6. விஷ்வ மித்ரன்

4.6
(8)

💙 விஷ்வ மித்ரன் 💙

 

💙 அத்தியாயம் 06

 

அருள் இல்லாத வாழ்வை வாழ முடியாது என்று நினைத்த அக்ஷரா, தனதுயிரை மாய்த்துக் கொள்ள கடலினுள் ஓடப் போக, அவள் கையைப் பிடித்து இழுத்து கன்னம் பதம் பார்த்தது ஒரு கரம்.

 

இடியென விழுந்த அறையில் ஆவென அலறியவள் தலை தூக்கிப் பார்க்க, அங்கு முறைப்புடன் நின்றிருந்தான் அவளது அண்ணன் விஷ்வஜித்.

 

அவன் கோபமுகத்தைக் கண்டவளுக்கோ உள்ளுக்குள் பதற்றமும் பயமும் வந்து தொற்றிக் கொள்ள, அவனைப் பார்க்க முடியாதவளாக தலையைக் குனித்துக் கொண்டாள்.

 

“இங்க பாரு” உறுமலாக மொழிய அவளுக்கோ அவனைப் பார்க்கும் சக்தி இல்லாது தான் போயிற்று.

 

இன்னும் கோபம் அதிகரிக்க “உன்னத் தான் அக்ஷரா. என் முகத்த பாரு. இல்லனா நடக்குறதே” என்று கத்த, “ஹ்…ஹ்ம்ம்” பட்டென நிமிர்ந்து அவன் முகம் நோக்கினாள் பெண்.

 

“எதுக்கு தலை குனிந்து நிக்கிற? என் முகத்த கூட உன்னால நிமிர்ந்து பார்க்க முடியலல? பேச்சு வர்லல? நீ செய்யப் போன காரியம் ஏத்துக்க முடியாத ஒன்னுன்னு உனக்கே புரிஞ்சுதா” அழுத்தமாக வினவினான் விஷ்வா.

 

தலையை நாலா பக்கமும் உருட்டிக் கொண்டு மௌனமாய்த் தான் நிற்கலானாள் அவள்.

 

அவளது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த வலியில் உள்ளம் உருகியவனோ “எந்த ப்ராப்ளம் வந்தாலும் அத துணிஞ்சு நின்னு பேஃஸ் பண்ணுற என் அக்ஷு எங்க போனா?  உன் கிட்ட தப்பா பிஹேவ் பண்ண பையனோட கைய முறிச்சி சாவடிச்சிடுவேன் டா என்னு சொன்ன உன் தைரியம் எங்க போச்சு? யேன்டி கோழை மாதிரி இப்படி ஒரு முடிவு எடுத்த?” இத்தனை நேரம் இருந்த கோபம் கவலையாய் உருமாற மென்மையாகக் கேட்டான்.

 

என் அக்ஷு என்ற அவனது அழைப்பில் கண்கள் பனிக்க, அவனை நோக்கியபடி “எனக்கு வேற என்ன பண்ணுறதுனே தெரியலணா. தினம் தினம் நானும் செத்துப் பிழைச்சு உங்களையும் கஷ்டப்படுத்த விரும்பாம தான் இந்த முடிவ எடுத்தேன்” என்று கூறினாள் அவள்.

 

“நீ எங்க வீட்டு இளவரசி டி. நீ தான் எக்களோட மொத்த சந்தோஷமுமே. நீயில்லாம நாம எப்படி இருப்போம்?” என்றவன் குரலில் வருத்தம் இழையோடலானது.

