உயிர் போல காப்பேன்-7

5
(16)

அத்தியாயம்-7
“உங்க எல்லாருக்கும் இப்போ.. என்ன தெரிஞ்சாகனும்.”என்றார் தாத்தா கோவத்தில் முகம் சிவக்க…. நடு ஹாலில் போடப்பட்டு இருந்த சோபாவில் உட்கார்ந்தபடி
“என்னப்பா பண்ணிட்டு வந்துருக்கிங்க….. சர்மா பேமிலி போயும் போயும் ஒரு மிடில் க்ளாஸ் பொண்ண போய் அதும் அவ என்ன படிச்சிருக்கானு கூட தெரியாம… நாளைக்கு நா எப்டிபா வெளில போவென். நா போற லேடிஸ் கிளப்ல நா எப்டி எல்லாரையும் பேஸ் பன்னுவேன்.”என்றார் அபூர்வா.. அதற்கு அவர் கணவரும் தலை ஆட்டிக்கொண்டு இருந்தார்..
“ஆமா நாளைக்கு நாங்க பிஸினஸ் பார்ட்டிக்கிளா போனா எங்கள நாலு பேரு மதிப்பாங்களா உங்க பேரன் வாழ்க்கைய மட்டும் பாக்குறீங்க….. எங்கள பத்தி எங்க மரியாதை பத்தி யாரும் யோசிக்கல”என்றார் அவரின் மகன் பரத்
“ஆமா கொஞ்சம் கூட இந்த பேமிலிக்கு தகுதி ஆனவ இல்ல அவ… அவளும் அவ மூஞ்சும் இந்த சொத்துக்காகதா ஒத்துருந்துருப்பா. .”என்றான் அவரது 3வது பையன். அஜய்
“என்னப்பா இந்த சொத்த எல்லாம் உங்க பேரன்.. அதான் இந்த பைத்தியம் ஆதித் மேல எழுதுறதா இருக்கீங்களா”என்றார் பரத்
இதுவரை பொருத்து இருந்த பெரியவர்..”எல்லாரும் கொஞ்சம் நிறுத்திறீங்களா..” என்று வீடே அதிர கத்தினார்..
அதில் அனைவரும் எதும் பேசாமல் அமைதியாக ஒரு ஒரு மூலையில் நின்றிருந்தனர்
“என்னடா சொன்ன பரத் பைத்தியமா. உன்னால அவன எப்டிடா அப்டி சொல்ல முடிது இங்க இருக்குறவங்கள விட நீதானடா ஆதித்தோட அப்பா.. அதான் என் 4வது புள்ளை மேல உயிரையே வச்சிருந்த….விஷ்ணு விஷ்ணுனு அவன் பின்னால தானடா சுத்திட்டு இருந்த”என்றார் ஆதங்கத்துடன்
“அதான் அவனே இல்லேனு ஆய்ட்டேப்பா இனி அவன பத்தியோ இவன பத்தியோ பேசி என்ன ஆக போகுது. எங்க வாழ்க்கைய நாங்க பாக்கனுமே..”என்றார் பரத் அவரை பார்க்காமல் எங்கோ பார்த்தவாறே…
அதில் விரக்தியாக புன்னகைத்தவர்“சரிதாண்டா நீ சொல்றதுலாம் சரிதான். உனக்கு எதாவது வேணுனாலும் விஷ்ணு வேணும்.. ஆனா இப்போ அவன் பையன் உனக்கு பைத்தியம் இல்லையா எத்தன வருஷம் ஆனாலும் நீங்களாம் திருந்தவே மாட்டீங்க……”என்று வேதனையுடன் பேசியவர்.ஒரு பெரும் மூச்சினை விட்டுவிட்டு.”ஆனா இங்க நா வைக்கிறதுதா சட்டம் அத மதிக்காதவங்க இங்க இருக்க வேணாம். கிளம்பிங்க…. ஆல்ரெடி உங்களுக்கு நா சொத்த பிரிச்சிக்கொடுத்துட்டேன்..”என்றார் கோவமாக…
‘ச்ச இந்த கிழவனால இந்த வீட்ட விட்டுட்டு நம்ம எங்க போறது. நமக்குனு வீடு இருக்குதா ஆனா இந்த வீடு போல எதும் மைன் எடத்துல இல்லையே இத விட்டுடு எப்டி போறது..அதும் இல்லாம இங்க இருந்து போய்ட்டா இந்த வீட்ட ஈசியா அந்த ஆதித் மேல எழுதிவச்சிடுவாரு இவரு இப்போ வேற புதுசா அவனுக்கு பொண்டாட்டினு ஒருத்தி வந்துட்டா. இப்போதாவது பேச்சிக்கு தான் இது என் பேரன் பேத்திக்கு சொந்தம்னு சொல்றாரு.. அத உண்மை ஆகிட்டாருனா நம்மளால இவர்ட்ட இருந்து ஒன்னுதையும் கரக்க முடியாது.”என்று அங்கு இருக்கும் அனைவரது மனதிலும் ஓடிக்கொண்டு இருந்தது..
