கனவு – 12
சுவற்றில் கையை ஓங்கி குத்தியவன் பார்வையோ ஓரிடத்தில் குத்திட்டு நின்றது.
வேறு எங்கே ? லாக்கரில் தான்.
நினைவு தெரிந்த நாளில் இருந்து அவளுக்காக அவன் எழுதி வைத்த கவிதைகள் யாவும் சேமித்து வைத்திருக்கும் லாக்கரின் அருகில் சென்றவனுக்கு இதற்கு மேல் தன்னிடம் அப் பொக்கிஷங்களை எல்லாம் வைத்திருப்பது தவறு என்ற எண்ணம் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் புரிய வைத்து இருந்தது.
கரங்கள் நடுங்க லாக்கரை திறந்துவனுக்கு விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்துக் கொண்டன.
அதற்குள் அவன் எழுதி வைத்திருந்த கவிதைகள் முதல் கொண்டு ஓவியங்கள் உட்பட அனைத்தும் அற்று வெற்றிடமாக இருந்த இடத்தைப் பார்த்து சிலையாக உறைந்து நின்று இருந்தான்.
அங்கு எப்படி இருக்கும்?
அவற்றைத் தான் அவனின் உடன் பிறந்தவன் எடுத்து விட்டானே!
இங்கே தானே வைத்தோம் வந்ததிலிருந்து நான் வெளியில் எடுத்து பார்க்கக் கூட இல்லையே! என்று யோசித்தவனுக்கு மேலும் எதனையும் யோசிக்க முடியாமல் மூளையே மரத்து விட்டது போலிருந்தது.
அப்படியே சரிந்து நிலத்தில் அமர்ந்தவனுக்கு இரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்க, தன் உடலின் நிலமை மோசமாவதை உணர்ந்தவன் இழுத்து பெரு மூச்சை விட்டுக் கொண்டே தன்னை நிலைப் படுத்திக் கொண்டவன் விழிகளை மூடி நடந்தவற்றை அசைப் போட ஆரம்பித்து இருந்தான்.
நீண்ட நேரத்தின் பின் விழிகளை திறந்தவன் உடலோ தானாக இறுகி விறைத்தது.
“ஏன் டா இப்படி பண்ண?” என்று சொல்லிக் கொண்டவன் இதழ்களில் விரக்தி புன்னகை.
அப்படியே விட்டத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்து இருந்தவன் சித்ராவின் குரலில் தான் சுயம் அடைந்தான்.
“ஆனந்த் கீழ வா சாப்பிடலாம்” என்றவர் அறைக் கதவை தட்டினார்.
இப்போதைய மனநிலையில் பசி என்ற உணர்வையே மறந்திருந்தான் அவன்.
பொருந்த சொல்ல வேண்டுமென்றால் சாப்பிடும் மனநிலையில் அவன் இல்லை எனலாம்.
மீண்டும் “ஆனந்த்” என்று வேகமாக கதவை தட்டினார்.
தனது சிந்தனையில் இருந்து மீண்டவன் “வரேன்” என சத்தமாக சொன்னவன் வேகமாக எழுந்து குளியலறைக்குள் நுழைந்தவன் முகத்தை தண்ணீரால் அடித்துக் கழுவினான்.
சற்று நேரத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வெளியில் வந்தவனின் முகம் எப்போதும் போல புன்னகையைத் தத்தெடுத்து இருந்தது.
முடிவெடுத்து விட்டான்.
வீட்டில் இருக்கும் வரை புன்னகை எனும் முகமூடியை அணிந்து கொள்ள சித்தம் கொண்டான்.
“இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்தடா?” என்று கேட்ட சித்ராவிடம் “கொஞ்சமா தூங்கிட்டேன் மா. எதுக்காக இவ்வளவு டென்ஷன்? அம் ஆல்ரைட்” என்று சித்ராவின் கன்னம் கிள்ளியவன் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்.
அவனை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டு இருந்த பிரதாபன் எழுந்து அவனுக்கு பரிமாற ஆரம்பிக்க, “அப்பா பிளீஸ் இதெல்லாம் ஏன் பண்றீங்க? நான் ஓகே ஆகிட்டேன் பா முதல்ல நீங்க உட்காருங்க” என்றவன் அருகில் நின்ற தன் அன்னையையும் அமர வைத்து அவருக்கு அருகில் அமர வைத்து உணவைப் பரிமாறியவன், எதிரே தானும் அமர்ந்துக் கொண்டான்.
அமைதியாக உணவை உண்டு கொண்டு இருந்தவன் பார்வை தன் அருகில் வந்தமர்ந்த விபீஷன் மீது படிந்து மீள, குரலை செருமிக் கொண்டவன் “அப்பா கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டான்.
“சொல்லுப்பா” என்றார்.
“நமக்கு வேண்டப்பட்ட கொஞ்ச பேருக்கு இன்வைட் பண்ணி ரெண்டு பேருக்கும் சிம்பிளா கோவில்ல கல்யாணம் பண்ணி வச்சிடலமா?” என்று கேட்டானே பார்க்கலாம்.