 

“என் சந்தோஷம் உன்னில் தான் இருக்கு அண்ணா. நீ என்னோட பேசவே மாட்டேங்குற.நீ தான் என் தைரியம், சந்தோஷம் எல்லாமே. அருள் இல்லாட்டியும் உன் ஆறுதல் இருந்திருந்தா இப்படி யோசிச்சு இருக்க மாட்டேன். உன் கிட்ட ப்ரோப்ளம் என்னனு சொல்ல முடியாததால தான் இப்படி ஒரு முடிவ எடுத்தேன்” என்று மனதில் தான் சொன்னாள். இதை அவனிடம் சொன்னால் குற்றவுணர்ச்சியில் தவிப்பான் என்று அறிந்தவள் அமைதியாய் நின்றாள்.

 

“எனக்கு தெரியும் குட்டிம்மா! நான் மட்டும் உன் கூட முன்ன மாதிரி பேசி இருந்தா உன் ப்ராப்ளம் என்னனு என் கிட்ட சொல்லி இருப்ப. ஆனா நான் தான் யார் மேலயோ இருக்குற கோவத்த உன் மேல காட்டி ஹர்ட் பண்ணிட்டேன். இதுக்கு நான் தான் காரணம்” என்று கலங்கிய குரலில் விஷ்வா சொல்லவும் பதறித் தான் போகலானாள் அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தங்கை அவளும்.

 

“விஷு! உன் மேல எந்த தப்பும் இல்ல டா. நான் தான் ஏதோ புத்தி கெட்டு போய் இப்படி பண்ண போய்ட்டேன். இனிமேல் எந்த காரணம் கொண்டும் இப்படி பண்ணி உன்ன கஷ்டப்படுத்த மாட்டேன். சாரி சாரி” காது மடல்களைப் பிடித்துக் கெஞ்ச,

 

“விடு டி. நீ இப்படி சொன்னதே பெரிசு தான். பட் ஒன்ன மைன்ட்ல வெச்சுக்கோ. எந்த ப்ராப்ளம்கும் சூசைட் ஒரு முடிவு இல்ல. சோதனைகள் வரத் தான் செய்யும். அத தைரியமா பேஃஸ் பண்ணனும். நாம ட்ரை பண்ணினா ஒன்னு கிடைக்க டைம் போகலாம். ஆனா கை நழுவாது. நிச்சயமா நமக்கு அது கிடைக்கும்” 

 

“அடப்போ! பேசாம நீ போய் லெக்சரர் ஆகிருக்கலாம் நல்லா இருந்திருப்ப” கண்களைச் சுருக்கிச் சிரித்தாள் பாவை.

 

“அடிங்கு! இந்த வாய் இருக்கே வாய் அதுக்கு பூட்டு போட்டா தான் நீ அடங்குவ” விஷ்வா சொல்ல, “பூட்டு போடும் வரைக்கும் என் கை பூ பறிச்சிட்டு இருக்கும் பாரு” நாக்கைத் துருத்திக் காட்டினாள்.

 

அவளையே கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா.

 

“ஹலோ மிஸ்டர் விஷ்வஜித்! எதுக்கு சைலன்டாகிட்ட” புருவம் உயர்த்திக் கேட்க, “யாரு அவன்?” மொட்டையாகக் கேட்டான் விஷு.

 

அதில் குழம்பிய அக்ஷரா “எவன் விஷு?” புரியாமல் வினாத் தொடுக்க, “நீ லவ் பண்ணுற பையன தான் கேட்டேன்” கூலாக தோளைக் குலுக்க அவளோ அதிர்வுடன் அவன் புறம் திரும்பினாள்.

 

அவளின் அதிர்ந்த முகத்தைப் பார்த்து தலையிலடித்துக் கொண்ட விஷ்வாவோ “ஷாக் ஆகாத! எப்போவும் திடமா நிக்கிற நீயே பலவீனமாயிட்டனா அதுக்கு காரணம் காதல் ஒன்னா மட்டும் தான் இருக்க முடியும். அந்தக் காதல் தான் உன் புத்திய மழுங்கடிச்சு இருக்கு” சாதாரணமாகப் பேச அவளுக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

 

“இதோ பார் குட்டிம்மா! நீ ஒன்னும் பயப்படாத. எந்த ப்ரோப்ளம்னாலும் அத நான் சால்வ் பண்ணி அவன உன் முன்னால கொண்டு வந்து நிறுத்துவேன். அவன் உனக்கானவனா இருந்தா உன் கூட சேர்த்து வெக்கிறது என் பொறுப்பு” என்று உறுதியாகச் சொன்னான் காளை.

