Episode – 50
ஆனால் நேரடியாக போய் அவனை இப்போது அடிக்க முடியாது. அவனே கடுங் கோபத்தில் பிளந்து கட்டிக் கொண்டு இருந்தான்.
அதே போல, அந்த நாள் தான் தனக்கு இறுதி நாள் எனவும் அவருக்கு புரிந்து விட்டது. அதற்கு மேலும் ஏன் தயங்க வேண்டும்.
தமயந்தி கதற வேண்டும், ஆதியும் கதற வேண்டும், அபர்ணாவும் கதற வேண்டும் எனில் ஒரே வழி, தான் இறக்க முதல் தீரனைக் கொலை செய்வது தான்.
என்ன செய்யலாம் என மூளையைத் தட்டி யோசிக்க ஆரம்பித்தார் அவர்.
அதே நேரம், அவரின் செய்கைகளையும், தீரனை நோக்கிய அவரது பார்வையையும் கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் தமயந்தி.
ஆம், அவள் ஒளித்து வைக்கப் பட்டு இருந்த இடம், அவர் ஒளிந்த இடத்திற்கு அருகில் தான் இருந்தது.
கோடீஸ்வரனுக்கு, அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தமயந்தி இருக்கும் இடம் தெரியாது.
ஆனால், அவளுக்கு அவரது செய்கைகள் நன்றாகவே புலன் ஆனது.
அவரது பார்வையை வைத்தே, அவர் ஏதோ பிளான் பண்ணி விட்டார் என அறிந்து கொண்டவளின் மனம் தாறு மாறாக துடிக்க ஆரம்பித்தது.
அவளுக்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டு இருந்தவர்களிடம், கூட அவள் தீரனுக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என சொல்லிப் பார்த்தாள்.
அவர்களோ, அவளைத் தடுத்து நிறுத்தியதோடு மட்டும் அல்லாது,
“மேடம், சார் உங்கள, இந்த இடத்தை விட்டு அசையக் கூடாதுன்னு சொல்லி இருக்கார். எங்களுக்கு இருக்கிற ரூல்ஸ்ச நாங்க பொலோவ் பண்ணி ஆகணும். ப்ளீஸ் மேடம் கொஞ்சம் பொறுமையா இருங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லாம் முடிஞ்சிடும். நீங்க டென்ஷன் ஆகாம இருங்க மேடம்.” எனக் கூறி, அவளை மீண்டும் அமர வைத்தனர்.
இம்முறை, கணவனின் பேச்சை மீற விரும்பாது,
அவளும், அமைதியாக உட்கார்ந்தாள்.
ஆனாலும் அவளின் மனம் அமைதி அடைய மறுத்தது. மீண்டும் அவளின் பார்வை கோடீஸ்வரனை நோக்கி செல்ல,
அவரோ, அனைவரையம் அடித்துக் கொண்டு முன்னேறி வரும் தீரனை ஒரு பார்வை பார்த்து விட்டு, தனது காலுக்குள் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை மெதுவாக வெளியே எடுத்தார்.
தமயந்தியோ, “அச்சோ, அந்த ஆள் துப்பாக்கியை எடுக்கிறார். கொஞ்சம் அங்க பாருங்க.” என கத்த,
அவளை சுற்றி நின்றவர்கள் அந்த இடம் நோக்கி திரும்பும் முன், கோடீஸ்வரன் தீரன் நோக்கி முன்னேறி இருந்தார்.
அதே நேரம், தமயந்தியின் சத்தம் கேட்டதும், அந்த இடம் நோக்கி சில, பல தோட்டாக்கள், அதிரடியாக சீறிப் பாய ஆரம்பித்தது.
உடனே, அங்கிருந்த தீரனின் ஆட்கள், தமயந்தியை அங்கிருந்து அடுத்த இடத்திற்கு நகர்த்தி செல்ல ஆரம்பித்தனர்.
யாருமே, கோடீஸ்வரன் பற்றி கவலை கொள்ளும் நிலையில் இல்லை.