“என்ன எல்லாரும் இங்கயே நின்னுட்டு என்ன பன்னுறீங்க….. இந்த வீடு என் பேரன் ஆதித்க்கும், என் பேத்தி அனிஷாக்கும் தான்.”என்றார் அவர்கள் மனதில் ஓடுவதை சரியாக புரிந்துக்கொண்டு
“அப்பா கோவப்படாதிங்கபா.. நம்ம ஆதித் இப்பொ பை.. என்று சொல்ல வந்தவர் தாத்தா முறைப்பதை பார்த்து இல்லப்பா.. அது அவன் இப்பொ இருக்குற இந்த நேரமா பார்த்து இப்படி பண்ணுனா அவன் நல்லா ஆன பிறகு உங்கள தான் கேள்விக் கேட்பான் இப்படி பட்ட பொண்ண ஏன் கல்யாணம் பண்ணி வச்சிங்கனு”என்றார் மழுப்பலாக அஜய்.
“அவன் என் பேரன் அவன் அப்படி கேட்கமாட்டான்.. அப்படியே கேட்டாளும் அவனுக்கு நா பதில் சொல்லிக்கிறேன் அத பத்தி நீங்க யாரும் கவலப்பட வேணா” என்றார்
“அப்பறம் இன்னொரு விஷயம்..யாரும் இனி என் பேத்தி ஆஸ்வதி ட்ட எந்த வம்பும் வச்சிக்க கூடாது.”என்றவர்.. விதுனை பார்த்து “ஆதியோட கல்யாணத்த பத்தி ப்ரஸ் கிட்ட நீயே பேசிடு விதுன்.. இந்த சர்மா பேமிலியோட கம்பெனி மேனேஜரா…” கூறிவிட்டு அங்கு நிற்கும் ப்ரேமை ஒரு அழுத்தமான பார்வை பார்த்தவாறேஅங்கிருந்து சென்றார்…அவர் பின்னாலே விதுனும் அவர் அறைக்கு சென்றுவிட்டான்…
அவர் சென்றதும் ரூபாவதியும் தன் மகளை அழைத்துக்கொண்டு தன் அப்பாவுடன் உள்ளே சென்றுவிட்டார்
அனிஷாவிற்கு காலேஜ் நேரம் ஆனதால் அவளும் கிளம்ப தன் அறைக்கு சென்றுவிட்டாள். அங்கு நிற்கும் அனைவரையும் ஒரு முறை முறைத்தவாறே விஷாலும் ஒரு தலை ஆட்டலுடன் தன் அறைக்கு சென்றுவிட…. ராக்ஷியும்.. தோட்டத்திற்கு சென்றுவிட்டாள்…அதிதி தன் அன்னையை ஒரு பார்வை பார்த்தவாறே சென்றுவிட்டாள்..
அவர்கள் சென்றதும் வினிஜாவும் அவசர அவசரமாக கிட்சனிற்குள் நுழைந்துக்கொண்டார்..
