07. தணலின் சீதளம்

4.4
(7)

சீதளம் 07

வேந்தனிடம் அவன் கொடுத்த வேஷ்டியை அவனிடம் கொடுப்பதற்கு என அவனுடைய வீட்டிற்கு வந்தார்கள் மேகாவும் பூங்கொடியும்.
கேட்டை திறந்து உள்ளே வந்தவளோ,
“ வாவ் சூப்பர் எவ்வளவு அழகா இருக்கான் இப்படி ஒரு செம்ம கட்டைய நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை என்னமா வளர்த்து வச்சிருக்கான்” என்று வாய்விட்டு ரசிக்க, பூங்கொடியோ அவள் பார்த்த திசை பக்கம் பார்த்தாள்.
அங்கு வேந்தன் ஆம் கட் பனியன் உடன் தொடை அளவு சார்ட்ஸ் அணிந்து கொண்டு தண்டால் செய்து கொண்டிருந்தான்.
அதை பார்த்து இவளுக்கோ தூக்கி வாரி போட்டது.
“ அடியே என்னடி செய்ற இப்படி பச்சையா எல்லாத்துக்கும் தெரியிற மாதிரியா சைட் அடிப்ப சும்மா இருடி” என்று மேகாவின் காது அருகில் குனிந்தவள் அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொல்ல மேகாவோ,
“அட போடி இதுல வெட்கப்பட என்ன இருக்கு அங்க பாரு என் ஆளு வீரா என்னம்மா இருக்கான்னு” என்று மேகா சொல்ல பூங்கொடியோ ஷாக் அடித்தது போல் இவள் புறம் திரும்பியவள்,
“ ஆமா நீ இப்ப சைட் அடிக்கிறது வீராவையா” என்று அவள் அதிர்ந்து போய் கேட்க மேகாவோ,
“ ஆமா அவன தான் சொன்னேன் நீ என்ன நெனச்ச” என்று கேட்டாள்.
“அது அது வந்து மேகா நீ அந்த அண்ணாவை தான் பார்த்து சைட் அடிக்கிறியோன்னு தப்பா நினைச்சுட்டேன்டி” என்று அசடு வழிந்தாள்.
உடனே மேகா தன்னுடைய முகத்தை சுழித்தவாறு வேந்தனை நோக்கி கைகாட்டியவள்,
“யாரு இந்த ஏலியனை பார்த்து நான் ரசிப்பேனா” என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்ல அது வேந்தனின் காதுகளிலும் மிகத் தெளிவாகவே விழுந்தன.
“ என்னது ஏலியனா மவளே உனக்கு இருக்குடி” என்று எழுந்து இவர்கள் அருகில் வந்தவன் தன்னுடைய முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான்.
அவர்கள் உள்ளே வரவும் இவன் கவனித்து விட்டான் ஆனால் கண்டுகொள்ளவில்லை.
அவள் வீராவின் அழகை ரசித்து சொல்ல இவனோ அவள் தன்னைத்தான் ரசிக்கிறாள் என்று நினைத்து,
‘ அதானே நம்மள ஒரு பொண்ணுக்கு பிடிக்காம போகுமா. இப்ப தெரியுதா இந்த வேந்தன் யார்ன்னு’ என்று நினைத்துக் கொண்டு அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.
ஆனால் இப்பொழுதும் தான் தான் பல்பு வாங்கி விட்டோம் என்று நினைத்தவனுக்கோ அவள் ஏலியன் என்று வேறு சொல்ல விரைந்து வந்தவன் அவள் முன் அய்யனார் போல நின்றான்.
அந்த சமயம் அவனுடைய தங்கை அறிவழகியும் வெளியே வர அவளுடைய காதுகளிலும் மேகா ஏலியன் என்று சொன்னது தெளிவாகவே விலுந்தது.
