உயிர் போல காப்பேன்-17

4.7
(12)

அத்தியாயம்-17
“என் விஷ்ணு. என்னை விட்டு போன என் விஷ்ணுவ நா உன்னால தான் கண்டுப்பிடிச்சேன்…”என்றார் வருத்தமாகவும். வேதனையாகவும்..
அதில் ஆஸ்வதி முகத்திலும் வருத்தம் தெரிய….”ம்ம்ம். என் பசங்களிலே எனக்கு ரொம்ப பிடிச்சது என் விஷ்ணு தான்மா அவன் என்னிக்கும் எனக்கு ஸ்பெஷல். அவன் மட்டும் தான் என்னை பத்தி புரிஞ்சவனும் கூட……அவன் அம்மாக்கு கூட ரொம்ப பிடிச்சது அவன தான்…அதுக்கு காரணமும் இருந்துச்சி..நாங்க வழி வழியா பணக்கார பேமிலி இல்ல…. கொஞ்சம் கஷ்டப்படுற குடும்பம் தான்…இது தான் என் பூர்வீகம்.. அப்போ நா இதே பேக்டரிய சின்ன அளவுல ஆரம்பிச்சி இருந்தேன். அதுக்கு என் சோமிப்பு.. என் மனைவி நகை எல்லாமே போட்டேன்.. ஆரம்பத்துல ரொம்ப சொதப்பல்.. பயங்கர இழப்பு.. பசங்களுக்கு பண்ண வேண்டியதை எல்லாம் முழுசா பண்ண முடில… அதுவர கான்வென்ட்ல படிச்சவங்கள மாத்த வேண்டிய சூழல்..ஆனா.. என் பசங்க யாரும் அத ஏத்துக்கல ரகள பண்ணுனாங்க…
“நாங்க என்ன ஏழை வீட்டு பசங்களா.. நாங்க அப்டி வளர ஆசப்படல….. நாங்க படிச்சா இங்க படிக்கிறோம் இல்லனா மாட்டோம்னு”ஒரே பிரச்சனை.எனக்கும் என் மனைவிக்கும் என்ன பண்றதுனு தெரில….. அவங்களுக்காக தானே இப்டி உழைக்கிறேன் அத இவங்க புரிஞ்சிக்க மாட்றாங்களேனு வருத்தம்..அந்த வருத்தத்துல இருக்கும் போது தான் விஷ்ணு என்னை பார்க்க ஒருநாள் பேக்டரி வந்தான்.
“அப்பா.. அண்ணனுங்க….. அக்கா. தங்கை எல்லாம் அந்த ஸ்கூலையே படிக்கட்டும். நா கவர்மென்ட் ஸ்கூல படிக்கிறேன்.அது மட்டும் இல்ல…. இனி காலையில…..ஸ்கூல் போறதுக்கு முன்னாடி.. ஸ்கூல் விட்டு வந்து சாய்ந்திரம் நானும் பேக்டரி வரேன்ப்பா…நானும் தொழில கத்துக்கிட்ட மாறியும் ஆச்சி. உங்களுக்கு உதவி பண்ணதுமாறியும் ஆச்சினு சொன்னான். அப்போ விஷ்ணுக்கு வயசு வேறும் 10 தான்.எல்லாருக்கும் ஒரு ஒரு வயசு ஜாஸ்தி அவ்ளோதான் இந்த வயசுல அவனுக்கு எப்டி இப்டி தோணுச்சினு எனக்கு ஆச்சரியம்..
“அவன அதலாம் வேண்டாம் விஷ்ணு அப்பா எப்டியாச்சும் பீஸ் கட்றேனு எவ்வளவோ சொல்லி பாத்தேன். அவன் கேட்கல……இப்டியே போச்சி.. தொழிலுல செட் ஆக எனக்கு 10 வருஷம் ஆச்சி.. அதுவர விஷ்ணு கவர்மென்ட் ஸ்கூல தான் படிச்சான்.. காலேஜும் அப்டிதான் ஆனா மத்த பசங்க எல்லாம் இந்த ஸ்கூல் தா படிப்பேன். இந்த யூனிவர்சிடில தா படிப்பேனு ஒரே ரகள…..”என்று பெருமூச்சினை விட்டவர்
“விஷ்ணு உன் ஒருத்தன் கவர்மென்ட்ல படிக்கிறதால அப்பாக்கு ஒன்னும் காசு மிச்சம் ஆக போறது இல்லனு சொல்லி பார்த்தேன்.. அட்லீஸ்ட் எனக்கு செலவு செய்றதையாவது அண்ணணுங்களுக்கு செய்லாமேனு சொல்லிட்டான்.. அப்புறம் இந்த ஃபேக்டரி சம்பந்தப்பட்ட படிப்பு தான் எடுப்பேனும் சொல்லிட்டான் அதும் எனக்காக தானு எனக்கு தெரியும்.இப்டில இருந்தவன் மேலே பாசம் வரதுலையும்,.. அவன் எனக்கு ஸ்பெஷல்னு சொல்றதுலையும் தப்பு இல்லையே படிச்சி முடிச்சோனே மத்த பையனுங்களாம் பாரின் போய் படிக்கனும்னு ஒரு போராட்டம் அனுப்புனேன் அப்போ விஷ்ணு என்னோட தான் ஃபேக்டரிய பார்த்துக்கிட்டான்.
