இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 18

4.6
(13)

Episode – 18

 

அன்று முழுவதும் அவனின் நினைவுகள் அவளை சுற்றியே அலைபாய,

 

ஒரு கட்டத்தில் மனதைக் கட்டுப் படுத்த விரும்பாது, அதன் போக்கிலேயே விட்டவன்,

 

அடிக்கடி பி.ஏவை அழைத்து, அனைத்தும் சரியாக நடக்கிறதா என கேட்டு அறிந்து கொண்டான்.

 

அவரோ, ஒரு கட்டத்தில், “சார், நீங்க ஒரு நாளும் எந்த விஷயத்திற்கும் இவ்வளவு பதட்டப்பட்டது இல்லையே. ஒரு விஷயத்த  ஒரு தடவை சொல்லிட்டு விட்டுடுவீங்களே. ஆனா இன்னைக்கு ஏன் சார் இப்படி….?” என கேட்டவர்,

 

தீரன் அவரை ஆழ்ந்து பார்க்கவும்,

“இல்ல சார்…. கேட்கணும்னு தோணிச்சு அதான்….” என திக்க,

 

“ம்ம்ம்ம்…. நோ ஒர்ரிஸ். நீங்க கேட்கிறது சரி தான். ஏன்னா எனக்கே தெரியும். நான் உங்கள இந்த விஷயத்தில அதிகமா ஸ்ட்ரெஸ் பண்றேன்னு. ஆனா எனக்கும் வேற வழி இல்ல. நாளைக்கு எனக்கு ரொம்ப ஸ்பெஷல் டே. அதனால தான் இத்தனை பதட்டம். எல்லாம் சரியா நடந்து முடியணும் இல்லையா…. அதனால தான் இத்தனை தரம் உங்கள கூப்பிட்டுக் கேட்கிறன். புரியுதா உங்களுக்கு?” என பொறுமையாக அவன் கேட்க,

 

“ம்ம்ம்…. தெளிவா புரியுது சார். நான் எல்லாத்தையும் பக்காவா பண்ணி முடிச்சுடுவன். டோன்ட் ஒர்ரி சார்.” என கூறினார் அவர்.

 

“யெஸ், ஐ க்நோவ் யூ வெரி வெல். நீங்க எல்லாம் கரெக்டா பண்ணிடுவீங்கன்னு தான் உங்க கிட்ட பொறுப்பை கொடுத்தன்.”என கூறியவன்,

 

“ஓகே. நீங்க போய் ஒர்க்க பாருங்க.” என கூற,

 

அவரோ, போகாது அங்கேயே தயங்கியபடி நின்று கொண்டு இருக்க,

 

“இன்னும் என்கிட்ட ஏதும் சொல்லணுமா?” என அவரின் தயக்கத்தைப் பார்த்தபடி கேட்டான் தீரன்.

 

“யெஸ் சார், ஒரு முக்கியமான விஷயம். இன்னைக்கு அந்த கேடு கெட்டவன், ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகுறான்.” என கூறவும்,

 

முகத்தில் உள்ள இளக்கம் முற்றிலும் தொலைந்து போக,

கண்களில் செவ்வரிகள் ஓடியது. 

அவனது மொத்தக் கோபமும் கண்களில் தெறிக்க,

 

“ஓகே. நான் பார்த்துக்கிறன். பசங்கள ரெடியாக சொல்லுங்க. அவன் வெளில வந்த இருபத்து நான்கு மணி நேரத்துக்குள்ள அவனோட உயிர் போயாகணும். எத்தன பொண்ணுங்களோட கற்போடயும், உயிரோடயும் அவன் விளையாடி இருப்பான். அவனுக்கு தகுந்த தண்டனை கொடுத்தே ஆகணும். என் ஸ்டைல்ல நான் அத கொடுத்துக்கிறன். நினைவு படுத்தினதுக்கு தேங்க்ஸ்.” என கூறியவன்,

 

அவரை அனுப்பி விட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என யோசிக்க ஆரம்பித்தான்.

 

குறித்த ஆளை தூக்க, பிளான் போட்டவன், தனது ஆட்களுடன் தொடர்பு கொண்டு, பிளானை சொல்லி, தான் முடிவு பண்ணிய படியே, ஜெயிலில் இருந்து வெளியில் வந்த ஒரு மணித்தியாலத்திற்குள் அவனைத் தூக்கி இருந்தான்.

