தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 32

5
(19)

பேராசை – 32

இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமானது சரியாக பதினெட்டு மணித்தியால பயணத்தின் முடிவில் “ஈகுவேடார் கோமஸ்” என்ற சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.

 

இந்த சர்வதேச விமான நிலையமானது பிரேசிலில் உள்ள மனாஸ் என்ற நகரில் அமைந்துள்ளது.

தன் தோளில் சாய்ந்து உறங்கும் அவளை மென் புன்னகையுடன் பார்த்து விட்டு அவளின் நெற்றியில் புரளும் முடியை காதிற்கு பின்னால் எடுத்து விட்டவன் “பிளைட் லேண்ட் ஆச்சு பேபி” என்றான் மென்மையாக….

 

“ப்ச்… இன்னும் கொஞ்சம்” என்று மேலும் அவனின் மார்பில் புதைந்து உறங்க ஆரம்பிக்க…. நெற்றியை நீவிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவளின் இதழைக் கவ்வி சுவைக்க ஆரம்பித்தான்.

 

அதில் முற்றிலுமாக தூக்கம் தூரப் போக அவனை வேகமாக விலக்கி விட்டு “ஐயோ பப்ளிக்” என்றவள் அவசர அவசரமாக சுற்றிலும் யாரும் பார்த்து விட்டார்களா என ஆராய்ந்தாள்.

 

ஓரிரு பயணிகள் இறங்க ஆயத்தம் செய்துக் கொண்டு இருந்தனர்.

 

அவளின் செய்கையில் மென்மையாக புன்னகைத்த படியே அவளை அவன் பார்த்த விழுங்கும் பார்வையில் மேலும் பேசாது ஷீட் பெல்ட்டை கழட்டி விட்டு அவனோடு இறங்கத் தயாரானாள்.

 

ஒருவழியாக இருவரும் செக்கிங்கை முடித்து விட்டு வெளியில் வர…. சுற்றிலும் பார்த்து விட்டு “ அடுத்து எங்க போறோம்” என்று அவள் கேட்க…

அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் “வேற எங்க காட்டுக்கு தான்” என்றானே பார்க்கலாம்.

 

அந்த அதி காலை வேளையில் அதுவும் 4.30 மணிக்கு சும்மாவே குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தவள் இப்போது அவனின் இந்த பதிலில் வெடவெடத்து போய் விட்டாள்.

 

“வாட்?  விளையாடுறீங்களா காஷ்? நாளைக்கு தானே போறோம் இப்பவே ஏன்?” என்று விழிகளில் பயம் அப்பட்டமாக தெரியக் கேட்டாள்.

 

“வீ ஹெவ் நோ டைம் ஆழி நாம வீட்டுல கூட ஹனிமூன் போறதா சொல்லிட்டு தான் வந்து இருக்கோம்…இங்க ஸ்டே பண்ண போற நாட்களை யூஸ் பண்ணி நாம அங்க போய் கொஞ்சம் சுத்தி பார்த்துக்கலாம்” என்றான் தோள்களை குலுக்கி….

அவனின் நடவடிக்கையே வித்தியாசமாக இருந்தது அவளுக்கு….

 

“உங்க விருப்பம் என்னால கெடக்கூடாது அதான்  நான் வருண்,தேஜ் கிட்ட கூட சொல்லல ஏன்னா அவங்க நிச்சயமா உங்க கூட போகனும்னாலும் கூட நம்ம ரெண்டு பேரையும் தடுத்து இருப்பாங்க”

 

“ப்ச… என்னடி இப்போ? இப்பவே போகல ஹோட்டல் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம் ஓகேவா?”

 

“ஹும்” என்றவள் மனதில் என்னவோ நெருடலாகவே தான் இருந்தது.

கேப்பில் ஏறி ஹோட்டலை அடைந்த போதிலும் கூட அவன் புறம் அவள் திரும்பவே இல்லை.

 

அவன் ஒரு முடிவை எடுத்து விட்டால் அதில் மறு பேச்சு ஏது? அவனிடம் இனி தன் வார்த்தைகள் பழிக்காது என ஊகித்துக் கொண்டவள்  அமைதியாக இருந்து கொண்டாள்.