“ இப்டி நிறைய விஷயத்துல விஷ்ணு எனக்கு தனியா தெரிஞ்சான்…அவன் முதல் முதல பேக்டரிய தலை எடுத்தப்போ. முதல் ப்ராஜக்ட் சக்ஸசா ஆனதுல அவன் பங்கு பணத்த வச்சி இந்த காப்ப எனக்கு வாங்கிக்கொடுத்தான்…”என்று அந்த காப்பினை இப்போது அவர் வாங்கிக்கொடுத்தது போல முகம் பெருமையில் பொங்க வருடிக்கொண்டிருந்தார். அதனை ஆஸ்வதியால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை..
“அப்போ அவன் பையன் ஆதி எப்டி இருப்பான் அப்டியே என் விஷ்ணுவோட கார்பன் காப்பி மாறி தான் ஆதித்தும்.. அதனாலே மத்தவங்க விட ஆதி எனக்கு ஒரு படி மேலே தான் அதுகூட இன்னும் என் பசங்களுக்கு பிடிக்கல….. இப்போ பேரன் பேத்திங்களும் சேர்ந்துட்டாங்க… ஆதிய பார்த்தாலே அவங்க முகத்துல வெறுப்ப பார்த்தேன்..
“அதா ஆதித்த இங்க காலேஜ் முடிச்சி பாரின் அனுப்பிட்டேன்.. இது விஷ்ணுக்கு பிடிக்கல….. அவன் என் கூடவே இருக்கட்டும்னு கெஞ்சினான். ஆனா ஆதி மேல இவங்க வைச்சிருந்த வெறுப்ப பார்த்து நா பயந்துட்டேன்.. அந்த நேரத்துல் ஆதித்துக்கும் மேலே பாரின்ல படிக்க ஆசை.அவனும் என் பேச்ச கேட்டுட்டு பாரின் போய்ட்டான். அப்புறம் தான் பல துக்கமான சம்பவம் நடந்துச்சி. அதுல ஒன்னு.என் விஷ்ணு.”என்றார் கண்கள் கலங்கி.
அவர் சொன்னதை அதுவரை கேட்டுக்கொண்டு இருந்த ஆஸ்வதிக்கு ஆதிக்கு ஆபத்து என்பது மட்டும் மனதில் பதிந்து போனது.. கண் கலங்கும் தாத்தாவை பார்த்து ஆஸ்வதியும் கலங்க….இதை எல்லாம் வெளியில் நின்றுக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு ஜோடி கண்களும் கண்கள் சிவக்க வெறியுடன் மனதில் உறுமிக்கொண்டிருந்தது..
“ம்ம்ம்ம்ம்.. என்று பெரும்மூச்சினை சிந்திய தாத்தா…உன்ன பார்த்ததும் உன் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிது.. நீ என் ஆதிக்கு நல்ல பொருத்தம்னு தோணிச்சி. ஆதிய பழைய நிலைக்கு நீ கொண்டு வருவனு தோணிச்சி..இதுலா விட உனக்கு பணத்து மேல சொட்டு கூட ஆசை இல்லனு தெரிஞ்சிக்கிட்டேன் அது என் காப்ப எடுத்துக்கொடுத்தோணே புரிஞ்சிட்டு.. இது மட்டும் அன்னின்னி தொலைஞ்சி போய் இருந்தா விஷ்ணு என்னவிட்டு ஒரடியா போய்ட்டானு இடிஞ்சி போய் இருப்பேன்.. அவன் போனதும் இத வச்சிதான் அவன எனக்கு பக்கத்துல உணர்ந்துட்டு இருக்கேன்..இத மீட்டுக்கொடுத்த உன்ன என்னால விடமுடில அதான் உன்ன பத்தி விசாரிச்சென்..
