காரில் சென்று கொண்டிருக்கும் போது தீஷிதன் தனது லேப்டாப்பில் வேலையாக இருந்தான். அவன் சம்யுக்தாவை கண்டுகொள்ளவில்லை. சம்யுத்தாவும் வெளியிலே இயற்கை எழிலை இரசித்தபடி தனது விழிகளை பதித்திருந்தாள். இங்கே பரந்தாமனின் நெற்றியில் விழுந்த சுருக்கங்கள் அவர் தீவிரமான யோசனையில் இருப்பதை வெளிப்படுத்தின. ஒரு சில நேரங்கள் திரும்பி தந்தையை பார்த்த தீக்ஷிதன் எதுவும் பேசாமல் தோளைக் குலுக்கிக் கொண்டான். இப்படியாக அவர்களின் ஆபிசுக்கு அருகில் வந்ததும் பரந்தாமன் ட்ரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லிவிட்டு, சம்யுக்தாவிடம், “சம்யுக்தா இங்கிருந்து ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடலாம்… அதோ அங்க தெரியுதே பெரிய மாடி கட்டிடம் அதுதான் நம்ம ஆபீஸ்.. இது என்னோட விசிட்டிங் கார்டு இத கொடுத்தா செக்யூரிட்டி உன்னை உள்ள விட்டுருவாரு.. பயப்படாம வா..” என்று சொல்லிவிட்டார்.
அதற்கு சரி என்று தலையசைத்த சம்யுக்தா காரில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள். கார் அந்த பிரம்மாண்டமான அடுக்குமாடி வளாகத்தில் உள்ள நுழைந்தது. காரில் இருந்து இறங்கிய தீஷிதனிடம் வந்தான் புகழ். தீஷிதனின் கையில் இருந்த லேப்டாப்பை வாங்கியவாறு அவனின் வேகநடைக்கு ஈடு கொடுத்து நடக்க முயன்றான். ஆனால் வழமை போல இன்றும் அவனால் அவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தீஷிதன் ஆபீஸில் நுழைந்தது முதல் அங்கே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு நிசப்த நிறைந்திருந்தது. தீஷிதன் வீட்டில் இருப்பதைப் போன்று என்றுமே ஆபிஸில் இருந்ததில்லை அங்கு அவன் காட்டும் முகமுமே வேறு. தந்தையாகவே இருந்தாலும் அவனிடம் அனுமதி கேட்டுத்தான் அவன் அறைக்குள் நுழைய வேண்டும் என்பது அவனின் எழுதப்படாத விதி. பரந்தாமனும் மகனின் அறைக்கும் நுழையும் போது என்றும் கதவை தட்டாமலோ அனுமதி கேட்காமலோ நுழைந்ததே இல்லை. மகன் முன்னே செல்ல அங்கிருந்த ரிசப்ஷன்லிஸ்டிடம் வந்தார் பரந்தாமன். முதலாளி வருவதைப் பார்த்து எழுந்து நின்றவள் குட் மார்னிங் சொல்ல, அவளைப் பார்த்து புன்முறுவல் சிந்தி அவள் வாழ்த்தை பெற்றவர், “என்னோட விசிட்டிங் கார்டு எடுத்துட்டு ஒரு பொண்ணு வருவாங்க.. அவங்கள நேரடியா மீட்டிங் நடக்கும் ஹால்ல உட்கார வைச்சிடுங்க.. அப்புறம் எனக்கு இன்பார்ம் பண்ணுங்க..” என்றார். அந்த ரிசப்ஷன்லிஸ்டும், “சரிங்க சார்..” என்று விட்டு பரந்தாமன், அனுமதி கேட்டுவிட்டு தீஷிதனின் அறைக்குள் நுழைந்தார். “தீஷி சம்யுக்தாக்கு வேற வேலை கொடுக்கலாம்ல…”
“டாட் நீங்க சொன்ன உடனே இங்க வேலை போட்டுக் கொடுக்க வேகன்ட் இல்ல.. அதை நான் முன்னாடியே உங்ககிட்ட சொன்னேன்ல.. இங்க இருக்கிற ஒரு டீம்ல ஒருத்தவங்க வேலையை விட்டுட்டு போறாங்கன்னு சொல்லி அந்த வேலைய தான் குடுக்கலாம்னு இருக்கேன்.. ஆனா இவங்க நல்லா வேலை பார்த்தா மட்டுமே தான் இந்த கம்பெனில வச்சிருப்பேன்.. இல்லன்னா ஐ அம் சோ சாரி டாட்..”
