வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

4.9
(17)

வஞ்சம் 16

 

கனடாவுக்கு செல்வதா இல்லை இங்கே இருப்பதா என்ற பெரிய யோசனை உடன் இளச்செழியன் தோட்டத்திலேயே இருந்து தனது தலையினை அழுத்தமாகக் கோதி என்ன செய்வதென்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.

 

அவனது நெடுங்கால தவம்  என்றே சொல்லலாம் கனடாவில் ஹோட்டல் கட்டி பிரம்மாண்டமாக அதனை நடத்துவது.

 

இருந்தும் ரோஹித் அதனை நன்றாக கவனிப்பான் என்ற நம்பிக்கையுடன் தான் அவனிடம் அந்தப் பொறுப்பை கொடுத்துவிட்டு அன்னையைப் பார்க்க வந்திருந்தான்.

ஆனால் ரோஹித் இளஞ்செழியனை விட மிகவும் புத்திசாலி சிறு பிரச்சனைகளை சர்வ ஆராய்ந்து அதற்கு முடிவை கண்டுபிடிப்பவன் எந்தப் பிரச்சனையானாலும் ஆலமரம் போல் நிமிர்ந்து நிற்பவன் அவனே சில தடுமாற்றங்களுடன் இல்ல நீ வரத்தான் வேண்டும் என்று கூறுகின்றான் என்றால் ஏதோ விபரீதமாக நடந்து இருக்கிறது என்று தான் அர்த்தம் என்னிடம் சொன்னால் நான் மிகவும் கவலைப்படுவேன் என்று தெரிந்து அவன் மிகவும் சாதாரணமாக வந்துவிடு என கூறிவிட்டான்.

ஆனால் தலை போற விடயம் என்றால் தான் அவன் எனக்கு கால் பண்ணுவான் அது நன்கு தெரிந்ததே..! நான் போக வேண்டிய கட்டாயம் இருந்தும் என்னால் போக முடியாமல் தடுக்கிற ஒரே விடயம் ஸ்ரீ.. ஸ்ரீ.. ஶ்ரீயை தனியா விட்டு விட்டு செல்ல எனக்கு கிஞ்சித்தும் விருப்பமில்லை இருந்தும் கனடா செல்வதா? இல்லையா? என்று ஒன்றும் புரியாமல் மனதிற்குள் நினைத்து இருமனமாக யாது செய்வதென அறியாது தவித்தான்.

ஸ்ரீநிஷா மீது தான் அத்துமீறி செய்த செயலை எண்ணி மிகவும் வருந்தினான் இளஞ்செழியன்.

இதனால் ஸ்ரீநிஷாவிடம் இருந்து சில நாட்கள் தள்ளி இருப்பதே நல்லது கனடாவுக்கு செல்லலாம் என்று உறுதியான எண்ணத்தோடு இருந்தான்.

இருந்தும் இவளை தனியே விட்டு செல்வது மிகவும் ஆபத்து என்று உணர்ந்தவன் தற்போதைக்கு கனடா பயணத்தை நிறுத்தி வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

அன்று நடந்த நிகழ்வு மிகவும் பாரதூரமாக இளஞ்செழியனின் மனதை பாதித்தது. அதன் பின்பு ஸ்ரீநிஷாவைப் பார்ப்பதை முடியுமான அளவு தவிர்த்து வந்தான்.

தனது அம்மா கவனித்து வந்து ஹோட்டல்களின் வேலைகளில்  மூழ்கடித்துக் கொண்டவன்,

கிட்டத்தட்ட ஒரு வாரமாக வீட்டிலிருந்தபடியே தனது தொலைபேசி மூலம் அனைத்து விடயங்களை கவனித்து வந்தான்.

அத்தோடு புதிய கிளையை சென்னையில் திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அது விடயமாக  ஏற்பாடுகள் மிக வேகமாக நடந்தன.

ஸ்ரீநிஷாவுக்கு அவன் செய்த விடயம் மிகவும் மனதை பாதித்திருந்தது. இருந்தும் அவள் அதனை வெளிக் காட்டாமல் மனதிற்குள் வைத்து மருகிக் கொண்டிருந்தாள்.

அவளைத் தாக்கிய அந்த விடயம் மனதை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கத் தொடங்கியது. ஆசிரமத்தின் ஞாபகம் எப்போதும் அவளது மனதில் இருந்து அவளது நினைவுகளை தூண்டிக்கொண்டே இருந்தன.

