வதைக்காதே என் கள்வனே

4.4
(12)

கள்வன்-30

நான்கு வருடங்களுக்குப் பிறகு சிவ சக்கரவர்த்தியின் மாளிகையில் அதிகாலை ஆறு மணிக்கு தனது ஜாகிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவன் நேராக சமையல் அறைக்கு சென்று பிரிட்ஜை திறந்து பாலை எடுத்துக் காச்சியவன் அதன்பிறகு காபி கலந்து அதை எடுத்துக்கொண்டு தன்னுடைய அப்பா அம்மாவின் அறைக்குச் சென்றான் மித்ரன்.

மித்ரனின் திருமணம் முடிந்ததும் அவர்கள் அனைவருமே சிவ சக்கரவர்த்தியின் வீட்டிற்கு வந்து விட்டார்கள். அனைவருமே ஒன்றாக தான் இருக்கிறார்கள்.

மித்ரன் அவர்களது ரூம் கதவைத் தட்டி உள்ளே சென்றவன் அவனுடைய அப்பா அம்மாவை எழுப்பி காபியை கொடுத்துவிட்டு, பின் தன்னுடைய அறைக்கு சென்றவன் தூங்கிக் கொண்டிருக்கும் தன் மனைவியை நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு அவள் பக்கத்தில் குட்டி தேவதையாய் உறங்கிக் கொண்டிருக்கும் தன் மகளுக்கும் முத்தம் கொடுத்தான்.

அதுவோ அவன் முத்தம் கொடுத்ததும் அவனுடைய தாடி அதனுடைய கன்னத்தில் குத்தவும் சின்னச் சிணுங்களோடு விழித்துக் கொண்டது.

உடனே தன் மகளை கையில் தூக்கியவன் சில முத்தங்களை கொடுத்துவிட்டு அதை அழகாக தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தூங்க வைத்தவன், திரும்ப பெட்டில் கிடத்திவிட்டு மனைவியைப் பார்த்தான். அவளோ இன்னும் துயில் கலையவில்லை.

“ஓஓ மேடம் எழுந்திருக்க மாட்டீங்களா.. சரி ஓகே அப்போ காலையிலேயே ஒரு ரவுண்டு போயிட வேண்டியதுதான்..” என்று சொன்னவன் அவள் மேல் படரப்போக, அவளோ திடுக்கிட்டு எழுந்தாள்.

மகள் சிணுங்கும் போதே விழித்தவள் அவன் மகளை தாலாட்டுவதை கண்கள் மூடி ரசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் திடீரென்று இப்படி ஒரு முடிவுக்கு வருவான் என்று நினைக்காதவள் பட்டென எழுந்து கொண்டாள்.

அவள் திடீரென்று எழுந்ததும் உதட்டுக்குள் சிரிப்பை மறைத்தவன் “ஏன்டி ஒரு நாளாவது சீக்கிரம் எந்திரிச்சு குளிச்சு தலையில துண்டு கட்டுகிட்டு கைல காபி எடுத்துக்கிட்டு அப்படியே நம்ம ரூமுக்கு வந்து என் கால தொட்டு கும்பிட்டு அப்புறம் என் நெத்தியில முத்தம் கொடுத்து மாமா நேரமாயிருச்சு எழுந்திரிங்க காபி குடிங்க அப்படின்னு ஒரு நாலாவது சொல்லி இருக்கியா..?” என்று அவளிடம் தன்னுடைய கோரிக்கையை சொல்ல,

அவளோ “ஏன் சொல்ல மாட்டீங்க.. காலைல ஒரு காபியை மட்டும் கொடுத்துட்டு அதுக்கப்புறம் பம்பரம் மாதிரி நான் உங்க பின்னாடி தானே சுத்திக்கிட்டு இருக்கேன்.. இப்போ உங்களுக்கு நான் காலையில காபி கொடுக்காதது தான் பிரச்சனையா..?” என்று அவளும் அவன் காதை பிடித்து திருக. “ஐயோ வலிக்குதுடி விடுடி..” என்றவன் அவளுடைய கையை எடுத்துவிட்டு தன்னுடைய கை வளைவுக்குள் அவளைக் கொண்டு வந்தவன்,

அவளிடம் செல்லச் சீண்டல்கள் செய்ய ஆரம்பித்தான்.

அவளும் அவன் செய்யும் சீண்டல்களுக்கு இழைந்தவள் காலையிலேயே ஒரு அழகான கூடலை நடத்தினார்கள்.

“சரி சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா நம்ம பாப்பாவுக்கு இன்னைக்கு பேர் வைக்கணும் இல்ல டைம் ஆகுது..” என்றான்.