ஆனால் தமயந்தியின் கண்கள் மட்டும், அவரை நோக்கி நகர,
அவரோ, சரியாக தீரனைக் குறி வைத்து துப்பாக்கியை நீட்டும் நேரம்,
இதற்கு மேலும் தாமதித்தால், அவனைக் காப்பாற்ற முடியாது போய் விடும். என எண்ணியவள்,
யாரும் எதிர் பாரா நேரம், அனைவரையும் தள்ளிக் கொண்டு அவசரமாக தீரனை நோக்கி ஓடிய அதே நேரம் துப்பாக்கியின் ட்ரிகரை தீரனை நோக்கி அழுத்தி இருந்தார் கோடீஸ்வரன்.
அந்த தோட்டா அவனின் நெஞ்சில் பாய்வதற்கு முன்னதாக குறுக்காக பாய்ந்து தனது தோள் பட்டையில் அந்த தோட்டாவை வாங்கிக் கொண்டு அப்படியே கீழே விழுந்தாள் அவள்.
அந்த நொடி அவனது முகத்தில் தெறித்தது அவளது இரத்தம்.
அவன் காப்பாற்றிய உயிரை அவனுக்காக கொடுக்க துணிந்து இருந்தாள் பெண்ணவள்.
அவளின் காதலுக்கு இதை விட சான்று என்ன வேண்டும்?
சில நொடிகளுக்குள் அனைத்தும் நடந்து முடிந்து இருக்க,
நடந்ததை, நம்ப முடியாது, ஒரு கணம் திகைத்து நின்றவன்,
அடுத்த நொடி தமயந்தியை தனது மடியில் போட்டக் கொண்டு,
“ஆதி….” என கத்தினான்.
அவனும், நடந்த நிகழ்வுகளில் உறைந்து போய் நின்றவன், அண்ணனின் குரலில் மீண்டு,
“நீங்க அண்ணியைப் பாருங்க அண்ணா. நான் இங்க பார்த்துக் கொள்றன்.” என கூற,
அப்போதும் தம்பியை தனியாக விட மனம் இல்லாதவன்,
“பார்கவ்….” என கத்த,
அவர்களின் உதவிக்காக வெளியில் நின்று கொண்டு இருந்த பார்கவ்,பாய்ந்து உள்ளே வந்தான்.
வந்தவன், தீரனின் கைகளில் துடித்துக் கொண்டு இருந்த தமயந்தியையும், தீரனையும் கண்கலங்கிப் போய் பார்க்க,
தீரனோ, ஆதியை நோக்கி கண்களால் சுட்டிக் காட்டியவன்,
“அவனுக்கு ஹெல்ப் பண்ணுடா. நீயும் கவனமா இரு.” என கத்தி விட்டு,
ஒரு நொடி தனது சிவந்த ரௌத்திரம் பொங்கிய கண்களை, அங்கே தனது ஆட்களிடம் பிடி பட்டிருந்த கோடீஸ்வரனை நோக்கி செலுத்தி விட்டு,
“இங்கே இருக்கிற எல்லாரையும் முடிச்சுடுங்க. சின்ன தடயம் கூட இருக்க கூடாது. ஆனா இவனை மாத்திரம் நான் தான் வந்து முடிக்கணும். எல்லாம் முடிஞ்சதும் இந்த ஆள எங்க கொண்டு வரணும்னு உங்க ரெண்டு பேருக்கும் தெரியும் தானே. அந்த இடத்துக்கு பிளைட்ல கொண்டு போங்க, அப்பதான் ஈஸியா இருக்கும். நானும் கொஞ்ச நேரத்துல வந்து சேருவன். அப்புறம் இருக்கு இந்த ஆளுக்கு.” என கூறியவன்,
நொடியும் தாமதிக்காது தன்னவளைத் தூக்க,
அவளோ, வலி தாங்காது, “தீரா….” என முனகலுடன் துடித்தவள்,
அவன், தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பிக்கவும்,
அடி படாத கையால், அவனின் கையை இறுகப்பற்றி,
“இப்பவாச்சும் என் காதலை ஏற்றுக் கொள்ளுவீங்களா ப்ளீஸ்?” என திக்கித் திணறிக் கேட்க,
ஒரு கணம் உடல் இறுகிப் போய் நின்ற தீரனின் கண்கள் கலங்கி கண்ணீரை உகுத்தது.