“உன் சித்தி பத்தி தெரிஞ்சதும் தான் உன் கஷ்டமான வாழ்க்கை எனக்கு புரிஞ்சிது.. அப்புறம் உன் தாத்தா. எனக்கு பள்ளி கால தோழன்.. இதுவே உன் கல்யாணத்த கேள்விப்பட்டு உன் தாத்தா என்ட இந்த கல்யாணத்த நிறுத்துங்கனு கோவப்பட்டு பேச வரும்போது தான் எனக்கும் தெரிஞ்சிது அப்புறம் அவன்ட நா ஆதி பத்தி..விஷ்ணு பத்தி என் பிரச்சனை இப்டி எல்லாத்தையும் சொன்னதும் அவனும் ஒத்துக்கிட்டான்.”என்றார் சோர்ந்து போய் சேரில் சாய்ந்தவாறு.
ஆஸ்வதிக்கு அவரை பார்க்க பாவமாக தான் இருந்தது அவரும் இந்த வயதில் எவ்வளவு போராட்டத்தை தாண்டி வருகிறார் என்று அவரை கண்களில் கனியுடன் காண…
“ம்ம்ம்,. நீ நினைக்கலாமா இதலா ஏன் இப்போ நம்மகிட்ட சொல்றாருனு உன் தாத்தா மேலே எந்த தப்பும் இல்ல….. அவருகிட்ட நீ பேசாம மட்டும் இருந்துடாத டா…”என்க…..
“அய்யோ தாத்தா அப்டிலா அவர் மேலே எனக்கு எந்த கோவமும் இல்ல தாத்தா..”என்றாள் அதிர்வுடன்..
“இன்னிக்கி காலையில உனக்கு அவன் போன் பண்ணுனானாம் ஆனா நீ எடுக்கலனு கவலையில எனக்கு பண்ணி புலம்புனான்.”என்றார் தாத்தா.
அதை கேட்டு ஆஸ்வதி தன் தலையில் தட்டிக்கொண்டு…”ம்ச். சாரி தாத்தா இந்த கல்யாணம் அவசரமா நடந்துச்சா நானும் மறந்துட்டு போன வீட்லையே வச்சிட்டு வந்துட்டேன்…இங்க வந்ததுல இருந்து அதை மறந்துட்டேன்,. தாத்தாட்ட பேசுறதையும்…”என்றாள் வருத்தத்துடன்
“அதுக்கு என்னடா இந்தா என் போன் உன் தாத்தாட்ட பேசு ஈவ்னிங் ஆதியோட வெளில போய் நல்ல போனா ஒன்னு வாங்கிக்கோ…”என்றார் தன் போனை நீட்டியவாறு.
அதை வாங்கி தன் தாத்தாவிற்கு அழைக்க….அவர் எடுத்ததும் ”தாத்தா…”என்றாள் உருகிய குரலில்
அதில் இவ்வளவு நேரம் இருந்த கலக்கம் மறைய ஆஸ்வதியின் தாத்தாவும் “மா. ஆஸி.எப்டிடா இருக்க…..”என்றார்
அதில் கண்கலங்க……”நா நல்லா இருக்கேன் தாத்தா. நீங்க எப்டி இருக்கீங்க….. என்ன பத்தி கவலப்படாதீங்க….. எனக்கு இங்க தாத்தா ஆதினு எல்லாரும் இருக்காங்க….”என்க
அதில் அவளுக்கு எதிரில் உட்கார்ந்திருந்த பெரியவரின் மனம் நெகிழ்ந்து போனது
“சரிடாமா.. தாத்தா மேலே கோவம் இல்லையே.”என்றார்
“ம்ச். தாத்தா நீங்க என்ன பண்ணுனாலும் என் நல்லதுக்கு தானே பண்ணுவீங்க….இதுல நா கோச்சிக்க என்ன இருக்கு..”என்றாள் அதில் பூரித்து போனவர். கொஞ்ச நேரம் இருவரும் பேச…. பின் போனை வைத்த ஆஸ்வதியின் முகம் தெளிவாக இருந்தது…அதை பார்த்த பெரியவர் முகம் சற்று நிம்மதியானது..
“அய்யோ தாத்தா மணி ஆச்சி வாங்க சாப்ட போலாம்..”என்றாள் ஆஸ்வதிக்கு
“இருமா இன்னும் சில விஷயம் இருக்கு..”என்றார்
“சாப்டு வந்து பேசலாம் தாத்தா. டேப்ளட் வேற போடனுமே..”என்றாள் கட்டளையுடன்
அதில் புன்னகைத்தவர்..முகம் சற்றேன்று இறுகிப்போனது அதை கவனித்த ஆஸ்வதி முகம் கேள்வியாக அவரை காண….