“தீஷி அப்படி நினைக்காத அந்த பொண்ணு ரொம்ப திறமையானவளா இருப்பா..”
“அவ்வளவு திறமையான பொண்ணா இப்படி ஏமாந்து நிக்குது?”
“தீஷி அது அவளோட பர்சனல்..”
“ஓகே டாட் ஐ அம் சாரி..” என்றவன் அத்துடன் பேச்சு முடிந்து விட்டது என்பது போல தனது மேசையில் இருந்த கோப்பு ஒன்றை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான்.
பரந்தாமனோ தலையை இடம்வலமாக ஆட்டிவிட்டு, புகழிடம் கண்ணைக் காட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பரந்தாமன் சொன்னபடியே ஐந்து நிமிடத்தில் அந்த ஆபிசுக்கு வந்து சேர்ந்தாள் சம்யுக்தா. அவள் இருந்த அவர்களுடைய வீடு மாளிகை என்றால் அவர்களது கம்பெனி மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. ‘இங்கே எனக்கு வேலையா?’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் உள்ளே சென்றாள். அங்கிருந்த ரிசப்ஷன்லிஸ்டிடம் தன்னிடமிருந்து விசிட்டிங் கார்டைக் காட்ட அவளோ, அவளை நேரடியாக மீட்டிங் நடக்கும் ஹாலுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தாள். “இங்க உட்காருங்க சார் இப்போ வந்துடுவாங்க..” என்று சொல்லிவிட்டு பரந்தாமனிடமும் விஷயத்தை சொன்னாள்.
அந்த நாற்காலியில் அமர்ந்த சம்யுக்தாவின் விழிகள் அங்கும் இங்கும் அசைய தனது கண்ணாடியை சரி செய்து போட்டுக் கொண்டாள். அந்த ஏசி நிறைந்த இடத்திலும் அவளுக்கு வியர்த்தது. அவள் இதயம் துடிக்கும் சத்தமும் அவளுக்கு கேட்டது. மெல்ல தனது ஷாலை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டாள் தனக்குள் எழும் படபடப்பை மறைக்க. அந்த ஷாலை விரல்களால் சுற்றிக்கொண்டு கைகளை பிசைந்து கொண்டு இருந்தாள்.
அவள் வந்ததை அறிந்ததும் பரந்தாமன் அங்கே வந்து அவளை அழைத்துக் கொண்டு நேராக தீக்ஷிதன் அறைக்குள் நுழைந்தார். “தீஷி அப்பாயின்மென்ட் ஆர்டர் குடுத்திட்டனா சம்யுக்தா இன்னைக்கே வேலையில ஜாயிண்ட் பண்ணிக்கலாம் இல்ல..” என்றார். “வெயிட் டாட் ஒரு சின்ன வேலை இருக்கு நான் அதை முடிச்சுட்டு வந்திடுறன்..” என்றான்.
“ஓகே தீஷி.. சம்யுக்தா நீ இங்கேயே இரு தீக்ஷி அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்ததும் நீ உன்னோட வேலைல ஜாயின் பண்ணிக்கலாம்.. எனக்கு இன்னொரு வேலை இருக்கு நான் முடிச்சுட்டு வந்துடறேன்..”
“சரிங்க சார்..” என்றவள் தலையை குனிந்து கொண்டு அந்த சேரில் உட்கார்ந்தாள். பைலை பார்த்துக் கொண்டு வேலையில் இருந்த தீக்ஷிதன் அதிலேயே மூழ்கிப் போனான். அவன் எதிரில் சேரில் அமைந்திருந்த சம்யுக்தாவிற்கு, ‘இவரு அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுப்பாரா? இல்லையா?’ என்ற சந்தேகம் எழுந்தது. தனது கண்ணாடியை அடிக்கடி சரி செய்து கொண்டிருந்தாள் பதட்டத்தில்.