 

சிறு தயக்கத்துடன் அவனை ஏறிட்டவள் “அவன் எனக்கானவன் இல்லைணா. அத நான் இன்னிக்கு புரிஞ்சுக்கிட்டேன். சோ என்ன பண்ணாலும் அவனும் நானும் சேர முடியாது” எனக் கூற, “அத நீ சொல்லாத. இந்த விசயத்துல நீ அவசரப்பட்டு இருந்தாலும் இருப்ப. அவன் உனக்கானவனா இல்லையானு தேடிப் பார்த்து நான் டிசைட் பண்ணுறேன். இப்போ எனக்கு வேண்டியது அந்த பையன் யாருங்குறது மட்டும் தான்” என்றான் அவன்.

 

அது அருள்னு அண்ணா கிட்ட எப்படி சொல்லுறது? அவன் கோபப்படுவானா? அதுவும் அருளுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே? தனக்குள் பல வினாக்கள் சுழல நின்றாள் அக்ஷு.

 

“அக்ஷு! அடியே எரும” என அவளை உலுக்க, அவளோ முழித்துப் பார்த்தாள்.

 

“எதுக்கு பேந்த பேந்த முழிக்கிற? உன் லவ்வர் பெயர சொல்ல இவ்ளோ யோசிக்கனுமா? சொல்லு” 

 

“அ…அருள்” என்று பதிலளித்து விட்டு அவன் முகம் பார்த்தாள்.

 

“அருள்? பெயர் புதுசா இருக்கே. உன் காலேஜ் மேட்டா..? எனக்கு அவன தெரியுமா?” புருவம் இடுங்கக் கேட்டான்.

 

“உனக்குத் தான் அவன எல்லார விடவும் நல்லா தெரியும். என் அருளோட புஃல் நேம் அருள் மித்ரன்! உன்னோட மித்து” மெதுவாகச் சொல்ல, இப்போது அதிர்வது அவன் முறையாயிற்று.

 

“மித்.. மித்ரனயா லவ் பண்ணுற?” வார்த்தைகள் திக்கியது அவனுக்கு.

 

“ம்ம்…” தலையாட்டி ஆமென்றாள் அவள்.

 

அவனுக்கோ தான் என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை. வானத்தை வெறித்துப் பார்க்கலானான் விஷ்வா. அக்ஷரா மித்ரனைக் காதலிப்பது அவனுக்கு அதிர்ச்சியே!

 

சும்மா மித்ரனின் பேச்சை எடுத்தாலே கோபப்படுபவன் அவனைக் காதலிப்பதாக கூறவும் அதற்கு மேல் தாம் தூம் என்று குதிக்கப் போகிறான் எனப்பயந்து போய் “அ…அண்ணா” உட்சென்ற குரலில் அழைக்க,

 

அவள் புறம் திரும்பி கீற்றுப் புன்னகையை அளித்தவன் “இவ்ளோ நாள் நான் கோபப்பட்டு உன்ன கஷ்டப்படுத்தின மாதிரி இனியும் பண்ண மாட்டேன். நீ பயப்படாம வா. வீட்டுக்கு போகலாம்” அவள் கைப் பிடித்து காருக்கு அழைத்துச் சென்று அதனை உயிர்ப்பித்தான்.

 

விஷ்வா எதுவுமே பேசாமல் காரை செலுத்த அவ்வமைதி அவளை மேலும் சீர்குலைத்தது. அவனைத் திரும்பிப் பார்ப்பதும் கையைப் பிசைவதுமாகத் தான் இருந்தாள்.