இப்போது அங்கு நிற்கும் பரத்..பூனம்..அஜய்..ரியா..ப்ரேம்…அபூர்வா.. இஷானா அபூர்வா கணவன் அனைவரும் நிற்க…
இஷானா கணவன் ராமோ.. மனதில்..”ம்ம்ம். அடுத்து யாரோட குடிய கெடுக்கனும்னு ப்ளான் போடுங்க….”என்று நினைத்துக்கொண்டே
“இஷா பேபி. நா ஆபிஸ் போறேன் நீ அடுத்து என்ன பண்ணனும் எங்க பத்த வைக்கனும்னு யோசி. என்ன….”என்று கூற…. அதில் கடுப்பானவள் அவனை பார்த்து முறைக்க….
“ம்ம்கூம் வினிஜாக்கா எனக்கு டிபன் குடுங்க ஆபிஸிக்கு டைம் ஆச்சி.”என்று நைசாக நழுவிவிட்டான்..
“சரியான சாப்பாட்டு ராமன் இங்க என்ன என்னவோ நடக்குது அத பத்தி கொஞ்சம் கூட நினைக்காம சாப்பாடு முக்கியம்னு ஓடுறாரு பாரு.”என்று ராமை கடித்து குதற…..
“ம்ச். அத விடு இஷானா இந்த வீட்ல என்ன நடக்குது பரத் அண்ணா..”என்று அபூர்வா கோவமாக பல்லை கடித்துக்கொண்டு கேட்க…
“ம்ச் அதான் எனக்கும் புரில அபூர்வா.”என்று பரத் கூற…
“சரி நாம இங்க இருந்து எதையும் பேச வேணாம் வாங்க நம்ம ரூம்க்கு போய் பேசலாம்.”என்று ரியா கூற… அதற்கு அனைவரும் தலை ஆட்டிவிட்டு பரத்தின் அறைக்கு அனைவரும் சென்றுவிட்டனர்.
அங்கு சென்றதும் அனைவரும் ஒவ்வொரு மூளையில் நிற்க….
இஷானாவோ அங்கு தட்டில் இருக்கும் ஆப்பிளை எடுத்து கடித்துக்கொண்டே
“எனக்கு என்னவோ தாத்தா நம்ம பண்ற ஃப்ராடு தனம் தெரிஞ்சி தான் இந்த ஆஸ்வதிய ப்ளான் பண்ணி இந்த வீட்ல இறக்கி இருப்பாறோனு தோணுது. “என்று மேலே பார்த்து எதோ யோசித்தவாறே கூற…..
அதை கேட்ட அனைவரது முகமும் பேய் அறைந்தது போல ஆனது..
“ஏய்.. இஷா சும்மா கண்டதையும் உளறாத… “என்று பூனம் மிரட்ட….
“மாம்.. நா என்ன பயமுறுத்துறேன். எனக்கு தோன்றத சொல்றேன்.. அது மட்டும் இல்லாம நாம என்ன கொஞ்சமாவா ஆதித்க்கு பண்ணுனோம்…அதுக்குலா சேர்த்துதான் தாத்தா இப்போ நம்மள விரட்ட இவள கூட்டிட்டு வந்துருக்காரு போல…..”என்று வாய் முழுதும் ஆப்பிளை அதக்கிக்கொண்டு பேச… அனைவரும் அவளை கண்டு முறைத்தனர்..
“ம்ப்ச் இஷானா…”என்று பரத் ஒரு அதட்டலை போட……
“ம்ச். என்னை அதட்டி ஒன்னும் ஆக போறது இல்ல… நா சொன்னதுலா உண்மை தானே ஆதித்தோட அப்பாக்கு நீங்களா…”என்று அவள் ஆரம்பிக்க….
“இஷா.”என்று அந்த அறையையே அதிரும் அளவிற்கு ப்ரேம் கத்த….
