காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 17 🖌️

5
(1)

அரை நிலா வெளிச்சத்தில் பாறையில் அமர்ந்து கொண்டவன் பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்க கண்கள் கலங்கி கண்ணீர் ஊறியது ஆதிக்கு. நிலாவையே வெரித்து வெரித்துப் பார்க்க குழந்தை அவனை நோக்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஒன்னரை மணித்தியாலமாக இருக்க பொறுமை தாங்காதவள் அவனை தன் பிஞ்சுக் கரங்களால் வருடி திசை திருப்பினாள். ஆனால் அவன் வானை நோக்கி பார்த்தவாறே “என்ன?” எனக் கேட்க

“நீங்க மிஸ் பண்றீங்களா? நான் உங்களை விட அதிகமா மிஸ் பண்றேன்.” என்றாள் காவ்யாவையும் சத்யாவையும் நினைத்தவாறே.

அவளைத் திருப்பிப் பார்த்து அவள் தலையை வருடியவாறே “எல்லாரும் அவங்களோட பேட் முடிஞ்சா  போய்த்தான் ஆகணும்டா. பீல் பண்ணாத.” என அணைத்துக் கொண்டான்.

“யாரு சொன்னா அவங்க எங்கேயும் போகல. நம்ம கூடதான் இருக்காங்க.” என பக்குவமாக கூறியது குழந்தை. அவள் பேச்சில் விசித்திரமாய் உணர்ந்தவன் அவளை புருவம் உயர்த்தி ஆச்சரியமாக பார்க்க

“இறந்து போனவங்க எல்லாருமே வானத்துல ஒரு ஸ்டாரா மின்னிக்கிட்டே இருப்பாங்க. அதோ பாருங்க.” என அருகில் இருக்கும் இரண்டு அழகிய நட்சத்திரங்களைக் காட்டி

“அந்த லெப்ட் சைட்ல இருக்கிறது என்னோட அப்பா. ரைட் சைட்ல இருக்கிறது என்னோட அம்மா.” எனக் கூறி புன்னகைக்க சப்பியாக பொம்மை போல் இருந்த அவளை இழுந்து தன் கைவளைவிற்குள் வைத்து முத்தம் கொடுத்தான் ஆதி.

“ஆமாம். நீ சொல்றது கரெக்ட்தான். இறந்தவங்க நம்மள விட்டு எங்கேயும் போகல. நம்ம கூடதான் இருக்காங்க. வானத்துல நட்சத்திரமா மின்னிட்டு. அதே மாதிரிதான் என் அப்பா அம்மாவும் கூட.” என்ற யூவி வானத்தைப் பார்த்து கண்ணீர் விட அவள் கண்ணீரோ அவனை அம்பாய்த் தாக்கியது.

தாக்கியதற்குக் காரணம் தான் தெரியவில்லை. அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு அவள் கைப்பிடித்து உனக்காக நான் இருக்கிறேன் என்று கூற மனம் சொல்ல அவன் கைகள் இரண்டையும் கட்டாயப்படுத்தி அடக்கி வைத்துக் கொண்டான். நிவி ஓடிச் சென்று அவள் அருகே நின்று யூவியை கை காட்டி அவள் உயரத்திற்கு அழைக்க அவள் குனிந்து நிவியை நோக்கி என்னவென்று புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

குழந்தை அவள் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரை தன் பிஞ்சுக் கரங்களால் துடைத்து விட்டவாறே “கவலைப்படாதீங்க. எல்லாமே சரியாகிடும்.” எனத் தன் மழலை மொழியின் கண்களை உருட்டி உருட்டி கூற அவள் பேச்சில் மொத்த கவலையும் மறந்த யூவியின் மனம் லேசானது.

அவளை முத்தமிட்டு விட்டு “நீ ரொம்ப க்யூட்டா சப்பியா இருக்க.” என அவள் மூக்கை பிடித்து ஆட்ட அவள் யூவியை விட்டு நகர்ந்து ஓடி ஆதியிடம் சென்று நின்று

“எல்லாரும் என்கிட்ட அப்பா ரொம்ப கெட்டவருன்னு சொன்னாங்க. அம்மா இறந்ததுக்கு அவர்தான் காரணம்னு சொன்னாங்க. அப்படியா?” என முகம் சுருங்கிட வினவியவளைப் பார்த்து அவனுக்கு பாரிதாபம், கோபம், வெறி என அத்தனையும் ஒன்றாய் தலையினுள் வெடித்திட

“எவன் சொன்னான் அப்படி? இந்த சமூகம் எவன் நல்லவனோ அவனைத்தான் தப்பா பேசும். அதுல நம்ம வீட்டாளுங்க ஒரு படி மேல. நீ இதெல்லாம் யோசிக்க கூடாது. உங்க அம்மாவ கொன்னது நம்ம வீட்டுல இருக்கிறவங்களே தவிர உன் அப்பா இல்லை. இன்னும் உனக்கு தெளிவா சொன்னா, உன் அப்பா இறந்ததுக்கு பிறகுதான் உன் அம்மா இறந்தா. அப்போ எப்படி அவரால உன் அம்மாவ கொலை பண்ண முடியும்?” எனக் கூறி பிஞ்சுக் குழந்தையின் அடி மனதில் ஊறியிருந்த சந்தேகத்தை தெளிவு படுத்தினான்.