அரை மணி நேரம் சென்ற பின் எதேர்ச்சையாக நிமிர்ந்த தீக்ஷிதன் கண்களில் பட்டாள் அங்கே அமர்ந்த தனது நகத்தை கடித்துக் கொண்டிருக்கும் சம்யுத்தா. அவளைப் பார்த்ததும், ‘அச்சோ டேட் அப்பாயின்மென்ட் ஆர்டர் குடுக்க சொன்னாருல்ல மறந்தே போயிட்டேன்..’ என்று மனதுக்குள் நினைத்தவன் வேகமாக அந்த அப்பாயின்மென்ட் ஆர்டரை தயார் செய்து சைன் பண்ணி அவளின் முன்பாக நீட்டினான். அவளோ அந்த லெட்டரை வாங்கிக் கொண்டு, “ரொம்ப நன்றிங்க சார்..” என்றாள். அவளை உறுத்துப்பார்த்த தீஷிதன், “உனக்கு கொடுத்திருக்கிற வேலையை சரியா பண்ணுவீங்கன்னு எங்க டாட் நம்புறாங்க.. இந்த கம்பெனியில ரொம்ப லாஸ்ட்டா இருக்கிறதோ இந்த டீம் தான்.. அவங்க கூட சேர்ந்து ஒர்க் பண்ணிப் பாருங்க.. முடிஞ்சா இந்த டீம்ம நீங்க டெவலப் பண்றதுக்கான முயற்சியைக் கூட பண்ணலாம்.. ஆல் தி பெஸ்ட்.. பட் ஒன் கண்டிஷன் என்னோட இந்த கம்பெனில ரொம்ப கேர் ஃபுல்லாக இருக்கணும்.. எனக்கு நம்பிக்கை துரோகம் பண்றது புடிக்காத ஒன்னு.. அத நீங்க பண்ண மாட்டீங்கன்னு நம்புறேன்.. மீறி பண்ணினா அதோட விளைவு ரொம்ப கடுமையா இருக்கும்..” என்று எச்சரித்து அனுப்பினான். இத்தனை நேரம் சாதுவாக சொன்ன தீஷிதன், இறுதியாக சொன்னதை சொல்லும்போது அவனது முகமும் இறுகியது அதைப் பார்த்த சம்யுக்தாவுக்கு உடல் சிலிர்த்தது. அவனது கண்களைப் பார்க்க பயமாக இருக்க, தலையைக் குனிந்து கொண்டே, “நான் என்னோட பெஸ்ட்டைக் கொடுப்பேன் சார்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
பரந்தாமன் அவளை அழைத்து அந்த டீமிடம் அறிமுகம் செய்து வைக்க, அவளும் அவர்களுடன் சிறிய தலையசைப்பைக் கொடுத்துவிட்டு அந்த குழுவுடன் இணைந்து கொண்டாள். இப்படியாக சம்யுக்தா அந்த டீமுடன் இணைந்து வேலை பார்க்கத் தொடங்கினாள். வழமை போல இவள் வீட்டிலிருந்து அவர்களுடன் செல்வதும் பாதி வழியில் இறங்கி அந்த கம்பெனிக்கு செல்வதுமாக நாட்கள் நகர்கின்றன. மெல்ல மெல்ல தீக்ஷிதன் அவளைக் கவனிக்கத் தொடங்கினான். எத்தனையோ பெண்கள் அவனிடம் வந்து இழையும் போது, இவள் மட்டும் அவனைக் கண்டுகொள்ளாமல் தானுண்டு தன்னோட வேலை உண்டு என்று இருப்பது அவனுக்கு. சுவாரசியமாக இருந்தது. தந்தை சொன்ன விடயங்களும் அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வந்தது. ஏனோ தீஷிதனுக்கு சம்யுக்தாவைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அதற்கு அவனின் டிடெக்டிவ் நண்பனிடம் உதவி கேட்க, அவனும் உதவுவதாகக் கூறினான்.
