வஞ்சம் 1
மேகமூட்டங்கள் எதனையோ தொலைத்த படி பதற்றமாக ஆர்ப்பாட்டத்துடன் அலைந்து திரிந்து வானத்தில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் அக்காலை வேலை தனில் ஆறடிக்கு மேல், உயர்ந்த கரு நிற கோட் சூட்டுடனும், சுருள் முடி கேசத்துடனும், மிடுக்காக, அடர்ந்த புருவங்களுடனும், எதிரில் நிற்பவர்களை வெட்டும் அளவுக்கு நீண்ட கூரிய மூக்கும், தாடி மீசையற்ற கிளீன் சேவ் செய்யப்பட்ட வதனத்துடன் ஹான்சமாக, கனடாவில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டு வரும் விமானத்தில் வந்து தரை இறங்கினான் நமது நாயகன் செழியன் என்கிற இளஞ்செழியன்.
விமானம் தரை இறங்கியதும் விமான நிலையத்தில் இருந்து வெளி வந்து, தனது கைபேசியை எடுத்து விமானத்தில் பயணம் செய்த காரணத்தினால் பிளைட் மாடில் இருந்ததை எடுத்துவிட்டு பார்த்தவுடன் சிறு பதற்றம் மனதளவில் அவனுடன் ஒட்டிக் கொண்டது.
ஆம் அதில் இடைவிடாது அதிகளவான குறுஞ்செய்திகளும் அழைப்புகளும் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.
அதனைப் பார்த்து புருவம் சுருக்கியவன், முக்கியமான அழைப்பான தனது வீட்டில் இருந்து அனைத்து விடயங்களையும் பொறுப்பாக கவனிக்கும் ராமன் என்கிற ராமையா என்பவரது, சிறு வயதிலிருந்து தனது அம்மாவையும் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் கவனிக்கும் ஒரு வேலைக்காரன் என்பதை விட தனது வீட்டின் ஒரு உறுப்பினராகவே தங்கள் மீது அன்பும், பாசமும், அக்கறையும் நிறைந்த ஒரு நபர் என்றே கூறலாம்.
அவரது அழைப்பு ஏன் செழியனுக்கு மிகவும் அதிர்ச்சியையும் யோசனையையும் அள்ளித் தெளிக்க வேண்டும்? ஏனென்றால் ராமையா எப்பொழுதும் செழியனுக்கு அழைப்பு எடுப்பது இல்லை.
எப்போதாவது முக்கியமான சந்தோசம் மற்றும் கவலை தரும் நிகழ்வுகள் நடக்கும் வேளையில் மட்டும் தான் அவர் அழைப்பு எடுப்பது வழக்கம். கடந்த முறையும் அவர் தனது அம்மா பார்வதிக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்து மயங்கி விழுந்த நேரம் அவசரமாக அழைப்பு எடுத்திருந்தார். அதே போல் இன்றும் அவரது அதிகளவான தவற விட்ட அழைப்புகள் நிரம்பி வழிந்தன.
அதனால் தான் செழியனுக்கு யோசனை தீவிரமாக எழுந்தது. அதனை ஒரு ஓரம் வைத்து விட்டு ராமையாவுக்கு அழைக்க மறுமுனையில் இருந்து வந்த செய்தியை கேட்டதும் அவனது உள்ளம் பதறி ஆவி வெளியில் சென்றது போல் உணர்ந்தவன், அசைவற்று புயல் காற்றில் சிக்குண்டு புரண்ட மரம் போல் சரிந்து விழுந்தான்.
