27. சத்திரியனா? சாணக்கியனா?

5
(31)

அத்தியாயம் 27

 

“நீங்களும் வாங்களேன் எங்க கூட சுத்தி பார்க்கலாம்”, என்று ராகவ் சொல்லவும், வாகினியின் கண்கள் அவனை தான் பார்த்தன.

அவனோ சட்டென, “இல்ல ஆர்பனேஜ்ல வளந்தவங்க இப்படி வெளிய வந்து இருக்க மாட்டாங்கன்னு சொன்னேன்”, என்று அவன் சொல்லவும், “என்சிசி கேம்ப் முடிஞ்சிதா?”, என்று வாகினி கேட்கவும், “ம்ம் முடிஞ்சுது மேம்… எங்களை மூணு நாள் சுத்தி பார்க்க கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காங்க”, என்று அவர்கள் இருவரும் சொல்லவும், “நம்மளே கூட்டிட்டு போகலாம்”, என்று விக்ரமும் சொன்னான்.

“நிறைய ப்ரொசீஜர்ஸ் இருக்கும் டா”, என்று பார்த்தீவ் சொல்லவும், ‘சென்னை சப் கலெக்டர் நீங்களே இருக்கீங்க வாங்க”, என்றவுடன், “என்ன வச்சி செயிரிங்க டா”, என்று அவன் சலித்து கொண்டான்.

“வாங்க உங்க ஸ்கூல்ல பேசுறேன்”, என்று பார்த்தீவ் தான் பின்பு அவர்கள் பள்ளி நிர்வாகத்திடமும் பேசி அவர்களை அழைத்து வந்தான்.

முதலில் தயங்கினார்கள் தான், பின்பு வேதாந்தத்திற்கும் அழைத்து விடயத்தை சொல்லி, அவர்களை அழைத்து வந்து விட்டார்கள். இரவு எட்டு மணிக்குள்ளாக கூட்டி வந்து விட வேண்டும் என்கிற நிபந்தனையின் பெயரில் தான் வெளியே கூட்டி வந்தனர்.

முதலில் அவர்கள் அனைவருக்கும் தொட்டபெட்டா பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது.

மைத்திரியிடம் வர்ஷா பெரிதாக பேசவில்லை. ஆனால் சான்வி நன்றாக பேசி கொண்டு வந்தாள்.

“நீ பேசலையா?”, என்று விக்ரம் கேட்டதற்கு, “எனக்கு என்னவோ அவங்கள பிடிக்கல”, என்று முடித்து கொண்டாள்.

“ஏன் டி வர மொளகா பொறாமையா?”, என்று பிரணவ் அவளை சீண்டவும், “எனக்கு என்ன பொறாமை?”, என்று அவளும் சீற, இருவரும் சண்டை போட ஆரம்பித்து விட்டனர்.

சாதனாவும் சான்வியுடன் கதை அடித்து கொண்டு தான் வந்தாள்.

வர்ஷா விக்ரமிடம் உரையாடி கொண்டு வந்து கொண்டிருந்தாள்.

அனைவரும் ஒன்றாக செல்வதால், ஒரு டெம்போ தான் பார்த்தீவ் சொல்லி இருந்தான்.

விஜய் முதலில் மறுத்தாலும், பார்த்தீவ் அவனை எப்படியோ சமாளித்து விட்டான்.

ஒரு வழியாக தொட்டபெட்டா வந்து அடைந்து விட்டனர்.

அங்கே வந்து இறங்கியதும் நல்ல குளிர். உச்சி அல்லவா அது, காணற்கரிய இயற்கை அழகை ரசிக துவங்கினர்.

மைத்திரியும், சாதனாவும் ஜாக்கெட் எதுவும் அணிந்து வர வில்லை. குளிர் அவர்களை உலுக்கி எடுத்து கொண்டு இருந்தது.

மைத்திரியின் முன் சட்டென ஒரு ஜாக்கெட் நீட்ட பட்டது. விஜய் தான் நீட்டி இருந்தான். அவன் அணிந்து இருந்த ஜாக்கெட் அல்ல, வேறு ஒன்றை தான் கொடுத்தான்.

