அன்று தான் சாதனாவை விஜய் அவனின் பிஏவாக சேர்த்த முதல் நாள். ஒரு மீட்டிங் இருந்தது. சென்னையில் இருக்கும் அனைத்து தொழிலதிபர்களும் கலந்து கொள்ள போகும் மீட்டிங் அது என்பதால் மிகவும் கவனமாக தயாராகி இருந்தான் விஜய்.
மைத்திரி விக்ரமிடம் வேலை செய்ய ஆரம்பித்து ஒரு மாதம் ஆகி இருந்த நேரம் அது, அவளின் திறமையை கண்டு விக்ரம் வியக்காத நாளே இல்லை. அவள் வந்த பின்பு அவனின் ஒரு நேர்காணல் அல்லது முக்கிய நாட்கள் ஒன்று கூட விடுபடாமல் பார்த்து கொண்டு இருந்தாள். ஒரு மாதமே என்றாலும் அவனால் அவளின் திறமையை பார்க்க முடிந்தது.
“மைத்திரி இஸ் எவரித்திங் ரெடி?”, என்றவனை பார்த்து, ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
இருவரும் சேர்ந்து விக்ரமின் காரில் அந்த இடத்திற்கு வந்த அதே சமயம், விஜயும் வந்து சேர்ந்தான். மைத்திரி சேர்ந்ததில் இருந்து அவனும் விக்ரமை பார்க்கவில்லை. ஆதலால் அவனுக்கு மைத்திரி தான் இப்போது விக்ரமின் பிஏ என்று தெரிந்து இருக்க வில்லை.
“சாதனா எல்லாமே ரெடில?”, என்றவனின் பார்வை அப்போது தான் விக்ரமை பார்த்தான். அப்படியே அவனது விழிகள் அவனின் அருகில் நின்று இருந்த ஐந்தரை அடி பொன்சிலையின் மீது படிந்தது.
அவனின் விழிகளில் சட்டென மின்னல் வெட்டியது. சாதனா மைத்திரியின் தோழி என்று அவன் ஏற்கனவே அறிந்து தான் இருந்தான். ஆனால் அவளின் முதல் நாளிலேயே எப்படி அவளை பற்றி கேட்க முடியும் என்று அவனை கட்டு படுத்தி கொண்டு இருந்தான். இப்போது அவளே அவனின் முன் நிற்கையில் அவனுக்கு தேவதையே வந்து நிற்பது போல் தோன்றியது.
“அது உன்னோட பிரண்ட் தானே?”, என்று சாதனாவிடம் கேட்கவும், “ஆமா சார்.. ஆனா உங்க கம்பெனி பத்திலாம் வீட்ல பேசமாட்டேன் சார்’, என்று அவசரமாக கூறினாள் சாதனா. முதல் நாள் என்கிற பதட்டம் ஒரு புறம், நண்பி எதிரியின் பிஏ என்றால் எங்கு வேலை வேறு பொய் விடுமோ என்கிற பயம் ஒரு புறம், என்று தள்ளாடி கொண்டு இருந்தாள் அந்த பாவை.
விஜயோ சிரிப்பை அடக்கி கொண்டு, “அப்படி எல்லாம் லீக் ஆச்சுன்னா நீங்க இருக்க மாட்டிங்க..”, என்று மிரட்டல் தொனியில் பேச, “ஐயோ சார் நான் சாமி சாத்தியமா அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் சார்”, என்று முகத்தில் பயத்துடன் பேசியவளை பார்க்க அவனுக்கு சிரிப்பாக தான் இருந்தது.
“அது உன் பிரண்ட்ல மைத்திரி?”, என்ற விக்ரமிற்கு, புன்னகையுடன் தலையசைத்து இருந்தாள். அவளுக்கு விக்ரமுடன் வேலை செய்வது எளிதாக தான் இருந்தது. வேலையில் கண்டிப்பானவன் ஆனால் அக்கறை ஆனவன். இந்த ஒரு மாதத்தில் எத்தனையோ நாட்கள் இரவு நேரம் மீட்டிங் முடிந்து அவளை விட்டுவிட்டு தான் அவன் செல்வான். அவள், “நான் ஓலா இல்ல உபர்ல போறேன் சார்”, என்றாலும் விடாமல் அவளை வீட்டில் விட்டு அவள் உள்ளே சென்ற பின் தான் கிளம்புவான்.
