தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 39

4.6
(29)

பேராசை – 39

போகும் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளது விழிகளோ உயிர்ப்பைத் தொலைத்து இருந்தன.

 

போவதற்கு வழியும் தெரியாது இதில் தனியாக வழி தவறிச் சென்று காட்டு விலங்குகளிடம் சிக்கி உயிர் போவதை விட தானே உயிரை மாய்த்துக் கொண்டால் என்ன? என்று நினைத்தவள் மனதில் விக்ரம் என்று ஒருவன் இருக்கின்றான் என்ற நினைவு கூட வர வில்லை.

 

அதே விரக்தி மனநிலையில் விழிகளை மூடித் திறந்து ஆழ்ந்த ஒரு பெரு மூச்சுடன் எழுந்து நதியின் அருகே சென்றவளுக்கு ஒரு துளிக் கூட உயிர் வாழ்வதற்கான ஆசை இல்லாமல் போனது தான் உண்மை.

 

எப்படி எல்லாம் ஏமாந்து அவனுடன் ஒன்றிப் போய் இருக்கின்றேன் என்று நினைத்தவளுக்கு மறுபடி மறுபடி அவன் பேசிய அனைத்து வார்த்தைகளும் கண் முன் விரிய இதழ் கடித்து வந்த அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டவள் நதியில் மெது மெதுவாக ஆழத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

 

நடக்கும் போதே அடி வயிற்றில் சுள் என்ற வலியுடன் சேர்ந்து குமட்டிக் கொண்டு வர  அதே இடத்தில் வாந்தி எடுத்து இருந்தாள்.

 

வாந்தி எடுத்துக் கொண்டு இருக்கும் போதே அவளுக்கு எதனால்  இந்த வாந்தி என்றும் புரிந்து இருந்தது.

 

ஆம், இரு வாரங்களாக அவள் மாத்திரைகளை எடுக்க மறந்து இருக்க அதுவே இன்று அவள் மணி வயிற்றில் குழந்தைத் தங்க  காரணமாகிப் போனது.

 

சோர்வாக இருக்க, தான் நிற்கும் இடத்தில் இருந்து விறு விறுவென கரையை நோக்கி வந்தவளுக்கு நிற்காமல் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.

 

தனது வயிற்றை மெலிதாக தடவிப் பார்த்துக் கொண்டாள்.

எத்தனை நாட்களாக குழந்தை வரத்திற்காக ஏங்கி இருப்பாள்.

 

சந்தோஷமாக புன்னகைத்தவள் இதழ்களில் கண நேரத்தில் வந்த புன்னகையும் மறைந்து  இருந்தது.

 

சற்று முன்னர் வாழ விருப்பம் இல்லாமல் தன்னை மாய்த்துக் கொள்ள சென்றவளுக்கு தான் இப்போது  தனி ஆள் அல்ல என்ற எண்ணம் வர மீண்டும் சோர்ந்துப் போனவள் குழந்தையுடன் எங்கனம் இங்கு இருந்து உயிரோடு செல்வது என்ற பயம் பிடித்துக் கொண்ட அதே நேரம் அடி வயிற்றில் மீண்டும் சுளீர் என்ற வலியும் ஊடுருவியது.

 

வயிற்றைப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்தவள் கீழே கிடந்த அவளின் பையில் இருந்த போத்தலை அவசரமாக எடுத்து அதில் இருந்த தண்ணீரை முழுவதுமாகக் குடித்தாள்.

 

விழிகளை இறுக மூடி நீண்ட பெரு மூச்சை இழுத்து விட்டவளுக்கு அவன் கூறிய “என் குழந்தை உன் வயிற்றில் வளரக் கூடாது” என்ற வார்த்தை ஒலிக்க பட்டென விழிகளைத் திறந்தவள் இதழ்களில் ஓர் வெற்றிப் புன்னகை.

 

இந்த குழந்தையை எப்பாடு பட்டாவது வளர்த்தே தீர வேண்டும் என்ற வெறி அவளுள் கிளர்ந்தது.

 

அவளுள் தோன்றிய அந்த எண்ணம் வழு பெற வயிற்றை பிடித்துக் கொண்டே மெதுவாக எழுந்து நின்றவள் சுற்றிலும் பார்த்து வந்த வழியே செல்வோம் என நினைத்தவள் வேகமாகத் தன் பையினை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து இருந்தாள்.

 

சிறிது தூரம் தான் நடந்து இருப்பாள்.

 

எங்கோ மரங்களில் கிளைகள் முறியும் சத்தம் கேட்டது.

 

மேனியோ நடுங்க ஆரம்பிக்க, அவளின் கைகளோ தானாக உயர்ந்து அவளின் வயிற்றைப் பற்றிக் கொண்டது.

