோசத்தில் கட்டித் தழுவ “டேய்… ஓவரா சந்தோசப்படாதீங்க. அவன் செத்தா நீங்க தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் என்ன அரெஸ்ட் பண்ணியே தீருவானுங்க.” என்று கூறிவிட்டு குளிக்க சென்றுவிட்டான்.

இங்கே காவ்யா ஆண்டாள் அக்காவிடம் தனக்கும் சத்யாவுக்கும் நடந்த அத்தனையையும் கூற, “இம்பட்டு நடந்திருக்கா?” என நாடியில் கையை வைத்தவர் வாயைப் பிளந்து கேட்க, ஆமாம் என தலையை ஆட்டினாள்.

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!