 

அவளின் ஒற்றைக் கையை பிடித்துக் கொண்டவன் ஹோட்டலில் அவன் ஏற்கனவே புக் செய்த ரூம் நம்பரை வாங்கிக் கொண்டே தன் கை வளைவுக்குள் அவளை வைத்துக் கொண்டே கதவருகே சென்றவன் நடை தடைப்பட்டது.

 

அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் அவளை புன்னகையுடன்  பார்த்தவன் சாவியை அவள் கையில் வைத்து “நீயே டோர் ஓபன் பண்ணு” என்றான்.

 

அவளும் மறு பேச்சு பேசாமல் கதவைத் திறந்தாள்.

 

திறந்தவள் முகத்தில் சிவப்பு நிறத்திலான பலூன்கள் பறந்து வந்து மோத ஆச்சரியத்தில் விழி விரித்தவள் உள்ளே மெதுவாக சென்றாள்.

 

சிவப்பு நிற வண்ண விளக்குகளும் ஆங்காங்கே மெழுகுவர்த்திகளும் ஏற்றி வைக்கப் பட்டு இருந்தன.

 

சற்று முன் மனதில் அவன் மீது தோன்றிய சிறு வருத்தம் கூட பஞ்சாய் பறந்து விட்டது போல உணர்ந்தவள் சட்டென பின்னால் திரும்பி பார்த்தாள்.

 

மென் புன்னகையுடன் அவளின் முகத்தில் வந்து போகும் உணர்வுப் போராட்டங்களை கதவில் சாய்ந்து மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

அவளோ நின்ற இடத்திலேயே நின்று கொண்டு “வாங்க” என்றபடி ஒற்றை விரலால் அவனை அழைத்தாள்.

 

அவளை நோக்கி மெதுவாக வந்தவன் அவளை நெருங்க அவளோ விழிகளை மூடிக் கொண்டாள்.

 

அவளின் செய்கையை பார்த்தவன் இதழ்களுக்குள் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டே அப்படியே அவளை அணைக்காமல் நெருங்கியே நின்று இருந்தான்.

 

விழிகளை மூடி இருந்தவளுக்கு அப்போது தான் அவன் தன்னை இன்னும் அணைக்கவில்லை என்று உணர்ந்து கொண்டவள் மெதுவாக விழிகளை திறந்தாள்.

 

தெற்றிப் பற்கள் தெரிய புன்னகைத்துக் கொண்டு இருந்தான்.

 

அதில் வெட்கியவள் அவன் மார்பில் முகத்தை புதைத்துக் கொள்ள “என்ன பேபி இவ்வளவு ப்ளஷ் ஆகுற?”

 

“உங்களால தான்” என்ற பதில் அவளிடம் இருந்து வந்தது.

 

“நான் தான் ஒன்னுமே பண்ணலையே” என்றான் நாவினால் கன்னத்தை முட்டி புன்னகைத்த படி….

 

“ஐயோ எனச் சிணுங்கிவள் நான் ஃப்ரெஷ் ஆகணும் என்று விட்டு அவனை விட்டு விலகி பார்க்காமல் செல்லப் போனவளை பிடித்து இழுத்தவன் “இப்பவே எங்க போற வெயிட்” என்றவன் அவள் கையைப் பற்றிக் கொண்டு பால்கனியை நோக்கி கூட்டிச் சென்றான்.

 

பால்கனி கதவு மூடி இருந்ததால் என்னவோ அவளுக்கு அங்கு செய்யப் பட்டு இருந்த அலங்காரங்கள் கண்களுக்கு புலப்படவே இல்லை இப்போது மறுபடியும் தன்னையே மறந்து நின்று விட்டாள் பாவை.

 

இவன் இவ்வளவு  ரொமான்டிக் பெர்சன் என்று ஒரு மாதத்திற்கு முன் யாராவது சத்தியம் அடித்து சொல்லி இருந்தாலும் வாய் விட்டு சிரித்து இருப்பாள்.

 

இலங்கையில் இருந்து கொண்டே தனக்காக இவ்வளவு செய்து இருக்கிறானே என்ற பிரமிப்பு அவளுள்.