இஷானா ஒரு நிமிடம் பயந்து போனாள். ப்ரேமிற்கு ஆதித்தை சிறு வயதில் இருந்தே பிடிக்காது அவனை அனைவரும் தூக்கி வைத்து பேச…. இவனை யாரும் கண்டுகொள்ளாமல் போகவே அவனுக்கு ஆதித்தை கண்டாளே ஆகாது ஆதித்தை தன் எதிரி போல பார்க்க ஆரம்பித்தவன் இன்னும் நிறைய தவறான பழக்கத்தை கற்றுக்கொண்டான்.அது மட்டும் இல்லாமல் ப்ரேம் ஒரு ப்ளே பாய்.. பெண்களை காதல் வலையில் வீழ்த்துவது அவனுக்கு பிடித்த வேளை. ஆனால் ஆதித் பெண்கள் இருக்கும் திசைக்கு கூட திரும்ப மாட்டான். ஒருத்தியை தவிர…..
அது மட்டும் இல்லாமல் ஆதித்தை விட 3வயது பெரியவனான இவனுக்கு இன்னும் திருமணத்தை பற்றி பேசாத தாத்தா ஆதித்திற்கு கையுடன் திருமணத்தை முடித்துவந்தது இவனுக்கு இன்னும் ஆதித்தின் மீது பொறாமையை கிளப்பியது அதும் ஆஸ்வதி போல தேவதை போய் இவனுக்கா.. என்று இன்னும் ஆதியின் மீது வன்மத்தை வளர்த்து வந்தான்..
இஷானா அப்படியே அசையாமல் தன் அண்ணனை காண…. ப்ரேமோ கோவத்தில் சுவற்றில் கையை அடித்துக்கொண்டு இருந்தான் பற்களை கடித்தவாறு.. அதை கண்ட பரத்…
“ப்ரேம்.. என்னடா பன்ற….. அடிக்கிறத முதல நிறுத்து…”என்று கத்தினார் அப்போதும் அவன் கோவத்தில் சுவற்றை குத்த…. பூனம் ப்ரேம் அருகில் வந்து அவனை அடக்கினார்..
“ப்ரேம் கொஞ்சம் கோவத்த கம்மி பண்ணிக்கடா. இப்டி அதிகமா கோவப்படுறதுனால தான் நிறைய தப்பு பண்ணி இப்போ எல்லாரும் முழிச்சிட்டு இருக்கோம்..”என்றார் பூனம்
“ஆமா ப்ரேம்.. உன் கோவத்துனால நடந்ததுலா போதாதா இன்னும் என்ன பண்ணனும்னு நினைக்கிற… நாம பண்ணுனது மட்டும் வெளில தெரிஞ்சிது கூண்டோட கம்பி எண்ணனும் தெரிஞ்சிக்க…..”என்று ரியா கத்த…..
“கொஞ்சம் நிறுத்துங்க அண்ணி,.. அவன் என்ன தப்பு பண்ணுனான்.. அவன் எல்லாமே கரெக்ட்டா தான் பண்ணுனான்…”என்று அபூர்வா அவனுக்கு சப்போர்ட்டாக வர…
“அபூர்வா கொஞ்சம் நிறுத்து. உன் பேச்ச கேட்டுதான் இன்னிக்கி இவன் இந்த நிலைக்கி வந்து நிக்கிறான்.”என்று பரத் கத்த…. அபூர்வா வாயை இறுக்க மூடிக்கொண்டார்..
“ப்பா. அத்தைய ஏன் திட்டுறீங்க… அவங்க என்ன என்னை கெடுத்தாங்க……”என்றான் ப்ரேம்.
“ம்ச். ப்ரேம் கொஞ்சம் நிதானமா இருடா உனக்கும் வயசாகிட்டே போகுது இன்னும் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காம அலையிறோம். எல்லாம் உன்னோட கெட்ட பழக்கத்துனால தான்…”என்றார் பூனம் மகன் மீது பாசமாக….
“மா…’என்று அவன் அதட்ட….
