56. சத்திரியனா? சாணக்கியனா?

4.7
(43)

அத்தியாயம் 56

அவன் அப்படி சொல்லவும், அனைவரும் வேதாந்தத்தை தான் பார்த்தார்கள்.

“சாப்பிடு பேசலாம்”, என்றவர் சொல்லவும், அவனும் வாகினியின் அருகில் அமர்ந்து விட்டான்.

சான்வி தான் பரிமாறினாள். “மொத்தமா மருமகளா மாறிட்ட போல சான்வி”, என்று வர்ஷா அவளை வம்பு இழுக்க, அவளோ, “ஏன் டி ஏன்?”, என்று கேட்டுக்கொண்டே இருக்கும் போது, “அத்தை ப்ரூட் கஸ்டர்ட்”, என்று ஆத்விக் கேட்கவும், அவனுக்கு பரிமாறினாள்.

“நீயும் உட்காந்து சாப்பிடு சான்வி”, என்கவும், “அது.. அண்ணா கால் பண்ணாரு.. வீட்டுக்கு கூப்பிட்டு இருக்காரு லன்ச்க்கு”, என்று அவள் சொல்லவும், “நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க அப்போ?”, என்று வாகினி கேட்கவும், “இல்ல நீங்க சாப்பிட்ட பிறகு போகலாம்னு இருந்தேன்.. எப்படியா இருந்தாலும் விக்ரம் வர மாட்டாரு… அதான்..”, என்று அவள் தயங்கி சொல்லவும், “ஏன் மா இப்படி? எங்களுக்கு கை இல்லையா? நீ பரிமாறினா தான் உன் புருஷன் உன்ன மிரட்டினானா?”, என்று வேதாந்தமும் கேட்கவும், விஜய் சிரித்து விட்டான்.

“என்ன பார்த்தா மிரட்டுற போலவா இருக்கு?”, என்று விக்ரம் விஜயை முறைத்து கொண்டே கேட்க, “அப்படி தான் கதை ஆர்மபத்துல நினைச்சிருப்பாங்க.. ஆனா இந்நேரம் நீங்க ஒரு காமெடி பிஸ்ன்னு தெரிஞ்சி இருக்கோம் அண்ணா”, என்று வர்ஷா சொல்லவும், “எல்லாம் என் நேரம்.. நீ போய் ரெடி ஆகு டி.. மிஸ்டர் ஜெய் ஷங்கரை போய் பார்ப்போம்”, என்றவன் சாப்பிட்டு முடித்து விட்டு எழுந்து விட்டான்.

சான்வியும் விக்ரமும் ஜெய் ஷங்கரின் வீட்டிற்கு சென்றார்கள்.

வர்ஷாவும் வாகினியும் சாப்பிட்டு முடிய, ஒருவரை ஒருவர் பார்க்க, “கிளம்புங்க”, என்கிற வேதாந்தத்தின் குரலில் ஆத்விக்கை அழைத்து கொண்டு சென்று விட்டார்கள்.

விஜயோ, “இப்போ பேசலாமா?”, என்று கேட்கவும், “வா”, என்றவர் அவனை அழைத்து கொண்டு அவரின் ஸ்டடி ரூமிற்குள் சென்றார்.

“உனக்கு என்ன பேசணும்?”, என்று கேட்க, “ஏன் என்கிட்ட நீங்க உண்மைய சொல்லல? எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு.. நான் வேற யாரையோ என்னோட அப்பாவா நினைச்சி இருக்கேன்”, என்றவனின் குரல் அப்படியே உடைந்து விட்டது.

