உயிர் போல காப்பேன்-16

4.9
(29)

அத்தியாயம்-16
தாத்தா தன்னை தனியாக அழைத்து பேச விரும்புவதை கேட்ட ஆஸ்வதி தன்னை சுற்றி பார்க்க… அங்கு யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது.
“இங்க தான் யாருமே இல்லையே அப்புறம் ஏன் தாத்தா நம்மள தனியா கூப்புடுறாங்க..”என்று மனதில் நினைத்தவள் இன்னொரு தரம் சுற்றிமுற்றி பார்க்க… அங்கு வினிஜா இவளை திருட்டு தனமாக சுவரின் பின்னால் மறைந்தவாறே பார்த்துக்கொண்டு இருந்தார்.. அதை கேட்டு அதிர்ந்த ஆஸ்வதி.
“என்ன இவங்க இப்டி ஒட்டுக்கேட்குறாங்க…”என்று மனதில் நினைத்துக்கொண்டே..தாத்தாவை பார்த்து “போலாம் தாத்தா…”என்று தலை ஆட்ட… ஆஸ்வதி தாத்தாவின் அறைக்குள் செல்லும் வரை வினிஜாவையே திரும்பி திரும்பி பார்த்தவாறே செல்ல…
வினிஜாவோ ஆஸ்வதி தன்னை கண்டுக்கொண்டாள் என்பதை தெரிந்துக்கொண்டு தன்னை சுவற்றில் பின்னால் மறைத்துக்கொண்டாள்..
இருவரும் ஆபிஸ் ரூமிற்கு சென்றனர்…தாத்தா தன் இருக்கையில் உட்கார்ந்து தனக்கு எதிரில் இருக்கும் இருக்கையை காட்ட…. அதில் உட்கார்ந்தவள் தாத்தாவையே புரியாமல் பார்த்தாள்.
“மா ஆஸ்வதி உனக்கு இங்க எதும் பிரச்சனை இல்லையே..”என்றார் ஆஸ்வதியை கவலையாக பார்த்தவாறு…
அதில் அவள் புரியாமல் பார்க்க..”காலையில நடந்தத நினைச்சி வருத்தப்படுறீயா மா…”என்றார் அவளை ஆழ்ந்து பார்த்தவாறு…
“ஐய்யொ அதலா இல்ல தாத்தா நா அத அப்பவே மறந்துட்டேன். நீங்க இன்னும் அத நினைச்சிட்டு இருக்கீங்களா.”என்றாள் அவரை வருத்தத்துடன் பார்த்தவாறு…
அதில் அவர் சின்ன புன்னகையுடன்…”ம்ம். எனக்கு ஆதியோட எதிர்காலத்தை பத்தி நிறைய பயம் இருந்துச்சிமா ஆனா என்னிக்கி உன்ன பார்த்தனோ அன்னிக்கே அந்த பயம் போய்டுச்சி…”என்றார் ஆஸ்வதியை அழுத்தத்துடன் பார்த்தவாறு…
அவர் சொன்னதில் குழம்பிய ஆஸ்வதி அவரை புரியாத பார்வை பார்க்க….
“என்னமா இவர் எப்போ நம்மள பார்த்தாருனு குழப்பமா இருக்க….”என்று கேட்க ஆஸ்வதி ஆம் என்று தலை ஆட்டினாள்…
“ம்ம். உன்ன நா முத தடவ பார்த்தது துர்க்கை அம்மன் கோவில தான்….அதும் 1மாசத்துக்கு முன்னாடிதான்”என்றார் தாத்தா. அதில் ஆஸ்வதி தாத்தாவை அதிர்வுடன் பார்த்தாள்.
ஏனென்றால் ஆஸ்வதிக்கு ஒரு பழக்கம் உண்டு வாரத்தில் வெள்ளி அன்று மட்டும் காலையில் இருந்து சாப்பிடாமல் அவள் வீட்டின் அருகில் இருக்கும் மும்பையின் ப்ரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை கண் குளிர பார்த்ததும் தான் அவளுக்கு அன்று உணவே உள்ளே இறங்கும். அதும் அமம்னுக்கு என்று தயாரித்த பிரசாதத்தை நெய் வைதியம் செய்து கோவிலில் கொடுப்பது மட்டும் தான் அன்று அவளுக்கு உணவு..