தனக்காக அவன் சிந்திய அந்த ஒற்றைத் துளி கண்ணீரே அவளின் மீது அவன் கொண்ட காதலை வெளிக்காட்ட போதுமானதாக இருக்க,
புன்னகை உடன், “ஐ…. லவ்…. யூ…. புருஷா….” என திக்கித் திணறிக் கூறியவள்,
அவனது கைகளிலேயே மயங்கிப் போனாள்.
அவள் மயங்கியதும், “ஏண்டி இப்படிப் பண்ணாய்?” என உடைந்த குரலில் கேட்டவன்,
உடனடியாக, அவளை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த ஹாஸ்பிட்டல் நோக்கி சென்றான்.
போகும் போதே அங்கு உள்ளவர்களுக்கு அறிவித்தல் கொடுத்தவன்,
தனக்கு தெரிந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் அனைவரையும் அந்த ஹாஸ்பிட்டலுக்கு அடுத்த பத்து நிமிடங்களில் வரவழைத்தான்.
அவளைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவளுக்கு பெரிதாக எந்த விதமான ஆபத்தும் இல்லை எனவும்,
அதிகளவான இரத்தம் வெளியேறியதனால் அவளுக்கு சிறிதளவில் இரத்த இழப்பு பாதிப்பு மட்டும் ஏற்பட்டு உள்ளது எனவும் கூறினர்.
அவர்கள் கூறிய விடயத்தை தீரன் முன்னமே ஊகித்து இருந்தாலும்,
தன்னவளின் நிலையை எண்ணிப் பயந்து போனவனின் இதயமும் எக்குத் தப்பாக துடிக்க ஆரம்பித்தது.
தன்னவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என மனதிற்குள் மீண்டும் மீண்டும் உருப்போட்டுக் கொண்டவன் வாழ்க்கையில் இரண்டாம் முறை அன்னையின் இறப்புக்கு பிறகு பயம் என்றால் என்ன?, கண்ணீர் என்றால் என்ன?, என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டான்.
இல்லை…. இல்லை…. அவனுக்கு அவனின் உயிரானவள் உணர வைத்தாள் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.
அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அங்கு உள்ள டாக்டர்கள் மூலம் அவளது தோள்ப் பட்டையில் இறங்கிய தோட்டா எடுக்கப்பட்டு விட்டது.
அதிக இரத்தம் வெளியேறிய தனால், அவளுக்குரிய இரத்தமும் மீண்டும் ஏற்றப்பட்டது.
அவளுக்கு சிறிய பாதிப்பும் இல்லை என கூறிய பின்பு தான் அங்கிருந்த கதிரையில் தொப்பென பெரு மூச்சுடன் அமர்ந்து கொண்டான் தீரன்.
அடுத்த பத்து நிமிடங்களும் கண்ணை மூடி அமர்ந்திருந்தவன் கண்களை திறக்கும் போது முகத்தில் ஒரு வித தெளிவு உருவாகி இருந்தது.
அவளைக் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறியவன், அப்படியே அபர்ணாவிற்கு சுருக்கமாக விடயத்தைக் கூறி,
உடனடியாக வரச் சொல்லி போன் பண்ணி விட்டு அடுத்த நொடி, அதே ரௌத்திரம் பொங்கிய கண்களுடன் வெளியேறியவன்,
சொன்னது போலவே பிலைட்டில் சென்று இறங்கிய இடம், கோடீஸ்வரனை வைத்து இருக்கும் இடம் தான்.
அதே மாலை நேரம், அதே இடம்.