 

அவனை தனது பழைய குடோனிற்குள் அடைத்து வைக்க சொன்னவன், 

 

தான் வரும் வரை அவன் மீது கை வைக்க வேண்டாம் எனவும் கட்டளை இட்டு இருந்தான்.

 

அதன் பின்பு அவனின் கம்பெனி சார்பான ஏற்றுமதி வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான் தீரன்.

 

ஆம், அவன்  ஒன்றும் சாதாரணமானவன் இல்லை.

படிக்காத தற்குறியும் இல்லை. பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனில் டாக்டரேட் பட்டம் வாங்கி இருக்கிறான்.  

 

சும்மா அல்ல அமெரிக்கா நாட்டில் போய் படித்து பட்டம் வாங்கி இருக்கிறான்.

இப்போது அவனது காட் பாதர், இறந்து போன சதாசிவம் சார்பான சிவம் எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் கம்பெனியை நடத்திக் கொண்டு இருக்கிறான். 

 

அவனது கம்பெனியின் கிளைகள் உலகம் எங்கும் வியாபித்து இருக்கின்றது.

 

அவன் மல்டி மில்லினர் லிஸ்டில் எப்போதோ இடம் பிடித்து விட்டான்.

 

தனது இடத்தை இது வரைக்கும் தக்க வைத்தும் கொண்டு இருக்கிறான்.

 

அவன் எவ்வளவு தூரம் கடுமையானவனோ, அதே அளவு அன்பானவனும் கூட.

 

அவனுடன் நெருங்கிப் பழகும் சிலருக்கு மட்டுமே அவனின் இரு முகங்கள் தெரியும்.

 

தப்பானவர்கள் யாரும் அவனின் கண்ணில் பட்டால், அன்று தான் அவர்களுக்கு கடைசி நாளாக இருக்கும். 

 

அவர்கள் எப்படி, எவ்வளவு தூரம் ஓடினாலும் கண்டு பிடித்து அவர்களை அழிக்காது ஓய மாட்டான் அவன்.

 

இப்போது அவனிடம் மாட்டிக் கொண்டிருப்பவனும் அப்படிப் பட்ட அயோக்கியன் தான்.

 

மாலை தனது வேலைகளை முடித்துக் கொண்டு, குறித்த ஒரு வெளிநாட்டு மீட்டிங்கையும் சக்ஸஸ்சாக முடித்து விட்டுக் கிளம்பியவன் நேராக சென்றது என்னவோ தனது  குடோனிற்கு தான்.

 

மீட்டிங்கிற்காக, அணிந்து இருந்த கோர்ட், மற்றும் டையினை கழட்டி விட்டு, ஷர்ட் பட்டன்களை கழட்டி விட்டு கையை மடித்து விட்டுக் கொண்டவன், வாட்சையும் கழட்டி வைத்து விட்டு, 

 

அருகில் நின்றவனை ஒரு பார்வை பார்க்க,

 

அவனோ, இரும்பு ராடர் கம்பி ஒன்றை கையில் கொடுக்க, வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் தீரன்,

 

உள்ளே சென்றவன் அங்கே கட்டி வைக்கப் பட்டு இருந்தவனின் அலறல் அந்த இடத்தை அதிர வைக்கும் வகையில் அவனை அடித்து துவைத்து விட்டு, 

 

கடைசியில் தனது துப்பாக்கியால் அவனின் உயிரை எடுத்து விட்டு,

 

கை அடையாளம் தொடக்கம், அனைத்தையும் அழித்து, பாடியை சரியான முறையில் டிஸ்போஸ் பண்ண ஆர்டர் போட்டவன், தன் ஆட்களுக்கு சில அறிவுரைகளையும் கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

 

அவனது ஷேர்ட்டில் சில இரத்தக் கறைகள் இருக்க, அவனின் பி. ஏ அதனை சுட்டிக் காட்டி, 

 

“சார் பிளட் ஸ்டெயின் இருக்கு சார் என்ன செய்யப் போறீங்க?” என கேட்டார்.

