வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

4.9
(15)
வஞ்சம் 14

 

இளஞ்செழியனின் கைகள் அவளது கழுத்தை மேலும் இறுக்கிப் பிடிக்க, “என்னடி சொன்ன..? என்ன சொன்ன..? என்னோட அம்மாவ பத்தி கதைச்சேனா நடக்கிறது வேற எங்க அம்மாவ பத்தி கதைக்கிற அளவுக்கு நீ ஒன்னும் சுத்தமானவை இல்லைடி.. அவங்க கால் தூசி பெருமதிக்கு நீ வருவியா..? என்ன சொன்ன நான் ஒழுங்கான வளர்ப்பில்லையா..?

 

உன்னோட ஒழுக்கம் தான் எனக்கு நல்லா தெரியுமே..! இதுக்கு மேல ஒரு வார்த்தை கதைச்சின்னா.. உன் உடம்புல உசுரு இருக்காது.. என்ன மனுஷனா இருக்க விடு.. மிருகமாக்காதே மிருகமா பாக்கணும்னு ஆசைப்பட்டா நீ அத தாங்க மாட்டே… உனக்கெல்லாம் அழகா இருக்கேன்னு திமிரு…
அந்த திமிரை வைத்து தானே நீ இவ்வளவு ஆட்டம் ஆடுற…
உன்னோட திமிர நான் எப்படி இல்லாம பண்ணுறேன்னு பாரு.. இது என்ன இது இதுக்கு மேலேயும் இருக்கு..
இப்பதானே ஸ்டார்ட் பண்ணி இருக்கு…. உனக்கு நான் சொல்ல மாட்டேன் செயல்ல காட்டுறேன்.. நீ உயிரோடு இருக்கிறதுக்கு செத்துப் போய்டலாம் என்று நினைக்கிற அளவுக்கு அனைத்தும் அமோகமாக நடக்கும்.. வெயிட் அண்ட் வாட்ச்…” எனக்கு ஒரே அவளது கழுத்தில் இருந்து கையை எடுக்க அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவள் சடாரென கீழே விழுந்தாள்.
எதிர்பாராமல் அவன் கீழே விட்டதும் விழுந்து எழுந்தவள், தொண்டையைப் பிடித்துக் கொண்டு விடாமல் இருமிக் கொண்டே இருந்தாள்.
கழுத்தை இறுக்கிப்பிடித்ததால் அவனது கைவிரல்களின் தடங்கள் கழுத்தில் அழுத்தி பதிந்து சிவந்து போயிருந்தன.
இறுமி முடிந்ததும் கண்களில் நீர் வடிய, “நீங்க ஏன் இப்படி செய்றீங்க..? நான் உங்களுக்கு என்ன செய்தேன்.. நான் ஒரு பாவம் அறியாதவள் என்னை விட்டிருங்க நீங்க நினைக்கிற மாதிரி நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யல…” என்றாள்.
“நடிக்காதடி..”
“நான் ஏன் நடிக்கணும்…? அதுக்கு அவசியமே இல்லை.. உண்மையாத் தான் சொல்றேன்..”
“இந்த நாடகம் எல்லாம் வேற யாருகிட்டயாவது ஆடு.. என்கிட்ட செல்லாது..”
“ஐயோ கடவுளே..! நான் எப்படி உங்களுக்கு புரிய வைக்கிறது..”
“நீ ஒன்னும் புரிய வைக்கத் தேவையில்லை..முதல் இங்கிருந்து போ.. என் கண்ணு முன்னாடி நிக்காத… எனக்கு உன்ன பார்க்க கொன்னு புதைக்கணும் போல இருக்கு..” என்று அவளது கழுத்தில் இருந்து கையை எடுத்து உதறித் தள்ளினான்.
அவன் உதறித் தள்ளியதும், கீழே விழுந்தவள் அப்படியே எழுந்து கால்கள் பின்னிக்கொள்ள மெது மெதுவாக நடந்து கீழே அவளது அறைக்குச் சென்று கதவை அடைத்து தேம்பித் தேம்பி அழுதாள்.
அவளது கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் கோடுகளாக இறங்கி அவளது நெஞ்சையும் நனைத்தது.
அங்கோ இளஞ்செழியன் ருத்ர தாண்டவம் ஆடுபவனைப் போல் கொதித்துக் கொண்டிருந்தான்.
அவனது காதுகளில் அவள் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன. ‘ஒரு பொண்ணோட எப்படி பழகணும்..? பெண்கள எப்படி மதிக்கணும்..? பெண்ண எப்படி கண் கொண்டு பாக்கணும்..? என்று தெரியாத அளவுக்கு தான் உங்கள உங்க அம்மா வளர்த்து வெச்சிருக்காங்க… அம்மா இறந்ததும் அம்மா.. அம்மா.. என்று உருகினா மட்டும் பத்தாது… புள்ளைக்கு ஒழுங்கான பழக்கவழக்கங்கள சொல்லிக் கொடுத்திருக்கணும்… முதல்ல வளர்ப்பு சரியில்ல… வளர்ப்பு நல்லா இருந்திருந்தால் நீங்க இப்படி ஒரு பொண்ணு மேல அத்துமீறி நடந்திருக்க மாட்டீங்க…’ என்ற வார்த்தைகள் அவன் செவிகளை முட்டி மோதின.
