“அம்மா நான் மைத்திரியை தான் காதலிக்கிறேன். அவங்க சொல்றது எல்லாமே உண்மை தான்”, என்று விஜய் சொன்னதும், “டேய் விஜய் என்ன டா சொல்ற?”, என்று கலா அவனின் தோளை பிடித்து அவரை பார்க்க வைக்கவும், “ஆமா”, என்று முடித்து இருந்தான்.
“அப்புறம் ஏன் டா நேத்து நாங்க..”, என்று ஸ்ரீதர் துவங்கும் போதே, “நீங்க இங்க கொண்டு வந்து நிறுத்துவீங்கனு நான் என்ன கனவா கண்டேன்”, என்று அவனும் பற்களை கடித்து கொண்டு தான் பேசினான்.
“அப்பா ப்ளீஸ் எல்லாத்தையும் மறந்துட்டு இப்போ என்னனு முடிவு பண்ணுங்க”, என்று ராகவ் சொல்லவும், ஜெய் ஷங்கருக்கு ஆத்திரம் தீரவே இல்லை.
“நீயே என்னவோ பண்ணிக்கோ”, என்று சொல்லிவிட்டு சான்வியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர் சென்று விட்டார்.
ராகவ் தான் வந்தவர்களிடம் திரும்பி, “ப்ளீஸ் எல்லாரும் சாப்பிட போங்க… சீக்கிரமே என் தங்கச்சியோட ரிசெப்ஷன் நடக்கும்”, என்று ஓரளவு சமாளித்து இருந்தான்.
வேதாந்தம் அவனின் அருகில் வந்து, “என் மருமக சான்விக்கும், என் மகன் விக்ரம்க்கும் அடுத்த வாரமே ரிசெப்ஷன்… இன்விடேஷன் இன்னும் இரண்டு நாள்ல உங்க எல்லாருக்கும் வந்து சேரும்”, என்று சொல்லவும், ராகவ்விற்கு அப்போது தான் கொஞ்சம் மனம் நிம்மதி அடைந்தது.
அவனே எப்படி சமாளிக்க போகிறான் என்று நினைத்து கொண்டிருக்க, அவனின் அருகில் வேதாந்தம் வரவும் அவனுக்கும் ஒரு தைரியம் வந்தது என்னவோ உண்மை தான்.
அனைவரும் கலைந்து சென்ற பிறகு, “வாகினி”, என்று பூமியே அதிரும் படி அவளை அழைத்து இருந்தார் வேதாந்தம்.
அவளும் முன்னே வந்து நிற்க, “உனக்கு விக்ரம் சான்வி கல்யாணம் விஷயம் தெரியுமா தெரியாதா?”, என்று கேட்கவும், அவள் தலை குனிந்து கொண்டாள்.
அதுவே சொல்லிவிட்டது அவளுக்கு அனைத்தும் தெரியும் என்பதை!
“சாரி அப்பா.. எனக்கு தெரியும் தான்… நான் நேத்து அதுக்காக தான் சான்வி விக்ரமுக்கு ஹனிமூன் சூட் புக் பண்ணி கொடுத்தேன்… அப்படியாச்சு சான்வி அவங்க அப்பா கிட்ட உண்மைய சொல்லுவானு… நான் நினைச்ச படி இன்னைக்கு அங்கிள் கிட்ட அவங்க லவ் மேட்டர் சொல்லபோறேன்னு அவ வர்ஷா கிட்ட சொல்லி தான் இருந்தா… ஆனா அதுக்குள்ள இப்படி ஆகும்னு நான் நினைக்கல… சான்வி அண்ட் விக்ரம் பண்ணது தப்பு தான்.. ஆனா அவங்க லவ் பண்ணாங்க அதையும் தாண்டி சட்டப்படி அவங்க கணவன் மனைவியா இரண்டு மாசத்துக்கு மேல இருந்தும் கூட உங்க எல்லாரு விருப்பத்துக்காகவும் காத்துகிட்டு தான் இருந்தாங்க… அத பிரேக் பண்ண நான் தான் அவங்கள அனுப்புனேன்… இப்படி ஆகும்னு நினைக்கல”, என்று அவள் விளக்கம் கொடுக்கவும், “உங்கிட்ட இருந்து இத நான் எதிர்பார்க்கள வாகினி”, என்று அவர் சொல்லும் போதே அவளும் உடைந்து விட்டாள்.
