“நான் இடியட்னா நீங்களும் இடியட் தான்”, என்று ஆத்விக் அவரின் முன் மல்லுக்கு நிற்க, அவருக்கு தெரியாத அவரின் மகள் பெற்ற செல்வதை பற்றி, அப்படியே வாகினியின் தைரியமும், விக்ரமின் திமிரும் நிரம்பி இருக்கிறானே!
“இப்படி தான் பெரியவங்க கிட்ட பேச உங்க அம்மா சொல்லி கொடுத்து இருக்காங்களா?”, என்று கலா அவனின் உயரத்திற்கு அமர்ந்து விட்டார்.
என்ன இருந்தாலும் அவரின் முதல் பேரன் அவன் தானே!
“நான் ஒன்னும் உங்கள தப்பா பேசலையே! என்ன இடியட்னு சொன்னிங்க அதான் நீங்க யாருனு கேட்டேன்! இதுல என்ன இருக்கு… நான் பார்க்காம வந்து இடிச்சதுக்கு சாரி.. ஆனா நீங்களும் பார்கலேயே உங்க மேலயும் மிஸ்டேக் இருக்கு”, என்று கையை கட்டி கொண்டு அவன் பேசுகையில், அப்படியே அவருக்கு நான்கு வயது வாகினி தான் நினைவிற்கு வந்தாள்.
இதே போல் தான் அவளும் அவரிடம் சிறுவயதில் வாதாடுவாள்.
ஆத்விக்கின் குண்டு கன்னத்தை அவர் கிள்ளி முத்தம் கொடுக்க, “நான் யாருனு தெரியுமா?”, என்று அவர் கேட்கவும், “தெரியுமே! வர்ஷு அம்மா”, என்று அவன் சொல்லவும், அவரின் உள்ளத்தில் ஆயிரம் ஈட்டிகள் பாய்ந்த வலி.
பாட்டி அல்லது அம்மம்மா என்று கூறாமல், வர்ஷாவின் அம்மா என்றல்லவா கூறுகிறான்.
“இன்னும் நீங்க சாரி சொல்லல”, என்று அவன் சொல்லவும், நிகழ் காலத்திற்கு வந்தவர், “சாரி கண்ணா”, என்று அவனது கன்னத்தில் தட்ட போக, “ஆத்விக்”, என்று பின்னால் இருந்து அழைத்து இருந்தால் வாகினி.
“அம்மா”, என்று அவளிடம் சென்றவன், “தெரியாதவங்க கிட்ட பேச கூடாதுனு சொல்லிருக்கேன்ல”, என்று அவள் சொல்லவும், கலாவின் மனது இன்னும் பிசைந்தது.
“அம்மா அவங்க வர்ஷு அம்மா தானே”, என்று அவன் சொல்லவும், “இருந்தாலும் உங்கிட்ட இதான முதல் தடவ பேசுறாங்க… வர்ஷா இருந்தா வேணா பேசு… தனியா எல்லாம் வேண்டாம்… போ போய் விக்ரம் இல்ல வர்ஷா கூட இரு”, என்று சொல்லவும், அவனும் தலையசைத்து விட்டு சென்று விட்டான்.
வாகினியோ கலாவிடம் வந்தவள், “அவன் மனசுலயும் நஞ்ச விதைக்கணுமா? அதான் ஆல்ரெடி ஒருத்தன் மனசு நிறைய நஞ்ச மட்டுமே விதைச்சி இருக்கீங்களே அது பத்தாதா?”, என்று அவள் சிரித்து கொண்டே சீற, அதே நேரம் அங்கு வந்தார் ஸ்ரீதர்.
“என்ன மா ஆச்சு வாகினி?”, என்று அவர் கேட்கவும், “உங்க வைப் கிட்ட சொல்லிவைங்க அங்கிள், அவங்க எங்க குடும்பத்தை நெருங்காம இருக்குற வரைக்கும் தான் நாங்களும் அமைதியா இருப்போம்… இல்லனா…”, என்று அவள் பார்த்த பார்வையிலேயே அவருக்கு புரிந்தது.
“நீ போ மா வாகினி நான் பார்த்துக்கறேன்”, என்று அவர் சொன்னதும், அவளும் நகர்ந்து விட்டாள்.