கண்ணாடியில் அவனது வதனத்தை பார்த்துக் கொண்டிருந்தவன் ‘வளர்ப்பு நல்லா இருந்திருந்தால் நீங்க இப்படி ஒரு பொண்ணு மேல அத்துமீறி நடந்திருக்க மாட்டீங்க…’ என்ற வார்த்தை மட்டும் அதில் அவனை துளைத்துக் கொண்டே இருந்தது.
ஆனால் இந்த வார்த்தையை மட்டும் அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
அவள் மீது எல்லை மீறிய கோபம் எழுந்து மனதில் சுனாமி பேரலை ஆர்ப்பரிப்பது போல கோபம் கொழுந்து விட்டெறிந்தது.
அந்த அறையில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அவன் ஒவ்வொன்றாக தூக்கி வீசி எறிந்தான்.
அனைத்து பொருட்களும் உடைந்து விழுந்தன.
இருந்தும் அவனது கோபம் கொஞ்சம் கூட குறையவே இல்லை.
அவளை கொன்று தின்றால் கூட அவனது கோபம் குறையாது போல அவனது அம்மா தான் அவனுக்கெல்லாம்.. அவனது அம்மாவையே சுட்டி காட்டினால் அவன் சும்மா இருப்பானா..? அவனது உள்ளம் தைக்க தொடங்கியது அந்த தவிப்பு அவள் மீது வெறி கொண்ட கோபத்தை உண்டு பண்ணியது.
சும்மாவே சீரும் பாம்பாக இருப்பவன் இப்பொழுது அவனது அம்மாவை அவதூறாக பேசிய அந்த கொடிய வார்த்தைகள் அவனுக்கு மனதை மீண்டும் மீண்டும் ஊசியால் குத்தி தைப்பது போலவே இருந்தது.
உடனே குளியலறைக்குள் சென்று ஷவரைத் திறந்து விட்டு தனது மண்டையில் உள்ள சூட்டைக் குறைக்க முயற்சி செய்தான்.
சுவற்றில் கைகளை ஊன்றி சாய்ந்து நின்று அந்த நீரின் குளிர்ச்சியை உள்வாங்கத் தொடங்கினான்.
குளித்து முடித்தவன் வெளியே வந்து பால்கனி பக்கம் வந்து நின்று பெருமூச்சு ஒன்றை விட்டு அம்மாவுடன் இருந்த அவனது சந்தோசமான நினைவுகளை மனதில் மீட்டிப் பார்த்தான்.
அவன் அளவுக்கு மீறி கோபம் கொள்ளும் வேலைகளில் அவனது அம்மா கூறிய அறிவுரை இதுதான். “எப்பொழுதும் நாம் குழப்பமான சிந்தனையிலும், கோபத்திலும் இருக்கும் போது நமது வாழ்வில் நடந்த மிகவும் இன்பகரமான, மகிழ்ச்சியான செயல்களை எண்ணிப் பார்த்தால், அந்தக் குழப்பமும் கோபமும் சில நொடிகளிலேயே நம்மை விட்டு விலகிச் சென்று விடும்..” அந்த வார்த்தைகள் அவனது காதில் இப்பொழுதும் இனிமையை விதைத்தது.
தனது தாயுடன் இருந்த நினைவுகள் அனைத்தும் கண் முன்னே வந்து அவனது மனதை மயிலிறகால் வருடுவது போல இருந்தது.
அப்போதுதான் அவனது வயிறு உணவுக்காக அடம் பிடிக்கும் சத்தம் கேட்டது. காலையிலிருந்து இதுவரை எதுவும் பண்ணாதது அவனுக்கு வயிறின் கூச்சலிலேயே விளங்கியது. மாடிப்படிகளில் இருந்து கீழே வந்தவன் சமையலறைக்குள் போய் உணவைத் தேடினான்.
எந்த உணவும் இல்லாததால் மீண்டும் ஹால்க்கு வந்து ஸ்ரீ என்று வீடு அதிரும்படி கத்தினான்.
அவனது குரல் கேட்டு அதிர்ந்து போன ஸ்ரீ நிஷா வெளியே ஓடி வந்து என்ன என்பது போல் பார்த்தாள்.
அவளது திமிரான பார்வையில் ஒரு நொடி கோபம் அவன் கண்முன்னே மின்னல் போல வந்து சென்றது.
“எனக்கு பசிக்குது…”
“அதுக்கு…”