“போட்டுக்கோ இல்லனா வெறச்சிறுவ”, என்று அவன் சொல்லவும், அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை.

“தேங்க்ஸ்”, என்று சொல்லி வாங்கி கொண்டாள்.

சாதனாவிற்கு வாகினியே அவளின் ஒரு ஜாக்கெட் கொடுத்து இருந்தாள்.

“தேங்க்ஸ் மேம்”, என்று அவள் புன்னகையுடன் வாங்கி கொண்டு அணிந்து கொண்டாள்.

ராகவ் மற்றும் சான்வி புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்கள்.

அவர்களும் நல்ல அண்ணன் தங்கை தான். அவர்கள் நம் பார்க்கும் சாதாரண அண்ணன் தங்கை போல நிறைய சண்டை இடுவார்கள்.

“டேய் அண்ணா என்ன தனியா போட்டோ எடு”, என்று சான்வி சொல்லவும், “எல்லாம் என் நேரம் டி”, என்று சலித்து கொண்டே அவளை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தான் ராகவ்.

“எங்களையும் போட்டோ எடுக்குறீங்களா?”, என்று சாதனாவும் மைத்திரியும் வந்து நிற்க, “வாங்க”, என்று அவர்களின் கையை இழுத்து பிடித்து நிற்க வைத்து இருந்தாள் சான்வி.

அவர்களின் அன்னை தாமரையின் வளர்ப்பு அப்படி. சான்வி மிக மிக மிருதுவானானவள். அனைவரிடமும் சட்டென பழகி விடுவாள்.

மைத்திரி மற்றும் சாதனாவிடமும் ஆகையால் தான் எளிதாக பழகி விட்டாள். அவளுக்கு ஏற்ற தாழ்வு எல்லாம் பார்த்து பழகும் பழக்கம் கிடையாது.

அது தான் விக்ரமையும் ஈர்த்தது.

“என்னையும் சேர்த்து போட்டோ எடு டா”, என்று பார்த்தீவ் மூன்று பெண்களின் நடுவே வந்து நிற்க, “என்ன மன்மதன் போஸ்சா மாமா”, என்று வர்ஷா அவனை சீண்ட, “அடியே எல்லாரும் தங்கச்சி மாறி டி என் செல்ல மச்சினிச்சி… வேணும்னா நீயும் வா”, என்று அவன் அழைக்கவும், அவளும் அவனின் அருகில் போய் நின்று கொண்டாள்.

“பாருங்க அண்ணி எங்க அண்ணன் கலியுக கண்ணன் மாறி போஸ் கொடுக்குறேன்”, என்று பிரணவ் போட்டு கொடுக்க, அது பார்த்தீவின் காதுகளையும் சென்று அடைந்தது.

“டேய் பொறாமை பிடிச்சவனே, உனக்கு ஏன் டா இந்த வன்மம்? நீ என் தம்பி இல்ல எனக்கு சகுனி”, என்று பார்த்தீவ் கத்தவும், விக்ரமோ சிரித்து கொண்டு, “ஆமா ஆமா டெனிம் ஜீன்ஸ் போட்ட சகுனி”, என்று சொல்லவும், அவனின் முதுகில் அடித்து இருந்தான் பிரணவ்.

இப்படியாக அவர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் விளையாடி கொண்டு இருக்கையில், மைத்திரி இயற்கை அழகை ரசிக்கும் காட்சியை அவனின் போனில் புகைப்படம் எடுத்து இருந்தான் விஜய்.

முதன் முறையாக ஒரு பெண்ணின் புகைப்படம், வர்ஷா மற்றும் வாகினி இருவரும் அவனுடன் புகைப்படம் எல்லாம் பெரிதாக எடுத்து கொண்டது இல்லை. சான்வியும் அவனுடன் பெரிதாக பேசமாட்டாள். ஒரு விஸ்வாமித்ர வாழ்க்கை தான் அவனுடையது.

சாணக்கியனின் மனதை மயக்கிய அப்சரஸ் மைத்திரி என்று கூட சொல்லலாம்.

