விக்ரமிற்கு அழைத்து விடயத்தை கூறி இருந்தார் வேதாந்தம்.
“உன் அக்காவுக்கு மாப்பிளை பார்க்கலாம்னு இருக்கேன் டா”, என்று அவர் சொல்லவும், அவனோ குரலை செருமி கொண்டு, “உங்க பொண்ணு கிட்ட இத சொல்லுங்க அப்புறம் பாப்போம்”, என்று சொல்லி வைத்து விட்டான்.
அடுத்து அவன் அழைத்து என்னவோ வாகினிக்கு தான்.
அவளும் அழைப்பை ஏற்றவள், ‘சொல்லு டா என்ன திடீர்னு கால் பண்ணிருக்க?”, என்று கேட்கவும், “உனக்கு அப்பா மாப்பிளை பார்க்க போறாராம் டாக்டர் அம்மா… எப்போ சொல்ல போற உன் கலியுகத்தின் கண் கண்ட காதல் காவியத்தை?”, என்று அவன் கிண்டல் தொனியில் கேட்டாலும் சற்று அவன் குரலில் பதட்டமும் இருந்தது.
அவளோ ஆழ்ந்த மூச்சை எடுத்தவள், “இன்னைக்கு பார்த்தீவ் கூடவே போய் சொல்லிடறேன்”, என்று வைத்து விட்டாள்.
அவள் அடுத்து பார்த்தீவிற்கு அழைத்து விடயத்தை சொல்லி இருந்தாள்.
பார்த்தீவ் விஸ்வநாதன் மற்றும் விசாலச்சியை வாகினியின் வீட்டிற்கு மாலை வர சொல்லி இருந்தான்.
அவர்களை மாலை பார்த்த வேதாந்தம், “என்ன டா தீடிர் விஜயம்?”, என்று கேட்கவும், ‘தெரியல டா பார்த்தீவ் தான் வர சொன்னான்”, என்று விஸ்வநாதன் வந்து அமர்ந்து விட்டார்.
“பிரணவ் யுபிஎஸ்சி கிளியர் பண்ணிட்டான்ல?”, என்று அவர் கேட்கவும், “ஆமா அண்ணா எப்படியோ அவனும் ஏசிபி ஆகிருவான். அப்பா கமிஷனர், ஒரு மகன் கலெக்டர் இன்னொரு மகன் ஏசிபி… நான் மட்டும் தான் குரூப்ல டூப் மாறி டாக்டர்ரா இருக்கேன்”, என்று விசாலட்ச்சி சொல்லவும், “வேணும்னா டாக்டர் மருமகளா பாரு மா”, என்று வேதாந்தம் சொல்லவும், விஸ்வநாதனும் விசாலாட்சியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
“என்ன ஏதாவது விஷயம் இருக்கா?”, என்று அவர் நேரடியாக கேட்கவும், “வாகினிய பார்த்தீவ்க்கு கேக்கலாமான்னு இருக்கோம்”, என்று அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, உள்ளே வாகினியும் பார்த்தீவும் நுழைந்தனர்.
இருவரும் கை பிடித்து கொண்டு வருவதை வைத்தே விடயம் புரிந்து விட்டது. அவர்களை பெற்றவர்கள் அதுவும் எவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் சொல்லி தெரிய வேண்டுமா என்ன?
“அப்போ கல்யாணம் பிக்ஸ் பண்ணிக்கலாம் டா”, என்று முடித்து இருந்தார் வேதாந்தம்.
“அப்பா…”, என்று வாகினி ஆரம்பிக்கும் முன்னே, “உனக்கும் பார்த்தீவுக்கும் தான்”, என்று அவர் முடிக்கவும், பார்த்தீவ் மற்றும் வாகினியின் முகத்தில் மின்னல் வெட்டி சென்றது.