******************************
தென்றல் வந்து தீண்டித் தூண்ட, மேகங்கள் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டு முன்னேறி ஒன்றன் பின் ஒன்றாக ஓடச் சிரமப்பட்டுச் சினுங்கி அழும் போது, சிதறும் மழைத்துளிகள் பூமி தனை நனைத்து வெப்பத்தினை வெளியேற்றி, ஒன்றையொன்று ஈடுகட்டும் அந்த மலைகள் நீண்டு நிமிர்ந்து நிற்கும் குறிஞ்சி நில பகுதியில், பெண்களின் இடையைப் போல வளைவு சுழிவுகளுடன் தோன்றும் வீதிகளில் லோயலா கல்லூரியின் பெயரை தாங்கிய மூன்று பேருந்துகள் பெரும் ஆரவாரத்துடன் ஆடல் பாடல்களுடன் சென்று கொண்டிருந்தன.
இறுதியில் அந்தப் பேருந்துகள் தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் நிற்க, உள்ளே உள்ள அனைத்து மாணவர்களும் இறங்கி தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்தனர்.
அந்தக் கல்லூரி மாணவர்களுக்குப் பொறுப்பாக சிரிப்பு என்பதே என்னவென்று அறியாத ப்ரொபசர் தனபால், தலையில் ஆங்காங்கு சிறு சிறு அரும்பிய முடிகள், மெலிந்த உடல்வாகு, ரோடு மேல இருக்கும் கோடு போல மெல்லிய மீசை அவரை மாணவர்கள் மனதில் சிரிப்பு போலீஸாகவே நினைக்கத் தோன்றியது. பேருந்தில் இருந்து இறங்கி “ஸ்டுடென்ட்ஸ்…. ஹாஃப் அன் ஹவர் தான் டைம் தருவேன். அதுக்குள்ள எல்லாரும் சுத்தி பார்த்துட்டு….. இதே இடத்துக்கு திரும்பி வந்துடனும்…. இல்லேன்னா பஸ் யாரையும் பாக்காம கிளம்பிடும்…… ஓகே…… லெட்ஸ் கோ…..” என்று கூறிவிட்டு மறைவாக உள்ள ஒரு டீக்கடையில் தம் அடிக்கச் சென்று விட்டார்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் பேருந்தில் இருந்து இறங்கி ஒவ்வொரு குழுவாக தனது நண்பர்களுடன் அந்த இயற்கை காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்க அதிசயித்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதில் பெண்கள் பட்டாளத்தில் தேவதை என நீண்ட முடியும், பார்த்தவுடன் கவரும் திராட்சைப் பழ விழிகளும், தொட்டவுடன் சிவக்கும் மென் நிற மேனியும், வசீகரிக்கும் சாந்தமான முகமும் கொண்ட நம் கதாநாயகி ஸ்ரீ நிஷா இயற்கை அன்னையின் எழிலை வியந்து பார்த்த வண்ணம் தோழிகளுடன் குழுமி நின்றாள்.
“என்ன ஸ்ரீனி… பகல் கனவா…?” என்று அவளது உயிர்த்தோழி ஸ்ரீநிதி கேட்டாள். ஆம் இருவருக்கும் ஒரு எழுத்து மட்டும் தான் தமது பெயர்களில் வேறுபாடு.
கல்லூரியில் ஒன்றாக இணையும் போது தமது பெயர்களில் ஏற்பட்ட குழப்பத்தில் உண்டான நட்பு தான் அவர்களை மூன்று வருட காலமாக இணை பிரியாத தோழிகளாக மாற்றியது. அந்த முதல் கலகம் அவர்களது நட்புக்கு வித்திட்டது.
ஆனால் பெயர் மட்டும் தான் இருவருக்குள் ஒற்றுமை. மற்றும் படி இருவரின் குணாதிசயங்களும் மலையும் மடுவும் போல. அவ்வளவு வேறுபாடு.
ஆனால் இருந்தும் இருவருக்கிடையிலும் சண்டைகள் உண்டாவது மிகவும் அரிது. ஏனெனில் ஸ்ரீ நிஷா மிகவும் மென்மையானவள். அவளுக்கு தாய் தந்தை என்று உறவு எதுவும் இல்லை.
