உயிர் போல காப்பேன்-30

4.9
(7)

அத்தியாயம்-30
ஆஸ்வதி அந்த அறையை பார்த்து அதிரவெல்லாம் இல்லை சொல்ல போனால் அவள் அதனை எதிர்ப்பார்த்து தான் வந்தாள் அப்படியே அறையினை வாங்கிக்கொண்டு சிலை போல நிற்க…. அதனை கொடுத்தவனுக்கு தான் அது அதிகமாக வலித்தது.
ஆதி கீழே இருந்து மேலே தன் அறைக்கு வந்தவனால் கோபத்தினை அடக்க முடியவில்லை.. தன்னவளிற்கு என்ன பேர் கட்ட பார்த்தார்கள் இவர்கள்.. அதானே இவர்கள் தான் கொலை கூட செய்ய தயங்குபவர்கள் இல்லையே அப்படி இருப்பவர்களிடம் எப்படி நாம் நல்லதை எதிர்ப்பார்க்க முடியும் என்று யோசித்தவனால்.ஒருவேளை அவர்கள் சொன்னது போல ஆஸ்வதிக்கு நடந்திருந்தால்.. அவள் எப்படி அனைவரின் முன்னாலும் அவமானப்பட்டு நின்றிருப்பாள். என்று நினைக்க நினைக்க அவனுக்கு வெறி ஏறியது..
அது மட்டும் இல்லாமல் இப்போது ஆஸ்வதியின் பேச்சி.. அதனை ஆதி மாடியில் இருந்து கேட்டுவிட்டு தான் தன் அறைக்கு வந்தான் தன்னவளை பற்றி அவனுக்கு தெரியும் தான் ஆனால் அதற்காக அவர்களை மன்னித்து இதே வீட்டில் இருக்க வைப்பது எல்லாம் கொஞ்சமும் அவனுக்கு பிடிக்கவில்லை.. இது ஆஸ்வதியின் மீது கோவத்தை அதிகரித்தது…
இப்போது “அய்யோ ஏஞ்சல் நீயா..”என்றவாறே ஆதி அவள் அருகில் நெருங்க….. ஆஸ்வதி ஆதியை தான் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்
அவளின் பார்வை ஆதியை சுங்கலாக நொருக்கினாலும்.. அவனால் கோவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.. அதனால் தான் ஆஸ்வதியை கோவத்தில் அடித்துவிட்டான்.
அவள் அருகில் சென்றவன் ஆஸ்வதியின் முகத்தை இருக்கைகளாலும் பிடித்து அவளது முகத்தை தன்னை நோக்கி இழுத்தவாறே
“சாரி ஏஞ்சல் எனக்கு வேற வழி தெரில….. கோவம் கோவம் கோவம் அத எப்டி காட்டுறதுனு தெரியாம உன்னை அடிச்சிட்டேன். சாரி…”என்று அவன் அறைந்த பக்கத்தினை விரல் கொண்டு வருடியவன்.. அறை வாங்கி இருந்ததில் சிவந்து போய் இருந்த கன்னத்தில் அழுத்தி முத்தம் ஒன்றை வைத்தான்
அவனின் இந்த செயலை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத ஆஸ்வதி கண்கள் ஆதியையே இமைக்காமல் பார்க்க….. அவனோ. அவளின் அறை வாங்கிய கன்னத்தை இன்னும் தன் இதழ்களால் மருத்து இட்டுக்கொண்டு இருந்தான்.
ஆஸ்வதி உடலோ அவனின் இந்த செயலில் ஏற்பட்ட கூச்சத்தில் நெளிந்துக்கொண்டே இருந்தது. ஆதி அதனை உணர்ந்தாலும் அவளை அடித்ததற்கான குற்ற உணர்வில் ஏது பேசுகிறோம் என்று கூட அறியாமல் பேசிக்கொண்டே இருந்தான்..