 

கார் வீட்டை அடைந்து விட பக்கவாட்டாக அவளைப் பார்த்து “நான் சொன்ன மாதிரி எப்படியாவது உன் அருள் கூட உன்னை சேர்த்து வைப்பேன். சோ பீல் பண்ணாத ஓகே” என்றவன் கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டான்.

 

அருளுக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு எப்படி சொல்லுறது என புருவத்தை நீவிக் கொள்ள அவன் ஆழ்ந்த யோசனையில் இருப்பதை முகம் காட்டிக் கொடுத்தது அவளுக்கு.

 

பெருமூச்சை இழுத்து விட்ட அக்ஷரா இதைப் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என நினைத்து வீட்டுக்குச் சென்றாள்.

 

…………..

 

தனக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் இருந்த சோபாவில் சாய்ந்து கொண்டிருந்தாள் வைஷ்ணவி. இன்றைய ஒரு நாள் அவள் வாழ்வையே இப்படிப் புரட்டிப் போட்டு விடும் என்று நினைக்கவே இல்லை.

 

அன்று யாருமற்றவளாய் திக்குத் தெரியாமல் தவித்தவள், இன்றோ அன்பான உறவுகளுடன் இருக்கின்றாள்.

 

கதவு தட்டும் ஓசையில் சிந்தை கலைந்தவள் நிமிர்ந்து பார்க்க மித்ரனுடன் நின்றிருந்த பெண்ணை புரியாமல் பார்த்தாள்.

 

மித்ரன் “உள்ள வரலாமா?” என்று கேட்க, “அய்யோ என்னணா அனுமதி எல்லாம் கேக்குறீங்க? வாங்க வாங்க” என்றவளின் வாய் மித்ரனுடன் பேசினாலும் அவள் பார்வையோ அப்பெண்ணான பூர்ணியிலே தான் நிலைத்தது.

 

“ஹாய் வைஷு! உன்ன பற்றி மித்து பேபி சொன்னான்” என்று கலகலப்பாக பேசிய பூர்ணி அவளருகில் அமர, “இவள் பூர்ணி! என் அத்தை பொண்ணு. எனக்கு தங்கச்சி மாதிரி” அறிமுகம் செய்தான் மித்து.

 

அதில் புன்னகையுடன் “ஓஹ்ஹ் ஹாய்ங்க” என்றாள் வைஷ்ணவி.

 

அவளை முறைத்த பூர்ணி “என்னைப் பார்த்தா நூறு வயசு கிழவி மாதிரி இருக்கா?” பொய்யான கோபத்துடன் இடுப்பில் கை குற்ற, விழிகளை உருட்டிய பெண்ணவளோ “இல்ல. நூறு வயசு இல்லை, நூற்று ஐம்பது வயசு கொள்ளு பாட்டி மாதிரி இருக்கு” சிரிக்காமல் தான் சொன்னாள்.

 

அவளை மூக்கு முட்ட முறைத்து, பின்னர் முடியாமல் சிரித்து விட்டு “உன்ன போய் அமைதியானவனு நெனச்சேன். ஆனா நல்லா தான் பேசுற. எனக்கும் நல்லதா போச்சு. பீ ப்ரெண்ட்ஸ்?” என கையை நீட்டினாள்.

 

வைஷுவோ மித்ரனைப் பார்க்க “என்ன டா பார்க்குற? நீங்க கட்சி சேர்ந்துட்டீங்க இனி நான் நூடுல்ஸ் ஆக போறேன். இந்த பூரி பேசிப் பேசியே உன் காதுல ரத்தம் வர வைக்காம விட மாட்டா” என கிண்டலடித்தவனுக்கோ இருவரும் நட்புக் கொள்வது மகிழ்வு தான்.

