அத்தியாயம் 25
வர்ஷா தான் விக்ரம் மற்றும் சான்வியின் முத்த காட்சியை பார்த்தது.
சான்வி பக்கத்தில் இல்லாததை பார்த்தவள், அப்படியே எழுந்து வெளிய வர அவள் கண்களுக்கு விருந்து ஆனது என்னவோ அவர்கள் முத்தம் இடும் காட்சி தான்.
பேய் அறைந்தது போல அவள் வந்து கொண்டு இருக்க, அப்படியே மோதி நின்று இருந்தாள் பிரணவின் மேல்!
அவனும் பேய் அறைந்தது போல் தான் இருந்தான்.
அவனை அவள் நிமிர்ந்து பார்க்கவும், அவனும் அவளை பார்த்தான்.
இருவரும் ஒரே போல, “சான்வியும் விக்ரம் அண்ணாவும் கிஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க” என்று வர்ஷாவும், “பார்த்தீவ் அண்ணாவும் உன் அக்காவும் கிஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க”, என்று பிரணவும் சொல்ல, இருவரின் கண்களும் கீழே விழுந்து விடும் அளவிற்கு விரிந்து விட்டது.
“என்ன விக்ரம் கிஸ் பண்ணானா?”, என்று பிரணவ் வர்ஷாவை பார்க்க, “வாகினி அக்கா உன் அண்ணாவை கிஸ் பண்ணாங்களா?” என்று அவளும் ஒரே போல் கேட்டாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, “எப்படி கிஸ் பண்ராங்க?”, என்று வர்ஷா கேட்கவும், “இப்படி தான்”, என்றவன் அவளின் இதழை சிறை எடுத்து இருந்தான்.
வர்ஷாவின் கண்கள் விரிந்து அவனை விளக்கி விட்டு, அவனை அடிக்க கை ஓங்க, அவளின் கையை பிடித்தவன், “நீ தான் கேட்ட வர மொளகா”, என்றவனை அவளின் இரண்டு கைகளாலும் அடிக்க ஆரம்பித்தாள்.
அவனுக்கு அவள் அடிப்பதெல்லாம் தூசு உரசுவது போல் இருந்தது.
அவள் மென் கைகளால் அடித்தால் அவனின் வன் தேகத்திற்கு வலிக்குமா என்ன?
“என் அண்ணா கிட்ட சொன்னா என்ன ஆகும் தெரியுமா?”, என்று அவள் சீறவும், “எனக்கு என்ன பயமா? நான் சொல்லுவேன் அவன் கிட்ட மச்சான் இரண்டு பேருக்கும் ஒரே நாள்ல பர்ஸ்ட் கிஸ் கிடைச்சிருக்கு”, என்று அவன் சொல்லவும், அவளுக்கு தான் அய்யோடா என்று இருந்தது.
“போட போண்டா வாயா”, என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்லும் போது தான், அவளது இரவு உடையில் பின் ஜிப் சற்று நெகிழ்ந்து இருப்பதை அவன் காண, “வர்ஷா”, என்றதும் அப்படியே உறைந்து நின்று விட்டான்.
அவனுக்கு தான் எப்போதும் அவள் வர மொளகா வாயிர்றே. முதல் முறையாக அவன் வர்ஷா என்று கூப்பிடவும், அப்படியே அவள் நிற்க, அவள் மேனியை உரசி நின்றவன், அவளது ஜிப்பை இழுத்து விட்டான்.
அப்படியே அவளது செவி அருகே குனிந்து, “ராகவ் வேற இருக்கான், பார்த்து டிரஸ் பண்ணு டி”, என்றவன் சட்டென விலகி விட்டான்.
அவளும் அவனை முறைத்து பார்த்து சென்று விட்டான்.
இங்கே சான்வியோ, “நான் கிளம்புறேன்”, என்று நகர போக, விக்ரமின் கண்கள் அவளில் தான் நிலைத்தன!
அவனை நிலைகுலைய செய்து விட்டாளே!
“டெவில் டி நீ! நல்ல பிள்ளையா இருந்த என்ன எப்படி மாத்திட்ட”, என்று அவன் நினைத்து கொண்டு இருக்கும் போதே அங்கு வந்தான் பிரணவ்.
இங்கோ பார்த்தீவ் வாகினியின் நிலை வேறு விதமாக இருந்தது.
வாகினி தான் பார்த்தீவிடம் வந்து, “வாக்கிங் போலாமா?”, என்று பத்து நிமிடங்கள் முன் கேட்டு இருந்தாள்.
அவர்கள் மற்றொரு வழியாக வெளியே செல்ல, இருவரையும் யாரும் பார்க்க வில்லை.
அவர்கள் நடந்து கொண்டு செல்லவும், பார்த்தீவ் மற்றும் வாகினியின் கைகள் உரசின.
“எப்படி போகுது ஒர்க்?”, என்று அவள் கேட்கவும், “ம்ம் போகுது”, என்றவனை பார்த்து, “டேட்டிங் ஏதும் பண்ணலயா டா?”, என்றவுடன், “ஒரு பொண்ண பிடிச்சி இருக்கு ஆனா அவ ஒத்துக்குவாளான்னு தான் தெரியல்ல”, என்றான்.
