அரண் 39
“சத்தமாக பேசிக்கிட்டு இருந்த அப்பாவோட பேச்சு திடிர்னு நின்னுடுச்சு என்று படித்துக்கொண்டு இருந்த நான் வெளியே வந்து பார்த்தா அப்பா தரையில விழுந்து கிடக்கிறார் என்னால அவரோட அந்த கோலத்தை பார்க்க முடியல உடனே பதறிப் போய் அப்பா அப்பா என்று அவர் பக்கத்துல போய் அவரை தொட்டுப் பார்த்தா அசைவே இல்லை
என்னோட உடம்பு உதரத் தொடங்கிடுச்சு பயத்துல உடம்பெல்லாம் வியர்த்து கண் சொருக்கத் தொடங்குச்சு உடம்பில் உயிரே இல்லாதது போல ஜடமாக விழுந்து கிடந்த அப்பாவை பார்த்ததும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியல்ல
அந்த பதின்ம பருவத்தில் தந்தையின் சிரிப்பையும், சந்தோஷத்தையும், அவரது உற்சாகத்தையும் பார்த்து பழகிய எனக்கு அவரின் அழுகையையும், தவிப்பையும், வேரற்ற மரம் போல சரிந்து விழுந்து கிடந்த உடலையும் பார்த்ததும் என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வழிந்து ஓடத் தொடங்கியது
உண்மையிலேயே அவர் இறந்துட்டாரோ என்பதை நினைத்துப் பார்க்கவே என்னால முடியல அதை ஏத்துக்க முடியாம அப்பா என்று வானத்தில் இடி முழங்கும் அளவிற்கு கத்தத் தொடங்கினேன்
ஆனால் நான் கதறி அழுததும் கத்தி அழைத்ததும் அவரது காதலில் கேட்கவே இல்லை உடனே ரேகாவையும் ஒரு கையில் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வெளியில் நின்ற டிரைவருடன் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு உடனே கொண்டு அப்பாவை சேர்க்கப்பட்டது.
அதிகபட்ச மன உளைச்சலால் அப்பாக்கு பிபி அதிகமாகி மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்துட்டு அதோட கையும், வாயும் ஒரு பக்கம் இழுத்துருச்சு என்று சொன்னாங்க டாக்டர் ஒவ்வொரு விஷயமா சொல்லிக்கிட்டு இருக்க எனக்கு அதெல்லாம் காதில விழவே இல்லை
என்னோட அப்பாவுக்கு இப்படி ஒரு நிலைமையா அவரோட முகத்தைப் பார்க்க பார்க்க எனக்கு அழுகை மட்டும் தான் வந்துச்சு அப்போ என் மனசுல தோன்றின ஒரே விஷயம் அப்பாவோட இந்த நிலைமைக்கு காரணமான அந்த தனபால நான் சும்மாவே விடக்கூடாது…” என்று ருத்ர பிரசாத் எங்கோ பார்த்து அனைத்தையும் கூறிக் கொண்டிருந்தவன் கடைசி வார்த்தைகளை துருவனின் கண்களைப் நேருக்கு நேராகப் பார்த்து பழி வெறியை உமிழ்த்த வண்ணம் கூறினான்.
ருத்ரம் பிரசாத்தின் மனதில் இருக்கும் ஆதங்கங்கள் அனைத்தும் அவனது வாயில் உதிக்கும் ஒவ்வொரு வார்த்தைகள் மூலம் அவனது மனநிலை கண்ணாடி போல துருவனுக்கு அப்படியே பிரதிபலித்தது. அதனால் எதுவுமே பேசாமல் தொடர்ந்து அவன் தனது மனக்கிடங்கில் இருக்கும் வேதனைகளை கூற வழிவிட்டு மௌனமாக இருந்தான்.
அதற்கு ஏற்றார் போல் ருத்ர பிரசாத் மீண்டும் தனது சோகங்களைக் கூற எண்ணி வாய் திறந்தான்.
“எங்க அப்பாவால பேசவே முடியல தெரியுமா முதல் ரேகா வயசுக்கு வந்த போ எங்கப்பா ரொம்ப சந்தோஷப்பட்டார் அவரோட சந்தோசத்தை அவர்ட கண்களில் இருந்து வந்த கண்ணீரை வைத்து தான் நாங்க அவர் சந்தோஷப்பட்டார் என்றே புரிந்து கொண்டோம்.
தன்னோட ஒரே ஒரு மகளுடைய நல்லது கெட்டதுக்கு கூட எங்க அப்பாவால ஒண்ணுமே செய்ய இயலாமல் போயிட்டு.
