சான்வியை அழைத்து வீட்டிற்கு வந்தவன், அவளை இழுத்து கொண்டு அவனின் அறைக்கு தான் சென்றான்.
“கைய விடுங்க விக்ரம் வலிக்குது”, என்று அவள் சொல்லவும், “நீ என்ன பன்னிருக்க சான்வி?”, என்று அவனின் உச்சபச்ச குரலில் கத்தி இருந்தான் விக்ரம்.
அவள் அரண்டு போய் விட்டாள். அவள் பின்னே நகரவும், அவனை சமன் செய்து கொண்டு, “இங்க பாரு சான்வி, நீ உன் அப்பா கிட்ட சொன்னது எல்லாம் ஓகே, நீ விஜய பேசுனது தான் கடுப்பா இருந்துது. அவனை அப்படி பேச உனக்கு என்ன டி ரைட்ஸ் இருக்கு? உனக்கு தெரியுமா அவன் நீ தான் பொண்ணுன்னு தெரிஞ்சி வந்தானு?”, என்று அவள் மேல் கேள்வி அம்புகளை தொடுத்தான்.
“அதான் என் அப்பா சொன்னாரே…”, என்றவளை அப்படியே நிறுத்தி, “ஆமா உங்க அப்பா பெரிய ஹரிச்சந்திரன் பாரு உண்மைய தான் பேசுவாரு… கண்டிப்பா அவனுக்கு நீ தான் பொண்ணுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை. அவன் முகமே அத சொல்லுச்சு.. பாவமா இருந்துது அவனை பார்க்கவே தெரியுமா? என்ன தோற்கடிக்கணும்னு குறுக்கு வழில கூட அவன் போயிருக்கட்டும்.. அதுக்குன்னு என் பொண்டாட்டி மேல கை வைக்குற அளவுக்கு கீழ் தனமானவன் இல்ல அவன்.. விஜய் ஹெஸ் ஹிஸ் வோன் எதிக்ஸ்”, என்று முடித்து இருந்தான்.
“உங்கள தோற்கடிக்க எந்த எல்லைக்கும் போவேன்னு சொன்னவனுக்காக நீங்க என் கூட சண்டை போடறீங்களா விக்ரம்?”, என்றவள் குரல் உடைந்ததை உணர்ந்தவன், அவளின் தோளை பற்றி அவனை பார்க்க வைத்தான்.
“இங்க பாரு சான்வி, அவன் நல்லவன்னு நான் சொல்லமாட்டேன். நானே நல்லவன்னு நான் சொல்லமாட்டேன். ஆனா அவன் கேரக்டெர் அவளோ கேவலமானது இல்ல, நினைவு இருக்கட்டும் உன்ன முதல் முதல்ல மிஸஸ் விக்ரம சத்திரியனு கூப்பிட்டவன் அவன் தான்.. அவன் நண்பன் கிட்ட கூட அவன் உண்மைய சொல்லல… எதுக்கு இப்படி பண்ண போறான்? என்ன தோற்கடிக்க அவனுக்கு ஆயிரம் வழி இருக்கு இவளோ கேவலமா அவன் இறங்க மாட்டான். நான் இத அங்கேயே சொல்லி இருப்பேன். கல்யாணம் மேட்டர் தெரிஞ்ச அன்னைக்கே எல்லாரு முன்னாடியும் ட்ராமா வேணாம்னு தான் வந்துட்டேன். கொஞ்சம் பொறுமையா யோசி சான்வி”, என்றவன் கீழே இறங்கி சென்று விட்டான்.
சான்வி அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டாள். அவளுக்கு விக்ரம் சொன்ன அனைத்தும் மனதில் ஓட துவங்கியது.
உண்மை தான், அவளிடம் இன்று வரை விஜய் தவறாக பேசியதில்லை. அவளை பார்த்ததே இல்லை எங்கிருந்து பேசுவான்
காலம் கடந்து நியானோதயம் வந்தது.
கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டோமோ என்று யோசித்து கொண்டு இருந்தாள்.
இதே சமயம், விஜய்க்கு தண்ணீர் கொடுத்தார் வேதாந்தம்.
“ஏன் இப்படி பண்ண?”, என்று அவர் கேட்கவும், அவனுக்கு இவர் கூட அவனை நம்பவில்லையா என்று தோன்றியது.
“நீ நினைக்கிற மாறி இல்ல, எதுக்கு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்ட?”, என்றவரை பார்த்து, நடந்ததை சொல்ல துவங்கினான்.
நேற்று தான் மைத்திரிக்கு அழைத்து இருந்தான் விஜய். ஆனால் அவள் எடுக்கவே இல்லை. அவனிடம் பேச அவளுக்கு பிடிக்கவும் இல்லை.
இவனுக்கோ கோவம் தலைக்கேறியது, எத்தனை முறை அழைத்தும் எடுக்க வில்லை என்றால் அவனும் என்ன செய்வான்? கோவமாக வந்தது அடக்கி கொண்டான்.
வீட்டிற்கு அவன் வந்த சமயம், “விஜய் நான் சொல்றத நீ கேட்கணும்”, என்று சிரித்து கொண்டே கலாவதி சொல்லவும், அவனுக்கோ அவன் அன்று சொல்லியது நினைவிற்கு வந்தது.
