காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 16 🖌️

5
(1)

பாட்டி “இனிமேல் நீ என் பேத்தியே இல்ல. உன்ன நாங்க எல்லாருமே தலை மூழ்குறோம். என் பேச்ச கேட்காத உனக்கு இந்த வீட்டுலயும் இடமில்லை. எங்க மனசுலையும் இடமில்லை. இனிமேல் நீ யாரோ. நாங்க யாரோ. உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” கத்தினார் காது வெடிக்க.

“அம்மாஆஆஆ…” என கண்ணீரோடு நா தழுதழுக்க அழைத்தார் மகாலக்ஷ்மி.

“நிறுத்து… உன் பொண்ணுன்னதால அவ பின்னாடியே போகனும்னு நினைச்சேன்னா நீயும் போகலாம். நாங்க யாரும் தடுக்க மாட்டோம். ஆனா போற நீ இனிமேல் இந்த வீட்டுக்கு திரும்பி வந்துடாத.” என கண்டிப்பாக கூறிவிட்டார். அதனால் அவரால் அவளைப் பற்றுவதைப் பற்றி சற்றும் யோசிக்க முடியவில்லை. வாயை கைகளால் பொத்திக் கொண்டு அழுதுவிட்டார்.

“அப்பாஆஆஆ…” என குரல் உடைந்து அவரை ஓடிச் சென்று விஜயனைக் கட்டிக் கொண்டு அழுதவளை எதுவும் பேசாமல் விலக்கி விட்டவர்

“இந்த அப்பாவையும் அம்மாவையும் விட அவன்தானே உனக்கு முக்கியம். போ… சந்தோஷமா இரு.” என்றவர் மறைமுகமாக ஆசிர்வாதம் செய்து பின்னால் திரும்பிக் கொள்ள அவளுக்கு முகத்தில் அறைந்தது போல் ஆகிவிட்டது.

அனைத்தும் முடிந்ததும் “இவங்க யாரும் உனக்குத் தேவையில்லை.” என்றுவிட்டு காவ்யாவின் கையைப் பிடித்து வெளியே இழுத்துச் சென்றுவிட்டான் சத்யா.

ஆனால் அவளின் கண்களில் கண்ணீர் ஊற்றாக ஊற்றிக் கொண்டிருந்தது. பின்னால் திரும்பியவாறே “அம்மாஆஆஆ…” என உதிர்த்தவளுக்கு அவரின் ஆசிர்வாதம் நிச்சயம் தேவைப்பட்டது. ஆனால் அவர் அவளின் முகத்தைக் கூட பார்க்க முயற்சிக்கவில்லை.

அங்கே அந்த நிலைமை தென்பட இங்கே ஒருத்தன் கோபத்திலும் இயலாமையிலும் வீட்டின் அனைத்து கண்ணாடிப் பொருட்களையும் சல்லி சல்லியாக உடைத்துக் கொண்டிருந்தான். காது கன்னத்தை கத்தியே கிழிய வைத்துவிட்டான். காவ்யாவிற்கும் சத்யாவிற்கும் திருமணம் ஆனது என்று சொன்னதுதான் தாமதம் தொடங்கி விட்டான் அவன் வேலையை.

“எப்படிடா அந்த கல்யாணம் நடந்தது? எப்படி?” கத்தினான் காது கிழிய. வேறு யாரு? ஆர்.ஜேதான்.

“அந்த கொலேஜ் பசங்க எல்லாரும் சேர்ந்து இப்படி பண்ணிட்டாங்க சேர்.” என ஒருவன் திணறிப் போய் கூற அவன் நெஞ்சில் பாய்ந்தது தோட்டா. சரிந்து விழுந்தான்.

“அது எப்படிடா கல்யாணம் பண்ணி வெப்பானுங்க? நான்தான் அவங்கள இருபத்தி நாலு மணி நேரமும் வொட்ச் பண்ண சொன்னேன்ல? அப்படி இருக்கும் போது எப்படிடா இது நடந்தது?” எனக் கத்த ஒருவன் மாத்திரம் கால்கள் இரண்டும் வெடவெடக்க அவன் முன் சென்று நின்று காரணம் தேடினான்.

“சேர்… எங்க மேல எந்த தப்பும் இல்ல சேர். அந்த ராம்தான்…” என முனுச அடுத்த நிமிடம் அவனைப் பிடித்து கண்ணாடி சுவரில் தள்ளி விட்டவன் மனசாட்சியே இல்லாமல் அவன் உயிரை பல தோட்டாக்களை உள்ளிறக்கி எடுத்து விட்டான்.

“இந்த காரணம் சொல்லவாடா உன்னை நான் அனுப்பினேன்? சொல்லு. நீ உனக்கு தந்த வேலைய சரியா செய்யாம காரணம் தேடுறியா? என்னத் தாண்டி எப்படிடா அவள அவன் கல்யாணம் பண்ணான்?” எனக் கத்தியவன் தனது தொலைபேசியை எடுத்து சத்யாவை அழைத்தான்.