தன் வாழ்க்கையில் நடப்பதை. நடந்து முடிந்த எதை பற்றியும் குறை சொல்லவோ. இல்லை எனக்கு ஏன் இந்த வாழ்க்கையை கொடுத்தாய் என்று திட்டவோ அவள் கோவில் செல்வது இல்லை. இந்த விரதம் இருப்பது இல்லை.. அவளுக்கு எந்த வேண்டுதலும் இல்லை.. ஆனால் அவளுக்கு 16வயதில் இருந்து இந்த பழக்கம் அவளுக்கு ஒட்டிக்கொண்டது.. காலையில் இருந்து நீர் கூட அருந்தாமல் அவள் துர்க்கை அம்மனை மனதில் நினைத்து இந்த விரதத்தை மேற்கொள்வாள்.. அவளுக்கு அது ரொம்ப பிடிக்கும்…
இதை விஷாலி கூட கண்டித்திருக்கிறாள்.. அவள் எது சொன்னாலும் கேட்கும் ஆஸ்வதி இதில் மட்டும் விஷாலியை கண்டுக்கொள்ளாமல் போய்விடுவாள்..விஷாலி அத்ற்கு சண்டை போட்டாலும் சரி ஆனால் ஆஸ்வதி அவளை கொஞ்சி கெஞ்சி எப்படியோ சமாளிப்பாள்..
அப்படி ஒருநாள் ஆஸ்வதி காலையில் இருந்து விரதம் இருந்து மாலை அம்மன் கோவிலுக்கு சென்று வாசலில் பூவை வாங்கி உள்ளே சென்று அம்மனை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.. அவளுக்கு அம்மனை ரசிக்க பிடிக்கும்.. அதும் சந்தன நிற அம்மனை நல்ல அரக்கு நிற புடவையில் அழகாக அலங்கரித்து தலையில் தங்க நிற வலை துணியில் முக்காடு போட்டிருந்த அம்மனை காண அவளுக்கு என்றும் போல அன்றும் இரண்டு கண் போதவில்லை… சாந்த சொரூபினியாக இருக்கும் அம்மனை பார்த்தே அவள் சொக்கி போனாள்.. அம்மனை பார்த்தவாறு இருந்தவள் கண்களை அம்மனிடம் இருந்து பிரிக்க முடியாமல் பிரித்தவள் அந்த கோவிலின் வளாகத்தை சுற்ற ஆரம்பித்தாள்..
அப்படி அவள் தரையை பார்த்துக்கொண்டே சுற்ற ஆரம்பிக்க…. அப்போது அவள் கண்களில் மாட்டியது ஒரு தங்க காப்பு.. மாலை வெயிலில் பட்டு மினுமினுக்க…. அதை பார்த்தவள் அதை கைகளால் எடுத்து சுற்றி முற்றி பார்த்தாள். அதிலே அவளுக்கு தெரிந்துவிட்டது கண்டிப்பாக அது வைரங்கள் பதித்த சொக்க தங்க காப்பு என்று.. அதை புரியாமல் பார்த்தவள். கோவிலை சுற்றி முற்றி பார்க்க.. அங்கு அதிக மக்கள் இல்லை.. அங்கு இங்கு இரண்டு மூன்று பேர் தான் நின்றார்கள்.. அப்போதும் கும்பலை தவிர்க்க ஆஸ்வதி மாலை கொஞ்சம் சீக்கிரமாக வந்துவிடுவாள் அம்மனை காண… அதனால் தான் இப்போது அந்த காப்பு யார் கையிலும் கிடைக்காமல் போய்விட்டது
அதனை பார்த்தவள் “இது யாரோடையா இருக்கும்.. பார்க்க வைரம் மாறி இருக்கே..இத தொலைச்சவங்க இத தேடி அலைவாங்களே..பாவம்..”என்று அதனை எடுத்துக்கொண்டு கோவிலின் முன்னால் வந்தவள். யாரேனும் இதை தேடுகிறார்களா என்று பார்க்க அது போல யாரும் தேடவில்லை புரியாமல் இத இப்போ என்ன பண்றது. பேசாம போலீஸ் கிட்ட போய் குடுத்தடலாமா.. என்று யோசித்தவள்.. பின் தன் சித்தியை நினைத்தவள்..”நா போலீஸ் ஸ்டேஷன் போனேனு மட்டும் சித்திக்கு தெரிஞ்சிது. வீட்டுக்கே வர வேணாம்னு அப்டியே அடிச்சி தொறத்திடுவாங்க……இப்போ இத என்ன பண்றது..”என்று சுற்றி முற்றி பார்த்தவள் யாராவது இதை தேடி வருகிறார்களா என்று கோவில் வாசலிலே நின்றுருந்தாள்..