 

அவர்களின் அறையோடு ஒட்டி இருந்த அந்த விசாலமான பால்கனியில் இருவர் மட்டும் அமரும் வட்ட மேசையில் உணவு வைக்கப்பட்டு அங்கேயே சற்று தள்ளி வண்ண விளக்குகளும் கூடிய வெண்ணிறத்தாலான மெத்தை வைக்கப்பட்டு படுப்பதற்கான வசதிகள் செய்யபட்டு அதில் ஹேப்பி ஹனிமூன் என்ற வாசகத்தோடு மின்னிக் கொண்டு இருந்தன.

விடிந்தும் விடியாத அந்த பொழுதும், தூரத்தில் கேட்கும் கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு அவளை இதமாக உணரச் செய்தது.

 

அவன் முன்னால் வந்து நின்றவள் “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் காஷ்…. நான் நினைச்சு கூட பார்க்கல இங்க இப்படி ஒரு செட்அப் பண்ணி வச்சு இருபிங்கனு ஐ அம் சோ பிலஸ்ட்” என்று சொன்னவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

விழிகளை மூடிக் கொண்டவன் அவளின் முத்தத்தை ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டான்.

 

அவளை தன் கரங்களில் ஏந்திக் கொண்டவன் குடில் போல அமைக்கப்பட்டு இருந்த இடத்தை நெருங்கி அங்கு அவளை மெதுவாக கிடத்தினான்.

 

அவளோடு அவனும் சரிந்தவன் “ உனக்கு ஓகேவா” என்று அவளின் சம்மதம் வேண்டி நின்றான்.

 

அவளும் வெட்கத்தோடு இரு கைகளாலும் விழிகளை மூடிக் கொள்ள… மென் சிரிப்புடன் அவள் மேல் படர்ந்தான்.

 

வஸ்திரங்கள் தூரப் போனது.

முத்த சத்தங்களும் முனகல்களும் ஒலிக்க, நொடிகள் நிமிடங்களானது.

 

இருவரும் உணவை மறந்து ஒருவருக்குள் ஒருவர் ஒன்றிப் போயினர்.

 

செங்கதிரோன் கதிர்களை பூமியெங்கும் பரப்ப அந்த இளஞ் சூடான கதிர்கள் சற்று முன்னரே இறங்கிய இரு ஜோடிகளின் மேல் படர்ந்தன.

மெதுவாக இமைப் பிரித்து எழுந்தவள் தன் மேல் படர்ந்து உறங்கும் அவனை பார்த்தவளுக்கு மேலும் நாணம் வந்து ஒட்டிக்கொள்ள….

 இதழ்களைக் கடித்து வெட்கம் கொண்டாள் பாவை.

 

“எழும்புங்க காஷ் எனக்கு பசிக்குது” என மெதுவாக சிணுங்கினாள்.

 

அதில் தூக்கம் கலைந்தவன் “ ஓ மை கோட்” என்று சொல்லிக் கொண்டே அவளின் முகத்தை பற்றித் திருப்பி அந்த வட்ட மேசையை பார்க்கச் செய்தான்.

 

அதிர்ந்து விழி விரித்தவள் “ எல்லாம் உங்களால தான்” என்று இதழைக் கடித்து வேறு பக்கம் பார்வையை அவள் திருப்ப…. “அஹான் நான் உன்னாலன்னு நினைச்சிட்டேன் பேபி” என்றவன் மார்பு வரை இருந்த வெண்ணிற போர்வையை இருவருக்கும் மேலும் போர்த்திக் கொண்டான்.

 

ஒரு கட்டத்தில் அவளே “பசிக்குது” என்றாள்.

 

அவனுக்கும் பாவமாக போக “சரி ஃப்ரெஷ் ஆகிட்டு வா நான் ப்ரேக் பாஸ்ட் ஆர்டர் பண்றேன்” என்றவன் அவளை விட்டு விலகிக் கொள்ள…

 

வெண்ணிற போர்வையை இழுத்து தான் மேல் சுற்றிக் கொண்டவள் அவனின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் அறைக்குள் ஓடி விட்டாள்.

 

மென் சிரிப்புடன் தனது உடைகளை எடுத்து அணிந்துக் கொண்டவன் அவளின் உடையை எடுத்து ஹங்கேரில் போட்டு விட்டு அலைபேசியை எடுத்து உணவை ஆர்டர் செய்தான்.