ஆர். ஜேயிடம் இருந்து வந்த அழைப்பைப் பார்த்தவன் “என்னடா சக்தி டீவி நிவ்ஸ விட ஸ்பீடா இருக்கானே. ஊருக்கு முதல்ல இவனுக்கு தெரிஞ்சிடுச்சு.” என சொன்னவன் தொலைபேசி அழைப்பை எடுத்து காதில் வைத்தான். அதனைத் தொடர்ந்து காதின் கேள்தகு எல்லை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.

காதை தொலைபேசியை விட்டுத் தள்ளி வைத்தவன் “ஸ்ஸ்ஸ்ஸ்…” எனக் தேய்த்துக் கொண்டு மீண்டும் தொலைபேசியை காதில் வைத்தவன் “ஏன்டா கத்துற? சில் ப்ரோ… இப்படி கத்தினன்னா உன் குரல்வளை வெடிச்சு சிதறிடும். சில்… என்ன ப்ரேக்கிங் நிவ்ஸ் கேள்விப்பட்டுட்ட போல இருக்கு. சரி நானே திரும்ப சொல்றேன் கேளு.” என்றவன் தொலைபேசியை லௌட் ஸ்பீக்கரில் போடவும் அனைவரும் சேர்ந்து திருமண செய்தியை வாசித்தனர்.

“ப்ரேக்கிங்க் நிவ்ஸ். இன்று காலை காதலை எதிர்த்த குடும்பத்தவர்களையும் மீறி இரு இளைஞர்களுக்கு விஜயேந்திரா மத்தியக் கல்லூரி மாணவர்களால் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இச் செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் மணமகளின் ஒருதலைக் காதலனான மிஸ்டர் ஆர். ஜே என்னும் ஆர்யன் ஜோஸப் அவர்களுக்கு மாரடைப்பு வந்து இதயம் பருத்திப் பஞ்சு போல் வெடித்து சிதறியதை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மரணச் செய்திக்காக காத்திருக்கும் நாங்கள் விஜயேந்திரா சென்ட்ரல் கோலேஜின் புதிய மற்றும் பழைய மாணவர்கள். நன்றி.!”என அவனை பேச விடாமல் கடுப்பேத்த அடுத்ததாக காவ்யா.

“என்னப்பா பியான்ஸே… ஏதோ பந்தி பந்தியா டயலொக் பேசின. இப்போ என்னாச்சு?” காவ்யா கடுப்பேத்தினாள்.

போனை வாங்கிய சத்யா “ஹைய்யோ… வட போச்சே.” என சிரித்தவன் மறுகனம் “உன் சாவு செய்திக்காகதான் இவங்க எல்லாரும் வெய்டிங்… சீக்கிரமா செத்துடு… வந்து மலர் வளையம் வெச்சிட்டு போறேன்.” என சிரிக்க “ஏய்…” எனக் கத்தினான் காதுகள் இரண்டும் கிழிய.

“டேய்… சும்மா சும்மா ஏய்… ஏய்… னு கத்தாத ப்ளட் ப்ரஸர் ஏறி ஒரே அடில செத்துட போற. உன்னை என் கையாலதான்டா கொல்லனும் அதனால அந்த உயிர கொஞ்சம் புடிச்சு வெச்சிக்க.” என கிண்டல் செய்ய ஆர். ஜேவினால் கோபத்தை அடக்கவே முடியவில்லை.

“ஏய்… என் சாவு உன் கையாலயா இல்ல உன் சாவு என் கையாலயான்னு பாத்துடுவோம்டா. ஞாபகம் வெச்சிக்கோ. உன்ன கொன்னு உன் இதயத்தை எடுத்து அந்த காவ்யா காலடில போடுறேன்டா. அப்போ பாக்குறேன்டா அந்த இதயம் அவளுக்காக துடிக்கிதான்னு.” சொன்ன அவன் கண்களில் அத்தனை வெறி.

“டேய்… நீ எப்போல இருந்து இந்த ஜோசியம் எல்லாம் பார்க்க ஆரம்பிச்ச? பட் நீ ஜோசியம் சொல்றது எல்லாம் சரிதான். ஆனால் என்னோட விதில இருக்குறத சொல்றதுக்கு பதில் உன்னோட விதில இருக்கிறத சொல்ற. சோ இந்த டயலொக்க எல்லாம் நான் பல பல படங்கள்லேயே பாத்துட்டேன். அதனால இப்படி பகல் கனவு காணாம போய் வேற வேலை வெட்டி இருந்தாப் பாரு. அத விட்டுட்டு என்கிட்ட வந்து கத்திட்டு இருக்காத. Time is Gold.”  என பக்குவமாக எடுத்துக் கூறினான்.

“ஏய்… இது சும்மா இல்லடா எழுதி வெச்சிக்கோ. உன் வீட்டுல அடுத்ததா ஒரு சாவு விழும். அது உன்னோடதா இருக்கும். இன்னைக்கே இல்லன்னாலும் என்னைக்காவது உன்ன கொல்லுவேன்டா.” அவன் குரலில் அத்தனை கொடூரம்.

