26. சத்திரியனா? சாணக்கியனா?

5
(35)

அத்தியாயம் 26

 

விக்ரம் வாகினியை பார்த்தவன், அடுத்து பார்த்தீவை பார்த்து, ‘இங்க பாருங்க மாமா, என் அக்கா கண்ணுல இருந்து தண்ணி வந்துச்சு அப்புறம் உங்க கண்ணு இருக்காதுன்னு டயலாக்லாம் விட மாட்டேன், என் அக்கா கண்ணு கலங்குனாலே கண்டிப்பா நீங்க இருக்க மாட்டிங்க… அதுவும் இல்லமா அவ எனக்கு அக்கா இல்ல அம்மாக்கும் மேல.. இதெல்லாம் நான் சொல்லணும்னு இல்ல.. இருந்தாலும் சொல்றேன்… ஷி இஸ் யுவர் ரெஸ்பான்சிபிலிட்டி நொவ்… நெவெர் எவர் ஹார்ட் ஹேர்”, என்றவனின் குரலில் வாகினி தான் உருகி விட்டாள்.

அன்னைக்கும் மேலே என்று சொல்லிவிட்டான் அல்லவா! இதற்கும் மேல் என்ன வேண்டும்?

அவளின் மார்பில் மகவை சுமக்கும் முன் அவளது தம்பியால் அமுதம் சுரந்து இருக்குமோ என்னவோ!

அத்தனை நெகிழ்ச்சி! “விக்ரம்”, என்றவளின் குரல் தழுதழுக்க, “என்ன விட்டுட்டு போய்டுவல?”, என்றவனின் குரலும் உடைந்து விட்டது. ஒரு வயது குழந்தையில் இருந்து அவள் தானே அவனை பார்த்து கொள்கிறாள்.

அவன் அதிகமா உண்டது கூட வாகினியின் கைகளால் தான்.

“டேய் தூசு கூட அவ கண்ணுல விழாம பார்த்துக்கறேன் டா”, என்று பார்த்தீவ் சொல்லவும், “அப்படி அவன் விழ விட்டா நானே அண்ணிக்காக என் அண்ணாவை அடிக்கிறேன் டா”, என்று பிரணவ் சொல்லவும், பார்த்தீவ் அவனை முறைத்தான்.

“நல்ல தம்பி”, என்று வாகினி சிரிக்கவும், “எப்படி வந்து சிக்கிருக்கேன் பாரு டி… இன்னும் எதிர்க்க ஒருத்தன் இருக்கான் அவனும் வந்தானா மொத்தமா என்ன வச்சி செஞ்சிருவானுங்க”, என்று பார்த்தீவ் சொல்லவும், விக்ரம், வாகினி மற்றும் பிரணவ் மூவரும் சிரித்து விட்டனர்.

“எப்போ மேரேஜ் பண்ணிக்க போறீங்க?”, என்று விக்ரம் கேட்கவும், “இன்னும் இரண்டு வருஷம் போகட்டும் உன் அக்கா பிஜி முடிச்ச பிறகு பாப்போம்”, என்று அவன் சொல்லவும், விக்ரம் மற்றும் வாகினி இருவரும் அவனை மரியாதையுடன் தான் பார்த்தனர்.

காதல் இருந்தாலும் தன்னவளின் கனவிற்காக காத்திருப்பவர்கள் மிக மிக குறைவு அல்லவா! பார்த்தீவும் அப்படி தான், அவனின் தாய் விசாலாட்சியின் வளர்ப்பு அப்படி!

விஸ்வநாதனையும் இதற்கு காரணமாக சொல்ல வேண்டும், விசாலாச்சி மகப்பேறு மருத்துவர் என்பதால், எத்தனையோ தினங்கள் பிள்ளைகளை அவர் தான் பார்த்துக்கொள்வார்.

அன்னை தந்தையின் அன்பை மட்டும் இல்லாமல், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வைத்து இருக்கும் மரியாதையையும் பார்த்து வளர்ந்தவர்கள் அவர்கள்!