தோற்றுவிட்டால் நீங்கள் சொல்வதை செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறானே!
“சொல்லுங்க அம்மா”, என்றவுடன், “உனக்கு பொண்ணு பார்க்கலாம்னு இருக்கோம்”, என்றதும் அவனின் கண்கள் விரிந்தன. விக்ரம் இருக்கும் போது அவனுக்கு திருமணம் செய்யமாட்டார்கள் என்று அவன் நினைத்து இருந்தான். அவனுக்கு திருமணம் ஆனது கூட யாருக்கும் தெரியாது தானே!
“ஆனா விக்ரம்..”, என்று அவன் நிறுத்தவும், “டேய் பார்க்க தான் டா ஆரம்பிக்க போறோம்… மிஸ்டர் கவின் அவர் பொண்ண விக்ரமுக்கு பேச இருக்கறதா கேள்வி பட்டோம்.. உனக்கும் பார்க்கலாமே”, என்று ஸ்ரீதர் சொல்லவும், அவனுக்கு அப்போது இருந்த மனநிலையில், “சரி உங்க இஷ்டம்”, என்று சொல்லி கடந்து விட்டான்.
அவன் சென்ற பின்பு, “எப்படி முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு போறான் பாரு.. பொண்ணு சான்வினு தெரிஞ்சா துள்ளி குதிப்பான்”, என்று ஸ்ரீதரும் கலாவதியும் அவர்களே மனக்கோட்டை கட்டி கொண்டனர்.
அவனுக்கு அடுத்த நாள் தான் அவன் செய்த தவறு நெற்றி பொட்டில் அறைந்தது. நேற்று ஏதோ மைத்திரி மீது இருந்த கோவத்தில் திருமணத்திற்கு ஒப்பு கொண்டு விட்டான். ஆனால் இன்று உறுத்தியது.
சான்வியின் பிறந்த நாள் முடிந்து வரும் சமயம், திருமணம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டு தான் இருந்தான். நேற்று வர்ஷாவும் இல்லை, இருந்து இருந்தால் விஜய்க்கு திருமணம் வேண்டாம் என்று அவளே சொல்லி இருப்பாள்.
அனைத்தையும் அவன் கூறி முடிக்க, “எனக்கு சாத்தியமா இங்க அவங்க அனௌன்ஸ் பண்ணும் போது தான் சான்விய முடிவு பண்ணி இருக்காங்கனு தெரியும். தெரிஞ்சி இருந்தா கண்டிப்பா வந்து கூட இருக்க மாட்டேன். நான் போய் எப்படி விக்ரமோட வைப் கூட…”, என்றவன் முகத்தை மூடி கொண்டான்.
அவனால் அதற்கு மேல் பேச கூட முடியவில்லை. அவனே உணர்ச்சியின் பிடியில் சிக்கி இருக்கிறான் என்று வேதாந்தத்திற்கு புரிந்தது.
“எனக்கு தெரியும் விஜய், நீ கண்டிப்பா சான்வி தான் பொண்ணுன்னு தெரிஞ்சி வந்து இருக்க மாட்டேன்னு… ஆனா பாரு நீ கோவத்துல சொன்ன ஒரு வார்த்தை உன்ன எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு… இதுக்கு தான் யோசிச்சி பேசணும்.. வாகினி அண்ட் விக்ரம் பண்ணதும் தப்பு தான். உங்க வயசுக்கு நீங்க மெச்சூரிட்டி இல்லாம நடத்துக்குரிங்க… பட் உங்கிட்ட ஒன்னு கேட்கணும்”, என்றவுடன் அவரை நிமிர்ந்து பார்த்தான்.
“நீ மைத்திரியை உண்மையா தானே லவ் பண்ற?”, என்றவுடன், அவனும் ஆமாம் என்று தலையசைத்தான்.
“அந்த பொண்ணு ரொம்ப பாவம் விஜய். நான் அவளை என் ஆர்பனேஜ் கூட்டிட்டு வரும் போது அவளுக்கு ஒரு வயசோ இரண்டு வயசோ தான் இருக்கும்.. பாவம் அவளே வாழ்க்கைல சந்தோஷம்னா என்னனு தெரியாம வளர்ந்த பொண்ணு.. உன்ன லவ் பண்ணும் போது எவளோ கனவு கண்டு இருப்பா? அதெல்லாம் நீ இப்படி உடைச்சி எரிஞ்சிடியே”, என்றவுடன் தான் அவனுக்கு அவன் செய்த முட்டாள் தனம் புரிந்தது.
“நீங்க சொல்றது சரி தான். நான் கொஞ்சம் நிதானமா இருந்து இருக்கலாம்.. ஆனா என்னைக்குமே அவளை நான் ஏமாத்தணும்னு நினைக்கல.. உண்மையா அவளை என் லவ் பன்னேனு கூட எனக்கு தெரியல.. பட் ஐ காண்ட் லிவ் விதோட் ஹேர்”, என்று முடித்து இருந்தான்.