“நீ கொன்னாலும் இன்னொரு பிறவில வருவேன்டா. உன்ன கொல்றதுக்காக மறு ஜென்மம் எடுப்பேன். சோ… முதல்ல செஞ்சிட்டு சொல்றா. உனக்கு எல்லாம் வாய் வார்த்தை மட்டும்தான். சொல்றத செய்யத் தெரியாது. ஆனால் நான் சொல்ல மாட்டேன் செஞ்சிடுவேன்.” என்றவன் தொலைபேசியை வைத்துவிட்டான் சத்யா.

அனைவருமே அவனைப் பார்த்து “என்ன அண்ணா சொன்னத செஞ்சிட்டோம்ல? அவன் பேச்சிலேயே தெரிது அவன் எவ்ளோ ஏமாந்து போய்ட்டான்னு. ஆனால் கடைசில நீங்கதான்.” என்று ஒருத்தன் கூற அனைவரையும் நன்றி உணர்ச்சியோடு கை கோர்த்து வணங்கினான் சத்ய ராம்.

“அட… என்ன அண்ணா இது. எங்கள போய்…” என ஒருவன் அவன் கையை பிடித்து கீழிறக்க

“இல்லடா. நீங்க இல்லன்னா சத்தியமா இது நடந்திருக்காது. உங்க எல்லாருக்கும் நான் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலடா.” என உணர்வுபூர்வமாக சிரிக்க அனைவரும் அவனைக் கட்டிப் பிடித்து

“நாமெல்லாம் ஒரே வயித்துல பிறக்காத உடன் பிறப்புங்க. நீ எங்களுக்காக ஏதாவது பண்ணணும்னா அப்பாவோட இடத்துக்கு வாண்ணா. கொலேஜ நீ பொறுப்பெடுத்துக்கோ. நீ ப்ரசிடன்டா இருக்கணும்ணா.” அவன் கேட்க

“ஆமாம்… ஆமாம்… We want Ram as our president.” அனைவரும் கோரஸ் போட்டனர்.

“நீ ப்ரசிடன்ட் ஆனா கொலேஜே சும்மா தர மாஸாத்தான் இருக்கும்ல?” அவன் கேட்க

மற்றொருவன் “செம்மையா இருக்கும்பா. எந்த தப்பையும் பயம் இல்லாமலே பண்ணலாம்.” என்றான்.

“டேய்… நடக்குறத பேசுடா. அதுக்கெல்லாம் அனுபவம் வேணும். எப்படியோ நான் டிக்ரியாவது முடிச்சிருக்கணும். நான் டிக்ரி வாங்கினதும் பாக்கலாம். அதுவரைக்கும் டீன் கொமிட்டி செலெக்ட் பண்றவங்கதான் ப்ரசிடன்டா இருப்பாங்க.” அவன் தெளிவாக விளக்கினான்.

“சரிண்ணா. நீ எதுக்கும் கவலைப்படாத நாங்க இருக்கோம். வரோம்.” என ஒவ்வொருவரும் ஆறுதல் கூறினார்கள்.

கூட்டத்தில் இருந்த தலைவன், “சரி… எல்லாரும் கிளம்புங்க கல்யாணம் முடிஞ்சுடுச்சு.” எனக் கத்திவிட்டு சத்யாவிடம் திரும்பி “நோவ்… மறக்காம கல்யாண சாப்பாடு போட்டுடு.” என்றவன் காவ்யாவிடமும் கூறிவிட்டு அனைவரையும் கூட்டிக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

அடுத்ததாக ஆண்டாள் அக்கா உள்ளிருந்து வெளியே வந்தார். “என்ன ஆச்சு தம்பி?” என்றவர் காவ்யாவை ஆழ்ந்து நோக்கினார்.

“நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.” என்று அவள் கூறிய வார்த்தையில் அவருக்கு நெஞ்சில் பாராங் கல்லை தூக்கிப் போட்ட உணர்வு. அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு சத்யாவின் பேச்சை ஆர்வமாக கேட்கத் தொடங்கினார்.

“இவ்ளோ நடந்திருக்கா?” என வாயைப் பிளந்தவர், காவ்யாவிடம் திரும்பி

“தம்பிதான் ஏதோ தெரியாம பண்ணிட்டார்மா. நீயாவது யோசிச்சிருக்கலாமேமா. உங்க அம்மா எவ்ளோ கஸ்டப்பட்டிருப்பாங்க. அவங்களுக்காகவாவது கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்.” என்று கூறியதும் அவளுக்கு அது நன்றாகவே தாக்கியது.

