இடைவெளி தாண்டாதே.. என் வசம் நான் இல்லை..

4.9
(15)

Episode – 01

 

சென்னையில் உள்ள அந்தக் கல்யாண மண்டபம் மொத்தமும், ஜனத் திரள் அலை மோதியது.

 

அந்த சுற்று வட்டாரத்திலே அப்படி ஒரு திருமணம் நடந்ததும் இல்லை. இனி நடக்கப் போவதும் இல்லை. 

 

அந்த இடம் முழுவதும் ஆடம்பரம் அள்ளித் தெளித்தது போல இருந்தது. 

 

ஒரு புறம் மண்டபம் அலங்கார விளக்குகளால் ஜொலிக்க, இன்னொரு புறம் நூறுக்கும் மேலான வகை வகையான உணவுகள் விருந்துக்கு தயாராகி கொண்டு இருக்க, பணத்தின் செழுமை எங்கும் வாசம் செய்ய, மறு புறம் மேளக் கச்சேரி களை கட்ட, 

 

மண மேடை எங்கும்  ஒரிஜினல், ரோஜாக்களும், ஓர்க்கிட்டுகளும் பட்டுக் கம்பளம் விரித்தது போல பரவிக் கிடக்க,

 

அதன் நடுவே, தங்க முலாம் பூசப் பட்ட இருக்கையில் மீசையை முறுக்கிய வண்ணம் அமர்ந்து இருந்தான்  ஆதி மூலன். 

 

அவனின் கண்களின் சிவப்பே சொன்னது அவனின் கோபத்தின் அளவை. 

 

கை முஷ்டிகள் இறுக அமர்ந்து இருந்தவன், வாயில் ஐயர் கூறிய மந்திரங்கள் அனைத்தும் கண்டபடி அரை பட்டன. 

 

அவனின் வாய் அது பாட்டுக்கு மந்திரங்கள் சொன்னாலும், அவனின் கண்கள் என்னவோ வெறித்துக் கொண்டு இருந்தது அங்கே கையைப் பிசைந்து கொண்டு இருந்த அபர்ணாவை நோக்கித் தான்.

 

அவளோ, அவனை எச்சில் விழுங்கப் பார்த்தவள், 

 

இறுதி முயற்சியாக “ப்ளீஸ்….” என இதழ்கள் வழி கெஞ்ச,

 

அவனோ, எள்ளல் சிரிப்புடன் அவளையே பார்த்து வைத்தான். 

 

அவன் சிரிக்கும் போது, அவனின் பொசுங்கி இருந்த வலது பக்க கன்னம் இன்னும் விகாரமாக தோன்றியது.

 

அதனைக் கண்ட அபர்ணாக்கு இன்னும் பயம் ஏற்பட,

 

ஒரு கணம் கண்களை மூடித் திறந்தவள், 

 

அங்கிருந்த வண்ணம் மணமகள் என எழுத்துக்கள்  பதிக்கப் பட்டு இருந்த அறையை நோக்கி தவிப்பாக பார்வையை செலுத்தினாள்.

 

அடுத்த நொடி அங்கிருக்க முடியாது, எழுந்து செல்ல எத்தனிக்க,

 

அதனைக் கவனித்த ஆதி மூலன், தனக்கு அருகில் நின்று கொண்டு இருந்த, கோடீஸ்வரனை அழைத்து அவரின் காதில் ஏதோ கூறினான்.

 

அவரும், “ஓகே மாப்பிள்ளை.” என புன்னகை உடன் கூறியவர்,

 

அடுத்த நொடி, “அம்மாடி அபர்ணா எங்கம்மா போறாய்?, உன்னோட வருங்கால அத்தான் உன்ன இங்க வந்து நிற்கட்டுமாம். இங்க வாம்மா.” என அழைக்க,

 

அவளோ, “இல்லப்பா, அக்கா ரெடி ஆகிட்டாங்களான்னு பார்த்துட்டு வரேன்.” என இழுக்க,

 

மண மேடையில் இருந்தவாறே, தான் மாப்பிள்ளை என்கிற எண்ணம் கொஞ்சமும் இல்லாது,

 

“அதெல்லாம் அவங்க ரெடியாகி வருவாங்க. நீ முதல்ல இங்க வந்து, எனக்கு பக்கத்தில நில்லு.” என அதட்டினான் ஆதி.