“அவங்க உன்ன என்னலாம் வது பேசுனாங்க….. எப்டிலா உன்ன அசிங்கப்படுத்த திட்டம் போட்டுருக்காங்க….. அதலா பார்த்து எனக்கு அவங்கள கொல்ற அளவு வெறி வருதுமா.”என்றவன் அந்த கோவத்தில் ஆஸ்வதி உடலை இறுக்கிக்கொண்டான்
“இங்க உள்ளவங்க யாரும் மனுசங்களே இல்ல…. எல்லாரும் பணத்தாசை பிடிச்ச மிருகங்கள். அவங்கள அவங்க எல்லாம் என் அப்பாவ….”என்று அவன் ஆரம்பிக்க….. அதற்குள் அவன் உடல் நடுங்குவதை கண்ட ஆஸ்வதி அவனின் நடுக்கத்தை குறைக்க அவனின் நடுங்கும் இதழை கவ்விக்கொண்டாள்..
அவளின் இந்த செயலை அதிர்ந்து நோக்கிக்கொண்டு இருந்த ஆதி.. அவளின் இதழ் தீண்டலை தன் வசம் எடுத்துக்கொண்டான். அவனின் மனதில் ஓடிய அனைத்து துன்பத்தினையும் ஒரே இதழ் முத்தத்தில் முடிப்பது போல ஆரம்பித்தவன். அதனை முடிக்க தான் அவனால் முடியவில்லை
ஆஸ்வதியோ அவனை மாற்ற எடுத்த ஆயுதம் அவளை அவனிடமே மாட்டிவிட்டுவிட்டது. அவனின் இதழ் ஒற்றல் ஒவ்வொன்ன்றும் ஆஸ்வதியை கொன்றது மிகவும் நிதானமான முத்தம் இல்லை அது.. அவசர அவசரமாக…. ஏதோ தன்னவளுக்கு ஆபத்து போலவும் அதில் இருந்து அவளை காப்பவன் போலவும் அவன் அவள் இதழிலே குடி இருக்க ஆசைப்பட்டான்
அவளுக்கோ மூச்சி விடவே முடியவில்லை அவன் கைகள் இரண்டும் அவல் இடையை இறுக்க கட்டிக்கொண்டு நிற்க…. பின் எங்கிருந்து மூச்சி விட….. கொஞ்சம் காற்றிற்கு கஷ்டப்பட்டவள்.. திடீர் என்று கிடைத்த விடுதலையில் அதிர்ந்து கண் விழித்து பார்க்க….. அவள் மட்டும் தான் அந்த பால்கனியில் நின்றிருந்தாள்
ஆஸ்வதி கண்களை சுழற்றி பார்க்க…. ம்கூம் ஆதி இருந்ததற்கான தடையமே இல்லாமல் போனது
ஆஸ்வதி புரியாமல் அறைக்குள் வந்து பார்க்க….. அவள் வந்த போது உடைந்திருந்த பூஜாடி அப்படியே உடையாமல் அழகாக நின்றிருந்தது அதனை பார்த்தவளுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை அப்படியே அவள் அசையாமல் நிற்க….. கதவு தட்டும் சத்தம் கேட்டது..
ஆஸ்வதி போய் கதவை திறக்க….. அங்கு ஆதிதான் கண்களை கசக்கியாறு நின்றான் அவனை பார்த்ததும் ஆஸ்வதி புரியாமல் அவனை பார்க்க…..
“சாரி ஏஞ்சல் நா தூக்கம் வந்தோனே தாத்தா ரூம்ல போய் படுத்து தூங்கிட்டேன்.. இப்போதா தாத்தா எழுப்பி உன் ரூம்க்கு போனு அனுப்பி விட்டுச்சி..”என்று கண்களை கசக்கியவாறே உள்ளே வந்தவன் அப்படியே கட்டிலில் படுத்து உறங்கிவிட்டான்;
ஆனால் ஆஸ்வதியோ ஒன்றும் புரியாமல் ஆதியையே இமைக்காமல் பார்த்தவாறே கட்டிலில் உட்கார்ந்திருந்தாள்.