“எனக்கு அப்போவே தெரியும். என் அப்பா தப்பு பண்ண மாட்டாருன்னு. ஆனால் அங்கிள்… அங்கிள்… உங்ககிட்ட அப்பா போட்டோ இருக்கா?” என உற்சாகமாய் கேட்க ஆதி வேண்டு மென்றே இல்லை எனத் தலையாட்டினான்.

குழந்தை முகம் வாட்டம் கொண்டது. “இல்லையா?” என சோகத் தொனியில் குரல் ஒலிக்க போனிலிருந்து எடுத்தான் சத்யாவின் புகைப்படத்தை.

தன் தந்தையின் புகைப்படத்தைக் காண வேண்டும் என்ற அவளது கனவு நினைவாகிட சந்தோசத்தில் விழிகள் விரியப் பார்த்தவாறே “ஹை… அப்பா.” என்றவாறு தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு “ஹை… அப்பா…” எனத் துள்ளிக் குதித்து கூச்சல் போட்டவாறும் “அப்பாவ பாத்துட்டேன்.” எனக் கத்தியவாறும் ஆட்டம் போட்டாள்.

அவளைப் பார்த்த ஆதியின் இறுகிய வதனத்தில் புன்னகை புதிதாகப் பூத்தது. அதனைக் கண்டு “இவனுக்கும் கூட சிரிக்க வருமா?” என்று தனக்குள் எண்ணிக் கொண்ட யூவி அங்கிருந்து நகரப் போனதும் “நில்லு…” என்ற அவனது வன்மையான குரலில் திக் என்று ஆனது யூவிக்கு.

அவள் அடுத்த அடி வைத்து நகராமல் நின்றிருந்தாள். அதனைத் தொடர்ந்து அவள் முன்னே வந்தவன் அவளை அலசி ஆராய்ந்து தலை முதல் கால் வரை பார்த்துவிட்டு

“இங்க என்ன பண்ணிட்டு இருக்க?’ கேட்டான் வன்மையான குரலுடன்.

“மாட்டினோம்டா. யூவி… உன் கதை கந்தல்டி. இவன் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிடு.” என்று தனக்குள் கூறியவாறே

“அங்கப் பாருங்க.” என அவன் பின்னே காட்டிட அவனோ திரும்பி பார்க்க அவள் அவ்விடம் விட்டு அந் நொடியே ஓடியிருந்தாள். ஆனால் அவன் விடுவானா? ஓடி வந்து அவள் முன் நின்றான்.

அவள் “இவன்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது போலயே. மூஞ்சப் பாரு. பைத்தியம்.” என மனதில் ஆதியைத் திட்டிக் கொண்டு

“இப்போ உனக்கு என்ன வேணும்?” எனத் திமிராகக் கேட்க அவன் ஒரு வெற்றுப் புன்னகையை உதிர்த்துவிட்டு அவளை நெருங்கியவாறு அவள் பின்னால் இருந்த கல்லில் தன் ஒரு கையை வைத்து மற்றொரு கையை இடுப்பில் வைத்தவாறு அவளைப் பார்த்து

“எனக்கு உன்கிட்ட இருந்து ஒரே ஒரு… ஒரே ஒரு… சோரி மட்டும் வேணும். சொல்லு. நான் உன்ன விட்டுர்ரேன்.” எனக் கூறி கையை எடுக்க சற்றும் பயமே இல்லாமல்

“என்ன பாவ மன்னிப்பா?” எனக் கேட்டவாறே அவளது கட்டை விரல்களை எடுத்து அசைந்தவாறு “உன்னால ஒன்னும் கிழிக்க முடியாது.” எனக் கூறினாள் திமிராக. அவள் வார்த்தையில் அர்த்தம் உணர்ந்தவன் அவளை விட்டு விலகி நின்று பயங்கரமாக சிரிக்க அவன் கொடூரமான சிரிப்பு சத்தம் பரந்து விரிந்து கிடக்கும் காட்டின் ஒவ்வொரு திசையில் எதிரொலிக்க பயமோ அவளை ஆட்கொண்டது.

“இப்போ எதுக்கு இப்படி லூசு மாதிரி சிரிக்கிற?” என்றாள் எரிச்சலுடன்.

அவள் கேள்வியில் அவனோ சற்று சந்தோசப்பட்டு “இங்கப் பாரு இன்னும் 48 ஹவர்ஸ்ல உன்ன என் ஸ்லேவா ஆக்கி காட்டுறேன்னு சொல்லிருக்கேன். ஆனால் நீ என்ன ரொம்ப சீண்டிப் பாத்துட்ட. அதனால எண்ணி 24 ஹவர்ஸ்க்குள்ள எப்படி? எப்படி? ஜஸ்ட் ட்வென்டி போர் ஹவர்ஸ்க்குள்ள நான் உன்னை என் காலுக்கு கீழ வெக்கிறேன். உனக்கு ரெண்டு சான்ஸஸ் கொடுத்தேன். ஆனால் நீ அந்த ரெண்டு சான்ஸஸ்ஸையும் மிஸ் யூஸ் பண்ணிட்ட. நீயே வந்து என் கால்ல விழுவ பாரு. விழ வெக்கிறேன். நாளைய நாள்… உனக்கு ரொம்பக் கொடூரமா இருக்கும். So, the real story begins…’ என்றவாறே கூறிவிட்டு ஒரு திமிர் பார்வையையுடன் விசிலடித்தக் கெண்டே சென்றுவிட்டான்.