 

“ஓகே ப்ரெண்ட்ஸ்” என அவள் கையைப் பிடித்த வைஷ்ணவியிடம் “உனக்கு என்ன விட ஒரு வயசு தான் கம்மி. அதுக்காக ங்க போட்டு என்ன ஓல்ட் லேடியாக்கிடாம வா போனே பேசு வைஷு ” அன்புக் கட்டளை விடுத்தாள் பூர்ணியும்.

 

அதை மறுக்க முடியாமல் ஏற்றுக் கொண்டவளும் “டபுள் ஓகே” என்று சம்மதிக்க, கோர்த்திருந்த கரங்களை குலுக்கினாள் பூர்ணி.

 

அதைப் பார்த்த மித்ரன் பூர்ணியிடம் “யம்மா பார்த்து என் தங்கச்சியோட கைய கழற்றி எடுத்துடாத” என வம்பிழுக்க, “நோ நோ அப்டிலாம் நடக்காது. நாம ரெண்டு பேரும் சேர்ந்து உன்னோட முதுகையே உடைக்க போறோம்” வைஷு நமட்டுச் சிரிப்புடன் கூறினாள்.

 

“கரக்டா சொன்னடி செல்லம்” அவள் தோளில் கை போட்டு ஹைஃபை கொடுத்தாள் பூர்ணி.

 

இருவரும் தோளில் கை போட்டு நின்ற காட்சி மித்துவுக்கு விஷ்வாவை நினைவூட்டியது. தானும் இது போல் அவனோடு இருக்கும் நாள் வருமா என்று ஏக்கமாக நினைத்தவனின் இதழ்களோ “மிஸ் யூ மாப்ள” என்று அசைய, கலங்கிய கண்களை மறைக்க வேகமாக வெளியேறினான் மித்ரன்.

 

அவன் வெளியே சென்றதைக் கண்ட வைஷு “அண்ணா எதுக்கு திடீர்னு போனாரு?” பூர்ணியிடம் கேட்க, “அவன் மாமாக்கு டேப்ளட் கொடுக்க போயிருப்பான்” பொய்யைச் சொல்லி சமாளித்த பூர்ணிக்கோ இன்றைய தினமே விஷ்வாவுடனான நட்பைச் சொல்லி அவள் வருந்துவதைப் பார்க்க மனமின்றித் தான் போயிற்று.

 

இங்கு தானே இருக்க போகிறாள். பிறகு சொல்லிக் கொள்ளலாம் என விட்டு விட்டாள். பின் இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.

 

“அச்சோ டைம் பாரு டி ட்வெல்வ் ஆக போகுது. பேசிப் பேசி உன் தூக்கத்த கெடுத்துட்டேன் நீ தூங்கு வைஷு” பூர்ணி எழுந்து கொண்டாள்.

 

அவள் கையைப் பிடித்து நிறுத்திய வைஷு “தூக்கமே வரல பூரி. உனக்கும் தூக்கம் வரலனா இன்னும் பேசிட்டு இருக்கலாமே” என்றவளுக்கு புது இடம் என்பதாலும், மனம் மகிழ்வில் நிறைந்திருந்ததாலும் தூக்கம் வரவே இல்லை.

 

அதைக் கேட்டு கன்னத்தில் விரல் வைத்து யோசித்து விட்டு “அப்படினா நாம கார்டன்கு போலாமா?” என்று பூர்ணி ஐடியா சொல்ல, “ஹா போலாம்” அதை ஏற்ற வைஷு அவளுடன் சென்றாள்.

 

“முன்னாடி போனா கார்டன் தான். நீ போ. நான் டூ மினிட்ஸ்ல வந்துடறேன்” அவள் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக படிகளில் ஏறி ஓடினாள் பூர்ணி.

 

அவளைப் புரியாமல் பார்த்து விட்டு இருட்டாக இருந்ததில் சிறு பயமும் சூழ முன்னால் நடந்தாள் வைஷு. ஏதோ சத்தம் கேட்டு இடது பக்கமாக சென்றவள், அங்கு கண்ட காட்சியில் விழிகளை விரித்தாள்.