பிரகாஷுக்கு சீமாவிற்கும் அவரின் விருப்பப்படி திருமணம் செய்து வைத்தார் கீதா. உமேஸ்வரன் அவரிடம் இந்த கல்யாணம் வேண்டாம் என்றார். ஆனால் கீதாவோ அதற்கு சிறிதும் செவி சாய்க்கவில்லை. விடாப்பிடியாக அந்த திருமணத்தை செய்து வைத்தார். மணிகண்டனும் லீலாவதியும் தங்களுக்கு சம்யுக்தா என்ற ஒரு பெண் இல்லை என்பது போலவே நடந்து கொண்டார்கள். இருவரும் வித்யாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நாளும் வந்தது. அந்த விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இருந்தது. வெளிநாட்டுக்கு செல்பவர்களும் வெளிநாட்டிலிருந்து தாய்நாட்டு மண்ணை மிதிக்க ஆவலுடன் வருபவர்களும் கண்ணீருடன் உறவுகளுக்கு விடைகொடுப்பவர்கள் ஒருபுறமும், உறவுகளின் வருகைக்காக காத்துக் கொண்டு இருப்பவர்கள் என அந்த இடமே மிகவும் பரபரப்பாகவும் பல உணர்ச்சிகள் வெளிப்படும் இடமாகவும் இருந்தது. கையில் பொக்கேவுடன் தங்கள் மகளை பார்க்க வழி மேல விழி வைத்து காத்துக் கொண்டிருந்தார்கள் மணிகண்டனும் லீலாவதியும். அவர்களை நீண்ட நேரம் தாமதிக்க வைக்காமல் டெனிம் அணிந்து அதன் மேல் ஒரு டாப்பை போட்டுக்கொண்டு. கூந்தலை அள்ளி ஒரு போனிடெயில் போட்டுக் கொண்டு கையிலே சூட்கேஸ் சகிதம் அழகாக நடந்து வந்தாள் வித்யா. தாய் தந்தையை பார்த்தது வேகமாக ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டவள், அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதமும் வாங்கவும் தவறவில்லை. இருவரும் அவளை அள்ளி எடுத்து முத்தமிட்டனர். அவர்களைப் பார்த்த மகிழ்ச்சியிலிருந்து வித்யாவிற்கு அப்போதுதான் ஒன்று புரிந்தது. இருவரும் இருக்கிறார்கள் ஆனால் தனது அன்பான அப்பாவைக் காணவில்லை என்று. இருவரையும் பார்த்து, “டாட்.. மாம்.. அக்கா எங்க?” என்றாள்.
“அவ இல்லை வித்யா.. நீ வா வீட்டுக்கு போகலாம்..” என்றார் லீலாவதி. “என்னமா சொல்றீங்க? இத்தனை வருஷம் கழிச்சு நான் வரேன்னா அக்கா என்னைப் பாக்க ஏர்போர்ட் வர வேண்டாமா? இப்படி பண்றா அக்கா..”
“வித்யா சொன்னா கேளு வா வீட்டுக்கு போகலாம்.. அவளைப் பற்றி அப்புறமா பேசிக்கலாம்..” என்று அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார் லீலாவதி. அவர் பின்னே விதியே என்று மணிகண்டனும் பின் தொடர்ந்தார். அந்தத் தார் சாலையில் கார் வழுக்கிக் கொண்டு சென்றது. தாயை முறைத்துக் கொண்டே வந்தால் வித்யா. ஆனால் லீலாவதி இதுக்கெல்லாம் அசருபவரா அதைக் கண்டும் காணாதது போல் இருந்து கொண்டார். வீட்டுக்கு வந்து கார் நின்ற உடனே கதவை திறந்து கொண்டு உள்ளே ஓட முயன்ற வித்யாவை தடுத்தார் லீலாவதி.
“அம்மா இப்ப என்னம்மா பிரச்சனை? என்ன விடு நான் போய் அக்காவை பாக்கணும்..”
