பார்த்தீவ் உள்ளே செல்ல, அவன் கண்டது என்னவோ ஷார்ட்ஸ் உடன் வாகினி மேலே நின்று ஏதோ ஒரு புத்தகத்தை எடுக்கும் காட்சி தான்.
அவளை அவன் ஷார்ட்ஸ் உடன் பார்த்ததே இல்லை.
கடந்த இரண்டு வருடங்களாக ஜீன்ஸ் டாப்ஸ் அல்லது சுடிதாரில் தான் இருப்பாள்.
இன்று ஷார்ட்ஸ் டிஷர்ட்டில் பார்த்தது அவனுக்கு மூச்சே அடைத்து விட்டது.
அவளது பளிங்கு கால்கள் அவனுக்கு பளிச்சென்று விருந்து ஆகி கொண்டு இருந்தது.
“என்ன பண்ணிட்டு இருக்க வாகினி?”, என்று அவன் கேட்கவும், அவள் பயந்து கீழே விழ போன சமயம், அவளை சென்று இடையை பிடித்து நிறுத்தி இருந்தான் பார்த்தீவ்.
கீழே விழுந்தலில் அவளின் டிஷர்ட் சற்று மேலே ஏறி இருக்க, அவனின் கை அவளின் இடையை பிடித்து இருந்தது.
இருவருக்கும் மேனியில் சிலிர்ப்பு.
முதலில் சுதாகரித்து பார்த்தீவ் தான் விலகி கொண்டான்.
வாகினியோ, “அங்க ஒரு புக் இருக்கு டா, கொஞ்சம் எடுத்து தரியா?”, என்று கேட்கவும், அவனும் தலையசைத்து, எடுத்து கொடுத்தான்.
பின்பு, “ஏன் டி ஷார்ட்ஸ் போட்டு இருக்க? ட்ராக்ஸ் போடலாம்ல”, என்று கேட்கவும், “இதுல என்ன இருக்கு, நீயும் நானும் தானே படிக்க போறோம்”, என்று அவள் கேட்கவும், “அப்போ விஷால்?”, என்று புருவம் உயர்த்தி கேட்டான்.
“அவன் வரலயாம்”, என்று சொல்லவும், பார்த்தீவின் மனம் குத்தாட்டம் போட்டது.
“சரி படிக்கலாம்”, என்று சொல்லி இருவரும் படிக்க ஆரம்பித்தனர்.
ஒரு மணி நேரம் படித்து கொண்டு மட்டும் தான் இருந்தனர்.
வாகினிக்கு தண்ணீர் தாகம் எடுக்க, அதுவோ பார்த்தீவை தாண்டி இருந்தது.
இதே சமயம் பார்த்தீவ் அவனின் வேறுஒரு புத்தகத்தை எடுக்க போக, பார்த்தீவின் முகம் வாகினியின் எழில் அழகில் முட்டவும், அதிர்ந்து விட்டனர் இருவரும்.
“சாரி சாரி”, என்று பதறி எழுந்து விட்டான் பார்த்தீவ்.
வாகினியோ செய்வது அறியாது நிற்க, “பார்க்கல சாரி டி”, என்று அவன் கிட்டே வரவும், அவள் ஒரு அடி பின்னே செல்ல, அவனுக்கோ ஒரு மாதிரி ஆகி விட்டது.
“உண்மையாவே பார்க்கல சாரி டி”, என்று மீண்டும் அவன் மன்றாட, அவளோ, “என் மேலயும் தப்பு இருக்கு, விடு” என்று விட்டு அவனின் எதிரில் அமர்ந்து படிக்க துவங்கி விட்டனர்.
இருவரும் படிக்க, பிரணவ் மற்றும் விக்ரம் உள்ளே வந்தனர்.
“லஞ்ச் சாப்பிடலாமா?”, என்று ஒருசேர கேட்கவும், இருவரும் தலையாட்டி கொண்டனர்.
நால்வரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு பல கதை பேசினர்.
நாட்கள் நகரவும், பரீட்சை எல்லாம் முடிந்து அன்று வாகினி மற்றும் பார்த்தீவின் பேர் வெல் பார்ட்டி.
புடவை அணிந்து இருந்தாள் வாகினி. பார்த்தீவ் பேண்ட் அண்ட் ஷர்ட் போட்டு வந்து இருந்தான்.