சாப்பிட்டுக் கொண்டு இருந்த விபீஷனுக்கு அவனின் இந்த முடிவு உச்சகட்ட அதிர்ச்சியை கொடுத்தது.
“என்னடா சொல்ற?” என்று சித்ரா கேட்க…
“அப்போ கல்யாணம் பண்ண ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்க போறீங்களா?” என்று இறுகிய குரலில் கேட்டான்.
“இல்லப்பா கொஞ்சநாள் போகட்டுமே” என்றவரிடம் “என்னம்மா பேசுறீங்க பாத்தீங்க தானே அத்தை எவ்ளோ கஷ்டப்படுறாங்கனு. மாமா இருந்திருந்தால் சும்மா விட்டு இருப்பாரா? ஆஹித்யாவோட வாழ்க்கைக்கு நாம தான் பொறுப்பு” என்றான் உறுதியான குரலில்…
“சரிப்பா நீ சொல்றது போல கல்யாணம் பண்ணி வச்சிடலாம் ஆனால் நீ என்னப்பா பண்ண போற?” என்ற பிரதாபன் வருத்தம் தோய்ந்த குரலில் கேட்க…
“அப்பா நான் ஆல்ரெடி சொன்னது தான் என்று ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டவன் நான் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிறேன் பட் எனக்கு டைம் வேணும் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க என்றவன் தொடர்ந்து நாளைக்கு அத்தை கிட்ட பேசிடுங்க” என்று சொல்லிக் கொண்டே எழுந்து கொண்டவன் பார்வை விபீஷனில் அழுத்தமாகப் படிந்தது.
அவனின் பார்வையில் எரிச்சல் அடைந்தவன் இவன் என்ன என்னுடைய வாழ்க்கையில் முடிவெடுப்பது? என்ற எண்ணம் தோன்ற, “நான் தான் தாலி கட்டிட்டேன்ல அப்புறம் எதுக்கு மறுபடி கல்யாணம்?” என்று விபிஷன் கேட்க, பிரதாபனுக்கோ இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் காற்றில் தான் பறந்தது
சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர் தட்டை தூக்கித் தூர ஏறிந்தார்.
அனைவரும் அதிர்ந்து விட்டனர்.
ஒருபோதும் அவர் இப்படி நடந்து கொண்டதில்லையே!
“நீ பண்ணது தப்பும் இல்லாம இப்போ என்ன திமிரா பேசிட்டு இருக்க?” என்றவர் அவரை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்ற விபீஷனின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.
கன்னத்தில் கையை வைத்துக் கொண்டே “அப்பா” என்றவன் குரல் ஈனமாக ஒலித்தது.
ஆத்திரம் தலைக்கு ஏற, மேலும் அவனின் அடுத்த கன்னத்தில் ஓங்கி அறையப் போனவர் கையை பற்றிப் பிடித்துக் கொண்ட ஜெய் ஆனந்த்தோ, “அப்பா பிளீஸ்” என்க, சித்ராவோ அதிர்ச்சியில் உறைந்து நின்று இருந்தார்.
“அடிங்கப்பா ஏன் நிறுத்திட்டீங்க?” என்றவன் சிலை போல அதே இடத்தில் அசையாமல் நின்றான்.
நிலமை மோசமாகிக் கொண்டு போவதை உணர்ந்த ஜெய் ஆனந்த் “விபீஷன் உள்ள போ” என்றான் இறுகிய குரலில்…
அவன் பேச்சை கேட்கும் ஆளா அவன்?
நீ யார் எனக்கு கட்டளை இடுவது? என்ற தோரணையில் உடல் இறுக அதே இடத்தில் அசையாமல் நின்றிருந்தான் விபீஷன்.
“கொஞ்சமாச்சும் பண்ணது தப்புனு உணராமல் திமிரா பேசிட்டு இருக்கான் இவனை நான் அப்பவே அடிச்சு கொன்னு இருக்கணும் என்று ஆத்திரத்தில் பேசிக் கொண்டே அவனை நெருங்க எத்தனித்த பிரதாபனை பிடித்துக் கொண்ட ஜெய் ஆனந்த் “அவனுக்கு பிடிச்சு இருந்தது அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டான் அப்பா இனி அடுத்து என்ன பண்றதுன்னு பார்க்கலாம்” என்றவனிடம் “அவன் யோசிச்சான உன்னோட வாழ்க்கையை பத்தி” என்று பதிலுக்கு பிரதாபன் சீற, இதயத்தில் வலி ஊடுருவ அதிர்ச்சியாக தன் தந்தையை பார்த்தான்.
“கூட பிறந்த அண்ணன் இருக்குறப்போ தம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு உனக்கு யாருடா பொண்ணு கொடுப்பாங்க” என்று தந்தையாக கவலை தோய்ந்த குரலில் சொல்ல…
ஒரு கணம் ஒரே ஒரு கணம் தான் தியாவை காதலிப்பது தெரிந்து விட்டதோ என்று அச்சம் கொண்டவனுக்கு அவர் இப்படி சொல்லவும் தான் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த மூச்சை வெளியிட்டான்.