அவள் முகம் சட்டென்று வாடிட உடனே “இது உங்க வாழ்க்கை. உங்க காதல். உங்க உறவு. இதுல தலையிட எனக்கு அதிகாரம் இல்லை. நான் போறேன். ஏதாவது உதவின்னா மறக்காம இந்த அக்கா கிட்ட கேளுங்க.” என்று கூறிவிட்டு வீட்டு சாவியை அவள் கையில் திணித்து விட்டு “எதுக்கும் கவலைப் படாத. எல்லாமே சரியாகும்.” என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

அவன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு குளிக்க சென்றுவிட்டான். அவளும் அவன் பின்னாலேயே சென்று அறையினுள் அடைந்து கொண்டாள். ஆனால் மனது மாத்திரம் அவள்  பிறந்த வீட்டைச் சுற்றியே இருந்தது. அவள் யாருக்காகவும் கவலைப்படவில்லை. அவளது அம்மாவைத் தவிர. என்ன இருந்தாலும் இத்தனை வருடமாக யாரை எதிர்த்தாலும் தனது அம்மா மாத்திரமே தனக்கு துணையாக நின்றார். அப்பா சற்று ஆறுதலாக பேசினாலும் அவர் பேசிய தொனி சரியில்லை. அப்படியிருந்தும் இன்று அவரைக் கூட தூக்கி எறிந்து விட்டு தனக்குப் பிடித்த ஒருத்தனுக்காக வந்துவிட்டதை நினைந்து கவலை கொண்டாள்.

மனதில் சொல்ல முடியாத அளவு பாரம். இதயம் பாரமாகி அவளால் அந்த பாரத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மூச்சு அடைத்தது. வேதனையும் துயரமும் மனதை உருத்தியது. அவளால் ஒரு நொடி கூட தாயைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை. பேச வார்த்தை வரவில்லை. ஆனால் கண்களால் வழிந்த கண்ணீர் அவள் பேச நினைப்பதை அப்பட்டமாக காட்டியது.

அதே போல்தான் அவனும். யோசிக்காமல் திருமணம் செய்து அவளையும் தனது தனிமைக் கூட்டினுள் அடைத்து விட்டோம். அம்மா, அப்பா, தம்பி, தங்கை என அனைத்து உறவுகளுடனும் சந்தோசமாக வாழ்ந்த அவளை ஒரு நிமிடத்தில் தான் எடுத்த தவறான முடிவு தனி மரமாக மாற்றி விட்டதோ என்ற ஒரு பயம் தற்போது அவனுள் தோன்றியது. தான் அவளை திருமணம் செய்து கொள்ளும் போது உறுதியாகத்தானே இருந்தோம்? தற்போது ஏன் மனது தடுமாறுகிறது? என்ற ஒரு யோசனை. என்ன செய்வதென்றே புரியவில்லை. ஏன் வாழ்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்? யாருக்காக வாழ்கிறோம்? ஏன் திருமணம் செய்தோம்? எதற்காக திருமணம் செய்தோம்? யாருக்காக திருமணம் செய்தோம்? என எதுவும் புரியாமல் விழித்தான். கண்களில் வழிந்த கண்ணீர் தண்ணீருடன் கலந்து அடையாளம் தெரியாமல் போனாலும் ஒருவித பயம் அவனுள்ளே உருவானது.

வெளியே வந்து கதவைத் திறந்தவனுக்கு இன்னும் பயம் அதிகமானது. அவள் அழுகை அவனுக்கு ஒருவித பயத்தை கொடுத்தது. மௌனமான அழுகை. அழுகையில் பலவிதமான அழுகைகள் உள்ளன. ஆனால் அதில் அமைதியான அழுகைக்கே வலிகள் அதிகம். தாக்கமும் அதிகம். அதுதான் சத்யாவின் பயமும். அவளுக்கு தேவை அவளது அம்மா. அவனுக்கு தேவை அவளும் தன்னைப் போல் தனித்து விடப்பட கூடாது என்பது. இரண்டுக்குமே காரணம் காதல். ஆனால் இரண்டிற்கும் தீர்வு அவர்கள் கைகளிலே என்பதை அவர்கள் உணரவில்லை.

அவள் அழுவதைப் பார்த்தவனால் அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிலை போல அமர்ந்திருந்தவளை அணைத்துக் கொண்டு தானும் அழ ஆரம்பித்தான். இருவரது காதலையும் தான்டி தற்போது ஒருவரின் கஷ்டத்தை ஒருவர் பகிர்ந்து கொள்ள நட்பு என்னும் உறவே தேவைப்பட்டது. என்னதான் இருவரும் கணவன் மனைவியாக இருந்தாலும் இருவராலும் ஒருவரை ஒருவர் நட்புடனேயே நோக்க முடிந்தது. காதல் மொத்தமாக காணாமல் போய் நட்பே இருவரும் இடையில் அதிக அளவில் காணப்பட்டது.

அவளது மடியில் படுத்துக் கொண்டவன் தனது மனதில் இருந்த பாரங்களை ஒவ்வொன்றாக கொட்டித் தீர்க்க ஆரம்பித்தான். “சின்ன வயசுலேயே எங்கம்மா செத்துப் போய்ட்டாங்க. அப்பாதான் எல்லாமே. அ… ஆ… ல இருந்து நல்லது கெட்டதுன்னு எல்லாமே சொல்லி கொடுத்தார். அம்மா இல்லாத குறையே இல்லாம வளர்த்தார். அம்மாவா? அப்படின்னா யார்ன்னு கேட்குற அளவு தாய்ப் பாசத்தையும் தந்தார். எல்லாருக்கும் மாதா, பிதா, குரு, தெய்வம். ஆனால் எனக்கு எல்லாமே அப்பாதான். என் உலகமே அவர்தான்.”