அனைவரும் புகை படம் எடுத்து கொண்டு இருக்கும் சமயம், விஷால் வாகினியிடம் வந்தான்.
“போட்டோ எடுத்துக்கலாமா?”, என்று அவன் வைத்து இருந்த கமெராவை காட்டவும், “ஓகே”, என்றவள் அவன் அருகில் நின்று போட்டோ எடுக்கும் சமயம் விஷால் அவளின் தோளில் கையை போட, வாகினியோ அதை தட்டி விட்டு இருந்தாள்.
விஷாலின் முகம் கூம்பி விட்டது.
போட்டோ எடுத்து முடிக்கவும், “வாகினி ஐ…”, என்று அவன் ஆரம்பிக்கும் போதே, “சாரி விஷால் இந்த நினைப்பு வேண்டாம். ஐ அம் நாட் இன்டெரெஸ்ட்டேட்”, என்று வாகினி பட்டென கூறி விட்டாள்.
“ஏன் வாகினி என்ன பிடிக்கலையா?”, என்று கேட்கவும், “நமக்கு வெறும் பதினேழு வயசு தான் விஷால்.. இனி தான் நம்ப லைஃப் ஆரம்பிக்கவே போகுது.. கேரியர்ல நான் நிறைய சாதிக்கணும்னு ஆசை படறேன்… சோ ப்ளீஸ்”, என்று அவள் நகர்ந்து செல்லவும், இவை அனைத்தும் பார்த்தீவின் காதுகளிலும் விழுந்தது.
அவனது நெஞ்சத்திலும் ஒரு மாறுதல்.
இப்போதைக்கு படிக்கலாம் பின்பு பார்த்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டான்.
வாகினியும் பார்த்தீவும் நின்று போட்டோ எடுக்கும் சமயம் ஒரு மாணவன் ஓடி வந்து வாகினியின் மேல் மோதவும், அவள் நிலை தடு மாற, அவளை பிடித்து இருந்தான் பார்த்தீவ்.
அதை கூட அழகாக படம் பிடித்து இருந்தான் அந்த மாணவன்.
இன்றும் அந்த புகைப்படம் அவர்களின் வீட்டில் உள்ளது.
வாகினியின் இறுதி நாள் என்பதால், விக்ரம், பிரணவ், வர்ஷா மற்றும் சான்வி அங்கே நின்று இருந்தனர்.
அவள் அனைவருடனும் நன்றாக தான் பேசுவாள்.
விஜயிடம் நெருங்கியது இல்லை என்றாலும் பாராமுகமும் காட்டியது இல்லை.
“சண்டை போட கூடாது” என்று விக்ரம் மற்றும் பிரணவ்வை பார்த்து சொல்லவும், இருவரும் தலை ஆட்டினர்.
சான்வி மற்றும் வர்ஷாவை பார்த்து, “நல்ல பிள்ளைங்களா இருக்கனும்.. இவனுங்க ஏதாச்சு பண்ணா என்கிட்ட சொல்லணும்”, என்று சொல்லவும், “சரி அக்கா”, என்று வர்ஷா கூறினாள்.
பின்பு அனைவரையும் அணைத்து விடுவித்தவள் திரும்ப, அங்கே விஜய் நின்று இருந்தான். எதுவும் பேசவில்லை.
அவள் அவன் அருகில் சென்று, “உடம்ப பார்த்துக்கோ, சண்டை போடாத”, என்று சொல்லிவிட்டு, ராகவிடம் வந்தவள், “அவன் என்ன பண்ணாலும் சப்போர்ட் பண்ணாத”, என்று சொல்லவும், ராகவ் தலையாட்டினான்.
அடுத்து பார்த்தீவும் அவர்களிடம் பார்த்து இருக்குமாறு சொல்லிவிட்டு சென்று விட்டான்.
இப்படியாக நாட்கள் நகர, வாகினி மருத்துவ படிப்பிற்கு சென்று விட, பார்த்தீவ் அவனது பிகாம் படிக்க சென்று விட்டான். அவன் யுப்எஸ்சி படிக்கவும் தயார் செய்ய ஆரம்பித்து இருந்தான்.