அவரோ அவனின் கையை பற்றி, “நான் சொல்லி இருந்தா நீ என்ன பண்ணிருப்ப?”, என்றவரை பார்த்தவன் அப்படியே இருக்க, “நான் சொல்லட்டுமா? உன் அம்மா கிட்ட போய் கேட்டு இருப்ப.. அவ கண்டிப்பா இத அக்சப்ட் பண்ணி இருக்க மாட்டா… சொல்றது ஈஸி… ஆனா நான் அவளையும் உடைக்க விரும்பல.. உன்னையும் உடைக்க விரும்பல… நிறைய நேரம் உன்ன தூக்கி கொஞ்சனும்னு தோணும்.. ஆனாலும் அடக்கிப்பேன்… நீ விக்ரம் கிட்ட சண்டை போடும் போதெல்லாம் சில நேரம் உண்மைய சொல்லிரலாம்னு யோசிச்சி இருக்கேன்.. சான்வி விஷயத்துல கூட நான் உங்கிட்ட உண்மைய சொல்லி இருக்கலாம்… ஆனா அது நல்லா இருக்காது… நீ என்னைக்கா இருந்தாலும் என் புள்ள தான் டா.. எனைக்கா இருந்தாலும் என்ன தேடி வருவேன்னு எனக்கு தெரியும்.. அந்த நம்பிக்கை எனக்கு இருந்துது… நான் செத்தாச்சு உங்க அம்மா உன்ன கொல்லி போட அனுப்புவான்னு ஒரு நம்பைக்கை மட்டும் இருந்துது…”, என்கவும், “அப்பா”, என்றவன் இறுக அவரை அணைத்து இருந்தான்.

“ப்ளீஸ் அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. எனக்கு நீங்க வேணும்… இனி தான் உங்க கூட நான் வாழவே ஆரம்பிக்க போறேன்… அதனால ப்ளீஸ் இப்படி பேசாதீங்க.. இன்னும் நீங்க விக்ரம் பசங்க, என் பசங்க.. ஏன் வர்ஷா பசங்கனு எல்லாரையும் பார்க்கணும்.. ஐ வாண்ட் டு பி வித் யு”, என்றவன் சொல்லவும், அவருக்கோ குழந்தையாக அவனை சுமப்பது போன்ற உணர்வு.

அவனை பிரித்து எடுத்தவர், “உன் அம்மா கூட இருக்க போறது இல்லையா?”, என்றவரிடம், இல்லை என்று அழுத்தமாக தலை அசைத்து இருந்தான். கோவமாக இருக்கிறான் என்று தெரிந்தது.

ஆதலால் அவரும் இப்போது எதுவும் பேசவில்லை.

“சரி விடு… எல்லாம் சரி ஆகிடும்… மைத்திரி என்ன சொன்னா?”, என்கவும், அவன் எதுவும் பேசவில்லை.

“நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க விஜய்? அந்த பொண்ணு ரொம்ப பாவம்”, என்கவும், “அவ பாவமா.. அவளை லவ் பண்ண நான் தான் பாவம்… அவளுக்கு என் மேல நம்பிக்கை இல்ல அப்பா.. இப்போதைக்கு எனக்கு இருக்குற பிரச்சனையே போதும்.. அவளை பத்தி நினைக்க விரும்பல.. கொஞ்சம் நாள் நான் உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்றேன் ப்ளீஸ்”, என்று இறைஞ்சினான்.

அன்பிற்காகவே ஏங்கி நின்றவன் அவன், இப்போது அதை வேதாந்தத்திடம் இறைஞ்சி நிற்கிறான்.

அவர் தர மறுப்பாரா என்ன? “டேய் கண்டிப்பா கொஞ்ச நாள் என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்.. இதுக்கு எதுக்கு ப்ளீஸ்லாம்”, என்றவர் அவனை அழைத்து கொண்டு ஒரு அறைக்கு அழைத்து செல்ல, அங்கே வாகினியின் திருமண புகைப்படம் தான் மாட்டி இருந்தது.

ஆனால் அதில் வாகினி, பார்த்தீவ், பிரணவ், விக்ரம், வர்ஷா, விஜய், ராகவ் மற்றும் சான்வி நின்று இருந்தனர்.

அனைவரின் முகத்திலும் அப்படி ஒரு புன்னகை.

“இப்படி விக்ரம் கல்யாணத்துக்கும் எடுக்கணும்னு நினைச்சேன்… ஆனா அவன் ரிசெப்ஷன்ல தான் எடுக்க முடியல.. அட்லீஸ்ட் உன் கல்யாணம் வர்ஷா கல்யாணத்துலயாச்சு எடுக்கணும்”, என்று சொல்லவும், “எனக்கு என்ன அவசரம்… வர்ஷாக்கு வேணா பிரணவ் கூட பண்ணலாம்.. இப்போ தானே விக்ரமக்கே முடிஞ்சி இருக்கு.. ஒரு வருஷம் போகட்டும்”, என்று சொல்லி விட்டான்.