 

சிறிது நேரத்தில் யானையின் பிளிரல் சத்தம் கேட்க…. எப்படி எந்த வழியாக ஓடினாள் என்று அவளுக்கே தெரியாது திக்கு தெரியாமல் அவ்வளவு வேகமாக ஓடி வந்தவளுக்கு தனது குழந்தைக்கு எதுவும் ஆகி விடுமோ என்ற பயமே மிதமிஞ்சி இருக்க, வந்த வேகத்தில் எதன் மீதோ மோதி விழப் போனவளை ஒரு கரம் தாங்கிப் பிடித்து இருந்தது.

 

விழிகளை இறுக மூடி இருந்தவள் தன் இடையை சுற்றி ஒரு கரம் படர்ந்து இருக்க, பட்டென விழிகளைத் திறந்து பார்த்து விக்ரம் என்றாள் தழுதழுத்தக் குரலில்….

 

“ரிலக்ஸ் மா எதுக்கு ஓடி வந்த?” என்று கேட்க….

 

நிமிர்ந்து நின்றவள் தன்னைக் குனிந்து ஒருமுறை பார்த்துக் கொண்டு மருண்ட விழிகளால் அவனைப் பார்த்துக் கொண்டே அவளின் பின் பார்க்குமாறு கையை அசைக்க….

 

அவனோ அவளின் பின்னால் பார்த்து விட்டு “ஒன்னும் இல்லையேமா” என்று சொல்ல…

 

அப்போது தான் அவள் மெதுவாக பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

 

அவள் வந்த வழியே மரங்கள் அடர்ந்து இருந்தனவே தவிர வேறு எதுவுமே அங்கு இருக்கவில்லை.

ஒரு பெரு மூச்சுடன் அவனை பார்த்துக் கொண்டே “என்னைப் பார்க்க வரேன்னு வரலையே ஏன்?” என்று கேட்க….

 

“ஈவ்னிங் போல வரலாம்னு இருந்தேன் என்றவன் மறுபடியும் அவள் பின்னால் பார்த்து விட்டு எங்க உன் ஹஸ்பண்ட் அஹ் காணுமே” என்று கேட்க…

அதில் அவளது உடலோ விறைத்து விட்டது.

இருந்தும் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் “ எனக்கு பசிக்குது ஏதாச்சும் சாப்பிட இருக்கா விக்ரம்” என்று அவள் கேட்க….

 

அவளின் அழுது வீங்கிய முகத்தைப் பார்த்து ஏதோ சரி இல்லை என்று புரிந்துக் கொண்டவன் மேலும் அவளிடம் எதுவும் கேட்காமல் அவன் பறித்து வைத்து இருந்த சில பழங்களை அவளுக்கு கொடுத்தான்.

 

காலையில் உணவு உண்ணாதக் காரணத்தாலும் ஓடி வந்த களைப்பும் சேர்ந்து கொள்ள அவன் கொடுத்த பழங்களை வேகமாக உண்டாள்.

 

அவளையே பார்த்து இருந்தவனுக்கு என்ன தோன்றியதோ “ஆர் யூ ப்ரக்னன்ட்?” என்று கேட்டே விட்டான்.

 

சாப்பிட்டு கொண்டு இருந்தவளுக்கு புரை ஏற, “மெதுவா சாப்பிடு” என்று அவள் தலையை தட்டி விட்டு தண்ணீரை நீட்ட, அவளும் தண்ணீரை வாங்கி முழுவதும் குடித்து விட்டு மரத்தில் சாய்ந்து நின்றுக் கொண்டே “நான் ப்ரக்னன்ட்னு எப்படி தெரிஞ்சது ?”

 

“ரொம்பவே டல் ஆஹ் இருக்க என்றவன் தொடர்ந்து அதான் சும்மா ஒரு கெஸ்ஸிங்ல சொன்னேன்” என்று சொல்ல….

 

அவளும் இழுத்து ஒரு பெரு மூச்சை விட்டவள் அனைத்தையும் கூற ஆரம்பித்து இருந்தாள்.

 

சொல்லி முடிக்கும் போது அவள் விழிகளில் இருந்து கண்ணீர் வழிய அவள் அருகே சென்று அவளின் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டவன் “டோண்ட் வொரி ஆழினி இனிமேல் நீ அழக் கூடாது… பேபி உன்னை போலவே வளரனும்ல என்றவன் தொடர்ந்து நான் தாங்கி இருக்க இடம் கிட்ட தான் அங்க போய் நீ ஶ்ரீ லங்கா போறதுக்கான வழியை யோசிக்கலாம்” என்றவன் மனதில் காஷ்யபனை நினைத்து அவ்வளவு ஆத்திரம் வந்தது.

