தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 17

4.8
(23)

பேராசை – 17

மாலை 6 மணி இருக்கும் ஒருவாறு தட்டு தடுமாறி அவ் வனத்தின் அழகிய மனதைக் கொள்ளை கொள்ளும் அந்த ஆற்றின் அருகே வந்து இருந்தனர்.

அந்த இடத்தின் அழகில் விழிகளை பெரிதாக விரித்தவள் “வாவ் அமேசிங் வருண், இவ்ளோ அழகா இருக்கே! என்னதான் 6 மணியா இருந்தாலும் செம்ம இருட்டா தான் இருக்குடா” என்றாள்.

“ எனக்கு செம்ம டையர்ட் ஆழினி சோ இங்கேயே நைட் ஸ்டே பண்ணிட்டு மார்னிங் 5 போல இங்க இருந்து கிளம்பலாம் டி …. ஒருவேளை இதுக்கு மேல நாம போனோம்! புலி கிட்ட மாட்டி சின்னா பின்னமாகிருவோம்” என்றான் வருண்.

“பட் இங்க ஏதும் ஆபத்து வராதுனு சொல்ல முடியாது வருண் பிகாஸ் நைட் டைம்ல தான் எதையாச்சும் சாப்பிட்டு இங்க தண்ணி குடிக்க யானை இல்லனா புலி வரும்” என்றாள் இரு கைககளின் விரல்களை சுருக்கி வருண் முகம் அருகே சென்று அவள் குரலை மாற்றி புலி போல உறுமிக் காட்ட….

அவளை மேலிருந்து கீழாக நக்கல் பார்வை பார்த்தவன் “ நான் உனக்கு உன்ன மாதிரியே இப்படி செய்து காட்டினால் என்ன ஆகும்ன்னு உனக்கே தெரியும் சோ மேடம் என்ன செய்றீங்கனா மூடிட்டு இந்த டென்ட் அஹ் பிடிக்கிறீங்களா? ” என்றான்.

“வர வர என் மரியாதை தேஞ்சிட்டே போகுது இருக்கட்டும் பார்த்துக்கிறேன்” என்றவள் வருணுக்கு டென்ட் ஐ அமைக்க உதவினாள்.

ஒரு வழியாக ஆற்றின் ஒதுக்குப் புறமாக டெண்டை அமைத்தவர்கள் அதனுள் உடைகள் அடங்கிய பைகளை வைத்தவர்கள் வெளியில் வந்து சுற்றும் முற்றும் பார்த்தார்கள்.

 

அந்த வனத்தில் தண்ணீர் சலசலக்கும் சத்தம் தவிர்த்து எந்த விலங்குகளின் சத்தமும் இல்லாமல் அமைதியாகவே இருந்தது.

“செம்ம பிளேஸ் தான் ஆழினி பட் நீ சொல்றது கூட நைட் நடக்க வாய்ப்பு இருக்கு என்றவன் பேசாமல் ஏதாச்சும் மரத்து மேல இந்த டென்ட் அஹ் ரெண்டா பிச்சு தொட்டில் மாதிரி கட்டுவோமா?” என அவன் தீவிரமாக கேட்க….

இரவை நெருங்கிக் கொண்டு இருப்பதால் அவளுக்குமே உள்ளுக்குள் உதறலாகவே இருந்தது…. “ அவ்ளோ உச்சில நீ ஏறி கட்டுவ வருண் பட் நான் எப்படிடா ஏறுவேன்?” எனப் பாவமாக அவள் கேட்க…..

“பெரிய ஜான்சி ராணி மாதிரி பேச்சு இருக்கும் பட் உனக்கு அட் லீஸ்ட் ஒரு மரம் கூட ஏற தெரியல எனத் தலையில் அடித்துக் கொண்டவன் உன்கிட்ட நான் வந்து மாட்டிகிட்டு என ஒரு பெருமூச்சுடன் மேலே பார்த்து இரு கைகளையும் கூப்பியவன் கடவுளே என்னைக் காப்பாத்து” என வேண்டினான்.

“ஓவர் ஆஹ் பண்ணாத எல்லாம் உன் விதி தான் ஓகேவா இப்போ உன் வேலையைப் பாரு” என அவள் ஆற்றின் அருகில் இருந்த ஒருக் கற் பாறையில் அமர்ந்துக் கொண்டு வருண் செய்யும் வேலைகளை அவதானித்துக் கொண்டு இருந்தாள்.