 

அவனோ, தோளைக் குலுக்கிக் கொண்டு, 

 

“கோர்ட் இருக்கு. அண்ட் வீட்டுக்கு தானே போறன் அதனால பிரச்சனை இல்ல. பிரீயா விடுங்க.” என கூறி விட்டு கிளம்பினான்.

 

அன்று அவன் வீட்டுக்கு வரும் போது இரவு ஒன்பது மணி தான் ஆகியிருந்தது.

 

காரில் இருந்து இறங்கியவனின் விழிகள் தோட்டப் பக்கம் போக, 

 

அவனின் மனம் இதுவரையும் இருந்த இறுக்கத்தை மறந்து மென்மையை தத்தெடுத்துக் கொண்டது.

 

அவன் கண்கள் தேடிய தேவதை தரிசனம் அவனுக்கு கிடைக்காது போகவே,

 

“ஓஹ்…. நாம இன்னைக்கு வேளைக்கு வந்திட்டம் போல. சரி அப்படியே இருந்தாலும், எனக்கு அவள  பார்க்கணும் என்கிறதில இருக்கிற ஆர்வம், இவளுக்கு கொஞ்சம் கூட இல்ல போல.” என முணு முணுத்துக் கொண்டவன்,

 

அந்த இடத்தை ஒரு தடவை சுற்றிப் பார்க்க, அனைவரும் தமது வேலைகள் முடித்து சென்று இருந்தனர்.

 

ஒரு முடிவுடன், தமயந்தி தங்கி இருக்கும் வீடு நோக்கி சென்றவன் கதவைத் தட்ட,

 

அவளோ, அப்போது தான் சாப்பிட உணவை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தவள்,

 

ஹாலிங் பெல் சத்தம் கேட்கவும், அப்படியே உணவை வைத்து விட்டு வந்து கதவைத் திறந்தாள்.

 

அவள் கதவைத் திறக்கும் அந்த ஒரு நொடிக்குள் அவன் மனம் பர பரத்த விதம் அவன் மட்டுமே அறிந்த விஷயம்.

 

அவளோ, அவனைக் கண்டதும், ஒரு கணம் திகைத்துப் போய், 

 

“அச்சோ…. இவர் என்ன இன்னைக்கு வேளைக்கு வந்திட்டார். இப்போ தாம் தூம்னு குதிக்கப் போறாரே. கடவுளே இந்த மனுஷன் வாயில இருந்து என்னைக் காப்பாத்து.” என அவசர வேண்டுதல் ஒன்றை வைத்தவள்.

 

அவனை நிமிர்ந்து பார்க்கப் பயந்து, குனிந்த படியே நின்று கொண்டு, 

“சாரி சார், நீங்க இவ்வளவு சீக்கிரமா வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல.”  என மென் குரலில் கூறினாள்.

 

தீரன் எங்கே அவள் பேசியதைக் கேட்டான். 

 

அவள் தூக்கிக் கட்டிய சேலையில் இருந்த அழகை அல்லவா அவன் இன்ச் இன்சாக ரசித்துக் கொண்டு இருந்தான்.

 

தான் சொன்ன பிறகும், அவனிடம் இருந்து எந்தப் பதிலும் வராது போனதில், சற்றுக் குழம்பிப் போனவள், தயக்கமாக அவனை நிமிர்ந்து பார்க்க,

 

அவனோ, அவள் நிமிரும் போது, பார்வையை திருப்பிக் கொண்டவன், 

 

அவள் மீண்டும், “சாரி சார்….” என பேச ஆரம்பிக்கவும், கையை நீட்டித் தடுத்து விட்டு,

 

அவளை விலகி நிற்க சொன்னான். 

அவளோ, புரியாது அவனைப் பார்க்க,

 

“ம்ப்ச்….” என்றவன், அவளை தனது ஒற்றை விரலால் தள்ளி நிற்க வைத்து விட்டு, உள்ளே சென்று உரிமையாக, அங்கிருந்த கதிரையில் அமர்ந்தான்

அவனின் செய்கையில் அதிர்ந்து போய் நின்று கொண்டு இருந்தவள்,

சுயத்திற்கு வந்தது என்னவோ, அவன் அழைக்கும் ஒலியில் தான்.