பின் அவளது ஒரு வாரமும் எந்த மாற்றமும் இல்லாமல் இவ்வாறே சென்றது..அன்று போல் என்றும் ஆதி அவன் அறையிலே படுத்துக்கொண்டான் அந்த வீட்டில் யாரும் இப்போது ஆஸ்வதி அருகில் கூட நெருங்குவது இல்லை ஆனால் அடிக்கடி அவளை முறைத்துக்கொண்டு மட்டும் சுற்றுவார்கள்
ப்ரேம் இன்னும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருந்தான்.. அவனின் உடலில் எந்த மாற்றமும் இல்லை பூனம் தான் அவனை கூட இருந்து பார்த்துக்கொள்வது. இஷானா இரண்டு நாள் சென்றவள் அதன் பின் மருத்துவமனை தனக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று வரவில்லை..
பின் ஒரு நாள் தாத்தா ஆஸ்வதியையும், ஆதியையும் வெளியில் சென்று வர சொன்னார்.
“மா ஆஸ்வதி எவ்வளவு நாளு தான் நீங்க ரெண்டு பேரும் வீட்லையே இருப்பீங்க கொஞ்சம் வெளிலையும் போய்ட்டு வாங்கமா.. அப்போதானே ஆதிக்கும் கொஞ்சம் ரிலேக்ஸா இருக்கும்..”என்றார் தாத்தா.
ஆஸ்வதி தயங்க….”அய் தாத்தூ எங்கள வெளில போக சொல்றீயா. ம்ம் பீச் க்கு கூட்டிட்டு போ ஏஞ்சல். அங்க போய் ரொம்ப நாள் ஆச்சி இந்த தாத்தூ என்னை அங்க அடிக்கடி முன்னலா கூட்டிட்டு போகும் இப்போ தான் கூட்டிட்டே போகல……”என்று இரு கைகளையும் விரித்து அழகாக கூற…..
அதை கேட்ட ஆஸ்வதியால் அவனை மறுக்க முடியவில்லை.. ஆஸ்வதியும்
“சரி தாத்தா. நாங்க முதல மால் க்கு போய் படம் பார்த்துட்டு அப்புறம் பீச் க்கு போறோம்.”என்றாள்..
“சரிமா.. பத்திரமா போய்ட்டு வாங்க…. எனக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இல்லனா நா விதுனா உன் கூட அனுப்புவேன்…”என்றார் வருத்தமாக
“அய்யோ தாத்தா அதலாம் ஒன்னும் இல்ல…. நாங்க பத்திரமா போய்ட்டு வரோம்…”என்று அவரிடம் கூறிவிட்டு ஒரு காரில் டிரைவரை அழைத்துக்கொண்டு கிளம்பினர்
ஆதி போகும் வழி எல்லாம் “ஏஞ்சல் மாலுல எனக்கு அது வாங்கி தா.. இது வாங்கிதா.”என்று கேட்டு அவளை கொஞ்சிக்கொண்டே வந்தான்..
அவளும் சிரித்துக்கொண்டே . சரி என்று அவனுடன் பேசிக்கொண்டே வந்தாள்.. அவளுக்கும் மனதில் தன்னவனுடன் நிறைய இடங்கள் சுற்ற ஆசையாக இருந்தது அதனாலே இதனை பயன்ப்படுத்திக்கொண்டாள் எங்கே வீட்டில் பிரச்சனையாக இருக்கும் நேரத்தில் இருவரும் சந்தோஷமாக சுற்றுவது வீட்டில் உள்ள அனைவருக்கும் கோவத்தை இன்னும அதிகப்படுத்துமோ என்று தான் முதலில் தயங்கினாள். ஆனால் ஆதியின் முகம் வெளியில் செல்.. என்று தாத்தா சொன்னதும் பளீர் என்று ஆனதை பார்த்ததும் ஆஸ்வதி எதும் மறுக்காமல் அவனுடன் கிளம்பிவிட்டாள்.