“என்ன ஆச்சு கலா?”, என்று ஸ்ரீதர் கேட்கவும், “பாருங்க… எப்படி பேசிட்டு போறா… நான் ஆத்விக் கிட்ட பேசுனது தான் இவளுக்கு குத்தமா தெரியுது”, என்றவரின் கண்கள் கூட கலங்கி விட்டது.
“அட விடு கலா, ஆத்விக்கை நான் வேணா நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்றேன்”, என்று ஸ்ரீதர் சொன்னவுடன், கலாவின் முகம் பிரகாசமானது.
“உண்மையாவா சொல்றிங்க?”, என்று பூரிப்புடன் அவர் கேட்க, “நானே வாகினி கிட்ட பேசி வர்ஷாவை அழைச்சிட்டு வர சொல்றேன் போதுமா?”, என்றவரிடம் குழந்தையை போல் தலையசைத்து கொண்டார்.
இதே சமயம் ஆத்விக் வர்ஷா மற்றும் பிரணவ் இருக்கும் இடம் வந்து சேர, “மாமா எங்க?”, என்று கேட்கவும், “வருவாரு டா… இந்தா”, என்று அவனின் வாயில் ஒரு கோபி மஞ்சுரியனை திணித்து இருந்தாள் வர்ஷா.
சான்வி வாஷ் ரூம் சென்று விட்டு வெளியே வரும் சமயம், அவளை கையை பிடித்து ஒரு அறையில் அடைத்து இருந்தான் அவளின் சத்திரியன்.
“விடுங்க”, என்று அவனின் கையை உதற, “என்ன டி?”, என்று இரு கைகளையும் சுவற்றில் ஊன்றி அவளுக்கு கடிவாளம் போட்டு இருந்தான்.
“என்ன பார்த்தா உங்களுக்கு டெவில் மாறி இருக்கா?”, என்று அவள் கோவமாக கேட்கவும், “ஆமா டி நீ டெவில் தான், என் மனசுல எவளோ கேட்ட விஷயம்லாம் யோசிக்க வெக்குற”, என்றவன் அவளின் இதழை சிறை செய்ய நெருங்க, அவளோ அவளின் கையை வைத்து தடுத்து விட்டாள்.
அவனுக்கோ கடுப்பாக இருந்தது.
“என்ன டி ஒரே கலர்ல டிரஸ்லாம் பன்னிட்டு வர சொல்லிட்டு இப்படி ஒரு கிஸ் கூட பண்ண விட மாற்ற?”, என்று அவன் பேசவும், “ஆத்விக் உங்களால தான் ரொம்ப கெட்டு போறான்”, என்று அவள் சொல்லவும், “உன்னால தான் நான் கெட்டு போறேன்! எவளோ நல்ல பிள்ளையா இருந்தேன் என்ன எப்படி மாத்தி வச்சிருக்க பாரு”, என்றவுடன், அவனை மேல் இருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தாள்.
“ஆமா ஆமா ரொம்ப நல்ல பிள்ளை, அப்படியே கை வச்சா கூட கடிக்க தெரியாது… கொஞ்சம் விட்டா எனக்கு பிள்ளை கொடுப்பிங்க”, என்றவளை பார்த்து, “நீ தான் அதுக்கு விட மாட்டெங்குறியே”, என்று அவளின் இதழை பார்த்து கொண்டே கூறினான்.
“கல்யாணம் பண்ணிக்கலாம் விக்ரம்”, என்று அவள் அவனின் டையை பிடித்து இழுக்க, “எனக்கு ஓகே தான்… வரியா இப்பவே உன் அப்பா ஜெய் ஷங்கர் கிட்ட பேசலாம்”, என்று அவளின் கையை பற்றவும், அவள் தான் பதறி விட்டாள்.
“என் அப்பா கொன்னு போட்டுடுவார்”, என்று அவள் கையை விடுவிக்க, “இப்போ சொல்லு, அப்போ எப்படி கல்யாணம் பண்றது? ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா?”, என்று கண்சிமிட்டவும், அவளோ முகத்தை தாழ்த்தி கொண்டாள்.