ஆம் அவர்களுக்கு முதலில் பையன் அவன் பெயர் ஆதவன். அவனுக்கு மூன்று வயது அடுத்து இப்போது ஒரு பெண் குழந்தை பிறந்து மூன்று மாதம் தான் ஆகிறது. அவளுக்கு இன்று தான் பெயர் சூட்டுகிறார்கள். குளித்து முடித்து ஆடை அணிந்து கொண்டவள் தன்னுடைய மகளையும் ரெடி பண்ணினாள். மகனை மித்ரனே பார்த்துக் கொள்வான். அவன் தந்தையிடம் நன்றாக ஒட்டிக் கொள்வான். அதனால் இவளுக்கு வேலை அவ்வளவாக கிடையாது.

நால்வரும் ஒரே கலரில் ஆடை அணிந்து குடும்பமாக வர, கீழே ஹாலில் அவர்களுடைய பிஸ்னஸ் நண்பர்கள், சொந்தக்காரர்கள் வந்திருந்தார்கள்.

நந்தாவும் இதயாவும் தங்களின் ஒரு வயது குழந்தையை தூக்கிக் கொண்டு வந்திருந்தார்கள்.

ஆம் இதயா காதலை சொல்ல நந்தாவோ மித்ரனை நினைத்துக் கொண்டு அவள் பக்கமே செல்லாமல் ஓடினான். ஆனால் இதயாவோ தனக்கு ஒன்று வேண்டும் என்றால் எப்படியாவது அடைந்தே தீருபவள் தன் அண்ணனிடம் நேராகவே சென்று நந்தாவை விரும்புவதாக சொன்னாள்.

அவனும் வீட்டில் தன் தாய் தந்தையிடம் சொன்னவன் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு நந்தாவிற்கு என்று தனியாக ஒரு கம்பெனியில் எம்டியாக பொறுப்பை ஒப்படைத்து விட்டான்.

(சரி சரி நீங்க கேட்கிறது புரியுது… அப்போ லியா என்ன ஆச்சு அப்படின்னு தானே.. நம்ம லியாவுக்கு ஜோடி இல்லாமையா) லியா எப்போதுமே வெண்மதியுடன் இருப்பதைப் பார்த்த மித்ரன் தங்களுக்கு தனிமை நேரம் அவ்வளவாக கிடைப்பதில்லை என்று யோசித்தவன், லியாவைப் போன்றே நன்றாக பேசும் ஒரு கிளியை வாங்கி வந்து விட்டான்.

அதன் பெயர் ஜனா. அதன் பிறகு தங்கள் வீட்டிற்கு முன்னால் தோட்டத்தில் லியாவிற்கு என்று ஒரு சிறிய வீடு மாதிரி கட்டி விட்டான்.

கொஞ்ச நாள் லியா அந்தக் கிளியைப் பார்த்து முறைத்துக் கொண்டுதான் இருந்தது. அதற்கு பிறகு அது செய்யும் சேட்டைகளில் இதுவும் கவர்ந்தது. பிறகு என்ன அவர்கள் இருவரும் ஒன்றாகி பல கிளிக்குஞ்சுகள் உருவாகின. சொல்லப்போனால் மித்ரன் கட்டிய சின்ன வீடு கிளிகள் சரணாலயம் போன்றானது.

அனைவருக்கும் முன்னால் வந்தவர்கள் அங்கு உள்ள ஆடம்பரத் தொட்டிலில் தன்னுடைய மகளை கிடத்தியவர்கள் அந்தக் குட்டி தேவதைக்கு மிதுனா என்று அழகான பெயர் சூட்டினார்கள்.

பெயர் சூட்டும் விழா முடிந்ததும் வந்திருந்த உறவினர்கள் அனைவரும் சென்று விட, இதயாவும் நந்தாவும் அவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

அன்று இரவு மித்ரன் கையில் இரு பால் டம்லருடன் அவனது அறைக்குச் சென்றான். அங்கே வெண்மதியோ தன்னுடைய மகனைத் தூங்க வைத்துவிட்டு மகளுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தாள்.

அப்போது உள்ளே வந்தவன் பால் டம்லரை அங்கு உள்ள டீபாயில் வைத்து விட்டு அவள் அருகில் அமர்ந்தவன், உறங்கிக் கொண்டிருக்கும் மகனுக்கு நெற்றியில் முத்தம் வைத்தவன் அடுத்து பசியாறிக் கொண்டிருக்கும் தன்னுடைய மகளுக்கும் முத்தம் வைக்க முத்தம் வைக்கும் சாக்கில் அவளது அங்கம் தீண்ட அவளோ வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.

அதை அவன் கண்டு கொள்ளாதது போல மகளுக்கு முத்தம் பதித்து விட்டு நிமிர்ந்தவன் அவள் நெற்றியில் முத்தம் வைக்க உடல் சிலிர்த்தாள்.