 

அவளோ, அத்தனை பேர் முன்னாடியும் எதுவும் கூறவும் முடியாது, 

 

தந்தையை நேருக்கு நேராக எதிர்க்கவும் முடியாது, 

 

“தனது அக்காவின் வாழ்வை தானே பலி கொடுத்து விட்டோமே.” என்ற எண்ணத்துடன், 

 

கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு, திருமணம் நடக்கும் மேடை மீது ஏறி தந்தை அருகே சென்று நின்று கொண்டாள். 

 

அவரோ, மென்மையாக அவளின் தலையை வருடி விட்டவர், 

 

“இந்தக் கலியாணம் நடந்தா தான் என் மனசுக்கு அமைதி கிடைக்கும்டா. என் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். ஒரு பொண்ண நல்ல படியா காட்டிக் கொடுத்துட்டேன்னு நானும் நிம்மதியா இருப்பன்.” எனக் கூறி கலங்கிய 

கண்களை துடைத்துக் கொண்டார்.

 

அவரின் கலங்கிய கண்களைக் கண்டு தானும் கலங்கிப் போனவள், 

 

கையைப் பிசைந்து கொண்டு தனது கையறு நிலையை எண்ணி மனம் நொந்தபடி,  ஒட்டு மொத்த கலக்கத்திற்கும் காரணமானவனை எதுவும் செய்ய முடியாது வெறித்துப் பார்க்க,

 

கேலிப் புன்னகை உடன் கண் சிமிட்டியவன், 

 

அவளை நோக்கி இனி உன்னால் எதுவும் செய்ய முடியாது என்பது போல தலையை ஆட்டி, தோளைக் குலுக்கினான்.

 

அபர்ணாவும், கலங்கிய கண்களையும், தோல்வியின் வலியையும் அவனுக்கு காட்ட விரும்பாது, வேறு புறம் பார்வையை திருப்ப,

 

அவனோ, அப்போதும் விடாது, சொடக்கிட்டு, அவளை தன் புறம் திரும்பி பார்க்க செய்தான்.

 

அவனின் செய்கையில் அவள் அவனை திகைத்து நோக்க,

 

“உன் கண்ணு அங்க, இங்கன்னு அலையக் கூடாது ரைட். இங்கயே பார்த்துக் கொண்டு இருக்கணும். புரிஞ்சுதா?, அக்கா கலியாணத்த சிரிச்ச படி பார்க்கணும் அபர்ணா….” என அழுத்தமான கம்பீர குரலில் கர்ஜிக்க,

 

அவளின் உடல் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது. 

 

அவனோ, “கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல.”  என மீண்டும் உறும,

 

அவளும், “ம்ம்ம்ம்…. சரி.” என குனிந்த படியே தலையாட்டி வைத்தாள். 

 

அவளின் செய்கையில்  அவன் கர்வமாக சிரிக்க,

 

மந்திரம் சொல்லும் ஐயருக்கே நா குழற ஆரம்பித்தது.

 

அவரின் செய்கையில் அவர் புறம் திரும்பியவன், 

 

அவளிடம் காட்டிய முகத்திற்கு முற்றிலும் எதிர்ப் பதமாய் புன்னகை முகம் காண்பித்தான்.

 

அவனின் சிரிப்பில் அத்துணை கவர்ச்சி இருந்தது. 

 

சற்று முன்பாக, சிறு பெண்ணை மிரட்டியவன் அவன் என அடித்துக் கூறினாலும் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது அவனின் செயல்.

 

சிரித்த படியே, “நீங்க பயப்பட வேணாம்,  சரியான முறையில மந்திரம் சொல்லுங்க.” என கூற, 

 

ஐயரும் அவனைப் பார்த்து சமாளிப்பாக சிரித்து வைத்தவர், தலையை ஆட்டிக் கொண்டு மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்.

 

அதற்குள், அவனுக்கு போன் என அவனின் வலது கை ஒருவன் போனை நீட்ட,

 

ஐயரை நோக்கி நிறுத்துமாறு கை காட்டியவன் போனை ஆன் காதில் வைத்தான்.

 

“ம்ம்ம்…. ஓஹ்…. அவனைப் பிடிச்சு நம்ம இடத்தில கட்டி வைங்க, முகூர்த்தம் முடிய, உடனே கிளம்பி வரேன். அவன் உயிர் என் கையால தான் போகணும். அது வரைக்கும் உயிர்ப் பயத்தை காட்டிக் கொண்டு இருங்க.” என கர்ஜித்தான்.