அவளுக்கு விக்ரமின் மேல் தனி மரியாதையே இருந்தது.
நால்வரும் உள்ளே சென்றனர். மீட்டிங்க நன்றாக தான் சென்றது. பின்பு உணவு அருந்த அனைவரும் சென்றனர்.
“நீ உன் பிரண்ட் கூட சாப்பிட போறதா இருந்தா போகலாம் மைத்திரி இட்ஸ் ஓகே”, என்று புன்னகைத்தவனிடம், “ஆனா சார்… “, என்று தயங்கி நின்றாள்.
“விஜய் ஏதும் சொல்ல மாட்டான்”, என்றவனின் இதழ்களில் ஒரு கேலி புன்னகை. அவன் தான் வந்ததில் இருந்து விஜயின் கண்கள் மைத்திரியை வட்டமிடுவதை பார்கிறானே, அவனுக்கு மைத்திரியின் வாழ்வில் விஜய் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்ததை விட, விஜயின் வாழ்வில் மைத்திரி வந்தால் அவனின் வாழ்வு சிறக்குமோ என்று தோன்றியது.
அவன் சொன்னதும் அவனின் இடத்தை விட்டு, பிளேட் எடுத்து கொண்டு சாதனாவை நோக்கி சென்றாள்.
“என்ன டி இங்க வந்துட்ட?”, என்று அங்கு இருந்த இனிப்பு பொருட்களை எடுத்து கொண்டே சொன்னாள்.
“இவளோ ஸ்வீட் சாப்பிடாத அப்புறம் வெயிட் போற்றுவ”, என்று அவள் அவளுக்கு தேவையான உணவு பொருட்களை எடுக்கவும், அங்கே வந்தான் விஜய்.
“என்ன உன் பிரண்ட் கூட சாப்பிட போறியா சாதனா?”, என்றவுடன், அவனை பார்த்து, “எஸ் சார்”, என்று பதில் அளித்தாள் சாதனா. மைத்திரி அவனை திரும்பி கூட பார்க்கவில்லை.
ஆண்டுகள் பல கடந்து விட்டது. மைத்திரி இன்று தான் விஜயை பார்க்கிறாள். ஆனால் அவளுக்கு இத்தனை வருடங்களில் அவள் எங்கே அவன் எங்கே என்கிற உயரத்தின் அளவு தெரிந்து இருந்தது.
“உன் பிரண்டை எனக்கு இன்ட்ரோ பண்ண மாட்டியா?”, என்றவனின் கேள்வி சாதனாவிற்கு என்றாகும் அவனின் பார்வை முழுக்க மைத்திரியின் மீது தான் இருந்தது.
சாதானா தான் இதை எல்லாம் கவனிக்க வில்லை.
“கண்டிப்பா சார்…இவ தான் என் பிரண்ட் மைத்திரி”, என்றவள் உணவு எடுத்து கொண்டிருந்தவளை இழுத்து அறிமுகம் செய்யவும், “ஹலோ”, என்று கையை நீட்டி இருந்தான் விஜய்.
சாதனாவிற்கே ஆச்சர்யம். இன்று காலை அவளுக்கு கூட அவன் கை கொடுக்க வில்லை. ஆனால் மைத்திரிக்கு கொடுக்கிறான்.
மைத்திரிக்கோ தர்ம சங்கடமான நிலை.
அவனுக்கு கை கொடுத்து ஆக வேண்டிய கட்டாயம்.
அவனின் முன் கையை நீட்டி கையை குலுக்க, அவன் விட்டால் தானே?
“விட்டா அவ கைய வச்சி ஜூஸ் பிழிஞ்சிருவான் போல”, என்று இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த விக்ரம் கூட நினைத்து கொண்டான்.
