11. தணலின் சீதளம்

4.6
(5)

சீதளம் 11

“அடியே நாளைக்கு சாயந்திரம் நம்ம கிளம்பனும் எல்லாத்தையுமே எடுத்து வச்சுட்டியா இல்ல இன்னைக்கு நடக்கப்போற நிச்சயதார்த்தத்துக்கு ரெடியாகிறதால எல்லாத்தையும் மறந்துட்டியா” என்று கேட்டவாறு தன்னுடைய பெட்டியில் தன்னுடைய பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டு பூங்கொடி இடம் கேட்டாள் மேகா.
அவளோ செல்போனில் அவளும் ராமும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்து ரசித்து கொண்டிருக்க இடையில் இவள் கேட்ட கேள்வியில் இவள் புறம் திரும்பிய பூங்கொடியோ,
“ மனுசிய கொஞ்ச நேரமாவது சந்தோஷமா ஃபீல் பண்ண விடுறியாடி ராட்சசி” என்றவாறே இவள்புறம் திரும்பினாள் பூங்கொடி.
“ஆஹா பார்டா என்னம்மா புது கல்யாண பொண்ணு கொஞ்சம் ஓவரா தான் போறீங்க. உன்னோட இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் கல்யாணம் முடிஞ்சு உன் புருஷன் கூட ஃபர்ஸ்ட் நைட்ல வச்சுக்கோ இப்போ நிச்சயதார்த்தம் மட்டும்தான் நடக்க போகுது ரொம்ப எதிர்பாக்காத” என்றாள் மேகா.
“ அடியே நான் உனக்கு சாபம் விடுறேன்டி. நீயும் இதே மாதிரி ஒருத்தன் மேல காதல்ல விழுந்து அவனை பார்க்கவே முடியாத அளவுக்கு கஷ்டப்பட போற” என்றாள் பூங்கொடி.
அதற்கு கலகலவென சத்தமாக சிரித்த மேகாவோ,
“ அட போடி இவளே நானாவது லவ் பண்றதாவது அதுவும் அவனை பார்க்க முடியாம நான் ஏங்கி போய் அலைவேனாக்கும். இந்த நாளை உன் டைரியில் குறிச்சி வைத்துக்கோ இந்த மேகாவுக்கு அப்படி ஒரு நிலைமை கண்டிப்பா வரவே வராது” என்று பூங்கொடியிடம் சவால் விட்டாள் மேகா.
ஆனால் பாவம் அவள் அறியவில்லை அவள் இப்பொழுது சொல்வதற்கும் செய்வதற்கும் அனைத்தும் தலைகீழாக மாறப் போகிறது என்று.
அன்று பூங்கொடிக்கும் ராமிற்கும் நிச்சயதார்த்தம் ஏற்பாடு தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டது.
மாலைப்பொழுது பூங்கொடியின் வீட்டில் அவர்கள் சொந்தங்கள் ஊர்காரர்கள் என கூட்டமாக குவிந்திருந்தன.
இங்கு மணப்பெண்ணுக்கு அவளுடைய அறையில் அலங்காரங்கள் செய்து கொண்டிருக்க அவளுக்கு இணையாக மேகாவோ தங்க நிற பட்டு உடுத்தி அழகாக இருந்தாள்.
சிறிது நேரத்தில் ராமின் குடும்பமும் அங்கு வருகை தர, மாப்பிள்ளையை அழைத்தவர்கள் உள்ளே அமர வைத்த பெண் வீட்டார்களோ அந்த ஊரின் தலைவரான செல்வரத்தினத்தின் குடும்பத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தது.
வழக்கமாக அந்த ஊரில் எந்த ஒரு நல்ல விடையங்கள் நடந்தாலும் செல்வரத்தினத்தின் குடும்பத்தார் தாம்பூல தட்டு கொடுப்பது வழக்கம். அதேபோல இன்று பெண் வீட்டு சார்பாக இவர்கள் மாற்றும் நிச்சயதார்த்த தாம்பூல தட்டு செல்வரத்தினத்தின் வீட்டிலிருந்து வருவதால் சின்னசாமியின் குடும்பமும் மிகுந்த ஆனந்தம் அடைந்தது.
அவர்களுடைய எதிர்பார்ப்பை நேரம் தாழ்த்தாமல் வருகை தந்தார்கள் செல்வரத்தினத்தின் குடும்பம்.