“வர்ஷாக்கு பிரணவ் கூட இப்போ கல்யாணம் பேசுற நிலைலயா இருக்கு? அவனை இவளுங்க இன்னைக்கு வச்சி செஞ்சிட்டு வந்திருப்பாங்க.. இந்த கேஸ் முடியட்டும்… அப்புறம் பேசலாம்… நீ தான் பேசணும்”, என்கவும், “நான் சொன்னாலாம் கலாவதி கேட்க மாட்டாங்க”, என்றவனிடம், “சரி நான் ஸ்ரீதர் கிட்ட பேசிக்கிறேன்”, என்று முடித்து இருந்தார்.

இதே சமயம், ஜெய் ஷங்கரின் வீட்டிற்கு முன் காரை நிறுத்தி இருந்தான் விக்ரம்.

“உன் அப்பா கூட இன்னைக்கு பன் தான் வா”, என்று சொல்லிக்கொண்டே அவன் இறங்க, அங்கே அவனுக்காக காத்து கொண்டு இருந்தான் ராகவ்.

“வாங்க”, என்று அவன் அழைக்க, “என்ன உங்க அப்பா வந்து கூப்பிட மாட்டாரா? முதல் முறை இந்த வீட்டு மாப்பிள்ளை வரேன்.. கொஞ்சம் கூட மரியாதை இல்ல”, என்று வேண்டுமென்றே அவன் வம்பு செய்ய, அதை மேலே இருந்து பார்த்த ஜெய் சங்கரோ, “டேய் உனக்கு இவளோ மரியாதை போதும் டா.. உள்ள வா”, என்கவும், “அதெல்லாம் முடியாது.. நீங்க வந்து ஆரத்தி எடுங்க அப்போ தான் உள்ள வருவேன்.. இல்லனா நானும் என் பொண்டாட்டியும் அப்படியே போறோம்”, என்று அவன் சான்வி கையை பிடிக்க பதறி விட்டார் ஜெய் ஷங்கர்.

என்ன இருந்தாலும் அவளின் அன்பு மகள், முதல் முறை திருமணம் முடிந்து அவளின் கணவனுடன் வருகிறாள். அவளை அப்படியே அனுப்ப அவருக்கு மனமில்லை.

“அதெல்லாம் பொண்ணுங்க பண்ணுவாங்க டா.. இந்த வீட்ல தான் யாரும் இல்லையே”, என்று அவர் சொல்லவும், “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல… நீங்களே வந்து ஆரத்தி எடுங்க.. எனக்கு அப்போ தான் சந்தோஷம்”, என்று ஒற்றை காலில் அவன் நிற்க, “எல்லாம் என் தலையெழுத்து”, என்று வெளிப்படையாகவே சொல்லி கொண்டு கீழே இறங்கினார்.

“மச்சான் வந்த முதல் நாளே என் அப்பாவை இப்படி ஆட்டிவைக்குறிங்களே”, என்று ராகவ் சிரித்து விட, “அவரை வச்சி பன் பண்றது நல்லா இருக்குல”, என்று அவனும் கண் சிமிட்டி கொண்டான்.

அவரும் கீழே வந்து இருவருக்கும் ஆரத்தி எடுக்கவும் தான் உள்ளே வந்தான்.

“சரி மாப்பிள்ளைக்கு என்ன ஸ்பெஷல்லா செஞ்சி வச்சிருக்கீங்க”, என்று அவன் கேட்டுக்கொண்டே கால் மேல் கால் போட்டு அமர, ஜெய் ஷங்கருக்கோ பற்றி கொண்டு வந்தது.

சான்விக்கோ, “ஐயோ எதுக்கு இவரு இப்படி ஓவர் பெர்போர்மென்ஸ் பண்றருனு தெரியலையே?”, என்று நினைத்து கொண்டே நின்று இருக்க, “என்ன வேணும்னு சொல்லு தர சொல்றேன்”, என்கவும், “எனக்கு ஒரு ட்ரோபிகள் மொக்டைல் வேணும்.. கிடைக்குமா?”, என்கவும், “இது வீடா இல்ல விஐபி போற ரெஸ்டாரன்டை? இதெல்லாம் கேட்குற, வேற ஏதாச்சு சிம்பிள்லா கேளு”, என்கவும், “சரி சரி.. உங்க கையாள போய்ட்டு ஒரு லெமன் சோடா போட்டுட்டு வாங்க”, என்றவுடன், அனைவரின் கண்களும் விரிந்தன.