டெண்டினை வேகமாக கழற்றியவன் தேவைப்படுமே என கொண்டு வந்து இருந்த கத்தியை பையில் இருந்து எடுத்து அந்த துணியாலான டென்ட்டை விரித்து இரண்டாக வெட்டினான்.

வாயை பிளந்த ஆழினி “வருண் என்னடா கத்தி எல்லாம் எடுத்து வந்து இருக்க?”

“நாம என்ன அரண்மணைக்கா வந்து இருக்கோம்? என அவளை முறைத்தவன் இதுக்கு முன்ன எவ்ளோ பேருக்கு கைட் ஆஹ் போயிருக்க?…. சும்மா பார்த்திட்டு நிக்கிற ஏதாச்சும் ஹெல்ப் பண்ணு டி இதுல வேற மரம் ஏற வேற தெரியல உனக்கு…. ஆமா என இழுவையாக சொன்னவன் நீ உண்மையாவே டூரிஸ்ட் கைட் தானா டி” என அவன் கேட்டே விட்டான்.

“ தன் ஆள்காட்டி விரலை காற்றில் அசைத்து “நான் ஏதோ நல்ல மூட்ல இருக்கேன் வருண் இல்லனா இப்படி எல்லாம் நீ என் முன்னாடி பேசிட்டு இருக்கவே முடியாது”

“ஒற்றைப் புருவத்தை மேல் உயர்த்தியவன் நீ? அதுவும் என் முன்னாடி? என்றவன் பக்கென சிரித்து விட்டு சத்தியமா எனக்கு டவுட் தான் டி எப்படி டி மேனேஜ் பண்ணுன?” என அவன் சிரித்துக் கொண்டே கேட்க…

“ஓ மை கோட் என அவன் வாயை இறுக கையால் பொத்தியவள் சத்தமா சிரிக்காத ஏதாச்சும் கிளம்பி வந்துற போகுது என அவனுக்கு மெல்லிய குரலில் சொன்னவள் தயவு செஞ்சு முதல் இந்த வேலையை செய் அப்புறம் நான் உன் டவுட் எல்லாம் க்ளியர் பண்றேன்” என்றிருந்தாள்.

அவள் கையை தன் வாயில் இருந்து எடுத்து விட்டவன் “ஓகே கூல் ஆழினி” என்று விட்டு அங்கு அடர்ந்து வளர்ந்து இருந்த மூங்கில் மரங்களை நோட்டம் விட்டவன் கண்கள் மின்ன “தேங் கோட் அங்க பாரு ஆழினி நாலு மரம் கிட்ட கிட்டயா இருக்கு நான் ஃபர்ஸ்ட் ஆஹ் ஏறிட்டே சொல்லி தரேன் அதுபோல அந்த மரத்துக்கு ஒப்போசிட் டைரக்சன்ல இருக்க மரத்துல ஏறு” என்றானே பார்க்கலாம்.

“வாட்? நானா என அதிர்ந்தவள் உனக்கு தலையில நட்டு எதுவும் கழண்டு போச்சா? என்னால ஏற முடியாது “ என்றாள்.

“அப்போ மேல இதை கட்டுனா எப்படி நீ தூங்க வருவ?” என அவள் பின்னால் அவன் எட்டிப் பார்க்க….

“என்ன வருண் என் பின்னாடி பார்க்குற ஏதும் வந்துறிச்சா? என குரல் நடுங்க கேட்டவள் மற்றதை விடுத்து வருண் பின்னால் ஒளிந்து கொண்டு மெதுவாக அவன் பின்னால் இருந்தே அவன் முதலில் பார்த்த இடத்தைப் பார்க்க, அந்த இடமோ வெறுமையாகத் தான் இருந்தது.

“என்னத்தை அப்படி பார்த்த என் பின்னாடி?” என அவன் முன்னால் வந்து அவள் கேட்க….

