இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 21

4.9
(18)

Episode – 21

 

அவன் சொன்னதை கிரகிக்கவே அவளுக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது.

 

அவளை வீட்டு வாசல்ப் படியைத் தாண்டி உள்ளே வரக்கூடாது என ஆர்டர் போட்டவன் அவன்.

 

இப்போது திடீர் என மனம் மாறி உள்ளே வந்து தங்கும் படி அழைத்தால் அவளுக்கு எப்படி இருக்கும்?

 

அவளின் பேச்சற்ற நிலையைக் கண்டவன்,

 

“ஹே…. இவ்வளவு ஷாக் ஆக தேவை இல்ல. இனி நீ தனியா இருக்கிறது சேப் இல்லன்னு தோணிச்சு அதனால தான் கூப்பிட்டன்.” என கூறியவன்,

 

மனதிற்குள், “ஆனா அது மட்டும் காரணம் இல்ல பேபி. உன்ன என் பக்கத்திலயே வைச்சுக்கணும். என்ன பத்தி உனக்கு புரிய வைக்கணும். அப்போ தான் நீ மனசார என்ன ஏத்துப்பாய்.” என எண்ணிக் கொண்டான்.

 

ஆனால் அவனுக்கு அப்போது தெரியாது. அடுத்தடுத்த அவனின் அதிரடி செய்கைகளால் அவன் மீது பெண்ணவள் வெறுப்பு கொள்வாளே தவிர விருப்பம் கொள்ள மாட்டாள் என்பது.

 

அவளோ, அவனின் பேச்சில் ஒரு விரக்திப் புன்னகை சிந்தியவள்,

 

“ஏன் சார், உங்களுக்கு இவ்வளவு நாளும் நான் தனியா இருக்கிறது சேப் இல்லன்னு தோணலயா?, இப்போ தான் தோணிச்சா?” என கேட்கவும்,

 

முகம் கறுத்துப் போனவன், “நீ எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோ, ஆனா எனக்கு நீ இனி என் வீட்டில தான் தங்கி ஆகணும். தட்ஸ் இட்.” என அழுத்தமாக கூறி முடித்தான்.

 

அவனின் பேச்சில் பழைய பொல்லாத தீரனைக் கண்டவள்,

 

“ஹிட்லர் இஸ் பேக்.” என எண்ணிக் கொண்டு,

 

“இல்ல….  முடியவே முடியாது சார்.” என கூறி விட்டு, தான் தங்கி இருக்கும் வீடு நோக்கி சென்றாள்.

 

போகும் அவளையே ஒரு கணம் பார்த்துக் கொண்டு இருந்தவன், 

 

அடுத்த கணம் அவளுக்கு முன்பாக சென்று, அவளின் கையில் இருந்த திறப்பை பறித்துக் கொண்டு கதவைத் திறந்து அதிரடியாக உள்ளே சென்றான்.

 

அவனின் செய்கையில், “இவர் என்ன செய்றார்?” என ஒரு கணம் திகைத்துப் போனவள், யாரும் பார்க்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்து விட்டு உள்ளே நுழைந்தாள்.

 

அவனின் பின்னாக வந்து நின்றவள், 

 

“என்ன தான் சார் வேணும் உங்களுக்கு?” என சற்று எரிச்சலாக கேட்க,

 

“ஹ்ம்ம்….” என தாடையைத் தடவியவன்,

 

“எதுக்கு தமயந்தி இப்போ உனக்கு இவ்வளவு சலிப்பு?, ரொம்ப டென்ஷன் ஆகாம, போய் எனக்கு ஒரு காபி போட்டுக் கொண்டு வா சீக்கிரம்.” என அவன் கூறவும்,

“ஒரு வேள, காபி குடிக்க தான் வந்தாரோ?, நாம தான் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டமோ….?” என எண்ணியவாறு,

 

அவனுக்கு காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள் அவள்.