சிறுவயதில் இருந்தே அன்பு இல்லம் தான் எல்லாமே. அங்கிருக்கும் அனைவரும் அவளுக்கு உறவினர். சிறு வயது முதல் அன்பிற்காக ஏங்கித் தவிக்கும் உதிராத மலர் போன்றவள். ஆம் அவளது மனமும் பூவை போல மிகவும் மென்மையானது. மிகவும் அமைதியான சிறு உயிருக்கு கூட தீங்கு நினைக்காத மென்னுள்ளம் கொண்டவள்.
குரலை உயர்த்திக்கூட பேசாமல் அனைவரிடமும் மிகவும் பணிவாகவே நடந்து கொள்வாள். அவளது அழகுக்கு அது மேலும் எழில் சேர்க்கும் வகையில் நன்றாகவே பொருந்தியது
அன்பினால் தான் ஸ்ரீநிதி எது கூறினாலும் மறுபேச்சு பேசாமல் அவளது சொல்லை தாயென அன்புடன் கேட்டு நடந்து கொள்வாள் ஸ்ரீ நிஷா.
ஆனால் ஸ்ரீநிதி அதற்கு தலைகீழ் மிகவும் கோபம் கொள்பவள். எப்பொழுதும் தனது சந்தோசம் மட்டும் தான் முக்கியம் என்று எண்ணி சுயநலத்துடன் நடந்து கொள்பவள்.
ஸ்ரீநிஷாவையும் தனது தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளவே எப்பொழுதும் உயிர்த்தோழியாக மாற்றி அவளை தனது கைக்குள் வைத்துக் கொள்கிறாள்.
அதற்கு வேறொரு முக்கிய காரணமும் உண்டு ஸ்ரீநிதியை விட ஸ்ரீநிஷா படிப்பில் மிகவும் கெட்டிக்காரி. படிப்பு சம்பந்தமாக ஸ்ரீநிதி எது கேட்டாலும் மறுக்காமல், மறக்காமல் அனைத்தையும் இரா பகலாக கண்விழித்து செய்து கொடுப்பாள்.
ஸ்ரீ நிஷா ஸ்ரீநிதி மீது கொண்டுள்ள அன்பை ஒரு பொக்கிஷமாக எண்ணி அவளுடன் தோழமை கொண்டாள். ஆனால் ஸ்ரீநிதி அவளை ஒரு அடிமை போல தனக்கு வேண்டுமான அளவு நன்கு பயன்படுத்திக் கொள்வாள்.
ஸ்ரீ நிதியை பார்த்து மென் சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு, இல்லையென தலையாட்ட, ஸ்ரீ நிதியோ “நிஷா… அந்த இடத்துல வியூ நல்லா இருக்கு… அப்படியே போட்டோ எடுக்கலாம் வா…” என்று ஸ்ரீ நிஷாவை அழைத்துக் கொண்டு செல்ல, அதனை இடை மறித்து வந்து நின்றான், அவர்களது கல்லூரியில் படிக்கும் அரவிந்த்.
அதனை பார்த்ததும் ஸ்ரீநிதி “என்ன அரவிந்த்….. நாங்க போகணும்…. வழி விடு… ஏன் போகிற வழியில நிக்கிற… மண்டை சிதறப்போகுது…. மரியாதையா வழியை விடுடா….” என்று அரவிந்துடன் வம்பு வளர்த்தாள்.
“ஏய்…. ஸ்ரீநிதி…. உனக்கும் எனக்கும் பேச்சு இல்ல…. நான் ஸ்ரீநிஷாவோட தனியா பேசணும்…” என்று மிடுக்காக கூறினான்.
இதனைக் கேட்டதும் ஸ்ரீநிதிக்கு கோவம் எல்லை மீறியது. “யார் கிட்ட வந்து…. என்ன வார்த்தை சொல்ற…. அவள் என்னோட பெஸ்ட் பிரண்டு…. அவ எல்லாம் உன்னோட பேச மாட்டா…” எனக் கூறினாள்.