“இல்லை உன்னால ஏற முடியாதுனு சொன்ன தானே அதான் திடீர்னு இறக்கை ஏதும் முளைச்சிறிச்சோனு பார்த்தேன்” என்றவன் மேலே தொட்டில் போல அமைக்கத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு மூங்கிலில் ஏறத் தயாராக செல்ல…

இவ்வளவு நேரமும் அவனின் நக்கலில் முறைத்துக் கொண்டு நின்றவள் அவன் ஏறத் தொடங்கவும் தனியாக கீழே நின்றுக் கொண்டு இருந்தவளுக்கு தானாகவே பயத்தில் உடல் நடுங்கத் தொடங்க, தனக்காக அவன் வைத்து இருந்த தேவையான கயிறு மற்றும் இதரப் பொருட்களை எடுத்துக் கொண்டு அவன் காட்டிய மூங்கில் அருகே சென்றவள் மேலே அண்ணார்ந்து பார்க்க, அதுவோ நெடு நெடுவென வளர்ந்து இருந்தது.

“இவ்ளோ தூரம் நான் எப்படி ஏறுவேன் முடியவே முடியாது கீழ விழுந்தால் சப்டர் க்ளோஸ் தான் என தனக்குள் சொல்லிக் கொண்டவள் என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் நாம கீழ இருப்போம் என நினைத்தவள் பாதி தூரம் சென்ற வருணைப் பார்த்து நான் கீழ இருக்கேன் டா எனக்கு ஏதும்னா சூப்பர் மேன் மாதிரி வந்து காப்பாத்து” என அந்த மூங்கிலின் கீழேயே அமர்ந்து விட்டாள்.

மேலே இருந்துக் கொண்டு “இவளை” என கோபத்தில் பற்களை கடித்தவன் மேலும் இருள் சூழும் முன் அனைத்தையும் தயார் படுத்த அவன் விரைவாக கடினப்பட்டு ஏறினான்.

ஒரு வழியாக மேலே ஏறி இரவு உறங்குவதற்கான படுக்கையை அமைத்து இருந்தான்

 அது உறுதியாக இருக்கின்றதா? எனப் பரிசோதிக்க ஒரு கணம் கண்களை மூடித் திறந்து ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டவன் மெதுவாக நகர்ந்து அவன் அமைத்த தொட்டிலில் படுத்துப் பார்த்தான் அப்போது தான் அவன் இழுத்துப் பிடித்து இருந்த மூச்சை வெளியில் விட்டான்.

அவனுக்கே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

இதுவரை காட்டில் தங்கி முன் அனுபவங்கள் எதுவும் இல்லை என்ற போதிலும் சிறு வயதில் மரங்களில் ஏறி விளையாடியது என்னவோ இப்போது வருணுக்கு அவன் தைரியத்துடன் ஏற வழிவகுத்தது. 

ஒய்யாரமாகப் படுத்துக் கொண்டே கீழே அமர்ந்து இருக்கும் ஆழினியை மேலே இருந்து எட்டிப் பார்த்தவன் “போடி நானாவது சூப்பர் மேன் மாதிரி உன்னை காப்பாத்துறதாவது என நக்கலாகச் சிரித்தவன் நான் தூங்க போறேன் குட் நைட் அண்ட் ஸ்வீட் ட்ரீம்ஸ் என்றவன் ச்சே இல்ல இல்ல ஸ்வீட் எழிபன்ட் ட்ரீம்ஸ்” என்று அவன் சொன்னது தான் தாமதம் எங்கோ யானை பிளிருவது இருவருக்குமே கேட்டது.

இருவருக்குமே அந்த கணம் தூக்கி வாரிப் போட்டது.

அவன் ஏதோ விளையாட்டிற்கு சொல்லப் போய் அதுவே வினையானது தான் மிச்சம்.

வியர்க்க விறுவிறுக்க மின்னல் வேகத்தில் எழுந்தவள் “போடாங்” என்றவள் அடுத்து தன் வாயில் வந்த வார்த்தையை தனக்குள் விழுங்கிக் கொண்டவளுக்கு எங்கு இருந்து தான் அவ்வளவு சக்தி வந்ததோ அவள் சாய்ந்து இருந்த மூங்கிலில் கடகடவென ஏறி இருந்தாள்.

பாதித் தூரம் ஏறியவளுக்கு அப்போது தான் அவள் என்ன செய்து கொண்டு இருக்கின்றாள் என்றே புரிந்ததும், விழி விரித்தவள் அப்போது தான் கீழே பார்த்தாள் கிட்டத்தட்ட 50m வரை உயர்ந்து இருந்த மூங்கிலில் கிட்டத்தட்ட 35m வரை கண நேரத்தில் ஏறி இருந்தாள்.