 

“என்ன இவரு சட்டென உள்ள வந்துட்டார், ஒரு வேள உள்ள வைச்சு திட்டப் போறாரோ….” என எண்ணியவள், அவனின் முன்பாக போய் நிற்க,

 

அவனோ, சாவகாசமாக, “என்ன உள்ள வைச்சு திட்டப் போறாருன்னு பயந்து போய் வந்து இருக்காய் போல. திட்டுறது எல்லாம் இருக்கட்டும், போய் எனக்கு ஒரு காபி போட்டுக் கொண்டு வா. அது தான் உனக்கு நான் கொடுக்கிற பனிஷ்மென்ட்.” என கூறியவனை, 

 

கையைப் பிசைந்து கொண்டு பார்த்தவள்,

 

“நீங்க…. இங்க…. எப்படி?” என இழுக்க,

 

“உன்னை நான் காபி கேட்டு மூணு நிமிஷம் கடந்தாச்சு.” என அவன் அழுத்திக் கூறவும்,

 

அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாது, கட கடவென அந்த குட்டி கிச்சனிற்குள் ஓடி மறைந்தாள்.

 

அவளையே பார்த்தபடி அமர்ந்தவனின் கண்கள் வீட்டை சுற்றி அலைபாய,

 

அவனின் உதடுகளோ, 

“குட்டி வீட்ட அவ்வளவு சுத்தமா…. நேர்த்தியா வைச்சு இருக்கா….” என முணு முணுத்துக் கொண்டது.

அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் அவன் ரசிக்க ஆரம்பித்து இருந்தான்.

 

அடுத்த ஐந்து நிமிடங்களிற்குள் அவள் அவனின் முன்பாக காபி கப்பை கொண்டு வந்து நீட்ட,

 

அவனும் அமைதியாக வாங்கி ஒரு முறை அருந்தியவன்,

 

“ம்ம்ம்ம்…. நாட் பேட். இனி மேல் நைட் எனக்கு காபி குடிக்க தோணிச்சுன்னா நான் இங்க தான் வருவன்.” என கூறியவன்,

 

காபியை துளியும் விடாது பருகி விட்டு, கப்பை அவளிடம் நீட்ட, 

 

அவள் அதனை வைக்க தட்டை நீட்ட,

 

“ஏன் மகாராணி கையில கப்பை வாங்க மாட்டீங்களோ?”  என கேட்டவன்,

 

அவள் “இல்ல….” என தடுமாறவும், 

இயல்பு போல, தானே அவளின் கையில் கப்பை திணித்தான். 

 

அவளோ, ஒரு நொடி அதிர்ந்தவள், கையை இழுக்க முற்பட அவளின் கையை ஒரு முறை அழுத்தி விடுவித்தவன்,

 

“நாளைக்கு மார்னிங் சந்திக்கலாம்.” என கூறி விட்டு போகும் போது தான், அவனின் வைட் ஷர்ட்டில் உள்ள இரத்தக் கறை அவளுக்கு இலேசாக தென்பட,

 

அவளோ, உங்க சட்டையில “ஏதோ கறை….” என இழுக்க,

 

வாசல் வரை சென்றவன், ஒரு கணம் நின்று அவளை திரும்பிப் பார்த்து, 

 

“ஒரு மனித மிருகத்தை வேட்டையாடும் போது வந்த கறை தான் அது.” என சிம்பிளாக கூறினான்.

 

அவள் “என்னது?” என, உடல் தூக்கிவாரிப் போட அதிரவும்,

 

நிதானமாக, அவளின் புறம் திரும்பி, கோர்ட்டை கழட்டி வைத்தவன்,

 

அவனின் ஷர்ட்டில் உள்ள ரத்தக் கறைகளைக் காட்டினான். 

 

அவளோ, அச்சத்தில் எச்சில் விழுங்கி அவனைப் பார்க்க,

 

“என்ன பார்வை?, எனக்கு உன்கிட்ட பொய் சொல்லணும் என்கிற எந்த அவசியமும் இல்லை. எனக்கு என்ன உன் கிட்ட வெளிக்காட்டிக்கிறதுல எந்த பயமும் இல்லை.” என அவளை ஆழ்ந்து பார்த்தபடி கூறினான்.