“மூஞ்சப் பாரு அடுத்தவங்க பீலிங்ஸை சுத்தமா புரிஞ்சிக்க தெரியாத மிருகம்.” என தன்னை ஒரு பெண் என்று கூட மதிக்காமல் பேசிச் செல்பவனைப் பார்த்து திட்டித் தீர்த்துக் கொண்டாள். ஆனால் அப்போதுதான் தன் உயிர்த்தோழி அபியின் நினைவுகள் அவள் முன்னே தள்ளாடியது.

“ஹைய்யய்யோ… அபி வேற அவ போய் பெஸ்டி கூட போன் பேசிட்டு இருக்காளே. இவன் வேற அந்தப் பக்கமாக போறான். யாராவது வராங்களான்னு பார்க்க சொன்னா. நான் வேற இங்க வந்து நின்னுட்டு இருக்கேன். ராட்சசன் பாத்தான் அவ காலி. பேசாமப் போய் என்ன நடக்குதுன்னு பாப்போம்.” எனக் கூறியவாறே அவர்களை நோக்கி ஓடினாள்.

ஆதி தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர அதில் மூழ்கியிருந்தான். யாருக்கும் தெரியாமல் தொலைபேசியில் பேசிக்கொண்டு வந்த அபியும் பின்னோக்கி சில எட்டுக்களை வைத்து சிக்னலைத் தேட ஆதியில் மேல் மோதிக் கொண்டாள். அவன் இந்த இரவு நேரத்தில் யார் இங்கே என எண்ணி பின்னால் திரும்ப அபியுமே திரும்பி இருந்தாள். அவனைப் பார்த்ததும் அவளின கைகள் வெடவெடக்க காதில் வைத்த தொலைபேசியை அப்படியே கை தவறி கீழே போட்டு விட்டாள்.

“அபி இப்போ இந்த டைம்ல வெளில என்ன பண்ணிட்டு இருக்க?” என அவளை முறைத்துக் கொண்டு கேட்க அவளது கால்களும் கைகளும் நடுக்கம் கொள்ள “நான்… நா… நா…” என நாவு குளறியது.

“என்ன நா… நா… நா… பாடிட்டு இருக்க?” என கேட்டான் கூர்மையான பார்வையை அவளிடம் வீசியவாறே.

இவற்றை எல்லாம் கவனித்த யூவி “அடப்பாவமே புலிக்கிட்ட மாட்டின எலி மாதிரி ஆகிட்டாளே. பாப்போம்… எத்தனை தடவை என்ன ஸ்வேதாக்கிட்ட போட்டுக் கொடுத்திருக்கா. இன்னைக்கு அவ மாட்டினாளா?. கொஞ்சம் அனுபவிக்கட்டும்.” என சற்று அவளை சீண்டிப் பார்க்க நினைத்து வேடிக்கை பார்த்தவாறே நின்று கொண்டாள்.

அபி பயத்தில் வார்த்தை வராமல் எச்சில் விழுங்கிக் கொண்டிருந்தாள். அவன் தன் கம்பீரமான குரலை உயர்த்தி “கேட்டதுக்கு பதில் வருமா வராதா?” என கத்தி அதட்ட அதில் திடுக்கிட்டவளின் கண்களில் நீர் ஊற

“போன்… போன் பேச… வந்தேண்ணா.” எனகவும் அடுத்த நிமிடம் கன்னம் தாருமாறாக வலித்தது.

“அறிவில்லை. இந்த நேரத்துல போன் பேசுறேன்னு சொல்ற? இடியட். அதுதான் வீட்டுல ரூல்ஸ் இருக்குல்ல பொண்ணுங்க ராத்திரி நேரத்துல போன் பேசக் கூடாதுன்னு? பின்ன எதுக்கு இப்படி பண்ண? ஹா???” என அவளை மூச்சு விடாமல் திட்டினான் ஆதி.

அவள் தலையைக் குனிந்து கொண்டிருக்க கண்களில் நீர் வெள்ளமாக கரைபுரண்டோடியது. அவள் அழுகையில் தன்னை சற்று சமன்படுத்திக் கொண்டவனோ மூச்சை இழுத்து விட்டு “என்ன லவ்வா?” எனக் கேட்கவே அவளிடம் எந்த பதிலும் தோன்றாததில் கடுப்பானான் ஆதி.

“என்கிட்ட லவ் பண்றேன்னு சொல்றதுக்கே பயப்படுறீயே, நாளைக்கு உன் பாட்டி பார்வதி வந்து கேட்டா என்ன பண்ணுவ? நான் லவ் எல்லாம் பண்ணல பாட்டி நீங்க சொல்ற பையனையே கல்யாணம் பண்ணிக்கிறன்னு நிக்க மாட்டன்னு என்ன நிச்சயம்? ஒருத்தன லவ் பண்ணா அந்த ஒருத்தனுக்காகவே வாழனும். வாழ்ந்தா உன் கூட. செத்தாலும் உன் கூடதான்னு இருக்கனும். அதுதான் உண்மையான லவ். நீ இருக்கும் போது எவன் வந்தா எனக்கென்னன்னு சொல்ற மாதிரியான ஒரு லவ்வா இருக்கனும். லவ் பண்றதுக்கு தைரியம் வேணும். காவ்யா… என் அக்கா. அவக்கிட்ட அது இருந்திச்சு. ஆனால் உன்கிட்ட? யோசிச்சு டிஸைட் பண்ணிக்கோ.” அவன் குரல் மென்மையாக வர அவனை தலை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள் அபி.