முதலில் இருவரும் மாலிற்கு செல்ல… அங்கு நிறைய கடைகளுக்கு ஆதி அவளை இழுத்துக்கொண்டு போனான்.. அவளுக்கு முதலில் ட்ரேஸ் வாங்க வேண்டும் என்று ஆதி சொல்ல அவள் மறுக்க….. ஆதி அவளை பார்த்த பார்வையில் அவனுடன் பேசாமல் நடந்தாள்
“ஆதி இதலா வாங்க நம்ம கிட்ட பணம் இல்ல….”என்று ஆஸ்வதி கூற….
“ஓஓ…. ஆனா தாத்தூ என் கிட்ட கார்ட் குடுத்து இத யூஸ் பண்ணுங்கனு சொன்னாறே. அதுல இருக்கும்ல…..”என்றவன் அவளை இழுத்துக்கொண்டு அனைத்து கடைகளுக்கும் ஓடினான்.
அவளுக்கு தெரிந்து தான் இருந்தது தாத்தா தன்னிடம் பணம் கொடுத்திருந்தால் அதை தாம் வாங்கி இருக்க மாட்டோம் என்று தான் ஆதியின் கையில் அதனை கொடுத்து அனுப்பி இருக்கிறார் என்று ஆஸ்வதி நினைத்தாள்.
ஆதி அவளை ஒவ்வொரு கடைக்கும் அழைத்து சென்று…”ஏஞ்சல் இது உனக்கு நல்லா இருக்கும் ஏஞ்சல் பிங்க்.எனக்கு பிங்க் பிடிக்கும் ஏஞ்சல் இந்த ட்ரேஸ் பாரேன்…”என்று அவளுக்கு வாங்கி குவித்துவிட்டான்.. அவள் எவ்வள்வோ மறுக்க ஆனால் ஆதி அவளை பிடிவாதமாக வாங்க வைத்தான்
பின் இருவரும் ப்ளே ஏரியாவுக்கு போக….. ஆதி அனைத்தும் நான் விளையாட வேண்டும் என்று அடம் பிடிக்க… ஆஸ்வதி அதற்காக அவனுக்கு டிக்கெட் வாங்கி வந்து அவனை விளையாட வைத்தாள்.
“ஏஞ்சல் என்ன அடிக்கிறான். ஏஞ்சல் என்னை காப்பாத்து ஏய் சோம்பி போ அங்க…. ஏஞ்சல் சேவ் மீ.”என்று ஆதி விளையாட்டில் ஒரு கலக்கு கலன்ங்கிவிட்டான்
அதற்கு ஈடாக அவனுக்கு ஒரு பார்பி டால் கிடைக்க….. “அய் ஏஞ்சல் உன்ன மாறி ஒரு பொம்மை.”என்று அதனை குதுகலமாக வாங்கிக்கொண்டான்..
பின் அங்கிருந்து வெளியில் வந்தவர்கள். ஆதி…”ஏஞ்சல் பசிக்கிது..”என்று கூற…
உடனே இருவரும் ஃபுட் கோர்ட் போய் தங்கள் மதிய உணவை அங்கு முடித்துவிட்டு அடுத்து படம் பார்க்க ரெடி ஆனார்கள்
“ஆதி சோ க்கு டைம் ஆகுது வாங்க போலாம்..”என்று ஆஸ்வதி கத்த
“இரு ஏஞ்சல் எனக்கு சுச்சு வருது..”என்று ரெஸ்ட் ரூம் உள்ளே ஓடிவிட்டான். அதை கேட்ட ஆஸ்வதி முகம் புன்னகையில் விரிந்தது.
பின் இருவரும் படம் பார்க்க உள்ளே செல்ல……”அய் ஏஞ்சல் அங்க பாரு டைனோசர்…அய். அந்த பொம்மை எனக்கு வேணும் ஏஞ்சல்..”என்று அவளிடம் பேசிக்கொண்டே படம் பார்த்துக்கொண்டு இருக்க….. ஆஸ்வதியின் நிலை தான் பாவமாகியது
ஏனென்றால் அவளின் கை ஆதியின் பிடியில் இருந்தது..அவன் அவளது கையை வருடிக்கொண்டே படம் பார்க்க இவளுக்கு தான் அது சோதனையாக இருந்தது..அந்த படம் அவனுக்கு பிடித்த கார்ட்டூன் படம் எனவே அதை இமைக்காமல் அவன் பார்க்க….. ஆஸ்வதியோ தன்னவனின் நெருக்கத்தை வெகுவாக ரசித்தாள்
பின் படம் முடிந்து இருவரும் பீச்சிற்கு செல்ல…. ஆதி குஷியாகி போனான் அவன் அலைகளில் நனைய ஆஸ்வதி ஒரு இடத்தில் நின்று அவனின் சந்தோசத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள்..