கீழே பார்த்தவளுக்கு அவளின் இதயத்தின் ஓசை இரு மடங்காக வெளியில் கேட்டது.

மேலே இருந்து கொண்டே அடக்கப்பட்ட சிரிப்புடன் சற்று மெல்லிய குரலில் “என்னடி ஏறவே தெரியாதுன்னு சொன்ன? இப்படி ஜெட் வேகத்துல ஏறிட்ட என்றவன் அவளின் முறைப்பைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து என்னால முடியாததை ஒரு யானை பண்ணிறிச்சே! ஓகே ஓகே கீழ பார்க்காம எப்படி ஏறுனியோ அப்படியே மேல வாடி ஹரி அப்” என்றான்.

இவ்வளவு தூரம் பதற்றத்தில் ஏறியவளுக்கு இப்போது எப்படி ஏறுவது என்றே தெரியவில்லை… “என்னால முடியல டா வழுக்கிட்டு கீழ விழுந்துருவேன் போல வருண்” 

“ஹே மெதுவா காலை வச்சு வாடி… சின்ன சத்தம் கேட்டால் கூட யானை இங்க வந்து நாம இருக்க மரத்தை உடைக்க சான்ஸ் இருக்கு” என்றான்.

“ஓ மை கோட் என்றவள் மெதுவாக ஏற முயற்சி செய்துக் கொண்டு இருக்கும் போதே அந்த யானை ஆற்றங்கரை அருகில் நீர் பருக வந்து இருந்தது.

அவள் ஏறிக் கொண்டு இருந்த காரணத்தால் அவளுக்கு யானை வந்தது தெரியவில்லை.

வருண் யானையை பார்த்து அதிர்ந்தவன் அவள் பதற்றமாகி விடுவாள் என எதுவுமே கூறாமல் “ஏறாத அப்படியே இரு சைலண்ட் ஆஹ்”என சைகையில் கூற…

அவளுக்கு அது விளங்கினாள் தானே!

“என்னடா?” என அவள் வாயை திறக்கும் முன்னரே அந்த காட்டு யானை நீரை குடித்து விட்டு பிளிறியது.

அவளுக்கோ இதயமே நின்று விட்ட உணர்வு போலும் கைகள் தானாக நடுங்கியது.

வருணுக்கோ, எதுவுமே பேச முடியாத நிலை.

 அவளின் தோளில் தொங்க வைத்து இருந்த கயிறு வேறு விழும் நிலையில் இருக்க அவளுக்கோ சங்கடமான நிலை, ஒரு கட்டத்தில் அவளுக்கே “அநியாயமா வந்து மாட்டிகிட்டோமோ?” என்ற எண்ணம் தோன்றவும் ஆரம்பித்து இருந்தது.

ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து விட்டதால் என்னவோ மடிக்கணியில் வேலை செய்துக் கொண்டு இருந்தவன் அப்போது தான் கண் அசந்து இருப்பான் போலும் கதவு தட்டப்படும் ஓசையில் எழுந்தவனுக்கு மனதில் ஏதோ சொல்ல முடியாத வலி ஊடுருவியது என்னவென்றே அவனால் பிரித்து அறிய முடியவில்லை.

இது தான் மனதுக்கு மிகவும் பிடித்த ஒருவர் ஆபத்தில் இருக்கும் போது மனதுக்கு ஏதோ உறுத்தல் ஏற்படும் என்று சொன்னார்களோ? என்னவோ?

சென்று கதவை திறந்தவனை பார்த்த இந்துவோ, “என்ன காஷ்யபன் ஒரு மாதிரி இருக்க?” என அவன் முகத்தை அவர் வருட….

இப்படி தன்னிடம் அன்பைக் கொட்டுபவரிடம் அவனால் கடுமையை காட்ட முடியவில்லை “நதிங் அத்தை ஜஸ்ட் தூங்கிட்டேன் அதான்” என்றான்.

“சரி வா சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்” என்றவர் அவனை கையோடு அழைத்து சென்று விட்டார்.

சாப்பாட்டு மேசையில் வந்து அமர்ந்தவனுக்கு பசி எடுத்தாலும் சாப்பிடும் எண்ணமே இல்லை… மனதுக்கு என்னவோ போல் இருக்க உணவை அலைந்துக் கொண்டே என்ன தோன்றியதோ “ஆழினி கதைச்சாளா? இப்போ எங்க இருக்கா?” என்று கேட்டு இருந்தான்.

