2. சத்திரியனா? சாணக்கியனா?

4.9
(53)

அத்தியாயம் 2

 

அதிகாலை ஆறு மணி!

வெயிட் லிபிட்டிங் செய்து கொண்டு இருந்தான் அந்த ஆறடி ஆண்மகன்!

மஞ்சள் நிறத்தில் சூரியனுக்கு நிகராக பிரகாசமான முகம் அவனுடையது!

அவனின் சிவந்த விழிகள், அவன் இரவு முழுவதும் வேலை செய்ததற்கான தடயத்தை விட்டு சென்றாலும் அவனின் விழியின் கூர்மை மற்றும் குறையவில்லை.

துக்கம் துளைந்தால் என்ன? அவனின் மூளையின் வீரியம் என்றும் குறைந்ததில்லையே!

வெயிட் லிஃப்டை வைத்தவன் அப்படியே எழுந்து வந்து அவனின் பால்கோணியில் வந்து நின்று காற்றை சுவாசித்தான்.

தோல்வி என்பதே சந்தித்திடாதவன் தான்! ஆனால் வேதாந்த குரூப்ஸ் வந்தால் மட்டும் அவனுக்கு தோல்வி தான்!

இந்த முறை ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற முனைப்பு அவனிடம் இருந்தது. ஆனால் அவனிற்கு போதிய பயிற்சி இல்லையே!

எம்பிஏ முடித்து வந்தவனிடம் அப்படியே தொழில் நிர்வாகத்தை கவனிக்க கொடுத்து விட்டார்கள் அவனது தாயும் தந்தையும்!

கத்து குட்டி அவனும் என்ன செய்வான்!

அப்படியும் அவனே பழகி இப்போது கை தேர்ந்து விட்டான் தான்!

ஆனாலும் சத்திரியனை வெல்ல சாணக்கியனின் மூளை மட்டும் போதாது, சத்திரியனின் உழைப்பும் அனுபவமும் வேண்டுமே!

இருபத்தி ஆறு வயது ஆண்மகன் அவனும் எவ்வளவு தான் செய்வான்!

தூக்கம் துளைத்து, துவண்டு இருக்கும் அவனிற்கு அவள் ஒருத்தி மட்டும் தான் துணையாக இருக்கிறாள்.

எழுந்தவன், அவனின் கைபேசியை எடுக்க அவளின் முகம், அவனவளின் முகம் அது!

அவனின் இதழ்களுக்குள் புன்னகை!

அவளிடம் இருந்து அழைப்பும் வந்தது, சட்டென எடுத்து விட்டான்.

“நைன் திரட்டி ஷார்ப் சார்”, என்று அவளின் குரலில் சொல்லவும், அவனின் இதழ்கள் தானாக விரிய, “ஷுவர்! ஐ வில் பி ஆன் டைம்”, என்று சொல்லி வைத்து விட்டான்.

இப்போது மணி ஏழு என்று காட்டியது.

குளியறைக்குள் நுழைந்தவன், இன்று வெற்றி பெற்றே தீர வேண்டும் என்கிற வேட்கையுடன் குளிக்க, அவனின் மனத்திலும் ஆயிரம் எண்ணங்கள்.

குளித்து விட்டு வெளியே வந்தவன், எச் அண்ட் எம் சூட் அணிந்து, அவனது அர்மானி வாட்சை கையில் கொண்டு ராஜ கம்பீரத்தில் இறங்கி வந்தான்.

அவனை பார்த்த அவனின் தந்தை ஸ்ரீகாந்தின் முகம் கூட பூரித்தது.

“மை சன்! யு லுக் சோ ஹேண்ட்ஸம்”, என்று அவர் சொல்லவும், “உங்கள விட இல்ல டாட்”, என்று சொன்னவன் வந்து அவரை அணைத்து கொண்டான்.

அப்போது தான் பூஜை ரூமில் இருந்து வந்தார் அவனின் தாய் கலாவதி!

ஸ்ரீகாந்த் மற்றும் கலாவதி சேர்ந்து உருவாக்கியது தான் ஸ்ரீகலா குரூப்ஸ்!

அவர்களின் மொத்த உழைப்பையும் போட்டு உருவாக்கினார்கள்.