அதை கண்ட ஆதி ஆஸ்வதி அருகில் வந்து அவளின் கையை பிடித்து இழுக்க… ஆஸ்வதி அவனை என்னவென்று கேட்க….
“ஏஞ்சல் வா நாம அலையில விளையாடலாம்..”என்றான்
“நோ ஆதி நா வரல நீங்க போய் விளையாடுங்க…..”என்றாள்
“நோ நாம சேர்ந்து விளையாட தானே வந்தோம் வா விளையாடலாம்…”என்று அவளை அலைக்குள் இழுத்து விட இருவரும் தொப்பளாக நனைந்து போனார்கள் பின் இருவரும் அலையுடன் விளையாடிவிட்டு ஆஸ்வதி கரைக்கு வர…. ஆதியும் அவள் பின்னாலே வந்தான்…
அங்கு அவள் ஒரு இடத்தில் உட்கார்ந்துவிட அவன் மணலில் வீடு கட்டி விளையாடிக்கொண்டு இருந்தான்.. அவனை பார்த்து ஆஸ்வதி ரசித்துக்கொண்டே இருந்தாள். அவளின் காதல் நாயகன் விளையாடுவதையே ஆஸ்வதி ரசித்துக்கொண்டிருக்க…. ஆதியோ அவளை பார்க்காமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்..
இளம் ரோஜா நிறத்தில் வெள்ளை நிற எம்ப்ராய்டரி போட்ட சுடிதார் அணிந்துக்கொண்டு.. வெள்ளை நிற பேலஷோ பேண்ட் அணிந்துக்கொண்டு. தலையில் ஒரு சிறிய க்ளிப் மட்டும் போட்டுக்கொண்டு விரித்து விட்டபடி. முகத்தில் எந்தவித மேக்கப்பும் இல்லாமல். வகுட்டில் மட்டும் இவன் என் கணவன் என்று சொல்லும் விதமாக பொட்டை வைத்துக்கொண்டு மூக்கில் ஒரு பக்கம் மட்டும் வளையம் மாட்டிக்கொண்டு அழகு சிலை போல உட்கார்ந்திருக்கும் ஆஸ்வதியை பார்க்க பார்க்க ஆதிக்கு திவட்டவில்லை
அவளையே இமைக்காமல் பார்த்திருந்தவனுக்கு அவளை முதல் முதலில் பார்த்த நியாபகம் வந்தது.. அது ஆஸ்வதி ஆதி படித்த காலேஜில் அட்மிஷனுக்காக அவள் தந்தை கூட வந்திருந்த போது தான் அவளை முதலில் பார்த்தான்..
அன்று சரியான மழை ஆஸ்வதியின் அப்பா. தன் இரு சக்கர வாகனத்தில் அவளை கல்லூரிக்கு அழைத்து வர… உள்ளே செல்வதற்கு முன் பலமான இடியுடன் கூடிய மழை பெய்ய துவங்கியது.. அப்போது ஆதியும் அவன் நண்பர்களும் அடுத்த மாதம் நடக்கும் கால்பந்து போட்டியில் கலந்துக்கொள்ள இருப்பதால். அன்று ஒரு மாதமாக தீவிரமாக பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தனர்..
அன்றும் அப்படி தான் அனைவரும் க்ரவுண்டில் விளையாடிக்கொண்டு இருக்கும் போது திடீர் என்று மழை பெய்ய ஆரம்பிக்கவும்..