“தேங்க்ஸ் ப்பா”, என்று அவள் அவளின் தந்தையை அணைத்து கொள்ள, ‘உன் மாமியார் தான் இத பத்தி பேசிகிட்டு இருந்தாங்க… அதுக்குள்ளே நீங்களே கைய பிடிச்சிக்கிட்டு வந்துட்டீங்க”, என்று அவர் சொல்லவும், “அப்படியா அம்மா?”, என்று பார்த்தீவ் கேட்கவும், “எனக்கு டாக்டர் மருமக வேண்டும் டா… அதுக்காக”, என்று அவரும் முடித்து கொண்டார்.
“அடுத்த மாசம் விக்ரம் வரான் நல்ல முகூர்த்த நாள் இருந்தா
அப்பவே வச்சிக்கலாம்”, என்று வேதாந்தம் சொல்லவும், அடுத்து கல்யாண வேலைகளை ஆரம்பித்து இருந்தனர்.
நல்ல முகூர்த்த நாளும் அமைந்து விட்டது.
விஸ்வனானதும் விசாலாட்சியும் சென்று கலாவதிக்கும் கூட பத்திரிகை கொடுத்தார்கள்.
“பாக்குறேன்”, என்பதோடு முடித்து விட்டார்.
வேதாந்தம் கலாவதியின் தந்தை தணிகாச்சலத்திற்கு ஒரு கோவிலில் வைத்து பத்திரிக்கை தந்து, “நீங்க கண்டிப்பா வரணும் மாமா… வர்ஷா விஜயையும் கூட்டிகிட்டு வாங்க… முடிஞ்சா உங்க பொண்ணையும் மாப்பிள்ளையையும் கூட”, என்று சொல்லவும், “வர்ஷா விஜய் வருவாங்க மாப்பிள்ளை… ஸ்ரீதரும் வருவாரு அவளை பத்தி தெரியல”, என்று சொல்லி விட்டார்.
விஸ்வநாதன் சென்று ஜெய் ஷங்கர் வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க, “வாகினி நல்ல பொண்ணு தான்… ஆனா நான் வர மாட்டேன் டா கல்யாணத்துக்கு…”, என்று ஜெய் ஷங்கர் கூறவும், “அவரு கெடக்குறாரு அண்ணா… நானும் என் பசங்களும் கண்டிப்பா வருவோம்”, என்று தாமரை சொல்லவும், விஸ்வநாதன் எதிர் பார்த்த ஒன்று தானே இது, ஆகையால் அவரும் எதுவும் சொல்லாமல் சென்று விட்டார்.
விக்ரமும் அவனின் ஒரு மாத விடுமுறைக்கு வந்த சமயம் தான் திருமணம் இருக்கவிருந்தது.
விக்ரமை அழைக்க, சான்வி, வர்ஷா, பார்த்தீவ் மற்றும் வாகினி வந்து இருந்தனர்.
அவர்களே அழைத்து வருவதாக சொல்லி விட, வேதாந்தம் வர வில்லை.
விக்ரம் வந்ததும் அவனை ஓடிச்சென்று அணைத்தது என்னவோ பிரணவ் தான்.
‘மச்சான்… உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் டா”, என்று அவனை இறுக பிழிந்து விட்டான்.
“டேய் போண்டா என் அண்ணாவை விடு டா”, என்று அவனை தள்ளி விட்டு, வர்ஷா அணைத்து கொள்ளவும், “உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன் அண்ணா”, என்று அவளும் சொல்ல, “நானும் தான் ஸ்வீட் ஹார்ட்”, என்று அவளின் உச்சி முகர்ந்தான்.
அடுத்து வாகினி மற்றும் பார்த்தீவ் வந்து அணைத்து விடுவிக்க, தயங்கி நின்றது என்னவோ சான்வி தான்.
“நாங்க உனக்காக கார்ல வெயிட் பண்றோம் விக்ரம்”, என்று சொல்லிவிட்டு நால்வரும் நகர்ந்து விட்டனர்.
அவர்கள் சென்றதும் தான், அவள் அவனை வந்து அணைத்தாள்.
“ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன் உங்கள”, என்று அவள் விசும்பவும், “அப்படி தெரியலையே நல்லா செழிப்பா ஆகிட்ட டி”, என்று அவன் சொல்லவும், அவனின் கையை கிள்ளி விட்டாள்.