நான்கு வருடங்கள் கழித்து, விக்ரம் பனிரெண்டாம் வகுப்பிலும், விஜய் பத்தாம் வகுப்பிலும் இருந்தனர்.
எட்டாம் வகுப்பில் இருந்தனர் சான்வியும் வர்ஷாவும்!
விக்ரம் தான் அந்த ஸ்கூல் எஸ்பிஎல், அவனை பார்க்க பெண்கள் ரசிகர் மன்றமே இருந்தது.
பதினேழு வயதிலேயே அவனுக்கு நல்ல உடல் கட்டமைப்பு. அவனுக்கு அடுத்து விஜய் தான் அந்த ஸ்கூலின் கனவு நாயகன். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அழகில் மட்டும் அல்ல அறிவிலும் குறைந்தவர் இல்லை.
விளையாட்டு மற்றும் அனைத்து கல்ச்சரல்ஸ்சில் கூட முதன்மை மாணவர்கள் தான்.
பிரணவ்வும் கூட நன்கு படிப்பான். ராகவும் தான்!
இதே சமயம், பாஸ்கெட் பால் விளையாடி கொண்டு இருந்தான் விக்ரம்.
அவனை பார்க்க அவனுடன் பயிலும் ஒரு மாணவி தான் வந்து இருந்தாள்.
“சொல்லு”, என்று அவளை பார்க்கவும், “ஐ லவ் யு விக்ரம்”, என்று சொல்லவும், பிரணவ் தண்ணீர் குடித்து கொண்டிருந்தவன் வெளியே துப்பி விட்டான்.
“இதெல்லாம் வெறும் இன்பாக்சுவேஷன்… போய் படிக்கிற வழிய பாரு”, என்று அவன் சொல்லவும், அந்த மாணவியோ அழுது கொண்டே நிற்க, அவனுக்கோ கடுப்பாகி விட்டது.
“என்ன டி?”, என்று அவன் சீறவும், “எனக்கு சான்ஸ் இல்லையா அப்போ?”, என்று அவள் ஏக்கமாக பார்க்க, “அடிங்க..”, என்று பாலை தூக்கி கொண்டு அடிக்கவே வந்து விட்டான்.
இதே சமயம், “ம்கூம்”, என்று அவனின் செவிகளில் ஒலித்தது மற்றொரு குரல்.
திரும்பி பார்க்க, சான்வி தான் நின்று இருந்தாள்.
ஒரு மாதத்திற்கு முன்பு தான் பூவாகி இருந்தாள் பெண்ணவள்.
விக்ரம் அவளை பார்க்க, அவளோ அவனின் முன் கடிதம் ஒன்றை நீட்டினாள்.
அவனோ புருவம் சுருக்கி பார்த்து, “என்ன இது?”, என்று கேட்கவும், “லவ் லெட்டர்”, என்று சொன்னாள்.
“மச்சான் உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு டா”, என்று பிரணவ் கத்தவும், “சாவடிச்சிருவேன் பாத்துக்கோ”, என்று அவனை மிரட்டியவன், அவளை பார்த்து, “உனக்கு என்ன வயசு டி ஆகுது?”, என்று அவன் கேட்கவும், “உங்களுக்கு தெரியாதா?”, என்று மறுகேள்வி அவனை பார்த்து கேட்டாள்.
“அடிங்க சொல்லு டி”, என்று அவன் அடிக்க வரவும், “பதிமூணு”, என்று சொல்லவும், “ம்ம்.. இன்னும் மொளச்சி மூணு இலை விடல லவ்வா உனக்கு.. போய் படி… அப்புறம் லவ்லாம் பார்க்கலாம்”, என்று அவன் சொல்லவும், “என்ன தான் நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்”, என்று அவள் சொல்லவும், அவனோ கண்களை அழுத்தி மூடி திறந்தான்.
“கேரம் போர்டு ஆடுற வயசுல கல்யாணம் பத்தி பேசுற நீ! போ டி அப்புறம் உன் அண்ணா கிட்ட சொல்லிருவேன்”, என்று அவன் ராகவை இழுக்கவும், அவளின் கண்களில் நீர் தேங்கி விட்டது.
“இப்போ எதுக்கு டி அழற?”, என்றவனுக்கு எரிச்சல் தான்.