 

வெளிப்படையாக, அவன் ஒருவனை கொலை செய்யப் போகிறேன் என அந்த இடத்தில் சொல்லியும், யாருமே அவனை எதிர்த்து கேள்வி கேட்க முன் வரவில்லை.

 

அபர்ணாவுக்கு , அவனின் உண்மை முகம் முன்னமே தெரிந்து இருந்தாலும், மீண்டும் மீண்டும் அவன் கொலை எனப் பேசுவதில் உடல் நடுங்கிப் போய் நின்றாள்.

 

அவனை நோக்கி யாரும் கை காட்ட…. இல்லை…. இல்லை…. ஒற்றை விரலை கூட தூக்க முடியாது.

 

அப்படிப் பட்ட வலிமை கொண்டவன் தான் இந்த ஆதி மூலன்.

 

அவன் தலை அசைப்புக்கு அடங்கிப் போக அவனைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கின்றது.

 

அவன் கோபமாக ஒருவனை நோக்கி கை நீட்டினால், அடுத்த கணம் அந்த நபரின் உயிர் போய் இருக்கும்.

 

அவனுக்கு குப்பத்தில் இருக்கும் குமார் தொடக்கம் கோட்டையில் இருக்கும் பெருமாள் வரை அனைவரையும் தெரியும். 

 

தனக்கு என ஒரு நியாயம் வகுத்து வாழும் தனிப் பிறவி அவன்.

 

அவனுக்கு ரோட்டில் இருக்கும் பிச்சைக் காரனும் ஒன்று தான். கோபுரத்தில் இருக்கும் கோமானும் ஒன்று தான்.

 

நியாயம் என்று வந்தால் யார்?, எவர்? என பார்க்க மாட்டான். அனைவரையும் விளாசித் தள்ளி விடுவான்.

 

அவனுக்கு முன்பாக நின்று பேசவே அனைவரும் பயப்பிடுவார்கள்.

தனிக்காட்டு ராஜாவாக வளர்ந்த காட்டுச் செடி அவன்.

 

தல ஸ்டைலில் சொன்னால்  தன்னைத் தானே சிறுகச் சிறுக செதுக்கிக் கொண்ட சிற்பி அவன்.

 

வெறும் இருபத்து ஐந்து வயதில் அந்த இடத்தை ஆட்டிப் படைப்பவனாக மாறி நிற்கும் வேங்கை அவன்.

 

ஆறடி உயரத்தில், கம்பீரமாக இருப்பவன், மாநிறத்தில் அரிமா போல சிலிர்த்துக் கொண்டே இருப்பான். 

 

அளவான மீசை, தாடியுடன், சிக்ஸ் பேக்குடன், ஐயனார் கணக்கா இருப்பான்.

 

( இவன் கிராமும், நவீனமும் சேர்ந்த கலவை மக்காஸ்.. அதனால தான் சிக்ஸ் பேக் ஐயனார்னு சொன்னன்.)

 

அவன் எப்போதும் பிடித்து அணிவது வேட்டி சட்டை தான்.

 

அவன் நிகர் இல்லாத ஆண் அழகன் தான் என்றாலும் அவனின் அழகிலும் ஒரு குறை இருக்கத் தான் செய்கிறது.

 

ஆம் அவன் முகத்தில் இருக்கும் அந்தப் பொசுங்கிய வடு தான் அவனின் அழகை குறைத்துக் காட்டும் அடையாளமாக இருக்கிறது.

 

அந்த வடு, அவனுக்கு பயங்கர தோற்றத்தைக் கொடுப்பதுடன், அவனைக் கண்டதும் ஒரு வித பயத்தையும் உண்டாக்குகிறது.

 

அவனிடம் கோடிக் கணக்கான சொத்துகள் இருந்தும், சொந்தம் என்று பார்த்தால் அவனும் அன்புக்காக ஏங்கும் அனாதை தான்.

 

மற்றவர்கள் இடத்தில் அவன் உண்டு பண்ணிய பயம் தான், அவனைக் கண்டு அபர்ணாவையும் பயம் கொள்ள வைத்தது.

 

அந்தப் பயத்தின் வெளிப்பாடாக அவள் சொன்ன வார்த்தைகள் தான் இன்று அவளின் அக்காவை அவன் திருமணம் செய்து கொள்ளவென மண மேடை வரைக்கும் வரக் காரணம்.

 

இத்தனைக்கும், அவன் அபர் ணாவின் அக்கா தமயந்தியின் முகத்தைக் கூட ஒழுங்காக பார்த்தது  இல்லை.