அவர்களின் அனைத்து எதிரிகளையும் தகர்த்து எறிந்தவர்களால் தகர்க்க முடியாத ஒரே எதிரி வேதாந்தம் குரூப்ஸ் மட்டும் தான்!

வேதாந்தம் போன பிறகு சுலபமாக சாய்த்து விடலாம் என்று தான் எண்ணினார்கள்.

ஆனால் விக்ரம் வில் வைத்து சத்திரியனாக அங்கே இருக்கும் போது, அவனை தாண்டி நெருங்க கூட முடியவில்லை.

ஸ்ரீகலா ஆரத்தி தட்டோடு வந்தவர், அவரின் அன்பு மகன் விஜய்யின் முன் நீட்ட, அவன் அதை எடுக்காமல், அவனின் தாயின் காலில் தான் விழுந்தான்.

அவனுக்கு எல்லாமே அவனின் அன்னை தான்!

“விஜய் பாவ!”, என்று அவர் சொல்ல, “கண்டிப்பா இன்னைக்கு நம்ப தான் மா ஜெயிப்போம்”, என்று அவன் சொல்லவும், “ஜெயிச்சே ஆகணும்”, என்ற ஸ்ரீகலாவின் குரலில் ஆணை இருந்தது.

“நீ மட்டும் தனியாவா மீட்டிங் போற?”, என்று ஸ்ரீகாந்த் கேட்கவும், “உங்க அன்பு மக கூட தான் போகணும், எங்க அவ?”, என்று அவன் கேட்க, இங்கே அனைவரும் தேடி கொண்டிருந்த அந்த வீட்டின் இளவரசியோ, கண்ணாடியின் முன் நின்று, “கண்ணே ஐ லவ் யு, என் காதே ஐ லவ் யு”, என்ற பாட்டிற்கு, ஆடிக்கொண்டே மேக் அப் போட்டு கொண்டு இருந்தாள்.

ஐந்தரை அடிக்கும் கொஞ்சமே கொஞ்சம் குறைந்த உயரத்தில், பல்லவன் செதுக்கிய சிற்பம் தான் அவள்!

அழகு என்றால் அப்படி ஒரு அழகு! அதை விட அவளின் குறும்பும் கேலியும் அதை விட அழகு!

யாராலும் அடக்க முடியாத தென்றல் அவள்!

அனைவரையும் அவளின் பேச்சால் இழுத்து தான் விடுவாள்.

அவளால் கவர முடியாத சிலரும் இருக்க தான் செய்கின்றனர். ஆனால் அவள் அவர்களையும் விட்டால் தானே!

மிரட்டி உருட்டி அவர்களையும் அன்பால் ஆட்டி வைக்கும் பூம்பாவை அவள்!

அவளின் கண்களுக்கு வாட்டர் ப்ரூப் மை இட்டு, அவளது வெர்ஸாச்சி பர்பியும் அடித்து கொண்டு, தன்னை ஒரு முறை பார்த்தவளுக்கு, அவள் கச்சிதமாக உடை உடுத்தி இருப்பதாய் உறுதி செய்து கொண்டு அங்கே இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து பார்த்துவிட்டு, அதற்கு முத்தம் கொடுத்து விட்டு கீழே இறங்கினாள்.

“தோ வந்துட்டா பாரு என் டால்”, என்று ஸ்ரீகாந்த் சொல்லவும், அவருக்கு புன்னகை புரிந்து விட்டு, அவளின் தாயை பார்த்தவளின் முகம் மாறியது.

ஸ்ரீகலா செய்த பெரிய தவறு, பிசினஸ் பின்னால் ஓடியவருக்கு அவரின் மகளை கவனிக்க நேரம் இல்லமால் போய் விட்டது.

அவளை வளர்த்தது என்னவோ, ஸ்ரீகலாவின் தந்தை தணிகாசலம் தான்.

தாத்தாவின் அறைவனைப்பில் வளர்ந்தவள் அவள்!

அவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன் இயற்கை ஏய்தி விட்டார்.

மறக்க முடியுமா அந்த நாளை!

“வர்ஷா, பிரேக் பாஸ்ட் முடிச்சிட்டு மீட்டிங் கிளம்பலாம்”, என்று விஜய் சொல்லவும், “கிளம்பலாம் இல்ல, நீங்க தனியா உங்க கார்ல வாங்க , நான் என் கார்ல வரேன்”, என்று விஜயின் முகம் கூட பார்க்காமல் பதில் அளித்தாள்.