“ம்ச். உன்ன விட சின்னவன் அந்த ஆதித். அதும் பைத்தியம் அவனுக்குலா பொண்ணு கிடைக்கிது. ஆனா உனக்கு..”என்று பேசிக்கொண்டே இருந்த பூனம் அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டார் ப்ரேம் கத்திய கத்தில்
“மா…”என்று அந்த வீடே அதிர கத்திய ப்ரேம் அறையில் இருந்த ஒவ்வொரு பொருளையும் தூக்கி போட்டு உடைக்க….. அவனின் இந்த செயலை கண்ட பரத் அவனை பிடிக்க வர…. அவரை தள்ளிவிட்டு திரும்ப அரக்கன் போல கத்தி அனைத்து பொருலையும் தூக்கி போட்டு உடைத்தான்..இஷானா ஒரு பக்கம் அவனது இந்த செயலை கண்டு மிரண்டவாறே சுவற்றில் பல்லி போல் ஒட்டிக்கொண்டு நிற்க….அவனை யாராலும் அடக்க முடியவில்லை.
“ப்ரேம் நிறுத்துடா அம்மா எதோ தெரியாம சொல்லிட்டேன்.”என்று பூனம் கத்த… அப்போது தான் அவன் கொஞ்சம் அடங்கினான்..
“எவ்வளவு தடவை சொல்றது. அந்த ஆதித்தையும் என்னையும் சேர்த்து வச்சி பேசாதீங்கனு.. அவன் பேர கேட்டாலே எனக்கு அவன கொல்ற அளவுக்கு வெறி வருது..”என்று கத்த…..
“பூனம் அவனுக்கு தான் அந்த ஆதித் பேர கேட்டாளே பிடிக்கலைல…. அப்புறம் எதுக்கு அவன பத்தி பேசுற…..”என்று பரத் கத்த….
“அண்ணா அவன எதாவது பண்ணனும்னா…”என்று அபூர்வா பேச….
“ம்ச் அபூர்வா இப்போ இதப்பத்தி பேச வேணாம் கொஞ்ச நாள் போகட்டும்..”என்று அஜய் கூற…
“ஆமா. ஆமா இப்போ போய் அவனுக்கு எதாவது நாம செஞ்சோம்னா அப்புறம் நாம தான் அவன எதோ செஞ்சிட்டோம்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடும் பாத்து மெதுவா எதாவது ப்ளான் போடுவோம்.”என்றாள் ரியா.
“ம்ம்ம் அதான் சரி.. சரி எல்லாரும் அவங்க அவங்க ரூம்க்கு போங்க….. நாம இதப்பத்தி இன்னொரு நாள் பேசலாம்..”என்ற பரத் தன் மனைவியை பார்த்து..”பூனம் ரூம சுத்தம் பண்ண ஆள் வர சொல்லு…”என்று தன் அலுவலக அறைக்கு சென்று விட்டார்..
அனைவரும் அவர் அவர் அறைக்கு சென்றனர்..அப்போதும் அவர்கள் மனதில் “ச்சா.. இந்த வீடு அந்த பைத்தியகாரன் கைலயா அவன…..”என்று ஒரு ஒருத்தரும் தங்கள் மனதில் சத்தம் போட்டுக்கொண்டனர்.
அவன சும்மாவிட கூடாது.. என்று ஒவ்வருத்தறும் ஒன்னு ஒன்னு நினைக்க அங்கு ப்ரேமோ தன் அறையில்.. ஜன்னலை பிடித்துக்கொண்டு நின்றவாறே.
“எல்லாரோட நல்ல பேரும் உனக்கு. இந்த சொத்தும் உனக்கு.. அந்த பெருசோட அன்பும் உனக்கு இப்போ இவளும்.”என்று முகத்தை கொடூரமாக வைத்துக்கொண்டு மனதில் நினைத்தவன் ஆஸ்வதியை நினைத்து.