“டேய் மச்சி. மழை டா. வாங்கடா.”என்றான் ஆதியின் நண்பன்
“ஆமாடா மழையில நனைஞ்சி கொஞ்ச நஞ்சம் இருக்குற மூளையும் கரைஞ்சிட போகுது வாங்க போய்டலாம்..”என்று ஆதியின் நண்பன் குணால் சொல்ல…..
அதை கேட்ட மற்றவர்கள் அனைவரும் அவனை முறைக்க… அதில் ஆதி மட்டும் புன்னகையுடன்
“டேய் அடுத்த வாரம் நமக்கு காலேஜ் வைஸ்ல மேட்ச் இருக்கு.. இப்போ மழையில நனைஞ்சா யாருக்காவது எதாவது ஆகி மேட்ச் வராம பங்க் அடிக்கலாம்னு பாக்காதீங்க….. ஒழுங்க உள்ள போங்கடா…”என்று ஆதி மிரட்ட…
அனைவரும் ஆதியை இப்போது பாசமாக பார்த்தவாறே பில்டீங்கை நோக்கி ஓடினர்.. ஆதியும் பாலை கையில் எடுத்துக்கொண்டு தூரல் மேலே படாதவாறே அவசரமாக ஓட….. அப்போது பின்னால் இருந்த ஒரு பூச்செடி மழையில் நனைவதை ரசித்தவாறே. பின்னால் பார்த்துக்கொண்டே ஆதி ஓட…
அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது.. இங்கே ஆஸ்வதியோ தன் தந்தையுடன் வந்தவள். காலேஜில் அட்மிஷ்ன் போட்டுவிட்டு உள்ளே தந்தை பீஸ் கட்டும் நேரம் தான் வெளியில் நிற்பதாக அவரிடம் சொல்லிவிட்டு மழையை ரசிக்க வெளியில் வர…
அப்போது தான் அவளும் மழையில் நனையும் பூந்தொட்டியை பார்த்தவாறே வந்தவள் கீழே கொட்டி இருந்த தண்ணீரை பார்க்காமல் அதில் காலை வைத்துவிட்டாள்
ஆதியும் எதிரில் யார் வருகிறார்கள் என்பதை பார்க்காமல் வந்தவன் ஓடிவந்த வேகத்திற்கு ஆஸ்வதியின் மீது விழ போனவன். நிமிடத்தில் தன்னை சமாளித்துக்கொண்டான். ஆனால் ஆஸ்வதியால் தன்னை சமாளிக்க முடியவில்லை.. எனவே ஆஸ்வதி ஆதியின் மீது அவன் காலரை பிடித்தவாறே சாய…. ஆதியோ தன் மீது பூப்போலே வந்து மோதிய பெண்ணவளை இமைக்காமல் பார்த்திருந்தான்..
அவனாலும் அந்த திடீர் மோதலை சமாளிக்க முடியாமல் ஆஸ்வதி மீது சாய இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர்
ஆதி யார்டா அது என்பது போல் அவளை பார்க்க…. ஆஸ்வதியோ பயத்தில் கண்களை மூடிக்கொண்டு இருந்தாள். அவளின் இந்த செயல் அவனை இம்சிக்க வைத்தது. மூடிய இமைக்குள் அவள் விழிகள் அசைவதை எதொ அதிசயம் போல் பார்த்துக்கொண்டு இருந்தான் ஆதி
அவனுக்கு இது புதிதாக தோன்றியது அவனும் நிறைய பெண்களை தாண்டி வந்திருக்கிறான். ஆனால் இவள் போல்.. என்று அவளை ஒருதரம் கண்டவனின் முகம் சிவந்து போனது இது அவனுக்கு புதிய அனுபவமாக இருந்தது..
“எத்தனை பெண்களை க்ராஸ் பண்ணி வந்துருக்கேன். ஆனா இவ…. இந்த பொண்ணு.. என்னடா இது நமக்கு எதோ உலகம் அழகா தெரிது. அதும் இந்த நிமிஷம் எல்லாமே அழகா தெரிதே.. ஒரு வேல நமக்கு வியாதி எதும் வந்துட்டோ..”என்று ஆதி மனதிலே பேசிக்கொள்ள…
அப்போது தான் விழிகளை மெதுவாக மிக மெதுவாக திறந்த ஆஸ்வதி. தன் முன்னால் இருந்தவனை கொஞ்சமும் நிமிர்ந்து பார்க்கவில்லை எங்கோ பார்த்தவாறே.
