விழிகள் இரண்டும் கோபத்தில் சிவக்க சட்டென திரும்பி உறுத்து விழித்தவன் “என்ன சொன்ன?” என்ற படி தன் ஐம் பொன் காப்பை இறக்கி விட்டுக் கொண்டே கை முஷ்டிகள் இறுக அவளை நெருங்கியவனைப் பார்த்து அவளுக்கோ உள்ளே அதிர்ந்தாலும் முகத்தில் எதனையும் காட்டிக் கொள்ளாமல் குரலை செருமியவள் “மாமாவுக்கு அம்புட்டு ஆசை என்றவள் தரையில் காலால் கோலம் போட்டுக் கொண்டே அவனை நோக்கி நான் உங்ககிட்ட லிமிட் மெயின்டெய்ன் பண்ணா நாம எப்படி புள்ஸ் புள்ஸ் ஆஹ் பெத்து போடுறது?” என்றாளே பார்க்கலாம்.
அவளின் தோரணையில் மீண்டும் சினம் தலைக்கு ஏற அறைய கையை ஓங்கியே விட்டான். அவளோ அதற்கு கொஞ்சமும் அசர வில்லை அவனின் விழிகளை தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் பெண்ணவள்.
அவளின் அந்த அழுத்தமான பார்வையில் ஓங்கிய கையை இறக்கியவன் “சாவடிச்சிருவேன் மைண்ட் யுவர் வேர்ட்ஸ் என்றவன் நெற்றியை நீவிக் கொண்டே இதோ பார் பவ்யா அப்படியே நான் கல்யாணம் பண்ணிக்க நினைச்சாலும் மறந்தும் உன்னை கட்டிக்க மாட்டேன்” என்றவன் அவளின் கலங்கிய விழிகளை திருப்தியாகப் பார்த்து புன்னகைத்து விட்டு ஷட்ர்ட்டின் கையை மடித்து விட்டுக் கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்து இருந்தான்.
போகும் அவனை வெறித்துப் பார்த்தவளுக்கு அழுகை தொண்டையை அடைத்தது.
கிட்டத்தட்ட தன் அவன் மீதான காதலை மறைமுகமாக சொல்லி விட்டாள் அல்லவா! ஆனால் அவனோ வெறுப்பை அல்லவா உமிழ்ந்து விட்டுப் போகின்றான். சுற்றம் உணர்ந்து தன்னை நிலைப் படுத்திக் கொண்டவள் அவனைத் தொடர்ந்து வலுக்கட்டாயமாக புன்னகையை வரவழைத்துக் கொண்டு “அத்தை” என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தவள் சித்ராவிற்கு சமையலில் உதவ ஆரம்பித்து விட்டாள்.
இங்கோ அறைக்குள் வந்த விபீஷனிற்கு நிலைக் கொள்ளவே முடியவில்லை.
அவளின் நேர் கொண்ட பார்வை கூட அவனுக்கு பொய் உரைப்பதாகத் தெரியவில்லை.
அக் கிராமத்து பெண்களின் பார்வை அவன் மேல் படிந்தாலும் கண்டுக் கொள்ளாமல் செல்பவன் இன்று அதுவும் முதல் முறை அதுவும் அவன் எதிர்ப் பார்க்காத ஒருவள் அவனிடம் காதலை சொல்லி இருக்கின்றாள். ஆனால் கொஞ்சமும் அதனை அவனால் ஜீரணிக்க முடியாமல் போனது தான் நிஜம்.
ஆம், அவன் தான் ஆஹித்யாவை அடைய வேண்டும் என்ற வெறியில் இருக்கின்றானே! அப்போது வழியே வருபவளை அவனது அறிவு சிந்திக்க மறுத்தது இல்லை இல்லை அவளின் எண்ணத்தை யோசிக்க விடாமல் தனக்கு தானே தடை போட்டுக் கொண்டான் என்றே சொல்லலாம்.
உடன் பிறந்தவன் மீதான அதீத வெறுப்பு அவனின் சித்தத்தை செயல் இழக்க வைத்து இருந்தது.
எப்போது ஜெய் ஆனந்த்தின் கடிதங்களில் ஆஹித்யாவின் பெயரைக் கண்டானோ அன்றில் இருந்து அவளை நினைக்க ஆரம்பித்தவன் ஜெய் ஆனந்த் இங்கே வந்த பிறகு அவனது நடவடிக்கைகளை வைத்து ஏதாவது திட்டம் தீட்டலாம் என்று இருந்தவனுக்கு ஆஹித்யாவின் மனதில் யாரும் இல்லை என்று திட்ட வட்டமாக உறுதியும் செய்து இருந்தான்.