“என்ன பொண்ணுடா. இந்த பைத்தியக்காரனுக்கு போய் இப்படி ஒரு பொண்ணா ச்ச ச்ச அவ நம்மட்ட இருக்க வேண்டியவ டா அவள போய். ஆஸ்வதி.. உன்ன அந்த பைத்தியக்காரன்ட இருந்து பறிக்கிறது தான் என் முத வேலை”என்றான் கிறக்கமாகவும், ஆதித் மேல் உள்ள தீராத கோவத்தாலும்.
இஷானா ப்ரேம் காட்டிய கோவத்தில் மிரண்டு போய் தன் அறைக்கு செல்ல….. அங்கு அவள் கணவன் ராமோ தன் கையில் இருக்கும் ப்ளேட்டில் உள்ள டிபனை முடித்துவிட்டு.. இஷானாவை பார்க்க….. அவளது முகத்தில் தெரிந்த குழப்பத்தில்
“அய்யோ இவ என்ன இவ்வளவு டெரரா வரா இப்டி வந்தா நமக்கு தானே ஆபத்து.. ராமா இங்க இருந்து எஸ் ஆகிடுடா. இல்ல இவ கையில இன்னிக்கி உனக்கு சாவு நிச்சயம்.”என்று மனதிற்குள்ளே பேசியவன்..
”இஷா. எனக்கு பசிக்குதுமா.எதாவது கிட்சனுல இருக்கானு பார்த்துட்டு வரேன்…”என்று ராம் கிட்சன் உள் செல்ல….. அதனை பார்த்த இஷானா தன் தலையிலே அடித்துக்கொண்டு.”நா இங்க என்ன பிரச்சனையில இருக்கேன். இவர் என்னனா சாப்பாடு கண்ட இடமே சொர்க்கம்னு சுத்துறாரு.. எல்லாம் என் தலை எழுத்து இந்த ஆஸ்வதி என்ன இந்த வீட்டுக்குள்ள வந்தோனே என்னை நோஸ் கட் பண்ணுனதும் இல்லாம….. என்னிக்கும் நா பேசுறத கண்டுக்காம இருக்க ப்ரேமையே என் மேல கோவப்பட வச்சிட்டா. ம்ம். இவள இனி சும்மா விடக்கூடாது.”என்று மனதில் பேசிக்கொண்டே படுத்துவிட்டாள்…
அங்கு ரூமை சுற்றிக்காட்ட சென்ற ஆதி தன் ரூமில் அவளை அழைத்து சென்று.. அவளை தன் கட்டிலில் உட்கார வைத்தவன் அவளையே இமைக்காமல் பார்த்தான் அதை பார்க்காத ஆஸ்வதி அவன் அறையை சுற்றி பார்த்தாள். அவன் அறை அவ்வளவு குப்பையாக இருந்தது.. அவன் துணிகள் அனைத்தும் அவன் கப்போர்டில் இருந்து சரிந்து கீழே கிடந்தது அவன் கட்டிலில் பழைய அழுக்கான கவர் போட்டிருந்தது.. அவன் கட்டில் முழுதும் பொம்மைகளாக கிடந்தது.. அவன் அழுக்கு துணிகள் எங்கும் சிதறி கிடந்தது.. அதை பார்த்த ஆஸ்வதி முகத்தில் அப்பட்டமாக குழம்பி போய் இருப்பது தெரிந்தது…அவளையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஆதித் அவளின் முகம் காட்டிய பாவனையில் முகம் இறுகி இருந்தது..ஆஸ்வதி திரும்பி ஆதியை பார்க்க…. சடுதியில் தன் முகத்தை மாற்றிக்கொண்டு அவளை பார்த்து புன்னகைத்துக்கொண்டே.
“ஏஞ்சல் இன்னுமே.. நீ எங்கூட தான இருப்ப….. எங்கூட விளையாடுவியா..”என்றான் கட்டிலில் உட்கார்ந்தவாரு.ஏக்கமாக…
“ம்ம். கண்டிப்பா நா ஆதி கூடதான் இன்னுமே இருப்பேன். அவர் கூடதா இனி விளையாடுவேன்.”என்றாள் அதை கேட்டு கண்கள் விரித்து சிரித்த ஆதி.