அவள் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவன் அவளுக்கு வலது பக்கமாக திரும்பி நின்று “இனிமேல் இந்தப் பக்கம் உன்னை இரவு நேரத்துல நான் பாக்க கூடாது. அதுக்கு முதல்ல நீ ப்ரண்டுன்னு சொல்லி ஒருத்திய கூட்டிட்டு வந்தியே. அவ ப்ரண்சிப்ப கட் பண்ணிடு. அவக் கிட்ட இருந்து இன்பெக்சியஸ் டிஸீஸ் மாதிரி உனக்கும் திமிரு, அகம்பாவம்னு தொத்திக்க போகுது.” என்றான் பின்னால் மறைந்திருந்த யூவியை ஓரக் கண்ணால் பார்த்தவாறு.

“அவ ரொம்ப நல்ல பொண்ணு அண்ணா.” என நடந்தது தெரியாமல் நண்பிக்கு சாதகமாகப் பேசினாள் அபி.

“அப்டியான நல்லப் பொண்ணுதான் நீ இப்படி மாட்டிட்டு இருக்கும் போது உன்னைக் காப்பாத்தணும்னு நினைக்காம பாறைக்கு பின்னாடி ஒளிஞ்சு நின்னு இதையெல்லாம் ரசிச்சிட்டு இருக்காளா?” என யூவியைக் கோர்த்து விட்டுவிட்டான்.

யூவிக்கோ பாராங்கல்லை தலையில் தூக்கிப் போட்டது போன்ற உணர்வு. “லூசு… போட்டுக் கொடுத்துட்டானே… இவ வேற இப்போ என்ன பண்ணுவான்னு தெரியலயே” எனக் கைகளைக் கசக்கி அவனை முறைக்க அபி அவளைப் பின்னோக்கிப் பார்த்தாள். அவள் மனம் யூவி மீது கோபம் கொண்டது.

யூவி தன் உயிர்த்தோழியை எவ்வாறு சமாதானப்படுத்துவது என யோசித்தவாறே அவள் அருகில் சென்று “சோரி அபி… தெரியாம இப்படி ஆகிடுச்சு.” என்றான் பாவமாக.

“சோரியா? இன்னைக்கு நான் அவன லவ் பண்ணவே இல்லன்னாலும் அவன்கிட்ட அதுக்காக அடி வாங்கிட்டு நிக்கிறேன். எல்லாம் உன்னாலதான்.” அவள் கண்களில் விழிநீருடனும் அவன் அடித்ததில் கசங்கிய கன்னத்தைத் தடவியவாறும் யூவியின் கையில் போனைத் திணித்து விட்டு கோபமாகச் சென்று விட்டாள்.

அதில் தடுமாறிய யூவி “எல்லாமே இவனாலதான். மூஞ்சப்பாரு குரங்கு.” என அவனை வஞ்சிக் கொண்டவாறே போனில் வருணுக்கு அழைத்தாள். வருண் அவளது அப்பாவின் நெருங்கிய நணபரின் மகன். அவனிடமே தனது அப்பாவின் சொத்துக்களை ஒப்படைத்துவிட்டு வந்திருக்கிறாள். ஆனால் அவளிடம் எதையும் கூறாமல் இங்கு வந்துவிட்டாள். அதில் கோபம் கொண்டு வருண் அவளுடன் பேசுவதில்லை. அபியிடம் யூவியைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வான். வருண் போனைத் தூக்காததால் வீட்டினுள் சென்றுவிட்டாள்.

உள்ளே அவள் “அபி… அபி…” எனக் கூவியவாறே அவளைப் பிடிக்க செல்ல அவள் கோபத்தில் கதவை அடைத்துக் கொண்டாள்.

“அபி… கதவைத் திற. நான் சொல்றத கேளு…” எனக் கதவை தட்ட

“நீ எதுவுமே சொல்ல வேணாம்டி. இனிமேல் என் மூஞ்சிலேயே முழிக்காத.” என்றாள் கோபமாக. யூவிக்கு கதவைத் தட்டித் தட்டி கதவே தேய்ந்து விடும் போல் இருந்தது.

இறுதியாக தன் முயற்சி ஈடேறாததால் “சரிடி உன் கோபம் போனதுக்கு பிறகு என்கிட்ட பேசு.” என்றுவிட்டு சென்று விட்டாள்.

இங்கு ஆதி ரித்துவிடம் தொலைபேசியில் தன் வேலை விடயமாக பேசிக் கொண்டு இருண்ட பேய்க் காட்டினுள் யாரும் இல்லா ஒற்றையடிப் பாதையினுள் நடந்து சென்று கொண்டிருந்தான். பின்னால் இருந்து யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. தொலைபேசியை காதிலிருந்து விலக்கி கூர்மையான பார்வையுடன் வெளியே நோக்கினான் ஆதி. எதுவும் தோன்றாததால் முன்னோக்கி நடந்தவன் அப்போதுதான் கவனித்தான் தன்னை தாக்க வந்த மர்ம நபரின் நிழலை.