“அதை நீ சொல்லாத… ஸ்ரீ நிஷா சொல்லட்டும்…” என்று அரவிந்த் கூறியதும் ஸ்ரீநிதி ஸ்ரீநிஷாவை எரிக்கும் பார்வை ஒன்றைப் பார்க்க, ஸ்ரீ நிஷா பயத்துடன் அரவிந்தை நிமிர்ந்து பார்த்து ஒன்றும் கூறாமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்.
அரவிந்த் அவளை பின்தொடர்ந்து “ப்ளீஸ்…. ஸ்ரீநிஷா… ஒரு நிமிஷம்… ஒரே ஒரு நிமிஷம்…. உன்னோட நான் கொஞ்சம் தனியா பேசணும்…. ப்ளீஸ்…. ப்ளீஸ்…. ப்ளீஸ்…. ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்…” என்று ஓயாது பின் தொடர்ந்து அவளை கெஞ்சிக் கொண்டிருந்தான்.
தேயிலை தோட்டத்தில் ஆங்காங்கே நிக்கும் நண்பர்கள் அவளை நோட்டமிட, அவனது தொல்லை தாங்க முடியாமல் ஸ்ரீநிதி கோவித்தாலும் பரவாயில்லை என்று “சரி… என்ன…? சொல்லுங்க…” என்று கூற அருகில் நின்று கொண்டிருந்த ஸ்ரீ நிதியை அவன் அழுத்தமாகப் பார்த்தான்.
அதன் அர்த்தம் புரிந்து அசையாமல் கைகளை கட்டிக்கொண்டு ‘நான் எங்கும் செல்ல மாட்டேன்..’ என்பது போல் நின்றாள் ஸ்ரீநிதி.
இருவரின் செயலையும் கண்டு தலையில் அடிக்காத குறையாக “ஸ்ரீநிதி இருக்கட்டும்… நீங்க சொல்ல வந்த விஷயத்தை சீக்கிரமா சொல்லிட்டு கிளம்புங்க…”
“இல்லை.. இல்லை… நிஷா நான் பேசும் போது அவங்க குறுக்க பேசாம இருந்தா போதும்… அதுக்கு அவங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே…”
ஸ்ரீநிதி பற்களை கடித்த வண்ணம் அவன் கூறியதற்கு சரியென்று மட்டும் கூறிவிட்டு சிலை போல அப்படியே நின்றாள்.
“அப்பாடா… வாயாடி சொர்ணாக்கா வாய ரெண்டு நிமிஷத்துக்கு கடிவாளம் போட்டு மூடியாச்சு…” என்று மனதிற்குள் எண்ணி நிம்மதி அடைந்தவன், குரலை செறுமிக் கொண்டு “ஸ்ரீ நிஷா… உங்களை நான் ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து லவ் பண்ணி கொண்டு இருக்கிறேன்…. உங்களோட சாந்தமான குணமும், அமைதியும் என்னைய ரொம்ப டிஸ்டர்ப் பண்ணினது….