“பசிக்குதுன்னு சொன்னேன்..” எனக் குரல் உயர்த்தினான்.
“உங்களுக்குப் பசிச்சா போய் ஹோட்டல்ல சாப்பிடுங்க..”
“நான் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுவதில்லை..”
“எனக்கு உடம்புக்கு முடியல..”
“சோ வாட்….”
‘என்ன மனுசன் இவன்..’ என்று மனதுக்குள் திட்டியவாறு “என்னால சமைக்க முடியாது..”
“நீ இங்க ஒன்னும் சும்மா இருந்துட்டு போக வரல… இங்கே இருக்கிற எல்லா வேலையும் நீ தான் செய்யணும்னு நான் சொல்லி இருக்கேன்… நீ எல்லா வேலையும் செஞ்சு தான் ஆகணும்… உனக்கு இயலுமோ இயலாதோ நீ எல்லாத்தையும் செய்யத் தான் வேணும்… போ போய் டிபன் ரெடி பண்ணு.. பத்து நிமிஷத்துல இந்த டைனிங் டேபிள்ல சாப்பாடு இருக்கணும் இல்லாட்டி தொலைச்சிடுவேன்..” என்று விரல் உயர்த்தி பேசிவிட்டு அந்த ஹாலில் உள்ள டைனிங் டேபிளின் அருகில் இருந்தான்.
அவன் கூறியதும் விடாக்கண்டன் விடமாட்டான் என்று எண்ணியவள் சமையலறைக்குள் நொடிப் பொழுதில் புகுந்து தனது வேலையைத் தொடங்கினாள்.
அவள் செல்வதைப் பார்த்து வெறுப்பாக புன்னகைத்தவன் தனது கைத்தொலைபேசியை எடுத்து ஆராய்ந்து கொண்டிருந்தான்.
அவன் கூறியதைப் போல பத்து நிமிடங்களில் அவனது மேசையில் தோசையும், சட்னியும் மணக்க மணக்க இருந்தது.
அதனைக் கேள்வியாகப் பார்த்து, “நாட் பேட்..” என்று ஒற்றை சொல் உதிர்த்தான்.
அவன் இன்னும் உண்ணாமல் மேசை மீது உள்ள சிறு கரண்டியை மேசையில் அடித்து தாளம் தட்டியபடி ஸ்ரீ நிஷாவை பார்த்துக் கொண்டிருக்க அவனது பார்வையின் அர்த்தம் புரிந்து தலையில் அடிக்காத குறையாக அவன் அருகே வந்து தட்டில் உள்ள தோசையில் சிறு துண்டை எடுத்து வாயில் வைத்து உண்டு விழுங்கினாள்.
விழுங்கிய பின்பு “ஆ..” என வாயைத் திறந்து காட்டி,
“இப்போ சரியா..? சாப்பிடுங்க.. தூக்க மாத்திரை எல்லாம் போடுற அளவுக்கு இல்ல.. இனி விஷம் தான்..”
“நீ செய்வன்னு தெரியும்டி.. அதுதான் முதல் உன்ன சாப்பிட சொன்னேன்..”
“அதுக்கு என்ன வெச்சிட்டா போச்சு.. நான் சாப்பிட்டா என்ன..? சாப்பிட்டு செத்து போறது தான்..” என்று அவள் மிகவும் இலகுவாக கூறியதும் கையில் எடுத்த சிறு துண்டு தோசை அப்படியே வாய்க்குச் செல்லாமல் இடையில் நின்றது.
அவள் கூறும் அர்த்தம் புரிந்து பார்வையை அவளை நோக்கி வீச, அவனது பார்வை அவளை குத்தித் துளைத்து செல்வது போல இருந்தது.
அந்தப் பார்வையினாலேயே அவன் நன்கு உணர்த்தினான் ‘இந்த வீட்டை விட்டு செல்வதாயினும் இந்த உடலை விட்டு உயிர் செல்வதாயினும் அது என்னைத் தாண்டி, என் அனுமதியுடன் தான் செல்ல வேண்டும்..’ என்பது போல் இருந்தது.
அவன் உண்டு கொண்டிருக்கும்போதே அவனது கைத் தொலைபேசி அலறத் தொடங்கியது.
உண்பதை நிறுத்திவிட்டு தொலைபேசியை எடுத்து பார்த்தபோது அதில் விழுந்த பெயரைப் பார்த்ததும் சலிப்புடன் எடுத்து காதில் வைத்தான் இளஞ்செழியன்.
அதில் கூறிய செய்தியை கேட்டதும் அவனது புருவங்கள் முடிச்சிட்டன.
அத்துடன் நெற்றியில் சிந்தனை ரேகைகள் தானாகவே உதித்தன.
அப்படி அவனை தொலைபேசியில் அழைத்தது யார்? அவர் கூறிய செய்தி தான் என்ன..? ஏன் அதைக் கேட்டு இளஞ்செழியன் அதிர்ச்சியாக வேண்டும்..?
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!