 

அவனும், அமைதியாக காபியை அருந்தி விட்டு, 

 

தீரக்கமாக அவளைப் பார்த்தவன்,

தனது ஷேர்ட்டின் பட்டன்களை ஒவ்வொன்றாக கழட்ட ஆரம்பிக்க,

 

அவளோ, “என்ன செய்றீங்க நீங்க?” என பதறிப் போய் கேட்க,

 

அவனோ, சாவகாசமாக அமர்ந்து கொண்டு, அடுத்த பட்டன் மீதும் கை வைத்தான்.

 

அவனின் செய்கையில் அவள் அவனுக்கு முதுகு காட்டியபடி நின்று கொண்டவள்,

 

“நீங்க செய்றது எதுவும் எனக்கு சரியாப் படல. முதல்ல கிளம்புங்க சார்.” என கூறவும்,

 

தீரனோ, “வாட் கிளம்புறதா?, இனி மேல் நானும் இங்க தான் தங்கப் போறன். நீ அங்க வரலன்னா என்ன?, நான் இங்க வந்துடுறேன்.”என்றபடி,

ஷேர்ட்டை கழட்டி வைத்தவன், 

 

வெற்று மேல் உடம்புடன் அங்கிருந்த சோபாவில் கால் நீட்டியபடி சாய்ந்து படுக்க,

 

அவளோ, “எத?” என அதிர்ந்தபடி, திரும்பி அவனைப் பார்த்தவள்,

 

அவனின் தோற்றத்தில் இன்னும் சங்கடப்பட்டு, மறு பக்கம் திரும்பி நின்று கொண்டு,

 

“நீங்க சொல்றது, செய்றது எதுவுமே சரியில்ல சார், பார்க்கிறவங்க ரொம்ப தப்பா பேசுவாங்க சார், என்னோட மானம் மட்டும் இல்ல. உங்க பேரும் தான் இதனால கெட்டுப் போகும். இப்படித் தான் நடக்கும்னு எல்லாம் தெரிஞ்சும் ஏன் சார் இப்படி பண்றீங்க?” என ஆதங்கமாக கேட்டவளுக்கு,

பதிலாக தோளைக் குலுக்கியவன்,

 

“வெரி சிம்பிள். எனக்கு நான் சொன்னது நடக்கணும், நீ அத பண்ணமாட்டேன்னு சொல்லிட்டாய். சோ, அதுக்கு பதிலா நான் வேற முடிவு எடுத்துட்டேன். போதுமா?” என அவன் சுருக்கமாக அவளை மடக்கி வாயை மூட வைக்க,

 

“தீரன் ப்ளீஸ். ஏற்கனவே இன்னைக்கு நடந்த நிகழ்வுகள் மொத்தம் சேர்ந்து நான் ரொம்ப நொந்து போய் இருக்கேன். இதில நீங்க வேற உங்க பங்குக்கு என்னைக் காயப்படுத்துறீங்களே. இது நியாயமா?” என அழுது விடும் குரலில் கேட்டாள்.

 

அவனோ, ஒரு பெரு மூச்சுடன், 

“எனக்கும் வேற வழி இல்லையே தமயந்தி. ஒழுங்கா சொன்னா நீ கேட்டால் தானே. எனக்கு உன்னோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம். எனக்கு கீழ வேல செய்றவங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா…. அத வைச்சு ஊர்ல உள்ளவங்க அவங்க இஷ்டத்துக்கு கத கட்டி, என் இமேஜ்ஜ டேமேஜ் பண்ணிடுவாங்க. சோ, நான் தான் கவனமா இருக்கணும். என்னால உன்ன  மட்டுமே நாள் முழுக்க கவனிச்சுக் கொண்டு இருக்க முடியாது இல்லையா?, அதனால தான் இந்த ஏற்பாடு.” என கூறியவனின் பேச்சில் இருந்த உண்மை புரிய,

 

சற்று நேரம் அமைதியாக நின்றவள் முகம் பளிச்சிட,

 

“சார் எனக்கு ஒரு ஐடியா தோணுது.” என ஆரம்பித்தாள் அவள்.