நான் ஃபர்ஸ்ட் டைம் உங்களை பார்த்ததும் ரெண்டு நாளா எங்கு எதைப் பார்த்தாலும் உங்க முகம் தான் கண் முன்னுக்கு வந்து போகுது… அதுக்கு அப்புறம் தான்… நான் என்னோட லவ்வ எனக்குள்ளே பீல் பண்ணினேன்… வெக்கேஷன் லீவுக்கு காலேஜ் லீவு விடும் போது என்னால உங்கள பாக்காம இருக்கவே முடியல…. உங்களுக்கு தெரியாம என்னோட மொபைல்ல எடுத்த போட்டோஸ் பார்த்து பார்த்து அந்த லீவு எப்ப முடியும்னு… நாட்கள விரல் விட்டு எண்ணிக் கொண்டு இருப்பேன்…
நீங்க இல்லாத என்னோட வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் மிகவும் கடினமானதாகத் தான் கழியும்… அதை நான் மனதளவில் ரொம்ப உணர்ந்துட்டேன்…. என்னோட வாழ்க்கையில நீங்க துணையாக வந்தா…
என்னோட வாழ்க்கை நிம்மதியும், சந்தோசமும் நிறைந்ததா இருக்கும் என்று நான் நம்புறேன்…. அந்த நிம்மதியும், சந்தோஷத்தையும் உங்களுக்கும் நான் முடிந்த அளவு கொடுப்பேன்னு நான் சத்தியம் செய்கிறேன்… ஐ லவ் யூ ஸ்ரீ நிஷா…. ஐ லவ் யூ…. நீங்க இதுக்கு உடனே பதில் சொல்லணும்னு அவசியமில்லை… எக்ஸாம் முடிஞ்ச பிறகும் சொல்லலாம்… நான் என்னோட லவ்வ மூன்று வருஷமா உங்க கிட்ட சொல்லல…
ஏன்னா நீங்க அதை மறுத்துடுவீங்கன்னு ஒரு தயக்கம் எனக்குள்ள எப்பவுமே இருந்துச்சு…. இப்பவும் நான் சொல்லாம விட்டேனா…. இனிமே சொல்லவே முடியாது… அதனால தான் என்னோட லவ்வ உங்ககிட்ட வெளிப்படுத்த வேண்டியதா போயிட்டு, அதோட உங்களோட படிப்புக்கு எந்த இடையூறும் வரக்கூடாதுனும் லவ்வ நான் வெளிப்படுத்தல்லை…
ஆனா இப்போ வெளிப்படுத்த வேண்டிய ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைச்சிருக்கு…. அந்த சந்தர்ப்பத்தை மிஸ் பண்ண கூடாதுன்னு நீங்க இப்ப இந்த அழகான இடத்தில அழகான தேவதையா என் முன்ன நிற்க, என்னோட இந்த ஆழமான காதல நான் வெளிப்படுத்திட்டேன்….
இது ஒரு பியூட்டிஃபுல்லான மெமரபுல் டேயா என் லைஃப் ஃபுல்லா மனதுல எப்பவுமே பிரகாசிக்கும்…” என்று கூறி தனது பேச்சு முடிந்து விட்டது என்பது போல் அவளை கேள்வியாக பார்த்தான்.
அவனது பார்வையில் அத்தனை எதிர்பார்ப்புகளும் சந்தோசமும் பரபரப்பும் நிரம்பி வழிந்தன.
அவனது ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்டு ஸ்ரீநிதி அப்படியே இடித்து வைத்த புளி போல அசையாமல் நின்றாள்.
ஆனால் ஸ்ரீ நிஷா மிகவும் நிதானமாக அவனுக்கு தனது பதிலை உடனே தெரிவித்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்துடன் தனது மனக்கதவை திறந்தாள்.
“அரவிந்த்… நீங்க ரொம்ப அழகா உங்க காதலை வெளிப்படுத்தினீங்க…. பட்….. என்னால இப்ப உங்க காதல ஏத்துக்க முடியாது…. ஏன்னா…? எனக்குன்னு நிறைய கனவுகள் இருக்கு… அந்த கனவுகளை நான் நிறைவேற்றின பிறகு தான் என்னைப் பற்றி நான் யோசிப்பேன்….”
“பரவாயில்லை… ஸ்ரீ நிஷா…. உங்களுக்கு என்னென்ன சாதிக்கணுமோ…. அதெல்லாம் நீங்க செய்து விட்டு உங்களுக்கு எப்ப திருமணம் முடிக்கணும் என்று தோணுதோ… அப்ப சொல்லுங்க… நான் உங்களுக்காக எப்பவும் காத்திருப்பேன்….”