ஆம், கோடீஸ்வரன் எந்த இடத்தில் வைத்து அவனது அன்னையை எரித்து கொலை செய்தாரோ…. அதே இடத்துக்கு அவரை கொண்டு செல்ல செய்தவன்,
ஆட்கள் நடமாட்டம் குறைவான, அந்த இடத்தில் கையாலாகாத நிலையில் நின்று கொண்டு இருந்த அவரைக் குரூரமாக பார்த்துக் கொண்டு,
“இந்த இடம் உனக்கு நினைவு இருக்கா கோடீஸ்வரா?, என்னோட அம்மாவையும், தமயந்தியோட அம்மா, அப்பாவையும் துடிக்க துடிக்க கொன்னீயே. அதே இடம் தான் இது. இன்னைக்கு அவங்களோட நினைவு நாள். இவ்வளவு நாளும் எங்க மனசுல எரிஞ்சு கொண்டு இருக்கிற, நெருப்பு இன்னைக்கு தான் அணையப் போகுது. உனக்கு இந்த இடத்தில, இன்னைக்கு நான் சமாதி கட்டுறேன்.” எனக் கூறியவன்,
தனது ஆட்களிடம் திமிறிக் கொண்டு இருந்தவரை நோக்கி பெற்றோலை ஊற்றி விட்டு,
திரும்பி, ஆதியைப் பார்க்க,
அவனும் புரிந்தது என்பது போல தலையை ஆட்டியவன்,
தனது வடுவை ஒரு முறை வருடிப் பார்த்து விட்டு,
லைட்டரை பற்ற வைத்து விட்டு,
கோடீஸ்வரனை நோக்கி, “இன்னைக்குத்தான் என்னோட மனம் முழுசா சாந்தி அடையப் போகுது. உங்களுடைய பாவங்கள் எல்லாத்துக்கும் பெத்த மகனா நானே பரிகாரம் செய்து முடிக்கிறேன். உயிரோடயே கொல்லி வைக்கிறன். உங்க மகனா கடைசிக் காரியத்தை நானே செய்து முடிக்கிறேன்.” என அழுத்தமாக கூறியவன்,
எரிந்து கொண்டிருந்த லைட்டரை அவரை நோக்கி எறிய,
அவனிடம், “வேண்டாம் வேண்டாம்…. ஆதி.” என கத்தியவரின் மீது லைட்டர் பட்டு அவரது உடல் தீப்பிடிக்க ஆரம்பித்தது.
எரிதலின் வலி தாங்க முடியாது, அங்கும் இங்கும் துடி துடித்து ஓடியவர் இறுதியில் அந்த நெருப்புக்குள் எரிந்து சாம்பலாகிப் போனார்.
அங்கு இருந்த அனைவரும் அவர் எரிந்து சாம்பலாகி கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்க,
ஆதியும், தீரனும் கையைக் கட்டிய படி, அவர் எரிந்து முடியும் வரை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
இறுதியில் இருவரின் மனதும் அப்படி ஒரு அமைதி அடைந்தாலும், முகத்தில் இருந்த இறுக்கம் முற்றிலும் குறையவில்லை.
அனைத்தும் முடிந்ததும் பார்கவ்வைப் பார்க்க,
அவனும், ஒரு பெரு மூச்சுடன், அருகில் வந்து இருவரையும் அணைத்து விடுவித்தவன்,
“இன்னையோட உங்க கஷ்ட காலம் எல்லாம் முடிஞ்சிடுச்சுடா. இனியாவது மன நிம்மதியோட, உங்கட பொண்டாட்டி, பிள்ளைகள், குடும்பம்ன்னு சந்தோஷமா இருங்க.” எனக் கூற,
“நீயும் தாண்டா.” எனக் கூறி அவனின் தோளைத் தட்டி விடுவித்த தீரன்,
“உன்ன மாதிரி ஒரு நண்பன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்டா. அப்புறம்….” என எல்லாத்தையும் ஒரு பார்வை பார்க்க,
பார்கவ்வும் புரிந்து கொண்டு, “மச்சான் நீ ஒண்ணும் யோசிக்காதடா. நான் பக்காவா எல்லாத்தையும் கிளியர் பண்ணிடுவன். ஒரு துரும்பு கூட எவன் கையிலும் கிடைக்காது.” என கூறியவன்,
“ அப்புறம் மச்சான் தமயந்தி….” என கேட்க ஆரம்பிக்க,
“அவளுக்கு ஒன்னும் இல்ல நல்லா இருக்காடா. அவளுக்கு எதுவும் ஆகாது.” என கூறி விட்டு,
ஆதியுடன் மீண்டும் ஹாஸ்பிட்டல் நோக்கி பயணம் செய்தான் தீரன்.