உடனே பின்னால் திரும்பி அவன் கையைப் பிடித்து தள்ளிவிட கீழே விழுந்தவன் மறுபடியும் ஆதியைத் தாக்க முயற்சித்தான். ஆதி வேகமாக கொலைகாரனின் நெஞ்சில் எட்டி உதைக்க அவன் தடுமாறிக் கீழே விழுந்து விட்டான். அப்போதும் தன் கொலைவெறியை விடாமல் அவனிடம் நெருங்கி கத்தியை அவன் நெஞ்சில் செருக முயற்சி செய்திட அது தவறிப்போய் அவன் கையின் சதைகளுக்குள் ஊடுறுவிச் சென்று ரத்தம் சீறி அடித்து முகமூடி அணிந்த அம் மர்ம நபரின் கண்களில் தெறித்திட அக் கண்களை கூர்மையாக நோக்கினான் ஆதி.

எங்கேயோ பார்த்த கண்கள். வலி அவனைத் தாக்கினாலும் அதனை வெளிப்படுத்தாது அவன் முகமூடியைக் கழட்டி அவன் முகத்தைப் பார்க்க முயற்சி செய்தான். அந்த கொலையாளி கட்டியிருந்த துணி விலக இருளில் அவன் முகம் தெளிவாகத் தெரியா விட்டாலும் அவன் கூந்தல் விரிந்து கொண்டதை வைத்து அது பெண்தான் என அறிந்து கொண்டான்.

அவளின் கைகளைப் பிடித்து பின்னால் வைத்து “யாரு நீ? நீதானே காவ்யாவ கொன்ன? எதுக்கு கொன்ன? உன்னோட நோக்கம்தான் என்ன?” எனக் கேட்டான் கண்களில் தீயைக் கொண்டு. அவள் அதெற்கெல்லாம் அசரும் ஆள் போல் தெரியவில்லை.

அவனைத் தள்ளிவிட்டு ஓடித் தப்பிக்க முயற்சி செய்தாள். ஆனால்… அவன் ஓடிக் கொண்டிருப்பவளின் மீது தன் சேர்ட்டின் பின்னால் செருகி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காலில் குறி பார்த்து சுட அவள் கால்களை குண்டுகள் துளைத்துச் சென்றன. அதில் கீழே விழுந்தவள் எழுந்து நொண்டி நொண்டியே ஓட இவனும் அவள் பின்னாலேயே துரத்திச் சென்று விட்டான். ஒரு கட்டத்திற்கு மேலே அவள் ஆதியின் கண்களிலிருந்து மறைந்துவிட்டாள்.

“ஷிட்…” என கையை தொடையில் வேகமாக அடித்துக் கொண்டு தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினான் ஆதி. அடுத்த நொடி கோபமாக வீட்டை நோக்கி சென்றவன் உள்ளே நுழைய எத்தனித்த போது படியின் அருகே இரத்தத் துளிகளைக் கண்டு கொண்டான். அப்போதுதான் அவன் நிச்சயித்தான் கொலைகாரி இந்த வீட்டில் உள்ள ஒருத்திதான் என்பதை. இப்போது பல்லவியின் மீதுள்ள சந்தேகம் சற்று அதிகரித்தது. அதை மொத்தமாக முடிவு செய்ய நினைத்துக்கொண்டான்.

உள்ளே “அம்மாஆஆ…” எனக் கத்தியவாறே அவன் உள்ளே நுழைய அவரோ இவன் ஏதோ பெரிய பிரச்சினையை எடுத்து வந்துவிட்டான் எனப் பயந்து கொண்டு வெளியில் மின்னல் வேகத்தில் வந்து நின்றார்.

அவன் இரத்தம் படிந்த வெள்ளை நிற சேர்ட்டைப் பார்த்து “கார்த்திக்…” என கத்தியவாறே அவன் அருகில் சென்று அவனை ஆராய்ந்தவர்

“என்ன ஆச்சுடா? ஏன் இப்படி ரத்தம் கொட்டிக்கிட்டு இருக்கு? யாராவது வாங்களேன்.” என பதற்றத்தில் அனைவரையும் அழைக்க அனைவரும் முற்றத்தில் குவிந்தனர்.

அவன் நிலையை எண்ணி சிலர் துடிக்க பலர் மகிழ அவன் என்னவோ இவை எவற்றையும் பொருட்படுத்தாமல் அனைவரது கால்களையும் காயம் உள்ளதா என பார்த்துக் கொண்டான். ஆனால் ஒருவரது காலிலும் எந்த காயமும் இல்லை.

அவன் நிலை கண்ட பல்லவி “கார்த்திக் மாமா…” என்றவாறு அவன் அருகில் வந்து நின்று

“உங்களுக்கு எதுவும் இல்லல?” என கண்ணீர் மெல்க கேட்டாள் மனதில் வேதனையோடு பல்லவி.

