தான் கீழே விழப் போகின்றோம் என்ற அதிர்ச்சியில் விழிகளை இறுக மூடிக் கொண்டு விழ இருந்தவள் தன்னை யாரோ விழ விடாமல் தாங்கிப் பிடித்து இருப்பதை உணர்ந்துக் கொண்டவள் சட்டென விழிகளைத் திறந்து பார்த்தாள். அங்கோ, அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் விபீஷன். இருவரின் விழிகளும் ஒருங்கே உரசிக் கொள்ள… அவனின் ஊடுருவும் பார்வையில் சட்டென தன்னை நிதானித்து அவனது அணைப்பில் இருந்து விலகியவள் திரும்பியும் பாராது படிகளில் இறங்கி வேகமாகச் சென்று இருந்தாள்.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே ஷர்ட்டின் கையை மடித்து விட்டுக் கொண்டே அதிர்ந்து போய் நின்று இருந்தவன் முன் வந்து நின்று குரலை செருமினான்.
விழிகளை மூடித் திறந்த ஜெய் ஆனந்த்தோ பால்கனி கட்டில் சாய்ந்து நின்ற படி அவனைக் கேள்வியாகப் பார்க்க…
“என்கிட்ட அப்பாவை மன்னிப்பு கேட்க சொன்னது நீ தானே” என அவனது நேரடி கேள்வியில் “அவரை எதுக்காக நான் மன்னிப்பு கேட்க சொல்லனும்? அக்ச்சுவலி அப்பா மன்னிப்பு கேட்பார்னு நானே எதிர் பார்க்கல விபீஷன்” என்றான்.
“ம்ம்” என்று சொன்னவன் தன் பேச்சு முடிந்தது என்பதைப் போல திரும்பி சென்றவனிடம் “என்னோட ரூம் யூஸ் பண்ணியா?” என்ற அவனது கேள்வியில் சற்றே திகைத்தாலும் “அண்ணாவோட ரூம் தம்பி யூஸ் பண்ணக் கூடாதுனு ரூல்ஸ் இருக்கா என்ன?” என்று ஓர் வன்மப் புன்னகையுடன் இரு பொருள் பட அவன் கேட்க….
விபீஷன் திரும்பி நின்றிருந்ததால் அவனது முகம் காட்டும் உணர்வுகளை பின்னால் நின்று இருந்த ஜெய் ஆனந்த் கவனித்து இருந்தால் அவனது வன்மப் புன்னகை புரிந்து இருக்குமோ என்னவோ விதியின் செயலை யாரால் மாற்ற முடியும்?
ஜெய் ஆனந்த்தின் பதிலில் திருப்தியாகப் புன்னகைத்தவன் “தேங்க்ஸ்” என்று திரும்பி பாராமலேயே சொன்னவன் அங்கிருந்து நகர்ந்து விட… போகும் அவனை பார்த்துக் கொண்டு இருந்தவன் இதழ்களோ “நான் என்னடா பண்ணேன் வை ஆர் யூ அவோய்டிங் மீ” என்றுக் கேட்டுக் கொண்டவன் வானத்தை வெறித்த படி நின்று இருந்தான்.
மூச்சு வாங்க கீழே ஓடி வந்த ஆஹித்யாவை பார்த்த வித்யா “ஒரு காஃபி கொடுக்க இவ்வளவு நேரமா? என்றபடி தலையில் தட்டிக் கொண்டவர் அண்ணி நாங்க கிளம்புறோம். அண்ணா வந்த பிறகு சொல்லிடுங்க” என்றவர் இருவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட…..
வானத்தை வெறித்துக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்று இருந்தவனை என்றும் ஈர்க்கும் அதே குரல் கீழே கேட்க… சட்டென குரல் வந்த திசையை பார்த்தவன் இதழ்களோ புன்னகையை தத்தெடுத்து இருந்தன. இங்கோ, அறையியை ஒட்டிய பால்கனியில் நின்ற விபீஷனின் கைகளில் ஜெய் ஆனந்த்தின் அறையின் லாக்கரில் இருந்து எடுத்த சில காதல் கவிதைகள் எழுதப்பட்டு இருந்த கடிதங்களை வெறித்துக் கொண்டு இருந்தவன் இதழ்களோ “தியா இஸ் மைன்” எனச் உச்சரித்த அதே கணம் அவனின் கரம் கொடுத்த அழுத்தத்தில் அவனின் கரத்தில் இருந்த அக் காகிதங்கள் கசங்கி விட்டு இருந்தன.
வீட்டிற்கு வந்த பவ்யா நேரே சென்றது என்னவோ அவளின் அறைக்குத் தான். உள்ளே நுழைந்து கதவை தாழிட்டு கொண்டவள் இதயம் ஏனோ படு வேகமாகத் துடித்துக் கொண்டு இருந்தது.