விக்ரமின் புறம் திரும்பியவர், “நீ என்கிட்ட சொல்லிருக்கலாம்.. ஆனா சொல்லல… அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்ல”, என்பவரை அப்படியே நிறுத்தி, “ஐயோ அங்கிள்… விக்ரம் சொல்லுறேன்னு தான் சொன்னார்… நான் தான் சொல்லல.. என் தப்பு தான்… என்னை எதுவா இருந்தாலும் சொல்லுங்க… பாவம் வாகினி அண்ணியும் விக்ரமும்… தைரியம் இல்லமா லவ் பண்ணிட்டேன்… என் அம்மா இருந்து இருந்தா இந்த நிலை வந்து இருக்காதோ என்னவோ”, என்றவள் உடைந்து விட்டாள்.
“யாருக்கு வரும் இந்த நிலைமை? என் புருஷனோட தம்பி அவர் இருக்கும் போதே என்ன கல்யாணம் பண்ணிக்க வந்திருக்கான்.”, என்றவள் விஜயின் புறம் திரும்பி, “அப்போ நீ என்ன இவளோ நாள் இப்படி தான் பார்த்து இருக்க இல்ல? விக்ரமை ஜெயிக்க அவரு பொண்டாட்டி கூட ப…”, என்று அவள் துவங்கவும், விஜயின் கைகளில் இருந்த ஜூஸ் கிளாஸ் உடைந்து சிதறியது.
“மைண்ட் யுவர் டங்க் மிஸஸ் சான்வி விக்ரம சத்திரியன்”, என்று பற்களை கடித்து கொண்டு கூறினான்.
சான்வி என்ன பேச நினைத்தால் என்று அனைவருக்கும் புரிந்தது. அவர்கள் அவளை தடுக்கவும் முடியவில்லை. தடுக்கும் நிலையிலும் இல்லை.
“என்ன தப்பா சொல்லிட்டா? என்னையே நடு ரோட்ல விட்டுட்டு போனவன் தான நீ? உன் அம்மாக்கு தப்பாம பொறந்து இருக்க விஜய்”, என்று மைத்திரி பேசவும், அவன் அமைதியாக இருந்தான்.
“ஹே! அனாதை நீ என் மகனை பத்தி பேசுறியா?”, என்று எகிறிக்கொண்டு கலா வர, “கலா கொஞ்சம் அமைதியா இரு”, என்ற ஸ்ரீதர் விக்ரமின் அருகில் வந்து, “என்ன மன்னிச்சிரு பா”, என்று கையெடுத்து கும்பிட்டு விட்டார்.
“ஐயோ என்ன பண்றீங்க?”, என்று பதறி கொண்டு விக்ரம் அவரின் கையை கீழே இறக்க, “இல்ல ப்பா அன்னைக்கு சான்வி விஜய பார்த்துட்டு நான் தான் தப்பா நினைச்சிட்டேன்.. சாரி”, என்றவர் சான்வி புறம் திரும்பி, “இப்பவும் நீ எங்க வீட்டு மருமக தான் மா”, என்கவும், “சாரி அங்கிள் நான் வேதாந்தம் மாமாக்கு மட்டும் தான் மருமக”, என்று அழுத்தமாக சொல்லி இருந்தாள்.
“கலா வா போகலாம்”, என்று ஸ்ரீதர் சொல்லவும், கலாவதிக்கும் இப்போது பேச தெம்பில்லை. பேசுவதற்கும் அவருக்கு தான் எந்த நியாயமும் இல்லையே! அமைதியாக சென்று விட்டார்.