பாட்டி துடித்துப் போய் “சீக்கிரம் யாராவது டோக்டரை கூப்பிடுங்க. தயவு செஞ்சு கூப்பிடுங்க.” என அவனை ஆராய திடீரென உள்ளே நுழைந்த யூவி இதைப் பார்த்து அதிர்ந்து அவனிடம் அவசரமாக ஓடி வந்தாள்.

“என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க எல்லாரும்? உங்களுக்கு என்ன பைத்தியமா? அவருக்கு அடி பட்டிருக்கு. நீங்க பாட்டுக்கு பாத்துட்டு டயலொக் பேசிட்டு இருக்கீங்க? அறிவில்லை?” எனத் திட்டிக் கொண்டாள்.

அதன் பின்பு உள்ளே சென்று மருந்துகளைக் கொண்டு வந்து அவனை அமர சொன்னாள். ஆனால் அவன் தன் கோபத்தில் சிவந்து இருந்த விழிகளால் அவளை நோக்கி விரல் நீட்டி “ஏய்… என்னப் பாத்துக்க எனக்கு நல்லாவே தெரியும். உன் அக்கரை எல்லாம் எனக்கு தேவையில்லை. புரிதா?” எனப் பல்லைக் கடித்து கத்திய மருந்தை வேகமாகத் தட்டிவிட யூவி திடுக்கிட்டு விட்டாள்.

அனைவரும் அவனை சமாதானப்படுத்தி அமர வைத்தனர். கோபத்தில் கையை முறுக்கி கொண்டு அமர்ந்திருப்பவனின் கத்தி குத்துப்பட்ட சேர்ட்டின் கையினை கத்தரிக்கோலால் வெட்டி நிதானமாக மருந்து போட்டு விட்டாள் யூவி. அவள் மருந்து போட்டு விடும்வரை அனைவரது மனமும் திக் திக்கென்று இருந்தது. ஆனால் அவன் கண்கள்தான் அனைவரையும் ஆராய்ந்தது. யாரது கால்களிலும் காயம் இல்லை. அந்நடி இருந்தால் கொலைகாரி யார்? அவனுக்கு தலைதான் வலித்தது.

அதில் கோபமடைந்தவன் அருகிலிருந்த நாற்காலியை “ஹ்ம்…” எனக் கோபமாக தள்ளி அனைவரையும் முறைத்துப் பார்த்தவாறே எழுந்து சென்றுவிட்டான்.

“ஐய்யா தொறைக்கு ரொம்பதான் சீனு…” யூவி வாய்க்குள் கடுகடுத்துக் கொண்டாள்.

யூவியிடம் பாட்டி வந்து “என்ன மன்னிச்சுடும்மா. அன்னைக்கு நீ அவன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டதாலதான் உன்னை அப்படி பேசிட்டேன். இன்னைக்கு நீதான் அதெல்லாம் பெரிசா எடுத்துக்காம அவன் காயத்துக்கு மருந்து போட்டு விட்டிருக்க. ரொம்ப நன்றி.” எனக் கையெடுத்துக் கூற வர அவர் கைகளைப் பிடித்து தடுத்தவள்

“என்ன பாட்டி நீங்க? நான் ரொம்ப சின்னப் பொண்ணு. நீங்க என்கிட்ட சோரி, தங்க்ஸ் எல்லாமே சொல்லக்கூடாது.” என்றாள் அவரை அன்புடன் பார்த்தவாறு. இவள் பண்புகளைப் பார்த்த பாட்டிக்கு உணர்வுகள் ஏதோ கூற நிலை தடுமாறி அவளை அணைத்துக் கொண்டார்.

“நீ ரொம்ப நல்ல பொண்ணுமா. உங்க அப்பா அம்மா உன்ன நல்லா வளர்த்திருக்காங்க. உன்னை நான் கஷ்டப்படுத்திட்டேனா?” என்றார் அவள் தோள் தொட்டு.

“ஹ்ம்…” என விரக்தியாக சிரித்தவள் “அப்படி எல்லாம் இல்லை பாட்டி.” என்றாள் புன்சிரிப்புடன்.

அதில் மனம் உருகியவர் அவள் தலையை வருடி “உனக்கு என்ன வேணும்னாலும் என்னக் கேளு. இனிமேல் நீ எங்க வீட்டுப் பொண்ணு.” என்றார் வாஞ்சையுடன்.

இங்கே ஆதிதான் பாவம். மூளைக்கு சலவைத்தூள் போட்டு கசக்கிப் பிழிந்து துவைத்து காயவைக்காத குறையாக இரத்தம் நீராய் சொட்டச் சொட்ட சேர்ட்டைக் கழட்டி தோளில் போட்டவாறு கண்களில் வெறி திரள யோசித்துக் கொண்டிருந்தான். அவன் கோபமும் வெறுப்பும் அவன் யோசனைகளினூடாக அவனை இன்னும் கோபப்படுத்திக் கொண்டிருந்தது.

எழுந்து கண்ணாடியின் அருகில் நின்றவன் “அந்த துரோகி யாரு? இந்த வீட்டுலேயே இருந்துட்டு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டு இருக்குறது யாரு?” எனக் கத்தியவாறே கண்ணாடியில் ஓங்கிக் குத்த கண்ணாடி விரிசல் விழுந்துகொள்ள அவ் விரிசலில் நொறுங்கித் தூள் தூளான கண்ணாடியில் வைத்திருந்த அவன் கைகளில் ரத்தம் துளித் துளியாக வெளியேறி நிலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. அவன் கண்களின் வெள்ளை முழி மிளகாய் போல  சிவந்திருந்தது.