“ஆனால் எனக்கும் அவருக்கும் இடையில நடந்த சில பிரச்சனைகளால எங்க ரெண்டு பேருக்கும் இடையில பெரிய கேப் விழுந்து போச்சு. எல்லாமாவா இருந்தவர் ஒரே நாள்ள சில பிரச்சனைகளால இல்லாமலே போய்ட்டார். எல்லா பசங்களுக்கு வர்ர சேம் ப்ரோப்ளம். எனக்கும் வயசு ஆக ஆக அப்பாவ தான்டி போக ஆசை. எனக்கு அவரோட கேரிங் எல்லாம் சிறையில இருக்குற மாதிரி பீல் ஆக ஆரம்பிச்சது. எனக்கு பிடிச்ச விசயங்களை நானே பண்ணணும்னு நினைச்சேன். என் லைப் நானே ரூல் பண்ண நினைச்சேன். என் லைப்ல சில டிஸிஸன் எடுக்க அவரு கொடுக்குற அட்வைஸ் எல்லாம் தேவையில்லைனு நினைச்சேன். என் லைப்ல அப்பா தலையிடக் கூடாதுன்னு நினைச்சேன்.”

“அவரோட அன்பு, கேரிங் எல்லாமே நாளுக்கு நாள் தொல்லையாவும் எரிச்சலாவுமே தெரிய ஆரம்பிச்சது. இப்படியே என் லைப் என் கைக்குள்ள இருக்கனும்னு ஆசப்பட்டதால நகமும் சதையுமா இருந்த அப்பா கண்ணுக்கு எட்டாத தூரத்துக்கு போய்ட்டார். தினமும் அவர் அரவணைப்புல வளர்ந்த நான் அவர் முகத்தை பார்த்து குரல கேட்க முடியாம போய்டுச்சு. எனக்குன்னு இருந்த ஒரே ஒரு அப்பா. அவரையும் மிஸ் பண்ணிட்டேன். நிறைய யூத்ஸ் இன்னைக்கு செய்ற மிகப் பெரிய தப்பு இதுதான். அப்பா கண்டிக்கும் போது நமக்கு அது இரிடேடிங்கா மட்டும்தான் தெரியும். அவர் ஏன் நம்ம லைப்ல தலையிடுறார்ன்னு தோனும். ஆனால் அப்படியான தந்தை கிடைக்குறதுக்கு நாம தவம் செஞ்சிருக்கனும். அப்பா இருக்கிறவனுக்கு அவரோட வேல்யூ தெரியாது.”

“அப்பா இல்லாம கஸ்டப்பட்டு வாழ்றவனுக்குதான் தெரியும் அவர் அருமை. இருக்கும் போது எதுவும் தெரியாது. இல்லாத போதுதான் அவங்க அருமை புரியும். எங்க அப்பா இருக்கும் போது எனக்கு அப்படிதான் இருந்தது. ஆனால் அவர் போன பிறகு இப்போ ஒவ்வொரு நொடியும் அப்பா இல்லாம ஏங்கி தவிக்கிறேன். அப்பா இருக்கும் போது எந்த உறவோட அவசியமுமே எனக்கு தேவை இல்லாம இருந்தது. பட் அப்பா இல்லாதப் போது இவ்ளோ நாளும் நிறைய உறவுகள் என்னை சுத்தி இருந்ததாகவும் இப்போ அப்பா கூட சேர்ந்து எல்லா உறவுகளும் என்னை தனியா விட்டு போய்ட்டதாகவும் தோனுது. அப்போவாவது எனக்காக அப்பா இந்த உலகத்துல ஒரு மூலையில இருக்காரு எனக்கு ஒன்னுன்னா ஓடி வந்துடுவாருன்னு தோனுச்சு. பட்… இப்போ அப்பா கூப்பிட்டாலும் வராத தூரத்துல இருக்காருன்னு நினைச்சா நெஞ்சு அடைக்குது.ஈகோ இருக்கலாம். ஆனால் அப்பா, அம்மா கிட்ட காட்ட கூடாதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்.” என அவன் தன் மனதிற்குள் தோன்றிய எண்ண அலைகளை அவிழ்த்து விட்டான். அவளையும் அழும்படி பணித்தான்.

“நீயும் மனசு விட்டு கத்தி அழுதுடு. அப்போதான் மனசுல இருக்குற பாரம் எல்லாம் குறையும்.” என்றவனின் வார்த்தைகள் அவளுக்கும் சரி என்று தோன்ற அவளும் அவனுடன் சேர்ந்து சத்தமாக தலையில் அடித்து அழ ஆரம்பித்து விட்டாள். அவள் வேண்டுமென்றே அவன் திசையை மாற்ற முயற்சித்தாள்.