“இல்லை அரவிந்த்…. என்னோட கனவு ரொம்ப பெரியது… அதுக்கு எவ்வளவு காலமாகமுன்னே என்னால சொல்ல முடியாது…. அதனால நீங்க உங்களுக்கு ஏத்த ஒரு பொண்ண தேடுறது நல்லமுன்னு நான் நினைக்கிறேன்…”
“நோ… நோ… நிஷா… நீங்க இப்படி சொல்லக் கூடாது… உங்களுக்காக எதுவா இருந்தாலும்… நானும் உங்களுக்கு பக்கபலமா இருந்து உதவி செய்வேன்…”
“இல்லை அரவிந்த்… நோ தேங்க்ஸ்…”
“உங்க கனவை சொல்லுங்க நிஷா… முடிஞ்ச அளவு நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண பார்க்கிறேன்… ரெண்டு பேரும் சேர்ந்து அந்த கனவை நிறைவேற்றுவோம்….”
“அது என்னோட கனவு என்பதை விட… கடமை என்று தான் நான் நினைக்கிறேன்…. நீங்க உதவி செய்யணும்னு நினைச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி…. பரவாயில்லை…”
“ஓகே… உங்களுக்கு எப்ப தோணுதோ… அப்ப கல்யாணம் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா…. என்னோட ஞாபகம் தான் உங்களுக்கு பஸ்டா வரணும்…. நான் உங்களுக்காக எத்தனை வருஷமும் காத்திருப்பேன்…” அதற்கு எதுவும் பேசாமல் ஸ்ரீநிஷா தலையை குனிந்த வண்ணம் நின்றிருந்தாள்.
அவளது மௌனம் அவனது மனதை ஏதோ செய்ய ஸ்ரீநிஷாவை பார்த்து “நான் உங்கள்ட்ட ஒன்னு கேட்பேன்… நீங்க சொல்லுவீங்களா…?” என்று தயக்கத்துடன் அரவிந்த் கேட்டான்.
“என்ன…? சொல்லுங்க அரவிந்த்…”
“இல்ல…. என்னோட காதல தான் அக்சப்ட் பண்ணிக்கல பட் உங்க கனவு என்னவென்று சொன்னீங்கன்னா….?” என்று இழுத்தான்.
மென் புன்னகையை உதிர்த்து விட்டு “ஓகே சொல்லாட்டி… நீங்க விட மாட்டீங்க…”
அவளது புன்னகையில் தனது இதயத்தை தவற விட்ட படி “அப்படியும் சொல்லலாம் நிஷா…” என்றான்.
“நான் எப்பவுமே என்னோட எல்லாமா நினைக்கிறது… அன்பு இல்லம் மட்டும் தான்… அங்க இருக்கிறவங்க ஒவ்வொருத்தரும் என்னோட பிரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ், எல்லாமே அவங்க தான்….. அங்க எவ்வளவு பேர் வளர்ந்தாலும், அவங்க பெரிய உயரத்துக்கு போன பிறகு அந்த இல்லத்தை மறந்துட்டு போயிருவாங்க… அதனால அங்க இருக்குறவங்களுக்கு ஒவ்வொரு நாளும் சாதாரண அடிப்படை வசதிகள் கூட யார் உதவி செய்வார் என்று எண்ணியபடி தான் நாட்கள் கடந்து போகின்றது…
நான் எல்லாரையும் நல்லா பார்த்துக் கொள்ளணும்…. அவங்களுக்கு பிடிச்ச விஷயங்களை, பிடிச்ச பொருட்களை அவங்க மனம் மகிழ வாங்கி கொடுக்கணும்… அதுக்கு ரொம்ப காசு வேணும்…. அதனால கோயிலுக்கு போய் என்னோட அம்பிஷன் ஆன பேஷன் டிசைனிங் முடிச்சு ஃபாரின்ல போய் அங்க நான் அந்தத் துறையில் நிறைய சாதிக்கணும்…
அந்த கனவை நிறைவேற்றி, அதன் மூலமா வார காசு என்னோட அன்பு இல்லத்தில் வளர்ச்சிக்காக நான் கொடுக்கணும்னு ரொம்ப ஆசை படுறேன்… அந்த இல்லத்துல ஒரு நாளும் ஒருத்தர் கூட பசி இல்லாம வயிறு நிறைய உணவு உண்டு நிம்மதியா தூங்கணும்…
அது மட்டும் தான் எனக்கு வேணும்… இதுதான் என்னோட ரொம்ப ரொம்ப பெரிய ஆசை…” என்று கண்கள் பூக்க கூறி முடித்தாள்.