எல்லாத்துக்கும் உன்னோட அப்பா தான் காரணம் எங்களுடைய வாழ்க்கையே நரகமா மாறிடுச்சு. என்னால சத்தியமா முடியவில்லை அந்த வயசுல என்ன செய்றது எது செய்றதுன்னு தெரியாம முழுமூச்சா நான் படிப்புல என்னோட கவனத்தை செலுத்தினான்
அதோட எங்க அப்பா பிசினஸ் டீலிங் எல்லாத்தையும் நானே கவனிக்க வேண்டியதா போச்சு பகல் பூரா பிசினஸுக்கும் ராத்திரி ஃபுல்லா படிப்புக்கும் என்று ஓய்வே இல்லாமல் அந்த ஓடி விளையாடுற வயசுலையே வயதுக்கு மேற்பட்ட பொறுப்புக்களை சுமக்க தொடங்கினேன்
வேலைகள் அதிகமாகி என்னோட மனசு பெரும் அழுத்தத்தில் மாட்டி தவிச்சது படித்து ஃபர்ஸ்ட் பாஸ் பண்ணி பிசினஸா கையில எடுத்தேன்
ரேகாவையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வர அவளுக்கான முயற்சியும் பார்த்துகிட்டேன் அப்படியே அப்பாவோட ட்ரீட்மெண்ட் இப்படி பல பொறுப்புகளை சுமந்து சுமந்து என்னோட மனம் ரணமா மாறிடுச்சு
அப்பாவை ஒவ்வொரு தடவை பார்க்கும்போது அப்பா என்ன நினைச்சு ரொம்ப கவலைப்படாத என்று கண்களால் பேசுவது எனக்கு நல்லா புரியும் அந்த கண்கள் எப்பவுமே வலிகளை மட்டும் தான் பார்த்திருக்கேன்
நீயே சொல்லு உங்க அப்பாக்கு இப்படி யாராவது செய்தால் நீ சும்மா விடுவியா உங்க அப்பா மேல இருக்க பாசம் உனக்கு எவ்வளவு அதிகமா இருக்கோ அதே அளவு தானே எனக்கும் எங்க அப்பா மேல இருக்கும்
உனக்குன்னாலும் சொல்லிக்கிறதுக்கு அம்மா, சொந்த பந்தம் இருக்காங்க எனக்குன்னு யாருமே இல்லை எங்க அப்பாவும் என்னோட தங்கை ரேகாவும் மட்டும் தான் அப்படிப்பட்ட எங்களோட சின்ன குருவிக்கூடு போல இருந்த குடும்பத்தை சின்னா பின்னமாக்கின தனபால சும்மா விட கூடாதுன்னு நினைச்சேன்
அப்போதான் எனக்கு உன்னோட நினைப்பு வந்துச்சு உன்ன முதல் முதல் ஒரு பிசினஸ் மீட்டிங்ல சந்தித்தேன்
அதுக்கு அப்புறம் என்னோட முழு டார்கெட் நீ தான் எப்படி நான் எங்க அப்பாவை பிரிந்து கஷ்டப்படுறேனோ அவரோட இந்த நிலைமையை பார்த்து ஒவ்வொரு நொடியும் செத்துப் பிழைக்கிறானோ அதே மாதிரி உங்க அப்பாவும் உன்னை பார்த்து செத்துப் பிழைக்கணும் அதுக்கு நீ சாகணும் ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு சொக்கனும் உன்னோட பிரிவுல அவர் துடியா துடிக்கணும்
எப்படி ராமனை பிரிந்து தசரதன் இறந்து போனானோ அப்படி தனபால் நீ இல்லாத இந்த உலகத்தை எண்ணி சாகணும் அதுக்கு அவர்தான் காரணம் என்று தெரியணும்
தனபாலுக்கு நான் யாருன்னு காட்டுறேன் பாரு உன்னை சாவடிச்சிட்டு உன்னோட உடம்போட போய் தனபாலுக்கு அதை கிப்ட்டா கொடுத்து உன்னோட பாவத்தின் சம்பளம் தான் இதுன்னு சொல்லிட்டு தான் வருவேன்
அந்த அளவுக்கு இந்த மனசுல பழிவெறி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கு துருவன் நீ வேணும்னா ரொம்ப நல்லவனா இருக்கலாம் ஆனால் நான் எங்க அப்பாவுக்கு ஒரு நல்ல மகனா இருக்கத்தான் நினைக்கிறேன் நல்லவனாய் இருக்கிற விட நல்ல மகனா இருக்கிறது மேல்
