சீதளம் 10
கை கழுவு சென்றவளின் பின்னோடு சென்ற வேந்தனோ அவள் தன்னை பற்றி முணுமுணுப்பதை கேட்டவன் அவள் பின்னே அவளின் முதுகை உரசியவாறு நின்று அவளை வார்த்தைகளால் சீண்டி தன்னுடைய கையை கழுவியவன் அவளுடைய தாவணி முந்தானையை வைத்து தன்னுடைய தண்ணீர் சிந்திக் கொண்டிருந்த கையையும் வாயையும் அவளைப் பார்த்தவாறு துடைத்தான் வேந்தன்.
இங்கு இவளுக்கோ அவனுடைய அடுத்தடுத்த முத்தங்களிலேயே ஆடிப் போனவள் அவனுடைய இந்த தொடர் நெருக்கத்தில் பெண்களுக்கே உண்டான அச்சமும் நாணமும் அவளுடன் வந்து ஒட்டிக்கொண்டது.
அவன் கோபமாக அவளிடம் பேசி சண்டையிட்டால் கூட அவனுக்கு சற்றும் குறையாமல் சண்டையிட்டு இருப்பாள். ஆனால் அவனோ வேறு முறையை கையாள அதை எதிர்கொள்ள முடியாமல் திணறினாள் மங்கையவள்.
“ என்ன எதுவுமே பேசாம இப்படி உறைஞ்சு போய் நிக்கிற” என்று அவன் மீண்டும் கேட்க.
அப்பொழுது அப்பத்தா மேகாவை அழைக்க இதுதான் சமயம் என்று வேந்தனை ஒரு பார்வை பார்த்தவள் தன்னுடைய ஒரு காலை தூக்கி வேந்தனுடைய காலில் ஓங்கி ஒரு மிதி மிதித்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த வேந்தனோ அவளுடைய இந்த செயலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“ஆஆ” என்று லேசாக கத்தியவனோ அவள் மிதித்த காலை தூக்கிக் கொண்டான்.
அவளோ சற்று அழுத்தமாகவே மதித்திருக்க அவனுக்கு அது வலிக்கவே செய்தது.
ஒரு கையால் தன்னுடைய காலை தடவியவன்,
“ அடிப்பாவி பார்க்க குட்டியாட்டம் இருக்கா ஆனா என்னா மிதி மிதிக்கிறா நமக்கே இப்படி வலிக்குது இவகிட்ட கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும்” என்று நினைத்துக் கொண்டவன் அவள் பின்னாடி வந்தான்.
ஹாலுக்கு வந்த மேகாவோ,
“ என்ன பாட்டி” என்று கேட்டாள்.
“ ஒன்னும் இல்ல தாயி உள்ள போயி ரொம்ப நேரம் ஆச்சா அதான் காணோமேன்னு கூப்பிட்டேன்” என்றார்.
அப்பொழுது அவர்கள் அருகில் வேந்தனும் வந்து நிற்க மேகாவோ வேந்தனை ஒரு பார்வை பார்த்துவிட்டு பாட்டியிடம்,
“ அதுவா பாட்டி உள்ள ஒரு எறும்பு கடிச்சிட்டு அதான் கொஞ்சம் லேட் ஆயிட்டு வேற ஒன்னும் இல்ல” என்று சொன்னாள்.
அறிவழகியோ,
“ என்னது எறும்பா?” என்று கேட்க அதற்கு சக்தியோ,
“ ஆமா அறிவு அது கொஞ்சம் பெரிய எறும்பு போல அப்படித்தானே தங்கச்சி” சென்று மேகாவிடம் கேட்க அவளோ,
“ ஆமா அண்ணா” என்று சொல்லியவள் அவர்களிடம்,
“ சரிங்க நான் கிளம்புறேன்” என்று சொல்லியவள் அறிவழகி கொடுத்த புடவையை கையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள்.
வேந்தனுடைய பார்வையோ அவள் மேல் இருக்க மற்றவர்களுடைய பார்வையோ வேந்தனின் மேல் இருந்தது.