“சாரி சார் தெரியாம….”என்று அவள் ஆரம்பிக்க….
ஆக ஆள் தான் மென்மையானவள்னு நினைச்சா குரல் இன்னும் மென்மையா இருக்கே என்று நினைத்தவன் அவளிடம் எதோ பேச வர…
அதற்குள்.”ஆஸ்வதி.”என்ற குரல் கேட்டதும் அப்போது தான் தாங்கள் இருக்கும் நிலையே இருவருக்கும் புரிந்தது.. உடனே ஆஸ்வதி எழுந்துக்கொண்டவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல்.. மறுபடி ஒரு சாரியை சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்
அப்போதே ஆதிக்கு புரிந்து போனது.. அவளுக்கு கண்டிப்பாக தன்னை நினைவில் இருக்காது என்று அதெ போல் தான் ஆஸ்வதி காலேஜிற்கு முதல் முதலில் வரும் போது. ஆதி அவளை தான் இமைக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தான் ஆனால் ஆஸ்வதியோ ஆதியின் மேனரிஷத்தில் கவர்ந்து தான் அவனை பார்த்தாள். மற்றபடி அவளுக்கு அவனை நியாபகம் இல்லை..
அதே போல் ஸ்வீட்டி பிரச்சனை வரும் போது ஆதிக்கு ஆஸ்வதி மீது அவ்வளவு கோவம்.”அது எப்டி அவ தான் சொல்றானா இவ எப்டி எங்கிட்ட வந்து அவளுக்காக ப்ரோபோஸ் பண்ண முடியும்…”என்று அன்று முழுதும் புலபி தீர்த்துவிட்டான்
ஆஸ்வதி அன்று மட்டும் இல்லை தொடர்ந்து ஆதியை எங்கு பார்த்தாலும் அவனை கண்களால் பருக ஆரம்பித்தாள்.. அதும் அவனுக்கு தெரியாமல்.. ஆனால் ஆதி அவளை எந்த இடையூறும் செய்யாமல் இருந்தான். காரணம் ஆஸ்வதியை பற்றி அவன் விசாரித்தது அப்படி.. ஆம் ஆஸ்வதியின் வாழ்க்கை பற்றி தெரிந்துக்கொண்டவன் அவளது படிப்பிற்கு எந்த இடையூறும் நாம் தரக்கூடாது.. அவள் நன்றாக படிக்கட்டும்
அதற்கு பின் அவளை நாம் அப்பாவிடம் பேசி திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று தான் ஆதியின் மனதில் ஓடியது.. அதும் தாம் இங்கே இருக்க போவது 1வருடம் தான் அதன் பின் பாரின் போய் படிக்க போகிறோம். அதற்குள் ஆஸ்வதியிடம் தன் மனதை கூறி அவளின் சிந்தனையை மாற்ற வேண்டாம். என்று தன் மனதிற்குள்ளே அவளை காதலித்து வந்தான்..
ஆனால் ஆஸ்வதி எப்படி என்றால். ஆதியை பற்றி தெரிந்துக்கொண்டவள் அவனது செல்வ நிலையை அறிந்து மனதிற்குள் துணுக்குற்றாள். கண்டிப்பாக தனக்கும் ஆதிக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்பதை மனதில் பதியவைக்க நினைத்தாள்..
ஆனால் அவளது மனம் அவளை ஆதியை காணாமலும். அவனை பற்றி நினைக்காமலும் இருக்க ஒப்பவில்லை. எனவே ஆதியை ஒருநாளில் பத்து தடவையாவது பார்க்காமல் இருக்கமாட்டாள்..