“அவங்க மார்னிங் 10.30க்கு அங்க ரீச் ஆகிடங்களாம் ஆனால் கட்டுகுள்ள கவரேஜ் கிடைக்காது சோ பேச ஏலாதுன்னு சொன்னால்… எப்படியும் நாளைக்கு அவ போன வேலையை முடிச்சிட்டு ரெண்டு பேரும் ஈவ்னிங் வந்துருவாங்க” என்றார்.

“அங்க எல்லாம் ‘safe’ தானே ‘i mean’ தங்குற இடம்?” எனக் கேட்க…

அங்கு வந்த லதவோ, “எல்லாம் ஓகே தான்டா அதான் வருண் கூட போயிருகானே! அவன் பார்த்துப்பான்” என்க…

இவ்வளவு நேரமும் அவனிடம் இருந்த அந்த அமைதி வருணின் பெயரைக் கேட்டதுமே கோபம் கிளர்ந்து எழ அதனை சற்றும் முகத்தில் காட்டாமல் “போதும்” என்றவன் பாதி உணவிலேயே எழுந்து விட்டான்.

“டேய் சாப்பிடு டா” என்று லதாவும் இந்துவும் ஒருங்கே அழைத்தது காற்றில் தான் கரைந்தது.

அவன் அவளை என்றும் இல்லாது போல இன்று கேட்டதற்கு சந்தோஷப் படுவதா? இல்லை அவன் பாதி உணவிலேயே எழுந்து சென்றதை நினைத்து கவலைப் படுவதா? என்றே தெரியவில்லை அவர்களுக்கு….

“லதா நான் அவனுக்கு மேல போய் கொடுக்கிறேன்” என்றவர் அவனுக்கு வேறு ஒரு தட்டில் போட்டு உணவை எடுத்துச் செல்ல தயாரான இந்துவை தடுத்து நிறுத்திய லதா, “உனக்கு தான் அவனை பற்றி தெரியுமே! இன்னைக்கு அவன் சரியே இல்லை இந்து, ஒரு மாதிரியா தான் இருக்கான் என்கிட்ட தா நானே போய் பார்த்து பேசிட்டு அவனுக்கு கொடுக்கிறேன்” என்றவர் உணவை வாங்கிக் கொண்டு அவனின் அறைக்கு நோக்கி விரைந்தார்.

 

உள்ளே வந்தவன் “உனக்கு நான் அவ்ளோ பண்ணியும் ஒரு பேசிக் சென்ஸ் இல்லாமல் ஃபாரஸ்ட் போயிருக்கனா உனக்கு எவ்ளோ இருக்கணும்? வாடி வா இங்க தானே வருவ என சொல்லிக் கொண்டவன் அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்த லாதாவைப் பார்த்து சட்டென முகப் பாவத்தை மாற்றியவன் “எனக்கு பசிக்கல ‘mom’ பிளீஸ் லீவ் மீ அலோன்” என்றான்.

“நீ சாப்பிடாமல் நான் இங்க இருந்து போக மாட்டேன்” என அவர் பிடிவாதமாக நிற்க…

“ஓ மை கோட் ‘mom’ அப்போ நீங்களே ஊட்டி விடுங்க” என்று சொல்ல…

அவன் சொன்னது ஏதோ சாதாரணமாகத் தான்.

ஆனால் அவருக்கோ, சொல்ல முடியாத அளவு மகிழ்ச்சி.

பெரியதாக பேசாதவன் இன்று உணவை ஊட்டச் சொல்கின்றான் என்றால் எந்த தாய்க்குத் தான் பிடிக்காமல் போகும்.

நன்றாக உணவை பிசைந்து ஊட்டி விட, அவனும் உண்டான்.

இங்கு இப்படி இருக்க…

அங்கு, நம் ஆழினியோ, யானை சென்ற பின்னர் ஒருவாறு மேலே வந்து தனது இருப்பிடத்தை வேக வேகமாக வருண் சொல்லிச் சொல்ல உறுதியாக அமைத்தவள் ஒன்றுமே பேசாமல் அதில் ஏறி படுத்தவள் கண்களை மூடிக் கொண்டாள்.

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 17”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!