அவன் அதை கண்டு கொள்ளவில்லை. அந்த அளவிற்கு அவன் மேகாவை பார்த்து சைட் அடித்துக் கொண்டிருந்தான்.
அவளோ தனக்குப் பின்னால் இப்படி ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாமல் வெளியே வந்து விட்டாள்.
வெளியே வந்தவளுடைய பார்வையோ மீண்டும் வீராவின் மேல் விழுந்தது. வேந்தனிடம் வேஷ்டியை கொடுக்கும் சாக்கில் வீராவை பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்தவளோ இங்கு வந்ததிலிருந்து வேந்தன் உடன் நடந்த தகராறில் வீராவை மொத்தமாகவே மறந்து போயிருந்தாள்.ஸ
இப்பொழுது ஞாபகம் வந்தவளாக,
“ ஐயோ என் ஹீரோ வீரா உன் அண்ணன் கூட நடந்த சண்டையில நான் உன்னை மறந்தே போயிட்டேன் சாரி” என்றவள் அவனுடைய முகத்தையும் உடம்பையும் தடவியவாறு அதனோடு சிறிது நேரம் உரையாடினாள்.
பாவம் வீரா தான் இவளிடம் மாட்டிக் கொண்டான்.
அவனை கட்டி போட்டு இருந்ததால் வேறு வழியில்லாமல் இவள் சொல்லும் கதையை கேட்டுக் கொண்டிருந்தது.
இல்லை என்றால் இந்நேரம் இவளுடைய பேச்சிக்கு அது எப்பொழுதோ இங்கிருந்து ஓடிப் போயிருக்கும்.
“ சரி பாய் வீரா நான் உன்ன இன்னொரு நாள் வந்து பார்க்கிறேன் டைம் வேற ஆகிட்டு” என்று அவள் சொல்ல வீராவோ,
‘ அம்மா தாயே தயவு செஞ்சு சீக்கிரம் கிளம்பு’ என்பது போல அவளை பார்த்து வைத்தது.
அதேசமயம் தன்னுடைய காதலனை சந்திக்க சென்ற பூங்கொடியும் இவளுக்கு அழைப்பு எடுக்க அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்,
“ இதோ வந்துட்டேன் பூங்கொடி நீ அங்கதானே இருக்க” என்று கேட்டாள்.
அவளும் ஆம் என்று சொல்ல இவளோ அங்கிருந்து சென்று விட்டாள்.
இங்கு கையில் அடிபட்டு ஒரு நாள் மருத்துவமனையில் இருந்து இப்பொழுதுதான் வீட்டுக்கு வந்த கதிரவனை அவனுடைய அப்பாவோ வாசலில் வைத்து,
“ நீ எல்லாம் என் மகன்னு வெளியே சொல்லிக்காத இப்படி கையில அடிபட்டு வந்திருக்கியே அப்படியே போயிருக்க வேண்டியதுதானே ஏன் இங்க வந்த. நான் பெத்ததும் சரியில்ல நான் வளர்த்ததும் சரியில்ல ரெண்டு பேருமே என்னை ஏமாத்திட்டீங்க. அந்த மதுரவேந்தன் என்ன அத்தனை பேர் முன்னாடியும் மூக்க அறுக்குற மாதிரி செஞ்சுட்டான் உன்னால என்ன செய்ய முடிஞ்சது. அந்த வீரா கிட்ட குத்து பட்டு கை உடைஞ்சு போய் வந்திருக்க. எந்த முகத்தை வைச்சு திரும்ப இந்த வீட்டு வாசலை மிதிச்சிருக்க நீ” என்று மகனுடைய நலனைப் பற்றி சிறிதேனும் கவலை இல்லாமல் வந்ததும் வராதமாய் அவனை வாசலில் நிற்க வைத்து கண்டபடி திட்டிக் கொண்டிருந்தார் செண்பக பாண்டியன்.