“வாவ்… ஸ்ரீநிஷா நான் உங்கள நினைச்சு ரொம்ப பெருமைப்படுறேன்… எனக்கு உங்கள விட என் வாழ்வில் சிறந்த துணைவி எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டாங்க… உங்களுடைய கனவுக்கே நான் எப்பவும் பக்கபலமாய் இருப்பேன்…
ஆனால் நீங்க அதை தனியா செய்யணும்னு நினைக்கிறீங்க… ஓகே யுவர் விஷ்…. ஆனா ஏதாவது உதவின்னா முதல்ல நான் தான் உங்களுக்கு ஞாபகம் வரணும்… உங்கள் கனவுகள் ஜெயிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்…” என்று மனம் முழுதும் சந்தோஷத்துடன் தனது வாழ்த்தை தெரிவித்தான்.
அரவிந்தின் ஊக்கபூர்வமான வார்த்தைகளையும், வாழ்த்தையும் கேட்டு “ரொம்ப ரொம்ப நன்றி…. தேங்க்யூ வெரி மச்…. அரவிந்த்..” என்று கூற, அரவிந்தோ சிறு தலை அசைவுடன், அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றான்.
ஆனால் ஸ்ரீ நிதியோ குழப்பமான மனநிலையில் ஸ்ரீ நிஷாவை பார்த்து “ஏன்டி… அவனை வேண்டாம் என்று சொன்னே…. அவன் எல்லா விஷயத்துலயும் உனக்கு ரொம்ப பொருத்தமானவன்… அவங்க அப்பா பெயர் கம்பெனிகள், தனியா பிளைட், நாலஞ்சு கப்பல், ரொம்ப பெரிய பணக்காரர்…. மிஸ் பண்ணிட்டியேடி…”
“இல்ல ஸ்ரீநிதி… இது சரிப்பட்டு வராது…”
“ஏன்டி அப்படி சொல்ற…”
“அவர்ட்ட ரொம்ப காசு இருக்கலாம்… ஆனா, நான் என் கனவு பத்தி சொல்லும் போது அவர் என்ன செய்வார்…? அவர் காசில் எடுத்து அந்த கனவுகளை நிறைவேற்றனும்ன்னே நினைப்பாரு…. நான் அவசியமா இந்த கனவை வெற்றி பெறனும் என்று நினைக்கிறேன்… யாரின் உதவியும் இல்லாம… நான் என்னோட கனவுகளில் வெற்றி அடைவேன் அந்த இறைவன் அருளால்…” என்று நிதானமாக தனது கருத்தில் வேறொன்றின் நின்றாள்.
இதைக் கேட்டதும் ஸ்ரீநிதியின் மனமும் நெகிழ்ந்து போனது. அவள் இல்லத்தில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தான் அவளை இவ்வாறு மாற்றியது என்று அவள் நன்கு உணர்வாள்.
ஆனால் அவளது கனவுகள் இன்னும் இரண்டு வாரங்களில் குழி தோண்டி புதைக்கப்படும் என்பது தெரியாமல் பேதையவள் தனது கனவில் ஆழ்ந்து சந்தோசம் கண்டு கொண்டிருந்தாள். அவளது நிம்மதி சந்தோஷம் கனவு இவை அனைத்தும் புயலில் அகப்பட்டு மாயமாக மறைந்து செல்லும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டாள்.
அப்படி இரண்டு வாரங்களில் ஸ்ரீ நிஷாவின் வாழ்க்கையையே திருப்பிப் போடும் அந்த நிகழ்வு எதுவாக இருக்கும்…. அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்….
வஞ்சம் தொடரும்