“எப்படியா இருந்தாலும் வீட்லலாம் ஓகே சொல்லிருவாங்க”, என்று பிரணவ் சொல்லவும், “கண்டிப்பா.. சப் கலெக்டர் மாப்பிள்ளை வேணாம்னு வேதாந்தம் சொல்ல மாட்டாரு”, என்று விக்ரமும் சொல்ல, “டேய் போதும் டா வாங்க தூங்கலாம்”, என்று பார்த்தீவ் அனைவரையும் அழைத்து சென்று விட்டான்.

நால்வரும் எப்போதுமே ஒன்றாக இருந்து பழகியவர்கள்.

பிரணவிற்கும் வாகினி என்றால் எப்பவும் ஒரு தனி மரியாதை தான். நண்பனின் சகோதரி, சகோதரனின் நண்பி என்பதை தாண்டி, அவளிடம் எப்போதும் ஒரு கருணை இருக்கும், அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பழகுவாள்.

விஜயிடம் கூட அவளுக்கு என்றுமே அக்கறை உண்டு. வர்ஷாவிடம் அவனை பற்றி விசாரித்து கொள்வாள்.

அடுத்த நாள் விடிய, அனைவரும் வெளியே வர, “காலைல சாப்பிட்டீங்களா?”, என்று பார்த்தீவ் கேட்கவும், “இல்ல கேப்டன்… இவளுங்களா சமைப்பாளுங்க?”, என்று ராகவ் சொல்லவும், “அது என்ன டா இவளுங்க ஏன் மாடு மாறி வளைந்து இருக்கீங்களே நீங்க சமைக்க வேண்டியது தானே”, என்று பார்த்தீவ் சொல்லவும், ‘அப்படி சொல்லுங்க அண்ணா”, என்று சான்வி பார்த்தீவ் அருகே வந்து நின்றாள்.

“நீங்க சாப்பிட்டீங்களா கேப்டன்?”, என்று விஜய் கேட்டுக்கொண்டே வர, ‘இல்ல டா.. விக்ரம், பிரணவ் இரண்டு பேறும் சமைச்சிக்கிட்டு இருக்கானுங்க.. அப்புறம் என்ன கேப்டன் மாமானு கூப்பிடு”, என்றவுடன், விஜயின் கண்கள் சுருங்கி விரிந்தன.

“வாவ்வ்வ் மாமாவா?”, என்று வர்ஷா அருகே வந்து கேட்கவும், “ஆமா கூடிய சீக்கிரம் உன் அக்காவை மொத்தமா என் வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவேன் வர்ஷா”, என்று அவன் வர்ஷாவின் தோளில் கைபோட்டு கொள்ளவும், “மாஸ் மாமா”, என்று அவளும் அவனை அணைத்து கொண்டாள்.

“என்ன சாணக்கியன் சார் அப்படியே நிக்குறீங்க?”, என்று அவன் கேட்கவும், “ஒன்னும் இல்ல’, என்று முடித்து கொண்டான்.

“மாமான்னு கூப்பிட்டா என்ன முத்து உதிர்ந்திருமா?”, என்று அவன் கேட்கவும், “ம்கூம் அவன் அக்காவையே அக்கானு கூப்பிட்டது இல்ல கேப்டன் விடுங்க”, என்று ராகவ் சொல்லிவிட்டான்.

பார்த்தீவுக்கும் அவனின் தயக்கம் புரிந்தது தான்.

“அதுக்காக என் கிட்ட பழைய மாறி பேசமா இருக்காதா டா… கேப்டனு கூப்பிட்டாலும் ஓகே தான்”, என்று விஜயை இலகுவாக எண்ணினான்.

பார்த்தீவ் மனிதர்களை ஏழுகுவாக கையாள்பவன், அவன் எத்தனை மனிதர்களை அவனின் அன்றாட வாழ்வில் பார்க்கிறான். விஜய் அவனுக்கு என்றுமே சிறுகுழந்தை தான்.