ஆஸ்வதி வெகு நேரம் நிற்க மணி இரவு 8 ஆகிவிட்டது.. அவள் இந்த காப்பை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தவிப்பிலே அவள் விரத்தின் போது சாப்பிடும் பிரசாதத்தையும் வாங்க மறந்துவிட்டாள். காலையில் இருந்து சாப்பிடாதவள் உடல் தளர்ந்து போய் இருந்தது.. தான் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்பதை தெரிந்து தன்னை தேட யாரும் இல்லை என்ற எண்ணம் வேறு அவளை மனதால் துவள செய்தது.. விஷாலி வந்ததும் இவளை தேடுவாள் தான் ஆனால் இப்போது அவள் 12ம் வகுப்பு முடித்திருப்பதால் நீட் தேர்வுக்கு க்ளாஸ் போய்க்கொண்டு இருந்தாள். அவள் வர இரவு 10மணி ஆகிவிடும். அவளுக்கென்று ஆஸ்வதி சித்தி ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்திருந்தார். அதனால் பயம் இல்லாமல் இருக்கும். அவளும் இல்லாமல் தன்னை தன் சித்தி தேடவா போகிறார் என்பதனை நினைத்து ஆஸ்வதிக்கு விரக்தி புன்னகைதான் வந்தது
இப்படியே இன்னும் 20நிமிடம் நிற்க… அப்போது கோவிலின் வாசலுக்கு பிஎன்டப்ள்யூ கார் ஒன்று வந்து நின்றது.. கப்பல் போன்ற கார் அதும் இந்த இரவில் கோவில் வாசலில் வந்து நிற்கவும் அங்கு கோவில் சாமான் கடைகளில் இருப்பவர்கள் அந்த காரினை ஆச்சரியமாக பார்த்தனர்…ஆனால் அந்த கார் வந்ததையே ஆஸ்வதி முதலில் கவனிக்கவில்லை.. பின் அதில் இருந்து கருப்பு உடை அணிந்த இருவர் அவசரமாக இறங்கி கோவிலை பார்த்து அரக்க பரக்க ஓடுவதை பார்த்தவளுக்கு அப்போதுதான் அவர்களை கவனித்தாள்
அவர்கள் இருவரும் கோவிலையே சல்லடையாக தேட… ஆஸ்வதி அதனை கூர்ந்து கவனித்தாள். பின் இருவரும் இல்லை என்பது போல் தலை அசைத்துவிட்டு கோவிலை விட்டு வெளியில் வருவதை பார்த்த ஆஸ்வதி அவர்களையே ஆழமாக பார்த்தாள் அதற்குள் பக்கத்தில் கடை வைத்திருந்தவரை பார்த்து.
“ஏன்ப்பா. இங்க யாராவது ஒரு தங்க காப்பை விட்டுட்டு போய்ட்டாங்கனு எதாவது பேசிட்டு இருந்தாங்களா.”என்றார் கருப்பு உடை அணிந்த பாடிகார்ட் ஒருவர்.