தீரனோ, “அதானே பார்த்தன், இவ உடனே நம்ம திட்டத்துக்கு ஓகே சொன்னா அடமழை தான் கொட்டும். ஏதோ ஒண்ணு யோசிச்சிட்டா. கண்டிப்பா அது எனக்கு சாதகமா இருக்காது. சொல்லட்டும்.  என்ன சொன்னாலும் நான் உன்ன கூட்டிக் கொண்டு போகாமல் ஓய மாட்டன். பார்ப்பம் இன்னும் எவ்வளவு தூரம் போறான்னு.” என நொடிப் பொழுதிற்குள் எண்ணியவன்,

 

வெளியில், “ம்ம்ம்ம்…. சொல்லுங்க மேடம். உங்க ஐடியாவையும் கொஞ்சம் கேட்பம்.” என அவன் சீரியஸ்சாக சொல்வது போல கிண்டல் அடிக்க,

 

தமயந்தியும் ஆர்வமாக, “பேசாம என் கூட சிவகாமி அம்மாவ வந்து தங்க சொல்லுங்களேன் சார். அவங்க, 

எனக்கு துணையாவும் இருப்பாங்க. எனக்கு பேசவும் ஆள் கிடைச்ச மாதிரி இருக்கும்.” என கூற,

 

“நான் ஒருத்தன், உன் கூட வாழ ரெடியா இருக்கன். அது உனக்கு கண்ணுக்கு தெரியல. உனக்கு பேச ஆள் வேணுமா?” என முணு முணுத்துக் கொண்டு பல்லைக் கடித்தவன்,

 

“அவங்க இங்க தங்க மாட்டாங்க தமயந்தி. அவங்களுக்குன்னு தனி இடம் இருக்கு. அங்க இருக்கிற வேலை செய்ற அத்தனை பேருக்கும் அவங்க தான் பொறுப்பு. 

 

அதனால….” என அவன் இழுக்க,

“மீதிய நீங்க சொல்லவே வேணாம் புரியுது சார்.” என சோர்ந்து போய் கூறியவள்,

 

“இதுக்கு வேற வழியே இல்லையா?” என சலிப்பாக கேட்க,

 

அவனும் கையைக் கட்டிக் கொண்டு “இல்லை.” என்பது போல தலையை ஆட்டியவன்,

 

அவள் சற்று யோசிக்கவும், எழுந்து அவளின் அருகே வந்து, 

 

அவளின் தாடையை நிமிர்த்தி, தன் கண்களை பார்க்க வைத்தான்.

 

அவளோ, அவனின் அருகாமையிலும், அவனின் உடலில் இருந்து வரும் வியர்வையுடன் கலந்த ஆண்மை வாசத்திலும் சற்று தடுமாறிப் போனாள். 

 

அவளின் முகமோ, அவளின் அனுமதி இன்றியே செஞ்சாந்து நிறம் பூசியும் கொண்டது.

 

அவளின் நிலையே இப்படி என்றால், தீரனின் நிலையைக் கேட்கவும் வேண்டுமா?

 

மொத்தமும் கிறங்கிப் போனவன், அவளின் துடிக்கும் உதடுகளுக்கு தன் உதடுகள் மூலம் ஆதரவு அளிக்க எண்ணினான். 

 

நினைத்த மாத்திரத்தில் அவனின் பெரு விரல் அவளின் உதடுகளை வருட அவளது உதடுகள் நோக்கி நீண்டு சென்றது.

 

அதற்குள் அவனின் புத்தி, அவன் செய்யப் போகும் காரியத்தை உணர்ந்து அவனை எச்சரிக்கை செய்ய,

 

கடைசி நிமிடத்தில் சுதாரித்துக் கொண்டவன், அவளை விட்டு விலகி நின்று தலையைக் கோதிக் கொண்டான்.

 

அவளும், விலகி நின்றவாறு குரலை செரும,

 

“உனக்கு நான் சொன்னது எல்லாம் புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறன். இதுக்கு மேலயும் வெயிட் பண்ண முடியாது. உனக்கு நான் பத்து  நிமிஷம் டைம் தரேன். நீ அங்க வர்றீயா?, இல்ல நான் இங்க தங்கட்டுமான்னு ஒரு முடிவ சொல்லு.” என்றவன்,

 

அவளைப் பார்த்தபடியே அமர்ந்து கொள்ள,

 

“இனி அவன் தன் நிலையில் இருந்து இறங்கி வர மாட்டான்.” என்பதைப் புரிந்து கொண்டவள்,

தானும் அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள்.