“கொஞ்சமாச்சு மரியாதையை இருக்கா உனக்கு?”, என்று ஸ்ரீகலா சீற, கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல், “மரியாதையா எந்த கடைல கிடைக்கும் சொல்லுங்க அதையும் காண்ட்ராக்ட் எடுத்துக்கலாம்”, என்று எகத்தாளமாக தான் பதில் அளித்தாள்.

அவள் அடங்கி போகும் ஆட்கள் எல்லாம் மிக மிக அரிது.

“எப்படி பேசுறா பாருங்க”, என்று அவரின் கணவரை பார்க்க, அவரோ, “ஏன் மா அண்ணா கிட்ட இப்படி பேசுற?’, என்று ஸ்ரீகாந்த் அவளை கேட்கவும், “டாட் ப்ளீஸ், மரியாதை எல்லாம் கேட்டு வாங்க கூடாது, தானா கொடுக்கணும்”, என்று சொன்னவள், அவர்கள் யாரையும் பார்க்காமல் சென்று உணவு மேஜையில் அமர்ந்து கொண்டு அவள் பாட்டிற்கு சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.

விஜய்க்கு தான் கோவமாக வந்தது.

“இன்னைக்கு வேதாந்தம் குரூப்ஸ் ஜெயிக்க கூடாது”, என்று ஸ்ரீகலா மீண்டும் சொல்ல, வர்ஷாவின் காதுகளையும் அது அடைந்தது தான்.

அவளின் இதழ்களில் ஒரு எள்ளல் புன்னகை!

“விக்ரம் ஜெயிக்க மாட்டான் மா”, என்று அவன் சொல்லவும், அவரும் தலையசைத்து கொண்டார்.

அவர்கள் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே, “குட் மோர்னிங் சார்”, என்று அங்கே வந்து சேர்ந்தாள் விஜயின் பிஏ சாதனா.

இருபத்தி நான்கு வயது பதுமை அவள்! அழகானவள், குணமானவள், அதை விட திறமையானவள்.

ஸ்ரீகலாவே அவரின் மகனிற்காக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த பிஏ. கடந்த ஒரு வருட காலமாக பணி புரிகிறாள்.

“மோர்னிங் சாதனா!”, என்று வாய் நிறைய அவளுக்கு புன்னகையை பரிசாக அளித்தான் விஜய்.

“இன்னைக்கு என்ன கொண்டு வந்து இருக்க?”, என்று வர்ஷா புருவம் உயர்த்தி கேட்கவும், “மேம்?”, என்று புரியாமல் அவள் விழிக்க, “அதான் தினமும் இந்த வளந்த கெட்டவனுக்கு ஏதாச்சு கொண்டு வருவியே”, என்று அவள் சொல்லிக்கொண்டே சாப்பிட, விஜயோ வர்ஷாவை முறைக்க, அதை எல்லாம் அசைட்டை செய்து விட்டாள் வர்ஷா.

“இன்னைக்கு பாசுந்தி எடுத்து வந்திருக்கேன்… எல்லாருக்கும் தான்.. “, என்று அவள் தயங்கி சொல்லவும், “இதுல என்ன மா இருக்கு, கொடு”, என்று ஸ்ரீகாந்த் வாங்கி அனைவர்க்கும் பரிமாற, “எனக்கு வேண்டாம்”, என்று வர்ஷா மட்டும் மறுத்து விட்டாள்.

“நீயும் உட்காந்து சாப்பிடு மா”, என்று ஸ்ரீகலா சொல்லவும், “இல்ல வேண்டாம் மேம்”, என்று அவள் சொல்ல, இருந்தும் ஸ்ரீகலா விடா பிடியாக அவளை அமர வைத்து விட்டார்.

“ஹலோ எவெரிவான்”, என்ற குரலில் அவர்கள் திரும்ப, அங்கே நின்றது என்னவோ விஜயின் நெருங்கிய நண்பன் ராகவ் தான்!

அவர்களதும் பெரிய தலைக்கட்டு உள்ள குடும்பம் தான்!

கல்வி நிறுவனங்களை நடத்தி கொண்டு வருகிறார்கள். இருபத்தி ஆறு வயதில் அவன் திறம் மிக்க அனைத்தையும் நடத்தி கொண்டு இருக்கிறான்.