“உங்களுக்கு என்ன பிடிக்கவே இல்லையா?’, என்று அவள் கேட்கவும், அவனோ, “இல்லை”, என்று எங்கோ பார்த்து கொண்டு கூறினான்.
அவளை பிடிக்காமல் இருக்குமா? காதல் என்று என்னவென்று தெரியும் முன்னவே அவனை அவளுக்கு அவ்வளவு பிடிக்கும்.
“போடா முசுடு”, என்று சொல்லி சென்று விட்டாள்.
“அப்போ என்ன டா சான்வி தான் மிஸஸ் விக்ரம சத்திரியனா?”, என்று பிரணவ் கிண்டல் அடிக்கவும், “ஏன் டா?”, என்று விக்ரம் பேசி கொண்டு இருக்கும் போதே வர்ஷா வந்திருந்தாள்.
“ஹாய் அண்ணா”, என்று கையாட்டி கொண்டு வந்தவள், பிரணவை பார்த்ததும் முகத்தை திருப்பி கொண்டாள்.
“பார்த்து பார்த்து கழுத்து சுளிக்கிக்க போகுது”, என்று அவன் சொல்லவும், “போடா போண்டா வாயா”, என்று சொன்னவளை அடிக்க அவன் வரவும், “அண்ணா”, என்று விக்ரமின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள்.
அவளுக்கு அரணாக சத்திரியன் இருக்கும் போது, அவளை நெருங்க யாருக்கும் தைரியம் இருக்குமா என்ன?
“சும்மா உன் அண்ணா பின்னாடி ஒளிஞ்சிக்காத டி வர மொளகா”, என்று பிரணவ் அவளை வார, “ஏன் டா அவளை சும்மா சீண்டிட்டே இருக்க?”, என்று விக்ரம் கேட்கவும் அமைதி ஆகி விட்டான்.
“அப்புறம் ஸ்வீட் ஹார்ட் எப்படி இருக்க?”, என்று கேட்கவும், “நல்லா இருக்கேன்… இந்தாங்க”, என்று அவனுக்கு ஒரு பையை நீட்ட, அதில் ஒரு ஷர்ட் இருந்தது.
“எதுக்கு இது?”, என்று கேட்கவும், “அடுத்த மாசம் உங்க பேர் வெல்ல இத போட்டுக்கோங்க… தாத்தாவும் நானும் சேர்ந்து வாங்குனோம்”, என்று சொல்லவும், அவனும் புன்னகைத்து வாங்கி கொண்டான்.
அவனின் பரீட்சை எல்லாம் முடிந்து அவனின் பேர் வெல் வந்து விட்டது.
வர்ஷா கொடுத்த சட்டை தான் அணிந்து இருந்தான்.
அது ஒரு நேவி ப்ளூ சட்டை. அவனது நிறத்திற்கு அழகாக இருந்தது.
வர்ஷா மற்றும் சான்வி இருவருமே பேர் வெல்இல் நடனம் ஆடாடுவதாக இருந்தது.
விக்ரமின் செவிகளில் சிலர் பேசுவதும் காதில் விழுந்தது.
“சான்வி செம்ம ஹாட் டா.. நரேனுக்கு அந்த பொண்ண இழுத்து வச்சி கிஸ் பண்ண சொல்லி டெர் குடுத்து இருக்கேன்”, என்று ஒரு மாணவன் பேசவும், விக்ரமின் கண்கள் அகண்டு விரிந்தது.
பதிமூன்று வயது பெண்ணவளை கூட வக்ரமாக பார்க்கும் சில ஜென்மங்கள் இருந்தது.
அவனோ சான்வியை தேட, அங்கே வந்தால் வர்ஷா.
“சான்வி எங்க?”, என்று கேட்டவனிடம், “சேஞ்சிங் ரூம்ல இருக்கா அண்ணா”, என்று அவள் சொல்லவும், அவனோ அங்கே விரைந்து சென்றான்.
அந்த அறையை நெருங்கவும், அறையின் கதவை தட்ட, அறை திறக்கப்படவில்லை. அதே சமயம் குரலும் இல்லை.
அவன் முழு பலத்தையும் கொண்டு அவன் அந்த கதவை திறக்க, அவன் கண்ட காட்சியில் உறைந்து நின்று விட்டான் சத்திரியன்.
Intresting sis 💞