 

அவளின் முன் எதுவும் காட்டில் கொள்ளாமல் “போகலாமா?” என்றுக் கேட்க…

 

தனது வயிற்றை மெலிதாக தடவிக் கொண்டே “இனி அம்மா எதுக்காகவும் அழ மாட்டேன் என்று சொல்லி விட்டு அவளையே மெல்லிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்த விக்ரமை நோக்கி “போகலாம்” என்றாள்.

 

அவனும் அவளை முன்னே நடக்க சொல்லி விட்டு அவளுக்கு அரணாகப் பின் தொடர்ந்து நடந்தான்.

 

இங்கோ, இலங்கைக்கு செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்துக் கொண்ட காஷ்யபனுக்கு ஆத்திரத்தில் அவளை விட்டு வந்து இருக்கக் கூடாதோ  என மனது பிசைய ஆரம்பித்து விட்ட அதே நேரம் விமானமோ மேல்நோக்கி பறக்க ஆரம்பித்து இருந்தது.

 

நேரம் செல்ல செல்ல அவனுக்கு அவளை நினைத்து அழுத்தம் கூடியது தான் மிச்சம்.

 

விமான நிலையத்தில் இறங்கிய பின் மீண்டும் பிரேசில் போய் விடலாமா என்று என்னும் அளவுக்கு எண்ணம் தோன்ற அவனுக்கோ பொறுமை எல்லையைத்  தாண்டியது.

 

“ஓ ஷிட் “ என்று தலையை பிடித்துக் கொண்டு விழிகளை மூடிக் கொண்டு அமர்ந்து இருந்தவன் அருகே அங்கங்கள் ஆங்காங்கே அப்பட்டமாக தெரிய மேற்கத்தேய பெண் ஒருவள் அவனின் ஆளுமையான தோற்றத்தில் மயங்கி அவனை நெருங்கி உரசிக் கொண்டு அவனோடு கதைக்க முயல, அவளின் கெட்ட நேரம் போலும் விழிகளைச் சட்டென திறந்தவனுக்கு யாரோ ஒருத்தியின் நெருக்கம் உடலை கூசச் செய்ய கழுத்து நரம்புகள் புடைத்து கிளம்ப கண்கள் சிவக்க அவளை உறுத்து விழித்தவன் “டோண்ட் யூ ஹேவ் அ சென்ஸ்” என்று ஆங்கிலத்தில் மேலும் அவளை திட்டியவன் விமானப் பணிப் பெண்ணை அழைத்து புகார் அளித்தும் விட அவனின் ருத்ர தாண்டவத்தைப் பார்த்த அந்த பெண்ணுக்கோ முகம் கறுத்து விட்டது.

 

அதீத எரிச்சலில் அமர்ந்து இருந்தவனுக்கு ஆழினியை பிட்ச் என்று அவன் திட்டிய வார்த்தை நினைவுக்கு வர அவனின் இதயமோ படு வேகமாக துடிக்க ஆரம்பித்து இருந்தது. மேலும் அவளுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற இனம் புரியாத பயமும் உருவாக தவித்துப் போய் விட்டான்.

 

இலங்கைச் சென்றதும்  இன்னும் பல விடயங்களை அவன் தெரிந்துக் கொள்ள போகின்றான் என பாவம் அவன் அறியவில்லை.

 

சுவாமி அறையில் விழிகளை மூடி கைக் கூப்பி வேண்டிக் கொண்டு இருந்த இந்து விழிகளைத் திறக்கும் சமயம் எரிந்துக் கொண்டு இருந்த விளக்கு அணைந்து விட்டு இருந்தது.

 

அப்போது தான் சுவாமி அறையுள் வந்த லதாவும் அதனைப் பார்த்து விட்டு அவ் அறையின் ஜன்னைலை மூடி விட்டு “வெளில காத்து இந்து அதான் என்றவர் விளக்கைப் பற்ற வைக்க…

 

“எனக்கு பயமா இருக்கு லதா ஆழினிக்கு கால் பண்ணி பாக்கலாம்” என்று அவர் அறையை விட்டு வெளியில் செல்ல….

 

“இந்து அவ தான் சொன்னால…. மறுபடி மறுபடி நாம எடுத்தால் தேவை இல்லாமல் அவன் பயப்படுவா” என்று சொல்ல….

 

இன்னுமே இந்துவின் முகம் தெளியாமல் இருக்க, “உனக்காக நாளைக்கு கால் பண்ணி பாக்கலாம் மா அவங்க ஹேப்பி ஆஹ் இருக்கட்டும்” என்று சொல்ல….