 

ஒரு வட்டவடிவ மேசை, அதனைச் சூழ மெழுகுவர்த்திகள் ஒளியினை வழங்கிக் கொண்டிருந்தன.

 

திடீரென மேலே இருந்து பூவிதழ்கள் அவள் மேல் மழையாக வந்து விழ “ஹேப்பி பர்த்டே மை டியர் பாப்பா” என்று சொல்லிக் கொண்டே கையில் கேக்குடன் வந்தான் மித்ரன்.

 

இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றவளுக்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. கண்களும் தான் கலங்கி விட, இதயமோ புத்துணர்ச்சியுடன் துடிக்கவாரம்பித்தது.

 

“ஹே வைஷுமா! என்ன ப்ரீஸ் ஆகி நின்னுட்ட? வா வா” என்று அழைக்க, அவளுக்கோ ஆனந்தத்தில் பேச்சே வரவில்லை.

 

அவள் முதுகில் பட்டென விழுந்த அடியில் “ஆஆ” என அலறிக் கொண்டு திரும்பிட, முறைப்புடன் நின்றிருந்தாள் பூர்ணி.

 

“எதுக்கு டி அடிச்ச? வலிக்குது பூரி” முதுகைத் தேய்க்க, “நான் எவ்ளோ கஷ்டப்பட்டு மொட்டை மாடியில இருந்து பூ தூவிட்டு வந்திருக்கேன். நீ என்னடானா அப்படியே உறைஞ்சி போய் நின்னுட்டு இருக்க. சீக்கிரமா கேக் தா. சாப்பிடனும்ல?” கண் சிமிட்டிச் சிரித்தாள் அவள்.

 

“ஆமாமா ரொம்ம்ப கஷ்டப்பட்டு பூ தூவிருக்கல்ல. உனக்கு கண்டிப்பா பெரிய துண்டு கிடைக்கும்” என்று சொன்ன வைஷ்ணவி மகிழ்வுடன் கேக் வெட்டி முதலில் மித்ரனுக்கு ஊட்டி விட்டாள்.

 

அவனும் அவளுக்கு வழங்கி விட்டு “உனக்காக இந்த அண்ணனோட சின்ன கிப்ட்” என ஒரு செயினை அவள் கழுத்தில் போட்டு விட்டான். செயின் பென்டனில் வீ எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது.

 

“இதெல்லாம் எதுக்குணா? இந்த பர்த்டேல எனக்கு கிடைச்ச மிகப் பெரிய கிப்டே நீ தான்” உணர்வு மிகுதியில் தான் சொன்னாள் அவள்.

 

“லூசு வைஷு! இங்க வா” என அவளை இழுத்தெடுத்து ஒரு டெடி பியரை பரிசளித்தாள் பூர்ணியும்.

 

“தாங்க்ஸ் பூரி” என அவளைக் கட்டிக் கொண்டாள்.

 

“ஆமா. நான் தான் உங்க கிட்ட எதுவுமே சொல்லலியே. அப்பறம் என் பர்த்டே எப்படி தெரிஞ்சுது?” வைஷு கேள்வியாய்  இருவரையும் நோக்கினாள்.

 

பூர்ணி “நீ தான் பெரிய ஆளாச்சே நீயா எதுவும் சொல்ல மாட்ட. அதான் நாம எப்படியோ தெரிஞ்சுக்கிட்டோம்” என்க, அவள் அமைதியாய் தலை குனிந்தாள்.