அந்தப் பயணத்தின் போது தீரனும் சரி , ஆதியும் சரி அமைதியாகவே அமர்ந்திருந்தனர்.
அவர்களது பல வருட போராட்டம் அன்று முடிவடைந்து விட்டது அல்லவா.
அதனால் உண்டான அமைதி தான் அது.
இருவருக்கும் எதுவும் பேச தோன்றவில்லை.
ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்ததும் டாக்டர்கள் அவனைப் பார்த்து,
“உங்க மனைவி கண் விழிச்சுட்டாங்க தீரன். இனி பயப்பிடுறதுக்கு ஒண்ணுமே இல்ல. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா ஓகே. நீங்க போய் தாராளமா அவங்கள பார்க்கலாம்.” என்று கூறியதும்,
“தங்கி யூ டாக்டர்.” என கூறியவன்,
அங்கு நின்று கொண்டிருந்த ஆதியையும், அபர்ணாவையும் பார்த்து விட்டு,
சிவகாமி அம்மாவை நோக்கி,
“நீங்களும் வந்துட்டீங்களா அம்மா. ஓகே மூணு பேரும் போய் முதல்ல பார்த்துட்டு வாங்க அதுக்கப்புறம் நான் போய்ப் பார்க்கிறேன்.” என கூறினான் .
அவர்களும், “சரி.” என கூறி விட்டு,
உள்ளே போய் அவளைப் பார்த்து விட்டு,
வெளியில் வந்தவர்கள் தீரனைப் பார்க்க,
அதுவரையும் கையை கட்டிக் கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்றவன், ஒரு சிறு தலை அசைப்புடன் தமயந்தியைப் பார்க்க உள்ளே சென்றான்.
உள்ளே சென்றவன், அவளின் மீது பார்வையை செலுத்த ,
அவன் எப்போது வருவான் என்றவாறு, வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகள்,
அவனைக் கண்டதும் அந்த நிலையிலும் மலர்ந்து போனது.
விழிகளால் அவனை அருகில் அழைக்க,
அமைதியாக அவளுக்கு அருகில் சென்று அவளை இமைக்காது பார்த்தபடி கட்டில் ஏறி அமர்ந்தான்.
பத்து நிமிடங்களிற்கும் மேலாக அவனிடம் இருந்து அமைதியே பதிலாக கிடைக்க, அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி,
கஷ்டப்பட்டு, தமயந்தி தான், குரலை செருமி, “என் மேல இன்னும் கோபமா இருக்கீங்களா?” என்று கேட்டதும்,
அது வரையும் இறுக்கமாக இருந்தவன், கண்களில் இருந்து அது வரையும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் முழுவதும் பொல பொலவென கண்களில் இருந்து வடிய,
அவளது கைகளைப் பற்றி முகத்தைப் புதைத்துக் கொண்டவன்,
“ஏண்டி இப்படிப் பண்ணாய்?, கொஞ்ச நேரத்துல என்னோட உயிர் என்கிட்ட இல்லடி. நான் தான் முரடன் கோபக்காரன்னு தெரியும் தானே. நான் சொன்னா நீ அப்படியே செய்திடுவீயா?, அவரோட கதைய முடிச்சதுக்கு அப்புறம் நாம ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வரலாம்னு இருந்தன். அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீயேடி. உன்னயும் இழந்தா இந்த உலகத்தில எனக்குன்னு யாரு இருக்கா?, என் மொத்த உலகமும் நீ தானடி.” எனக் கூறி அவன் கண்ணீர் வடிக்க,
கர்வம் மிக்க கணவனின் இன்னொரு குழந்தைத்தனமான பக்கத்தைக் கண்டு உருகிப் போனவள் மெதுவாக மறு கையை வலியோடு உயர்த்தி அவனது தலையை வருட,
“பேபி, அச்சோ உனக்கு வலிக்கும் இல்ல….” என கேட்டபடி, அவளின் கையை இறக்கி விட்டவன்,
அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு,
“எனக்கு இன்னொரு அம்மா போலத்தான் நீ பொண்டாட்டி. இனி எப்பவுமே என் கூட இருப்பீயா?” என்று கேட்டதும்,
அவனை அருகில் வரவழைத்து அவனின் நெற்றியில் பதிலுக்கு முத்தமிட்டவள்,
“உங்க கூட கடைசி வரைக்கும் நான் இருப்பன் மாமா.” என கூறினாள்.