“கைய விட்டு ஆகணும் சார்”, என்றவள் சொல்லவும், “எனக்கு கைய விடவே தோன மாட்டேங்குதே மிஸ் என்ன பண்றது”, என்றவனை பார்த்து சாதனாவிற்கும் மூச்சே அடைத்து விட்டது.
ஆனால் அவளுக்கு இங்கிருந்து நகர்ந்து விட்டால் நல்லது என்று தோன்றியது. புத்தி சாலி அவள், “நான் விக்ரம் சார் கூட பொய் சாப்பிடுறேன்”, என்று அவள் நகர்ந்து விட்டாள். அவளுக்கு தான் விக்ரம் பழக்கமானவன் ஆயிர்றே!
‘அடிப்பாவி என்ன இவன் கூட கோர்த்து விட்டுட்டு நீ போறியா?”, என்று மனதில் அவளை வறுத்து எடுத்து கொண்டிருந்தாள் மைத்திரி.
“போலாமா?”, என்கவும், அவள் விழி விரித்து பார்க்க, “சாப்பிட போலாமான்னு கேட்டேன்”, என்றவன் எங்கே அவளின் பதிலுக்காக காத்திருந்தான், அவளின் கையில் இருந்த பிளேட்டை வாங்கி கொண்டு சென்று விட்டான்.
சாதனா வந்து அமரவும், “ரொம்ப ஸ்மார்ட் தான் நீ”, என்ற விக்ரமை பார்த்து, “ஹிஹி நான் எதுக்கு சார் நந்தி மாறி”, என்று சிரிக்கவும், “உட்காரு”, என்கவும், அமர்ந்து இருவரும் சாப்பிட துவங்கினர்.
மைத்திரி விஜயுடன் அமர, அங்கிருந்த அனைவருக்கும் அது பெரிதாக தெரியவில்லை. அவள் இப்போது தான் முதன்முதலில் இப்படி ஒரு பெரிய இடத்திற்கு வருகிறாள். சாதனாவும் தான், ஆகையால் அங்கிருந்த அனைவருக்கும் இவர்கள் தான் விக்ரம் மற்றும் விஜயின் பிஏ என்று நினைத்து கொண்டனர்.
“எப்படி இருக்க?’, என்பர் அவன் புருவம் உயர்த்தி கேட்கவும், “எனக்கு என்ன சார் வேதாந்தம் சார் இருக்கும் போது? அவர் என்ன அவரு பொண்ணு மாறி தான் பாத்துக்கிறாரு”, என்று முடித்து விட்டாள்.
அவன் எப்படி இருக்கிறான் என்று கூட மறுகேள்வி கேட்கவில்லை.
“நான் எப்படி இருக்கேனு கேட்க மாட்டியோ?”, என்று அவன் அவளையே துளைத்து எடுக்கும் பார்வை பார்த்தான்.
“நீங்க நல்லா தான் இருப்பிங்க சார்.. உங்களுக்கு என்ன குறை?”, என்று கேட்கவும், “குறை இருக்கே, ஒரு கேர்ள் பிரண்ட் இல்ல’, என்கவும், “உங்க பின்னாடி தான் ஊரே சுத்துதாமே”, என்று நக்கலாக வந்தது அவளது பதில்.
“நீங்களும் அந்த லிஸ்ட்ல இருக்கீங்களோ?”, என்று அவனும் அவளிடம் நக்கலாக கேட்டிருந்தான்.
“சரி அத விடு, ரொம்ப மாறிட்ட.. நான் உன்ன கடைசியா பார்க்கும் போது இருந்ததை விட இப்போ எல்லாம் பெரிசாகிருச்சு”, என்றானே பார்க்கலாம்!
“வாட்”, என்று அதிர்ந்தே விட்டாள் அவள்! அவளின் கண்கள் சிவந்து கோவத்தை பிரதிபலித்தன.
“ஹே சில், நான் முடிய சொன்னேன்”, என்றவன் குரலை செருமி கொண்டு, “இப்பவும் அம்பது கிலோ தான் இருக்கியா இல்ல கொஞ்சம் அதிகம் ஆகிட்டியா?”, என்று கேட்கவும், “என்ன சொல்றிங்க?”, என்று அவள் கேள்வியாக பார்த்தாள்.