அவரின் கேள்விக்கு அவன் பதில் கூறும் முன்னரே விபீஷனோ, “சோ இப்பவும் உங்களுக்கு அவன் தான் முக்கியம்ல?” என்று கிட்டத்தட்ட அந்த அறையே அதிரும் வண்ணம் கர்ஜித்து இருந்தான்.
“விபீஷன் என்று கத்திய சித்ரா என்னடா பேசுற நாங்க எப்போ உங்க ரெண்டு பேரையும் பிரிச்சு பார்த்தோம்?” என்றவரிடம்
“எப்ப பார்க்கல?” என்ற மறு கேள்வி அவனிடம் இருந்து காரமாக வந்தது.
“அம்மா கொஞ்சம் பொறுமையா இருங்க” என்ற ஜெய் ஆனந்த் “உனக்கு என்ன ப்ராப்ளம்?” என்று நேரடியாக கேட்டு இருந்தான்.
“நீ தான் என்னோட ப்ராப்ளம்” என்ற அவனின் பதிலில் அனல் தெறித்தது.
ஆக அவன் என்னைப் பிடிக்காததன் காரணமாகத் தான் இவ்வளவும் செய்து இருக்கின்றானா?
‘பைத்தியக்காரன்’ என்று நினைத்துக் கொண்டவன் உணர்வுகள் மொத்தமாக தொலைந்து போக முகத்தில் எவ்வித உணர்வுகளையும் காட்டிக் கொள்ளாமல் “சோ நான் என்ன பண்ணனும்னு நினைக்கிற?” என்று கேட்டான்.
“செத்துடு” என்ற அமிலம் தோய்ந்த வார்த்தையை விபீஷன் உதிர்க்க, இப்போது அவனின் மறு கன்னத்தில் சித்ராவின் கரமோ இடி போல இறங்கியது.
“தப்பு பண்ணிட்டேன் டா நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட, பொறுமை இழந்து போன ஜெய் ஆனந்த்தோ “வில் யூ ப்ளீஸ் ஷட் அப்” என்று கத்தி இருந்தான்.
அவனும் எவ்வளவு அழுத்தத்தைத் தான் தாங்குவான்?
உயிருக்கு நிகராக காதலித்தவளின் திருமணம்.
தம்பியின் துரோகம்.
அவனின் வெறுப்பு.
எந்த ஒரு அண்ணனும் கேட்க தகாத வார்த்தை அல்லவா?
எவ்வளவு வெறுப்பு என் மேல் இருந்தால் மடிந்து விடு என்று என்னைக் கூறி இருப்பான்? என்று நினைத்தவனுக்கு கசந்த புன்னகையுடன் சேர்ந்து விழிகள் இரண்டும் சிவந்து விட்டு இருந்தன.
“சோ நான் சாகணும் ரைட்?” என்றவனிடம் வாங்கிய அறையில் இதழ் வெடித்து வழிந்த உதிரத்தை ஒற்றிய படி விஷமாகப் புன்னகைத்தவன் “நோ நீட் நீ அவ்வளவு சீக்கிரம் சாக கூடாது சோ இப்போதைக்கு நீ இந்த வீட்டை விட்டு போகணும்” என்றானே பார்க்கலாம்.
அவனின் வன்மப் பேச்சில் திகைத்து போனது என்னவோ பிரதாபனும் சித்ராவும் தான்.
ஆனால் ஜெய் ஆனந்த்திற்கோ அவனின் வார்த்தைகளில் கொஞ்சம் கூட அதிர்ச்சி ஏற்பட வில்லை.
இதை அவன் எதிர்ப் பார்த்தது தான்.
“சோ நான் வீட்டை விட்டு போனால் உனக்கு சந்தோஷம் தானே?”
அடுத்த கணமே “ஒப்கோர்ஸ்” என்ற அழுத்தம் திருத்தமான பதில் அவனிடமிருந்து வந்தது.
மகன் என்ற பெயரில் ஒரு அரக்கனிடம் தானா அன்பை செலுத்தி வளர்ந்தோம் என்ற எண்ணம் பிராதாபனின் மனதை தாக்க, நெஞ்சம் விம்ம “தப்பு பண்ணது நீ. அவன் எதுக்கு வீட்டை விட்டு போகணும்?” என்ற கேள்வி அவரிடம் இருந்து வர, இருக்கையை இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தவன் மேசையில் இருந்த டிஸுவினால் இதழில் இருந்து நில்லாமல் வழிந்த உதிரத்தைத் துடைத்துக் கொண்டே “நான் எந்த தப்பும் பண்ணல என்றவன் உங்க எல்லாருக்கும் அவன் தானே முக்கியம் சோ என்னை ஒரு மனுஷனா கூட மதிக்கிறது கிடையாது என்று ஆக்ரோஷமாக கத்தியவன் சற்றே தணிந்த குரலில் மோரோவர் எனக்கு அவனை பிடிக்கல” என்க.
Ore feelings of india vaa pochu dr… En hero jai vazhakkam pola semma…. Intha vibeeshan ninaicha kovamaa varuthu…… Aahithyaa paavam eppadi Ivan kooda vaazha poralo??? Ore fire theme la poguthu story… So excited for next ud dr…..