வாகினிக்கு ஏனோ மனதில் ஒரு அழுத்தம்.
என்னவென்று புரியவில்லை, இது தான் காதல் என்று பாவை அவள் அறியவும் இல்லை.
அவனை பார்க்காமல் மூன்று வருடங்கள் நரகம் தான் அவளுக்கு.
அவன் அழைக்கவில்லை என்றாலும் இவள் அழைத்து விடுவாள்.
அவன் சென்னை வரவே இல்லை. எத்தனை முறை அழைத்து பார்த்தாள் என்று அவளுக்கே தெரியாது.
இன்று ஒரு பெண்ணை பிடித்து இருக்கிறது என்று சொல்கிறான்.
வாகினியின் மனதிலும் அவனின் மீது பிடித்தம் இருந்தது உண்மை தான். அவளை முதல் முறையாக ஸ்பரிசித்தவன் அவன்.
அவள் பூப்பெய்தியதும் அவளை அவன் கையாண்ட விதம், இவ்வளவு ஏன் அன்று ஒரு நாள் அவளின் முதல் வருட மருத்துவ தேர்வின் போது அவளுக்கு பயம் என்று சொன்ன ஒற்றை வார்த்தைக்காக நள்ளிரவு ஒரு மணிக்கு அவளுக்காக வந்து ஆறுதல் படுத்தி விட்டு சென்று இருந்தான்.
அன்றே அவள் பார்த்தீவின் மீது காதல் கொண்டு விட்டாள் தான். ஆனால் அவளின் கேரியர் முக்கியம் என்பதால் அவளுக்கு படிப்பு தான் அப்போது முதன்மையாக தெரிந்தது.
இப்போது அவளிடம் படிப்பு இருக்கும் நேரம், அவளின் மனதை கவர்ந்தவனின் மனதை வேறு ஒருத்தி ஆக்ரமிப்பு செய்து விட்டாள் என்கிற எண்ணம்.
“அந்த பொண்ணு அவளோ அழகா?”, என்று அவள் கேட்கவும், “ரொம்ப ரொம்ப அழகு ஆனா அத விட எனக்கு அவ தைரியமும் ஆளுமையும் ரொம்ப பிடிக்கும்… செம்ம சின்சியர் அண்ட் ஸ்மார்ட்”, என்று அவன் சொல்லவும், வாகினியின் உதட்டில் ஒரு விரக்தி புன்னகை.
“ரொம்ப லவ் பன்றியோ?”, என்று அவள் கேட்கவும், “ரொம்ப ரொம்ப”, என்றவனின் முகத்தில் காதல் தாண்டவம் ஆடியது.
“அந்த பொண்ணு கிட்ட சொல்லிட்டியா?”, என்று அவள் கேட்கவும், “இல்லையே சொன்னா செருப்பை கழட்டி அடிப்பாளோணு பயமா இருக்கு”, என்றவுடன், “உன்ன ஏன் டா அடிக்க போறா? உனக்கு போய் நோ சொல்லுவாளா என்ன?”, என்று அவனை பார்த்தாள்.
“சொல்லமாட்டானு நீ ஏன் சொல்ற?”, என்றவனுக்கு, “நீ ஒரு சப் கலெக்டர் டா, உனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல, நல்லவன், ரொம்ப கெரிங், ஸ்வீட், ரொம்ப லாஜிக்களும் இல்ல எமோஷனல் இல்ல, பர்பெக்ட்”, என்று சொல்லி முடிக்கவும், “நீயா இருந்தா அக்சப்ட் பண்ணுவியா?”, என்று அவளை பார்க்கவும், அவள் தடுமாறினாள்.
என்ன சொல்ல முடியும், அவளின் மனதை ஆட்சி செய்பவன், ஆனால் வேறுஒருத்தியை காதலிக்கிறேன் என்று கூறுகிறான்.
“அது என்ன நான், எந்த பொண்ணா இருந்தாலும் ஓகே தான் டா சொல்லுவா”, என்று சொல்லி அவள் மேலும் நடக்க எத்தனிக்க, அவளின் கையை பிடித்து இருந்தான் பார்த்தீவ்.
அவளும் திரும்பி பார்க்க, சட்டென அவளை இழுத்தவன், அவளின் இடையை அழுத்தி பிடித்து இருந்தான்.
வாகினி சுதாரிக்கும் முதல் அவனின் மற்றொரு கையால் கன்னத்தை பற்றியவன், அவளை இழுத்து இதழை சுவைக்க துவங்கி இருந்தான்.
முதலில் அதிர்ந்தாள், பின்பு அடங்கினாள்.
அவளின் கையும் தானாக அவனின் தலைமுடிக்குள் நுழைந்து கொண்டது.
இதை தான் பிரணவ் பார்த்து இருந்தான்.
புது இடம் என்பதால் அவனுக்கும் உறக்கம் வர வில்லை.
அவன் கண்ட காட்சியில் உறைந்து நின்றவன், அப்படியே வந்து வர்ஷாவில் மோதி நின்றான்.