அவனை விட ஆறு வயது சிறியவன் அல்லவா, அவனையும் தானே சிறுவயதில் இருந்தே பார்க்கிறான். வர்ஷா வெகுளி என்றால் விஜய் அமைதி. அவனுக்கு விக்ரமிடம் இருக்கும் பகைமையை தவிர அவன் அனைவரிடமும் புன்னகைத்து செல்பவன் தான்.

‘வாங்க சாப்பிடலாம்”, என்று விக்ரமின் குரல் கேட்க, “வாங்க டா சாப்பிடலாம்”, என்று விஜய் மற்றும் ராகவை பார்க்க, அவர்களுக்கு தான் சிறு தயக்கம்.

“இல்ல பரவால்ல கேப்டன்”, என்று ராகவ் சொல்லவும், “எல்லாரையும் வர சொல்லு அண்ணா”, என்று இப்போது பிரணவ்வின் குரல் ஒலித்தது.

“அடேய் வாங்க இல்ல இப்போ வாகினி வருவா”, என்று சொல்லவும், அமைதியாக உள்ளே நுழைந்தனர்.

அங்கே வாகினி தான் உணவு எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.

“என்ன பிரேக் பாஸ்ட்?”, என்று வர்ஷா கேட்கவும், “உனக்கு பிடிச்ச ரெட் சாஸ் பாஸ்டா அப்படினு சொல்ல ஆசை தான்… ஆனா பாரு இட்லி, பொங்கல், சாம்பார், சட்னி தான்”, என்று பிரணவ் முடித்து இருந்தான்.

“போடா போண்டா வாயா”, என்றவள் அவளே அனைத்தையும் எடுத்து சாப்பிட ஆரம்பிக்க, அனைவரும் அவர்களுக்கான உணவை சாப்பிட துவங்கினர்.

விக்ரம் மற்றும் பிரணவ் தான் சோபாவில் அமர்ந்து விட்டனர்.

விஜய் ராகவிற்காக தான்.

“சாம்பார் செம்ம அண்ணா”, என்று வர்ஷா பொங்கலையும் சாம்பாரையும் குழைத்து பிசைந்து சாப்பிட்டு கொண்டு கூற, “சாம்பார் வச்சது நான் தான் வர மொளகா”, என்று பிரணவ் சொல்லவும், “அதான் உன் மொகர மாறி இருக்கு”, என்று வர்ஷாவும் சொல்லினாள்.

“சரி தான் போ டி”, என்று அவனும் சாப்பிட்டு கொண்டு இருந்தான்.

“எப்போ கல்யாணம்?”, என்று விஜய் நேரடியாக பார்த்தீவை பார்த்து கேட்க, “இவை பிஜி முடிக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்”, என்று சொல்லிவிட்டான்.

“மாஸ் பண்றீங்க கேப்டன் “, என்று ராகவ் சொல்லளவும், இதே சமயம் சான்வி சாப்பிட்டு எழ முற்பட, வாகினி அவளுக்கு இன்னொரு இட்லி வைத்து விட்டாள்.

“சாப்பிடு”, என்று அவள் கட்டளை இட, அதற்குமேல் அவளால் மாட்டேன் என்று சொல்லிவிட முடியுமா என்ன?

“நீங்க தான் கரெக்ட் இவளுக்கு… வீட்ல அம்மா சொன்னா கூட கேக்கறது இல்ல”, என்று ராகவ் குற்ற பத்திரிகை வாசிக்கவும், இதே சமயம் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

அனைவரும் திரும்பி பார்க்க, சாதனா மற்றும் மைத்திரி தான் நின்று கொண்டு இருந்தனர்.

“உள்ள வாங்க”, என்ற வாகினியின் குரலில் இருவரும் உள்ளே நுழைந்தனர்.