பின்பு அவளிடம் “எனக்கும் கொஞ்சம் பால் புகட்டலாமே..?” என்றவன் கண்கள் அவளின் பழுத்த தற்பூசனி மேல் பதிய, அவள் முகமோ செங்கொழுந்தாக சிவந்து விட்டது.

“என்ன..?” என்று அவள் கேட்க, சட்டென தன் பார்வையை மாற்றியவன் “அது இந்த பால்.. இத சொன்னேன்..” என்றவன் “சரி மிது குட்டிய தூங்க வச்சிட்டு வா நா பால்கனியில வெயிட் பண்றேன்..” என்றவன் பால்கனியில் போய் நின்றான்.

சிறிது நேரத்தில் அவன் செல்ல மகள் உறங்கிவிட அவளை மெதுவாக பெட்டில் படுக்க வைத்து விட்டு சுற்றி பாதுகாப்பு செய்து விட்டு அவனை நோக்கி பால்கனி சென்றாள்.

அவனோ அவளுக்கு முதுகு காட்டி நின்றவாறு அந்த இரவு வானத்தை ரசித்துக் கொண்டு இருக்க, இவளோ அவன் அருகில் சென்றவள் அவனை பின்னோடு அணைத்துக் கொண்டாள்.

அவள் அவனை அனைத்ததும் குனிந்து அவளுடைய கையை தனது கைகள் கொண்டு பிடித்து மேலும் இறுக்கியவன் தலையை சற்றே பின்னே சாய்த்தவாறு “சாரி மதி நான் எவ்வளவோ தேடியும் உன்னோட பாட்டி தாத்தாவை உயிரோட கண்டுபிடிக்க முடியல.. என்ன மன்னிச்சிடு..” என்றான்.

அவளோ சட்டென அவனை விட்டுப் பிரிந்தவள் அவன் முன் வந்து நின்று “நீங்க எனக்காக என் பாட்டி தாத்தாவை தேடுனிங்களா..?” என்று கேட்க, அவனும் “ஆமா நீ எனக்காக என்னென்னவோ செய்யும்போது நான் உனக்காக உன் பாட்டி தாத்தாவை கூட்டிட்டு வரணும்னு நினைச்சேன்.. ஆனா அவங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வயது முதிர்வு காரணமா இறந்து போயிட்டாங்க.. சோ நீ ஆசைப்பட்டதை என்னால கொடுக்க முடியல என்ன மன்னிச்சிடு..” என்றான் மித்ரன்.

தனது தாத்தா பாட்டிக்காக இரண்டு சொட்டுக் கண்ணீர் சிந்தியவள் பின்பு மித்ரனிடம் “ஆமா நான் என்னென்னமோ பண்ணதா சொன்னீங்களே நான் என்ன பண்ணேன்..?” என்று புரியாமல் கேட்டாள்.

அதற்கு மித்திரனோ அவளுடைய கன்னத்தை தன் இரு கைகளாலும் தாங்கியவன் “நீ என்னோட அப்பா அம்மாவை என்கிட்ட சேர்த்து வைப்பதற்காக என் கண்ணுல மண்ணை தூவி தினமும் அவங்க வீட்டு வாசல்ல போய் நின்னு இருக்க.. அதுக்கப்புறம் அவங்களை சமாதானப்படுத்தி என் கூட சேர்த்து வச்சிருக்க.. இதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா..?” என்று கேட்க, அவளோ திகைத்தவாறு “இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்..?” என்று கேட்டாள்.

“உன்னை காணோம்னு தேடும் போது லியா என்கிட்ட சொல்லுச்சு.. எனக்காக நீ ஏன் இவ்வளவு பண்ண..?” என்று அவள் கண்களைப் பார்த்து கேட்டான்.

அதற்கு அவளோ “நான் சின்ன வயசுல இருந்து அம்மா அப்பா கிட்ட அக்கா கிட்ட எதிர்பார்த்த அன்பை உங்ககிட்ட உணர்ந்தேன்.. அதே மாதிரி நீங்களும் உங்க குடும்பத்தோட சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சு தான் இப்படி பண்ணேன்.. எனக்கு நீங்க எப்பவுமே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கணும்.. அப்பதான் நானும் ரொம்ப சந்தோஷமா இருப்பேன்..” என்றவள் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அவனும் தன்னோடு அவளை புதைத்துக் கொண்டான்.

உலகிலே மிக வலிமையான ஆயுதம் அன்பு.

ஆதலால் அன்பெனும் ஆயுதத்தால் நம் உறவுகளை இரட்சிப்போம்.

 

ன்றி.

என்றும் அன்புடன்.

ஆதி.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!