இதே சமயம் இங்கு வாகினியோ மூச்சு எடுப்பதற்காக அவனை விட்டு விலகி நிற்க, இருவரும் ஒரு சேர, “ஐ லவ் யு”, என்று சொல்லவும், இருவருக்கும் உணர்வு பூர்வமான நிகழ்வு தான்!
அவளுடன் நிழலாக இருந்தவன் அவன், இன்று அவளுடன் வாழ்க்கை முழுவதும் நிஜமாக வர போகிறான்.
நினைக்கவே அவளுக்கு இனித்தது.
“அப்போ நான் தான் அந்த பொண்ணா?”, என்று அவனின் உடலை ஒட்டி நின்று கேட்க, “ஆமா டி… பதினேழு வயசுலயே எனக்குள்ள நீ வந்துட்ட அந்த விஷால் கிட்ட நீ சொன்னதை நான் கேட்டேன் அப்பவே முடிவு பண்ணிட்டேன் ஏதாச்சு சாதிச்சிட்டு தான் உன் முன்னாடி வந்து நிக்கனும்னு… அதான் மூணு வருஷம் சென்னை வரவே இல்ல”, என்று அவன் சொல்லவும், மொத்தமாக நெகிழ்ந்து விட்டாள்.
சொல்லி புரியவைப்பது மட்டும் காதல் அல்லவே, அவளுக்காக அவன் தள்ளி நின்று இருவரின் கனவையும் இன்று நிறைவேற்றி நின்று இருக்கின்றனர்.
“ரொம்ப என்ன இம்ப்ரெஸ் பண்ற டா பார்த்தீவ்”, என்றவள் அவனை இறுக அணைத்து இருந்தாள்.
அவனும் அவளை அணைத்து கொண்டான். நட்பாக துவங்கிய உறவு இன்று காதலாக மாறி இருந்தது.
“போலாமா?”, என்று அவன் கேட்கவும், அவளும் தலையசைக்க, இருவரும் கையை பிடித்து கொண்டு நடந்தனர்.
வாழ்க்கை முழுக்க கையை பிடிக்க வேண்டுமே!
இருவரும் இப்போது முன் வழியாக வரவும், பிரணவ் மற்றும் விக்ரம் அங்கே அமர்ந்து இருந்தனர்.
பிரணவ் வந்த உடனே விடயத்தை விக்ரமிற்கு சொல்லி தான் இருந்தான்.
“எல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணது தான்.. எனக்கு ஷாக்கிங்லாம் இல்ல”, என்று முடித்து விட்டான் விக்ரம்.
பிரணவ் அவனிடம் அவனுக்கும் சான்விக்கும் இருக்கும் உறவை பற்றி கேட்கவில்லை.
அது நாகரிகமும் அல்லவே!
விக்ரம் மற்றும் பிரணவை பார்க்க, சட்டென கையை விட போன வாகினியை விட்டுவிடாமல் பிடித்து கொண்டான் பார்த்தீவ்.
அவளோ பார்த்தீவை பார்த்து முறைக்க, அவன் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்கள் அருகே வந்து, “இன்னும் தூங்கலையா?”, என்று அவர்களை பார்த்து கேட்கவும், “நாங்களும் அதே கேள்வியை கேட்கலாமே?”, என்று பிரணவ் மறுகேள்வி கேட்டான்.
“சும்மா வாக்கிங் போயிட்டு வந்தோம்”, என்றவனை பார்த்து, “ஆமா வாக்கிங் தானே போனீங்க எப்படி இரண்டு பேரோட லிப்சும் வீங்கி இருக்கு?”, என்று கையை கட்டி கொண்டு கேட்ட பிராணாவிடம், “டேய் என்ன இப்பவே போலீஸ் மாறி இன்வெஸ்டிகஷன் பண்ற?”, என்று முடித்து இருந்தான் பார்த்தீவ்.
“கேட்ட கேள்விக்கு பதில் வரல”, என்று அவன் அங்கேயே நிற்க, வாகினிக்கு தான் வெக்கமாக இருந்தது.
“அது கொசு கடிச்சிருச்சு”, என்று பார்த்தீவ் சொல்லவும், “ஒஹ் ஒரே போல இரண்டு பேரையும் கடிச்சிருக்கு போல”, என்று நகைகளை வந்தன பிரணவ்வின் சொற்கள்.
பிரணவ்வின் பேச்சை வைத்தே வாகினி சற்று சுதாகரித்து கொண்டாள்.
“இப்போ என்ன டா உனக்கு பிரச்சனை?”, என்று நேரடியாகவே அவனை கேட்கவும், “ஐயோ டாக்டர் அம்மா எனக்கு ஒன்னும் இல்ல”, என்று பயந்தது போல நடித்து வெறுப்பேற்றினான்.
விக்ரமின் பார்வை அவர்கள் கையை தான் அழுத்தமாக பார்த்தது.
வாகினியும் விக்ரமை பார்க்க, அடுத்து விக்ரம் சொன்ன வார்த்தைகளில் வாகினியின் கண்களில் நீர் நிரம்பி விட்டது.
Very nice epi sis