“எங்கம்மா… எங்கம்மா மாகாலக்ஷ்மி. என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல்ல. அவளுக்கு அந்த அளவு நான் வேணாம போய்ட்டேனா? ஏன் எங்க வீட்டுல யாருக்கும் அந்த கடவுள் மூளைன்னு ஒன்னையே வெச்சு படைக்கல? மண்டைக்குள்ள மசால் தூள் இருந்திருந்தா எங்கம்மா ஏன் அந்த பார்வதி பேச்ச கேட்டு என்ன பாக்கவே இல்லை? மகாலக்ஷ்மி… உன்னை ஏன் அந்த கடவுள் மூளை இல்லாம படைச்சான்? உனக்கு ஏன் எனக்கு இருக்குற கொஞ்ச அறிவையும் அந்த கடவுள் தரல்ல? ஏன்? ஏன்? மகாலக்ஷ்மி… உன் மிளகு ரசத்தை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். அத விட உன் தயிர் சாதமும் கத்தரிக்காய் கறியையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன். அதாவது பரவாயில்லை. உன்னோட பிரியாணி எனக்கு ரொம்ப பிடிக்கும் மகாலக்ஷ்மி. லக்ஷ்மி… லக்ஷ்மி…” என விஸ்கி அடித்தவள் போல் வாய்க்கு வந்தபடி ஏதோ உலரிய படி அவன் சேர்ட்டைப் பிடித்து

“இன்னைக்கு எங்க வீட்டுல பிரியாணி தெரியுமா? பேசிக்கலி நான் ஒரு பிரியாணி லவ்வர். ஒரு பிரியாணி லவ்வரோட பீலிங்க் உன்ன மாதிரி வெஜிடேரியனுக்கு எங்கடா புரியப் போகுது? எங்கம்மாவுக்கு உருப்படியா அது மட்டும்தான் நல்லா சமைக்க தெரியும். எனக்கு வேற ரொம்ப பசிக்கிது. காலையில இருந்து ஒன்னுமே சாப்பிடல…” என கண்களை கசக்கி கத்தி அழுதவள் அவன் சேர்ட்டை பிடித்து மூக்கை துடைத்துவிட்டு

“நான் என் தம்பிக்கு போன் பண்ணி கேரியர்ல சாப்பாட திருடிட்டு வர சொல்லனும்.” என்று கூறிவிட்டு ஆதிக்கு அழைப்பு விடுத்தான்.

“ஹெலோ…” எதிர் திசையில் பிரியாணியை முழுங்கிக் கொண்டு ஆதி.

“டேய்… என்னடா? என்ன இவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டு என் பங்கையும் சேர்த்து நீ கொட்டிக்கிறியா? மரியாதையா கேரியர்ல எனக்கும் சேர்த்து சுட்டுட்டு வந்து கொடுடா.” என மூக்கை சிந்தியவாறே அவனைத் திட்டினாள்.

அவள் உலருவதைக் கேட்ட சத்யாவுக்கு ஒரு பக்கம் விநோதமாகவும் ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது. “என்ன இவ… இவள நாம அரைக் கழண்ட லூசுன்னுல நினைச்சோம். பட் முழுக் கழண்ட லூசா இருக்கா. இவ்ளோ நேரமா அவங்க அம்மாவுக்காக அழுறான்னுல நினைச்சேன்? இவ என்னடான்னா அவங்க அம்மா பண்ற பிரியாணிக்காக அழுதுட்டு இருக்கா. Crazy Fellow. ” என்றவன் சிரித்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

மதியம் டைனிங் டேபிளில் அமர்ந்து நன்றாக அவள் பிரியாணியை கட்டு கட்டிக் கொண்டிருக்க உள்ளிருந்து வந்த அவன் அவளை பார்த்துக் கத்திக் கொண்டே வெளியில் வந்தான். “ஏய்… அரை மென்டல்… என்னடி பண்ற?” என கத்த

“டேய்… இப்போ எதுக்கு மீன் மார்க்கெட்ல கத்துற மாதிரி கத்துற? காது கிழிய பாக்குது.” அவள் வாய்க்குள் சிக்கனை முழுங்கிக் கொண்டே கூற

“பின்ன… கத்தாம என்னடி பண்ணுவாங்க? எங்க வீட்டுல நோன்வெஜ் அல்லோவ்ட் இல்லை. நீ பாட்டுக்கு நடு வீட்ல உட்கார்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டுட்டு இருக்குற?” எனத் திட்டியவன் கையிலிருந்த சொம்பை எடுத்து “போட்டேன்னா பாத்துக்கோ…” என அவளை அடிப்பது போல் சைகை செய்ய,

“ஓஹ்… நோன்வெஜ்னா உனக்கு என்ன அவ்ளோ கேவலமாவா போச்சா? என் நாடி நரம்பு மூளை ரத்தம் இதயம்னு எல்லாப் பார்ட்ஸ்லையும் ஓடுறது நோஜ்வெஜ் ரத்தம்டா. இவ்ளோ நாள் நோன்வெஜ்தான் சாப்பிட்டேன். அதே போல இனியும் நோன்வெஜ்தான் சாப்பிடுவேன். நோன்வெஜ் ஒரு சாதாரண பெயர் இல்லை. இட்ஸ் என் எமோஷன். Do you know that? How dare to say this to me?” எனக் கை நீட்டி கத்த அவள் தலையில் கொட்டு விட்டவன்

“ஏய்… நீ என்னவா இருந்தாலும் ஐ டோன்ட் கெயார். ஆனால் நீ சாப்பிட்ட இந்த ப்ளேட்ட கூட நான் தொட மாட்டேன்.” என திமிராக கூற அவள் கோபமாக எழுந்தாள்.