அவர்களின் நாள் அப்படியே கழிய, மைத்திரி மற்றும் சாதனாவை அவர்கள் தங்கி இருக்கும் இடத்தில் இறக்கி விட்டு அவர்களும் சென்று விட்டனர்.

இப்படியாக அவர்களின் மூன்று நாட்கள் இனிதே கழிந்தது. மைத்திரி மற்றும் சாதனாவிற்கும் கூட அவர்கள் அனைவரையும் பிடித்து தான் இருந்தது. பார்த்தீவ் மற்றும் பிரணவ் அவர்களை நன்றாகவே கவனித்து கொண்டனர். பெண் பிள்ளைகள் இல்லாமல் வளரும் வீடு என்பதால், தங்கைகள் போல தான் பார்த்தனர்.

“இதோட இந்த மாறி சாகசம் எல்லாம் பண்ண கூடாது”, என்று அவர்களுக்கு அறிவுரை கூறவும் பார்த்தீவ் தவறவில்லை.

“கண்டிப்பா அண்ணா”, என்று சொல்லிவிட்டு, இருவரும் சென்று விட்டனர்.

அவர்களும் சென்னை வந்து சேரவும், பிறகு அனைவரும் அவர்களின் இயல்பு வாழ்விற்கு சென்று விட்டனர்.

ஒரு வருடம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. இறுதி ஆண்டு முடிந்ததும் விக்ரமிற்கு எம்பிஏ இங்கிலாந்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

“நீங்க போய் தான் ஆகணுமா அண்ணா?”, என்று வர்ஷா அவனின் கையை பிடித்து கொண்டு கேட்க, “அவன் போய் தான் ஆகணும்…”, என்று வாகினி விடாப்பிடியாக நிற்க, வர்ஷா தான் அழுது கரைந்து விட்டாள்.

விக்ரம் அனைவருக்கும் ஒரு ஹோட்டலில் பார்ட்டி கொடுப்பதற்காக அழைத்து இருந்தான். விஜய் மற்றும் ராகவ் வர வில்லை. சான்வி வந்து இருந்தாள்.

“என்ன டா இங்கிலாந்துல ஏதாச்சு நல்லா பொண்ணா பார்த்து கரெக்ட் பண்ணிக்கோ”, என்று பார்த்தீவ் சொல்லவும், சான்வியின் முகமே மாறி விட்டது.

வாகினிக்கும் பார்த்தீவிற்கும் சான்வி மற்றும் விக்ரமின் மேல் சிறு நெருடல் இருந்தது தான். இருந்தாலும் இன்னும் சான்வி பள்ளி படிப்பை கூட முடிக்கவில்லை என்பதால் அவர்கள் விட்டுவிட்டனர். இப்போது தான் பள்ளி படிப்பையே முடித்து இருக்கிறாள்.

“நல்ல பொண்ணா கிடைச்சா டெட் பண்ணலாம் மாமா”, என்று அவன் சாதாரணமாக சொல்லவும், அவனின் காலை அவளின் ஹீல்ஸால் ஓங்கி மிதித்து இருந்தாள் சான்வி, ஆனால் கத்தியதோ பிரணவ்.

தன்னவள் இதை தான் செய்வாள் என்று முன்கூட்டையே அறிந்தவன், அவனின் காலை பின்னே இழுத்து கொண்டான்.

“சாரி அண்ணா”, என்று சான்வி கூறவும், “கிரதகா உன்னால தான் டா”, என்று பிரணவ் விக்ரமை பார்த்து நினைக்க, அவனோ ஏதும் அறியா பிள்ளை போல சிரித்து கொண்டான்.

“நான் வாஷ் ரூம் போய்ட்டு வரேன்”, என்று சான்வி எழுந்து செல்ல, பின்னாலேயே விக்ரமும் சென்றான். வர்ஷாவும் பிரணவ்வும் சிரித்து கொள்ள, வாகினியும் பார்த்தீவும் சலிப்பாக தலையை ஆட்டி கொண்டனர்.