 

திருமணமே வேண்டாம் என இருந்தவன் தான் அவன்.

 

அபர்ணாவின் பாடசாலையில் குறித்த ஒரு நிகழ்விற்கு அதிதியாக அழைக்கப் பட்டு இருந்தான்.

 

என்ன தான் அவன் அடாவடிக் காரனாக இருந்த போதும், அவன் செய்யும் நல்ல விடயங்கள் காரணமாக  கஷ்டப்படும் நபர்களின் ஹீரோவாகத் தான் அவன் பார்க்கப் பட்டான்.  

 

தொண்டு நிறுவனங்கள், கல்லூரிகள், பாடசாலைகளுக்கு அவன் வாரி வழங்கும் தொகைகள் ஏராளம்.

 

அதன் காரணமாகத் தான் படிக்காத மேதை அவன், அந்த நிகழ்விற்கு அழைக்கப் பட்டு இருந்தான்.

 

அங்கு தான் பிரச்சனையே ஆரம்பம் ஆனது.

 

அவனை பூங்கொத்து கொடுத்து வரவேற்கவென வாயிலில் நிறுத்தி வைக்கப் பட்டு இருந்தது என்னவோ தான் நம்ம அபர்ணாவைத் தான்.

 

கல்லூரியின் மிகச்சிறந்த மாணவி என்ற வகையிலும் மாணவத் தலைவி என்ற வகையிலும் அந்தப் பொறுப்பு அவளுக்கு ஒப்படைக்கப் பட்டிருந்தது.

 

குறித்த நிகழ்வின் வேலைகளில் பிசியாக திரிந்ததில் அவள் வரும் அதிதிகள் யார் யார் என்பதை சரியாக கவனிக்காது போய் விட்டாள்.

 

ஒரு வேளை முன்னமே ஆதி மூலன் வருவது தெரிந்திருந்தால் அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்று இருப்பாள்.

 

ஏனெனில் அவளுக்கு ஆதி மூலன் என்ற ஒரு தனி மனிதனின் மேல் அத்துணை வெறுப்பு உருவாகி இருந்தது. 

 

ஏற்கனவே ஆதி ரோட்டில் வைத்து சில பேரை மோசமாக அடிப்பதை நேரடியாக கண்டவள் அவள். 

 

அப்போதில் இருந்து அவனின் பெயரைக் கேட்டாலே அவளுக்குள் அப்படி ஒரு வெறுப்பு வந்து விடும்.

அவனைப் பற்றிய அவளின் விம்பம், பொறுக்கி, மோசமானவன், 

அடிதடிக்காரன், அடாவடிக் காரன், கொலை காரன், முரடன், முன் கோபி, மோசக்காரன், படிக்காதவன், திமிர் பிடிச்சவன்…. என்பது தான்.

 

அப்படிப் பட்டவனுக்கு பூங்கொத்து கொடுக்க சொன்னால் அவள் ஆம் என சொல்லி விடுவாளா என்ன?

 

முதலில் வருகை தந்த அத்துணை அதிதிகளுக்கும் புன்னகையுடன் பூங்கொத்தை கொடுத்தவள் அவர்களை மரியாதை உடன் அழைத்துக் கொண்டு சென்று இருக்கையில் அமர வைத்து விட்டு நகரும் போது தான்,

 

அவளின் கல்லூரியின் முதல்வர், “அபர்ணா இன்னொரு முக்கியமான விஐபியும் வந்திருக்கிறார். அவருக்கும் நீதான் பூங்கொத்து கொடுத்து வரவேற்கணும்.” எனக் கூறி அழைத்து சென்றார்.

 

அவளும், “ஓகே சார் யாரு சார் அந்த இன்னொரு விஐபி?” என கேட்டுக் கொண்டு வாசலுக்கு வந்து சேர்ந்தவள்,

 

அங்கிருந்த பூங்கொத்தினை எடுத்துக் கொண்டு புன்னகை முகமாய் வாசல்ப் புறம் நோக்கி பார்வையை செலுத்தினாள். 