‘என்ன ஏலியனா புதுசா இருக்கே யாருப்பா அது’ என்று யோசித்தவாறே மேகாவின் புறம் திரும்ப அங்கு அவளுடைய அண்ணன் மேகாவை முறைத்துக் கொண்டு நிற்பதை பார்த்தவளுக்கோ புரிந்து விட்டது வந்திருப்பது யார் என்று.
உடனே அவர்களிடம் வந்தவள்,
“ அண்ணா நீ சொன்ன அந்த லூசு புள்ள இவங்க தானா” என்று சந்தேகமாக மேகாவை கைகாட்டி கேட்க மேகாவோ,
“ என்னது லூசு புள்ளையா ஏய் யாரை பார்த்து லூசு புள்ளன்னு சொல்ற அவ்ளோதான் சொல்லிட்டேன்” என்று சண்டைக்கு போனாள்.
“ எங்க அண்ணாதாங்க சொன்னாங்க உங்களுக்கு அழக அதிகமா படைச்ச அந்த கடவுள் அறிவ கொஞ்சமா படைச்சிட்டாருன்னு வேற சொன்னாரு” என்று வேந்தனை பார்த்து கொண்டே அவளிடம் சொன்னாள்.
மேகாவோ தன்னால் முடிந்த மட்டும் வேந்தனை முறைத்து பார்க்க அவனோ,
“ நீ மட்டும் என்ன ஏலியன்னு சொன்ன இல்ல அதான் அப்படி சொன்னேன்” என்றான் தெனாவட்டாக.
மேகாவோ,
“ ஆமா அப்படித்தான் சொல்வேன் நீங்க ஏலியன் தான். ஏலியன் ஏலியன் ஏலியன் என்ன லூசுன்னு சொன்னீங்க இங்க என்ன நடக்கும்னு தெரியாது” என்று கோபத்தில் சீரினாள்.
“ சொன்னா என்ன செய்வ சொல்லு என்ன செய்வ” என்று இவனும் சண்டைக்கு போக அவளும்,
“ சொல்லித்தான் பாருங்களேன் அப்புறம் தெரியும் இந்த மேகா யாருன்னு” என்று இவளும் சரிக்கு சமமாக சண்டை போட, இவர்கள் இருவரும் விட்டால் ஒருவரை ஒருவர் அடித்து சண்டை போடுபவர்கள் போல மல்லு கட்டிக் கொண்டிருக்க இதை பார்த்துக் கொண்டிருந்த பூங்கொடியும் அறிவழகியும் தங்களுக்குள் கண்ணைக் காட்டி கொண்டவர்கள், அறிவழகி வேந்தனின் கையைப் பிடிக்க, பூங்கொடியோ மேகாவின் கையைப் பிடிக்க என்று ஆளுக்கு ஒரு பக்கமாக இருவரையும் இழுத்துக் கொண்டு நின்றார்கள்.ஸ
ஆனால் இவர்கள் இருவரும் அவர்களுடைய பிடிக்கு அடங்காதவர்கள் போல முண்டிக்கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
“ நீ எப்படி என்னை ஏலியன்னு சொல்லலாம்”
“ நீ எப்படி என்ன லூசுன்னு சொல்லலாம்”
என்று மாறி மாறி கத்திக் கொண்டிருந்தார்கள் இருவரும்.
“ ஐயோ போதும் நிப்பாட்டுங்க ரெண்டு பேரும் சின்ன பிள்ளைங்க மாதிரி இப்படி சண்டை போடுறீங்க. இரண்டு பேர் சொன்னதும் தப்புதான். ரெண்டு பேரும் மாறி மாறி சாரி கேட்டுக்கோங்க இதை இதோட நிப்பாட்டிக்கலாம்” என்று சொன்னாள் அறிவழகி.
வேந்தனும் மேகாவும் ஒரு சேர,
“ என்னது நான் இவகிட்ட சாரி சொல்லணுமா என்னால முடியாது” என்று வேந்தன் ஒரு பக்கம்,
“ சான்சே இல்ல இந்த ஏலியன் கிட்ட என்னால எல்லாம் சாரி சொல்ல முடியாது” என்று மேக ஒரு பக்கம் முறைத்துக் கொண்டு நிற்க,
அறிவழகியும் பூங்கொடியும் தலையில் அடித்துக் கொண்டார்கள்.