 

“இல்லை விளக்கு” என்று இந்து ஏதோ சொல்ல வர இப்போ ஜன்னல் மூடவும் விளக்கு நல்லா எரியிது” என்று லதா சொல்ல…

இந்துவோ, விளக்கைப் பார்த்துக் கொண்டே மேலும் அங்கேயே நின்று விழிகளை மூடி வணங்க ஆரம்பித்து விட… ஒரு மெல்லிய புன்னகையுடன் லதாவும் சேர்ந்த பூஜைகளை செய்ய ஆரம்பித்து விட்டார்.

 

பிரகலாதன் மற்றும் ஜீவாவும் ஆயத்தமாகி வர இருவரும் சுவாமி அறையில் இருந்து வெளியில் வரவும் சரியாக இருந்தது.

 

“என்னமா எல்லாம் ரெடி பண்ணியாச்சா?” என்று பிரகலாதன் கேட்க….

 

இந்துவும் “ஆமா அண்ணா” என்று இந்து சொல்ல அதன் பின் அனைவரும் வருணின் திருமணத்திற்கு செல்ல ஆயத்தம் ஆகினர்.

 

மேடையில் அமர்ந்து இருந்த வருணுக்கும் தேஜாவிற்கும் இருவரின் உயிர் தோழி வரவில்லையே என்ற எண்ணம் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் புரோகிதர் கூறும் மந்திரங்களை சொல்லத் தொடங்கி இருந்தனர்.

 

அதே சமயம் பிரகலாதன் மற்றும் ஜீவா உட்பட அனைவரும் கல்யாண மண்டபத்திற்கு வந்து விட அவர்களை வரவேற்ற ஜெயகுமாருடன் பேச ஆரம்பித்து விட்டனர்.

 

லதாவும் இந்துவும் மேடையில் சென்று நின்றுக் கொண்டு அட்சதைகளை வாங்கி கொண்ட அதே சமயம் கெட்டி மேளம் முழங்கத்துடன் சேர்ந்து  அனைவரும் ஆசீர்வதிக்க, வருணோ மங்கள நாணை தேஜாவின் கழுத்தில் பூட்டினான்.

 

இங்கோ விக்ரமுடன் நடந்து சென்றுக் கொண்டு இருந்தவள் மனதில் ஏதேதோ எண்ணங்கள் வளம் வரத் தொடங்க சட்டென அவள் நடை ஒரு கணம் தடைப் பட்டது.

 

அவளைப் பின் தொடர்ந்து வந்துக் கொண்டு இருந்த  விக்ரம் “என்னாச்சு?” என்று கேட்க…

“நான் சொன்னேன்ல என் ப்ரெண்ட்ஸ்… அவங்களுக்கு இன்னைக்கு தான் கல்யாணம்” என்று முகம் மலர சொன்னவள் முகம் சடுதியில் வாடியும் போனது.

 

“சீக்கிரமா இங்க இருந்து போகலாம் ஆழினி நீ எதையும் இப்போதைக்கு நினைக்க வேண்டாம் அது பேபிக்கும் சரி இல்லை” என்றவனுக்கு “தேங்க்ஸ்” என்று அவள் சொல்ல….

 

“இதே வருண் இருந்தால் தேங்க்ஸ் சொல்லி இருப்பியா?” என்று சொல்ல….

 

“இட்ஸ் நாட் லைக் தட் என்று தடுமாறியவள்   அப்போ எனக்கு நீ பண்ற உதவிக்கு நான் என்ன தான் பண்ண முடியும்” என்று சொல்ல…

 

“உனக்கு நான் எதுவும் எதிர்ப்பார்த்து பண்ணலை ஆழினி என்று ஆழ்ந்தக் குரலில் சொன்னவன் குரலை செருமிக் கொண்டே நான் உனக்கு வருண் போலனு நீ தானே சொன்ன அப்போ எனக்கும் தேங்க்ஸ் சொல்ல கூடாது ரைட்”

 

“ஹும் சரி சரி” என புன்னகைத்த படியே நடக்க ஆரம்பித்தாள்.

 

விமானத்தில் அவனுக்கான உணவு வர, அப்போது தன்னை ஒருவாறு சமன் செய்துக் கொண்டு சாப்பிட தாயாரானவனுக்கு அந்தோ பரிதாபம் ஆழினி சாப்பிடவில்லையே என்ற எண்ணம் வர அவனின் உடலோ இறுகிப் போனது.

 

விமானப் பணிப் பெண்ணோ, “ எக்ஸ்கியுஸ் மீ” என்று அழைக்க, இனியும் அவனுக்கு சாப்பிடவா தோன்றும் வேண்டாம் என்று கூறி உணவை மறுத்தவனுக்கு என்னவென்றே தெரியாத உணர்வு அவனை வாட்டி வதைத்துக் கொண்டு இருந்தது.

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 29

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 39”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!