அந்த கடை காரரும் இல்லை என்று கூற…. அவர்கள் சோர்ந்த முகத்துடன் காரை நோக்கி சென்றனர். அதை பார்த்த ஆஸ்வதி அவர்களை நோக்கி வேகமாக சென்று
“சார் ஒரு நிமிஷம்..”என்றாள் அவர்கள் இருவரையும் பார்த்து.. அதில் இருவரும் அவளை நோக்கி திரும்பி..
“என்னமா…”என்றார் ஒருவர் ஆஸ்வதியை யார் என்று புரியாமல்.
“அது அந்த காப்பு எப்டி இருக்கும்..”என்று கேட்டாள் அவர்களிடம். ஏனென்றால் உடனே அவர்களிடம் அந்த காப்பினை கொடுக்க அவளுக்கு நம்பிக்கை இல்லை அதனால் தான் அடையாளம் கேட்டாள்.. அவர்கள் அவளை வினோதமாக பார்க்க…. அவள் அவர்களை அழுத்தமாக பார்த்தாள் அதிலே அவர்கள் ஒரு நிமிடம் ஒருவருக்கொருவர் பார்த்துவிட்டு தங்கள் போனை எடுத்து அவளிடம் அந்த காப்பின் போட்டோவை காட்ட…. அதிலே அவர்கள் தேடி வந்தது தன் கையில் இருக்கும் காப்பு தான் என்பதை உணர்ந்தவள்.. அவர்கள் நோக்கி..
“அது உங்களோடதா…”என்றாள் சந்தேக கண்களுடன்..
அவர்கள் இன்னும் இந்த பெண் தங்களை நம்பவில்லை என்பதை புரிந்துக்கொண்டவர்கள் ஒருவர் இன்னொருவரை காண அவர் தலை அசைத்துவிட்டு அந்த காரின் அருகில் சென்றார்.. அதனை ஆஸ்வதி பார்த்துக்கொண்டிருக்க… அந்த காரின் கதவினை திறந்துவிட்டார் அவர் அப்போது அதில் இருந்து ஒருவர் இறங்கி வர….. அந்த இடம் கொஞ்சம் இருட்டில் இருந்தது அதனால் இறங்கியவரின் முகம் அவ்வளவாக தெரியவில்லை ஆஸ்வதிக்கு. தெரிந்தாலும் அவள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள போதும் இல்லை. நியாபகம் வைத்திருக்க போவதும் இல்லை..அது வேறு
காரில் இருந்து இறங்கியவர் கம்பீர நடை போட்டு ஆஸ்வதி அருகில் வர….. ஆஸ்வதி அவரது கம்பீர நடையிலே இவர் சாதாரண ஆள் இல்லை என்பதை உணர்ந்து அவரை காண….. அவர் முகம் லேசாகதான் தெரிந்தது.
“அந்த காப்பு என்னோடது தான் மா..உனக்கு நம்பிக்கை இல்லனா.. நா அத போட்டு எடுத்த போட்டோவ காட்டவா..”என்றார் கம்பீர குரலில்
அதில் ஆஸ்வதி கொஞ்சம் அசைந்து கொடுத்தாள்.”இல்ல சார் பரவால நா உங்கள நம்புறேன்.இந்தாங்க…. உங்க காப்பு.”என்று அவர் கையில் கொடுக்க…. அவர் புரியாத பாவனையில் அவளை பார்த்தார். ஆனால் ஆஸ்வதி தன் வேலை முடிந்தது என்பது போல் அந்த இடம் விட்டு நகர…..