“விக்ரம் நீ சான்விய கூட்டிட்டு நம்ப வீட்டுக்கு போ”, என்று வேதாந்தம் சொல்லவும், “அப்பா ஆனா..”, என்று அவன் தயங்கி நிற்க, “விக்ரம் நீ கூட்டிட்டு போ… அப்பா கிட்ட நான் பேசிக்குறேன்”, என்று ராகவ் சொல்லவும், அவனை அணைத்து இருந்தாள் சான்வி.
“சாரி அண்ணா…”, என்று வெதும்பி அழ, அவனோ அவளை விலக்கி, “உன் சாய்ஸ் சரி தான்… ஆனா நீ என் கிட்ட சொல்லிருக்கலாம்… மே பி நான் தான் நல்ல அண்ணா இல்லையோ என்னவோ”, என்றவனின் முகத்தில் விரக்தி புன்னகை.
“பரவால்ல என் சாய்ஸ் தான் தப்பாகிருச்சு… உன் சாய்ஸ் தப்பாகாது”, என்றவன் யாரை சொல்கிறான் என்று விக்ரமிற்கு புரிந்தது தான்.
அவன் பேச வரவும், “கூட்டிட்டு போ”, என்று வேதாந்தம் மீண்டும் சொல்ல, தலையசைத்து விட்டு சான்வியின் கையை பிடித்து சென்று விட்டான்.
வாகினி விஜயின் முன் வந்து நின்றாள்.
விஜய் அவளை பார்க்கவே இல்லை. பார்க்கவும் முடியவில்லை.
“எனக்கு ஒண்ணே ஒன்னு சொல்லு விஜய், நீ சான்விக்கு ஓகே சொன்னியா இல்லையானு எனக்கு தெரியாது… ஆனா வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க ஓகே சொன்னியா?”, என்று தெளிவாக கேட்டாள்.
அவனும் ஆமாம் என்று தலையசைக்க, அவனின் கன்னத்தில் அடுத்த நொடி வாகினியின் கை விரல்கள் பதிந்து இருந்தது.
“வாகினி”, என்று பார்த்தீவ் அவளின் அருகில் வந்து நிற்க, “மைத்திரிக்கு துரோகம் பண்ண துணிஞ்சிட்ட அப்போ.. உன் அம்மா மாறியே சரியான அவசர குடுக்கை நீ! ச்சை இதுக்கு தான் டா சொன்னேன்… அந்த பொண்ண விட்டுடுன்னு கேட்டியா நீ? இதோட என் முகத்துலயே முழிக்காத”, என்றவள் பார்த்தீவின் கையை பிடிக்கவும், அடுத்து வர்ஷாவும் வந்து, “இப்போ தான் உங்கள அண்ணனு கூப்பிட ஆரம்பிச்சேன்… ஆனா மொத்தமா என் நம்பிக்கையை உடைச்சிட்டீங்க.. அவளோ வெறுப்பா உங்களுக்கு அண்ணா மேல? அப்படி என்ன பண்ணிட்டாரு அவரு? யு க்னோ வாட் யு ஆர் டிஸ்கஸ்டிங்”, என்றவள் அவனின் முகத்தை கூட பார்க்காமல் சென்று விட்டாள்.
பிரணவ் மற்றும் வேதாந்தம் அவளின் பின்னால் சென்றனர்.
மைத்திரி ஒன்றுமே பேசவில்லை. சாதனாவுடன் கிளம்பி விட்டாள். அவளுக்கு அவளின் காதல் மறித்து விட்டது போன்ற உணர்வு. அவளுக்கு விஜயிடம் கேள்வி கூட கேட்க பிடிக்கவில்லை.
அனைவரும் சென்றபின் அனாதரவாக நின்று இருந்தான் விஜய்.
அடுத்த அடி அவனின் கன்னத்தில் இறங்கி இருந்தது.