அப்பொழுது பூங்கொடியின் காதலன் ராம் அவளுக்கு போன் செய்து வேந்தனின் வீட்டின் அருகில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு அவளை வர சொல்ல அவளோ மேகாவிடம்,
“ மேகா ராம் பக்கத்துல இருக்கிற மாரியம்மன் கோவில்ல எனக்காக வெயிட் பண்றாராம் வாடி போலாம்” என்று அழைக்க மேகாவோ,
“ நான் எங்கேயும் வரல இன்னைக்கு இந்த ஆளுக்கு ஒரு முடிவு கட்டாம நான் வரமாட்டேன் நீ வேணா போயிட்டு வா” என்று அவளுடைய கையை உதறிவிட்டாள் மேகா.
“ அடியே சொன்னா புரிஞ்சுக்கொடி வீணா சண்டை பிடிச்சுக்கிட்டு இருக்காத வா போகலாம்” என்று மீண்டும் அழைத்தாள்.
ஆனால் மேகாவோ வேந்தனின் மேல் உள்ள கோபத்தில் சற்று கூட அந்த இடத்தை விட்டு அகலவில்லை. பூங்கொடிக்கு மீண்டும் ராமிடம் இருந்து அழைப்பு வர,
“ ஹான் ராம் இதோ வந்துட்டேன்” என்றவள் மேகாவிடம்,
“ அம்மா தாயே நீ பொறுமையா சண்டை போட்டு வா நான் இங்க பக்கத்துல தான் கோவிலுக்கு போயிட்டு உன்னை வந்து கூட்டிட்டு போறேன் சேதாரம் ஆகாமல் சண்டை போடுடி” என்றவள் அறிவழகியிடம்,
“ கொஞ்சம் பார்த்துக்கோ நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள். அறிவழகிக்கோ மேகாவை பார்த்ததும் பிடித்து விட்டது.
“ ஹாய் நான் அறிவழகி உங்க பேரு”
என்று மெகாவிடம் கேட்க,
“ எம் பேரு மேகா” என்றாள்.
“நைஸ் நேம் உங்கள போலவே உங்க பேரும் ரொம்ப அழகா இருக்கு”
என்று அறிவழகி சொல்ல வேந்தனோ சும்மா இருக்காமல்,
“ அழகு மட்டும் இருந்தா போதுமா அறிவோம் வேணும்” என்று சொல்ல மேகாவோ,
“ ஓஓ உங்களுக்கு அறிவு ரொம்ப இருக்கும் போல இருக்கு வேணா ஒரு கால் கிலோ அறிவு இருந்தா தர்ரீங்களா” என்றாள் மேகா.
“ஏய் உன்ன” என்று வேந்தன் ஒரு அடி முன்னே எடுத்து வைக்கப் போக அறிவழகியோ அவனைப் பிடித்து தடுத்தவள்,
“ அண்ணா என்ன செய்றீங்க வன்முறையெல்லாம் கூடாது அவங்க பேசத்தானே செய்றாங்க உங்களுக்கும் பேச தெரிஞ்சா பேசுங்க” என்று இவள் சொல்ல மேகாவோ கிண்டலாக சிரித்தாள்.