அவளுக்கு ஃபுட்பால் பற்றி ஒன்றும் தெரியாது ஆனால் ஆதியின் காரணமாக அவனின் ஆட்டம் எப்போதெல்லாம் வருகிறதோ. க்ளாஸை கட் அடித்துவிட்டு வந்து உட்கார்ந்து விடுவாள். அதும் அவனுக்கு தெரியாத இடத்தில் உட்கார்ந்து
அவன் எங்கு போனாலும் அவனுக்கு தெரியாமல் சுற்றுவாள்.. கேன்டின் சென்றால். ஸ்டேடியம் சென்றால். கார் பார்க்கிங் சென்றால் எங்குமே அவனை தனியாக இருக்க விடாமல் சென்றுவிடுவாள்

உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி
விழுகிறேன் உன் பாா்வையில்
தோன்றிட அலைகிறேன் அலைந்தும்
ஏன் மறுபடி தொலைகிறேன் ஓா்
நொடியும் உன்னை நான் பிாிந்தால்
போா்களத்தை உணா்வேன் உயிாில்
என் ஆசை எல்லாம் சோ்த்து ஓா்
கடிதம் வரைகிறேன் அன்பே

உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
அதுபோல நாட்கள் அழகாக ஓடிக்கொண்டு இருக்க அப்போது தான் ஒரு நாள் ஆஸ்வதி கேன்டின் சென்றுவிட்டு தன் க்ளாஸிற்கு சென்றுக்கொண்டு இருக்கும் போது..
“மா. இங்க பைனல் இயர் இன்சி சிஎஸ் எங்கமா இருக்கு..”என்று ஒரு குரல் கேட்க…
அதை கேட்ட ஆஸ்வதி குரல் வந்த திசை திரும்ப…. அங்கு சாந்தமான முகத்துடன். முகத்தில் புன்னகையுடன்.. நின்றிருந்தார் ஒரு நடுத்தர வயது மதிக்க தக்க ஆள் ஒருவர்..
அவரை பார்த்ததும் ஆஸ்வதியின் முகமும் புன்னகையை தாங்கிக்கொண்டே. “பஸ்ட் ஃப்ளோர்ல….. செகென்ட் ரூம் அங்கிள்” என்றாள் அமைதியான குரலில்
“ஓ….. சரிமா. நீ இங்க என்ன படிக்கிற….”என்றார் அவளை கூர்மையாகவும் அமைதியாகவும் பார்த்தவாறே.
“1ஸ்ட் இயர் அங்கிள்..”என்றவள்.. எனக்கு க்ளாஸுக்கு டைம் ஆச்சி அங்கிள் நாம அப்புறம் பாக்கலாம்…”என்று ஆஸ்வதி கூற…
“சரிமா நாம இன்னிக்கி ஈவ்னிங் காலேஜ் எதிர்ல இருக்குற காபி ஷாப்ல பாக்கலாமா..”என்றார்
அவர் கேட்டதில் அதிர்ந்த ஆஸ்வதி அவரை கேள்வியாக பார்க்க….
“பயப்படாத மா.நா..”என்று அதற்குமேல் என்ன சொன்னாறோ. ஆஸ்வதி உடனே சரி என்று தலை ஆட்டினாள்
இப்போது ஆஸ்வதி தன் நினைவலையில் இருந்து வெளிவந்தவள் தன்னவனை காதலுடன் பார்க்க….. அங்கு ஆதியும் தன் நினைவில் இருந்து மீண்டு வந்திருந்தான்
இருவரும் நினைவுகளின் தாக்கத்தில் இருந்து மீண்டு ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொள்ள…..
“ஆதி கிளம்பலாமா டைம் ரொம்ப ஆகிட்டு கொஞ்சம் இருட்டிட்டு பாருங்க…..”என்றாள் ஆஸ்வதி
“ஹான் ஏஞ்சல் போலாம்..”என்றவன் அவள் அருகில் வந்து அவளை கைப்பிடித்து தூக்கிவிட்டான்
அவளும் புன்னகையுடன் ஒன்றாக நடக்க….. அப்போது

(வருவாள்…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!