அவர்கள் வருவதை பார்த்த சின்னசாமியும் அவரது மனைவியும்,
“ வாங்க வாங்க ஐயா வாங்கமா வாங்க தம்பி” என்று ஒருவர் விடாமல் அனைவரையும் வரவேற்று அங்கு அமர வைத்தார்கள்.
அவர்கள் வந்ததும் நல்ல நேரமும் ஆரம்பமாக நிச்சயதார்த்த வேலையை ஆரம்பித்தார்கள்.
ஐயர் நிச்சயதார்த்த ஓலையை படிக்கும் முன்,
“ பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என்று சொல்ல பூங்கொடியின் அம்மா தன்னுடைய மகளை அழைக்க உள்ளே வந்தார்.
சர்வ அலங்காரத்தோடு நின்ற தன்னுடைய மகளை பார்த்த அந்த தாயுள்ளமோ ஆனந்தத்தில் பூரித்தாலும் இன்னும் கொஞ்ச நாளில் தன்னுடைய மகள் வேறொரு வீட்டிற்கு இடம்பெயற போகிறாளே என்று நினைத்த அந்த தாயின் கண்களோ லேசாக கலங்கின.
அதை கண்டு கொண்ட பூங்கொடியோ எழுந்து வந்தவள் தன்னுடைய தாயை அணைத்துக் கொண்டாள்.
இதை பார்த்துக் கொண்டிருந்த மேகாவோ,
“ என்னம்மா இது நிச்சயதார்த்தப்பவே இரண்டு பேரும் கண்ணீர் விட்டா இன்னும் கல்யாணம் இருக்கே. அப்போ கல்யாணத்தை முடிச்சி மாப்பிள்ளையே வேணா வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சொல்லிடுவோமா” என்று அவர்களை இலகுவாக்க இவள் சொல்ல உடனே பூங்கொடியின் அன்னையோ,
“ சேச்சே அதெல்லாம் பண்ண கூடாது பொண்ணுங்க தான் மாப்பிள்ளை வீட்டுக்கு போய் தங்களுடைய பிறந்த வீட்டு பெருமையை நிலைநாட்டனும். இந்த உலகத்துல ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போதும் அவங்கள பெத்தவங்க தங்கள் வீட்டுக்கு மகாலட்சுமியே வந்துட்டான்னு எவ்வளவு சந்தோஷப்படுறாங்களோ அடுத்த நிமிஷமே அந்த மகாலட்சுமி இன்னொரு வீட்டுக்கு போய் தான் ஆகணும்னு நிதர்சனத்தை ஏத்துக்குவாங்க. இதுதான் வழக்கம் ஆனால் என்ன செய்றது இத்தனை வருஷமா கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கிட்ட பிள்ளை நம்மள பிரிஞ்சு போகப் போறாளேன்னு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். அது அவ அந்த புகுந்த வீட்டுல சந்தோஷமா வாழ்ந்தா அந்த கஷ்டம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைஞ்சி போகும்” என்று சொன்னவரோ, தன்னுடைய பெண்ணிற்கு தன்னுடைய கண்களில் இருக்கும் கண்மையையை விரலால் தடவி எடுத்தவர் பூங்கொடியின் இடது காதிற்கு பின்னால் வைத்து திருஷ்டி கழித்தார்.
உடனே மேகாவோ,
“ அம்மா இது எதுக்கு செய்றீங்க” என்று தன்னுடைய சந்தேகத்தை கேட்டாள்.
அதற்கு பூங்கொடியின் அன்னையோ,
“ என் பொண்ணு எவ்ளோ அழகா இருக்கா இங்க வந்திருக்கிற எல்லாருடைய கண்ணும் ஒரே மாதிரி இருக்காதே. என் பொண்ணுக்கு கண்ணு பட்டுவிடக்கூடாதுன்னு தான் திருஷ்டி பொட்டு வைக்கிறேன்” என்றார்.
மேகாவோ,
“ ஓ அப்படியா அப்போ உங்க கண்ணுக்கு நான் அழகா தெரியலையா” என்று சிறு பிள்ளையாக கேட்க அதற்கு பூங்கொடியும் அவளுடைய அன்னையும் சிரிக்க,
“ என்ன ரெண்டு பேரும் ஏன் இப்படி சிரிக்கிறீங்க” என்று மேகா கேட்க உடனே பூங்கொடியின் அன்னையோ,
“ நீயும் ரொம்ப அழகா இருக்கமா இரு உனக்கும் வச்சு விடுறேன்” என்றவர் பூங்கொடிக்கு வைத்தது போல் மேகாவின் இடது காதுக்கு பின்னாலும் மை வைத்து அவளுக்கும் திருஷ்டி கழித்தார்.