ஜெய் ஷங்கர் எவ்வளவு பெரிய படிப்பு சம்மந்தமான நிறுவனங்களின் தலைவர் அவரை போய் இப்படி வேலை வாங்குகிறான்.

“என்ன டா விளையாடுறியா?”, என்று அவர் எகிறிக்கொண்டு வர, “ச்ச நம்ப இரண்டு பேரு விளையாடுனா நல்லா இருக்குமா? நீங்க விளையாட சீக்கிரமே ஒரு பேரனோ பேத்தியோ நானும் என் பொண்டாட்டியும் ரெடி பண்ணி தரோம்.. அவங்க கூட விளையாடுங்க”, என்றவனை பற்களை கடித்து கொண்டு பார்த்தார்.

“போங்க மிஸ்டர் ஜெய் ஷங்கர் போய் லெமன் சோடா எடுத்துட்டு வாங்க…”, என்றவரை விடாமல், அவனே அழைத்து கொண்டு கிட்சனிற்கு சென்று விட்டான்.

“சரி உங்களுக்கு என்ன வேணும்?”, என்று கேட்கவும், “நீ பேசறதெல்லாம் கேட்டா தலையே வலிக்குது…”, என்கவும், “சரி நான் அப்போ உங்களுக்கு ஒரு சுக்கு காபி போட்டு தரேன்.. ராகவ் உனக்கு என்ன வேணும்? சான்வி உனக்கு?”, என்று இருவரிடமும் கேட்டான்.

அவர்களோ, கோல்ட் காபி என்று சொல்லி விட்டார்கள்.

“சரி மிஸ்டர் ஜெய் ஷங்கர் நீங்க எனக்கு லெமன் சோடா வித் சால்ட் போடுவீங்களாம்.. நான் உங்களுக்கு சுட சுட சுக்கு காபியும், உங்க பசங்களுக்கு குளுகுளுனு கோல்ட் காபியும் போடுவேனாம்”, என்றவன் சமைக்க துவங்கி விட்டான்.

ஜெய் ஷங்கருக்கு மயக்கம் வராத குறை தான். முதல் நாள் வந்தவுடன், அவருடன் அவனும் சமைக்கிறான். அதுவும் அவர்கள் மூவருக்காகவும், விக்ரமின் நடவடிக்கை அவருக்கு கொஞ்சம் கோவத்தை கொடுத்தாலும் அவனின் இயல்பு தன்மை அவரை அவனை ரசிக்கவும் வைத்தது என்னவோ உண்மை தான்.

“மாயக்காரன் இப்படியே பேசி பேசி தான் என் பொண்ண மயக்கிட்டான்”, என்று வெளிப்படையாகவே அவர் சொல்ல, “ஹலோ நான் ஒன்னும் உங்க பொண்ண மயக்கல அவ தான் என்ன மயக்கிட்டா”, என்றவன் சொல்லவும், “விக்ரம்”, என்று சான்வி கத்த, “ஹே உண்மைய சொல்லணும் டி”, என்றவுடன், ராகவ் சிரித்து விட்டான்.

“உனக்கு செம்ம புருஷன் டி”, என்றவன் சொல்லவும், “ம்கூம் எப்படி மாட்டிருக்கேன் பாரு”, என்றவளை பார்த்து சிரித்து இருந்தான் ராகவ்.

இதே சமயம், பிரணவ் ஷவரின் கீழ் நின்று இருந்தவனுக்கு இருப்பு கொள்ளவே முடியவில்லை. அவனுள் ஆயிரம் கேள்விகள்.

குளித்து விட்டு, வெளியே வந்தவனின் கைபேசி சிணுங்கியது. யார் என்று எடுத்து பார்த்தவனின் கண்கள் விரிந்தன.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 43

No votes so far! Be the first to rate this post.

1 thought on “56. சத்திரியனா? சாணக்கியனா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!