 

பூர்ணியின் தலையில் நறுக்கென கொட்டி விட்டு “சும்மா இரு பூரி. பாரு பாப்பா முகம் வாடுது” என்ற மித்ரன் வைஷுவின் புறம் திரும்பி “உன் பேக்ல இருந்த ஐடி கார்டு கார்ல விழுந்து இருந்துச்சு‌. அதுல இருந்து தான் தெரிஞ்சுக்கிட்டோம். உடனே பூரி கிட்ட போய் சொன்னேன். அவள் நல்லா கேக் செய்வாள். அதான் உடனே செஞ்சுட்டாள்.

 

அம்மா என் கூட இல்லனாலும் அவங்க பர்த்டேக்கு என்னோட ஆறுதலுக்கா ஏதாச்சும் கிப்ட் வாங்கி வந்து அவங்க படத்துக்கு முன்னாடி வெப்பேன். இன்னிக்கு ஒரு செய்ன் வாங்கலாம்னு போனா வீ லெட்டர் போட்ட செய்ன் ஒன்னு மட்டும் தான் நல்லா இருந்துது. அத வாங்காம விட மனசு வராம அதயே இன்னிக்கு எடுத்துட்டேன். உன் நேமும் வீ லெட்டர்ல தான் வருது. சோ எப்படியோ மேஜிக்கலா உனக்கு தர முடிந்தது” சந்தோஷமாய்க் கூறினான்.

 

அதைக் கேட்டு சிரித்தவள் “ஆமாணா எல்லாமே மேஜிக் மாதிரி இருக்கு. பட் டுடே அய்ம் சோ ஹேப்பி” என அவன் தோள் சாய்ந்தாள்.

 

அந்தப் பாசமிகு அண்ணனோ “இதுக்கு முன்னாடி கஷ்டத்த அனுபவித்து இருக்கலாம். ஆனா இனிமேல் உன் லைப்ல சந்தோஷம் மட்டுமே இருக்கும். நான் இருக்க வைப்பேன் வைஷு. இது மட்டுமில்ல, இனி வரப் போற எல்லா பர்த்டேவுமே உனக்கு ஸ்பெஷலா தான் இருக்கும்” என அவள் தலை வருடி விட்டான்.

 

“எல்லாரும் பர்த்டேவ அந்த டே ஸ்டார்ட் ஆகுறப்போ தான் செலிப்ரேட் பண்ணுவாங்க. ஆனா நீ முடியும் போது பண்ணிட்டு ரொம்ப பந்தா பண்ணுற” பூர்ணி நக்கலாக சொல்ல, “யாஹ் நான் அப்படி தான். எல்லார விடவும் டிப்ரண்டா தான் செய்வேன்” இல்லாத கொலரைத் தூக்கி விட்டு பெருமைப்பட்டான் மித்து.

 

“கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலங்குற மாதிரி இருக்கு டா”  என்றவள் வைஷுவிடம் சொல்லி விட்டுச் செல்ல, மித்ரனும் “குட் நைட் பாப்பா! ரொம்ப நேரம் முழிச்சு இருக்காம தூங்கு” எனக் கூறிச் சென்றான்.

 

இன்றைய நாள் தன் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நட்பு, பாசம் என அனைத்தும் கிடைத்து அவர்களுடன் சந்தோஷமாய்க் கொண்டாடிய இந்த அதிரஷ்டமான நாளைத் துவங்கி வைத்த விஷ்வாவின் முகம் அவள் மனதில் வந்து போனது.

 

அவன் முத்தமிட்ட கையைக் கன்னத்தில் வைத்துக் கொண்டவளுக்கு தான் செய்யும் காரியம் அப்போதே உறைக்க “ச்சே என்ன இது? ஒரு தடவை கண்டதுக்கே பலவாட்டி மனசுல வந்து டிஸ்டர்ப் பண்ணுறான். உன்ன இனிமே பார்க்கவே கூடாது பனைமரம்” என்று சொல்லி விட்டு நடந்தவள் அறியவில்லை நாளையே அவனை மீண்டும் சந்திக்கப் போகின்றோம் என்று!

 

நட்பு தொடரும்………!!

 

💙 ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!