“ஏஞ்சல் இந்த பப்ளு, ஆக்ஸி, என் கூட விளையாட வரமாட்டாங்க தெரியுமா ஆஜிஸ் அப்றம் ரியாக்கு என் கூட விளையாட ரொம்ப பிடிக்கும் ஆனா.. பப்ளு தான் விடமாட்டான்.. அவங்கள திட்டி அழைச்சிட்டு போய்டுவான்.பப்ளு ஆக்ஸி கிட்ட….அவங்ககிட்ட நிறைய டாய்ஸ் இருக்கு ஆனா அவங்க எனக்கு எதுமே தரமாட்டாங்க….. அப்புறம் நிறைய சாக்கி வச்சிருப்பாங்க ஆனா எனக்கு தரவே மாட்டாங்க….நா போய் கெஞ்சி கேட்டாலும் என்ன விளையாட்டுக்கு சேர்த்துக்க மாட்டாங்க….. அப்புறம் அவங்க அம்மா, அப்பாட்ட சொல்லி எனக்கு அடி வாங்கி வச்சிடுவாங்க….. எனக்கு தான் ரெண்டு பேருமே இல்லையே நா யார்ட்ட போய் கொம்பிளைன்ட் பன்றது இருந்தும் நா தாத்தாட்ட சொல்லுவேனா தாத்தா அவங்கள திட்டுவாங்க….. ஆனா அதுக்கு அப்புறமும் என்ன கீழ தள்ளி விட்டுடுவாங்க….. இல்லனா என்ன பின்னாடி இருக்குற பெரிய பப்பிட்ட மாட்டிவிற்றுவாங்க அது என்ன தொறத்தும் நானும் வீடு சுத்தி ஓடுவென் உள்ள வரலானு பார்த்தா. கதவ மூடிடுவாங்க… அப்டி பன்னி 4 டைம்ஸ் என்ன பப்பி கடிசிட்டு இங்க பாரு..”என்று தான் போட்டு இருக்கும் சர்வானியை கழட்டி தன் இடையை காட்டினான்.. அதில் நாய் கடித்ததற்கான அடையாளம் இருந்தது..அதை பார்த்து ஆஸ்வதி அதிர்ந்துவிட்டாள். அதிர்ச்சியுடன் அவன் இடையை கைகளால் வருட…
அதில் ஆதி ஆஸ்வதியையே கூர்மையாக பார்த்தான்.. அவளது வருடல் அவனை சிலிர்ப்பில் ஆழ்த்தியது.. அந்த உணர்வினை அவன் வெளிக்காட்டாமல் இருக்க பெரும்பாடு பட்டு போனான்..
தன்னுடைய கணவன் எத்தனை துன்பத்தினை அனுபவித்தான் என்பதை நினைத்து அவளுக்கு கண்கள் கலங்கியது அவள் அவனை நினைத்து வருந்த ஆனால் .அவனோ அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்து மனதில் இதமாக இருந்தது.. அவளை இன்னும் காதல் பொங்க கண்டவன் அவளையே இமைக்காமல் பார்த்தான் பின் அவள் கண்ணிர் தந்த வலியில்…ஆனால் ஆஸ்வதியோ அவனின் அவஸ்தை புரியாமல் அவனின் இடையை இன்னும் வருட…..
“ஹிஹி ஏஞ்சல் என்ன பண்ற….”என்றான் குரலை குழைந்தவாறே..
அதை கவனிக்காத ஆஸ்வதியோ “ஏன் ஆதி”என்றாள் இன்னும் இதமாக வருடியவாறே..