ஸ்ரீ நிஷாவுக்கு இளஞ்செழியனைப் பார்க்க விருப்பம் இல்லை தான் அவள் தினமும் உணவை சமைத்து வைத்து அவன் முன்பு உண்டு காட்ட அவனும் உண்டு விட்டு எதுவும் பேசாமல் சென்று விடுவான்.

‘என்னடா இது இராவணன் இப்ப இராமன் வேசம் போடத் தொடங்கிட்டான் என்று கூட தோன்றியது அவளுக்கு. இருந்தும் எதுவும் பேசாமல் அவளும் அமைதி காத்தாள்.

இப்படியே அங்கே இருக்க அவளுக்கு மிகவும் கவலையாகவும், என்ன வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றத் தொடங்கியது. ஏதாவது செய்வோம் என வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் அங்கங்கே மாற்றி வைத்தாள்.

தோட்டத்தில் சிறு சிறு மரங்களை தேடிக் கொண்டு வந்து வீட்டின் உள்ளே வைத்து அந்த வீட்டினை பூங்காவனம் போல அலங்கரித்தாள். அந்த சிறு செடிகளில் பூக்கும் பூக்களின் எழிலும், அதில் வீசும் நறுமணமும் அந்த வீட்டை ஒரு நந்தவனமாக மாற்றியது.

இளஞ்செழியன் அவள் வீட்டை இவ்வாறு மாற்றுவது அனைத்தையும் கண்காணித்துக் கொண்டே வந்தான். ஒரே வீட்டில் இருந்தாலும், இருவர் நேருக்கு நேர் சந்தித்தாலும் எதுவும் கூறாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்று விடுவான்.

ஸ்ரீநிஷா அருகில் நின்றாலும் பார்க்காத மாதிரி அவளை கடந்து சென்று விடுவான். ஆனால் அவனது சிந்தனை, செயல் அனைத்தும் அவளிடமே நிறைந்து இருந்தன.

ஸ்ரீ நிஷாவும் இப்போதைக்கு தன்னை எந்த வகையிலும் அவன் பாதிக்காத படி நடந்து கொள்கிறான் என்று ஒரு சிறு சந்தோசம் அவளது மனதில் குடி கொண்டிருந்தது. என்னதான் அவன் தனக்கு தீங்கிழைத்தாலும் அதன் பின்பு அவளிடம் இருந்து விலகி இருப்பது அவளுக்கு அளவில்லாத நிம்மதியை அள்ளித் தந்தது.

இப்போதைக்கு அதுவே போதுமானதாகவும் அவன் அவளிடம் எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் இருப்பதே போதும் என்றிருந்தது.

இப்படியே நாட்கள் கழிந்து சென்றால் நன்றாக இருக்கும் என்று அவள் நினைக்கையில் அந்த பேரிடியான ஒரு நாள் அவளது வாழ்வில் எதையுமே எதிர்பார்க்காத அளவு ஒரு இன்னலை கொண்டு வந்து சேர்த்தது.

அன்று காலை எழுந்து குளித்துவிட்டு காலை உணவை செய்து டேபிளில் வைத்துவிட்டு வளமை போல வீட்டில் உள்ள சிறு பூச்செடிகளுக்கு நீரூற்றி விட்டு தோட்டத்தில் ரோஜாப் பூ செடிகளை பதியம் வைப்பதற்காக சென்றிருந்தாள்.

தோட்டத்தில் பூ மரங்களை நட்டு சுத்தம் செய்து கொண்டிருந்தவள் திடீரென அங்கு வளர்ந்து நிற்கும் புற்களில் சறுக்கி கீழே விழுந்து விட்டாள்.

விழுந்த வேகத்தில் கையின் பின்புறமும் முழங்காலிலும் சிறு காயங்கள் ஏற்பட்டன.

அத்தோடு உடல் முழுவதும் சேரும் சகதியும் ஒட்டிக் கொண்டது.

அவளுக்கு இருப்பதே இரண்டு நல்ல உடைகள் தான். இளஞ்செழியன் வாங்கி கொடுத்த உடைகளில் எதுவும் அவளுக்கு பிடித்த மற்றதாகவே இருந்தது.

இப்போதைக்கு இரு உடைகள் மட்டுமே அவளுக்கு மாறி மாறி போடுவதற்கே இருந்தன. அதில் ஒன்றை  காலையில் குளிக்கும் போது தோய்த்து போட்டிருந்தாள்.