தனது டிராயரில் இருந்த ஜெய் ஆனந்த்தின் கடிதங்களை மீண்டும் எடுத்தான். அதிலோ, ஆஹித்யா பிறந்த திகதியில் இருந்து அவள் பருவப் பெண்ணாகும் வரை அவளை வர்ணித்து கவிதைகளால் நிரப்பி இருந்தான் அவன்.
அவள் பருவமடைந்த பின் அந்த நாளில் இருக்கும் கவிதையை பார்த்தான்.
ஆம், அது தான் அவளை நினைத்து ஜெய் ஆனந்த் எழுதிய இறுதி மடல்.
மேலே இருக்கும் திகதியை வருடிக் கொண்டே அவ் எழுத்துக்களை வெறித்தான். “உன் பெண்மைக்கு மதிப்பளிக்கின்றேன் பெண்ணே! இந்நாள் வரை ரசித்த உனை இனியும் ரசித்து எழுத மனம் இடம் கொடவில்லை பருவப் பெண்ணே! ஆம், இதுவே என் இறுதி மடல்! உன் பெண்மையை என் கவிதை கூட தீண்டக் கூடாதென எண்ணம் உதித்ததேனோ! நான் உன்னவனாகும் வரம் வேண்டி காத்துக் கிடப்பதும் கூட காதலின் சுக அவஸ்தையடி பெண்ணே! அதுவரை என் யாக்கை முழுதும் உன் எண்ண அலைகளில் நித்தமும் ஏங்கும் என்னவளே! காலமே பதில் சொல்லும்…!” என்ற கவிதையோடு நிறைவு பெற்று இருக்க அதனை வாசித்தவனுக்கோ இதழ்களில் ஏளனப் புன்னகை தோன்றி மறைந்து இருந்தது.
சிலமணி நேரங்களாக அதனையே வெறித்துக் கொண்டு இருந்தவனுக்கு என்ன தோன்றியதோ ஒருக் குரூர புன்னகை முகத்தில் தவிழ அறையை விட்டு வெளியேறியவன் நேரே சென்றது என்னவோ பிரதாபனின் அறைக்குள் தான். உள்ளே வந்தவனை புருவம் சுருக்கி பார்த்த பிரதாபன் “என்ன விஷயம் விபீஷன்?” என்று அவர் கேட்க…
அவன் எதுவும் விடயம் இல்லாமல் வர மாட்டான் என அறிந்து வைத்து இருந்தவர் அவனைக் கேள்வியாக நோக்க…
அவருக்கோ அவனின் பதிலில் தலைக் கால் புரியாத சந்தோஷம்.
எங்கே தனது இரண்டாவது மகன் நண்பர்களுடன் சேர்ந்து அவன் இஷ்டத்திற்கு வாழ்க்கையை குழப்பிக் கொள்வானோ என்று நினைத்து பயந்துக் கொண்டு இருந்தவருக்கு தற்போதைய அவனது முடிவில் திருப்தியாகப் புன்னகைத்துக் கொண்டவர் “சரி டா நாளைக்கு…” என்று ஆரம்பித்தவரை இடை மறித்தவன் “இப்போ நீங்க அங்க தானே போறீங்க சோ உங்க கூட நானும் வரேன்” என்றான்.
அவன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டதே பெரிய விடயம் என நினைத்தவர் மறுத்து பேசாமல் “வா கிளம்பலாம்” என்றவர் அவனோடு அறையை விட்டு வெளியில் வரவும் சித்ரா சமைத்து விட்டு அழைக்கவும் நேரம் சரியாக இருந்தது.
உணவைப் பரிமாறிக் கொண்டே நிமிர்ந்தவர் விழிகளிகளோ அதிர்ச்சியில் பெரிதாக விரிந்துக் கொண்டன.