அவள் எங்கு வாஷ்ரூம் சென்றால், ஹோட்டலின் பின்னே இருக்கும் பூங்கா சென்றவளை, இழுத்து இடையை பிடித்து நிறுத்தி இருந்தான் விக்ரம்.

“என்ன டி?”, என்று அவன் கேட்கவும், “அதான் வேற ஒருத்திய டெட் பண்ண போறிங்களே மிஸ்டர் விக்ரம சத்திரியன் அப்புறம் நான் எதுக்கு?”, என்றவளை அதற்கு மேல் பேச விடாமல், அவளின் இதழை சிறை எடுத்து இருந்தான் சத்திரியன்.

முதலில் அவனின் முத்தத்தில் மூழ்கி இருந்தவள், அவளின் கண்களை திறக்க, அவளின் கண்கள் விழுந்து விடும் அளவு திறந்து கொண்டது.

அவனை விளக்க பார்க்க, அவன் விலகினால் தானே, அவளை மேலும் நெருக்கி கொண்டான்.

அவளோ முழு பலத்தையும் கொண்டு தள்ள, அவனோ கடுப்பாக, “இப்போ என்ன டி?”, என்று கோவமாக கேட்கவும், அவளோ கண்களாலேயே அவனை பின்னால் பார்க்கும் படி சைகை செய்தாள்.

பார்த்தவனுக்கு தூக்கி வாரி போட்டது. பின்னால் வர்ஷா, பிரணவ், வாகினி மற்றும் பார்த்தீவ் கைகளை கட்டி கொண்டு நின்று இருந்தார்கள்.

“அவ இன்னும் மைனார் தான் டா இது கிரைம் தெரியுமா?”, என்று பார்த்தீவ் கேட்கவும், “காதலுக்கு எதுவும் தடை இல்லை மாமா”, என்று சொல்லிக்கொண்டே வாகினியை பார்த்தவன், “அக்கா நான்..”, என்று அவன் ஆரம்பிக்கும் முன்னே, “அவ படிக்கட்டும் விக்ரம், அவங்க அப்பாவோட இன்ஸ்டிடூஷன்ஸ் எல்லாமே அவளும் ராகவும் தான் பார்க்கணும்… அவ அந்த பொசிஷன் வர வரைக்கும் அவளை டிஸ்ட்ராக்ட் ஆகம இருக்க சொல்லு”, என்று முடித்து விட்டாள்.

“சாரி அண்ணி”, என்று சான்வி குரல் வரவும், “நீ அண்ணின்னு சொல்லும் போதே எனக்கு தெரியும் டி… என் தம்பிய ஓழுங்கா பார்த்துக்கோ… நீயும் அவளை பார்த்துக்கோ டா”, என்று சொல்லி நகர்ந்து விட்டாள்.

அவளின் கண்முன் வளர்ந்தவள் சான்வி, வர்ஷாவை போல் தான் அவளும்.

“உன்ன எல்லாம் அண்ணின்னு கூப்பிடணுமா டி?”, என்று வர்ஷா சலித்து கொள்ள, “நீ வேணும்னா சொல்லு அண்ணியை மாத்திரலாம்”, என்று அவன் சொல்லவும், அவனின் கையை கிள்ளி இருந்தாள்.

“வலிக்குது டி டெவில்”, என்று சொல்லவும், “ம்கூம் நான் டெவில் இவரு ஏஞ்சல்”, என்று அவளும் சலிப்பாக சென்று விட்டாள்.

இப்படியாக அவர்களின் அன்றைய நாள் கழிய, அடுத்த ஒரு வாரத்தில் விக்ரமும் இங்கிலாந்து சென்று விட்டான். தணிகாசலமும் வர்ஷாவும் வந்து இருந்தார்கள்.

“இவளை பார்த்துக்கோங்க தாத்தா”, என்று சொல்லி அவரை அணைத்து விடுவித்து சென்றான்.

ஒரு வருடம் கழிய, வாகினிக்கு படிப்பும் முடிய, அவளுக்கு வரன் பார்க்க துவங்கி இருந்தார் வேதாந்தம்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 31

No votes so far! Be the first to rate this post.

1 thought on “27. சத்திரியனா? சாணக்கியனா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!