“கண்டுபிடிக்கிறேன்…” என அடிக் குரலில் கர்ஜித்தான். தனைத் தானே நொறுங்கிய கண்ணாடியில் நோக்கிக் கொண்டு எதிரியை எந்த அளவு கொடூரமான தண்டனை செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தான் தீவிரமாக.

அந்நேரம் யாரோ ரகசியமாக பேசும் சத்தம் கேட்டது. வெளியில் சென்று ஆராய்தான். பல்லவி யாரிடமோ ரகசியமாக பேசிக் கொண்டிருப்பது அவனுக்கு இன்னும் சந்தேகத்தை ஊட்டியது. அவள் பேசுவதை மறைந்திருந்து செவிசாய்த்திருந்தான்.

“நான் நினைச்சது கார்த்திக் மாமா இங்க வந்து உடனே கிளம்பிடுவாருன்னுதான். என்னதான் அவர் என்ன கல்யாணம் பண்ணிக்கிறார்னு சந்தோசம் இருந்தாலும் கூட பயமாவும் இருக்கு. நான் எதுக்காக பொய்யான லெட்டர் ஏழுதி வேச்சேனோ அதுக்கு பிரயோஜனமே இல்லாமப் போய்டுமோன்னு பயமா இருக்கு. அவர் காவ்யாவோட சாவ பத்தின எல்லாத்தையும் கண்டு பிடிக்க நினைச்சாருன்னா என்னோட இத்தனை வருச கஷ்டமும் வீண் போயிடும்.” எனக் கூறிட யோசித்துக் கொண்டிருக்க அவன் சந்தேகம் மொத்தமாக நிரூபணம் ஆக அவள் முன் எமனாக வந்து நின்றான்.

அவளுக்கு எமதர்மன் போல அவன் தோற்றம் காட்சியளிக்க, அவள் உயிர் இல்லாத ஜடமாய் மாறிப் போனாள். ஒரே ஒரு அறையில் சுருண்டு விழுந்தவள் அருகில் இருந்த கல்லில் மோதிட தலையில் இருந்து ரத்தம் கலகலவெனக் கொட்ட வலி தாங்க முடியாமல் “அம்மாஆஆஆ…” எனக் கத்தியவாறே நெற்றியைப் பிடித்துக் கொண்டாள்.

அவன்  விழிகள் சூரியனின் நிறத்தை விட கடுமையாக சிவந்திருக்க அவள் அருகில் வந்தவன் தொண்டைக் குழியை கைப்பற்றி விட்டான். அவன் நெறித்ததில் வலி தாங்க முடியாதவள் கத்த ஆரம்பிக்க அதுவும் முடியவில்லை. கால்களை அடித்து துடித்துக் கொண்டிருந்தாள் பல்லவி.

“ஹேய்… எங்க அக்கா காவ்யாவ எதுக்குடி கொன்ன? சொல்லு?” என உதிர்த்தவனின் கண்களில் தீச் சுவாலையும் வேதனையும் தெரிய அவள் பதில் சொல்லாத காரணத்தாவ் அவன் கழுத்தை பிடித்து இன்னும் நசுக்கிடவே அவள் மூச்சுத்திணறியவாறே

“சொல்லிர்ரேன்… சொல்லிர்ரேன்…” என்றாள் அரை உயிரோடு.

அவள் பேச்சில் தன் கையை எடுத்து அவளைத் தள்ளி விட்டுவிட்டு “சொல்லு காவ்யாவக் கொன்னது நீதானே?” எனக் கத்தினான் அவள் காது மடல் கிழியும் அளவு. சாவுக்கும் தனக்கும் நூலிடைவெளி எண உணர்ந்தவள் உண்மையைக் கூறத் தொடங்கினாள்.

“காவ்யாவைக் கொன்னது நான் இல்லை. காவ்யாவ கொலை பண்ணும் போது நான் அங்கதான் இருந்தேன். அவ சாவ ஒளிஞ்சு நின்னு நான் பாத்தேன். கொலைகாரி ஒரு பொண்ணு. சத்தம் போட்டு கத்தினா என்னையும் கொன்னுடுவான்ன பயத்துல வாய மூடிட்டு அழுதுட்டு இருந்தேன்.” என்றாள் தொண்டையை தடவியவாறு.

“அவ யாரு? நீ இல்லன்ன அது யாரு?” எனக் கேட்டான் பதற்றமாக. இவள் பொய் சொல்கிறாளோ என்ற யோசனையும் வந்தது.

“அவ முகத்தை நான் பாக்கல. ஆனால் அவ ஒரு டொக்யூமன்ட்காகத்தான் அவங்கள கொன்னிருக்கா. அவ கொன்னதுக்கு பிறகு ஒருத்தனுக்கு போன் பண்ணி காவ்யாவக் கொன்னுட்டேன். மிச்சம் இருக்குறது கார்த்திக்தான். உங்களுக்கு அவனால எந்த கஷ்டமாவது வந்தா அவனையும் கொன்னுடறேன்னு சொன்னா. அதனாலதான் இங்க இருந்தா உங்களையும் கொன்னுடுவாங்கன்னு பயந்து காவ்யா எழுதுற மாதிரியே கடிதம் எழுதி உங்களை அத படிக்க வெச்சி வெளிநாட்டுக்கு அனுப்பினேன். ஆனால் இன்னைக்கு நடந்தத பாக்கும் போது அவதான் உங்களை கொலை பண்ண முயற்சிக்கிறான்னு பயந்துட்டேன்.” என்றாள் அழுது கொண்டே.