பின்னே பிரதாபன் அவனை நெருங்கினாளே பத்தடி தள்ளி நிற்பவன் அவன். இருவரும் வருவதைப் பார்த்துக் கொண்டே நின்று இருந்தவரை நெருங்கிய பிரதாபன் “சித்ரா நீயும் உட்கார் சாப்டலாம்” என்று பிரதாபன் சொல்ல…. “இல்லைங்க வித்யா வரட்டும் அப்புறமா சாப்டுறேன் என்றவரைப் பார்த்து சரி அப்போ பவ்யா வந்தா தானே அவளைக் கூப்பிடு” என்றிட…
“சரிங்க என்றவர் பவ்யா” என்று சத்தமாக அழைக்க… அடுத்த நொடியே சமையல் அறைக்குள் இருந்து வேகமாக வந்தவள் “அத்தை” என்றபடி சாப்பாட்டு மேடையில் அமர்ந்து இருந்தவனைப் பார்த்ததும் ஐயோடா என்றாகிப் போனது அவளுக்கு…
“உட்கார் சாப்பிடலாம்” என்று பிரதாபன் சொல்ல… “மாமா அப்புறமா…” என்று இழுவையாக சொல்ல…
அவ்வளவு தான் பிரதாபன் முறைத்ததில் கிலி பரவ அவரின் எதிரேயே கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து இருந்தாள் பாவை. அவளின் புறம் இருந்த உணவுத் தட்டில் தோசையை எடுத்து வைத்த பிரதாபன் “சாப்பிடு பவ்யா. வளர்ற பொண்ணு தானே ஒழுங்கா எடுத்து போட்டு சாப்பிடு” என்று சொல்ல… “சாப்டுறேன் மாமா” என்றவள் மனதோ அதை அதுவும் அவன் இருக்கும் போதா சொல்ல வேண்டும் என நினைக்க அதற்கு மாறாக அவளை ஒருப் பொருட்டாகக் கூட மதிக்காமல் ஏன் தன் முன்னால் ஒருவள் அமர்ந்து இருக்கின்றாள் என்று கூட உணராமல் தோசையை எடுத்து போட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்து விட்டான் விபீஷன். அவனை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்து விட்டு பிரதாபனை பார்த்து ஒரு பெரு மூச்சை விட்டுக் கொண்டவள் மனதிலோ “மாமா போல தான் பிள்ளையும் என்ன இந்த ரௌடி கொஞ்சம் ஓவரா பண்றான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே உண்ண ஆரம்பித்து விட்டாள்.
அதனைத் தொடர்ந்து வித்தியாவும் வந்து விட, அனைவரும் இருந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே பிரதாபனோ “இனிமேல் ரைஸ் மில் விபீஷன் தான் பார்த்துக்க போறான்” என்று சொன்னதும் வழமை போல ஏதோ சண்டை வெடிக்க போகின்றது என நினைத்த சித்ரா சற்று தயங்கியவாறு “அவனுக்கு விருப்பம் இல்லனா விடுங்களேங்க” என்றிட…
அதற்கு பிரதாபன் பதில் கூறும் முன்னரே “எனக்கு பிடிச்சு இருக்கு நானே டீல் பண்றேன்” என்று அழுத்தம் திருத்தமாக கூறி இருந்தான் விபீஷன்.
அதனைக் கேட்ட சித்ரா மற்றும் வித்யா உட்பட தங்கள் காதில் வீழ்ந்த அவனது வார்த்தைகளில் வியந்தார்கள் என்றால் ஒரு படி மேலாக சாப்பிட்டு முடித்து விட்டு நீர் அருந்திக் கொண்டு இருந்த பவ்யாவிற்கோ புரையே ஏறி விட்டது.
சட்டென அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனின் பார்வையில் தலையை தாழ்த்திக் கொண்டவளோ தலையை தட்டிக் கொண்டே “சாரி சாரி” என்றவாறு அவசரமாக உள்ளே சென்று இருந்தாள்.
“எதுக்காக இவ்வளவு ஷாக் ஆகுறீங்க மா? எல்லாரும் ஆசைப் பட்ட போல தானே நானும் இப்போ சம்மதிச்சு இருக்கேன்” என்றவனோ தோள்களை குலுக்கிக் கொள்ள… பிரதாபனும் அவனின் பதிலில் புன்னகைத்த படி சாப்பிட்டு விட்டு எழுந்துக் கொள்ள, மேலும் தொடர்ந்த சித்ரா “இவ்வளவு நாளும் நானும் எவ்வளவோ கெஞ்சி அழுதும் போராடி பார்த்துட்டேன் படிச்சிட்டு வீட்டுல இருக்கேன்னு இருந்துட்ட அது மட்டுமா எதுக்கெடுத்தாலும் என்கிட்ட எரிஞ்சி விழுந்தியே டா” என்று ஏதோ தைரியத்தில் அவரும் பேசி விட…. “சித்ரா என்ன பேச்சு இது? பழசை விட்டுட்டு அவனை நல்லபடியா வழி அனுப்பி விடு” என்று பிரதாபன் கண்டிப்பாக சொல்ல… “ஆமா அண்ணி” என்று வித்யாவும் சொல்ல…
“சாரி மா” என்றான் உண்மையாகவே தனது அன்னையின் முகத்தை பார்த்துக் கொண்டே…
“டேய் விடுடா என்னோட பிள்ளை தானே என்று சொன்னவர் இருந்தாலும் சொல்றேன் பயம் காட்டுற போல கத்தாத டா உன்னோட அம்மா எனக்கே உன் பக்கத்துல வர பயமா இருக்கு” என்று சொல்ல…
அவனோ உலக அதிசயமாக தன் தெற்றிப் பற்கள் தெரிய சத்தமாக சிரித்தான்.
அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்த பவ்யாவின் மனதோ “இதோ சும்மாவே மயங்கி தான் இருக்க இப்போ உன்னை சிரிச்சு மயக்கிட்டான்” என்று சொல்ல “சும்மா இரு அவரோட தெத்து பல்லுக்கு தான் நானே அடிமை” என்று மனதோடு வாதிட்டு கொண்டு இருந்தவள் பார்வையோ சிரித்துப் பேசிக் கொண்டு இருந்த விபீஷன் மீது இருந்து ஒரு இம்மியும் கூட நகரவில்லை.
இங்கோ, மருத்துவமனையில் நவீனோடு சாப்பிட்டு கொண்டு இருந்த ஜெய் ஆனந்த்தோ “நானே எக்ஸ்பெக்ட் பண்ணல அதுவும் உன்னோட ரெஸ்யூம் பார்க்குற வரையும்… சடன் ஆஹ் இங்க அதுவும் கிராமத்துக்கு வந்து இருக்க?” என்றான் வியப்பு மேலிட…
“சிட்டிலே இருந்து போர் டா அதான் உன்கூடவே ஜாயின் பண்ணிக்க வந்துட்டேன்” என்று நவீன் சொல்ல…
“வெல்… அப்போ என்னோட வீட்டுலயே வந்து தங்கிக்கோ” என்க….
“அடிங்க… நான் வீடெல்லாம் பார்த்து பிக்ஸ் பண்ணிட்டேன் என்றவன் அடிக்கடி எங்க அம்மா கல்யாணம் பண்ணிக்க சொல்லி செம்ம டாச்சர். அதுல இருந்து விடுதலை வேணும். அதுக்காகவே வந்து சேர்ந்ததுட்டேன் சோ என்னை தயவு செஞ்சு காப்பாத்து டா” என்றான் காலில் விழாத குறையாக…..
அவனின் நிலையை பார்த்து சத்தமாக சிரித்தவன் “மேரேஜ் பண்ணிக்க சொன்னால் பண்ணிக்கோ டா அதுக்கு ஏன் பயப்படுற?” என்று கேட்க…
“நீ சிரிப்ப அதான் உனக்கு தியா இருக்காளே என்றவன் தொடர்ந்து அரேஞ்ச் மேரேஜ் எல்லாம் எனக்கு செட் ஆகாது ஜெய்” என்றான்.
இதழ் குவித்து ஊதியவன் “ஓகே என்னை நம்பி வந்து இருக்க காப்பாத்தி தொலைக்கிறேன் என்றவன் சின்ன கரெக்ஷன்” என்று அவன் சொல்ல… “என்னடா?” என்றான் நவீன்.
“இன்னுமே நான் என்னோட லவ் சொல்லல நவீன் ஐ பீல் பியர் ஆப் ஹேர் ஆன்ஸ்சர் என்றவன் முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டே ஒருவேளை என்னைப் பிடிக்கலனு சொன்னால் என்னால அதை தாங்கிக்க முடியாது டா” என்றான் குரல் நடுங்க….
அவனின் கலங்கிய தோற்றம் மனதை வறுத்த “உன்ன பிடிக்காமல் போகுமா என்ன அதுவும் சின்ன வயசுல இருந்து அவளை உனக்கு பிடிக்கும் ஷி இஸ் லக்கி டூ ஹேவ் யூ என்றவன் சீக்கிரமா சொல்லிட்டு மேரேஜ் பண்ணிக்கோ என்றவன் அதோடு நிறுத்தாமல் உன்னோட அருமை தம்பிக்கு தெரிஞ்சா விட மாட்டான்” என்று சொல்ல…
அவன் இறுதியாக சொன்ன வார்த்தைகளில் விழிகள் இரண்டும் சிவக்க “நவீவீன்…” என்று கர்ஜித்தவன் அவனின் ஷர்ட்டின் காலரைப் இறுகப் பற்றி இருந்தான்.