“சரி மேகா உங்களுக்கு ஏன் எங்க அண்ணாவை பார்த்தா பிடிக்க மாட்டேங்குது அவர்தான் உங்களை நேத்து காப்பாத்துனாங்க காப்பாத்துனவங்க மேல ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க” என்று அறிவழகி கேட்க அதற்கு மேகாவோ,
“ என்னது உங்க அண்ணா காப்பாத்துனரா அத யாராவது காதுல பூ சுத்திக்கிட்டு இருப்பாங்க இல்ல அவங்க கிட்ட போய் சொல்லு என்ன காப்பாத்தினது அதோ அங்க சிங்கம் மாதிரி நிக்கிறான் பாரு வீரா என்னோட ஆளு அவன் தான் என்னை காப்பாத்தினான். சும்மா ஹீரோ மாதிரி அந்த மாட்டுக்கும் எனக்கும் நடுவுல வந்து நின்னத பாக்கணுமே செம்மையா இருந்துச்சு. அதுக்கு நான் அவனுக்கு முத்தம் கூட கொடுத்தேன் தெரியுமா” என்று மீண்டும் வீராவின் புராணம் பாட
வேந்தனோ,
“ நேத்து உன்னை மாடு முட்ட வரும் போதே முட்டிட்டு சாவுன்னு விட்ருக்கனும் ஐயோ பாவம்னு காப்பாத்துனது தப்பா போச்சு. முத்தம் கொடுத்தாலும் பெரிய முத்தம்” என்று அவன் கடுப்போடு சொல்ல மேகாவோ அவனை முறைத்தாள்,
“ என்ன அந்த முத்தம் உங்களுக்கு கிடைக்கலைன்னு பொறாமையில சொல்ற மாதிரியே இருக்கே” என்று அவனை ஒரு மாதிரியாக பார்த்து கேட்க இங்கு இவனோ,
“ யாரு நான் பொறாமை படுறேனா என்ன பார்த்தா உனக்கு பொறாம படுற மாதிரியா தெரியுது. நான் சொல்லல அறிவு இதுக்கு மூளைங்கறது இல்லன்னு. இவ முத்தத்துக்கு நான் ஏங்குறேனாம் சரிதா போடி. இங்க பாரு நான் முத்தம் கொடுக்கிறேன்னு சொன்னா பொண்ணுங்க லைன்ல வந்து நிப்பாங்க அப்படிப்பட்ட நா நீ முத்தம் கொடுப்பதை பார்த்து பொறாமை படுறேன்னு சொல்ற” என்றான் வேந்தன்.
“ ஹையோட இவரு பெரிய மன்மத ராசா இவரு முத்தம் கொடுக்கிறாருன்னு சொன்னவுடனே அப்படியே லைன் கட்டி நிக்க போறாங்களாம். உங்க முகத்தை முதல்ல கண்ணாடில பார்த்திருக்கீங்களா” என்று இவள் கேட்க அவனும் இவளை முறைக்க என்று இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அறிவழகியோ இவர்களுடைய இந்த சண்டையை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவளுடைய அம்மா அறிவழகியை அழைக்க அறிவழகியோ,
“ இங்க பாருங்க அம்மா கூப்பிடுறாங்க நான் ரெண்டு நிமிஷத்துல போயிட்டு வந்துடறேன் அண்ணா நீங்க போங்க உங்களுக்கு நேரம் ஆகுது இல்ல. மேகா ஒரு ரெண்டு நிமிஷம் நீங்க வெயிட் பண்ணுங்க நான் இப்ப வந்துடறேன்” என்றவன் அவ்விடம் விட்டு அகன்றாள்.
அறிவழகி அங்கிருந்து செல்லவும் மேகா அப்பொழுதும் அடங்காமல் வேந்தனின் முகத்திற்கு முன்னால் சொடக்கு போட்டு அழைத்தவள்,
“ ஹலோ இந்தாங்க உங்க வேஷ்டி” என்று நீட்ட வேந்தனோ,
“ எவ்வளவு கொழுப்பு டி உனக்கு சொடக்கு போட்டா கூப்பிடுற மவளே” என்றவன் அங்கு சுற்று முற்றும் பார்த்தவன் அவள் நீட்டிய கரத்தை பிடித்து அங்கு மறைவான இடத்திற்கு அவளை அழைத்துச் சென்று அவள் என்ன என்று அறிய முன்னமே அவளுடைய இடையை வளைத்து தன் இடையோடு நெருக்கி பிடித்தவன் தன்னுடைய ஆதரங்களை அவளுடைய அதிரங்களில் பொருத்தினான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

1 thought on “07. தணலின் சீதளம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!