ஆம், துடிக்காதா பின்ன? இவ்வளவு நாளும் மௌனமாக ரசித்து அவன் மேல் காதல் கொண்டு இருந்தவள் மனம் அவனின் தலையில் கட்டைக் கண்டதும் இதயம் பதறியது என்னவோ உண்மை தான். அதுவும் இன்று தான் முதல் முறை அவனை எதிர்த்து பேசி இருக்கின்றாள் அதுவும் தமக்கைக்காக… தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது. அவனைக் கண்டாலே பயத்தில் இதயம் படபடக்க பேசத் தயங்குபவள் இன்று தான் வாயை திறந்து இருக்கின்றாள் அனைத்தையும் நினைத்து ஓர் பெரு மூச்சுடன் “சீக்கிரம் என்னோட காதலை சொல்வேன் என் ரௌடி மச்சான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் அறியவில்லை அவளின் உயிர்ப்பையே மொத்தமாக அவனால் தொலைக்கப் போகின்றாள் என…
அதனைத் தொடர்ந்து அன்றைய நாள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலையுடன் கழிய… அடுத்த நாள் காலையிலயே புதிதாகக் நிர்மாணித்த தனது மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்று இருந்தான் ஜெய் ஆனந்த்.
அவன் மருத்துவமனைக்கு வந்த சிலமணி நேரத்திலேயே வைத்தியர்களுக்கும் தாதியர்களுக்கும் மீட்டிங் ஒன்றினை ஏற்பாடு செய்திருக்க… அவ் விசாலமான மீட்டிங் அறையினுள் ஆளை அசத்தும் கம்பீரமான தோற்றத்துடனும் மேலும் அவனது ஆளுமையும் சேர்ந்துக் கொள்ள தனது காந்தக் குரலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தான் அவன். மெல்லிய புன்னகையுடன் அனைவரையும் கூர்ந்து நோக்கியவன் “வெல் கம் ஆல்” என்ற அவனது ஆண்மை ததும்பும் குரலில் அனைவரின் முகத்திலும் ஒரு கணம் புன்னகை வந்து போக எழுந்து நின்றவர்களை தனது கை அசைவினாலேயே அமரச் சொல்லியவன் தனது இருக்கைக்கு நேரே செல்லாது அவர்களுடன் சென்று அமர்ந்துக் கொண்டான்.
தங்களுடன் வந்து அமர்ந்து கொண்டவனை அனைவரும் அதிர்ச்சியாகப் பார்க்க… “என்ன இப்படி பார்த்திட்டு இருக்கீங்க நானும் மனுஷன் தானே” என்று புன்னகையுடன் சொல்ல….
“சார்” என்ற சிலரின் அழைப்பில் “ஃபர்ஸ்ட் ஆப் ஆல் ஷாக் அஹ் குறைங்க நானும் உங்களை போல சாதாரண டாக்டர் தான் எனத் தோள்களை குலுக்கி சொன்னவன் ஃபார்ஷியலிடி வேண்டாமே என்றான். மேலும் தொடர்ந்தவன் நிறைய பேசி உங்களை எல்லாம் தூங்க வைக்க ஐம் நாட் இன்டரெஸ்டட் என்று சொன்னவன் இது என்னோட சின்ன வயசு கனவு என ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து விட்டுக் கொண்டே சொன்னவன் சோ எந்த இடத்திலும் தப்பு நடக்காமல் பார்த்துக்க வேண்டியது நம்மளோட ரெஸ்பொன்சிபிலிடி என்றவன் தொடர்ந்து இது என்னோட ஹாஸ்பிடல் மட்டும் கிடையாது என்றவனை புரியாது பார்த்தவர்களை நோக்கி உங்களோடதும் கூட” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “எக்ஸ்கியுஸ் மீ மே ஐ கம் இன்?” என அனுமதி கேட்டு ஒருவன் நிற்க….
“கம் இன் நவீன்” என்று கூட்டத்தில் இருந்து சத்தம் வர, அங்கு பார்வையை செலுத்தியவனுக்கு அனைவரின் நடுவிலும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த ஜெய் ஆனந்த்தைக் கண்டதும் மென் புன்னகை தவிழ உள்ளே வந்தவனை “திஸ் இஸ் மை ப்ரெண்ட் நவீன்” என்று அறிமுகப் படுத்தியவன் விழிகளால் அவனை அமரச் சொல்ல… “தேங்க்ஸ்” என்ற நவீன் அமர்ந்துக் கொண்டான். அதனைத் தொடர்ந்து சாதாரணமாக உரையாட ஆரம்பித்தவன் மருத்துவமனை சட்டதிட்டங்கள் என அனைத்தையும் கூறி இருந்தான்.
அவன் தான் தலைமை வைத்தியர் என்றதையும் தாண்டி அனைவருடனும் சகஜமாகப் பழக அவனை அனைவருக்குமே பிடித்து தான் போனது.