செண்பக பாண்டியனுடைய அதீத சத்தத்தில் உள்ளே இருந்து வந்த சீதாவோ தன் மகனுடைய கோலத்தைக் கண்டு பதியவர்,
“ அய்யோ கதிர் என்னப்பா ஆச்சு உனக்கு” என்று அவன் அருகே போக முயல அவருடைய கையைப் பிடித்து தடுத்த செண்பக பாண்டியனோ,
“ என்னடி பிள்ள பாசம் கொண்டாடுறியா ஒழுங்கு மரியாதையா உள்ள போ அவன் எனக்கு பிள்ளையும் இல்ல நான் அவனுக்கு அப்பனும் இல்ல”
“ என்னங்க என்ன பேசுறீங்க நம்ம புள்ள என்ன நிலைமையில வந்திருக்கான் உள்ள கூட வரவிடாம வாசல்லயே நிக்க வச்சு இப்படி பேசிகிட்டு இருக்கீங்களே இது உங்களுக்கே நியாயமா இருக்கா” என்று சீத்தா தன்னுடைய கணவரிடம் மகனுக்காக வாதாட, விட்டார் அவருடைய கன்னத்தில் பளார் என ஒரு அறையை.
“ அம்மா” என்றவாறு ஒரு அடி முன்னே எடுத்து வைத்த கதிரவனை,
“ அங்கேயே நில்லு அவ என் பொண்டாட்டி அவளை அடிப்பேன் உதைப்பேன் என்ன வேணா செய்வேன் அதைக் கேட்குறதுக்கு இங்க எவனுக்கும் உரிமை கிடையாது”
“ அப்பா என்ன பேசுறீங்க நான் உங்க புள்ள ஏதோ ரோட்ல போற மூணாவது மனுசன பேசுற மாதிரி பேசிட்டு இருக்கீங்க”
என்று கதிரவன் எகிற,
“ நீ என் புள்ளையா அந்த நினைப்பு உனக்கு இருந்திருந்தா நேத்து அந்த வீராவை தோற்கடிச்சு எனக்கு பெருமை தேடி கொடுத்திருக்க வேண்டுமா. கோழை மாதிரி அது கிட்ட குத்து வாங்கிட்டு வந்திருக்க. இன்னொரு தடவை என் பையன்னு சொல்லாத கேட்கவே அசிங்கமா இருக்கு. அப்படியே வெளிய போயிரு வீட்டுக்குள்ள வராதே, நீ இந்த வீட்டுக்குள்ள திரும்ப வரணும்னா அந்த மதுரவேந்தனோட வீட்ல ஒரு சாவு விழனும். அதுவும் உன்னால விழனும்” என்று சொல்லிக் கொண்டிருக்க சீதாவோ,
“ என்னங்க பேசுறிங்க என் புள்ளையை கொலைகாரனாக்க பார்க்கிறீங்களா அவனோட வாழ்க்கையை கெடுக்காதீங்க. நீங்க அவனுக்கு அப்பா நீங்களே அவன தப்பான வழிக்கு போக
சொல்றீங்களே” என்றார்.
“ என்னடி குளிர் விட்டு போச்சா உனக்கு திரும்பத் திரும்ப என்னை எதிர்த்து பேசிக்கிட்டே இருக்க மரியாதையா உள்ள போ இல்ல அந்த வீட்ல சாவு விழுறதக்கு முன்னாடி இங்க உன் பொணம் விழுந்து கிடக்கும் போறியா இல்லையா” சென்று செண்பகபாண்டியன் சீற, சீதாவோ அழுகையோடு மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு முந்தானையால் தன்னுடைய வாயை பொத்திக்கொண்டு அழுதவாறே உள்ளே சென்றுவிட்டார்.