இப்படியே பேசிக்கொண்டு தன்னுடைய பெண்ணை அழைத்து வந்தார்
பூங்கொடியின் அம்மா. அவர்களுடனே மேகாவும் வெளியே வந்தவள் அங்கு அமர்ந்திருந்த வேந்தனுடைய குடும்பத்தை அதிர்ச்சியாக பார்த்தாள்.
பின்பு தன்னை சுதாரித்துக் கொண்டவள் பூங்கொடியுடன் நின்று கொண்டாள்.
ஐயர் நிச்சயதார்த்த பத்திரிக்கையை படித்து முடித்தவர்,
“ இங்கு வாங்கோ பொண்ணு மாப்பிள்ளையும் முன்னாடி வாங்கோ” என்று அழைத்து அவர்கள் இருவருடைய கையிலும் ஆளுக்கு ஒரு மாலையை கொடுத்தவர்,
“ ரெண்டு பேரும் மாலையை மாத்திக்கோங்கோ” என்றார்.
ஐயர் சொன்னது போல் இருவரும் மாலையை மாற்றிக்கொள்ள,
“ பொண்ணோட அம்மா அப்பாவும் புள்ளையாண்டனுடைய அம்மா அப்பாவும் சபைக்கு முன்னாடி வாங்கோ” என்று ஐயர் அழைக்க, இரு குடும்பமும் முன்னே வந்து நின்றது.
மாப்பிள்ளை வீட்டார் அவர்கள் கொண்டு வந்த நிச்சய தாம்பூலத்தை கையில் வைத்திருக்க அப்பொழுது பெண்ணின் பெற்றவர்கள் கையில் செல்வரத்தினமும் அன்னலட்சுமியும் தங்கள் குடும்ப சார்பாக கொண்டு வந்த தாம்பூல தட்டை அவர்களுடைய கையில் கொடுத்தார்கள்.
பின்பு ஐயர் இருவரையும் மோதிரம் மாற்றிக்கொள்ள சொல்ல, தாம்பூலத்தில் மோதிரத்தை பார்க்க அங்கோ மோதிரம் இருக்கவில்லை. உடனே சின்னசாமி,
“ ஐயா மோதிரம் இல்லைங்களே” என்று செல்வரத்தினத்திடம் பவ்யமாக கேட்க அவரோ தன்னுடைய மனைவியிடம்,
“ என்னமா மோதிரத்தை எடுத்து வைக்கலையா நீங்க” என்று கேட்டார்.
“ இல்லைங்க தாம்பூல தட்டுல எல்லாத்தையும் எடுத்து வச்சு தான் கொண்டு வந்தேன்” என்று அன்னலட்சுமி சொல்ல,
“ அப்புறம் எப்படி மா தட்டுல மோதிரம் இல்லாம போகும் நீ சரியா எடுத்து வச்சியா இல்ல மறந்து போய் வீட்ல வச்சுட்டு வந்துட்டியா” என்று செல்வரத்தினம் கேட்க உடனே வேந்தனோ,
“ அப்பா கார்ல இருந்துச்சு அம்மா எடுத்து வைக்க மறந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் நான் எடுத்துட்டு வரேன்” என்று அவன் வெளியே போக உடனே பூங்கொடியின் அம்மா மேகாவை பார்த்து,
“ அம்மாடி மேகா நீ போய் வாங்கிட்டு வாம்மா” என்று அவளை அனுப்பி வைத்தார்.
அவளுக்கோ வேந்தனின் பின்னால் போக மனம் இல்லை என்றாலும் இந்த சமயம் வேறு வழி இல்லை என்பதனால் வேந்தனின் பின்னால் சென்றாள் மேகா.
காரின் அருகில் வந்த வேந்தனோ காரின் டோரை திறந்து பார்க்க பின் இருக்கையில் மோதிர பெட்டி இருந்தது. அதை பார்த்தவனோ சிறிதாக புன்னகைத்து விட்டு அதை கையில் எடுத்து பின்னே திரும்ப அங்கு மேகாவோ மோதிரத்தை வாங்க கையை நீட்டியவளோ,
“ மோதிரத்தை கொடுங்க” என்றாள்.