அதனாலதான் உன்னை பல தடவை கொல்றதுக்கு முயற்சி செய்தேன் ஒரு தடவை பைக்ல வந்து சூட் பண்ண ட்ரை பண்ணினேன், உன்னோட வைப்ப கடத்தினது, பிறகு உன்னோட ஆபீஸ்ல அந்த வேலை செய்த ஆயாவை வைத்து நீ குடிக்கிற தண்ணில விஷம் கலந்தது,
அந்த ஆயாவை கொன்னது எல்லாமே அடியேன் தான் தண்ணில விஷம் கலந்தது அவதான்னு நீ எப்படியும் கண்டுபிடித்துவிடுவேன்னு எனக்குத் தெரியும் அதனால தான் நான் முன்னெச்சரிக்கையா அவளை தீர்த்து கட்டிட்டேன்..” என்று ருத்ர பிரசாத் கூறியதும் இவ்வளவு நேரமும் உத்திரபிரசாத்தின் மீது இருந்த பரிதாபம் துடைத்தெறியப்பட்டது துருவனுக்கு,
உடனே துருவன் அவனை எரிக்கும் பார்வை பார்த்தபடி,
“எங்க அப்பா செஞ்ச தப்புக்கு நீ என்னை பழி வாங்குவது ஓகே அவங்க எல்லாம் என்ன செஞ்சாங்க உனக்கு ஏன் தேவையில்லாம ஒரு அப்பாவி உசுர பறிச்சிட்டே…” என்று துருவன் பொங்கி எழ,
“அதெல்லாம் ஒரு அப்பாவி உசுரா உன் உயிருக்கு எவ்வளவு பேரம் பேசினாள்னு தெரிஞ்சா நீ இப்படி எல்லாம் பேசி இருக்க மாட்ட
அதோட உன்னோட அவுஸ்திரேலியா டீலிங் எனக்கு ரொம்ப முக்கியம் அதுக்காகத்தான் உன்ன நான் இவ்வளவு நாளும் விட்டு வைத்திருந்தேன் இப்போ அதுக்கான டைம் வந்துடுச்சு
இது எவ்வளவு பெரிய டீலிங்ன்னு எனக்கு நல்லா தெரியும் உன்னோட பல கோடி ரூபாய் சம்பாத்தியத்தை ஒரு மாசத்துல இதில் உழைச்சிடலாம்
இந்த டீலிங் கைக்கு வந்துச்சுன்னா நீ கோடியில் தத்தளிப்பேன்னு எனக்கு நல்லா தெரியும் உலக நாடுகளிலேயே இந்த டீலிங் கண்டக்டர் நீ வாங்கினதே இந்தியாவுக்கே பெருமை.
அதனால இதோட உனக்கு பேர், புகழ், பணம் எல்லாமே சேர்ந்து வரும் அதெல்லாம் உனக்கு கிடைக்க நான் விட மாட்டேன் உன்னை தீர்த்துக் கட்டிட்டு உன்னோட டீலிங்க நான் கைப்பற்றிக் கொண்டு இந்தியாவுக்கு போயிடலாம் ஒரே கல்லில் ரெண்டு மாங்கா உன்னோட பிசினஸ்சையும் நான் கைப்பற்றி அதோட என்னோட பழிவெறியையும் நான் தீர்த்துக்கலாம் எப்படி என்னோட ஐடியா…” என்று தற்பெருமையாக அந்தக் கட்டிடமே எதிரொலிக்க சிரித்தான் ருத்ர பிரசாத்.
துருவன் அவனது கதையைக் கேட்டு திகைப் பூண்டை மிதித்தவன் போல அப்படியே அசைவற்று இருக்க அவனது கண்களுக்கு நேராக சுடக்கிட்ட ருத்திர பிரசாத்,
“என்னடா அப்படி பார்க்கிறா உன்னால நம்ப முடியலைல உங்க அப்பா இப்படியெல்லாம் செஞ்சி இருப்பார் என்று நீ நம்பவே மாட்ட எனக்கு தெரியும் ஆனா நீ நம்பத் தேவையில்லை நீ தான் இன்னும் சில நிமிஷங்கள் இந்த உலக விட்டு போகப் போறியே நீ நம்பினா என்ன நம்பலைன்னா என்ன எனக்கு என்னோட ரிவெஞ் தான் முக்கியம்
ஓகே சாகறதுக்கு முன்னுக்கு எல்லாரும் கேட்கிற அந்த கேள்வி கேட்டு விடவா?
“என்ன..?” என்று துருவன் ஒற்றை பதில் உதிர்க்க,
“உன்னோட கடைசி ஆசை என்னன்னு சொல்லு..” என்றபடி இடுப்பில் சொருகி இருந்த ஸ்மார்ட் ஹன்னை எடுத்து லோட் செய்து துருவனின் நெற்றியில் வைத்தான்.
இவை அனைத்தையும் அருகில் இருக்கும் அறையில் ஜன்னல் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த வள்ளிக்கு தூக்கி வாரிப் போட்டது.