 

அவன் உணர்ந்து சொன்ன வரிகளை, அவள் அக்கணம் உணராது போனாள்.

 

அவளின் உதடுகளோ, “அப்போ நீங்க கொலைகாரன் தானா…. கொலை செய்து உழைச்ச பணத்தில தான் இப்படி வாழுறீங்களா?” என சற்று ஒதுக்கமான பார்வை உடன் கேட்க,

 

அவளை நோக்கி வேகமாக ஒரு எட்டு எடுத்து வைத்தவன், 

 

என்ன நினைத்தானோ…. ஒரு கணம் தயங்கி, தலையைக் கோதிக் கொண்டபடி,

 

“நாளைக்கு காலைல தெரியும் என்ன பத்தி. உன்னோட சந்தேகங்களுக்கு விளக்கம் நாளைக்கு கிடைக்கும், அண்ட் எவனையும் கொலை செய்து அதுல வர்ற பணத்தில தான் வாழணும், சாப்பிடணும் என்கிற ஒரு கட்டாயமும் எனக்கு இல்லை. என்னோட உழைப்பு எனக்கு கை கொடுக்கும். என்னோட படிப்பு எனக்கு உயர்வைத் தரும்.” என கூறியவனை,

 

அதுவரையும் இளக்காரமாக பார்த்துக் கொண்டு இருந்தவள், 

 

அவன் படிப்பை பற்றி பேசவும், புருவம் சுருக்கி யோசித்து விட்டு,

 

“ம்க்கும்…. யாரு நீங்க படிச்சு இருக்கீங்க?” என வாய்க்குள் முணு முணுக்க,

 

அதனை கண்டு கொண்டவன், “நீ என்ன சொல்றாய்?, 

நினைக்கிறாய்ன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். அதுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீயே நாளைக்கு உன் கண்ணால பார்த்து என்னைப் பத்தி முடிவு பண்ணு.” என கூறியவன்,

 

கோர்ட்டை ஒரு முறை உதறித் தூக்கிப் போட்டுக் கொண்டு, கிளம்பிச் சென்றான்.

 

அவனின் மனமோ, “என்னைப் பத்தி யாருக்கும்  நான் விளக்கம் கொடுத்ததே இல்லை. அப்படிப் பட்ட என்னையே இவ விளக்கம் கொடுக்க வைச்சிட்டா. இவள….” என எண்ணிப் பல்லைக் கடித்தவன், 

 

“நாளைக்கு பார்த்துக்கலாம்.” என எண்ணி அங்கிருந்து சென்றான்.

 

மறு புறம், தமயந்தியோ, “இவர் என்ன இவ்வளவு கொடூரமா இருக்கார். கொலை பண்ணினத இவ்வளவு சிம்பிளா சொல்லிட்டுப் போறார். எல்லாம் கலி காலம்.” என அவனின் மீது மேலும் தப்பான அபிப் பிராயத்தை வளர்த்துக் கொண்டாள்.

 

அவளின், மனதில் அவன் சாத்தானாக ப்ரோமோட் ஆகியிருக்க,

 

அவனின் மனதில் அவள் தேவதையின் மறு உருவமாக பதிந்து போய் இருந்தாள்.

 

அடுத்த நாள் பொழுது அவனுக்கு நல்ல பொழுதாக அமையுமா?

 

தமயந்தி மனதில் உள்ள எண்ணங்களில் மாற்றம் வருமா?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

கண்டிப்பா உங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ்..

 

கதையில் இனி வரும் எபிகளில் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ ஆரம்பிக்கும்.

 

இந்த எபில தீரனைப் பத்தி முழுக்க சொல்லியாச்சு,  அடுத்தடுத்த எபிகள் அதிரடியா வரும்..

 

லைக்ஸ் வந்தா அடுத்த எபி இன்னைக்கே வரும்….

 

பெரிய எபி போட்டு இருக்கேன்.. லைக்ஸ் ப்ளீஸ் 😍😍

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 18”

  1. இது குட்டி எபியா சகிம்மா… அடுத்த எபியும் போட்டனே 😍😍😍😍படிங்க 🥰🥰நன்றிடாம்மா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!