வாகினி மற்றும் பார்த்தீவின் திருமண வேலைகளும் ஆரம்பம் ஆனது.
கமிஷனர் மகன் திருமணம் அதுவும் வேதாந்தம் குரூப்ஸ் சிஇஓவின் மகளோடு என்றால் சொல்லவும் வேண்டுமா?
எல்லா வகை உணவு வகைகளும் இருந்தன! பெரிய மண்டபத்தை மூன்று நாட்களுக்கு எடுத்து இருந்தார்கள்.
முதல் நாள் நலங்கு, மெஹந்தி மற்றும் சங்கீத், இரண்டாவது நாள் ரிசப்ஷன், மூன்றாவது நாள் திருமணம்.
முதல் நாள் நலங்கு துவங்கியது.
விக்ரமை பார்த்தார் தாமரை. “டேய் விக்ரம் செம்ம அழகா இருக்க டா… என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ”, என்று அவர் சொல்லவும், அவனோ, “ஏன் அத்தை மிஸ்டர் ஜெய் ஷங்கர் விடுவாருனு நினைக்கிறீங்களா?”, என்று கேட்கவும், “அந்த ஆளு கெடக்குறாரு.. உண்மையா சொல்றேன் சான்விக்கும் உனக்கும் பிடிச்சி இருந்தா திருட்டு கல்யாணம் கூட பண்ணிக்கோ டா… நானே ஹெல்ப் பண்றேன்”, என்று அவர் சொல்லவும், ‘ரொம்ப நல்ல அம்மா அத்தை நீங்க… “, என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.
விஜய் மற்றும் வர்ஷா தணிகாசலத்துடன் வந்து இருந்தனர்.
“நான் அக்காவை போய் பார்க்குறேன்”, என்று சொல்லி அவள் சென்று விட்டாள்.
நலங்கு ஆரம்பமானது முதல் அவளும் சான்வியும் தான் வாகினியுடன் கூட இருந்தனர். பார்த்தீவும் அமர்ந்து இருந்தான்.
“நலங்கு அடுத்து சின்னவங்களும் வைங்க அப்போதானே ஜாலியா இருக்கும்”, என்று தாமரை சொல்லவும், “நான் தான் என் அண்ணா அண்ணிக்கு முதல்ல வைப்பேன்”, என்று பிரணவ் முந்தி கொண்டு செல்லவும், அதற்குள் வர்ஷா வந்து விட்டாள்.
“நான் தான் மாமா அக்காக்கு முதல்ல வைப்பேன் போடா”, என்று சொல்லிவிட்டு வாகினியின் முகத்தில் நலங்கு வைத்து அவள் நகர்ந்து விட, அடுத்து பிரணவ் தான் வைத்தான்.
பின்பு விக்ரம் வைத்து நகரவும், “ராகவ், விஜய் நீங்களும் போங்க டா”, என்று தாமரை சொல்லவும், ராகவ் தான் முதலில் சென்றான்.
“மாஸ் பண்ணிட்டீங்க கேப்டன்”, என்று பார்த்தீவை பார்த்து சொன்னவன், வாகினியை பார்த்து புன்னகையுடன் நகர்ந்து கொண்டான்.
விஜய் தான் தயங்கி நின்றான்.
“விஜய் நீயும் போ பா”, என்று வேதாந்தம் சொல்லவும், தயங்கி தயங்கி தான் சென்றான். முதலில் பார்த்தீவிற்கு நலங்கு வைத்தவன், வாகினியின் கன்னத்தை தீண்டுவதற்கே தயக்கமாக இருந்தது.
அவன் வாகினிக்கு நலங்கு வைத்து முடிக்கவும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.
அடுத்து அனைவரும் சாப்பிட்டு முடிய, மெஹந்தி ஆரம்பம் ஆனது. பெண்கள் அனைவரும் மெஹந்தி வைக்க துவங்கி இருந்தனர். வாகினிக்கு தான் முதலில் வைக்க ஆரம்பித்து இருந்தனர்.