 

அவளின் யோசனைகள், “என்னை மதிக்காத இடத்தில நான் எப்படி?, இவரு திரும்பவும் என்ன வெளில போக சொன்னா…. என்ன செய்றது?, என்னால ஒரு திடமான  முடிவு எடுக்க முடியலயே. எனக்கு என்ன ஆச்சு?, ஒரு தடவ உதவி பண்ணினதால  இவரு செய்தது எல்லாம் இல்லன்னு ஆகிடுமா?, இவர பார்த்து என் மனசு தடுமாறுதா?….” என பல விடயங்களை சுற்றி வர,

 

கடைசியில் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் அவள்.

 

அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்துக் கொண்டு இருந்தவனுக்கு, அவளின் மனம் படும் பாடு நன்றாகவே புரிந்தது.

 

“குழம்பிய குட்டையில தான் என்னாலயும் மீன் பிடிக்க முடியும்.” என எண்ணிக் கொண்டவன், 

 

அவளின் பதிலுக்காக காத்து இருக்க,

 

இறுதியில், அவளும், ஒரு முடிவுடன் நிமிர்ந்தவள்,

 

“ஓகே சார், நீங்க சொன்னதுக்கு நான் சம்மதிக்கிறன்.” என கூறவும், 

 

“குட்.” என்றவன், எழுந்து தன் ஷேர்ட்டை அணிந்து கொண்டு, 

 

“அப்போ கிளம்பலாமா?” என கேட்க, 

 

அவளோ, அதே இடத்தில் அசையாது நின்றவள்,

 

“உங்க கூட வர்றதுக்கு நான் ஓகே சொன்னன் தான். ஆனா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு.” என ஒவ்வொரு வார்த்தையாக அழுத்திக் கூறினாள்.

 

அவள் அப்படி கூறவும், ஒரு கணம் புருவம் சுருக்கி யோசித்தவன்,

 

“ஹ்ம்ம்….” என்ற பெரு மூச்சுடன், 

“சொல்லு உன்னோட நிபந்தனை என்ன?” என கேட்டான்.

 

அவளும், “நான் அங்க வந்து தங்கணும்னா, அந்த ரூமுக்கான காசை நீங்க வாங்கிக்கணும். மாசா மாசம்  அந்தப் பணத்த எனக்கான சம்பளத்தில இருந்து எடுத்துக் கோங்க.” என கூற,

 

அவனோ, சினம் கொண்டு, “ஏய்…. தமயந்தி நீ என்ன பேசுறாய்னு தெரிஞ்சு தான் பேசுறீயா?, உன்னோட சம்பளமே, மாசம் வெறும் பத்தாயிரம் தான். இதில நீ எங்க இருந்து எனக்கு ரூமுக்கான பணம் கொடுக்கப் போறாய்?” என கேட்கவும்,

 

ஒரு கணம் யோசித்தவள், “அப்படின்னா, என்னால உங்க கூட வர முடியாது. சாரி சார். என்னோட சம்பளப் பணம் முழுவதும் போனாலும் பரவாயில்ல. ஆனா நீங்க பணம் வாங்கினா மாத்திரம் தான் உங்க வீட்டுக்குள்ள என்னால வர முடியும்.” என்கவும்,

 

நெற்றியை வருடி விட்டுக் கொண்டவன் மனதிற்குள்,

 

“இவ நேர்மையில தீய வைக்க. ரொம்ப பண்றா. சரி முதல்ல என் கூட வரட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்.” என எண்ணியவாறு, 

 

“சரி ஓகே டீல். நீ பெர்ஸ்ட் கிளம்பி என் கூட வா.” என அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

 

அவளுக்கு சங்கடமாக இருந்தாலும், வேறு வழியும் இல்லை அல்லவா. 

 

மாளிகைக்குள் நுழையும்  போது,

அவள் அடி எடுத்து வைக்கும் அதே நொடி, கவனித்து தானும் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றான் அவன்.