“மா ஆஸ்வதி நா சொல்றத நல்லா கேளு. இந்த வீட்ல யாரையும் நம்பாத… என்னையும். விதுனையும். அனியையும் தவிர வேற யாரும் இங்க ஆதியையும் உன்னையும் நல்லா இருக்கனும்னு நினைக்க மாட்டாங்க….. ஆதிக்கும் உனக்கும் எதோ இங்க சரி இல்ல……அத என்னால உணரதான் முடிது ஆனா என்னால அது என்னனு தெரிஞ்சிக்க முடில… இங்க யாரும் சரி இல்ல….. அது யாரா இருந்தாலும் சரி நீதான் ஆதியையும். அனியையும் அதுல இருந்து காப்பாத்தனும்.”என்றார் கண்கலங்க
அதில் தடுமாறிய ஆஸ்வதிக்கும் இங்கு எதோ நடப்பது போல தான் இருந்தது…எதோ மறைவாக….யாரோ தங்களை பார்த்துக்கொண்டிருப்பது போல இங்கு வந்ததில் இருந்து ஆஸ்வதிக்கு தோன்றும். ஆனால் இப்போது தாத்தா சொல்வதை கேட்கும் போது ஆஸ்வதிக்கு மனதில் பயமொன்று எழுந்தது.. தன்னவனுக்கு எதோ என்று தோன்ற….தாத்தா தன் முகத்தையே பார்ப்பது புரிந்து சரி என்று தலை ஆட்டினாள்.. அதில் தாத்தா முகம் கொஞ்சம் நிம்மதியுற…
“சரிமா வா நம்ம போலாம். ஆதி எழுந்திருப்பான்..”என்று அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வர…. அப்போது தான் மதியம் சாப்பிட அனைவரும் டைனிங் ஹாலில் உட்கார்ந்திருந்தனர். பெரியவர் வருவதை பார்த்த அனைவரும் ஆஸ்வதியும் அவர் பின்னால் வருவதை பார்த்து பற்களை கடித்தனர் கோவமாக…..
“மா. போய் ஆதிய கூப்டு வா…”என்றார் அவளை கனியுடன் பார்த்து அவளும் சரி என்று தலை ஆட்டிவிட்டு தன் அறைக்கு செல்ல….. இங்கு அனைவரும் தாத்தாவை முறைத்தனர்.
“என்னப்பா இது.. அவள எதுக்கு ஆபிஸ் ரூம்குள்ள கூப்டிங்க…. அங்க நம்ம பேக்டரியோட முக்கியமான அக்கவுன்ட் டீடைல்ஸ்லா இருக்குப்பா.”என்றான் பரத்
“ஆமாப்பா.. நம்ம ப்ராப்பர்ட்டி சம்பந்தப்பட்ட டாக்குமென்ட் கூட அங்க தா இருக்கு.. இவள போய் உள்ள விட்ருக்கிங்க….. நாளைக்கே எதாவது இவ தூக்கிட்டு போய்ட்டானா என்ன பண்றது..”என்றான் அஜய்
“அதானே…ப்பா. உங்களுக்கு யார உள்ள விடனும்னு கொஞ்சம் கூட யோச்சிக்க தோணலப்பா.. அவ யாரு அவ குடும்பம் என்னனு கூட தெரியாம அவள இந்த வீட்டு மருமகளாக்குனீங்க….. இப்போ அவள ஆபிஸ் ரூம் வர கொண்டு போய்டீங்க… அடுத்து எந்த சொத்த அவளுக்கு எழுத போறீங்க…..”என்று அபூர்வா கத்த…..
அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் அவர்களை கூர்மையாக பார்த்தாறே தவிர எதும் பேசவில்லை அதிலே அனைவரும் அவரை எரிச்சலுடன் பார்க்க…. அவர் அதை எல்லாம் தூசு தட்டுவது போல் ஒரு திமிர் பார்வை பார்த்தார்
அங்கு ஆஸ்வதி தன் அறைக்கு சென்று கட்டிலை காண அங்கு ஆதி இல்லை..”ஆதி எங்க இருக்கீங்க….”என்று அவனை கூப்பிட… அவன் இருப்பதற்கான அடையாளமே இல்லை. ஆஸ்வதி குழப்பத்துடன் சுற்றி முற்றி பார்த்து பாத்ரூம் கதவை தட்டிப்பார்க்க அது திறந்துக்கொண்டது.. உடனே ஆஸ்வதி மனதில் பயம் வர……”ஆதி “என்றாள் சத்தமாக….

(வருவாள்..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!