‘என்னதான் என்னோட மாமா தப்பு செஞ்சு இருந்தாலும் அதுக்காக அதற்குரிய தண்டனையை அவரோட மகனுக்கு கொடுக்கிறது இது ரொம்ப அநியாயம் அவரே இப்பதான் வாழ்க்கையை ஆரம்பித்து இருக்காரு அப்படி தீர்க்க முடியாதுன்னு ஒன்றும் இல்லை
இவங்க போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணி ஏதாவது செய்திருக்கலாம் தானே இப்படி உயிரைப் பறித்து அதில் என்னதான் லாபத்தை காணப் போறாங்களோ தெரியலையே ஐயோ கையில வேற பெரிய துப்பாக்கி வச்சிருக்கான்
இப்போ நான் என்ன பண்றது கடவுளை நீ தான் காப்பாத்தணும் அப்பா அம்மா செய்ற பாவம் புள்ளைகளுக்கு தான்னு சும்மாவா சொன்னாங்க ஆனா இது ரொம்ப மோசம், அநியாயம் இப்படி எல்லாம் நடக்கவே கூடாது..’ என்று மனதிற்குள் வள்ளி புலம்பிக் கொண்டிருக்க,
துருவன் தலையை அங்கும் இங்கும் அசைத்து சோம்பல் முறிப்பது போல செய்து கொண்டு, நேராக உத்தர பிரசாத்தை பார்த்து,
“ருத்திரபிரசாத் இன்னும் நல்லா அழுத்தி வை மேல் நடு மண்டையில் வைத்து சுட்டன்னா புல்லட் சரியா உள்ள இறங்கும் உடனே மூளை வெடிச்சு அப்படியே செத்துருவேன் நெத்தில வைச்சேன்னா சில நேரம் ஸ்லீப் ஆகலாம் நான் தலையை சரிசிட்டேனா என்ன பண்ணுவ
நான் சொன்ன ஐடியா உனக்கு ஹெல்ப் ஆயிருக்கும் உன் மேல சத்தியமா உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன்..” என்று கூறி நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.
அவனது பேச்சின் தோரணையும் அவனது கிண்டலும் எதனையோ வலியுறுத்துவது போல ருத்ர பிரசாத்துக்கு தோன்றியது.
“என்ன நக்கலா என்னால உன்னை கொல்ல முடியாதுன்னு நினைக்கிறியா..?”
“அப்படின்னு நான் சொல்லலையே நீதான் கையில இந்தப் பெரிய ஹன்ன வச்சுருக்க உள்ள குண்டு இருக்கு தானே அப்புறம் என்ன..?”
“ஆனா உன்னோட பிசினஸ் ஸ்டீல் சம்பந்தமான பயில்கள் எனக்கு தேவை அதை ஒப்படைச்சதுக்கு அப்புறம் தான் உன்னை நான் கொல்லுவேன்..”
“அது தெரிஞ்ச விஷயம் தானே நீ எப்படியும் அதை கைப்பற்றிவிட்டு தான் என்னை கொல்லுவேன்னு எனக்கு எப்பயோ தெரியும் அதனால என்னோட உயிருக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு தெரியும்….” என்று துருவன் மீண்டும் சிரிக்க,
அவனது சிரிப்பை பார்த்து கோபம் கொண்ட ருத்ர பிரசாத் அவனது தலை உச்சியில் ஹன்னை வைத்து அழுத்தியபடி,
“எனக்கு என்னோட அப்பாவை தவிர இந்த பிசினஸ் எல்லாம் பெரிய விஷயமே இல்லை இப்ப நினைச்சாலும் உன்னை கொன்று விடுவேன் நீயே இல்லாத போ அந்த பிசினஸ் டீலிங் வந்து எப்படி உங்களுக்கு சேரும் அது உங்களுக்கு இல்லாம போயிடும். அப்போ எனக்கு பிசினஸ் டீலிங் எனக்கு கிடைக்கிறதை விட உங்களுக்கு இல்லாம பண்ணினது எனக்கு பெரிய சந்தோசம் தான் அதனால கட்டாயமா இன்னைக்கு உனக்கு பரலோகம் தாண்டி..” என்று ருத்ர பிரசாத் கூற துருவன் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஏதாவது வழி கிடைக்குமா என்று மூளையை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்.
ருத்ர பிரசாத் ஆக்ரோஷமாக சிரித்து விட்டு துருவனது இறுதி வினாடிகளை ஒவ்வொன்றாக எண்ணினான்.
“வன்…. டூ… த்ரீ…” என்றதும் பெரும் சத்தத்துடன் ஹன்னிலிருந்து குண்டு பாய்ந்தது.