“இல்ல உன்ன தூக்கும் போது நீ அம்பது கிலோ தான் இருந்து இருப்ப இப்போ கொஞ்சம் கூடி இருக்குமோனு கேக்குறேன்”, என்கவும், இவன் இப்படி தான் எல்லாரிடமும் பேசுவானா என்று இருந்தது. அன்று அவர்கள் ஊட்டியில் இருக்கும் சமயம் கூட அவன் இப்படி எல்லாம் பேசவில்லையே!
“என்ன இப்படி எல்லாம் அன்னைக்கு நம்ப கிட்ட அவன் பேசலையேனு யோசிக்கிறயா?”, என்று அவளின் மனதில் நினைத்ததை அப்படியே சொல்லி இருந்தான் சாணக்கியன்.
“அப்போ இப்படி பேசிருந்தா என்ன மைனர் இவ் டீசிங்ல போட்டு இருப்பாங்க”, என்று கண்சிமிட்டவும், “அடப்பாவி” என்று அவளின் உதடு முணுமுணுத்தது.
“பாவி தான் மா உன்ன நினைச்சி ஆவியா ஆகிட்டு இருக்கேன்னு இப்படி எல்லாம் என்னால டயலாக் பேச முடியாது”, என்று சொன்னான். அவனுக்கு மட்டும் அல்ல, விக்ரமிற்கு ஆச்சர்யம்.
விஜய் எவ்வளவு பேசுவானா? அவனிடம் பேசும் ஒரே ஜீவன் ராகவ் மட்டும் தான். இன்று தான் அவன் இவ்வளவு ஒரு நபருடன் பேசி பார்க்கிறான்.
“உன் பிரண்ட் ரொம்ப ஸ்பெஷல் தான்”, என்று சாதனாவை பார்த்து சொல்லவும், அவள் தான் சிக்கனுடன் சண்டை இட்டு கொண்டு இருந்தாள்.
“சாரி சார்”, என்று சிக்கனை வாயில் வைத்து கொண்டு அவள் பேசவும், “இந்தா தண்ணி குடி”, என்று சொல்லி அவளின் கைகளில் ஒரு கிளாஸ் தண்ணீரை கொடுத்து இருந்தான் விக்ரம்.
அவனுக்கு சுவாரஸ்யமாக தான் இருந்தது.
இது எவ்வளவு தூரம் செல்லும் என்று அவனுக்கு தெரியாது? ஆனால் விஜயின் மாற்றம் அவனுக்கு பிடித்து இருந்தது.
எப்போதும் இறுகி இருப்பவன் இன்று ஒருவருடன் தளர்ந்து அவங்க இருக்கிறான். அவளை பார்த்து சிரிக்கிறான்.
அதுவே அதிசயம் தான். விக்ரமின் சிரிப்பு அரிது தான். ஆனால் அவனுக்கு நெருக்கமானவர்களுடன் இழைந்து விடுவான். ஆனால் விஜய் அப்படி அல்லவே!
“இவனுக்கு இவ தான் சரி ஆனா.. “, என்றவனின் கண்களில் கலாவதியின் உருவம் வர, நிமிர்ந்து பார்த்தான். ஒரு பக்கம் விஜயின் சிரிப்பு மறுபக்கம் மைத்திரி அழுவது போல ஒரு பிம்பம்.
விஜயின் சிரிப்பிற்காக மைத்திரி கண்ணீரில் கரைய நேருமோ என்று அவனுக்குள் ஒரு எண்ணம்.
ஆனாலும் அவனுக்கு விஜயின் மீது ஒரு நம்பிக்கை.
இங்கோ விஜய் விடாமல் அவளை நச்சரித்து கொண்டே இருந்தான். அவன் கேட்ட கேள்வியில் அவனை முறைத்து கொண்டு அமர்ந்து இருந்தாள் மைத்திரி.
Super sis 💞