“என்ன இப்போ என்ன பெட்?”, என்று அவள் புருவம் உயர்த்தி கேட்கவும், “இல்ல மேம்.. அது”, என்று மைத்திரி ஆரம்பிக்கும் போதே, “ஷட் அப்.. அறிவு இருக்கா உனக்கு? நேத்து மட்டும் விஜய் இல்லாம போயிருந்தா என்ன ஆகியிருக்கும்? உனக்கு என் அப்பா தான் கார்டியன் தெரியுமா? கொஞ்சமாச்சு ரெஸ்பான்ஸிபிளா நடந்துக்கோ.. பதினாறு வயசு ஆகுது… பெட் மண்ணாங்கட்டினுக்கு இப்படி தான் இருப்பிங்களா?”, என்று அவள் சீறவும், மைத்திரியின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

“விடு வாகினி”, என்று பார்த்தீவ் சொல்லவும், ‘நீ அமைதியா இரு பார்த்தீவ்… கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா என்ன ஆகியிருக்கும்?”, என்றவளின் கோவம் குறையவே இல்லை.

“போதும் போதும் அக்கா… அவளே பாவம்… சாப்பிட்டீங்களா?”, என்று விக்ரம் அவர்களை பார்த்து கேட்கவும், “ஹான் சார்.. இந்தாங்க”, என்று மைத்திரி ஒரு பிரசிலேட்டை அவனின் முன் நீட்டினாள்.

அதில் வி V என்று ஆங்கிலத்தில் போட பட்டு இருந்தது.

“என்ன இது?”, என்று அவன் கேட்கவும், “உங்க பிரேஸ்லெட்”, என்றவளை பார்த்து, “என்னோடது இல்லையே”, என்று அவன் சொல்லிமுடிக்கும் முன்னே, “அது என்னோடது”, என்று கணீர் என்று ஒலித்தது விஜயின் குரல்.

“இவரு தான் டி உன்ன நேத்து தூக்குனது”, என்று சாதனா அவளின் செவிகளில் முணுமுணுக்க, மைத்திரி விஜயை நோக்கி சென்றவள், அவனிடம் பிரேஸ்லெட்டை நீட்ட, அவனும் வாங்கி கொண்டான்.

அவள் அவன் முகத்தை பார்க்கவே இல்லை. ஆனால் அவன் விழிகள் அவளை மட்டும் தான் பார்த்து கொண்டு இருந்தது.

அழுத்தத்தால் அவளின் நாசி சிவந்து, உதடு தடித்து இருந்தவளை அல்லி கொள்ள அவனின் கைகள் பரபரத்தன.

“ரொம்ப தேங்க்ஸ் சார்”, என்று அவள் சொல்லவும், “விஜய்”, என்று அவன் சொல்லவும், அவனை சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

“விஜய சாணக்கியன்”, என்று அழுத்தமாக அவன் சொல்லவும், “என்னோட பேர சொல்லி கூப்பிடு”, என்று வந்தன அவனின் வார்த்தைகள்.

“என்ன டா உன் தம்பி டூயட் பாட நினைக்கிறானா?”, என்று பிரணவ் நடப்பவற்றை பார்த்து கூறவும், விக்ரமின் இதழ்களில் விரக்தி புன்னகை.

“அவன் போகாத ஊருக்கு வழி தேட ஆரம்பிச்சிருக்கான்… எங்க போய் முடிய போகுதோ?”, என்று விக்ரம் சொல்லவும், “என்ன டா இப்படி சொல்ற?”, என்றவனுக்கு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தான்.

மைத்திரியோ, “தேங்க்ஸ் மிஸ்டர் விஜய்”, என்று சொல்லவும், “விஜய் மட்டும் போதும்”,என்றவனிடம், “தேங்க்ஸ் விஜய்”, என்று சொல்லிவிட்டு திரும்பி விட்டாள்.

ஆனால் அவளின் கண்கள் அவனை முழுதாக அளந்தன. அழகன் அவன்!

பதினாறு வயது பருவ மங்கையின் மனதில் காதலை புகுத்தும் மாயக்கண்ணன் அவன்! அவளின் மனதில் புகுந்தும் விட்டான்.

“நாங்க வரோம் மேம்”, என்று மைத்திரி சொல்லவும், “பை மேம்”, என்று சாதனாவும் சொல்லி திரும்பும் போது அவர்களை நிறுத்தி இருந்தான் ராகவ்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 35

No votes so far! Be the first to rate this post.

1 thought on “26. சத்திரியனா? சாணக்கியனா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!