 

 அதனைத் தொடர்ந்து இருவரும் காலைக் கடன்களை முடித்து விட்டு ஆர்டர் செய்த உணவை உண்டனர்.

“மார்னிங் என்னை எவ்ளோ பயம் காட்டி விட்டீங்க தெரியுமா? தேங்க் கோட் நாம இன்னைக்கு காட்டுக்கு போகலை” என்று கூறிக் கொண்டே ஒரு பெரு மூச்சுடன் சாப்பிட்டாள்.

 

தண்ணிரை அருந்தி விட்டு மேசையில் வைத்தவன் அவள் அருகே முன்னோக்கி குனிந்து  “நாம டுடே ஃபாரஸ்ட் போக மாட்டோம்ன்னு நான் சொல்லவே இல்லையே” என்றான் மென் புன்னகையோடு….

 

“வாட்? அப்போ போறோமா?” என்றவளின் வதனமோ நொடியில் வாடியது.

“நீ ஏன் இவ்வளவு பயப்படுறன்னு தெரியலை பட் என்மேல உனக்கு அவ்ளோ தான் நம்பிக்கையா? என்கூட போறதுல என்ன பயம் என்றவன் என்ன முயன்றும் கட்டுப் படுத்த முடியாமல்  வருண் கூட மட்டும் தான் ஃபாரஸ்ட் போவ போல பட் என்கூட போன கசக்கும் ரைட்?” என்று கேட்டே விட்டான்.

 

மாறாக இப்படி அவன் பேசியதற்கு கோபம் வரவில்லை அவளுக்கு… கைகளை துடைத்துக் கொண்டு எழுந்தவள் அவன் மடியில் அமர்ந்து அவன் முகத்தை இரு கைகளிலும் தாங்கி “நான் உங்க கூட என் உயிர் உள்ள வரை வாழனும்ன்னு நினைக்கிறேன் என்னடா சம்பந்தமே இல்லாமல் பேசுறேன்னு நீங்க நினைக்கலாம்… நாம போகப் போறது சாதாரண ஃபாரஸ்ட் இல்லை உலகத்துலேயே பெரிய காட்டுக்கு போறோம் அங்க போய் நாம உயிரோட வருவோமா?” என்று அவள் கேட்க….

 

“நெகடிவ் ஆஹ் பேசாத அங்க இருந்து தப்பிச்சு உயிரோட வந்த நான்கு குழந்தைகள் ரெகார்ட்ஸ் கூட இருக்கு… அது உள்ள போற ஒவ்வொரு ஃபோரினர்ஸ் உம் திரும்ப வர்றாங்க யூ ஜஸ்ட் திங்க் அபவுட் இட் அது மட்டும் இல்லை உனக்கு தேவையான கார்டன்சில்லோ பிளான்ட் ஐ நீ நிறையவே எடுக்கலாம்” என்றான்.

 

“பட்” என்று ஏதோ சொல்ல வந்தவளை தடுத்தவன் “நீ வருண் கூட போனதை நான் தப்பு சொல்லல கொஞ்சம் கோபத்துல சொல்லிட்டேன் ரியலி சாரி ஆழி”

 

விழிகளை மூடித் திறந்தவள் “பிரானா பிஷ், அனகோண்டா, ஜாகுவார் இன்னும் நான் போட்டோல மட்டும் கண்ட விஷ ஜந்துக்கள் எல்லாம் அங்க தான் இருக்காம் காஷ் இப்போ சொல்லுங்க நாம போகணுமா?” என்று அவள் கேட்க….

“ஒஃப்கோர்ஸ் பேபி இதெல்லாம் நேர்ல பார்க்க எனக்கு செம்ம ஆசை என்றவன் அவளின் அதிர்ந்த தோற்றத்தை கண்டுக் கொள்ளாமல் கெட் ரெடி பேபி பிளைட்க்கு போகணும் இங்க இருந்து அமேசான் ஃபாரஸ்ட் போக நாலு ஹவர்ஸ் ஆகும் சோ ஹரி அப்” என்றான்.

 

 என்ன டியர்ஸ் அமேசான் ஃபாரஸ்ட் போவோமா?😍🙈

அடுத்த எபில கண்டிப்பா நாம போகலாம் 😁🙉

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 32”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!