அவனின் காதலின் ஆழம் வேதாந்தத்திற்கும் புரிந்தது.
“உன் அம்மா இதுக்கு..”, என்றவரை நிறுத்தி, “அக்ஸ்ப்ட் பண்ண மாட்டாங்க… இப்போ இருக்குற நிலமைல மைத்திரியே பண்ண மாட்டா”, என்றவனின் குரல் கம்மி விட்டது.
வேதாந்தம் புன்னகையுடன் அவனை பார்த்து, “எல்லாம் சரி ஆகிடும்”, என்று அவனின் தலையை கோதி விட்டார்.
“ரொம்ப தேங்க்ஸ்… என் கிட்ட இப்படி எல்லாம் யாரும் உட்காந்து பேசுனதே இல்ல.. எனக்கு இப்போ விகர்ம பார்த்து பொறாமை பட இன்னொரு ரிசேன் கிடைச்சிருச்சு”, என்றவுடன், அவர் சிரித்து விட்டார்.
“நீ என்கிட்ட எப்பவும் பேசலாம் விஜய்.. உங்கிட்ட என் நம்பர் இருக்குல?”, என்றவுடன், ஆமாம் என்று தலை அசைத்தான்.
“கால் மீ எனிடைம். எல்லாமே சரி ஆகிடும், எல்லாத்துக்கும் பொறுமை தேவை… நம்ப பாக்குற எல்லாமே உண்மை இல்ல, அதே மாதிரி பார்க்காத எல்லாமே பொய்யும் இல்ல”, என்று சொன்னவர் எழுந்து கொண்டார்.
“நான் ட்ரோப் பண்றேன்”, என்று அவன் சொல்லவும், “இல்ல விக்ரம் வருவான்”, எனும் போதே அங்கே வந்து இருந்தான் விக்ரம்.
“என்ன பொண்டாட்டி கூட சண்டை போட்டு முடிச்சாச்சா?”, என்றவரை பார்த்து, விக்ரம் எதுவும் பேசவில்லை.
“டேய் பாவம் டா அவ”, என்றவுடன், “அப்பா ப்ளீஸ் வாங்க போகலாம்… உங்க கிட்ட பேசணும்”, என்றவன் விஜயை பார்த்து, “வீட்டுக்கு ஓழுங்கா போய் சேறு போ”, என்று வேதாந்தத்தை பார்த்து, “போகலாமா?”, என்றான்.
“நீ பார்த்து போய்ட்டு வா விஜய்.. நம்ப சீக்கிரம் மீட் பண்ணுவோம்”, என்று சொல்லவிட்டு அவரும் செல்லும் போதே, “விக்ரம்”, என்கிற குரலில் திரும்பினான்.
அவனும் விஜயை பார்க்க, “நான்…”, என்று அவன் துவங்கும் போதே, “ப்ளீஸ் எனக்கு நீ எந்த ஜஸ்டிபிகேஷனும் கொடுக்க வேண்டாம். நீ பேச வேண்டியது மைத்திரி கிட்ட மட்டும் தான். என் பொண்டாட்டி மேல கை வைக்கிற தைரியம் எவனுக்கும் இல்ல”, என்று அவன் சொல்லவும், விஜயின் முகத்தில் சோகத்தின் சாயல்.
பின்பு தொடர்ந்த விக்ரம், “அதை விட என் தம்பி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு”, என்று சொல்லவும், அவனை நிமிர்ந்து பார்த்தான்.
“நீ கெட்டவன்லாம் இல்ல, உனக்கு சேர்க்கை சரி இல்ல”, என்றவனின் முதுகில் ஒரு அடி வைத்தார் வேதாந்தம்.
“அப்பா”, என்று அவன் பற்களை கடிக்க, “வா டா போகலாம்… என் மருமகளை என்ன பண்ணி வச்சிருக்க?”, என்று கேட்டுக்கொன்டே இருவரும் சென்றனர்.
விஜயும் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவன் வரவே நேரம் ஆகி இருந்ததால், அவரவர் அறையில் உறங்கி கொண்டு இருந்தனர் அனைவரும். அது அவனுக்கும் நல்லது என்று தோன்றியது. அவனுக்கு இருக்கும் மனநிலையில் அவன் யாருடனும் பேச தயாராக இல்லை. வேதாந்தமிடம் பேசியதே அவனுக்கு நன்றாக இருந்ததது.
இதே சமயம், மைத்திரி அவர்களின் முதல் புகை படத்தை கையில் வைத்து கொண்டு இருந்தாள்.
என்ன தான் அவன் மீது கோவம் இருந்தாலும் காதல் இல்லை என்று ஆகி விடுமா? இல்லை அவனின் மேல் உள்ள காதல் தான் ஒரே நாளில் கரைந்து விடுமா?
விஜயும் அதே புகை படத்தை எடுத்தான். அவன் அலமாரியில் தான் வைத்து இருந்தான்.
இருவரின் நினைவுகளும் அவர்களின் காதலின் அழகிய நாட்களை பயணிக்க துவங்கியது.
சாணக்கியனின் காதல் சரித்திரம் அடுத்த அத்தியாயத்தில் இருந்து!