இருந்தாலும் இவள் பேச்சு எரிச்சலை தர “ஏய்… லூசா நீ? நான் இருந்திருந்தா இன்னேரம் அந்த கொலைகாரிய போட்டுத் தள்ளிருப்பேன். ஆனால் நீதான் காவ்யா மாதிரி லெட்டர் எழுதி வெச்சு அத்தனையையும் கெடுத்துட்ட. ச்சேய்….” எனக் கூறி அவள் பக்கம் திரும்பி கை நீட்டியவன்

“இது மட்டும் பொய்யா இருக்கட்டும்… நீ சாகுறத யாராலையும் தடுக்க முடியாது.” என்றுவிட்டு கோபமாக சென்றான் வெளியில். சென்றவனின் பார்வையில் பட்டாள் யூவி.

அவளும் இவனை நோக்கிட கண்களை கீழே தாழ்த்திக் கொண்டாள். “இவன்கிட்ட நமக்கு என்ன வேலை?” என நினைத்தாளோ தெரியவில்லை. ஒரு நிமிடம் நின்றவள் தலையை அசைத்து பெரும்மூச்சு விட்டு அவனைக் கடந்து தன் பாட்டிற்கு செல்ல, அவன் தன்னைக் கடந்து செல்பவளை நோக்கி பார்வையை வீசி “Just a minute.” என்றான் சுருக்கமாக.

அவள் அழைப்பில் “இவன் எதுக்கு இப்போ கூப்பிடுறான். ஹைய்யய்யோ ஏதோ இங்க்லிஸ் பட வில்லைன் மாதிரி டயலோக் பேசியே சாவடிப்பானே. திரும்பி என்னான்னு கேட்போமா? வேண்டாமா?” எனக் கணக்கிட்டபடியே

“நான் ஏன் பயப்படணும்? அவன் என்ன பண்றான்னு பாத்துடலாம்.” என யோசித்துக்கொண்டே பெரும் மூச்சை இழுத்து விட்டு அவன் பக்கம் திரும்பி அலட்சியமாக அவள் சட்டைப் போக்கெட்டினுள் கை விட்டவாறே “Yes…” என்றாள் வெடுக்காக.

அவன் எப்படி கூறுவது என்று நெற்றியை தேய்த்தவாறே “Thank you.” என்றான் மெதுவாக.

அவளுக்கோ தாங்கிக்க முடியாத அதிர்ச்சியாய் அமைய கண்ணைக் கசக்கிக் கொண்டவள் “யூவி நீ கனவு காணுறடி. எழுந்துடு… இவன் ஒரு சிடு மூஞ்சி. இவன் வாயில இருந்து தங்க் யூ, சோரி எல்லாம் வராது.” என தலையில் அடித்து “எழுந்துடு யூவி…” என்றிடவே தான் அடித்த அடியில் வலியை உணர்ந்தவள்

“என்னது வலிக்கிது? கனவுல வலிக்கும்? இல்லையே… அப்படின்னா இது உண்மைதானா?” எனக் கேட்டவாறே அவன் கையைத் தொட்டுப் பார்க்க அவன்தான் அவளை பார்வை எனும் தீயில் எறித்து பஸ்பமாக்கிக் கொண்டிருந்தான்.

அதில் பயந்தவள் “சரி. சரி. Thank you accepted. நீங்க போங்க.” என தொய்ந்த முகத்துடன் கூறினாள்.

அவன் “இங்க பாரு நான் தங்க் யூ சொல்றதே பெரிய விசயம். இதுல நீ ரொம்ப சீன் போட்டன்னா நான் செம்ம காண்டாகிடுவேன். என்ட்… அதுக்காக உன்கூட ப்ரண்ட் ஆகிடுவேன்னு எல்லாம் கனவு காணாத. நீ எப்போவுமே என்னோட எதிரிதான்.” என்றான் ஏளனமாக. அவள் முகம் வாடியதை அவனால் எற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“அப்படியா? நீங்களே வந்து நாம ப்ரண்ட் ஆகிடலாம்னு சொன்னாக் கூட நான் அப்படி எல்லாம் பண்ணவே மாட்டேன். ஏன்னா நான் திமிரு பிடிச்சவங்களை ப்ரண்ட் ஆக்கிக்கிறது கிடையாது.” என்றாள் மிடுக்காக.

“நானும்தான். அழகா இருக்குற பொண்ணுங்கள ப்ரண்ட் ஆக்கிக்கிறது கிடையாது.” என்றுவிட்டான் பட்டென்று.

தன் மீதுள்ள காதலால் அவனை அறியாமல் அவன் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தை என உணராதவள், “இவன் நம்மள கலாய்க்கிறானா? இல்ல… புகழ்றானா? எதுவுமே புரியலையே.” என்றவாறே அவனை விழிகளால் முழுங்கிக் கொண்டிருந்தாள்.

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!