விஜயின் உதடுகளில் இரத்தம் வழிந்தது, அதை துடைத்தவன், அடித்தவனை பார்த்தான். அவனின் இதழில் விரக்தி புன்னகை. அடித்தவனின் கண்கள் நெருப்பு ஜுவாலையாக எரிந்து கொண்டு இருந்தது.
“ச்சீ என்ன மனுஷன் டா நீ? உன் கூட போய் பிரென்ட்டா இருந்து இருக்கேன் பாரு”, என்றவன் விஜயின் முகத்தை கூட பார்க்கவில்லை.
ராகவிற்கு ஆத்திரம், நண்பனின் துரோகம் அவனுக்கு வலித்தது.
“நீ எப்படி ஒத்துக்கிட்ட? சான்விக்கு கல்யாணம் ஆகிருச்சுனு தெரிஞ்சும் விக்ரம் வைப் அவனு தெரிஞ்சும் எப்படி உன்னால இப்படி வந்து இங்க நிற்க முடிஞ்சுது?” என்றவன் அவனின் சட்டையை பிடித்து கேட்கவும், அவன் வாய் திறக்கவே இல்லை.
அவனை தான் மொத்தமாக கொன்று விட்டு இருந்தனரே அனைவரும்! அவனிடம் இதை நீ செய்தாயா என்று மட்டும் கேட்டவர்கள் அவனின் பக்கம் நியாயத்தை பேசவே விட வில்லை.
அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டான் ராகவ். அவன் போனதும் தான் தாமதம், அப்படியே உடைந்து மண்டியிட்டு விட்டான் சாணக்கியன்.
நண்பனின் வார்த்தைகள் வலித்தது! காதலியின் கதறல் செவிகளை அடைத்தது. விக்ரம் பேசவே இல்லை. வாகினியும் வர்ஷாவும் முகத்திலேயே முழிக்காதே என்று சொல்லி சென்று விட்டு இருந்தனர்.
அவனும் மனிதன் தானே, அவனுக்கும் உணர்வுகள் உண்டு தானே, அவனை மொத்தமாக உடைத்து விட்டு இருந்தனர் அனைவரும்! அவனுக்கு மட்டும் அவர்களின் மேல் பாசம் இல்லையா என்ன? உள்ளுக்குள் வைத்து மருகுபவன் அவன்! இன்று மொத்தமாக மனதால் மறித்து விட்டான். அதுவும் சான்வி அவனை பார்த்து கேட்ட வார்த்தைகளை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.
கதறி அழுதான். கத்தி அழுதான். அவனுக்காக அழுதான்.
ஒரு கரம் அவனை பற்றி இருந்தது. திரும்பி பார்த்தவனின் கண்கள் விரிந்தன!
வேதாந்தம் தான் நின்று இருந்தார். அனைவரும் சென்று விட்ட பின், அவர் ஒருவர் தான் அவனுக்காக நின்று இருந்தார்.
இன்று வரை அவன் அவரிடம் புன்னகை மட்டுமே புரிவான். ஏதாவது கேட்டால் பதில் சொல்லுவான் அவ்வளவே!
ஆனால் இன்று அவர் மட்டுமே அவனுக்காக நிற்கிறார்.
என்ன நினைத்தானோ, அவரை இறுகி அணைத்து இருந்தான்.
யாருமே இல்லை என்று நினைக்கும் போது நமக்காக ஒரே ஒருவர் இருக்கிறார் என்று தோள் கொடுக்கும் போது தரும் அணைப்பு அது!
குழந்தையாக மாறி இருந்தான் சாணக்கியன்.
“விஜய்”, என்று அவர் அழைக்கவும், அவனோ இன்னும் வெடித்து அழுதான். அவனும் அவருக்கு குழந்தை தானே!
இதே சமயம், விக்ரமிற்கு சான்விக்கும் தான் போர் மூண்டு கொண்டு இருந்தது.
Waiting for next epi sis