இருவரும், இணைந்து கைகள் கோர்த்து, மென் சிரிப்புடன் அந்த நெகிழ்வான தருணத்தை உணர்ந்து கொண்டிருக்கும் போது,
“நாங்களும் உள்ள வரலாமா?” என கேட்டபடி,
ஆதியும், அபர்ணாவும் கண்களை கைகளால் மூடிக் கொண்டு, குறுஞ் சிரிப்புடன் அங்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களைக் கண்டதும் தீரன் சற்று விலகி அமர,
“நாங்க ரெண்டு பேரும் எதையுமே பார்க்கல.” என கேலி பேசிய ஆதியைக் கண்டு, தீரன் முறைக்க,
அவனோ, அதைக் கவனிக்காது, “இருந்தாலும் உங்களுக்கு ரொம்பத் தான் தைரியம் ஜாஸ்தி அண்ணி. உங்க ஹஸ்பண்ட் சொன்னாருன்னு இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கீங்க பாருங்க. நீங்க தான் நவீன யுக வாசுகி.” என குனிந்து நிமிர,
அவனது செய்கையில், தீரனுக்கு அடக்க முடியாது புன்னகை அரும்பியது.
தமயந்தியோ, அந்த நிலையிலும் மெதுவாக புன்னகை செய்தாள் என்றால், அபர்ணா, கணவனின் செய்கையில் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள்.
அந்த சூழ்நிலையை இலகுவாக்க அவன் எடுத்துக் கொண்ட முயற்சியைக் கண்டு அபர்ணா அவனுக்கு காற்றில் முத்தம் ஒன்றை பரிசளிக்க, அவன் பதிலுக்கு முத்தம் ஒன்றை பரிசளிக்க,
தமயந்தியின் புன்னகையை ஆசையுடன் தீரன் ரசிக்க,
அவனது பார்வையில் நாணம் கொண்டு அவள் கண் சிமிட்டினாள்.
அந்தத் தருணம் மேலும் தொடர வேண்டும், அவர்களின் சந்தோசம் வாழ்க்கை முழுக்க நிலைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு,
சிவகாமி அம்மா, இரு ஜோடிகளுக்கும் நெட்டி முறிக்க,
மேலிருந்து இரு பெண்களின் பெற்றோர்களும், சிவகாமி அம்மாவும், இரு ஜோடிகளையும் அன்பாக வாழ்த்தினர்.
நாமும், இரு ஜோடிகளையும் வாழ்த்தி விடை பெறு வோம்.
தீரன் மற்றும் நம் தமயந்தி காதலுக்காக இந்த வரிகள்….
அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில் காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்….
நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதற் பூவை யார் பறித்தார்….
காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை….
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை….
தொட தொட மலர்ந்ததென்ன பூவே. சுடச்சுட நனைந்ததென்ன….
பார்வைகள் புதிது…. ஸ்பரிசங்கள் புதிது…. நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன….
நன்றி.
கதையோடு பயணித்த அனைவருக்கும் நன்றி மக்காஸ். 😍😍
லேட் எபி போட்டாலும் மறக்காம படிச்சிட்டு சப்போர்ட் பண்ணிய மக்காஸ் உங்களுக்கு பெரிய நன்றிகள்.
சீக்கிரம் அடுத்த கதையுடன் வரேன்.
உங்களின் அன்பு நண்பி,
தாரதி.
Wow super and happy ending sis
Wowwwwwwww awesome story fantastic bt kjm story kuduthurukalam lovlyyyyyyyyyy couples ❤️❤️❤️❤️