“நீயும் பேச மாற்ற என்னையும் பேச விட மாற்ற… இப்படியே பயந்துட்டு இருக்க போறியா சான்வி?”, என்று அவன் கோவமாக கேட்கவும், “ஹலோ… எனக்கு ஒன்னும் பயம் இல்ல… பதினாறு வயசுலயே உங்களுக்கு கிஸ் கொடுத்தவ நான் நினைவு இருக்கட்டும்”, என்று சொல்லவும், அவனோ குரலை செருமி கொண்டான்.
“அன்னைக்கு என்ன ஏமாத்தி என் பாரஸ்ட் கிஸ் ஆட்டைய போட்டுட்டே”, என்று அவன் சொல்லவும், “இல்லனா நீங்க கடைசி வரைக்கும் முனிவரா இருந்து இருப்பிங்க மிஸ்டர் விக்ரம சத்திரியன்”, என்று அவள் சொல்லவும், “மேடம், இப்பவும் என் பின்னாடி பொண்ணுங்க பட்டாளம் இருக்கு நினைவு இருக்கட்டும்”, என்றவனை பார்த்து அவள் உதட்டை சுழிக்க, அவனோ சுழித்த உதட்டை தன் வசம் ஆக்கினான்.
முதலில் திமிறினாள், பின்பு அடங்கினாள்.
நீண்டு கொண்டே சென்றது அவர்களின் முத்தம்.
அவளால் ஒரு கட்டத்தில் மூச்சு விட முடியாமல் போக, அதை உணர்ந்தவன் அவளை விடுவிக்கும் சமயம், அவளின் கைபேசி அலறியது.
அவளின் தந்தை தான் அழைத்து இருந்தார்.
“அப்பா”, என்று அதை எடுக்க, அவளால் அடுத்த வார்த்தை பேச முடியவில்லை.
கள்ளன் அவன் அவளின் கழுத்து வளைவில் புகுந்து கொண்டான்.
அவளுக்கோ மூச்சு முட்டியது. அவனின் சின்ன சின்ன முத்தங்கள் அவளை சிலிர்த்து எழ செய்ய, அடுத்த முனையில் இருந்த ஜெய் சங்கரோ, “சான்வி எங்க இருக்க?”, என்று கேட்கவும், “அது.. அப்பா… வாஷ்… ரூம்… வந்தேன்”, என்று திக்கி திணறி அவள் பேசவும், “ஏன் இப்படி பேசுற?”, என்று அவர் கேட்கவும், “ஒன்னும் இல்ல ப்பா வந்துகிட்டு இருக்கேன்”, என்று கஷ்டப்பட்டு மிக கஷ்டப்பட்டு ஒரு வாக்கியத்தை சேர்த்து பேசிவிட்டாள்.
சட்டென அழைப்பை அவள் துண்டிக்கவும், அவனும் அவளின் கழுத்து வளைவில் இருந்து எழுந்து விட்டான்.
“உங்கள…”, என்று அவள் இழுக்கவும், “என்ன… என்ன டி?”, என்று அவன் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்கவும், அவள் தான் பதில் சொல்ல முடியாமல் தவித்து நின்றாள்.
“கிளம்புறேன்”, என்று சொல்லவும், “சரி”, என்றவன் மேலும் அவளின் இடையை இழுத்து பிடிக்க, “போகணும் விக்ரம்”, என்று அவள் சினுங்க, “போ “, என்றவனின் வாய் சொன்னதே தவிர கை விட்டால் தானே!
ஒரு கட்டத்தில் அவளை மேலும் சீண்ட விரும்பாதவன், “போ”, என்று விட்டுவிட, அவளும் அவனின் கன்னத்தில் இதழ் பதித்து சென்று விட்டாள்.
அவனும் வெளியே வர, அங்கே அவனுக்காக கைகளை கட்டி கொண்டு காத்து இருந்தனர் வர்ஷா, பிரணவ் மற்றும் ஆத்விக்.
“சார் இவளோ நேரம் எங்க போனீங்க?”, என்று பிரணவ் கேட்க, “கன்னம்லாம் சிவந்து இருக்கு”, என்று வர்ஷா சொல்லவும், “டெவில் ஏன் நீங்க இருந்த ரூம்ல இருந்து வரா?”, என்று ஆத்விக் கேட்கவும், “என்ன எல்லாரும் சேர்ந்து இன்வஸ்டிகேஷன் பண்றிங்களா?”, என்று விக்ரம் அவர்களை பார்த்து மறுகேள்வி கேட்டான்.
“கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல?”, என்று பிரணவ் அங்கேயே நிற்க, “டேய் போலீஸ்… ரொம்ப போலீசா இருக்காத டா”, என்றவன் ஆத்விக்கை பார்த்து, “டெவில்க்கு பனிஷ்மென்ட் கொடுத்து இருந்தேன்”, என்றான்.
“என்ன பனிஷ்மென்ட்?”, என்று அவன் கேட்கவும், வர்ஷா மற்றும் பிரணவ் சிரித்து விட்டனர்.
“இவன் ஒருத்தன் அவங்க அம்மாக்கு தப்பாம பொறந்து இருக்கான்”, என்று நினைத்து கொண்டே, “அது வெளியே சொல்ல கூடாது ஆத்விக்… வா நம்ப போய் போட்டோ எடுக்கலாம்”, என்று அவனின் எண்ணத்தை மாற்றி விட்டு அங்கிருந்து அழைத்து சென்று விட்டான்.
அனைவரும் ரிசெப்ஷன் ஹாலிற்கு வரும் சமயம், “ஒரே கலர் டிரஸ் பாரேன்”, என்று வர்ஷா பிரணவின் காதுகளில் சொல்ல, அப்போது தான் அவன் சான்வியும் விக்ரமும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து கொண்டிருப்பதை பார்த்தான்.
“இப்போ தான் டி நோட்டீஸ் பண்றேன்”, என்று அவன் சொல்லவும், “சீக்கிரம் கல்யாணம் ஆனா நல்லா இருக்கும்”, என்று வர்ஷா சொல்லவும், “எனக்கும் விக்ரம் வயசு தான்… எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு என்னைக்காச்சு சொல்றியா?” என்று அவன் அவளை பார்க்க, “ஒரு பொண்ணு வாழ்க்கையை ஏன் கெடுக்கணும்?”, என்றவுடன் அவளை முறைத்தான் பிரணவ்.
“விடு விடு உனக்கும் ஒரு ராக்ஸஸி கிடைக்காமலா போய்டுவா”, என்று வர்ஷா சொல்லவும், “அதான் முன்னாடியே இருக்காளே”, என்று வாய்க்குள் முனங்கி கொண்டான்.
இதே சமயம் ரிசெப்ஷன் ஹாலிற்குள் வந்தார்கள் விஜய், காலாவதி மற்றும் ஸ்ரீதர்.
“சரி நான் போறேன்”, என்று வர்ஷா நகர்ந்து விட்டாள்.
இப்பொழுது குடும்பங்களாக மணமக்களை வாழ்த்த வேண்டுமே, வர்ஷா இவர்களுடன் இருந்தால் கலா இன்னும் பிரச்சனை செய்வார் என்று வர்ஷாவிற்கு தெரியும்.
ஆதலால் தான் அவளே சென்று விட்டாள்.
முதலில் வேதாந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மேலே ஏறி வாழ்த்த, அழகான புகை படம் எடுக்க பட்டது.
மிஸ்டர் கவின், வேதாந்தத்தை பார்த்து, “சீக்கிரம் விக்ரமுக்கு பாருங்க”, என்று சொல்லவும், “கண்டிப்பா, உங்களுக்கும் யாராச்சு பொண்ணு தெரிஞ்சா சொல்லுங்க”, என்று சொல்லவும், “அது என்ன யாராச்சு பொண்ணு என் பொண்ணே இருக்கா”, என்று சொன்னதும் விக்ரமின் முகம் மாறி விட்டது.
வாகினி விக்ரமை பார்க்க, அவன் எதுவும் சொல்லவில்லை.
இந்த செய்தி அடுத்து நின்று இருந்த சான்வியின் காதுகளையும் அடைய, அவளோ கண்ணீரை உள்ளிழுத்து கொண்டாள்.
அடுத்து ஜெய் ஷங்கர் சென்று வாழ்த்தி விட்டு வர, ஸ்ரீதர் குடும்பமும் வாழ்த்தி விட்டு வந்தனர்.
சாப்பிட செல்லும் முன் அவர்கள் கை அலம்ப செல்லும் சமயம், விக்ரமின் முன் வந்து நின்றான் விஜய்.