புதுமனை புகுவிழா….இந்த கதை குடும்பக் கதை…
குடும்ப கதை என்றாலே பாசம்நிறைந்த கதை. அண்ணனா தங்கை மீது வைத்திருக்கும் பாசத்தை விட,தங்கை அண்ணன் மீதே வைத்திருக்கும் பாசத்திற்கு அளவே இல்லை என்று தான் சொல்ல முடியும்.
சிறுவயதில் உறவுகளின் பழிச் சொல்லால் வீட்டை விட்டு வெளியே போகிறான் சாந்தினிகாவின் அண்ணன். அந்த அதிர்ச்சியில் தாய் சுய நினைவை இழக்கிறாள்.
தாய், தந்தையின் விருப்பமே புது மனை கட்டி கடைசி வரைக்கும் அந்த வீட்டில் எல்லாருமே ஒற்றுமையாக வாழ்வது தான். பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றவே ஒவ்வொரு நாளும் வியர்வை சிந்தி உழைக்கிறாள்.
சாந்தினிகாவின் விடாமுயற்சியால் தாய், தந்தையின் விருப்பம் நிறைவேறுகிறது. அவள் வியர்வை சிந்தி உழைத்து கட்டிய வீட்டை
தன்னுடைய அண்ணனுக்காக விட்டுக்கொடுப்பாளா?
இக்கதையில் வரும் கதாநாயகி தன்னுடைய தாய் சுயநினைவை இழந்தாலும், குழந்தையைப் போல் பாதுகாப்பாக அரவணைக்கிறாள் சாந்தினிகா…. தனது தந்தைக்கும் பாசத்தைப் பொழிகின்ற அன்பு மகளாகவும் அவளுடைய கடமையைத் தொடர்கின்றாள்… .சிறு வயதில் செய்யாத தவறுக்காக தன்னுடைய தந்தை கடுங்கோபமடைந்து அடித்து விடுவார்… அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் சாந்தினிகாவின் தமையன் கார்த்திகேயன் ஊரை விட்டு சென்று விடுவான்.. அதன்பிறகு கார்த்திகேயன் தவறு செய்ய வில்லை எனத் தகவல் வரும்… அதை நினைத்தவர் வருத்தமுற்று அவனைத் தேடி செல்வர்… கார்த்திகேயனை தேடி சென்ற கங்காதேவிக்கு ஒரு சிறிய விபத்து நேரிடும்… அந்த விபத்தில் சுயநினைவை இழந்து விடுவாள் சாந்தினிகாவின் அம்மா… ..
தன்னுடைய அம்மா, அப்பாவின் ஆசையே ஊரே வாயின் மேல் விரலை வைத்து பேசும் அளவிற்கு புதுமனை கட்ட வேண்டும் என்பதே அவளின் நோக்கமாக இருந்தது… ..அவளின் நல்ல எண்ணமும் செயலும், நடத்தையும், சுய உழைப்புமே முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தது …
இறுதியில் அவங்க தமையனை காணும் வாய்த்தது…ஆசை ஆசையாக ஆலமரமாக கட்டிய வீட்டில் அவங்க அண்ணனுக்கு பங்கு இருக்கிறது என்கிறாள் தாய் கங்காதேவி… .
வியர்வை சிந்தியவள்,அங்குமிங்குமாக கடன் வாங்கி அதுக்கெல்லாம் வட்டி கட்டிய சாந்தினிகாவின் நிலைமை என்னவாக இருக்கும்…
இன்னொரு பக்கமாக சாந்தினிகாவைத் தேடி. அலையும் பவித்திரன்… அவனையே
மனசில் நித்தமும் நேசித்துக் கொண்டிருக்கிறாள்..சாந்தினிகா நேசித்தவனையே மணம் முடிப்பாளா,.. புதுமனையை தமையனுக்காக விட்டுக்கொடுப்பாளா என்பதே இப்படைப்பு… .