 

அதே நேரம் ஆதி மூலனும் மென் புன்னகையுடன் அவளை நோக்கி விட்டு, பூங்கொத்தினை வாங்கும் நோக்கில் கையை நீட்ட,

 

அவளின் சிரித்த உதடுகள் ஒரு செக்கனில் இறுக்கமாகிப் போக,

 

பட்டென்று அவனது முகத்தில் அடித்தாற் போல பூங்கொத்தை அங்கிருந்த மேசையில் தூக்கிப் போட்டவள்,

 

தனது கல்லூரியின் முதல்வரை நோக்கி தீர்க்கமாக,

 

 “சாரி சார். இவருக்கு என்னால பூங்கொத்து கொடுத்து வரவேற்க முடியாது. இவர் எப்படிப்பட்ட அயோக்கியன்னு இந்த ஊருக்கே தெரியும் இவரப் போய் நீங்க விஐபின்னு சொல்லி ஃபங்ஷனுக்கு இன்வைட் பண்ணி இருக்கீங்க. எவ்வளவு படிச்ச ஆட்கள் இருக்காங்க சார். இவருக்கு படிப்ப பத்தி என்ன சார் தெரியும்?, நீங்க என் மேல என்ன ஆக்சன் எடுத்தாலும் பரவாயில்ல. எப்பவும் நியாயமானத தான் நான் பேசுவன். நியாயமானத தான் செய்வன். ஐ அம் ரியலி சாரி சார்.” என தெளிவாக அவரின் முகத்தை நோக்கி  பயம் இன்றிக் கூறியவள்,

 

தனக்கு முன்பாக நின்றவனை நோக்கி துச்சப்பார்வை ஒன்றை வீசி விட்டு கடகடவென ஹாலை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

 

அவள் அப்படி நடந்து கொள்ளக் கூடும் என கல்லூரி முதல்வரே எதிர்பார்க்கவில்லை.

 

அந்த சங்கடமான சூழ்நிலையை தவிர்க்க முடியாது ஒருவித தடுமாற்றத்துடன் ஆதி மூலனை நோக்கினார் அவர்.

 

அவனோ, கைகளை கட்டிக் கொண்டு மென் சிரிப்புடன், அவள் பேசுவது முழுவதையும் கேட்டுக் கொண்டு இருந்தவன், அவள் அந்த இடத்தினை விட்டு மறையும் வரைக்கும் பார்வையால் அவளைத் தொடர்ந்து கொண்டே இருந்தான்.

 

பாடசாலை சீருடையில் சிறு பிள்ளை போல இருந்தவள், மூக்கு சிவக்க, 

பொரிந்து தள்ளி விட்டு துள்ளலுடன் நடந்து செல்வதை இமைக்காது பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் ஆதி.

 

கல்லூரி முதல்வரோ, மீண்டும் ஏதோ சொல்ல எத்தனிக்க,

 

அவரின் பயத்திற்கு அவசியமே இல்லை என்பதைப் போல,

 

ஒரு புன் சிரிப்பினை பரிசளித்தவன்,

தானாகவே அந்த பூங்கொத்தினை எடுத்துக் கொண்டு, “உள்ள போகலாமா சார்?” என கேட்டான்.

 

அவரோ, “நல்ல வேளை கோபப்படல.” என எண்ணிக் கொண்டு,

 

அவனை மரியாதையுடன் அழைத்துக் கொண்டு சென்றார்.

 

அவனுடன் நெருக்கமாக பழகும் நபர்களுக்கு மட்டும் தான் தெரியும். 

 

அவனின் கோபத்தை விட புன் சிரிப்பு மிகவும் ஆபத்தானது என்று. அவன் சிரிக்கிறான் என்றால் அடக்க முடியாத கோபத்தில் இருக்கிறான் என அர்த்தம்.

 

அந்த சிரிப்புக்குள் மறைந்து இருக்கும் கோபம் கண்டிப்பாக சம்பந்தப் பட்டவரை சுட்டுப் பொசுக்காது விடாது என்பது தான் உண்மை.

 

அவன் தனக்குரிய இருக்கையில் காலுக்கு மேல் கால் போட்டவாறு அமர்ந்து கொண்டு, அங்கும் இங்கும் நடந்து வேலைகளை கவனித்துக் கொண்டு இருந்த அபர்ணாவையே உறுத்து விழித்துக் கொண்டு இருந்தான். 

 

ஆதி மூலன் அபர்ணாவின் அக்காவின் கழுத்தில் தாலி கட்டுவானா?

 

அபர்ணாவை பழி வாங்க எண்ணும் அவனின் எண்ணம் ஈடேறுமா?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்..

 

அடுத்த எபி மார்னிங் அதிரடியா வரும் மக்காஸ் ❤❤❤❤

 

உங்க லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ் ❤❤❤❤❤

 

இனி தொடர்ந்து எபிகள் வரும் 😍😍😍😍

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!