 

( எப்படி இருந்த நம்ம தீரன் எப்படி மாறிட்டான் பாருங்க ?, எல்லாம் காதல் செய்யும் மாயம் மக்காஸ்.)

 

அவளைத் தானே, அறைக்குள் அழைத்துச் சென்றவன், 

 

“எல்லாம் ஓகே தானே?” என கேட்க,

அந்த அறையின் பிரமாண்டத்தைக் கண்டு மிரண்டு போய் நின்றாள் அவள்.

 

அந்த அறை பைவ் ஸ்டார் ஹோட்டல் அறையின் அமைப்பை ஒத்து இருக்க,

 

அவள் ஒரு நொடி, அறையையும், தீரனையும் பார்த்து விட்டு,

 

“சார், இவ்வளவு பெரிய அறை என் ஒருத்திக்கு  எதுக்கு சார்?, ஏதாவது சிம்பிளா….” என அவள் இழுக்க,

 

அவளை முறைத்துப் பார்த்தவன், 

பின்பு ஒரு மென் சிரிப்புடன், 

 

“என்னோட அறை இத விட கொஞ்சம் சிம்பிளா தான் இருக்கும். உனக்கு வேணும்னா என் கூட ரூம் ஷேர் பண்றீயா?” என கேட்டான்.

 

அவளோ, அவனது பேச்சில் வாயைப் பிளந்தவள், 

 

“உங்க கூட ஒரே ரூமிலயா…. நோ சான்ஸ். அது மட்டும் என்னைக்கும் நடக்காது சார்.” என,

 

ஒரு அழுத்தத்துடன் கூறியவள்,  

“அப்போ எனக்கு வாழ் முழுவதும் சம்பளம் இல்லை அப்படித்தானே, இந்த ரூமுக்கு நான் கொடுக்கிற காசு போதாது தான். ஆனா வேற வழி இல்லை.” என ஒரு பெரு மூச்சுடன் கூறி முடித்தாள்.

 

அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“நீயும், நானும் ஒரே ரூமில இருக்கிற நாள் சீக்கிரம் வரத் தான் போகுது. அப்போ பார்க்கிறன் நீ என்ன செய்றாய்னு.” என எண்ணிக் கொண்டவன்,

 

“குட் நைட். எத பத்தியும் யோசிக்காம தூங்கு.காலைல பேசிக்கலாம்.” என கூறி விட்டு சென்றான் அவன்.

 

அவளும், “ஹ்ம்ம்…. வாழ்க்கை 

ஒவ்வொரு நாளும் எப்படி மாறுதுன்னே தெரியல. யோசிச்சா தலை வெடிக்கும். பேசாம தூங்குவம்.” என எண்ணியவாறு தூங்கிப் போக,

 

தீரனும், அவளை தனக்கு அருகில் வர வைத்த நிம்மதி உடன் உறங்கிப் போனான்.

 

அதே நேரம், ஆதியின் கைகளில், தீரன் மற்றும் தமயந்தி பற்றிய அனைத்து விடயங்கள் அடங்கிய பைல் ஒன்று இருந்தது. அதனை முழுமையாக படித்துப் பார்த்தவன், 

 

“ஓஹ்…. அப்போ தமயந்தி விரும்பி, அவன் கூட ஓடிப் போகல, அத விட முக்கியம் அவங்க இரண்டு பேருக்கும் இன்னும் கலியாணம் ஆகல.” என எண்ணிக் கொண்டவன்,

 

ஒரு திடமான முடிவுடன், உடனே கோடீஸ்வரனை தன்னைக் காண வருமாறு அழைத்தான்.

 

ஆதி எடுக்கப் போகும் அதிரடி முடிவு என்ன?

 

தீரன், தமயந்தி மனதை வெல்வானா?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

கண்டிப்பா உங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ்..

 

கதையில் இனி வரும் எபிகளில் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ ஆரம்பிக்கும்.

 

 அடுத்த எபி வந்தாச்சு மக்காஸ்.

 

ரொம்ப பெரிய எபி போட்டு இருக்கேன்.. லைக்ஸ் ப்ளீஸ் மக்காஸ்.😍😍😍

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 21”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!