“வித்யா நீ இப்பதான் வெளிநாட்டில இருந்து வந்திருக்க.. ஆர்த்தி எடுத்ததுக்கப்புறம் உள்ள போலாம்..” என்றவர். அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் ரமணி அக்காவை அழைத்து ஆரத்தி எடுக்க சொல்ல அவரும் மகிழ்ச்சியோடு வந்து வித்யாவுக்கு ஆர்த்தி எடுத்தார். ஆர்த்தி எடுத்த மறுகணம் அவள் உள்ளே சென்று, “அக்கா.. அக்கா..” என்று அழைத்துக் கொண்டு இருந்தாள். ஆனால் அவளின் அழைப்பு சம்யுக்தாவிக்கு கேட்கவில்லை. “அம்மா அக்கா எங்க? இத்தனை தடவை கூப்பிட்டும் அக்கா எதுவுமே பதில் பேசல..”
“இங்க பாரு வித்யா உன்கிட்ட நாங்க ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. அந்த சம்யுக்தா உன்னோட சொந்த அக்காவே கிடையாது..”
“என்னமா சொல்றீங்க?”
“ஆமா வித்யா எங்களுக்கு ரொம்ப வருஷமா குழந்தைங்க இல்ல.. அதனால நாங்க ரெண்டு பேரும் ஒரு ஆச்சரியமத்துக்கு போய் அங்க சம்யுக்தாவ தத்தெடுத்திட்டு வந்தோம்.. அதுக்கு அப்புறம் தான் நீ பொறந்த.. சம்யுக்தாவை மறுபடியும் அங்க கொண்டு போய் விடவும் முடியல.. அப்படியே இருந்துட்டு போகணும் என்று விட்டுட்டேன்.. இப்போ கல்யாணம் பண்ணிக் கொடுத்தா அந்த வீட்ல மாப்ள சரி இல்லன்னு சொல்லி டிவோஸ் பண்ணிட்டு வந்துட்டா.. நீயே சொல்லு இந்த வீட்ல அவ இருந்தா உனக்கு எப்படி கல்யாணம் பண்ணி வைக்கிறது நாங்க? அதான் அவளை விட்டுவிட்டு அனுப்பிட்டேன்..” என்றார் சர்வசாதாரணமாக லீலாவதி.
இதைக் கேட்டதும் வித்யாவிற்கு கண்கள் உடைப்படுத்தன. “அம்மா நீ… நீங்க… சொல்றது நிஜமா? அவ என் சொந்த அக்கா இல்லையா?”
“இல்லவே இல்ல வித்து.. அவ உன் சொந்த அக்காவே இல்ல.. அவ யாரு அவ சொந்த பந்தம் யாரு? எதுவுமே எங்களுக்கு தெரியாது..”
“அம்மா என்ன வேணா இருக்கட்டும் ஆனாலும் இத்தனை வருஷம் இந்த வீட்டுப் பொண்ணாத்தானே இருந்தா.. அவளை எப்படி நீங்க வீட்டை விட்டு அனுப்பலாம்? நீங்க பண்றது ரொம்ப தப்பு.. அக்கா எங்க இருக்கான்னு சொல்லுங்கம்மா.. நான் போய் அவளை கூட்டிட்டு வரேன்..”
“இங்க பாரு வித்யா நான் சொன்னா சொன்னதுதான்.. அவளுக்கும் இந்த குடும்பத்துக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் இல்லை.. நீ உன் வேலைய பாரு..”
“முடியாதுமா எனக்கு அக்கா வேணும்.. நான் அக்காவை பார்த்தே ஆகணும்..” என்று கத்திய வித்தியாவின் கன்னம் எரிந்தது. ஆம் அவளை அடித்தது லீலாவதியே தான். கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு, ‘இத்தனை நாளும் ஒரு அடி கூட அடிக்காத தனது தாயா இப்போது அடித்தார்?’ என எண்ணியவாறு அவரைப் பார்க்க, “ஏய் நானும் சின்ன பொண்ணு பக்குவமா சொன்னா ஏத்துப்பா ஏத்துப்பானு பாத்தா ரொம்ப ஓவரா பேசுற.. இனிமே அக்கா கொக்கானு சொல்லிப் பாரு உன்னை தொலைச்சிடுவேன் தொலைச்சு..” என்று வித்யாவிடம் எரிந்து விழுந்தார் லீலாவதி.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Interesting divima