“எப்பிடி மா இது என்னோடனு நா சொன்னத நம்புற… இதைதான் என் ஆட்களும் சொன்னாங்க ஆனா..என் ஆளுங்க சொன்னத நீ நம்பலையே.”என்றார் சந்தேகமாக
அதில் ஆஸ்வதி லேசாக தெரிந்த அவர் முகத்தை பார்த்து…”அவங்க கண்ணுல தொலைஞ்சி போன பொருளுகான வருத்தம் தெரில…. அத கண்டுப்பிடிக்க முடிலையேனு ஏக்கம் தெரில….. அத கண்டுப்பிடிக்கனும்ன்ற கடமை தான் தெரிஞ்சிது.. அதா அவங்கள நா சந்தேகப்பட்டேன்.ஆனா உங்க கண்களுல அதுக்கான வருத்தம்.. ஏக்கம். தேடல் தெரிஞ்சிது.. அதா இது உங்களோடனு கண்டுபிடிச்சேன்..”என்றவள் அவரை பார்த்து சின்ன புன்னகை சிந்திவிட்டு அங்கிருந்து நகர பார்க்க….
“ஏன்மா ஆஸ்வதி துர்காமாக்கு நெய்வைதியம் பண்ணுன பிரசாதத்தை வாங்கவே இல்லையே மா எப்போதும் வாங்கிட்டு உடனே வீட்டுக்கு போய்டுவ….. இன்னிக்கி என்ன இவ்வளவு நேரம் ஆச்சி..நானும் உள்ள இருந்து பாக்குறேன். சாயந்திரம் 4மணில இருந்து இங்கையே நிக்குற……இன்னிக்கி நீ முழு விரதம் வேற,. அம்மன் பிரசாதம் தானே சாப்டு இன்னிக்கி விரதத்தை முடிப்ப…. மணி என்ன ஆகுது பாரு..இந்தா சாப்டு,..”என்று ஒரு இலையில் பிரசாதம் வைத்துக்கொடுக்க அவளும் சின்ன புன்னகையுடன் அதனை வாங்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்
“ம்ச். நல்ல பொண்ணு.. பாவம் அம்மா இந்த மாறி நல்ல பசங்களதான் சோதிப்பா..”என்று அவள் போன திசையை பார்த்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்
அதனை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தவர் கண்கள் மின்னியது பின் தன் ஆட்களை வைத்து விசாரித்ததில் தான் ஆஸ்வதி பற்றி முழுதும் அவருக்கு தெரிந்தது..
“அன்னிக்கி காணாமல் போனது என்னோடதான் மா..”என்றார் தாத்தாக்கும்
அதனை கேட்டு ஆஸ்வதி அவரை ஆழ்ந்து பார்க்க…. அவர்…”ம்ம்ம் அன்னிக்கு மட்டும் இல்ல ஒவ்வொரு வெள்ளியும் என் மனசு குமுறல நா துர்கா அம்மாட்ட தான் புலம்ப வருவேன்.. அன்னிக்கும் அப்டிதான்.. சாயந்திரம் 4மணிக்கு வந்து சாமிய கும்பிட்டு கார் ஏறி ஆபிஸ் போனதும் தான் என் கையையே பார்த்தேன்.. அதிர்ச்சி ஆகிட்டேன்.அதோட மதிப்பு பெருசுனு இல்ல….. வேற அத விட காஸ்ட்லியான நகை தொலைஞ்சி போய் இருந்தா கூட ம்ச் நா அத தேடிருப்பனே தவிர தவிச்சிருக்க மாட்டேன் ஆனா இந்த காப்பு.”என்று தன் கையில் போட்டிருந்த காப்பை வருடியவரது முகம் வேதனையில் கசங்கியது.
அதை பார்த்த ஆஸ்வதி…”தாத்தா…”என்றாள் அவரது கைகளை அழுத்தியவாறு
அதில் கொஞ்சம் மீண்டவர்..”இது எனக்கு அவ்வளவு ஸ்பெஷல் மா இத குடுத்தது…என் மகன் விஷ்ணு.”என்றார் கண்கள் கலங்கியவாறு.. ஆஸ்வதி அவரையே வைத்த கண் வாங்காமல் பார்க்க… “ம்ம்ம் ஆமாமா.. இது என் 4வது மகன் விஷ்ணு எனக்கு தந்தது…ஆதியோட அப்பா..”என்றார் அதனை வருடியவாரு.

(வருவாள்)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 29

No votes so far! Be the first to rate this post.

1 thought on “உயிர் போல காப்பேன்-16”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!