“ஓ… சேர் நான் நோன்வெஜ் வெச்சி சாப்பிட்ட இந்த ப்ளேட்ட கூட தொட மாட்டீங்களா? அப்போ நான் கோலேஜ்க்கு ப்ரைட் ரைஸ்ன்னு சொல்லி கொண்டு வரும்போது நல்லா வாங்கி வாங்கி தின்னேல்ல? இப்போ மட்டும் என்னடா ஓவரா கத்துற?” அவள் முறைக்க

“ஏய்… ஏய்… வெய்ட்… அதுக்கும் இதுக்கும் என்னடி சம்பந்தம்?” அவன் பச்சைப் பிள்ளயாய் கேட்க

“அது உனக்குதான்டா ப்ரைட் ரைஸ். ஆனால் எனக்கு பிரியாணி.” அவள் கண்கள் மின்னக் கூறினாள்.

“அடிப் பாவி… சதிகாரி… அப்போ நீ ப்ரைட் ரைஸ்ன்னு சொல்லி கொடுத்தது பிரியாணியவா?” என அவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கேட்க

“ஹான்… ஹான்… நீதான் முட்டாள். பிரியாணிக்கும் ப்ரைட் ரைஸ்க்கும் டிப்ரன்ஸ்ஸே தெரியாம நான் கொடுத்தத சாப்பிட்ட. நீ முட்டாளா இருந்ததுக்கு நான் என்னடா பண்ணுவேன்?” என்றவள் பிரியாணியை அள்ளிப் பூத்திக் கொண்டிருந்தாள்.

“அடிப் பாவி. கட்டின கணவன் வெஜ்ன்னு தெரிஞ்சும் நோன்வெஜ்ஜ வெஜ்ன்னு சொல்லி ஏமாத்தி தின்ன வெச்சிருக்கியேடி. உன்னெல்லாம் ஒன்னா நம்பர் போர் ட்வென்டி லிஸ்ட்ல சேர்க்கனும். உன் ப்ரைட் ரைஸ் தின்ன ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு வந்து குளிச்சேனா பல் விலக்கினேனான்னு தெரியலயே.” அவள் தலையில் கை வைத்து அழ

“அடச் சீ… வாய மூடு. இல்லன்னா மட்டும் நான் பிரியாணின்னு சொன்னா சாப்பிட்டுடுவியா? அதனாலதான் பொய் சொன்னேன்.” என்றவள் மீண்டும் தன் வேட்டையை துவங்க அவன் போய் சோபாவில் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு புத்தம் சரணம் என அமர்ந்து விட்டான்.

சற்று நேரத்தில் வெளியில் இருந்து விசில் அடித்தவாறு உள் நுழைந்தான் ஆதி. அவனை எதிர் பார்த்து “வாடா… வா… உனக்காகத்தான் காத்துட்டு இருக்கேன். உங்க அக்காவ என் தலையில தள்ளிவிட்டு என் வாழ்க்கையையே நாசம் பண்ணது நீதான். முதல்ல உன்னை கவனிக்கனும்.” என அவனை முறைத்தவாறே மனதில் நினைத்துக் கொண்டான்.

உள்ளே நுழைந்தவன் “ஹலோ… மாமா… எப்படி இருக்க? Are you happy baby?” என அவனிடம் சிரித்தவாறு கேட்க அவனது சட்டையை கொத்தாக பிடித்தவன்

“என்னாது… Are you happy babya?’ என அவன் சட்டையைப் பிடித்து ஒரு சுழட்டு சுழட்டியவன் “ஒரே நாள்ள என் மொத்த சோலியையும் முடிச்சிட்டு இப்போ வந்து ஆர் யூ ஹேப்பி நௌவ்வுன்னாடா கேட்குற?” என சட்டையைப் பிடித்து கத்தினான்.

“டேய்… என்னாச்சுடா மாமா?” என எதுவும் தெரியாதவன் போல கண்களை உருட்டி ஆதி கேட்க

“என்ன ஆச்சா? சாவடிக்கிறாடா என்னைய.” என்றான் கடுப்புடன்.

“நீயாப் போய் தேடிக்கிட்டதுடா அது. அதுக்கு நான் என்ன பண்றது? இப்படி அடிக்கிற? புதைகுழியில விழுறது நீ. பின்ன என்கிட்ட வந்து கத்துற?” என்றான் அவனை முறைத்து

“சரி. நான்தான் சின்னப் பையன். அறிவு இல்லாம பண்ணிட்டேன். உனக்கு எங்கடா போச்சு அறிவு? கொஞ்சமாவது எடுத்து சொல்லி புரிய வைக்க முடியாதா உன்னால?” என்றான் வராத கண்ணீரைத் துடைத்தவாறே.