வேந்தனுக்கோ அங்கு மேகாவை பார்த்ததும் அவளை சீண்ட நினைத்தான்.
உடனே அவள் நீட்டிய கையைப் பிடித்து தன்னுடைய இதழில் வைத்து முத்தம் பதித்தான்.
அதில் திடுக்கிட்ட மேகாவோ,
“ என்ன செய்றீங்க” என்று அவனிடம் இருந்து தன்னுடைய கையை வேகமாக உருவியவள் அவன் முத்தமிட்ட இடத்தை மற்றொரு கையால் பரபரவென்று தேய்த்தாள்.
அவனோ கூலாக,
“நீதான கேட்ட அதான் கொடுத்தேன்”
உடனே தன்னுடைய இரு கையையும் இடுப்பில் பதித்தவள் அவனை முறைத்தவாறு,
“ நான் ஒன்னும் உங்க கிட்ட முத்தம் கேட்டு கை நீட்டல மோதிரத்தை கொடுங்கன்னு தான் கை நீட்டினேன்”
“ஓ அப்படியா எனக்கு மோதிரம்னு கேட்காம முத்தம்ன்னு தான் கேட்டுச்சா அதான் நம்ம கிட்ட வந்து முத்தம் கேட்டு கையேந்தி நிற்கும் போது கொடுக்காம இருந்தா நம்மள பாத்து இந்த ஊரு என்ன சொல்லும் அப்படின்னு தான் முத்தம் கொடுத்துட்டேன்” என்றான் வேந்தன். ஒன்றுமே தெரியாதது போல்.
அதில் மேலும் கடுப்பான மேகாவோ,
“ ஓ அப்போ உங்ககிட்ட யார் வந்து முத்தம் கொடுங்கன்னு கேட்டாலும் நீங்க கொடுத்துருவீங்களா” என்று நக்கலாக மேகா கேட்டவள்,
“ அதோ அந்த பாட்டி அவங்க உங்க கிட்ட வந்து முத்தம் கேட்டா குடுப்பீங்களா” என்று பக்கத்தில் நின்ற ஒரு பாட்டியை கைகாட்டி மேகா கேட்க இங்கு வேந்தனோ,
“ அவங்க யாரும் என்கிட்ட வந்து முத்தம் கேட்கலையே நீ தான் கேட்ட”
“ ஹலோ நான் உன்ன உங்ககிட்ட முத்தம் கேட்கல”
“ சரி எனக்கு அப்படி தான் கேட்டுச்சு அதான் கொடுத்தேன் அவங்க வந்து கேட்டா கொடுக்க போறேன்” என்றான் வேந்தன்.
“ அப்படியா சரி ஒரு நிமிஷம் இங்கேயே நில்லுங்க இப்ப வந்துடுறேன்” என்றவள் வேகமாக அந்த பாட்டியின் அருகில் சென்று அவரை அழைத்து வேந்தனிடம் வந்தவள்,
“ பாட்டி இவங்ககிட்ட முத்தம் வேணும்னு கேளுங்க” என்று மேகா சொல்ல அதற்கு அந்த பாட்டியோ அவளுடைய கன்னத்தில் இடித்தவர்,
“ அட போடி கூறி கேட்டவளே எனக்கு முத்தம் வேணும்னா நான் என் புருஷன் கிட்ட கேட்டு வாங்கிக்கொள்ள போறேன் நான் ஏண்டி இந்த பொடியன் கிட்ட கேட்கணும். உனக்கு வேணும்னா நீயே அவன் கிட்ட கேட்டு வாங்கிக்கோ. நல்ல வேலை நீ இப்படி சொல்லும் போது என் புருஷன் பக்கத்துல இல்ல இருந்திருந்தா இந்நேரம் என்ன இந்த பொடியன் கூட சேர்த்து வச்சு சந்தேகப்பட்டு அவரு வப்பாட்டி வீட்டுக்கு போயிருப்பாரு என்ன விடுமா தாயே” என்றவாறு அந்த பாட்டி போய்விட்டார்.
அதைக்கண்டு வேந்தனோ தனக்குள் உண்டான சிரிப்பை அடக்கிக் கொண்டு நிற்க, இங்கு மேகாவோ அந்த பாட்டியின் பேச்சில் திடுக்கிட்டு போய் நின்று விட்டாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

1 thought on “11. தணலின் சீதளம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!