இன்னொன்று தான் போட்டிருந்தது ஆனால் இப்போது மாற்றுவதுக்கு கூட இல்லை என்று அங்கு வேறு உடை எதுவும் கிடைக்குமா என்று தேடி ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தாள்.

இளஞ்செழியனின் அறையின் உள் பார்த்த போது அவனது உடைகளை கண்டதும் அவளுக்கு ஒரு ஒவ்வாமை தோன்றியது உடனே அந்த அறையில் இருந்து வெளியேறியவள் அடுத்த அறைக்கு சென்று பார்க்க அங்கு அவனது தாயின் புடவைகள் அலுமாரிக்குள் அழகிய வடிவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அனைத்தும் நடுத்தர வர்க்கத்தினர் கொடுத்தும் சாதாரண புடவைகளாகவே காணப்பட்டன. அதைப் பார்த்ததும் அவளுக்குள் அவர் மீது சிறு மரியாதையொன்று எழுந்தது.

எவ்வளவுதான் பணம் கொட்டிக் கிடந்தாலும் அந்த பணத்தினை பகட்டாக காட்டிக் கொள்ளாமல் சர்வ சாதாரணமாகவே அவர் வாழ்ந்து வந்துள்ளார் என்பது அந்த சேலைகளின் வடிவத்திலேயே அவளுக்கு நன்கு புரிந்தது.

அதில் ஒரு இளஞ்சிவப்பு நிற புடவையை தனக்கு ஏற்றார் போல் உடுத்திய பிறகு அங்குள்ள கண்ணாடியின் முன் வந்து நின்று பார்த்தாள்.

நீண்ட காலத்திற்குப் பின் அவள் உடுத்திய புடவை அது அவளது கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது.

அவ்வளவு அழகாக அந்த இளஞ்சிவப்பு அவளது மென் நிற உடலுடன் சேர்ந்து அழகாக பொருந்தி இருந்தது.

அவளது கன்னத்தை கிள்ளி அவளே அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்து ராசாத்தி என்று அவளுக்கு அவளே சுற்றிப் போட்டாள்.

ஏனோ தெரியவில்லை அந்த புடவையை கட்டிய பின் அவளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் ஒட்டிக்கொண்டது. துள்ளல் நடையுடன் தனது அன்றாட வேலைகளில் ஒன்றான இரவு உணவை தயாரிப்பதில் மும்முரமாக இறங்கினாள்.

இரவு உணவையும் செய்து விட்டு வளமை போல இளஞ்செழியனுக்காக காத்திருந்தாள். எட்டு மணிக்கு இரவு உணவை முடித்துக் கொள்பவன் ஒன்பது மணி ஆகியும் இன்னும் கீழே வராமல் இருக்க சிறு தயக்கத்துடன் மாடிப்படிகளில் ஏறினாள்.

‘அவன் உண்டால் என்ன உண்ணா விட்டால் என்ன என்று அவள் உண்டு விட்டு இந்நேரம் உறக்கத்திற்கு சென்று இருப்பாள். ஆனால் அவன் முன்பு தான் சமைத்த உணவை உண்டு காட்ட வேண்டுமே இல்லாவிட்டால் அவன் விடமாட்டானே..!’ என்ற எண்ணம் வேறு அவளை குடைந்து கொண்டிருந்தது.

அதோடு அவளது நண்பன் வயிறு ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவளை திட்டிக் கொண்டே இருந்தது. அவனுக்கு கொடுக்க வேண்டியதை இன்னும் கொடுக்கவே இல்லையே அத்துடன் போனஸ் ஆக நித்திரையும் அவளது கண்களை வாரி சுருட்டி கொண்டிருந்தது.

இளஞ்செழியனை அழைப்பதற்காக  மாடியில் ஏறிச் சென்றவள் மெதுவாக பூனை போல அவனது அறையை எட்டிப் பார்த்தாள்.

அன்றைய நாள் ஹோட்டலில் ஏதோ அசம்பாவிதம் நடந்ததை அறிந்து அங்கு செல்வதற்காக அவசரமாக புறப்பட்டுக் கொண்டிருந்தவன், காதில் தொலைபேசியை வைத்துக்கொண்டு,

“அங்கே என்னதான் நடக்குது உடனே ஃபயர் அணைக்க ஏதாவது செய்ங்க நான் இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவேன்..” என்று படபடப்புடன் அவசரமாக கூறிக்கொண்டு திடீரென திரும்ப,  அவன் வேகமாக வெளியே செல்வதைக் கண்டு அவன் முன்னே பதுமை போல வந்து நின்றாள் ஸ்ரீநிஷா.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!