“ஹிஹி. ஏஞ்சல் இங்க நீ என்னமோ பண்றியே அது எனக்கு இங்க என்னமோ பண்ணுது..”என்று முதலில் இடிப்பை காட்டியவன் பின் நெஞ்சில் கை வைத்துக்காட்ட….. ஆஸ்வதி அவன் சொல்வது முதலில் புரியாமல் பார்த்தவள் பின் அவன் சொல்வது புரிந்து சட்டென்று அவன் இடையில் இருந்து கையை எடுத்துவிட்டாள் அவள் கண்கள் இன்னும் கலங்கி இருப்பதை கண்டவன்..
“ஐய்யொ ஏஞ்சல் அழாத எனக்கு வலிக்கல…..”என்றான். அவனின் இந்த சொல்லில் ஆறுதல் அடைந்தவள். அவனை பார்த்து “நா அழல ஆதி”என்றாள் சிரித்தவாறு.
அவன் அவளையே பார்க்க…. அப்போது தான் அவள் சிரிக்கும் போது கன்னத்தில் விழுந்த குழியை ஆச்சரியமாக பார்த்து..”ஐய்.. ஏஞ்சல் இது அழகா இருக்கு”என்று அவள் கன்னத்தில் இருந்த குழியை ஆசையாக தொட்டான்..
அதனை சிறிதும் எதிர்ப்பாக்காதவள் அவனது தொடுகையில் அவள் உடல் சிலிர்த்து. அவள் கண்கள் தானாக மூடிக்கொண்டது ஆதி அவளது முகத்தையே ரசித்துக்கொண்டிருந்தான்.. தன் மனைவி தன் மிக அருகில் தன் தொடுகைக்கு சிலிர்த்து நிற்பவளை ஆசையாக வருடினான்.. அவன் விரல்கள் அவள் கன்னத்து குழியில் இருந்து இறங்கி அவளது சிவந்த அதரத்தில் வந்து நிற்க….. அதனை கண்களால் பருகிக்கொண்டிருந்தான். ஆதியின் தொடுகையை மனதில் ரசித்தவள்.. எதோ ஒன்று அவளை இம்சிக்க கண்களை மெதுவாக திறந்தாள் தன் முகத்தின் மிக நெருக்கமாக அவன் முகம் தெரிய அதில் ஆஸ்வதி உடல் நடுங்கியது..நடுக்கத்துடன் அவனை பார்க்க….. அவனோ அவளை ஆழமாக பார்த்தவாறு..”உன் லிப்ஸ் கூட அழகா இருக்கு ஏஞ்சல். என் கிட்ட ஒரு டால் இருக்கும் அதுக்கும் இப்டிதான் லிப்ஸ் இருக்கும்.. ஆனா உன்னோட ரொம்ப சாஃப்டா இருக்கு…”என்றான் அவள் இதழை வருடியவாறு.
அவனின் இதழ் வருடலில் சிலிர்த்தவள் அவனை கண்களில் காதலுடன் காண… ஆதியோ அவளது இதழை தான் மென்மையாக வருடிக்கொண்டிருந்தான்..
அதன் மென்மை. “அய்யோடா.. இவளுக்கு இருப்பது இதழா இல்லை இளம் பிங்க் வண்ண ரோஜாவா. இவ்வளவு மென்மையை நான் மலர்களிடம் கூட காணவில்லையடா.. மயக்குகிறாளே என்னை.”என்று மனதில் அவளது இதழை வருடிக்கொண்டே அதற்கு பாராட்டு பத்திரம் வாசித்துக்கொண்டிருந்தான்.
அதுவரை அவனிடம் மயங்கிக்கொண்டு இருந்த ஆஸ்வதிக்கு அப்போது தான் ஆதியின் நிலையே நியாபகம் வந்தது.. மானசீகமாக தலையில் தட்டிக்கொண்டவள்…”ஆதி இன்னும் குழந்தை தான் அவர்கிட்ட போய் இப்டி நடந்துக்குறது சரி இல்ல……”என்றவள் அவனிடம்..”சாரி ஆதி..”என்றாள் அதில் ஆதி புருவத்தை ஒரு முறை சுருக்கி யோசித்தவனின் முகம் இறுகிப்போனது.

(வருவாள்..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!