இங்கு இப்படி இருக்க, காலையிலேயே காலேஜ் செல்ல ஆயத்தமாகி வந்த ஆஹித்யாவின் முன் நின்று இருந்தான் விபீஷன்.
அவனை இந்நேரத்தில் சற்றும் எதிர்ப் பார்க்காத அவளோ அதிர்ந்துப் போனவள் அவனை கேள்வியாக நோக்க… சற்றே குரலை செருமியவன் “நான் கூட்டிட்டு போகட்டுமா?” என்று நேரடியாக கேட்டே விட்டான்.
சும்மாவே திகைத்துப் போய் நின்று இருந்தவள் இப்போதைய அவனின் கேள்வி மேலும் அதிர தான் வைத்து இருந்தது.
பின்னே அதிர்ச்சி வராமல் இருக்குமா என்ன? வழமையான அவனின் குணம் இதுவல்லவே! முகம் கொடுத்து பேசாமல் சிடு சிடு வென முகம் இறுக இருப்பவனின் இவ் அவதாரமே அவளுக்குப் புதிதாகத் தெரிந்தது.
அவனையே இமைக் கொட்டாமல் திகைத்து பார்த்துக் கொண்டு நின்று இருந்தவளை நெருங்கி வந்து நின்றவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவளின் உயரத்திற்கு குனிந்து அவளின் முகத்தில் இதழ் குவித்து ஊத, அவனின் மூச்சுக் காற்றில் சுயம் அடைந்து சட்டென விலகி நின்று அவனை தீயாக முறைத்தவள் “விபீ திஸ் இஸ் டூ மச்” என்று சொல்ல…
“வாட்… என்ன டூ மச்?” என்றவன் பார்வை அவளின் சிவந்த இதழ்களில் படிய….
அதற்கு பதில் கூறாமல் “பை” என்றவள் திரும்பி நடக்க….
“நானே…” என்று அவள் பின்னல் வந்தவனை திரும்பிப் பார்த்து மீண்டும் முறைத்தவள் “இவ்வளவு நாளும் தனியா காலேஜ் போக தெரிஞ்ச எனக்கு இப்பவும் போக தெரியும் சோ உங்களோட வேலையை மட்டும் பார்த்தால் போதும்” என்று சொன்னவள் திரும்பி நடக்க…. “இதுவும் என்னோட வேலை தானே ” என்று தன் பின்னால் இருந்து குரல் கொடுத்தவனை கிஞ்சித்தும் பொருட் படுத்தாமல் இதயம் படபடக்க வேகமாக நடந்து சென்று இருந்தாள் பெண்ணவள்.
போகும் அவளை வெறித்துப் பார்த்தவன் “ என்கிட்ட இருந்து உன்னால எவ்வளவு தூரம் விலகிப் போக முடியும்னு பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டே திரும்பியவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.
ஆம், மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிய படி அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள் பவ்யா.
அவளின் தோரணையில் எரிச்சலாக இருந்தாலும் அவளிடம் பேச்சு கொடுக்க விரும்பாமல் விலக முற்பட்டவன் முன் மீண்டும் வந்து நின்றவளை எரித்து விடுபவன் போல முறைத்தவன் விலகி வேறு பக்கமாக செல்ல தொடங்கியவன் முன் உன்னை விட மாட்டேன் என்ற தோரணையில் அவள் மீண்டும் வழி மறித்து நிற்க…
அவனுக்கோ பொறுமை காற்றில் பறக்க “இடியட்” என்று சுட்டு விரல் நீட்டி சீறியவன் விரலை பிடித்து ஆராய்ந்தவள் “நெயில் கட் பண்ணலையா? என்று சலித்து கொண்டே மணிக்கட்டில் கட்டி இருந்த கைக் கடிகாரத்தில் மணியை பார்த்தவள் காலேஜ் போக டைம் இருக்கு சோ கட் பண்ணி விடுறேன்” என்று தன் இஷ்டத்திற்கு அவள் சொல்ல…
முகம் இறுக பற்களைக் கடித்துக் கொண்டு நின்று இருந்தவன் வெடுக்கென தனது கையை இழுத்து எடுத்தவன் “மறுபடியும் சொல்றேன் டோண்ட் கிராஸ் யுவர் லிமிட் என்றவன் தலையைக் கோதிக் கொண்டே சின்ன பொண்ணுனா அதுபோல நடந்துக்கோ” என்றவன் அவளைத் தாண்டி ஓரடி தான் எடுத்து வைத்து இருப்பான் அதற்குள் அவனின் செவிகளில் எட்டிய அவளின் வார்த்தைகளில் சினம் தெறிக்க ருத்ர மூர்த்தியாக மாறி இருந்தான்.