லெஹங்காவில் அழகாக வளம் வந்து கொண்டு இருந்தாள் சான்வி. வாகினியின் மெஹந்தி கோலாகலமாக நடந்து கொண்டு இருந்தது.
இதே சமயம், வர்ஷா அவளை பிடித்து இழுக்க, அவள் அணிந்து இருந்ததோ நோட் வைத்த ப்ளௌஸ் என்பதால், அவள் பின்னே இருந்து இழுக்கவும், அது அவிழ்ந்து விட்டது.
சான்வி அருகில் இருந்த ஒரு அறைக்குள் நுழைய, வர்ஷாவும் பின்னே நுழைந்தாள்.
“ஏன் டி கொஞ்சமாச்சு அறிவு இருக்கா? இப்படி தான் பிடிச்சி இழுப்பியா?”, என்று பொரிந்து தள்ளவும், அந்த அறைக்குள் நுழைந்தான் விக்ரம்.
“என்ன பண்றீங்க?”, என்று அவன் கேட்கவும், இருவரும் திரும்ப, “அது அண்ணா..”, என்று வர்ஷா தடுமாற, “சொல்லுங்க”, என்று இருவரையும் பார்த்து கேட்கவும், “என் ப்ளௌஸ் நோட் கழன்றுச்சு”, என்று சான்வி சொல்லவும், அவளின் முதுகு அவளின் பின்னே இருந்த கண்ணாடியில் அப்படியே வெளிச்சம் போட்டு அவனுக்கு காட்ட, அவனோ வர்ஷாவை பார்த்து, ‘நீ கிளம்பு”, என்றவுடன், இரு பெண்களுக்கும் மயக்கம் வராதா குறை தான்.
“போன்னு சொன்னேன்”, என்று விக்ரம் வர்ஷாவை பார்க்க, அவளோ தயங்கி கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாள்.
‘திரும்பு”, என்று அவன் நெருங்கவும், அவளோ பின்னே செல்ல, “என்ன டி பதினாறு வயசுல கிஸ் பண்ண இப்போ பதினெட்டு ஆகிருச்சு பயப்படற”, என்றவுடன், அவளோ எச்சில் கூட்டி விழுங்கி கொண்டே சுவற்றில் மோதி நின்றாள்.
இருவரின் மூச்சும் ஒன்றாக கலந்தது.
“திரும்பு சான்வி”, என்று அவன் மீண்டும் அழைக்க, அவள் தாங்க திரும்பினாள்.
அவனின் குரலுக்கு மயக்கும் சக்தி இருக்கிறதோ என்னவோ, மொத்தமாக மயங்கி விட்டாள்.
அவளின் கார்குழலை மொத்தமாக ஒரு பக்கம் ஒதுக்கியவன், அவளின் வழுவழுப்பான முதுகை வருடவும், அவளுக்குள் லட்சாதி லட்சம் மின்சாரம் பாய்ந்த உணர்வு.
பதினெட்டு வயது ஆனா பெண்பாவை அவள். இருபத்தி இரண்டு வயதில் இருக்கும் ஆண்மகன் இவன்.
அவனின் இதழ்கள் அவளின் கழுத்தை உரச, “விக்ரம்..”, என்று அவளின் முனகல் கூட அவனை போதை ஏற்றியது.
ஒருவழியாக அவனை கட்டுப்படுத்தி கொண்டு, அவளின் பிளவுஸ் முடிச்சுகளை போட்டு விட்டு, “போட்டுட்டேன்”, என்று செவிமடலைகளை அவனின் உதட்டால் வருடி அவன் சொல்லவும், பெண்ணவள் சிலிர்த்து விட்டாள்.
அப்படியே அவன் புறம் திரும்பியவள், அவனை பார்க்க முடியாமல் அவனை அணைத்து கொண்டாள்.
இதே சமயம், உதட்டை துடைத்து கொண்டு பிரணவ்வை முறைத்து பார்த்து கொண்டு இருந்தாள் வர்ஷா.
Super sis 💞