“ நீ என்னடா இங்கயே நிக்கிற நான் சொன்னது கேட்டுச்சா இல்லையா சொன்ன மாதிரி நடந்துச்சுன்னா இந்த வீட்டுக்குள்ள நீ வரலாம் இல்லைனா நீ எப்பவும் இங்க வரவே கூடாது அப்படியே போயிடு எனக்கு பிள்ளையே இல்லைன்னு நினைச்சிக்கிறேன்” என்றவர் உள்ளே சென்று விட்டார். கதிரவனுக்கோ கோபம் முழுவதும் வேந்தன் மீதும் வீராவின் மீதுமே அதிகமாக இருந்தது.
தன்னுடைய தந்தை தன்னை இவ்வாறு நடத்துவதற்கு முழு காரணமுமே அவர்கள் இருவரும் தான் என்று நினைத்தான்.
உடனே ரகுவந்தனுக்கு அழைப்பு எடுத்தவன் அவனை நேராக தங்களுடைய காட்டு பங்களாவுக்கு வரச் சொல்லியவன் தானும் அங்கு சென்று விட்டான்.
அவனோ வெறி பிடித்தவன் போல வேந்தனுடைய குடும்பத்தை எவ்வாறு சாய்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க ரகுவந்தனோ கையில் இரண்டு பீர் பாட்டில்களோடு உள்ளே வந்தான்.
“லேய் மாப்பு என்னடே இங்க வந்து இருக்க வீட்டுக்கு போகலையா நீ” என்று கேட்டவாறே கதிரவனுக்கு முன்னே வந்து அமர்ந்தான்.
கதிரோ அங்கு தன்னுடைய வீட்டில் நடந்ததை முழுவதும் கூற ரகுவந்தனோ,
‘ என்னடே சொல்ற உங்க அப்பா இப்படி சொன்னாரா?” என்று அதிர்ச்சியோடு ரகுவந்தன் கேட்க ஆமாம் என தலையசைத் தான் கதிரவன்.
“ஏதாவது செஞ்சே ஆகணும் டா என்ன செய்யலாம்” என்று யோசித்தான் கதிரவன்.
“டேய் மாப்பு இப்ப தாண்டா எனக்கு ஒரு யோசனை வருது இன்னும் ரெண்டு நாள்ல நம்ம சின்னசாமி மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்க போகுதுடா. எப்படியும் அங்க மதுரவேந்தனோட குடும்பத்தை முதன்மை தாங்குறதுக்கு கண்டிப்பா கூப்பிடுவாங்க. அந்த நிச்சயதார்த்தத்தை நடக்க விடாமல் செஞ்சா அதுல அவங்க குடும்பம் கண்டிப்பா அவமானப்படும்டா” என்றான் ரகுவந்தன்.
யோசித்த கதிரவனும்,
“ நீ சொல்றது நிஜமா மாப்ள அப்படி மட்டும் நடந்தா எங்க அப்பா ரொம்ப சந்தோஷப்படுவாரு டா. அந்த வேந்தனோட குடும்பத்தை அசிங்கப்படுத்தின மாதிரி இருக்கும். எங்க அப்பாவோட மனசும் கொஞ்சம் திருப்தி படுத்துற மாதிரியும் இருக்கும்” என்றான் கதிரவன்.
“ஆமா மாப்ள ஒரு கல்லுல ரெண்டு மாங்கா எப்படி நம்ம ஐடியா அந்த வேந்தன் பைய மண்ண கவ்வனும்டா. ஊருக்கு முன்னாடி அவங்க அப்பா அசிங்கப்படணும் இத்தனை வருஷமா இந்த ஊருக்குள்ள எந்த ஒரு விசேஷம் நடந்தாலும அவங்க தலைமை தாங்குறத இதோட எல்லாரும் நிறுத்துற மாதிரி செய்யணும் டா” என்று கதிரவனுக்கு மேலும் ஏற்றி விட்டான் ரகுவந்தன்.
இவர்கள் இருவரும் இங்கு திட்டம் தீட்டுவது போல பூங்கொடியின் நிச்சயதார்த்தம் நடக்குமா நடக்காதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Achooooo pavummmm poongudi…. interesting epiiii ❤️❤️❤️❤️