“என்ன டா காலைலயே! ஈவினிங் தான பார்க்கறதா பிளான்?”, என்று விஜய் கேட்கவும், “உன் மேல அவளோ பாசம் மச்சான்”, என்று சொன்னவனின் விழிகள் அங்கே சாப்பிட்டு கொண்டிருந்த காரிகையின் மேல் தான் படிந்தது.

“ராகவ் வா பா நீயும் சாப்பிடு”, என்று ஸ்ரீகலா சொல்ல, அவனும், “தோ ஆண்ட்டி”, என்று சொல்லிக்கொண்டே உணவு மேஜையை நெருங்கி விட்டான்.

அவளோ அவனை எரித்து விடும் விழிகளோடு பார்க்க, அவனோ சென்று அவளின் அருகிலேயே அமர்ந்தான்.

இதை அனைத்தையும் அவதானித்து கொண்டு இருந்தான் அந்த சாணக்கியன்.

“பிராட் என்ன பார்க்க வரனாம்”, என்று அவனின் மனதில் சொல்லிக்கொண்டாலும் அவனின் பெற்றவர்களின் முன்னால் எதுவும் சொல்ல முடியாதே!

அமைதி தான்!

அனைவரும் உண்டு முடித்து விட, “சரி அப்போ நான் கிளம்புறேன்”, என்று ராகவ் புறப்பட்டு விட, “நானும் கிளம்புறேன்”, என்று வர்ஷா அவளின் காரை உயிர் பித்தாள்.

விஜயோ சாதானவை பார்க்க, அவளும் ஆமோதிப்பாக தலை அசைக்க, விஜய்யின் காரில் இருவரும் ஏறி கொண்டு சென்றனர்.

காரில் ஏறியவுடன், “பசுந்தி செம்மயா இருந்தது”, என்று சொல்லவும், சாதனா அவனை பார்க்க, “செஞ்சவங்களுக்கு ஏதாச்சு தரணுமே”, என்று சொன்னவன், அவனின் பாக்கெட்டில் இருந்த ஒரு பாக்ஸ் கொடுக்க, அதில் ஒரு விலை உயர்ந்த வாட்ச் இருந்தது.

“சார் இதெல்லாம் வேண்டாம்”, என்று சாதனா பதட்டமாக சொல்லவும், அவளின் கையை பற்றி, “டேக் இட்” என்று கொடுக்கவும், அவளும் தலை ஆட்டி கொண்டாள்.

“இந்த ப்ராஜெக்ட் நமக்கு கிடைக்கும்ல சாதனா?”, என்று அவன் கேட்க, “சான்ஸ் ஹை சார்! ஆனா மிஸ்டர் விக்ரம்.. “, என்று அவள் இழுக்க, விஜயின் கண்கள் சிவந்தன!

“என்ன ஆனாலும், இன்னைக்கு நமக்கு தான் ப்ராஜெக்ட் கிடைக்கணும்”, என்றவனின் கைகளில் இருந்த ஸ்டெரிங்கில் பிடி இறுகியது.

அவளுக்கோ பயம் தான், இன்று என்னவாக போகிறதோ!

இங்கோ வர்ஷா காரை எடுத்து கொண்டு போகையில் அவள் ஒரு குறுக்கு வழியில் செல்ல, எதிரே ஒரு பைக் வர, அங்கோ ஒருவர் வழி விட்டால் தான் மற்றொருவர் போகும் நிலை.

அவளும் அப்படியே நின்றாள், எதிரில் இருந்தவனுக்கு அப்படியே நின்றான்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவள், காரை விட்டு இறங்கி வர, அவனும் பைக்கில் இருந்து கீழே இறங்கி நின்றான்.

கீரியும் பாம்பும் போல் இருவரும் நின்றனர்.

இங்கோ விக்ரம் அந்த ப்ராஜெக்ட் மீட்டிங் நடக்கும் இடத்தை அடைத்து விட, விஜய்யின் காரும் அதே இடத்திற்குள் நுழைந்தது!

சத்ரியனும் சாணக்கியனும் சந்தித்து கொள்ளும் சமயம், ஜெயிப்பவன் எவனோ?

அடுத்த அத்தியாயத்தில்!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 53

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “2. சத்திரியனா? சாணக்கியனா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!