“என்னது? என்ன சொன்ன நீ? நீ சின்னப் பையன்? ஏன்டா வாயக் கிளர்ர? நல்லா வருது…. இருபது வயசு கழுதை… இதுக்குள்ள பெரிய பையனாம். நான் என்ன சொன்னேன்? கொஞ்சமாவது யோசிச்சு பாருன்னு சொன்னேனா இல்லையா? நீதான் கேட்கல. நான் என்ன பண்ண? உனக்கே தெரியும்ல? எப்போ இருந்து அவள பாக்குற. சோ… உஷாரா இருந்திருக்கலாம் தானே? ஏன்டா என் உயிர எடுக்குற?” என தலையில் அடித்துக் கொண்டான்.

“டேய்… எல்லாருமா சேர்ந்து என்ன உசுப்பேத்தி விட்டு கல்யாணம் பண்ண வெச்சிட்டீங்க. சும்மா இருந்தவன புடிச்சு கட்டு கட்டுன்னு சொல்ல சொல்ல நானும் எரிச்சல்ல தாலியக் கட்டி தொலைச்சிட்டேன்டா. ஆனால் அது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்போதான் தெரியுது.” என சலித்துக் கொண்டது அவன் பேச்சிலே தெரிந்தது.

“சரி மாமா. விடு விடு. நடந்தது நடந்து போச்சு. இதுக்கே இப்படியா? இன்னைக்கு தானே முதல் நாள். வாழ்க்கை முழுக்க அவ தொல்லைய தாங்கிட்டு தானே இருக்கணும். நான் ஆசிர்வாதம் பண்றேன். வாழ்க வழமுடன்.” என்று கையைத் தூக்கி காட்டிட

“ஆதி… அம்மா எப்படி இருக்காங்க?” எனக் கேட்டாள் காவ்யா ஏதோ ஒன்றை எதிர்பார்த்தவாறு.

“தெரியலக்கா. உன்னையும் சத்யாவையும் கல்யாணம் பண்ணி வெச்சதால பாட்டிக்கு என் மேலயும் கோபம். அதனால வீட்டுக்கு வர வேணாம்னு சொல்லிட்டாங்க. இப்போ என் ப்ரண்ட் வீட்டுலதான் தங்குறேன்.” என்றவனைப் பார்த்து

“ஆதி… என்ன மன்னிச்சிடுடா. என்னால்தான் எல்லாமே.” என அவள் கூற

“அதெல்லாம் ஒன்னும் இல்லைக்கா. அவங்க குணம்தான் உனக்கு தெரியும்ல?” என்றான் ஆதி கவலையாக.

“ஆதி… அம்மாவ நினைச்சா கவலையா இருக்கு.” காவ்யா வேதனையுடன் கூற

“அடப் போக்கா. நீ வேற… அவங்க இன்னேரம் சந்தோசமா இருப்பாங்க. உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்குல?” அவளை ஆதி அரவணைத்துக் கூற சத்யா புன்னகைத்தான்.

“சரி. உன்ன பாத்துட்டு போகதான் வந்தேன். இதோ… ரெண்டு பேருக்கும் சாப்பாடு. சாப்டு தூங்குங்க. வரேன்.” எனக் கூறி கையில் கெரியரைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

“சாப்பிட வர்ரியா?” காவ்யா கேரியரைத் திறந்து சாப்பாட்டை வாசம் பிடித்தவாறே கேட்டாள்.

“வேணாம்பா… உன் சாப்பாடே வேணாம் தாயே. பட்டினி கிடந்து சாவேனே தவிர நீ கொடுக்குறத சாப்பிட மாட்டேன்.” அவன் கூறிவிட்டு செல்ல எத்தனிக்க அவன் சேர்ட்டை பின்னாலிருந்து இழுத்து நிறுத்தியவள்

“அம்மா சத்தியமா இது வெஜ்டா.” அவள் தலையிலடித்துக் கூற ஏதோ குருட்டு நம்பிக்கையில் அவளுடன் அமர்ந்நு சாப்பிட்டான். சாப்பிட்டு முடித்து கை கழுவிட்டு “நான் தூங்க போறேன்.” அவன் கூற அவள் போன் நோண்டிக் கொண்டிருந்தாள்.

“ஹெல்லோ… நான் தூங்க போறேன்.” அவன் அழுத்தமாக மீண்டும் கூற

“தூங்குறதுன்னா தூங்கு. அதுக்கு நான் என்ன பண்ண?” என அவன் முகத்தையே பாராமல் அவள் போனை நோண்டிக் கொண்டிருக்க

“ட்யூப் லைட்.” தலையிலடித்துவிட்டு சென்று தூங்கிவிட்டான். அவன் தூங்கி பத்து நிமிடத்தில் அவளும் சென்று அவனை அணைத்துக் கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து தூங்கிவிட்டாள்.

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!